ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை ஆய்வு செய்யவுள்ள இந்திய சமஸ்கிருத கல்விமான்கள் [13 - February - 2008] இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்துடன் தொடர்புபட்ட இடங்களெனக் கருதப்படும் இலங்கையிலுள்ள பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள சமஸ்கிருதத்தை கற்றுள்ள கல்விமான்கள் குழுவை இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஆலய பரிபாலனசபை விரைவில் அனுப்பிவைக்கவுள்ளது. இராமபிரான் இராவணனைக் கொன்ற இடம் மற்றும் சீதாப்பிராட்டியாரை இராவணன் கவர்ந்துகொண்டு வைத்திருந்த குகை என்பன ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ள
-
- 9 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவிபிள்ளை (நவநீதம்பிள்ளை) இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை இரத்துச் செய்துவிட்டார் என்று அறிய வந்தது. அவரது இந்த முடிவு கொழும்பு ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை, இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதன் காரணமாகவே நவநீதம்பிள்ளை தனது இலங்கைக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் தறுவாயில், மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் எடுத்துள்ள இந்த அதிரடியான தீர்மானத்தால் கொழும்பு அதிர்ச்சியடைந்துள்ளது…
-
- 0 replies
- 1.8k views
-
-
இரு கேள்விகள் 1, தமிழீழ போராட்டம் இந்தியாவினால் அல்லது சைனாவினால் கடத்தப்பட்டதா? 2, நினைக்கவே பயமாயிருக்கிறது.... பனங்காய்
-
- 4 replies
- 1.8k views
-
-
உடற்தகுதி பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் - இளஞ்செழியன் காட்டம்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது உயர் பதவியில் உள்ள வைத்தியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், கடந்த மாதம் 10ம் திகதி மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசலை ஒன்றிலிருந்து மாணவர்கள் உடற்தகுதி சோதனைக்கு சென்றுள்ளனர். இதன்போது மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த வைத்தியசாலை ஒன்றில் பொறுப்புவாய்ந்த பதவில் உள்ள வைத்தியர் ஒருவர் குறித்த மாணவிகள…
-
- 9 replies
- 1.8k views
-
-
இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற காணொலியை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என சனல் - 4 இயக்குநர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். இந்தக் காட்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு பார்த்திருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படும் காணொலியை சனல் - 4 ஊடகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளையும் கடந்த வருடம் சனல் - 4 ஊடகமே வெளியிட்டிருந்தது. இந்தக் காட்சிகள் மற்றும் இலங்கையி…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி பேணி வருகிறார் : அஸ்வர் எம்.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனித்து பேணிவருகிறார் என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதமொன்றின்போது, உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி., அல் கயீடா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் சேர்த்து அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல், பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் கவனித்து பேணப்படுகின்றனர் என்றார். இதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனிதாபிமானத் தன்மை என அஸ்வர் எம்.பி கூறினார். இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதக…
-
- 21 replies
- 1.8k views
- 1 follower
-
-
சிறீலங்காவின் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ஆறாண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது பணியகத்தில் வைத்து 20.02.2002 அன்று கையொப்பமிட்டார். 22.02.2002 அன்று சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா அரச செயலகத்தில் வைத்துக் கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் இருதரப்பின் விவகாரங்களை கவனிப்பவர்களாக நடுநிலமையாளர்களாக நோர்வே நாட்டவர் இருந்தனர் என்பது பலரும் அறிந்த விடயம் தான். இன்று சிறீலங்காவின் அரசதரப்பினர் ஆறாண்டுகளை தாண்டவிடாது ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய நிலையில் நாம் இந்த ஒப்பந்தத்தில் எதனைப் பார்க…
-
- 0 replies
- 1.8k views
-
-
Published By பெரியார்தளம் On Wednesday, June 6th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக…
