ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368588
-
-
- 21 replies
- 1.8k views
- 1 follower
-
-
பயங்கரவாத அழிப்பும் வறுமை ஒழிப்புமே எம்முன்னுள்ள சவால்கள் சுதந்திரதின செய்தியில் ஜனாதிபதி மஹிந்த 2/3/2008 9:05:13 PM வீரகேசரி நாளேடு - பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதும் வறுமையினை ஒழிப்பதுவுமே எம்முன்னுள்ள சவால்களாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 60 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் நாகரீகத்தையும் கொண்ட ஒரு நாட்டுக்கு 60 வருடங்கள் என்பது ஒரு சிறிய கால இடைவெளியாகும். இருந்தபோதிலும் இந்த 60 ஆவது ஆண்டு சுதந்திர வைபவமானது நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தை…
-
- 4 replies
- 1.8k views
-
-
பாலச்சந்திரன் படுகொலை பின்னணியில் போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த கூட்டமைப்பு வேண்டுகோள் 'ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பப்படவுள்ள காணொளியில் உள்ள ஒரு பகுதியே பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள். இதைவிட நெஞ்சை உருக்கும் கொடூரமான சம்பவங்கள் வெளிவரக்கூடும். எனவே, இந்தியா உட்பட உலக நாடுகள் தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற …
-
- 1 reply
- 1.8k views
-
-
இங்கே சொடுகுக http://www.isaiminnel.com/video/index.php?...1&Itemid=43
-
- 1 reply
- 1.8k views
-
-
சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபர்ட் ஓ பிளெக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி படுதோல்வியடைந்ததாக நம்பகமான செய்திகள் எமக்குத் தெரிவிக்கின்றன. ஈ.பி.டி.பி சார்பிலும் சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சர் என்ற வகையிலும்; ரொபர்ட் ஓ பிளக்கை சந்திக்க விரும்புவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் உயர்ஸ்தானிகராலயத்துக்கு அமைசச்ர் டக்ளஸ் தெரிவித்திருந்தும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அமைச்சர் டக்ளஸின் இந்த வேண்டுகோளை இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்தனர். ஆனால் பிளேக் அவ்வாறான சந்திப்புக்கள் தன…
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
சனி 17-11-2007 21:43 மணி தமிழீழம் [முகிலன்] போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக வேண்டாம் - யப்பான் எச்சரிக்கை போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு எத்தனிக்க வேண்டாம் என, சிறீலங்கா அரசாங்கதை யப்பான் எச்சரித்துள்ளது. இது குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக, அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு செய்தியொன்றை அனுப்பி வைத்திருக்கும் ஜப்பானிய அரசாங்கம், போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் விலகும் பட்சத்தில், அரசாங்கத்திற்கான நிதியுதவிகளை தாம் நிறுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பதாக சிறீலங்கா அரசாங்கம் தடை செய்வது, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக அமையும் என, …
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமி கைலாசபதி என்ற யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட உள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிரைமரி தேர்தல்களில் குடியரசுக் கட்சி வேட்பாளர் சான்டி ஸ்மித்தை எதிர்த்து சுமி போட்டியிடவுள்ளார். சுமி கைலாசபதி அரசியல் விஞ்ஞானம் தொடர்பில் முதுமாணிப் பட்டமொன்றை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமி கைலாசபதி 1990களில் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் ஆன் ஆர்பரில் வசித்து வரும் சுமி கைலாசபதி யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. http…
-
- 2 replies
- 1.8k views
-
-
