ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் ஆண்டு மாணவி பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டதனை ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கிறது. அந்த மாணவி பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றமைக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுவாராயின் மஹிந்த ராஜபக்ஷவினால் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தல்வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது 1988 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் பிறந்து பேராதனை பல்கலைகழகத்தில் கலைப்பீடத்தில் 2 ஆம் ஆண்டில் …
-
- 1 reply
- 1.6k views
-
-
''ஒரு வருட காலத்திற்குள் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால் நாங்கள் எங்கள் பதவிகளைத் துறந்து எமது மக்களது விடுதலைக்காக உலகத் தமிழர்களுடன் இணைந்து போராடங்களை முன்னெடுப்போம்'' எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாக இணையத் தளங்களில் வந்த செய்திகள் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் சற்றுத் தலை நிமிர்த்த வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடத்தை மீது சந்தேகம் தெரிவித்தவர்கள் கூட, இந்தச் செய்தியால் உற்சாகம் கொண்டுள்ளார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் நொருங்கிப்போய், பேச்சு - மூச்சிழந்து முகம் புதைத்…
-
- 12 replies
- 1.6k views
-
-
இறுதி யுத்தத்தின் இரத்த சாட்சியாக விளங்கும் வணபிதா அருளானந்தம் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் தனது அனுபவங்களை கவிதையாக வழங்கியிருந்தார்.https://youtu.be/oFlZnqnDqqA இவர்; தனது வலிகளை கவிதைகளாகி அதை நூலாக வெளியிட்ட போது இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தால் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.அத்துடன் பலாலிக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் படையினரது விசாரணைகளையும் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டினில் யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தினில் இன்று நடைபெற்றிருந்தது. வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை)தலைமையினில் இன்று காலை இடம்பெற்…
-
- 2 replies
- 1.6k views
-
-
தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் த…
-
- 0 replies
- 1.6k views
-
-
நாட்டை காப்பாற்றிய அரசனாகவும், ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்தும் ஒருவராகவும்தான் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாயவை தான் காண்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளரின் பிறந்த தினத்தன்று பில்லேவ பொஸமிது கோவிலில் நடத்திய விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://tamil.dailymirror.lk
-
- 7 replies
- 1.6k views
-
-
ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பமாகிய பொங்குதமிழ் உரிமை முழக்க பேரணி கடும் மழையின் மத்தியிலும் தொடர்ந்தவண்ணமுள்ளதாக ஜெனிவாவில் உள்ள ஈழதேசத்தின் சிறப்பு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் பொங்குதமிழ் உரிமைமுழக்க பேரணி ஜெனிவாவில் உள்ள முருகதாசன் திடலை சென்றடைந்துவிடும் என்று மேலும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார். பேரணியில் நாற்புறங்களும் அதிரும் வண்ணம் பறை முழங்க ஆங்கிலத்திலும் சுவிஸ் மொழியிலும் கோஷங்கள் முழங்க பேரணி தொடர்வதாகவும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதியின் போது புலத்தில் உணரப்பட்ட அதி உச்ச உணர்வலைகள் உணரப்படுவதோடு இதை பார்க்கும் போது தமிழீழ தனிநாட்டை மீட்டெடுப்பதற்கான வீச்சு இன்னும் பலம…
-
- 1 reply
- 1.6k views
-
-
வெள்ளி 12-01-2007 21:27 மணி தமிழீழம் (பதிவு நிருபர்) போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தெற்காசியாவில் ஏனைய நாடுகளை வி;ட முதலிடம் பெற்றுள்ளதாக கியுமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கடந்த வருடம் மோசமாகி இருந்தன. தெற்காசியாவில் இலங்கை கடந்த வரும் மனித உரிமைமீறல் விடயத்தில் முதல் இடம்பெறுவதற்கான காரணம்இ தமிழிழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களேயாகும். இதன்போது சர்வதேச மனித நேய சட்டங்களும் மற்றும் மனித உரிமை விடயங்களும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீத…
-
- 2 replies
- 1.6k views
-
-
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதிய கடிதம்.. மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் சிவ சேனை கடந்த தைப் பொங்கலின் பின், மூன்று மாத காலத்தில், சிவபூமியில் 31 ஊர்களில் மதமாற்றிகளின் 31 நிகழ்வுகளில் சைவ எழுச்சிப் பட்டியல் கீழே. இலங்கை கிறித்தவப் போதகர்மார் சங்கம். ஊடகச் சந்திப்பு. சைவப் பெருமக்களின் திரளால் மிரளும் மதமாற்றிகள். உருளும் அந்நிய ஊடுருவல். வெருளும் கிறித்தவப் போதகர் சங்கம். மதமாற்றியார் இருளகற்றும் சிவபெருமான் திருவருள். தளர்வறியா மனத்துடன் 31 ஊர்களில் 31 நிகழ்வுகளைத் தடுத்த சைவப் பெருமக்கள் திருக்கூட்டம். 1. அச்சுவேலியில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான போதகர் உள்ளிட்ட ஒன்பதின்மர் காவல் துறைச் சிறையில். 2. கோ…
