ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா – கனடா – பிரான்ஸ் பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டங்களில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று தமிழா செவ்வாய்கிழமை (26-06-2012) தமிழர் தாயகத்தின் போராட்டத்திற்க சமாந்திரமாக இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்கா : நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு ( UN Head Quarters in New York on first avenue ) முன்னால், மாலை 4 மணி முதல் 6 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. பிரான்ஸ் : ஐக்கி…
-
- 1 reply
- 473 views
-
-
அமெரிக்க==> மக்களையோ சொத்துகளையோ புலிகள் தாக்கவில்லை: அமெரிக்கா அறிவிப்பு. அமெரிக்க மக்களையோ அமெரிக்க சொத்துக்களையோ இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவிலை என அமெரிக்கா இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைந்த அமைப்புக்கள் தொடர்பில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தாக்குதல் நடந்த சமயம் குறித்த வாகனத்தில் சிறீலங்கா படையினர் பயணம் செய்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதிவழங்குவதை இனம் காண்பதற்கு அமெரிக்காவுக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்…
-
- 0 replies
- 836 views
-
-
இலங்கைக்கான பொருளாதார உதவியை கணிசமான அளவு குறைத்தது அமெரிக்கா இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அந்த நாட்டின் 2009ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு செயற்பாட்டு நிதித்திட்ட அறிக்கை, அதேவேளை வாஷிங்டன் இலங்கைக்கான ஒட்டுமொத்த பொருளாதார உதவியை பெருமளவுக்கு குறைத்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அறிக்கை கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீஸா ரைஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு நிலைவரங்களில் முன்னேற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவில் மிலேனியம் உதவித் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டதை இந்த நிதியறிக்கை உறுதி செய்துள்ளது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்கா 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது 23 ஏப்ரல் 2013 இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டமைபொன்றை ஆரம்பிக்கும் முதல் நடவடிக்கையாக அமெரிக்க அரசாங்கம் 2012 ஆம் ஆண்டுக்கான தனது மனித உரிமை அறிக்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கையை குற்றவாளியாக்கியுள்ளது. இந்த அறிக்கை நேற்று முன்தினம் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இந்த மனித உரிமை அறிக்கையின் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை தாண்டி இலங்கை எதிராக செயற்பட அமெரிக்க திட்டமிட்டுள்ளது. விடுதலைப்புலிகளி செயற்பட்டாளர்கள் குறித்து விசாரணை நடத்துவது, வெளிநாட்டு தூதுவர்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளவர்களை கண்டுப்பிடி…
-
- 0 replies
- 487 views
-
-
அமெரிக்கா TNAஐ பேச்சுக்கு அழைத்தமைக்கு காரணம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாமே, என மக்கள் நிரூபித்துள்ளனர்…. ” ஜனநாயக போராளிகள் கட்சியை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில், அம்பாறை மாவட்ட , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான, தேர்தல் தெளிவூட்டும் கலந்துரையாடலில் இன்று இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழர்களின் ஜனநாயக போராட்ட வரலாற்றில், மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதல…
-
- 5 replies
- 472 views
-
-
அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது. தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயர் 10/08/1997 இல் இருந்து இடம்பெற்று வருகிறது. கடந்த வியாழன் மீளமைக்கப்பட்ட இப்பட்டியலில் லக்ஷர் ஐ ஜான்வி மற்றும் சீனாய் - ஐஸிஸ் ஆகிய இரு புதிய அமைப்புக்களும் அடக்கப்பட்டிருக்கின்றன. இதைவிடவும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களும் தொடர்ந்தும் இப்பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. https://www.state.gov/foreign-terrorist-organizations/
-
- 80 replies
- 6k views
- 1 follower
-
-
அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் சிறிலங்கா வருவதற்கு வாய்ப்பு –வொசிங்டனில் இருந்து தகவல் APR 12, 2015 | 9:09by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கூட, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, “அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கூடிய விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது. மேலதிகமாக, அமெ…
-
- 0 replies
- 467 views
-
-
அமெரிக்கா என்ன செய்யப்போகின்றது? கூட்டமைப்பினை ஏன் அழைத்துள்ளார்கள்? நோர்வே மீண்டும் ஏன் களத்தில் இறங்கியுள்ளது? இந்தியா அமைதியாக உள்ளதே, இந்தியாவை மீறி அமெரிக்காவால் ஏதும் செய்ய முடியுமா? . இப்படி பல கேள்விகள் எம்முன் விரிகின்றது. அமெரிக்காவிற்கு நாளை கூட்டமைப்பு விஜயம் ஒன்றை செய்யப்போவதாக கூறும் நிலையில் அவர்களில் சிலருக்கு இன்னமும் வீசா ஒழுங்குகள் கூட சரிவரவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்னமும் ஹிலாரி கிளிங்டனை சந்திக்கவோ அல்லது முக்கிய இராஜ தந்திரிகளைச் சந்திக்கவோ நேர அட்டவணை கொடுக்கவில்லை. . ஆனால் பல அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் உட்பட ஏதோ இந்த நடவடிக்கையினை ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக பிரச்சாரப்படுத்தியும்,அமெரிக்கா ஏதோ என்னமோ செய்…
-