அடையாளம் தெரியாதவர்கள் அறிக்கை விடுகிறார்கள். தமிழீழ மக்களாகிய நாம் நொந்து நூலாகிப் போய் இருக்கும் இவ்வேளையில் அறிக்கை போர் நடத்தி வரும் சிலரில் அடையாளம் தெரியாதவர்களே. பல அறிக்கைகளை இப்படியானவர்கள் விடுக்கும் போது சிரிப்பதோ அழுவதோ என்று கூட தோண்றுகிறது. இன்று கூட சிறிலங்காவின் துணை இராணுவக் குழுத்தலைவர்களில் ஒருவரான பிள்ளையான் எனும் ஒரு நபர் தமிழீழ தேசியத் தலைவரையும் மக்களையும் தவறாக வழிநடத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். தமிழீழத்தில் இருக்கும் வரை எனக்கு இவர் யார் என்றே தெரியாது. அதுமட்டுமல்லாது தமிழீழத்தில் இருக்கும் எனது உறவுகளிற்கும் இவர் யார் என்று தெரியாது. இப்படியான ஒருவரின் அறிக்கையாக வெளியிடப்பட்டவை வருமாறு ” “…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர் முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக, அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்க…
-
- 17 replies
- 1.8k views
-
-
மொறட்டுவவில் தமிழ் மாணவர்களுக்கு அடி-உதை: 10 மாணவர்கள் உட்பட 30-க்கும் அதிகமானோர் கைது [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 07:07 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவ கட்டுப்பெத்தவில் இன்று காலை பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலையடுத்து மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்குள் தமிழ் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் பல்கலைக்கழகத்திற்குள் இருந்த தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். 10-க்கும் அதிகமான தமிழ் மாணவர்களை சிங்கள மாணவர்கள் நையப்புடைத்தனர் என்று பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிங்கள …
-
- 3 replies
- 1.8k views
-
-
June 12, 2011 இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையானவர் இந்திய அதிகாரி சிவசங்கர் மேனன் என்று கூறியுள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெற எந்த விதத்திலும் இந்திய மத்திய அரசு உதவாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, அயலுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய இதழாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழர்களுடன…
-
- 11 replies
- 1.8k views
- 1 follower
-
-
பதினான்கு வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன், 7 வருடக் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையாகிய இரத்தினசிங்கம் சிவநாதன் என்பவரே நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அவரது மகளாகிய சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா நஷ்டஈடாக வழங்குவதுடன், தண்டப் பணமாக 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தேசிய சிறுவர் பாதுகா…
-
- 17 replies
- 1.8k views
-
-
எஸ்.ஆர். லெம்பேட் - மன்னார் தள்ளாடி படை முகாம் மீது இன்று திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர் . இச்சம்பவம் காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது . விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இரண்டிற்கு மேற்பட்ட குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளது . இதன் போது 02 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் . இவர்கள் உலங்கு வானுர்த்தி மூலம் அனுராத புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் . இதனைத் தொடர்ந்து மன்னார் மதவாச்சி பிரதான பாதையுடனான போக்குவரத்து 1 மணி நேரம் தடை செய்யப்பட்டு பின் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டது நன்றி : வீரகேசரி இணையம்
-
- 1 reply
- 1.8k views
-
-
