Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் adminJanuary 10, 2024 யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் இன்றைய தினம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த நிகழ்வு வட மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போது, வேலணை, வலிகாமம் மேற்கு, நெடுந்தீவு, வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கும், பருத்தித்துறை (http://pointpedro.uc.gov.lk) நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ இணைய தளங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. மக்களுக்காக சேவை புரியக்கூடிய உள்ளுராட்சி நிறுவனங்கள் இவ்வாறு உத்தியோகபூர்வ இணையத் தள…

  2. பிக்குமார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? [29 - July - 2007] ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான போராட்டத்தின் துவக்கமாக கடந்த வாரம் தலைநகர் கொழும்பில் `மக்கள் அலை' பேரணியை நடத்திய அதேதினத்தில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது. கிழக்கில் தொப்பிகல பிரதேசத்தில் இராணுவத்தினர் அடைந்த வெற்றியை சிறுமைப்படுத்திக் கருத்துத் தெரிவித்து படையினரை அவமதித்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பௌத்த பிக்குமாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த தீர்வையின்றி வாகனங்களை இறக்…

    • 10 replies
    • 1.9k views
  3. மகிந்தரின் அந்தரங்க முகம் குளோபல் தமிழச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 26 செப்டம்பர் 2011 இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நோர்வே பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசின் உடல் மொழியையும், அவரது குரலின் தொனியையும், அவரது ராஜதந்திர அணுகுமுறையையும் பார்த்து வியந்தது உண்டு. ஒரு வகையில் அவரது ராஜதந்திர அணுகுமுறையின் ரசிகன் நான் என்றே சொல்லாம். மோகினி மொனிக்கா லெவின்ஸ்க்கியை மயக்கிய பில் கிளின்டனிடமும் அப்படியான ஒரு ஈர்ப்பு உண்டு. ஜோர்ஜ் புஸ்ஸின் உடல் மொழியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் உடல் மொழியும் அழுத்தமாக ஒப்பனை செய்யப்பட்ட வில்லன்களின் மிகை நடிப்பு போல் தெரிவது கூடத் தற்செயலானதுதான் எனவே நினைக்கிறேன். …

  4. Published By பெரியார்தளம் On Sunday, October 2nd 2011. Under பெரியார் திராவிடர் கழகம், முதன்மைச்செய்திகள் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 20 -ம் தேதி முதல் தொடர்ச்சியான “மரண தண்டனை ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டங்களை” பெரியார் திராவிட கழகம், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.இதன் அமைவாக இன்று (1 .10 .11 சனிக்கிழமை ) மாலை, கரூர் உழவர் சந்தை முன்பு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, பொது செயலாளர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விடுதலை ராசேந்திரன் “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னமும் புதிராக உள்…

  5. 1 Min Read February 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சர்வதேச கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம் மற்றும் அசோகரியங்களை குறைப்பதற்கா…

  6. இளையராஜா இசை நிகழ்ச்சி; புதிய திகதிகள் அறிவிப்பு! கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” என்ற இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த இசை நிகழ்வு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி நிகழ்ச்சியை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்வு, கடந்த மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது. எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளைய…

  7. தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம்உண்மையான அக்கறை காண்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதொடர்பான தமது கவலைகளை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் நடத்தவுள்ள சந்திப்பின் போதே, அரசியல்தீர்வு பற்றிய தமது கவலைகளை அவரிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தம்முடன் சிறிலங்கா அரசாங்கம் இரண்டாவது முறையாகப் பேச்சுக்களை தொடங்கிய போதும், எந்த முன்னேற…

  8. [ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 01:03 GMT ] [ கார்வண்ணன் ] சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான இந்தக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளையும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் இந்தச் சந்திப்…

    • 6 replies
    • 959 views
  9. உடுவில் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். உடுவில் கிழக்கு, நாகம்மாள் கோவிலடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: வீட்டில் இருந்த குடும்பஸ்தரை மோட்டார் சையிக்கிள் மற்றும் வானில் வந்த ஏழு பேர் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். கதறல் சத்தம் கேட்டு உதவ சென்ற அயல்வீட்டுகாரனும் இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கானார். வலி. வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியரான தங்கவேல் கருணாகரன் (வயது 35) தலையிலும் தோள் பட்டையிலும் படுகாயமடைந்தார். அயல் வீட்டுக்காரரான கூலி வேலை செய்யும் …

