Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட வவுனியாவைச் சேர்ந்த மௌலவியை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வவுனியா- செட்டிகுளம், முதலியார் குளத்தை பிறப்பிடமாக கொண்ட முனாஜிப் மௌலவி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவிலிருந்து விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (சனிக்கிழமை) காலை அவர் வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். முனாஜிப் மௌலவி, கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து தனது முகநூலில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்குஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார். குறித்த…

  2. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதிகளுக்கு செல்லும் நீர்வழி போக்குவரத்து வழிகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வகையில் மண்முனைத்துறை, அம்பிலாந்துறை நீர்வழிப் பாதைகள் என்பனவும் இன்று மூடப்பட்டுள்ளன. இதனால் மட்டககளப்பு அரச கட்டுபாட்டு பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கான வழிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே பட்டடிருப்பு பாலம் நேற்று பகலும் அதற்கு முன்னதாக ஏனைய தரைவழிப் பாதைகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் பட்டிருப்பு பாலத்தின் ஊடாக களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு செல்ல மக்கள் இன்று அனுமதிக்கப்படாததால் …

  3. "" கவலை விடு வெற்றி நமக்கே...."" கடந்த தினம் இலங்கை படைகள் சம்புரை தம்மகப் படுத்தியதன் பின்னர் அவர்கள் தமது அணல் பறக்கும் பிரச்சாரத்தை அவர் சாந்த ஊடகங்கள் என வர்னிக்கப்படும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடக துறை ஊடாக தமது பரப்புரைகளை மிகவேகமாக பரப்பி வருகிறார்கள் . அத்தோடு அந்த அப்பாவி சிங்கள மக்களிடம் தனது அரசு வெற்றியை குவித்து வருவதாகவும் விடுதலைப் புலிகளைவிரட்டி வருவதாகவும் அவர்களின் ஆளுகைக்குள் உள்ள நிலப் பரப்புக்களை மீட்டு வருவதாகவும் அங்கு தமது படைகள் நிலை கொண்டுள்ள காட்சிகளை தொடராய் காட்டி தாம் வெற்றி பெற்று விட்டோம் தமது படைகள் அங்கே அகல கால் ஊன்றி விட்டன என்பதான மாயை கருத்தோற்றத்தை கட்டுத் தீபோல மூட்டி பற்ற வைத்துள்ளார்கள் . அவையும்…

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி முதல் தடவையாக தேசிய கீதம் ஒலிக்கும் போது அதற்கு கௌரவமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் தேசிய கீதம் ஒலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முதல் தடவையாக வவுனியா உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது தேசிய கீதம் ஒலித்ததாகவும், கட்சி உறுப்பினர்கள் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் எழுந்து நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி …

  5. ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக இந்திய தூதுவர் விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 வருடங்களாக பான் கீ மூனின் தலைமை ஆலோசனை அதிகாரியாக இருந்து வந்த விஜய் நம்பியார், இப்பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதியாக நீடிக்கவுள்ளார். வி.புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினர்க்கும் இடையில் 2009 இல் இறுதியுத்தம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ.நாவினால் தவிர்க்க முடியாது போனதற்கு விஜய் நம்பியாரும் ஒரு காரணம் என முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வ…

    • 10 replies
    • 1.6k views
  6. அகோர எறிகணை மற்றும் வெடிகணைத்தாக்குதலில் இருந்து தப்ப இராணுவத்தின் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது இராணுவம் கண்டபடி நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகி சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது பழிதீர்க்கும் தாக்குதலை நடத்திவிட்டு அதைப் புலிகள் மீது சுமத்தி இராணுவம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு நேற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதை.. தற்கொலைத்தாக்குதலில் பொதுமக்கள் இறந்ததாக சிறீலங்கா சிங்கள அரசும் அதன் பயங்கரவாத இராணுவமும் குற்றம்சாட்டி இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. --------------- 17 civilians dead following LTTE fire, …

