ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு திடீரென உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டிலுள்ள உறவினரைப் பார்ப்பதற்காக லண்டனிலிருந்து வந்த இவர், கடந்த 17ஆம் திகதி பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, நேற்றுக் காலை (27) உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197314
-
- 0 replies
- 449 views
- 1 follower
-
-
தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மிக மோசமாக அதிகரிப்பு [11 - February - 2008] தெற்கு, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மோசமாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்தவருடம் சராசரி பணவீக்கம் இலங்கையில் 21.6 சதவீதமாக காணப்பட்ட அதேசமயம் நவம்பரில் 26.2 சதவீதமாக படுமோசமாக அதிகரித்திருந்தது. கடந்தவருடம் இறுதி காலாண்டில் இந்தோனேசியாவின் பணவீக்கம் 7 சதவீதமாகும். தாய்லாந்தில் 2.6 சதவீதமாகவும் மலேசியாவில் 2 சதவீதமாகவும் சிங்கப்பூரில் 2.9 சதவீதமாகவும் பிலிப்பைன்ஸில் 3 சதவீதமாகவும் இந்தியாவில் 6 சதவீதமாகவும் பங்களாதேஷில் 11.2 சதவீதமாகவும் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள லிர்னே ஏசியாவின் பிரதம பொருளியலாளரு…
-
- 0 replies
- 925 views
-
-
அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பிரபாகரனை நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனைக்கூறுமாறு என்னை நிர்ப்பந்தித்தன. பிரபாகரன் என்று சொல்லாமல் தேசியத் தலைவர் என்று அவரை அழைக்கவே விரும்புகிறேன். என் புரிதலில் பிரபாகரன் அவ்வாறானவர் தான். மேலும், தேசியத்தலைவரை மெச்சுவதனாலும்இ தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஆர்வத்தினாலும் என் வாழ் நாளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது இடர்ப் படுகின்றேன். அது வெறும் அல்லது ‘சும்மாவான’ இடர்ப்பாடு அல்ல. ஆனால், “அண்ணை கவனம்! அண்ணையை கவனமாகப் பாருங்கோ!” என்று எழுதிவைத்துவிட்டு அனுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதலில் களப்பலியான லெப்.கேணல்.இளங்கோவனுக்கு முன்னாலேயோ அல்லது ‘அண்ணை’ பெயர் சொல்லி தம்மை கொடையாகக் கொடுக்கின்ற கரும்புலிகள் முன்னாலேயோ என் இ…
-
- 4 replies
- 2.4k views
-
-
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், மலையக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மலையக பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ். நகர விடுதியொன்றில் இன்று (22) காலை இடம்பெற்றது. இதன்போது, வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வை பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இ…
-
- 25 replies
- 2.7k views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை மீள நீதிமன்றம் அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி குழாம் மேல் நீதிமன்ற நீதிபதி குழாமிற்கு இன்று அறிவித்தது. அவர்களை விடுப்பதற்கான உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதன் ஊடாக தெரிந்தே கடமையை புறக்கணித்தமை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீ…
-
- 3 replies
- 366 views
- 1 follower
-
-
அவன்ட் கார்ட் கப்பலில் இருந்த ஆயுதங்களை கடற்படையினர் பொறுப்பேற்ற போது கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் கப்பல்களிலிருந்து 2410 ஆயுதங்கள் தற்போது கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் இரவில் முற்றுப் பெற்றிருந்தது. இந்நிலையில் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மஹநுவர கப்பலில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக அந்த நிறுவனம் கடற்படையினர் மீது குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து கப்பலை மீண்டுமொரு தடவை முழுவதுமாக பரிசோதித்து, அதில் எதுவித ஆயுதங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு தென்பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி காலி …
-
- 0 replies
- 494 views
-
-
வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!