    • 2 replies
    • 463 views
  10. February 13, 2019 ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை கூடடத் தொடரில் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இணைந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இந்தியா சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் …

    • 4 replies
    • 663 views
  11. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு குழப்பக்காரர் எனவும் தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “சுமந்திரன் எங்கு சென்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தி மகிழ்வதோடு அதற்கு ஆதாரமாக சில விடயங்களை குறிப்பிடலாம். அவரால் வடக்கு மாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டதோடு, சீ.வி.கே.சிவஞானத்தை கையாண்டு விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தார். விலகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சமீபத்தில் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய அனைத்து கட்சிகளும் வெளியேறியது. இந்தக் கட்சிகளின் விலகல் தீர்மானத்து…

    • 6 replies
    • 794 views
  12. மென்மேலும் உறுதியாகிறது யுத்த தீவிர எண்ணப் போக்கு யுத்தநிறுத்தம் செயன்முறையில் உள்ளது என்று கூறப்பட்டாலும், அது செத்துச் செயலிழந்து நாளாகி விட்டது. உக்கிப்போன காகிதத்தில், உருக்குலைந்த எழுத்துக்களில் அது பதிவு செய்யப்பட்டிருப்பதோடு சரி. உண்மையில் நடைமுறையில் அது இல்லை. யுத்த நிறுத்தம் இருப்பதாக ஒரு புறம் கூறிக்கொண்டே மறுபுறம் பெரும் யுத்தச் செயற்பாடுகளும், இராணுவ நட வடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் அதிசயப் பூமி இது. பொதுவாக யுத்த நிறுத்த விடயத்தில் என்றில்லை, தேசிய இனப்பிரச்சினை தொடர்பான சகல அம்சங்களி லுமே இவ்வாறு இரட்டைவேட நிலைப்பாடே தரப்புகளி னால் இங்கு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் கண்கூடு. புதிதாக ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்தரின் அரசு யு…

  13. நாற்காலியில் போட்டியிடுவது குறித்து மஹிந்த பேசவில்லை! - என்கிறார் டி.எம்.ஜயரட்ன [Monday 2015-06-08 07:00] நாற்காலி சின்னத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எவ்வித பேச்சும் நடத்தவில்லை என முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேசப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது. தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை நியமித்தல் அல்லது தேர்தலின் பின்னர் பிரதமர் ஒருவரை நியமித்தல் ஆகியனவற்றை விடவும், தேர்தலின் பின்னர் பெரும்பான்ம…

  14. நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை இலங்கையின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை நிள அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ.உதயகாந்த தெரிவித்துள்ளார். கரையோரப் பகுதியிலுள்ள மாற்றங்கள் மற்றும் கொழும்பு நகரின் நகர நிர்மாணத்தினால், நிலப்பரப்பு அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/நாட்டின்-நிலப்பரப்பை-மீண/

  15. பொலிஸ் அதிகாரிக்கு 100 மில்லியன் ரூபா லஞ்சம் கொடுத்தாரா பசில்? [saturday 2015-06-13 20:00] முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை விடுதலை செய்ய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தகவல் வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அரசியல்வாதி ஒருவர் தன்னை விடுதலை செய்ய கோரி பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக கூறினார். எனினும் அந்த அரசியல்வாதி யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே அந்த அரசியல்வாதி என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ள…

  16. சனநாயகம் – மக்கள் இறைமை – சர்வசன வாக்குரிமை தொடர்பாக குறுந்திரைப்படம் February 26, 2019 குளோபல் தமிழ்ச செய்தியாளர் தேர்தல் ஆணைக்குழுவின் 2017 – 2020 மூலோபாயத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சனநாயகம் தொடர்பாக சமூக கருத்தாடலொன்றை ஏற்படுத்துவதற்காக களணி பல்கலைகழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து சனநாயகம் , மக்கள் இறைமை மற்றும் சர்வசன வாக்குரிமை தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதற்காக ‘ பௌர’ என்ற பெயரில் குறுந்திரைப்பட விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித…

  17. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் பேரினவாதம் : தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை. திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிதைப்பதே பேரினவாதத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதாக தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் இவ்வாறான விஞ்ஞான பூர்வமற்ற, திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிங்கள-பௌத்த பேரினவாதம் சிதைத்து வருகின்றது. சிங்கள-பௌத்த மயமாக்கல் மூலமாக சிங்கள-பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக வடக்கு-கிழக்கைக் ம…