-
- 19 replies
- 1.6k views
-
-
சற்று முன்னர் பாரா. உறுப்பினர் சிறிதரன் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு [ பிரசுரித்த திகதி : 2011-03-07 01:20:41 PM GMT ] சற்று முன்னர் நொச்சிகாமம் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகாக்கள் எவ்வித ஆபத்துமி…
-
- 1 reply
- 1.6k views
-
-
களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்திலோ கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார் - இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்று இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன கண் கலங்கிடக் கண்டனங்கள் பொழிகின்றன அய்.நா. சபையும் அப்படியொரு முடிவெடுத்து அறிவிக்க ஆயத்தமான போது; கம்யூனிஸ்ட் சீனா மட்டும் கண்டிப்பு காட்டி அதனைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டு தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்டத் தான் வேண்டுமென்று திடமாய் உரைத்ததாம் - அய்யோ; கம்யூனிஸ்டுகளே - இங்கே இலங்கையில் போர் நிறுத்தம் என்று இரட்டை வேடம் போடுகின்றீர்களே; இது நியாயந்தானா? நன்றி : நக்கீர…
-
- 5 replies
- 1.6k views
-
-
பதிந்தவர்: ADMIN ஞாயிறு, 4 செப்டெம்ப்ர், 2011 புதுச்சேரியில் நேற்று (03.09.2011) இரவு மறியட்டும் மரண தண்டனை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பலர் பங்கேற்றனர். சீமான் பேசும்போது, ‘’தங்கத்தாரகை முதல்வர் அம்மா அவர்கட்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஈழத்தமிழருக்கு இதுவரைக்கும் இவரைப்போல் வேறு யாரும் உதவிகளை செய்ததில்லை. மூன்று உயிர்களை எங்களுக்கு காப்பாற்றித்தந்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரிகிளிண்டன் தமிழகம் வந்திருந்தபோது ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதில் 45 நிமிடங்கள் ஈழத்தமிழர்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஈழ …
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரபாகரன் உருவான காரணத்தை நியாயப்படுத்தினார் மைத்திரி! நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி, தான் பெற்ற அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ”ரயில் பயணம் தொடர்பில் எனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு 7, 8 மணித்தியாலங்கள் பயணிக்கும் தபால் ரயில் சேவை உள்ளது. அந்த ரயில் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும். எனது பெற்றோர், அப்போது…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
பசில் ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் பசில; ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்கியபோது பார ஊர்தி ஒன்றடன் மோதி விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார். இன்று மிரிஸ்வத்தை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மற்றொருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. நன்றி : பதிவு
-
- 1 reply
- 1.6k views
-
-
எரிபொருள்கள் தெற்கிலும் இனி பங்கீட்டு அட்டைகளுக்கே! எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய தெற்கிலும் பங்கீட்டு அடிப்படைக்கு எரிபொருள் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பங்கீட்டு அட்டைக்கு மாதம் 30 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும். மேலதிகமாக எரிபொருள் தேவையெனின் 25 சதவீதம் அதிக விலை செலுத்தியே எரிபொருள்களைப் பெற முடியும். பெற்றோல், டீசல், மண்எண்ணெய் ஆகிய மூன்று எரிபொருள்களும் இனிமேல் பங்கீட்டு அட்டைகளுக்கு வழங்கப்படும். எரிபொருள்கள் தேவையைக் குறைப்பதற்கும், எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடைமுறை கொண்டுவர உள்ளதாக அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் புதிய நடைமுறை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க …
-
- 6 replies
- 1.6k views
-
-
மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது. வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது. குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர். Committee for the Formation of A Provisional Transnat…
-
- 3 replies
- 1.6k views
-
-
கனேடிய இலக்கியத் தோட்ட விருதுகள் வெங்கட்ரமணன் தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருதைக் கொண்டு 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இப்பொழுது இயல் விருதுடன் புனைகதை, புனைவிலி, கவிதை மற்றும் தமிழ் தகவல் நுட்பத்திற்கான விருது என்று வளர்ந்திருக்கிறது. வாழ்நாள் சாதனைக்கான இயல் விருதைக் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்குகிறது. தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றாக இயல் விருது கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. இவ்வாண்டின் விருது விழா ட்ரினிடி கல்லூரியின் சீலி அரங்கில் மே மாதம் 24ஆம் நாளன்று நடந்தது. நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும் மட்டுமல்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் …
-
- 12 replies
- 1.6k views
-
-
