ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
யாழ்ப்பாணாத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை தனக்குத் தானே மண்ணெண்னை ஊற்றி தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் யாழ். வத்திரிரையான் வடக்கு தாளையடி பிரதேசத்தை சேர்ந்த நித்தியானந்தன் விமலாதேவி (56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக இவர் உளத் தாக்கங்களுக்கு உட்பட்டு இருந்ததாக இவரது பிள்ளைகள் பொலிஸ் விசாரணைகளின் போது தொரிவித்துள்ளனர். குறித்த சடலம் தற்போது யாழ். போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் http://akkinikkunchu.com/new/index.php
-
- 2 replies
- 1.5k views
-
-
புலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை – பேராசிரியர் சூரியநாராயணன் ‐ GTNனின் மொழியாக்கம்: புலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை. அது ஒரு நீண்ட யுத்தமாகி விட்டது. அதற்கும் அப்பால் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை போர் பலி கொண்டு வருகிறது. இதுவரை ஊடகங்களுக்கும் மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கும் போர்ப்பிராந்தியத்துடன் தொடர்புகொள்ள ஒரு வழியுமில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்புக்களின் தகவலின்படி அப்பிராந்தியத்தில் இரண்டு இலட்சம் மக்கள் அகப்பட்டுள்ளனர். எனினும் அரசாங்கத்தின் புள்ளிவிபர…
-
- 0 replies
- 1.5k views
-
-
வரதராஜ பெருமாள் கொழும்பிற்கு வந்து சேர்ந்தார், நாளை யாழிற்கு யாழ் நிருபர் திங்கட்கிழமை, மார்ச் 29, 2010 varathar வடக்கு கிழக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் நேற்றுப் பிற்பகல் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். இந்தியாவில் பல வருடங்களாகத் தங்கியிருந்த அவர், தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக நாடுதிரும்பியுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்துக்கு ஓரிரு தினங்களில் வரவுள்ள அவர், தேர்தல் பிரசாரக் கூட்டங் களிலும், கருத்தரங்குகளிலும் உரையாற் றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மகாண சபையின் முதலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்த அவர், தனிநாடு பிரகடனம் செய்ததை …
-
- 9 replies
- 1.5k views
-
-
பங்கெடுப்போம் ! நீதியை வென்றெடுப்போம் ! By naatham On 24 Feb, 2012 At 02:31 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments மக்களின் பங்களிப்பை வேண்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ! சிறிலங்கா தொடர்பில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை சர்வதேச எடுக்க முனைந்திருக்கும் இவ்வேளை, எமது விடுதலைக்கான நியாயப்பாடுகளை நிலைநிறுத்தவற்குரிய வாய்ப்புக்களை தவறவிடாது பணிகளை முன்னெடுக்க மக்களின் பங்களிப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு அவசர அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் முழுவிபரம் : ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த இனவழிப்பு, சர்வதேச அரங்கி…
-
- 17 replies
- 1.5k views
-
-
Sunday, May 29, 2011, 21:29சிறீலங்கா புதிதாக சிறீலங்கா காவல்துறையில் இணைந்த தமிழர்கள் சிறீலங்கா அரச தலைவரை படுகொலை செய்யலாம் என்ற தகவல்களை சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் சிறீலங்கா அரசுக்கு தெரியப்படுத்தியைத் தொடர்ந்தே சிறீலங்கா அரசின் போர் விழாவின் இறுதி நேரத்தில் தமிழர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திற்கு திரும்பி அனுப்பப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகது: தமிழ் மக்கள் மீதான போரின் வெற்றி விழாவை சிறீலங்கா அரசு கடந்த வெள்ளிக்கிழமை (27) கொழும்பில் கொண்டடியிருந்தது. இந்த விழாவுக்கு புதிதாக சிறீலங்கா காவல்துறையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் 23 பேரை இணைத்துக்கொள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்டிருந்தது. 6 ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
சித்திரவதைகளில் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களை கடலில் வீசும் படையினர் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காப் படையினரால் படைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலர் நீண்டகாலப் படைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் போது இறக்கின்றவர்களை சிறிலங்காப் படையினர் கடற்படை படகுகளில் ஏற்றி கடலில் தூக்கி எறிவதாகவும் யாழில் உள்ள பொது அமைப்புக்கள் கண்டணம் வெளியிட்டுள்ளன. முன்னர் கொல்லப்படுபவர்களை செம்மணி போன்ற பகுதிகளில் புதைத்தமையால் சிறிலங்காவின் படுகொலைகள் அம்பலமாகியிருந்தது. இவ்வாறான நிகழ்வகளை எதிர்காலத்தில் தடுப்பதற்காகவே படையினர் உடல்களை கடலில் வீசி வருவத…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ்நாட்டில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கைக்கு எதிராக தமிழ்நாடு செயற்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கைக்கு வழக்கமாக வருகின்ற ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டவர் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உணரவேண்டும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முட்டாள்தனமாக செற்படுவதால் இலங்கை – இந்திய உறவில் மிகப் பெரிய விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக…
