ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
அராலி மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட தினமாகிய நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆதரவாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணி கட்சியிலிருந்து வலி.மேற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அண்மையில் அந்த உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு சிராஸீடன் இணைந்துகொண்டவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்தே மேற்படி உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும் மேற்படி கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இ…
-
- 0 replies
- 242 views
-
-
அராலியில் படையினரின் ரக் வாகன விபத்து: 7 படையினர் காயம் வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனத்தின் விபத்துக்கு உள்ளாகியதில் சிறிலங்காப் படையினர் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்பாணம் அராலிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அராலி பாலத்திற்கு அண்மையில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனம் வேகமாகச் சென்றபோது ரக் தடம் புரண்டதிலேயே படையினர் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த படையினர் 7 பேரும் பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/?p=2873
-
- 0 replies
- 870 views
-
-
21 JUN, 2025 | 05:53 PM அராலி பகுதியில் சனிக்கிழமை (21) உழவு இயந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தக ஸ்தாபனம் ஒன்றுக்கு சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றவேளையில், வீதியின் குறுக்கே மாடு பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மின்கம்பமானது உழவு இயந்திரத்தின் மீது விழுந்துள்ள நிலையில் சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளார். விபத்தின்போது சேதமடைந்த மின்சார இணைப்பினை சரிசெய்யும் நடவடிக்கையில் வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesar…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
அரியாலை இளைஞன் கொலை: கடற்படை முகாமில் பொலிஸ் தேடுதல்! அரியாலையில் கடந்த ஞாயிறன்று இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸ் குழு ஒன்று நேற்று அதிரடியாக மண்டைதீவு கடற்படை முகாமினுள் புகுந்து தேடுதல் நடத்தியது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று முகாமினுள் தரித்து நிற்கின்றதா என்பது தொடர்பிலேயே இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது என்று உதயன் அறிந்தான். யாழ்ப்பாணம் நீதிவானின் அனுமதி பெறப்பட்ட பின்னர் நேற்று மாலை இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது. யாழ். …
-
- 1 reply
- 680 views
-
-
யுத்தத்தால் பாதிப்புற்றவர்களுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சிறு சிறு தொழில் முயற்சிகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இவ்வகையில் வவுணதீவு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் என அழைக்கப்படும் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அரிசியாலை அமைப்பதற்கான ஏற்பாடொன்றினை மேற்கொள்கிறோம். யுத்தத்தால் பாதிப்புற்ற குடும்பங்கள் சிலவற்றைத் தெரிவு செய்து முதல்கட்டம் 4குடும்பங்களை உள்வாங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மேற்படிபிரதேசத்தில்அரிசியாலைஅமைவதனால்ஒப்பீட்டளவில்அதிகபலனைப்பெறமுடியும். (அ) இந்த ஆலை அமையும் பிரதேசத்தில் அரவ…
-
- 4 replies
- 927 views
-
-
அரிசி ஆலைகளை இராணுவம் கண்காணிக்கும்! -ஜனாதிபதி தெரிவிப்பு. அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்துடன் அரிசி தேசிய சொத்து என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் மில்…
-
- 0 replies
- 132 views
-
-
அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்! இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் தனியார் துறை வர்த்தகர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அக்காலப் பகுதியில் மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த …
-
- 0 replies
- 323 views
-
-
அரிசி இறக்குமதிக்கு தடை : நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் விவசாயிகள் ஆகும் கைதிகள் ! புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை முன்னெடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை …
-
- 0 replies
- 146 views
-
-
அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து. Colombo (News 1st) ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து - Newsfirst
-
- 13 replies
- 753 views
-
-
60 ரூபாவிற்கு ஒரு கிலோ அரிசியை எங்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று கேட்பதற்காக பெருமளவிலான இல்லத்தரசிகள் ஞாயிறு லங்காதீப காரியாலத்திற்கு சென்றுள்ளனர். ஞாயிறு லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர் ஆரியரத்ன தொம்பகஹாவத்தவை சந்திக்கவே இல்லத்தாரசிகள் இவ்வாறு லங்காதீப காரியாலத்திற்கு சென்றுள்ளனர். ஒரு கிலோ அரிசியை 60 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என 30ம் திகதி வெளியான ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பண்டிகை காலத்தில் ஒரு கிலோ அரிசியை 60 ரூபாவிற்கு கூட்டுறவுக் கடைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என வெளியான செய்திக்கமைய இன்றைய தினம் அரிசி கொள்வனவு செய்ய சென்ற இல்லத்தரசிகள் ஏமாற்றடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற இல்லத்தரசிகள் கொழும்பு ஹ_னுப்பிட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 20(5) ஆம் பிரிவின் கீழான கட்டளை விதி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரிசி வகைகளின் கிலோகிராம் ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா - ரூபாய் 90, கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 90, நாட்டரிசி - ரூபாய் 90, பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 85. நேற்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தல், அதற்காக முன்னிற்றல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல் ஆகியன மேற்கொள்ளப்…
-
- 2 replies
- 433 views
-
-
அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும் அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும். அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக இருந்தவர்களே அதன் எதிர் சக்திகளாகவும் அல்லது குழப்பம் விளைவிக்கும் சக்திகளாகவும் மாறலாம் எனவே குழப்பங்கள் ஒரு நிதானமான நிலைமையை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம். இந்த அரசியல் போக்கை தற்போது நமது அரசியல் சூழலில் மிகத் துல்லியமாகவே அவதானிக்க முடிகிறது. விடுதலைப்புலிகளின் தோல்வியைத் …
