ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு.... விதுரன் [13 - April - 2008] இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களும் மிக முக்கிய பிரமுகர்களும் தலைநகரிலும் அதனையண்டிய பகுதிகளிலும் மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதை, கம்பஹா வலிவேரியா பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு யுத்தத்தின் பிரதிபலிப்புகள் தலைநகருக்கும் தென் பகுதிக்கும் எப்போதோ பரவிவிட்டன. தலைநகருக்கு வெளியே பாதுகாப்பற்ற பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்களை விட தலைநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்புமிக்க பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளின் எண்ணிக்…
-
- 3 replies
- 2.1k views
-
-
சோதனையே எழுதாமல் பட்டத்தினை பெற்ற பலரும், தமது பட்டங்களை நான் திரும்பி தருமாறு கேட்டு விடுவேன் என்று என்னை எதிர்திருக்கலாம். -ரத்தினஜீவன் கூல் கடந்த ஆறுமாத காலமாக மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்.பல்கலைகழம் எதிர்வரும் 22.ம் திகதி முதல் மீண்டும் செய்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்குப் பல்கலைகழக துணைவேந்தர் ரவீந்திர நாத், இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு இது வரை என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு பல்கலைகழக தமிழ்துறைத் தலைவர் பாலசுகுமார் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். கடந்த மாதம் வவுனியா விவசாயகல்லூரியில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் மூன்று மாணவர்கள் ப…
-
- 1 reply
- 2.1k views
-
-
சீமான்... காங்கிரஸின் கசப்பு மருந்து. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கதர் கூடாரத்தில் கண்டனம் எழுகிறது. ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்காகக் குரல் கொடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தடவை கைதானவர். ராமேஸ்வரம் பேச்சுக்கு மதுரையில் 10 நாட்கள், ஈரோட்டு முழக்கத்துக்கு கோவையில் 32 நாட்கள் என சிறை வாழ்விலிருந்து மீண்டு இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். ஆனாலும், அதே ஆக்ரோஷம்! ''சிறை அனுபவம்..?'' ''வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். 'சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க' என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சி…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்தராஜபக்கவின் சகோதரியின் கணவர் எனச் சொல்லப்படுகின்ற நபர் மீது இராமேஸ்வரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடேசன் குமரன் என்பவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வது வழக்கம். இன்று அவருடைய வருகையை தெரிந்துகொண்ட நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க உட்பட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதுடன். இதைத்தொடர்ந்து நடேசன் குமரன் யாகம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர் என்று அங்கிருந்…
-
- 17 replies
- 2.1k views
-
-
வீரகேசரி நாளேடு - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை மட்டுமல்லாது வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டிமையை அடுத்து ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டியமை அரசாங்கத்தின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும…
-
- 7 replies
- 2.1k views
-
-
எமது சமூகத்தின் அபிலாசைகளை கனடிய பாராளுமன்றத்தில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஒருவரை எமது பாராளுமன்றப் பிரதிநிதியாக்கக்கூடிய வாய்ப்பாக வரப்போகும் கனடியப் பாராளுமன்றத் தேர்தல் அமைகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில்,Scarborough-Rouge River தொகுதியில் NDP யின் சார்பில் கனடியப் பாராளுமன்ற வேட்பாளராக முன்னிற்பதில் நான் பெருமையடைகின்றேன். என்றுமில்லாதவாறு இம்முறை எமக்கான குரலை கனடிய பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யவும், எமது மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கவுமான மிகச் சாதகமான இவ்வாய்ப்பானது கனடியத் தமிழர்களுக்கான முக்கிய தேர்தலாக அமைகின்றது. NDP யும் அதன் தலைவர் Jack Layton னும் எமது மக்கள் நலன் சார்பான விடயங்களுக்காக எந்நிலையிலும், எந்தநேரத்தில…
-
- 4 replies
- 2.1k views
-
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார். இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில…
-
-
- 39 replies
- 2.1k views
- 4 followers
-
-
