Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் எட்டு பெண்கள் உட்பட 37 பேர் கைது. கொழும்பு மஹரகம பிரதேசத்தில் நேற்று அதிகாலை 8 மணிமுதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் எட்டு பெண்கள் உட்பட 37 வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை, காவல்பதிவு. கொழும்பில் தங்குவதற்கான காரணம், அடையாளத்தை உறுதிசெய்யாமையே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என காவல்துறை அத்தியேட்சகர் வழமைபோல தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -Pathivu-

  2. பயங்கரவாதச் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் அறிமுகம்:- 27 ஆகஸ்ட் 2011 பயங்கரவாதச் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமையும் என குறிப்பிடப்படுகிறது. அவசரகாலச்சட்ட விளைவு ஒழுங்குகள் என்ற பெயரில் புதிய சட்ட மூலமொன்று விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் …

  3. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளரை நாடாளுமன்றத்தில் முன்னிலையாக சபாநாயகர் அழைப்பு APR 20, 2015 | 14:53by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விசாரணைக்கு அழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பாணை விடுத்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு, எதிர்ப்புத் தெரிவித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 55 பேர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தண்டனை வழங்குதற்கு ம…

    • 0 replies
    • 393 views
  4. கூட்டமைப்பில் நிழல் அமைச்சர்களாக எவரும் செயற்படவில்லை – சிவாஜிலிங்கம் விளக்கம்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் நிழல் அமைச்சர்களாக செயற்படவில்லை என ரெலோ அமைப்பின் அரசியல் தலைவரும், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். வடமராட்சி கிழக்கில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்து அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். குறித்த செய்தியாளர் சந்திப்பில், சுமந்திரன் உள்ளிட்ட சிலர், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் நிழல் அமைச்சர்களாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்…

  5. 01 செப்டம்பர் 2011 முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர். வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றிய பயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர். இவ்வாறு வடகிழக்கு மாகாண…

  6. வியாழன் 05-07-2007 17:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] அவலநிலை தொடருமானால் இலங்கையை மீளவும் கட்டியெழுப்ப 100 ஆண்டுகள் தேவை தற்போதைய அவலநிலை தொடருமானால் இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்று 100 ஆண்டுகள் தேவைப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தென்னிந்திய திருச்சபையின் முதல் எஸ்.ஜே.ஜெபநேசன் கருத்து வெளியிட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டம் சின்ன ஊறணி பகுதியில் உள்ள அமெரிக்க மிசனில் நேற்று நடைபெற்ற சமாதானத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் கடந்த 10 வருடங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை சோந்த மக்களில் 60 சதவீதமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில்…

    • 1 reply
    • 981 views
  7. மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாதசிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சிவசேனை என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மும்மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரங்களில் மன்னார் மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கு என சில பகுதிகளில் "சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்" என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள் தொடர்பாகவோ ஒட்டியவர்கள் தொடர்பாகவோ இதுவரை எந்த தகவல்கலும் கிடைக்கவில்லை. ஆனாலும் மன்னார் மாவட்டம் அ…

  8. சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்களின் சுமார் 500 படகுகளை சிறிலங்கா கடற்படையினர் விரட்டியடித்தனர். இதன்போது, இரண்டு பிரிவுகளாக, மூன்று படகுகளுடன் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படையினால் அறிவிக்கப்பட்டது. நாச்சிக்குடா கடலில் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஏனைய 9 மீனவர்களும் காரைநகர் கடற்படைத…

    • 0 replies
    • 429 views
  9. சிறிலங்காவின் போர்க்குற்றத்தினை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ள போதியளவு அழுத்தத்தினை மேற்கொள்ளவில்லை என்று பிரித்தானிய வெளியுறவுக்குழு விமர்சனம் செய்துள்ளது. பிரித்தானியா எப்போதுமே சிறிலங்கா தொடர்பில் இழுத்தடிக்கும் வேலைகளையே செய்துவருகின்றது. இல்லையேல் நடு நிலமை என்கின்ற பேரில் மாறி மாறி அறிக்கைகளை விடுவார்கள். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளி வந்ததில் இருந்து பிரித்தானியா இதுவரை சில அறிக்கைகளை வெளியிட்டு உள்ளனர். ஆனால் அந்த அறிக்கைகளின் தாக்கத்தினை குறைக்கும் பொருட்டு பிரித்தானிய வெளியுறவு செயலக அதிகாரிகள் சிறிலங்காவிற்கு சார்பாக அல்லது அவர்களின் பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்க்கும் அறிக்கைகளை விடுவார்கள். . ஆனால் இவர்களின் நடவடிக்கையினை த…

  10. இறுதி யுத்தத்தின் இரத்த சாட்சியாக விளங்கும் வணபிதா அருளானந்தம் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் தனது அனுபவங்களை கவிதையாக வழங்கியிருந்தார்.https://youtu.be/oFlZnqnDqqA இவர்; தனது வலிகளை கவிதைகளாகி அதை நூலாக வெளியிட்ட போது இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தால் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.அத்துடன் பலாலிக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் படையினரது விசாரணைகளையும் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டினில் யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தினில் இன்று நடைபெற்றிருந்தது. வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை)தலைமையினில் இன்று காலை இடம்பெற்…

  11. Published By: VISHNU 11 JAN, 2024 | 03:52 PM சுகாதார உதவியாளர்கள், பரிசாரகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள…