-
-
- 8 replies
- 752 views
-
-
மஹிந்த ஜனாதிபதியான பின்னர் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன- ஜெனீவா ஆய்வாளர் 25.02.2008 / நிருபர் எல்லாளன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்திருப்பதாக ஜெனீவாவின் சிறிய ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுநிலையத்தின் பணிப்பாளர் ரொபேர்ட் முஹா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகாகுமாரதுங்க ஆகியோர் போல விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியுமென்ற பிடியைத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வைத்துக்கொண்டுள்ளார். எனினும், கடந்த கால அரசாங்கங்களைவிட வித்தியாசம் என்னவெனில் சமாதானப் பேச்சு மூலமான அரசியல் தீர்வுக்கான அனைத்து …
-
- 0 replies
- 830 views
-
-
-
- 0 replies
- 613 views
-
-
சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச…
-
-
- 9 replies
- 940 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக கண்டியில் நடைபெறவிருந்த தென்னாசிய நாடுகளின் (சார்க்) கூட்டத்தொடர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 982 views
-
-
நிமால் சிறிபால டி சில்வா இந்திய மக்கள் பிரதிநிதிகளின் இலங்கை விஜயமானது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்த போது, வழங்கப்பட்ட வரவேற்பிற்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனை தவிர இலங்கையின் தற்போதை அரசியல் நிலைமைகள் குறித்தும் அமைச்சர் இந்திய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் இலங்கை சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று முற்பகல் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடிய…
-
- 0 replies
- 596 views
-
-
போருக்கு பின்னர் வடபகுதி மக்களின் கடன் சுமை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. வடக்கில் சராசரியான குடும்பம் ஒன்றுக்கான கடன் சுமையின் அளவு 52, 000 ரூபாயிலிருந்து 194,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அர்ஜின மகேந்திரன் அண்மையில் கிளிநொச்சியில் நடந்த வங்கி திறப்புவிழா ஒன்றின் போது கருத்து தெரிவித்தார். கீழே காட்டப்பட்ட படமானது 2009ற்கும் 2014ற்கும் இடையே மாகாண ரீதியாக வங்கிகளின் எண்ணிக்கையில் எற்பட்ட மாற்றத்தை காட்டுகின்றது. வங்கிகளின் அடர்த்தி என்பது, ஒரு லட்சம் (100000) மக்களுக்கு எத்தனை வங்கிக்கிளைகள் இருக்கிறது என்பதாகும். 2009 இல் வடக்கில் ஒரு லட்சம் மக்களுக்கு 9.9 ஆக இருந்த வங்கிகளின் எண்ணிக்கை 2014 இல் 118% வளர்ந்து 21.6 ஆக அதிகரித்திர…
-
- 1 reply
- 923 views
-
-
நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்… September 21, 2019 மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்ற நிலையில், குறித்த கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி தொடர்பாக தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீதி நாடகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) ஏற்பாட்டில் அதன் குழு தலைவர்…
-
- 1 reply
- 550 views
-
-
தனது அனுமதி இன்றி சிறிலங்கா ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை சந்திக்க கூடாது என சோனியா கடுமையான கட்டுப்பாட்டினை விதித்துள்ளார்.இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் அனுமதியின்றி, இலங்கையின் அரசியல் வாதிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இந்திய உயர்மட்டத் தலைவர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் இலங்கையில் நடைமுறைக்கு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசியல் தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் போன்றோரைச் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்படு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அர…
-
- 4 replies
- 757 views
-
-
கனமழையால் மிதக்கும் கிளிநொச்சி (வீடியோ) இலங்கை கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழையால் அந்த நகரமே நீரில் மிதக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழையால் அனைத்து குளங்களுக்கும் நீர் வந்தவாறே உள்ளது. இதனால், குளங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஊழியர்களும் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகள் வெள்ள நீரில் மிதந்து பள்ளிகளுக்கு செல்கின்றனர். அங்குள்ள இரணைமடு, அக்கராயன், வன்னேரி, கரியாலை நாகபடுவான், குடமுருட்டி, புதுமுறிப்பு கனகாம்பிகை, கல்மடும் பிரமந…
-
- 0 replies
- 841 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடு படுதோல்வி கண்டு விட்டது. எனினும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் சரி யானவை என்ற மனநிலையிலேயே இருக்கப் போகின்றனர். எதையும் அலசி ஆராய்ந்து எது சரி, எது பிழை என்ற முடிவுக்கு வராமல் எங்கள் நம்பிக் கைக்குரியவர்கள் செய்வதெல்லாம் நியாய மானவை, முழுக்க முழுக்கச் சரியானவை என்று நம்பி விடுகின்ற ஒரு பண்பாடு நம் இனத்தில் உண்டு. இந்தப் பண்பாடு பற்றி நம் அரசியல் தலை வர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.இதன் காரணமாக மக்களை எப்படியும் வாலாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர் களுக்கு நன்கு தெரியும். இதன்காரணமாக மக்கள் எங்களை ஒதுக்கி விடுவார்கள் அல்லது எங்களிடம் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சம் தமிழ் அரசியல் …
