ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரோபாயமே இனிச் சரி! [15 நவம்பர் 2008, சனிக்கிழமை 12:50 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகம் மீது தனது அரசு தொடுத்திருக்கும் போரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நின்றுகொண்டு திட்டவட்டமாக அறிவிப்பு விடுத்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்தச் செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசை தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம் வற்புறுத்திக் கோரியுள்ள பின்னணியில் - யுத்தத்தை நிறுத்துமாறு தமிழக சட்டசபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி வற்புறுத்தியுள்ள பின்புலத்தில் - இந்தியத் தலைநகர் புதுடில்லியில் போய் நின்றுகொண…
-
- 0 replies
- 2k views
-
-
மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (2) காலை நடைபெற்றுள்ளது. 3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேத…
-
- 16 replies
- 2k views
-
-
சிறிலங்கா அரசதலைவர் மகிந்தவின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளும், அவர் விடுத்துவரும் இராணுவ போர்ச் சூளுரைகளும் விரைவில் சிறிலங்காவில் பாரிய இனநெருக்கடியையும் அரசியல் சூறாவளியையும் உருவாக்கக் கூடும் என்று நேற்று ஒஸ்லோவில் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சில் நடாத்தப்பட்ட நோர்வேயின் உதவி பெறும் நாடுகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட உயர் மட்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தார்கள். நோர்வே நாட்டின் உதவிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டாலும் எதுவித முடிவுகளும் இவ்விடயத்தில் எட்டப்படவில்லை. குறிப்பாக சிறிலங்காவில் பிரதான அரசியற்கட்சிகளுக்கிடையிலான முறுகுநிலை மற்றும் சிறிய நாடான சிறிலங்காவின் பெரியளவிலான மந்திரிசபை என்பதுபோன்ற …
-
- 1 reply
- 2k views
-
-
Saturday, June 25, 2011, 23:42சிறீலங்கா இரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும்கட்சி அமைச்சர் ஒருவர் இரத்தினபுரியிலுள்ள அழகிய பெண்ணொருவரிடம் இருந்து மொபைல் தொலைபேசியைத் திருடித் தரும்படி பாதாள உலகக் கும்பலை நாடிய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த அமைச்சருக்கு அந்த இளம் பெண்ணுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அமைச்சர் குறித்த பெண்ணின் மொபைலுக்கு இரவு வேளைகளில் அழைத்து, அந்தரங்கமாக உரையாடி வந்துள்ளார். அழகியும் அமைச்சருடன் இணங்கி நடந்ததோடு, இந்த உரையாடல்களை எல்லாம் தனது மொபைலில் பதிவும் செய்து வைத்துக்கொண்டார். நாளாக நாளாக அமைச்சரிடம் தாம் வைக்கும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த அழகி, ஏற்கனவே இதை எதிர்பார்த்து தான் பதிவு செய்து …
-
- 3 replies
- 2k views
-
-
அமைதியாக இருந்து அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்காவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாக்குமாறும் அவசியமற்ற முறையில் ஊடகங்களுக்கு கருத்து கூறுவதை நிறுத்துமாறும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மூத்த அமைச்சர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்காவை இன்று காலை அம்பாந்தோட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக இந்த எச்சரிக்கையை விடுத்தாரென கொழும்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அமைச்சர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ…
-
- 1 reply
- 2k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் மூன்று மில்லியன் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹ ங்குரான மதுபான உற்பத்தி நிலைய அதிகாரிகளிடமிருந்து இந்தப் பணத்தை பிள்ளையான் பெற்றுக் கொண்டுள்ளார். பிள்ளையான் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் 700,000 ரூபா பணத்தை தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் ஜப்பானிய விஜயம் முடிந்ததன் பின்னர் மேலும் 27,00,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக குறித்த ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் மட்டக்களப்பில் அரச சார்பற்ற நிறுவன பொறியலாளர் படுகொலை சம்பவத்துடன் பிள்ளையான் குழு உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சிவில…
-
- 0 replies
- 2k views
-
-
இந்த முறை (2012) சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் 222 பில்லியன் டொலர் செலவீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் துண்டு விழும் தொகை 110 பில்லியன் டொலர்கள். இந்த துண்டு விழும் தொகையில் மஹிந்த குடும்பத்திற்கு ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 22 பில்லியன் டொலர்கள். இந்த ஒதுக்கீட்டில் மஹிந்த குடும்பம் 25 விழுக்காட்டினை விழுங்கினால் அவர்களுக்கு மொத்தமாக ஒரு வருடத்திற்குள் புரளப்போகின்ற பணம் எவ்வளவு தெரியுமா? 5.5 பில்லியன் டொலர்கள். . எப்படித்தான் என்று பார்ப்போம்; . மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களுக்கும் 32 திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 6161 மில்லியன் ரூபாய்கள். கோத்தபாய இராஜபக்ஷவின் கீழ் உள்…