-
- 3 replies
- 748 views
-
-
அரிசி வகைகளுக்கான... அதிகபட்ச சில்லறை விலையை, அறிவிக்கும்... வர்த்தமானி வெளியீடு உள்ளூர் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, வெள்ளை – சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்…
-
- 0 replies
- 97 views
-
-
அரிசி விற்பனை விடயத்திலும் சிறிலங்கா அரசாங்கமானது இராணுவத் தலையீட்டை விரும்புகின்றது என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "த நேசன்" சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 808 views
-
-
அரிசி விலை இரு மடங்காக உயரும் -அரிசி ஆலை உரிமையாளர்கள் -சி.எல்.சிசில்- நெல் சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு கொள்வனவு செய்தால் அரிசியின் விலை இரட்டிப்பாகும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் அமைச்சரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அரிசி விலையை குறைக்காவிட்டால், அரிசி விலையை பராமரிப்பது கடினம் என்றும், சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு கொள்வனவு செய்தால், அரிசி விலை இரு மடங்காக உயரும் என்றும் பெரும்பான்மையான ஆலை உரிம…
-
- 1 reply
- 265 views
-
-
அரிசிக்கான உச்சப்பட்ச சில்லறை விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (27) நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டரிசி 96 ரூபாய்க்கும் சம்பா கிலோ ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும், 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கீரி சம்பா விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. http://www.tamilmirror.lk/செய்திகள்/அரிசி-விலை-உயர்வு/175-250982
-
- 1 reply
- 776 views
-
-
அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள (Department of Agriculture) அதிகரரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ஒழுங்கமைக்கப்பட்ட விவசாய திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். நெல் கொள்வனவு மேலும் நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும…
-
- 1 reply
- 740 views
- 1 follower
-
-
அரிசி விவகாரம் தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார். அரிசி விற்பனை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசி விலை மற்றும் பதுக்கல் தொடர்பில் கவனம் செலுத்தி 2024 ஆம் ஆண்டு அரிசி விற்பனை தொடர்பான வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அரிசி தொடர்பில் 126 விசேட சுற்றிவளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், வட மாகாணத்தில் பெரியளவிலான பதுக்கல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார். அரிசி விவகாரம் ; வட மா…
-
- 0 replies
- 138 views
-
-
தடுப்பு முகாம்களில் தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு "இரசிது" வழங்க வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும். போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு முகாம் சுற்று பயணத்தினை முடித்து கொண்ட த.தே. நாடாளுமன்ற குழு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. பசில் மற்றும் மிலிந்த மொரகொட ஆகியோரை சந்தித்த குழுவின் சார்பாக சிறிகாந்தா இவ்வாறு கோரிகையினை விடுத்துள்ளார். முகாம்களுக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய நாடாளுமன்ற குழுவில் சிறிகாந்தா நேற்று தனது நேர்முகத்தில் 1000 கணக்கான மக்கள் இருக்கும் முகாம்களில் அடிப்படை வசதிகள் எல்லாம் சரியாக இருக்கும் என்று கூறமுடியாத…
-
- 1 reply
- 669 views
-
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் ! ஒரு கிலோ நாட்டரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிப…
-
-
- 18 replies
- 913 views
-
-
அரிசிக்கான... கட்டுப்பாட்டு விலையை நீக்க, அமைச்சரவை அனுமதி அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இருப்பினும் பால்மா, சீமெந்து, கோதுமை மா மற்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் குறித்து எந்த முடிவும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1241612
-
- 0 replies
- 214 views
-
-
அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு! எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க குறிப்பிட்டார். பீயர், கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார். இதனிடையே, வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வ…
-
- 1 reply
- 365 views
-
-
மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் யு.எல்.அப்துல் மஜீது நீதிமன்றுக்கு தெரிவித்த குற்றச்சாட்டிற்கிணங்க விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து நீதிபதி 20 ஆயிரம் ரூபா அபராதத்தினை விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்படுமிடத்து வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கையினையும் விடுத்தார். செயற்கையாக ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
அரிசிக்கு, வரிசையில் நிற்கும் நிலை – மக்கள் கவலை! அரிசிக்கு வரிசையில் நிற்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்ப்படடுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்பொழுது அரிசிக்கும் வரிசையில் நிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சதோச விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ 140 ரூபாவிற்கும், தீட்டல் அரிசி ஒரு கிலோ 110 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து அரிசியினை பெற்று வருகின்றனர். https://athavannews.com/2022/1278464
-
- 0 replies
- 219 views
-
-
அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்! சமல் ராஜபக்சவின் ஆலோசனை இது! நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, கடந்த காலங்களில் கிராமங்களில் மரவள்ளிக்கிழங்கு, பாசிப்பயறு போன்றவற்றை உண்டனர் என்று நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில், பாண் சாப்பிடுவதைவிட மரவள்ளிக் கிழங்கு, பாசிப் பயறு சாப்பிடுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கு சிறந்த மருந்து எனவும் அவர் தெரிவித்தார். எமது நிலங்களில் மரவள்ளி கிழங்கு சிறப்பாக வளரும். 60க்கும் மேற்பட்ட தேசிய கிழங்கு வகைகள் இருக்கின்றன. பாசி…
-
- 36 replies
- 2.7k views
- 1 follower
-