- 9 replies
- 1.1k views
-
-
யுத்தக்குற்ற விசாரணை: அமெரிக்கா அரைவழி நண்பன். 29.02.2012 இக்கட்டுரை ஒரு கொள்கை ஆய்வுக் கட்டுரையாகவும் ஒரு கொள்கை வகுப்புக் கட்டுரையாகவும் அமைந்துள்ளதுடன் இலங்கைத்தீவு தொடர்பான சர்வதேச மற்றும் பிராந்திய அரசியலின் உடற்கூற்றியலை விளக்குவதாயும் அமைந்துள்ளது. இவற்றுடன் கூடவே ஓர் அரசியல் நிலைப்பாட்டையும் இக்கட்டுரை கோடிகாட்டி நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் யுத்தம் ஒரு சர்வதேச யுத்தத்தினதும், ஒரு பிராந்திய யுத்தத்தினதும், ஒரு முதற் பகுதியாய் முடிவடைந்துள்ளது. அதன் இரண்டாம் பகுதி இப்போது ஆரம்பமாகிவிட்டது. சீன-அமெரிக்க சர்வதேச வியூகமும், இந்திய-சீன பிராந்திய வியூகமும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் யுத்தமாய் வெடித் தெழுந்ததே இதன் முதலாவது பகுதியாய் அமைந்தது. சீனா…
-
- 4 replies
- 1k views
-
-
சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற எடுத்த முயற்சி மீண்டுமொருமுறை தோல்வியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ரீதியாக சிறீலங்கா தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வருவதை இந்த சம்பவம் எடுத்து காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே சிறிலங்காவின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வொசிங்டனில் உ…
-
- 4 replies
- 908 views
-
-
அமெரிக்கா இரட்டை வேடம் போடுகின்றது ஜே.வி.பி. குற்றச்சாட்டு; நாளை ஆர்ப்பாட்டம் 1/22/2008 12:30:01 AM வீரகேசரி இணையம் - இலங்கையின் கடற்படையினருக்கு உதவி வழங்குவதாகக் கூறும் அமெரிக்கா ஐ.நா வை பயன்படுத்தி இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக பிரசாரத்திலும் ஈடுபடுகின்றது. மொத்தத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகின்றது என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த தெரிவித்தார். அமெரிக்காவின் போக்கினை கண்டித்தும் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் கருத்தினை கண்டித்தும் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்படும் என்றும் அவர் கூறினார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, …
-
- 2 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவின் உலங்கு வானூர்தி கம்பனியான பெல் தனது பிந்திய தயாரிப்பான பெல் 412 ரக உலங்கு வானூர்திகள் இரண்டினை சிறிலங்காவிற்கு விற்றுள்ளது. அமெரிக்காவிலுள்ள ரென்ஸி எனும் இடத்தில் வைத்து வைபவரீதியாக கையளித்ததாக அறிவித்துள்ளது. சிறிலங்கா விமானப்படையுடன் தமக்கு 40 வருடங்களுக்கும் மேலாக உறவு உண்டு என பெல் ஹெலிகொப்டர் கம்பனியின் உபதலைவர் லாரி றொபேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் எயார் மார்ஷல் அபேவிக்கிரம பொறுப்பேற்றுக்கொண்டார். பெல் 412 ஹெலிகொப்டர்கள் தமது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான நம்பத்தகுந்த ஆற்றல்வாய்ந்தவை என இலங்கை விமானப்படையின் தளபதி எச்.டி.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். http://www.tamilthai.../newsite/?p=827
-
- 5 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை – பிரசாத் காரியவசம்:- 23 ஆகஸ்ட் 2014 அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலேயே இலங்கை குறித்து கருத்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இலங்கை ராஜதந்திரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் அடிக்கடி சந்திப்புக்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் அமெரிக்க புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமிழக அரசியல்வாதிகள் தொடர்ச்சிய…
-
- 0 replies
- 348 views
-
-
அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் கடற்படைகளுக்கு இலங்கை பயிற்சி:- கடற்படைத் தளபதி திசர சமரசிங்க. [Monday, 2010-12-27 03:35:20] உலகில் மிகப்பெரிய போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை வெற்றிகண்டதனால், உலக நாடுகள் பலவற்றின் கடற்படைகளுக்கு பயிற்சியளிக்குமாறு இலங்கைக் கடற்படையினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி திசர சமரசிங்க தெரிவிக்கின்றார். தற்போதைக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் என பன்னிரண்டு நாடுகளின் கடற்படையினருக்கு இலங்கைக் கடற்படையின் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் குறித்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை காலமும் ஒரு சில நாடுகளுட…
-
- 2 replies
- 835 views
-
-
அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு அடுத்த மாதம் 14 ஆம் திகதி நாட்டைக் காட்டிக் கொடுக்க அமெரிக்கா செல்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் செயற்றிட்ட வரைபை எடுத்துக்கொண்டு ஜெனீவா செல்லாது ஹிலாரி கிளின்டனிடம் அரச குழு செல்லும் மர்மம் என்ன? என்று ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்கேள்வியெழுப்பினார். இலங்கைக்குள் அமெரிக்க விரோதம் மேற்குலக நாடுகளின் சூழ்ச்சி என்று பேசும் அரசாங்கம் அந்நாடுகளுடன் கள்ளத் தொடர்பை வைத்துக் கொண்டுள்ளது. இதனை நாட்டு மக்கள் உணர வேண்டும். ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட அனைத்து பங்காளிக் கட்சிகளுக்கும் அமெரிக்கா விஜயம் குறித்து தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக விஜித ஹேரத் தொடர்ந்தும் க…
-
- 0 replies
- 388 views
-
-