-
- 15 replies
- 1.8k views
-
-
ராஜபக்சே அனுப்பிய ரகசிய தூது.. தூக்கியெறிந்த ரஜினி!! இலங்கை திரைப்பட விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். இலங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல் நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை. சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விழாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழா…
-
- 12 replies
- 1.8k views
-
-
இணைத் தலைமைகளின் கூட்டமும் பிரபாவின் மாவீரர் தின அறிவிப்பும் இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைமைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங் டன் நகரில் கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராயவிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கடைசியாக செப்ரெம்பர் 12, 13 ஆம் திகதிகளில் முறை யாகக் கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராய்ந்திருந்தன. இலங்கையில் அமைதிப் பேச்சுக்களை உடனடியாக - அடுத்த மாதமான ஒக்ரோபர் முற்பகுதியில் - நடத்தும்படி இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகளான இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் அப்போது வற்புறுத்திக் கேட…
-
- 0 replies
- 1.8k views
-
-
மதுபோதையில் இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை, கழிவறைக் கதவு என நினைத்து திறக்க முயன்றதாக லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19961
-
- 13 replies
- 1.8k views
-
-
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட [size=4] நடராசா ஜெகநாதன் [/size]கனடிய அரசின் வெளிவிவகார அமைச்சின் அயராத உழைப்பினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கனடிய வெளிவிவகார அமைச்சிற்கு அவர் குடும்பத்தின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் நன்றிகள்! http://www.yarl.com/forum3/index.php?showtopic=105740 http://www.yarl.com/forum3/index.php?showtopic=105507
-
- 9 replies
- 1.8k views
-
-
பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட இருப்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது
-
- 40 replies
- 1.8k views
- 2 followers
-
-
கருனாநிதியின் செம்மொழி மாநாட்டையொட்டி ஈழத்தமிழர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில், சமீபத்தில் விடுதலைப் புலிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாலும், கோவையில் இன்று துவங்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது, அகதிகள் முகாமில் பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதாலும் தூத்துக்குடியில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் அதிரடி சோதனை நடத்தி…
-
- 3 replies
- 1.8k views
-
-
கட்டாக்காலி நாய்களை அழிக்கின்ற நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை அறிந்த நாய்கள் அவசரமாக மாநாடு ஒன்றை நடத்தின. மாநாட்டில் வீட்டுநாய்களும் தெருநாய்களும் கலந்து கொண்டிருந்தாலும் தெரு நாய்களே அதிகமாக பங்கேற்றன. உயர்ரக நாய்கள் பகிஷ் கரித்தது போல மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நாய்க்கூட்டத்தலைவர் கூட்டத்தை ஆரம்பித்தார். அன்புக்குரிய எனதருமை சகோதர நாய்களே! மனிதர்களுக்கே நன்றியின் பெருமையை உணர்த்திநிற்கும் என் இனமே எங்கள் குல தெய்வமாகிய வைரவப் பெருமானை ஒரு நிமி டம் வணங்கிக்கொள்வோம் என்றார். அடுத்தாக வீதிவிபத்துக்களிலும் நீர் வெறுப்பு நோயினாலும் மரணித்து போன எங்கள் உறவு களுக்காக மோகன ராகத்தில் அபரக் கீதம் இசைப் போம் என்றார். த…
-
- 4 replies
- 1.8k views
-
-
இந்தக் கேள்விக்கான விடையை அறிவதற்கு முன்னர் இந்த இராஜதந்திரி மீதான சில அடிப்படை விளக்கங்களை அறிந்துகொள்ள வேணடும். யார் இந்த இராஜதந்திரி ? இவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டார்? இவரது பின்னணி என்ன? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் மீதான குறி யாரால் வைக்கப்பட்டது ? பாக்கிஸதானின் இராணுவப் புலனாய்வுத்துறையின் ஓய்வுபெற்ற கேர்ணல் தரத்திலாலான இந்த பஷீர் வாலி மொகமட் 4 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவுக்கான பாக்கிஸதானின் தூதுவராக கடமையாற்றுகின்றார். இவரது ஸ்ரீலங்காவக்கான தூதுவர் நியமனம் கடந்த 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. இவரது நியமனம் தொடர்பாக இந்தியா அப்போது தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஸ்ரீலங்கா அரசக்கு தெரியப்படுத்தியிருந்து. இருந்தும், தமிழர்கள் வ…