யாழ் குடாவில் கலாசார சீரழிவு உச்சக்கட்டத்தில் - பெற்றோர் கவலை யாழ் குடாநாட்டில் கலாசார சீரழிவு என்றுமில்லாதவாறு உச்சக்கட்டத்தில் உள்ளதாகவும், இதனால் தாம் தமது பிள்ளைகளை யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்க அஞ்சுவதாகவும், குறிப்பாக பெண் பிள்ளைகளை வைத்திருக்கவும் அவர்களை வீதியில் நடமாட அனுமதிப்பதற்கும் தாம் அஞ்சுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் சிறீலங்கா படையினரின் அச்சுறுத்தல்கள், மறுபுறம் தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் என்பனவற்றுடன் அண்மையில் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் சில சமூக விரோதிகளின் தொல்லை என தமக்கான நெருக்கடிகள் அதிகரித்து செல்லவதாக பெற்றோர் கூறினர். இதனால் பிள்ளைகள் கல்வி கற்றலுக்குரிய…
-
- 2 replies
- 2.1k views
-
-
ஈழத்தமிழர் தாயகத்தைக் கைப்பற்றும் இலங்கை அரசின் எத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த உணர்வெழுச்சியை, புதுடில்லி அரசுடன் மேற்ககொண்ட தொடர்பாடல்கள் மூலம் சமாளித்து விட்டதில் திருப்பதி கொண்டுள்ள கொழும்புத் தலைமை, இனி கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தனது படை நடடிவக்கைகளைத் தங்கு தடையில்;லாத கருத்தோடு மூர்க்கமாக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஷில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுகளை அடுத்து, செய்தியாளர்களுக்குத் தகவல் வெளியிட்ட போதே, கிளிநொச்சி மிதான அரசுப்படைகளின் தாக்குதல் முயற்சி தீவிரமாகும் என்பதை அங்கு வைத்தே கோடி காட்டி விட்டார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளின் போது மக்கள…
-
- 5 replies
- 2.1k views
-
-
தெற்காசியாவில் அதியுயரமான கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.வன்னி, கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரம் 450 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக வட மாகாணத்திற்கான தொலைக்காட்சி வானொலி மற்றும் தொலைபேசிச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. சுமார் 174 மீற்றர் உயரமான இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மூலம் தொலைக்காட்சிச் சேவைகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சில விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கோபுரத்தை மகிந்த ராஜபக்ஸ இன்று திறந்து வைத்தார்.அங்கு உரையாற்றிய சிறீலங்கா அதிபர் புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கி…
-
- 12 replies
- 2.1k views
- 1 follower
-
-
தாழையடி கடற்சமரில் 5 கடற்கரும்புலிகள் உட்பட 8 பேர் வீரச்சாவு. தமிழீழக் கரையோரங்களிலே மீனவர்களை அச்சுறுத்தியும் கரையோரக் கிராமங்கள் மீது கடலில் இருந்து தாக்குதல் நடத்தியும் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாளையடியில் வைத்து கடற்புலிகள் 01.09.2006 அன்று இரவு 8:45 மணிக்கு ஒரு தாக்குதலை தொடுத்தனர். இரண்டாம் திகதி அதிகாலை 3:45 வரை நீடித்த இக்கடல் சண்டையில் தொண்டமனாறு வரை சிறிலங்கா கடற்படையினர் விரட்டியடிக்கப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான கடற்படையினருக்கு உதவியாக திருமலை கடற்படைத் தளத்தில் இருந்தும் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் இருந்தும் கடற்படையினர் உதவிக்கு விரைந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட சிறிலங்கா கடற்கலங்களை எதிர்கொண்டு வீரச்சமரிட்ட கடற்புலிகள், தாக்குதல் படகு…
-
- 3 replies
- 2.1k views
-
-
மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு, பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ‘தனி ஈழம் மலரட்டும்... ராஜபக்ஷே ஒழிக!’ என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார். பணியில் இருந்த ஊழியர் ஒருவர், எரிந்துகொண்டே ஓடிவந்த இளைஞரை கீழே தள்ளி, ஏற்பட இருந்த பெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். மற்ற ஊழியர்களும் சுதாரித்து, தீயை அணைத்தனர். தீ வைத்துக்கொண்ட இளைஞர் அந்த இடத்திலேயே கருகினார். அ…
-
- 32 replies
- 2.1k views
-
-
மூதூரில் பிரசுரம் வீசியது புலிகள் அல்ல: கண்காணிப்புக் குழு மூதூர் முஸ்லிம்களை வெளியேறுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை வீசியது விடுதலைப் புலிகள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவினரின் கடந்த வார அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மூதூரில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. மூதூரில் மீளக் குடியேறுமாறு சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். http://www.eelampage.com/?c…
-
- 6 replies
- 2.1k views
-
-
மத்திய உளவுப்பிரிவு போலீசார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள்.................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_481.html
-
- 6 replies
- 2.1k views
-
-