-
- 0 replies
- 540 views
-
-
யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர். யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ‘தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக…
-
- 0 replies
- 180 views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள சிறிலங்காவின் ஆயுதப் படையினர் பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்திருக்கின்றது. வன்னிக்கு விஜயம் செய்த செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு, விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள சிறிலங்கா படையினரை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் நான்கு கடற்படையினரும், இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னி சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு, மாhச் 7 ஆம் திகதி புலிகளின் காவலிலுள்ள படையினரைச் சந்தித்ததுடன், உறவினர்களால் வழங்கப்பட்ட கடிதங்கள்,…
-
- 1 reply
- 2.8k views
-
-
இலங்கைக்கு வழங்கவுள்ள நிதி குறித்து விளக்கம் தேவை! தமிழர்களுக்கான நாடாளுமன்றக்குழு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2015, 02:21.40 AM GMT ] இலங்கையின் இராணுவ மீளமைப்புக்காக வழங்கப்படப் போகும் நிதி குறித்து விளக்கம் ஒன்றை தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு கோரியுள்ளது. பிரித்தானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹூகோ ஸ்வைரியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இராணுவத்தை மீளமைப்பு செய்ய 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்க அண்மையில் பிரதமர் கமரொன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் உறுதியளித்துள்ளார். எனினும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறித்து விளக்கம் தேவை என…
-
- 0 replies
- 335 views
-
-
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண வி…
-
- 0 replies
- 282 views
-
-
கிழக்கில் 361 தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மட்டகளப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மே மாதம் 10 திகதிநடை பெறவுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக மமட்டகளப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கிறிஸனானந்த லிங்கம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக மட்டகளப்பிலிருந்து 3.30950 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 94359 பேரும் மட்டகளப்பு தேர்தல் தொகுதியில் 154761 பேரும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியல் 81730 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா் . மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1122
-
- 0 replies
- 835 views
-
-
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிலரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. புனர்வாழ்வளிக்கப்படாத எல்.ரி.ரி.ஈ. முன்னாள் செயற்பாட்டாளர்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியானதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல்களை மேற்கொண்டனர். திருகோணமலையில் ஈபிடிபி கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இந்நடவடிக்கைள் ஆரம்பமாகின. இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞரக்ள் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் …
-
- 0 replies
- 498 views
-
-
கிளிநொச்சியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் கிளிநொச்சியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே அதில் பயணித்த தகவலாளர் காயமடைந்துள்ளார். பாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தொடர்பாடலற்ற தேடலை பொலிஸார் மேகொண்டுள்ளனர். இதன்போது பொலிஸாரின் வாகனத்திற்கு முன்பாக, வாடகைக்கு கொள்வனவு செய்யப்பட்ட மதுவரித் திணைக்களத்தின் வாகனம் வேகமாக பயணித்துள்ளது. இந்நிலையிலேயே குறித்த வாகனத்த…
-
- 0 replies
- 437 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'ரோ' காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளும் அவ்வாறே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான படைத்தரப்பு உறவுகள் வலுவாக இருப்பதாக இந்தியா தெரிவித்து வருகின்றது. புலனாய்வு அமைப்புக்களின் தலையீடு இல்லாமல் இவ்வாறு படைத்தரப்பு உறவுகள் வலுவாக அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு. https://tamilwin.com/article/indian-raw-activities-in-sri-lanka-1735605571
-
- 1 reply
- 206 views
-