இலங்கையின் கழுத்தில் கத்தி வைத்துள்ள இந்தியா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை வைத்து, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதானால், இலங்கை 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வகையிலேயே இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவாறு தமிழர்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்து வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட…
-
- 4 replies
- 1.6k views
-
-
வி க்கிலீக்ஸ்....!" பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே. வாய்க்குள் நுழைவதற்குக் கஷ்டமாக இருந்தபோதும் கூட தம்முடைய அரட்டைகளின் போது "விக்கிலீக்ஸ்" என்ற சொல்லை உச்சரிக்காவிட் டால் நம்மவர்கள் பலருக்கும் " பத்தியப்படுவ தில்லை". அந்தளவுக்கு எல்லோரையும் ஆட்கொண்ட ஒரு மந்திரச் சொல்லாக இது மாறி இருக்கிறது. இந்த மந்திரச் சொல் இறுகத் தாழிடப்பட்டிருந்த பாதுகாப்பு நிறைந்த பல கதவுகளை ஒரே நொடியில் திறந்துவிட்டி ருக்கிறது. அந்தக் கதவுகளினூடே இது நாள்வரையும் பொத்திப் பாதுகாக்கப்பட்டு வந்த பல ரகசியங்கள் அம்பலமாகியிருக்கின்றன. யூலியன் அசாஞ்சே என்ற மந்திரவாதியின் கை வண்ணத்தில் உருவாகியிருக்கும் விக்கிலீக்ஸ் உலகை எப்போதுமே பரபரப்பின் முனையில் நிற்க வைத்துள்ளது. பொதுவாகவே மந்திர தந்திரங்கள…
-
- 2 replies
- 1.6k views
-
-
வவுனியா கோரமங்கலம் பகுதியில் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 16 அப்பாவி தமிழர்களின் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்தனர்: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம், திரிகோணமலை மாவட்டங் களில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை பிடிக்க ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை விடுதலைப்புலிகள் வீராவேசமாக போரிட்டு முறியடித்து வருகிறார்கள். தோல்வியை தழுவி வரும் சிங்கள ராணுவத்தினர் அப்பாவி தமிழர்களை கொல்கிறார்கள். கடந்த மாதம் மூதூர் பகுதியில் ஐ.நா.சபை சார்பில் சுனாமி நிவாரண பணிகளில் அமர்த்தப்பட்ட 17 அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதை அடுத்து இலங்கை அரசுக்கு ஐ.ந…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 22:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 30.04.2007 தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெள…
-
- 5 replies
- 1.6k views
-
-
மன்னாரில் படைக்காவி தகர்ப்பு! 9 படையினர் பலி! மேலும் பலர் படுகாயம் மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இருந்து வட்டக்கண்டல் நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் உக்கிரமான வழி மறிப்பு தாக்குதலில் ஈடுபட்டு படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு பலத்த கனரக சூட்டாதரவுடன் முன்னேறிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து சிறீலங்காப் படையினர் டாங்கிகள் மற்றும் படைக்காவிகளையும் களமிறக்க முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். இதன் போது ஒரு படைக்காவி புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி தகர்ந்துள்ளது. இதில் பயணித்த 9 படையினர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். …
-
- 7 replies
- 1.6k views
-
-
இந்தியா கூறுவது போல விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இப்போ இல்லை, இனியும் இருக்காது என சிறிலங்கா ஊடக அமைச்சர் கூறியுள்ளார். இந்தியா அண்மையில் விடுதலைப்புலிகள் மீதான தடையினை இரண்டு வருடம் நீடித்தது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கே ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதனை தடுப்பதற்கான முன்னேற்பாடே இந்தியாவின் நடவடிக்கையா? என பத்திர்கையாளர் கேட்டபோது அப்படியான தோற்றப்பட்டோ ஐய்யப்பாடோ இல்லை இனியும் இருக்க போவதில்லை என்று ரம்புக்வெல கூறியுள்ளார். இந்தியா விடுதலைப்புலிகளை இருப்பதாக கற்பித்து மீண்டும் சில இரகசிய நடவடிகைகளையும் கண்காணிப்புக்களையும் இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் க்டற்கரை பிரதேசங்களில் செய்ய முயற்சிக்கின்றது. ஆகவே இதனை தடுக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
சிறீலங்காவின் அடிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் டக்ளசின் கோமாளித்தனங்கள் பற்றி பலமுறை பார்த்திருக்கின்றோம். இப்போது இன்னொரு கோமாளிக் கருத்தை தனது வாயாலேயே டக்ளஸ் உதிர்த்துள்ளார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, மகிந்தவிற்கு மாம்பழக்கதை சொன்ன கதையை அவிழ்த்துவிட்டுள்ளார். டக்ளஸ் சொன்ன நாரதர் மாம்பழக் கதை இதுதான். தான்தான் பிள்ளையாராம்! தமிழ் தேசியக்கூட்டமைப்பு முருகனாம்! மகிந்த ராஜபக்சவை சுற்றிவந்தால் மாம்பழம் போன்ற தமிழர்களின் அரசியல் தீர்வு கிடைத்துவிடுமாம். சுலபமாக பெறக்கூடிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளாமல் மாம்பழக் கதையில் முருகன் மாம்பழத்தை பெறுவதற்கு மயில் ஏறி உலகை சுற…
-
- 0 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தன, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொல…
-
- 5 replies
- 1.6k views
-