அண்மைய மாதங்களில் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்சீன கடற்பரப்பு மற்றும் அந்தமான் கடற்பரப்பு குறித்த விவகாரங்கள் உலக அரங்கின் கவனயீர்ப்பு மிக்க நிலையை எட்டியிருக்கிறன. பல்வேறு மேற்கு நாடுகளின் இராஜதந்திர வெளிவிவகார நிலைமைகள் குறித்தும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டிருக்கிறது. அத்துடன் அப்பிராந்திய நாடுகளிலும் கடற்பரப்புகளிலும் அண்மைக்காலங்களில் இடம் பெற்று வரும் பதட்டநிலை மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தளத்திற்கு உலக அரங்கில் நிலை எடுத்துள்ளது. மேலும் இனிவரும் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மிக கொதிநிலையில் இருக்க கூடிய பிரதேசமாக தென்கிழக்காசிய பகுதி அமெரிக்க நோக்குநர்களால் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியிலான உலக வர்த்தகத்தில் உற்பத்தி செலவுகளால் தாக்கு பிட…
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.8k views
-
-
வெள்ளிக்கிழமை, 22 டிசெம்பர் 2006, 05:02 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லா…
-
- 8 replies
- 1.8k views
-
-
இன்று போர்வெறி பிடித்து கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு. வெற்றிக்களிப்பில் திளைத்துப்போயிருக்கும் அதன் செயற்பாடுகள் பின்விளைவுகள், எதிர்விளைவுகளை பற்றி துளியெயேனும் சிந்திக்காத விதமாக அமைந்திருக்கிறது. "தானே உலகின் வல்லரசு" என்ற பாணியில் உலக நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்து திமிருடன் பேசிவருகிறது. இந்நிலையில், இதுவரைகாலமும் சந்திக்காத சமர்க்களங்களை சந்திக்கப்போகிறது சிங்களதேசம். தமிழினம் மீது வில்லங்கமாகவே திணிக்கப்பட்ட போரில் தமிழினம் அதிகமாகவே இழந்துவிட்டது. "புலிகளை ஒழிக்கின்றோம்" என்று சொ ல்லிகொண்டு தமிழினத்தின் மீது இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. அப்பாவித் தமிழர்களின் அழிவுகளை, இழப்புக்களை தமது மாபெரும் வெற்றிகளாக ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழ் பேசினால் செத்துப் போ! ''கடல் ஒரு வேட்டைக் காடு. வலை போடும் மீனவன் அதன் வேட்டைக்காரன். வேட்டைஆடுபவனுக்கு எல்லைகள் ஏது? தத்தமது அதிகார எல்லைகளைத் தூக்கிப்பிடிக்கக் கடல் நீருக்குள் கோடு போட்ட அரசுகள், அதை மீன்களுக்கும் சொல்லிஇருக்கலாம்!'' - ஜோ டி குரூஸ் அழுத்தி உச்சரிக்கும் வார்த்தை ஒவ்வொன்றிலும் என்னால் மீன் வாசத்தை உணர முடிந்தது. ''நான் ஒரு பிறவி மீனவன்!'' என்று நெஞ்சு நிமிர்த்துகிற ஜோ, தென் தமிழக மீனவக் கிராமமான உவரியின் பிள்ளை. நெய்தல் நிலத்தின் நிலையற்ற வாழ்வை உப்பு மொழியோடு பதிவு செய்திருந்த இவரது 'ஆழி சூழ் உலகு', தமிழ் எழுத்துலகின் முக்கியப் பிரதிகளில் ஒன்று! இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு அவ்வப்போது தங்கள் உயிர்களைத் தின்னத் தருகிற ராமேஸ்…
-
- 0 replies
- 1.8k views
-
-
மஹேலவை கட்டியணைக்க காரணமென்ன?விளக்குகிறார் அவரது ரசிகை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் முகமாக வடமராட்சியில் இடம்பெற்ற நடைபவனியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரர்மஹேல ஜெயவர்த்தனவை கட்டியணைத்து பரபரப்பை கிளப்பிய பெண், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் அப்படி செய்து விட்டதாக விளக்கமளித்துள்ளதுடன் ஊடகங்கள் இதனை தவறான கண்ணோட்டத்துடன் அணுகு வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். ‘எங்கள் குடும்பத்தில் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் இலங்கை ரசிகர்கள். சங்ககார, மஹேல என்றால் அனைவருக்கும் உயிர். கடந்த தடவை சங்கா நடைபவனி வந்தபோது ஆயிரம் ரூபா கொடுத்தேன். மஹேலவை நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில்தான…
-
- 25 replies
- 1.8k views
-
-
மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மலேசியன் காவல் துரையின் ஒரு முறைப்பாடு லிங்க் போட்டுள்ளேன் தயவு செய்து .உங்களால் முடிந்த அளவு முறைப்பாடுகளை செய்யுங்கள் இன்னுமொரு தடவை எங்கள் சகோதரிகள் நடுவீதியில் தெரு நாய்களால் குதரப்படக்கூடாது. http://www.youtube.com/watch?v=p3Vyibqz61I http://ulavan.net/?p=4084