-
- 8 replies
- 1.8k views
-
-
இந்தியாவில் இருந்து ஈ.என்.டி.எல்.எப் தேச விரோத குழுவினர் யாழ் குடாவுக்கு வரவழைப்பு. இந்தியாவில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்கி நின்று சமூகவிரோத தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஈ.என்.டி.எல்.எப் தேசவிரோத ஒட்டுக்குழுவின் உறுப்பினர்கள் பலர் தற்போது யாழ்ப்பாணம் வந்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் தமிழ் மக்களுக்கு எதிரான நாசகார நடவடிக்கைகளுக்காக இவர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் செய்திகள் இவர்கள் தற்பொழுது சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது. இவர்களின் முக்கியமான ஒட்டுக்குழு உறுப்பினரான பாஸ் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் …
-
- 1 reply
- 1.8k views
-
-
பிரதேசம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டுள்ள படையினரின் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவுகளுக்குள் இலங்கையின் வடபகுதி பெண்களை இரையாக்கி கொள்வதன் மூலம் படையினர் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்வதை காண முடிகிறது என போருக்கு பின்னர் கடந்துள்ள 6 வருடங்களில் தமிழ் பெண்கள் எதிர்நோக்கி வரும் நிலைமை குறித்து வெளியாகியுள்ள புதிய அறிக்கை ஒன்றின் இணை ஆசிரியர் கூறியுள்ளார். சதாகாலமும் பாதிக்கப்பட்டவர்கள்? போருக்கு பின்னர் இலங்கையின் தமிழ் பெண்கள்(The Forever Victims? Tamil Women in Post-War Sri Lanka) என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தரணி கேட் க்ரோனினுடன் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் உலகமய தலைமைத்துவத்திற்காக கொலின் பவல் பீடத்தின் பேராசிரியர்…
-
- 6 replies
- 1.8k views
-
-
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும் அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (13) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் என்கின்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களில…
-
- 20 replies
- 1.8k views
-
-
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். …
-
- 19 replies
- 1.8k views
-
-
சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை அனுப்பியது உண்மை தானே?, அப்போது திமுக மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் மோசமான நிலைமையை நான் முதலில் எழுப்பியதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் கருணாநிதி. ஆனால், நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் குறுகிய காலத்திலேயே மீறப்பட்டுவிட்டன. தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் முக்கிய திரைப்பட பிரமுகர்களின் கூட்டத்திற்கும், சென்னையில் மனித சங்கிலி போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார் கருணாந…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கை சிங்களவருடையது என சொல்கின்றனர் சிங்கள பேரினவாதிகள் அத்துடன் 6 மாதம் காணுமாம் புலிகளை அழிக்க பகுதி- 1 http://youtube.com/watch?v=0qNeypXY0Qk பகுதி- 2 http://youtube.com/watch?v=MO530uHtY_g பகுதி- 3 http://youtube.com/watch?v=fDAWHlF3BfQ
-
- 2 replies
- 1.8k views
-
-
யாழில் படையினரால் 6 பலசரக்கு கடை திறப்பு யாழில் ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்கள் நலன் கருதி 6 உணவுப்பொருட்க்கள் விற்பனை நிலையங்களைத் திறந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட மோதலினையடுத்து A9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு உணவு விநியோகமே யாழ் குடாநாட்டிற்க்கு இடம்பெற்றது. இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகமாகவும், குறைந்தளவிலுமே கிடைத்தமை எனவே மக்களின்ம் நலன் கருதி இவ் விற்பனை நிலையங்களை திறந்ததாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்து. அதேவேளை இவ் விற்பனை நிலையங்கள் யாழ் நகரிலும், தெல்லிப்பளை, தனங்கிழப்பு, சாவக்கச்சேரி மற…
-
- 3 replies
- 1.8k views
-
-
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து முஸ்லிம் சமூகம் போராட்டம் புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் யாழ்.முஸ்லிம் சமூகம் கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் காலை ஒஸ்மானியாக் கல்லூரியிலிருந்து குறித்த போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456694041720283904#sthash.dOtXnIFz.dpuf
-
- 31 replies
- 1.8k views
-
-