  12. கிழக்கை கைப்பற்றி பெருமெடுப்பிலான விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. அடுத்தது என்ன? என்பது தொடர்பாக கடுமையான குழப்பமான நிலைமை தான் அரசியல் மட்டத்தில் தற்போது தோன்றியுள்ளது. ஏனெனில் இந்த விழாவில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை என்பது தென்பகுதியில் எழுந்துள்ள பொதுவான கருத்து. நடைபெறும் போர், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களை வெகுவாக பாதித்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருந்த போதும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையும் அதற்கான மற்றுமொரு காரணமாகும். ரணில் மங்கள கூட்டு எதிர்கால அரசியலில் கடுமையான தாக்கத்தை விளைவித்து விடலாம் என்பது அரச தரப்பில் உள்ள பல கட்சிகளின் கலக்கம். இந்த கலக்கத்தை போக்கவே அவசர அவசரமாக கிழக்கின் உதயம…

    • 2 replies
    • 2k views
  13. திங்கட்கிழமை, செப்டம்பர் 26, 2011 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான். உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூ…

  14. மன்னார் மாவட்டத்திற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் ஆத்ம சாந்தி பிராத்தனையும்,விசேட நினைவு உரையும் மன்னார் நகர மண்டபத்தில் எதிர்வரும் திங்கள் காலை 10.00மணிக்கு இடம் பெறவுள்ளது. இது தொடர்பினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இளைஞரணி செயலாளர் வி.எஸ். சிவகரன் இன்றிரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் தமிழினப்படு கொலையின் ஆறாம் ஆண்டு நினைவு நாளாகிய மே – 18 அன்று உலகெங்கும் வாழும் தமிழர்களின் இல்லங்களில் சுடர் ஏற்றி கோரமாக படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தியுங்கள். இறுதியுத்தத்திலே காணாமல் போன அல்லது படுகொலை செய்யப்பட்ட 146இ793 அப்பாவி தமிழ் மக்களின் உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை ஆறு ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசும் இனப்படுகொலைக்கு காரணமாக இர…

    • 0 replies
    • 681 views
  15. வித்தியா கொலையைக் கண்டித்து திருகோணமலையில் போராட்டம்! [saturday 2015-05-23 20:00] புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது காலை 8.30 மணியளவில் திருகோணமலை முற்றவெளி மைதானத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், இவ்வாறான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட…

  16. லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவித்தல்! Published By: DIGITAL DESK 3 02 FEB, 2024 | 11:38 AM எரிவாயு விலையில் இம்முறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175362

  17. கிழக்கு கடத்தல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் இராணுவத்தினர்- கருணா குழுவினர்: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 14:50 ஈழம்] [சி.கனகரத்தினம்] கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் திருக்கோவிலில் 45 அப்பாவி பொதுமக்களை கருணா குழுவினர் தடுத்து வைத்ததாகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. ஜூலை 30- ஓகஸ்ட் 5 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை: கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவிடம் கையளி…

    • 0 replies
    • 945 views
  18. முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4.30 முதல் நாளை காலை 6 மணி இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68353/language/ta-IN/article.aspx

  19. இந்தோனேசியால் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளுக்கு நடந்தது என்ன? இந்தோனேசியா நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளை கொண்டிருந்த படகொன்று பற்றி தகவல்கள் இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த இவர்கள் முதலில் இந்தோனேசியா சென்று முகாம்களில் தங்கியிருந்ததாகவும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொண்ட இப்படகில் சுமார் 65 பேர் வரையிலிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தாம் அடைக்கலம் புகும் வகையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை தகவலை அனுப்பியிருந…

  20. நாளை வெளியாகிறது மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள ஆய்வுகூடத்தில் காபன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளிவரும் என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த வளாகத்தில் இருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது …

  21. Published By: VISHNU 11 FEB, 2024 | 06:17 PM வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்தகுருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது. வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் குறித்த குழுவினரை அழைத்து…

  22. மண்டான் இராணுவ முகாம் அகற்றப்பட்டது. ஜ சனிக்கிழமைஇ 18 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ வடமராட்சியில் மந்திகையில் இருந்து கலிகை சந்தி ஊடாக சாவகச்சேரி செல்லும் பாதையில் அமைந்துள்ள வலிகாமத்தையும் தென்மறாட்சியையும் ஊடறுத்தச் செல்லும் பாதையில் உள்ள மண்டானில் அமைந்திருந்த படை முகாம் நேற்றுமுன்தினம் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகாம் அமைந் திருந்த பகுதியில் படையினர் பயன்படுத்தி வந்த வீடுகளின் திறப்புக்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளனர். இந்த பிரதேசத்தில் தொடர்சியாக இராணுவத்தினருக்கு பல தாக்குதல்கள் நடாத்தபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. http://nitharsanam.com/?art=24156

    • 2 replies
    • 2.1k views
  23. யாழ். கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகளின் மர்மம் என்ன 14 அக்டோபர் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி இலங்கை அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகள் தொடர்பினில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. சுமார் 350 ஏக்கர் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டு வரும் இப்பண்ணைகள் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உள்ளுர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கவுமேயென கூறப்பட்டு வருகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது நேரடி வழி நடத்தலின் கீழேயே இந்த இறால் பண்ணைகள் உருவாகி வருகின்றன. …

  24. இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 பிப்ரவரி 2024, 10:44 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேரம் தேவைப்படும். தற்போது, இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட…

  25. தலை வேறு முண்டம் வேறு : எழுதுமட்டுவாளில் சடலம் மீட்பு ஏ-9 வீதியின் எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்துக்கு அருகில் சுமார் 200 மீற்றர் இடைவெளியில் தலையும் முண்டமும் வெவ்வேறான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை மீட்ட பளைப் பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் தலை காணப்பட்ட இடத்தில் ஒரு சோடி செருப்பும் பியர் ரின்னும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சடலத்துக்குரியவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=101404073008524270#sthash.blKWMCgD.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.