-
- 16 replies
- 1.8k views
-
-
விடுதலை புலிகளிற்கு ஆதரவாக பேசும் இலங்கையரின் விசா இரத்துச் செய்யவேண்டும் :சுப்ரமணியம் சாமி வீரகேசரி இணையம் 6/9/2009 10:56:40 AM - இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் இலங்கை நாட்டவரின் விசாவை ரத்து செய்து அவர்களை உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில்,"இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்யும் அவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருக்கும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பேசுவதற்கு அந்நாட்டினருக்கு உரிமை கிடை…
-
- 16 replies
- 1.8k views
-
-
"வாகரையைப்போல் வன்னியைக் கையாள முடியுமா?" மனோகரன் மீண்டும் ஒரு வாகரையைப்போல வன்னியையும் ஆக்குவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக நிலைமைகளை அவதானித்துவரும் ஒரு நண்பர் சொன்னார். அண்மையில் வன்னி மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றன. வன்னியைச் சுற்றியும் வன்னிக்கு உள்ளேயும் தாக்குதல்களை அது தீவிரப்படுத்தியிருக்கிறது. இது ஒரு வகையில் வன்னி மீதான பெரும் படையெடுப்பை இலகுவாக்குவதற்கான தந்திரோபாயமாகவும் இருக்கிறது. அதேவேளை ஒரு தொடரான நீண்டகால அடிப்படையிலான போர் நடவடிக்கையாகவும் இது கொள்ளத்தக்கது. ஏனென்றால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வன்னி மீதான போரை நடத்தாமலிருக்க முடியாது. இதற்கு இரண்டு காரணங்களிருக்கின்றன. ஒன்று வன்னி…
-
- 1 reply
- 1.8k views
-
-
"என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே... யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல... என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்... புலிகள்தான்!. கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அனுப்பியுள்ளார்கள். இத்தாலி சோனியாவை பாரதத்தின் அன்னை என்று அழைக்கும்போது, என் சொந்த ரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்." என இயக்குனரும், தமிழுணர்வாளருமாகிய சீம…
-
- 1 reply
- 1.8k views
-
-
சிறிலங்காவுக்கு தாக்குதல் ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும்: டெக்கான் ஹெரால்ட் [வெள்ளிக்கிழமை, 29 யூன் 2007, 06:06 ஈழம்] [சி.கனகரத்தினம்] இந்தியாவின் "பாதுகாப்பு பொருளாதார" கொள்கையைக் கருத்தில் கொண்டு சிறிலங்காவுக்கு தாக்குதல் ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் வெளியாகும் டெக்கான் ஹெரால்டு எனும் ஆங்கில நாளேடு வலியுறுத்தியிருக்கிறது. அந்நாளிதழில் பிதந்த எம். செங்கப்பா எழுதியுள்ள கட்டுரை: சீனாவிடமிருந்து ஆயுதக் கொள்வனவு செய்ய கொழும்பு மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து இந்தியா-சிறிலங்கா உறவு கீழ்நிலைக்குச் சென்றது. "இந்தப் பிராந்தியத்தில் நாங்கள் பெரும் சக்தி. சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் சிறிலங்கா ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதை நாம் விரும்பவில்லை…
-
- 5 replies
- 1.8k views
-
-
ரங்கிரி தம்புள்ள விகாரை பிரதம மதகுருவின் ஆணவமும் அட்டகாசமும்:- ரங்கிரி தம்புள்ள விகாரையின் பிரதம மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரோ அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாயல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். குறித்த பள்ளிவாயல் விகாரையின் புனித பிரதேசத்தில் உள்ளடங்குவதாக கூறி அதை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்படும் கருத்தை முஸ்லிம்கள் நிராகரித்துள்ளனர். பற்றியெரியும் இந்த பிரச்சினை இன்னும் அரசினால் தீர்க்கப்படவில்லை. குறித்த தேரர் இவ்வாறான சர்ச்சைக்கு ஒன்றும் புதியவரல்ல, இதற்கு முன்னரும் நிர்வாக மற்றும் அரசியல் கட்டமைப்புகளுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். பேட்டியின் முடிவின்போது நிருபர்…
-
- 1 reply
- 1.8k views
-