  18. தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் உரிய தீர்வினை வழங்குமாறு சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் சகல உரிமைகளுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று கனடாவில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும் கனடாவின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈ…

  19. புல­னாய்வு துறையில் அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­து, புலிகளை அழித்­தொ­ழிப்­பதில் பெரும் பங்­காற்றினர்புல­னாய்­வுத்­து­றையில் முஸ்­லிம்கள் அதி­க­ளவில் இணைந்து நாட்­டுக்­காகப் பாரி­ய­ளவில் பங்­காற்­றி­யுள்­ள­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ தெரி­வித்தார். கண்டி மாவட்­டத்தில் உடு­நு­வர எல­மல்­தெ­னி­யவில் “எலிய” அமைப்­பினால் தொழி­ல­திபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்­பாட்டில் நேற்­று­முன்­தினம் நடாத்­தப்­பட்ட கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு அவர் உரை­யாற்­றினார் கண்டி மாவட்­டத்தின் சகல பகு­தி­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்வில் பரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மகிந்­தா­னந்த அளுத்­க­மகே, கெஹ­லிய ரம்­புக்­வ…

  20. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை ஒடுக்க மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக மற்றொரு துணை இராணுவக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  21. பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்துடன் திருட்டுக்கும்பல் ஒன்றினை இன்று காலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகேஸ் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வரும்போது பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகினர். இதனையடுத்து 11 பேர் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வாக்குமூலத்தினடிப்படையில் பலர் தேடப்பட்டு வருகின்றனர். அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் நேற்று வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர் திருட்டுக்கும்பலுடனும…

  22. யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம் (ஆதவன்) யாழ்ப்பாண மாநகரசபையின் ஆழுகைக்கு உட்பட்ட நாவாந்துறை பொதுச்சந்தை போதிய பராமரிப்பு வசதிகள் இன்றி துர்நாற்றத்தோடு காணப்படுகின்றது என்று பிரதேச மக்களும் வியாபாரிகளும் சுட்டிக்காட்டியுள்னர். இந்தச் சந்தையில் மரக்கறிகள், இறைச்சி வகைகள், மீன்கள் போன்ற வற்றுக்கான விற்பனை நிலையங்கள் உள்ளன. அதிகளவான மக்கள் இந்தச் சந்தையில் ஒன்றுகூடுகின்றனர்.ஆயினும் சந்தை போதிய பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது. சரியான முறையில் சுத்திகரிப்புச் செய்யப்படாமை மற்றும் கழிவகற்றப்படாமையால் அங்கு துர்நாற்றம் வீசுகின்றது. கழிவுகளில் புழுக்கள் உ…

  23. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருப்பதும் அவர்கள் அரச நிறுவனங்களில் 90 விழுக்காடு அதிகாரத்தை கொண்டிருப்பதும் புதிய உலக சாதனையாகப் போகிறது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் வார இறுதி சிங்கள ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  24. இலங்கையில் சமாதான முயற்சிகள் தோல்வியுற்றது ஏன் என்பதை கண்டறிவதற்கு நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தோல்வியடைந்த அமைதி வழிமுறை குறித்து நோர்வே ஒரு சுயமதிப்பீட்டைச் செய்துள்ளது. இலங்கையில் 1997ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை அமைதித் தூதுவராக நோர்வே செயல்பட்டிருந்தது. நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதீப்பீட்டுப் பணியை, நோர்வேயில் இருந்து இயங்கும் மைகேல்சன் இன்ஸ்டிடியூட் மற்றும் லண்டனில் இருந்து செயல்படும் கீழ்த்திசை மற்றும் ஆப்ரிக்கக் கல்விகள் கழகம் ( சோ-அஸ்) ஆகிய நிறுவனங்கள் இணைந்து செய்திருந்தன. இந்த அறிக்கை வெள…

  25. உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசாங்கம் செய்யவில்லை என்று சுட்டிக் காட்டி ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு, தமிழ் சிவில் சமூக அமையம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம், யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, மன்னார் பிரஜைகள் குழு, காணாமல் போனோரின் உறவினர் சங்கம், கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளன. மார்ச் மாதம் 28ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய போதும், கடந்த மாதம் 29ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய…

    • 0 replies
    • 324 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.