அமெரிக்கா உதவிகளை நிறுத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும் - தயாசிறி 23 ஜூலை 2011 அமெரிக்கா உதவிகளை நிறுத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும் - தயாசிறி அமெரிக்காவினால், இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உதவிகள் நிறுத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலைமை மேலும் உக்கிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் உதவிகள் நிறுத்தப்பட்டால் அதன் மூலம் பாதிக்கப்பட போவது அப்பாவி மக்கள் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் வி…
-
- 1 reply
- 586 views
-
-
அமெரிக்கா உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம்; தேசிய சுதந்திர முன்னணி எச்சரிக்கை அமெரிக்கர்களுக்கு இLogoutலங்கைக்கு வருவதற்கு தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட முற்பட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையான சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்தநாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி …
-
- 7 replies
- 673 views
-
-
அமெரிக்கா உள்விவகாரங்களில் தலையீடு செய்வதாக அரசாங்கம் குற்றச்சாட்டு 20 ஜூலை 2013 அமெரிக்கா நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மைக்கல் ஏர்வின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல், இராணுவ பிரசன்னம், தேர்தல் கண்காணிப்பு, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அமெரிக்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்…
-
- 0 replies
- 273 views
-
-
Published By: RAJEEBAN 28 APR, 2023 | 11:26 AM மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து சர்வதேச அளவில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மதிப்பாய்வு செய்துவருகின்றது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்கா உலகளாவிய ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது. வசந்தகரணாகொட போன்று எதிர்காலத்தில் இலங்கையின் வேறு அதிகாரிகளும் தடைப்பட்டியலில் சேர்க்கப்படுவார்களா என ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமெரிக்கதூதரக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அரசாங்க அதிகாரி மிகமோசமான ஊழல் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என …
-
- 3 replies
- 432 views
- 1 follower
-
-
அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?இந்தக் கேள்வியும் இதற்குத் தேடவேண்டிய பதிலும் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக - ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழல் இது. இந்தப் பத்தி எழுதப்பட்ட போது, வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தெரியாத ஒரு பின்னணியில், அதைச் சார்ந்து இந்தப் பத்தி எழுதப்படுகிறது. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தீர்க்கமானதொரு பங்கை வகிக்க…
-
- 4 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது – என்கிறார் மகிந்த கார்வண்ணன்Jun 14, 2018 | 2:16 by in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது பற்றி, அதுல் கெசாப்புடனான சந்திப்பின் போது, எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது. சிறிலங்காவை விட்டு வெளியேறும் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மரியாதை நிமித்த…
-
- 0 replies
- 823 views
-
-
அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்! Published on February 29, 2012- அண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்க போகிறது என்பதுதான். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரசாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.…
-
- 23 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா திரைக்கதை எழுத இந்தியா இயக்குநராக செயற்பட விக்கினேஸ்வரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் சிறந்த முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படும் போது தான் இலங்கை அரசாங்கத்திற்கு 'தலைசுற்றும்" என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானாலும் இலங்கைக்கு எதிரான கொள்கை மேலும் உச்ச கட்டத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், சிவாஜிலிங்கத்தை போன்று சிறுபிள்ளைத் தனமான அரசியலை மேற்கொள்ளாது நாகரீகமான முறையில் மிகவும் முன்னேற்றகரமான பாதையில் விக்கினேஸ்வரன் தனது அரசியல் காய் நகர்த்தல்…
-
- 2 replies
- 704 views
-
-
Published By: RAJEEBAN 05 DEC, 2023 | 08:54 PM அமெரிக்கா கனடாவை பின்பற்றி இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சவேந்திரசில்வா ஜகத்ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கலாம் என லிபரல்ஜனநாயக கட்சியின் தலைவர் எட்டேவே வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து இடம்பெற்றுவரும் விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதற்காக சர்வதேச நாணயநிதிய செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வர்த்தக உடன்படிக்கைகள் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு இலங்கையை பிரிட்டன் கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். https:/…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
அமெரிக்கா காப்பாற்றும் என நம்பிய நடேசன்! சிரேஷ்ட ஊடகவியலாளர் வெளியிடும் தகவல்கள் திங்கட்கிழமைஇ 21 மார்ச் 2011 15:42 இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதியளித்திருந்ததாக அமெரிக்காவில் நிலைகொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் இது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் குறிப்பிட்டதாகவும்இ நடேசன் இது தொடர்பாக தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு தான் நடேசனை…
-
- 2 replies
- 2.1k views
-