இராணுவத்துக்கும் இடையில் கடும் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வெருகல் பகுதியை நோக்கி இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. அதேநேரத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரையின் தென்மேற்குப் பகுதியான கட்டுமுறிவு பகுதியை நோக்கி இராணுவம் 5 கிலோ மீட்டர் தூரம் முன்னேறியுள்ளது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அங்குள்ள ஒரு பாடசாலையில் படையினர் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே ஈச்சிலம்பற்றிலும் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்றதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். படையினர் தங்கள் நிலையில் இருந்து…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஜனாதிபதி அவதானித்துள்ளார், முன்னேற்றம் விரைவில் – அமைச்சர் பிரசன்ன இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாக இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை வரவேற்பதற்காக சென்ற அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதாரண பயணிகள் செல்லும் வழியின் ஊடாகவே தமது பயணத்தை மேற்கொண்டதுடன், மீண்டும் அதே வழியிலேயே திரும்பிவந்தார். இதன்போது விமான நிலையத்தின் செயற்பாடுகளை அவதானித்ததுடன், புதிதாக ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் - ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்…
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டுக்கான அமெரிக்க காங்கிரஸ் பாதீட்டுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி உதவிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் வரவு செலவுத் திட்டத்தில் வழமைக்கு மாறாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கான நிதி உதவிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் 2007ம் ஆண்டு 23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இம்முறை பாதீட்டுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி உதவி வெறும் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 2007ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்…
-
- 20 replies
- 2.1k views
- 1 follower
-
-
பிரான்சில் தமிழர் வர்த்தக மையமான லாசப்பல் பகுதியில் புதன்கிழமை இனந்தெரியாத தேசவிரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன. தமிழர் வர்த்தக நிலையங்களுக்குள் அத்துமீறி புகுந்த இந்தக் கும்பல் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகளை கிழித்ததோடு எச்சரித்தும் உளள்ளனர். இச்செயல் குறித்து மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து அத்துமீறிய இச்செயல் குறித்து பிரென்சுக் காவல்துறையிடம் முறையிடுவதற்கு சில வர்த்தகர்கள் எண்ணியுள்ளனர். தமிழர் தாயகத்தில் மாவீரர் கல்லறைகள் சிங்கள் காடையர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் அந்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டமை சிங்கள காடையர்கள…
-
- 26 replies
- 2.1k views
-
-
இந்து சமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகின்றன. தற்போது வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தத்தம் நாடுகளில் தாக்கல் செய்து வரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்த அறைகூவலை விடுத்துள்ளதோடு தமிழீழத் தன…
-
- 35 replies
- 2.1k views
-
-
செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பு கோப் சென்டர் மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் தீபம் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது. வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 61 பேர் உயிரிழந்ததுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குறித்த படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலை…
-
- 15 replies
- 2.1k views
-
-
இலங்கையின் 71வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று காலை காலி முகத்திடலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி பற்றிய செய்திகளே, தற்போது சிங்கள சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அசாத் சாலி தனது மனைவிகளான பாத்திமா சியாதா, ரஷ்னா ஆகியோருடனும் தனது இளைய புதல்வனுடனும் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டார். இரண்டு மனைவிகளுடன், விசேட விருந்தினர் ஒருவர் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது. http://www.pagetamil.com/36198/
-
- 12 replies
- 2.1k views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார். சந்திப்பு இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர். கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த …
-
- 19 replies
- 2.1k views
- 2 followers
-
-
மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்' [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:40 மு.ப ஈழம்] [பி.கெளரி] மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இம…
-
- 4 replies
- 2.1k views
-