  7. என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது - வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகிறார் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லகம தெரிவித்தார். இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தவர் என்பதனால், என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்குக் கிடைக்காது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரவின் அனுமதியுடன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமை…

  8. பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் மாவீரர் தினம் தொடர்பாக உணர்வாளர் சீமானுக்கும் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த குழு ஒன்று உணர்வாளர் சீமான் அவர்களைச் சந்தித்து தாம் நடத்தவிருக்கும் மாவீரர் தினத்துக்கு ஆதரவு தரும்படி கூறியுள்ளனராம். அதாவது தேசிய செயல்பாட்டாளர்களால் கடந்த 21 வருடமாக லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக ஒரு மாவீரர் தினத்தை எக்ஸ் எல் மண்டபத்தில் நடத்த புதிதாக வந்த சிலர் முனைப்புக்காட்டி வருவது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் தாங்கள் நடத்தும் மாவீரர் தினத்தை ஆதரிக்கவேண்டும் என இவர்களில் சிலர் உணர்வாளர் சீமான் அவர்களைச் சந்தித்து கோரிக்கை விட…

    • 2 replies
    • 1.6k views
  9. திருகோணமலையில் புலிகளின் வான் தாக்குதல் நடைபெறக் கூடும்: கொழும்பு ஆங்கில ஊடகங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 13:34 ஈழம்] [சி.கனகரத்தினம்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழான த நேசனில் வெளியாகியுள்ள செய்தி: சிறிலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளைத் தாக்கப் போவதாக விடுதலைப் புலிகள் கடந்த வியாழக்கிழமையன்று பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதுகாப்பு சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்பிமலையில் புதன்கிழமையன்று விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக…

    • 1 reply
    • 1.6k views
  10. கொழும்பை நோக்கி வெடிகுண்டுகளுடன் மூன்று வாகனங்கள்: காவல்துறையினர் தகவல் [திங்கட்கிழமை, 23 யூலை 2007, 18:58 ஈழம்] [கொழும்பு நிருபர்] அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை ஏற்றிய மூன்று வாகனங்கள் கொழும்புக்கு வந்து கொண்டிருப்பதாக தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தகவலை காவல்துறை தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் வெளியிட்ட காவல்துறை உயரதிகாரிகள் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: இரண்டு வாகனங்களில் கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப் புலிகள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அனுப்பியுள்ளனர். ஓவ்வொன்றும் ஆயிரம் கிலோ எடையுடைய இக்குண்டுகள் சி-4 ரகத்தைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. …

  11. அமெரிக்க சுதந்திர நிகழ்ச்சித்திட்ட அமைப்பின் தலைவரும்இ நீதி நாடும் தமிழர் குழுமத்தின் அமெரிக்க சட்டவாளருமாகிய புறூஸ் வெயின் கனடா வந்துள்ளார். இலங்கை இனப் பிரச்சனைக்கு ஒரு நீதியானஇ நியாயமான தீர்வு காண்பதற்குஇ கனடியத் தமிழரின் ஆதரவை நாடி அவர் இங்கு வந்துள்ளார். தமிழ் மக்களைச் சந்தித்துஇ தமது திட்டங்களை அவர் வகுக்கவுள்ளார். 'பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி நாடுவதே எனது பணி. அமெரிக்க அரசின் மட்டு மீறிய செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பாடுபட்டுவருகின்றேன். கடுங்கோலர்களை விரட்டியடிக்கும் உரிமையும் கடமையும் மக்களுக்கே உண்டு என்பதை வலியுறுத்தி வருகின்றேன். இலங்கைத் தமிழ்அரசு ஒன்றினால் மட்டுமே அங்கு அப்பாவி மக்களைக் காக்கமுடியும் என்று நான் உறுதிபட நம்புகின்றேன். உ…