-
- 4 replies
- 2k views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக அதிபராகி இருக்கும் அவர், கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். இலங்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வாக, அந்த திட்டம் இருக்கும். இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன். இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். இந்தியா முன்வைத்த 13 வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதே நேரத்தில், …
-
- 7 replies
- 2k views
-
-
வன்னி முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடையும் அதிகளவான இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இவ்வாறு அனுமதிக்கப்படும் இராணுவத்தினர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் போதுமான வைத்தியர்கள் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள் தட்டுப்பாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெரும் எண்ணிக்கையான காயமடைந்த இராணுவத்தினர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடையும் இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமத…
-
- 0 replies
- 2k views
-
-
சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள். ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள். உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா? அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானிய…
-
- 3 replies
- 2k views
-
-
http://www.keetru.com/literature/essays/arunabarathy.php க.அருணபாரதி. 'இந்தியத் தேசிய காங்கிரசின் தோற்றம்' அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் …
-
- 5 replies
- 2k views
-
-
சிறிலங்கா இராணுவத் தளபதி பொறுப்பை மீண்டும் சரத் பொன்சேகா ஏற்றுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலையமையகத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிங்கப்பூரில் சரத் பொன்சேகா சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று திங்கட்கிழமை கொழும்பு திரும்பிய சரத் பொன்சேகா, மீண்டும் இராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா மீது கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் தாக்குதல் நடத்தப்பட்டது. சரத் பொன்சேகா செயலிழந்த நிலையில் நந்தா மல்லவராச்சியை பதில் இராணுவத் தளபதியாக மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் சரத் பொன்சேகா பொறுப்பேற்றிருக்கிறார் -புதினம்
-
- 4 replies
- 2k views
-
-
ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்! பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இர…
-
- 10 replies
- 2k views
-
-
தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய! இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திரும்புமுனைகளுடன் இன்றைய மணித்துளிகள் நகர்ந்து செல்கின்றன. 2015ல் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கடந்து மூன்று வருடங்களாக ராஜபக்ஷர்களினால் வகுக்குப்பட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு இன்று மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. பறிபோன அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்ட ராஜபக்ஷகள் அதற்கான ஆணையை முழுமையாக பெற்றுள்ளதாகவே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ராஜபக்ஷ மீண்டும் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்வதற்கு தென்னிலங்கை மக்கள் விரும்பம் கொண்டுள்ளதாக தமது ஜனநாயக …
-
- 23 replies
- 2k views
-
-
தமிழர்கள் மான உணர்வு உடையவர்கள்; வீரமுடையவர்கள். அவர்களை யாரும் அழிக்க முடியாது. பூவாக மலரும் புயலாகவும் மாறும் புத்தெழுச்சி கொண்டதுதான் எமது தமிழினம். அதற்கு எடுத்துக்துக் காட்டாக ஈழத்தமிழர்கள விளங்குகிறார்கள். இலங்கை இராணுவம் ஈழத்; தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து விலங்குகளை விடக் கொடூரமான முறையில் கொன்று குவித்து வருகிறது. மக்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி பாதுகாப்புத் தேடி காடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு 2 லட்சம் மக்கள் ஏதிலிகளாக்கபட்டுள்ளனர். எனவே, எமது உறவுகளை ஈவிரக்கமற்று அரக்கத்தனமாக கொண்டு குவித்து வரும் இலங்கைக்கு ஆயுதங்களையோ இராணுவ உதவிகளையோ இந்தியா வழங்குவது தமிழர்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் இவ்வாறு இயக்குநர் சீமான் தெரிவித்துள்ள…
-
- 4 replies
- 2k views
-
-
மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி-கொழும்பு ஊடகம் மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 02:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் …
-
- 10 replies
- 2k views
-
-
தேர்தலில் இப்போது தோற்றாலும், எதிர்காலத்தில் வெல்வோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: ’’தமிழகம், புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் சுனாமி வெள்ளமாக ஊழல் பணத்தைத்தொகுதிக்குள் செலுத்தினார்கள். ஓட்டுகளை விலைக்கு வாங்கிய பணநாயகத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. அதையும் மீறி அதிமுக கூட்டணி 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்கு சூட்டப்பட்ட மகுடம். பணத்தையும் மீறி எனக்கு வாக்களித்தவர்களுக்கு என் நன்றி. இந்தக் களத்தை இழந்தாலும், இனி எதிர்வரும் களங்களை வெல்வோம். தமிழகத்தின் நலன் காக்க, இலங்கைத் தமிழர் துயர் துடைக்க, நெஞ்சுரத்தோடு பயணத்தைத் …
-
- 1 reply
- 2k views
-
-
ஆஸியிலிருந்தே புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கிறது-அங்கு வைத்து கொஹன்ன தகவல் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் திரட்டி வரும் பெரும் தொகைப் பணத்தில் ஆறில் ஒரு பகுதி ஆஸ்திரேலியாவிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்கின்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய ஊடக காங்கிரஸிடம் தெரிவித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரும், இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகமுமான பாலித கொஹன்ன. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கும் அவர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார் என செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ""புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கும் வளமான நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸியிலிருந்து கிடைக்கும்…
-
- 4 replies
- 2k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும்: டி.எம்.ஜயரட்ண வீராப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும் என சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவிருப்பதை எதிர்த்து கம்பளை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். "அமெரிக்கா உட்பட சில மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளும் சூழ்ச்சியை தோற்கடிக்க அனைவரும் வீத…
-
- 5 replies
- 2k views
-
-
குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவனைத் திருத்துவதற்காக விளையாட்டாக தனக்கு தானே தீமூட்டிக் கொள்வதுபோல் செயற்பட முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறுதலாக மண்ணெண்ணை ஊற்றித் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக யாழ்.போதன வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மனைவி தீயில் எரிவதைத்தடுத்த முயன்ற கணவரும் தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது இன்று சனிக்கிழமை நெடுந்தீவு 8 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. குடும்பப்பெண்ணான அன்ரன் சகாயராணி வயது 36 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற…
-
- 1 reply
- 2k views
-
-
மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் ரீ.எம்.வீ.பீக்கும் இடையில் இன்று காலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் சேதவிபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
-
- 0 replies
- 2k views
-
-
'வடக்கு கிழக்கில் தமிழ்மக்களை கொன்று குவித்த பெருமைக்கான விருதை வாங்கவதற்காகவா ஜனாதிபதி உகண்டா செல்கின்றார்?' த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு சபையில் கேள்வி எழுப்பினார். வரவு செவவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவாஜிலிங்கம் இப்படிக் கேட்டடார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :- கந்த 18 மாதங்களாக ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் யானை விலை, குதிரை விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் எமது மக்கள் பசி, பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் அசர படைகள் கிபீர் விமானங்கள் மூலம் நேரகாலம் இன்றி இரவு பகலாக தமி…
-
- 3 replies
- 2k views
-
-
http://img161.imageshack.us/my.php?image=0...09009001vn2.jpg நன்றி : உதயன்
-
- 0 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள…
-
- 12 replies
- 2k views
-
-
தற்போது நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த 9500 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர் என ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் குறித்து இராணுவ பேச்சாளன் உதய நாணயக்காரவிடம் அப்பத்திரிகை வினவிய போது : 2008 ஜனவரி மாதம் வரை 15.000 பேர் வரை இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் இவர்களுள் அரசின் மன்னிப்புக் காலத்தில் திரும்ப வந்த 4000 பேர் சேவையில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மேலும் தப்பியோடியவர்கள் வந்து சேர இராணுவத்தால் கொடுக்கப்பட்ட மேலதிக கால அவகாசத்திற்கிடையில்; அண்மையில் மஹிந்த அனுராதபுரத்தில் பொதுமக்களை சந்தித்த வேளை தாய் மண்ணைக் காப்பதற்காக மறுபடியும் சேவையில் வந்தினைந்து கொள்ளும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். …
-
- 8 replies
- 2k views
-