    • 2 replies
    • 1.6k views
  12. வியாழன் 28-06-2007 17:53 மணி தமிழீழம் [கோபி] சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவி சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித நேயப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக யப்பான் வெளிவிவகார அமைச்சர் ராரோ அசேசா தெரிவித்துள்ளளார். யப்பான் சென்றுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம யப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து உரையாடிய பின்னர் இத்தகவலை யப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திப்பில் சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த போகல்லாகம மனித உரிமை மீறல்களைக் கட்டுப்பட…

  13. அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?இந்தக் கேள்வியும் இதற்குத் தேடவேண்டிய பதிலும் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக - ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழல் இது. இந்தப் பத்தி எழுதப்பட்ட போது, வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தெரியாத ஒரு பின்னணியில், அதைச் சார்ந்து இந்தப் பத்தி எழுதப்படுகிறது. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தீர்க்கமானதொரு பங்கை வகிக்க…

  14. அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பியதிலிருந்து அரண்டு போயிருக்கிறார்கள் விஜயை வைத்துப் படம் தயாரிக்க நினைத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள். ஜாக்கி சான் படத்தைத் தயாரிக்கப் போகும் மும்முரத்தில் இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்திற்காக 600 கோடி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்குக் கை கொடுக்கும் விதத்தில் விஜய் படம் ஒன்றைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தாராம். இதற்காக எல்லா முயற்சிகளையும் துவங்கப் போகிற நேரத்தில்தான் இந்த செய்தி அவர் காதுக்கு எட்டியுள்ளது. தனிக்கட்சி ஆரம்பித்தால்கூடப் பரவாயில்லை, ஒரு தேசியக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டால் மற்ற கட்சிக்காரர்களின் எதிர்ப்பு கிளம்பும், எதற்கு இந்த விபரீத வேலை என்ற முடிவுக்கு வந்து விஜய்யை வைத்துப் படமெட…

    • 1 reply
    • 1.6k views
  15. தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழீழ விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=671762713107839233#sthash.clu3ZSla.dpuf

    • 16 replies
    • 1.6k views
  16. அகதிகள் தலையில் லைசென்ஸ் 'இடி'! [ ஜூனியர் விகடன் ] - [ Jul 24, 2008 04:00 GMT ] இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவது, கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய தேதியில் அகதி முகாம்களில் சுமார் 78 ஆயிரம் பேரும் முகாம்களுக்கு வெளியே சுமார் ஐயாயிரம் பேரும் தமிழகத்தில் அகதி களாகத் தங்கியிருக்கிறார்கள். இங்கேயும் அவர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். இலங்கைத் தமிழ் அகதி களுக்கு வழங்கப்பட்டிருக்கும் டிரைவிங் லைசென்ஸ்களை ரத்து செய்யப் போவதா கத் தமிழக அரசு தீடீரென சமீபத்தில் அறி வித்திருப்பது லேட்டஸ்ட் அடி! தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக் கும் சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையரிடமிருந்து அண்ம…

    • 4 replies
    • 1.6k views
  17. சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை. பேச்சளவில் அரசியல் உரிமைகள் ,மனித உரிமை, புனர்வாழ்வு, என்ற பதங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்தம் முற்று முழுதாக அமெரிக்க நலன் சார்ந்தவையே காணப்படுகின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே இ…

    • 7 replies
    • 1.6k views
  18. ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை மகிழ்ச்சி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு 27 செப்டம்பர் 2014 பதவி பற்போவதனால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்கிறார் ராஜித- தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் மூலம் தமிழக அரசில்வாதி எவ்வளவு ஊழல் மோடிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். …

  19. யாழ் குடாநாட்டுக்கான புதிய கடல்மார்க்கப் பாதையொன்றை கடற்படையினர் திறந்திருப்பதாக கடற்படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆணையிறவு மற்றும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ-9 வீதியும், பூநகரி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏ-32 வீதியும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையில் புதிய கடல்மார்க்கப் பாதையொன்று கடற்படையினரால் திறக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் தலைமன்னாருக்கும், புங்குடுதீவுக்கும் இடையில் கடல்மார்க்கப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமன்னாருக்கும், புங்குடுதீவு குறிகட்டுவான் பகு…

  20. 13வது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் மஹிந்தவும் எதிர்கட்சி தலைவர் ரணிலும் இணக்கம் கண்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இருதரப்பும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமையவின் தலைவனும எம்.பியுமான எல்லாவெல மேத்தானந்த தேரோ தெரிவித்தார். இந்தியாவின் தீர்வு திட்டத்துக்கு அமைய இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்துவது பயங்கரவாதத்திற்கு ஒப்பானது. எமது பிரச்சினையை நாமே தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். 13வது திருத்த்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க ரணில் இணங்கியுள்ளார். மஹிந்வுடனான சந்திப்பில் இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்…

    • 2 replies
    • 1.6k views
  21. கருத்து கணிப்பு The Big Question Is IIFA brand ambassador Amitabh Bachchan right in skipping the awards over Tamil protests? Vote - Yes http://headlinestoday.intoday.in/site/headlines_today/home (Pool is at the left side of the page)

  22. ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 4, 2011 பிரித்தானியாவிற்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ கலாநிதி கிறிஸ் நொயிஸ் என்பவரே புதிதாக நியமிக்கப்பட்டவராவர். இவர் பிரித்தானியாவில் மருத்துவ பட்டப்படிப்பினை முடித்ததோடு அங்கேயே பல வருடங்கள் பணி புரிந்தும் உள்ளார். பிரித்தானியாவில் பல்வேறு உயர் பதவிகளில் நீண்டகாலம் இவர் பணி புரிந்ததனால் அங்கு உள்ள அனைத்து தரப்பினருடன் சுமுகமாக பழகவும் கூடவே தமிழ் புத்திஜீவிகள் மற்றும் இலண்டன் தமிழர்களையும் வளைத்துப்போட முடியும் என மஹிந்த கருதுகின்றார். இதனாலேயே குறித்த மருத்துவரை தூதுவராக நியமனம் செய்துள்லார் மஹிந்த. . புதிய தூதுவரான மருத்துவர் கிறிஸ் நொயிஸ் இராஜ தந்திர பணியில் இதுவரை பணி புரியவில்லை என்ப…

  23. விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை முழுமையாகத் தோற்கடிக்க முடியவில்லை, இனிமேலும் அது சாத்தியப்படும் போலத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், லங்காதீபு நாளிதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்- விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இராணுவ, அரசியல், கருத்தியல் என்று முப்பிரிவுகளைக் கொண்ட உலகின் பலம்வாய்ந்த ஒரு போராட்ட இயக்கம். அந்த வகையில் தற்போது விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவுகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் காரணம…

    • 20 replies
    • 1.6k views
  24. பிரிட்டனில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த அமைப்புக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியொன்றில் அந்நாட்டின் தொழில் கட்சியைச்சோந்த 3 பா.உக்கள் கலந்து கொண்டமைக்கு லண்டனிலுள்ள இலங்கை உயாஸ்தானிகராலயம் தனது கடும் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஆசியாவைச் சேர்ந்தத கீத் வாஸ், வீரேந்திர சர்மா மற்றும் அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை மறைமுகமாக விமர்சித்த வரும் ஜோன் றியான் ஆகிய 3 எம்.பிக்களும் கலந்து கொண்டனர். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக இலங்கை அரசை அடிக்கடி விமர்சித்த வருபவர் கீத்வாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவீரர் தினத்தையொட்டி தமிழ் தேசிய ஞாபகார்த்த அமைப்பின…

  25. ததேகூ வெற்றி : மன்னாரில் வெற்றி விழாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் வெற்றியீட்டியதையடுத்து மன்னாரின் பல பாகங்களிலும் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. http://www.virakesari.lk/

    • 16 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.