-
- 7 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா கிறிக்கெற் அணி மற்றும் சிங்கள பாடசாலைகள் இலண்டனில் கிறிக்கெற் விளையாட வருகின்றார்கள். இந்த போட்டியினை MTCCS ( http://mtssc.play-cricket.com/home/home.asp) எனும் அமைப்பு முன் நின்று நடாத்துகின்ரதாக தகவல். இது தொடர்பான கூட்டம் கடந்த செவ்வாய் அன்று குறித்த அமைப்பினால் நடாத்தப்பட்டது. இதில் சிறிலங்கா எயர்லைன்ஸ் நிறுவன முகாமையாளர் ஒருவரும் கலந்து கொண்டாராம். இந்த விளையாட்டுவிழா செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. விளையாட்டு நிகழ்வினை எயர்லங்கா நிறுவனம் இலங்கை வங்கி ஆகியன முழுமையாக ஸ்பொன்சர் பண்ணுகின்றார்கள். இந்த போட்டியில் யாழ் இந்து பழைய மாணவர் கழகம் (யூகே). சென் ஜோன்ஸ் பழைய மானவர் அணி( யூகே) ஆகியனவும் மற்றும் மூன்று பாடசாலைகளும் விளையாட ஒத…
-
- 1 reply
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: சிறுவன் உட்பட இருவர் படுகொலை- 11 பேர் படுகாயம் முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் ரக வானூர்திகள் இன்று நடத்திய குண்டுவீச்சில் சிறுவன் உட்பட அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு தெற்காக உள்ள அளம்பில் இராமசாமித் தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு முன்பாக உள்ள மீன்வாடிகள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. குண்டுகள் வாடிகள் மீதும் அதன் பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது அப்பகுதியில் தொழில் நிமித்தம் நின்ற பொத…
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.க்களை மாவை சேனாதிராஜா , சுரேஜ் பிரேமச்சந்திரன் , செல்வன் அடைக்கலநாதன் , எம்.ஏ. சுமந்திரன் , பொன் செல்வராசா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர். http://www.thinakkural.lk/article.php?local/g9mhttprtg836751fda174c317155zkkss60f4ea5d21de87c4c9a792ivjsc
-
- 12 replies
- 1.5k views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்காக காத்திருக்கும் இலங்கை "ரூபாவும்' பங்குச்சந்தையும் [13 - March - 2009] சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலர் கடன் தொகையை பெறுவதற்காக இலங்கை மத்திய வங்கி பேச்சு வார்த்தை மேற்கொண்டுவரும் நிலையில் நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை இலங்கையின் நாணயமும் பங்குச்சந்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சாத்தியமான நிபந்தனைகள் தொடர்பான கேள்விகளையும் பதில்களையும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருக்கிறது. பிரதான விளைவு எத்தகையதாக இருக்கும் சாத்தியம் காணப்படுகிறது? சாதகமற்ற நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படாது என்று மத்திய வங்கி கூறுகின்றபோதிலும் கடனுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றத
-
- 2 replies
- 1.5k views
-
-
இன்னொரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது என்றால் வங்காளதேசம் எப்படி உருவானது என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி கேள்வி: எம்பிக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை மத்திய அரசு எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்? கருணாநிதி: நாங்கள் எதிர்பார்த்ததைத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கேள்வி: வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து தனது கவலையை தெரிவித்திருக்கிறாரே? பிரதமரும் தனது கவலையை சொல்லி இருக்கிறாரே? கருணாநிதி: அது சரியானது…
-
- 0 replies
- 1.5k views
-
-
அதிகரித்துவரும் இராஜதந்திரப் போர் அரசாங்கத்தைப் பெரிதும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது- -சத்திரியன் வன்னியின் ஒரு மூலைக்குள் நடந்து கொண்டிருக்கின்ற போர் ஒரு புறம் இருக்க, கொழும்பை மையப்படுத்தி நடக்கின்ற இராஜதந்திரப் போர் அரசாங்கத்தைப் பெரிதும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. புலிகளுக்கு எதிரான போர் வன்னியில் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு "மனிதாபிமானப் போர்' என்றும் பொதுமக்களை புலிகளின் பிடியில் இருந்து விடுவிப்பதே தமது நோக்கம் என்றும் கூறியது அரசாங்கம். நிலங்களைப் பிடிப்பது படையின?ன் நோக்கமல்ல, சிறிது சிறிதாகப் புலிகளை அழிப்பதே படையினரின் நோக்கம் என்று முதலில் கூறப்பட்டது. கிளிநொச்சியைப் படையினர் தாண்டியதும், இது பயங்கரவாதத்…
-
- 3 replies
- 1.5k views
-
-
கொச்சிக்காய் தூள் தாக்குதல் : சம்பந்தப்பட்ட எம்.பி. சம்பவம் தொடர்பில் விளக்கம் பாராளுமன்றத்தில் கொச்சிக்காய்த் தூள் தாக்குதல் என்று அறியாத நிலையிலேயே நான் மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். பாராளுமன்றத்துக்குள் எந்தவித பொருட்களையும் அன்றைய தினம் எடுத்துச் செல்ல முடியாதவாறு சோதனை இடம்பெற்றது. இதனால், எந்தவொரு பொருளும் என்னிடம் இருக்கவில்லை. அந்த பதற்ற நிலைமையின் போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எம்மை நோக்கி ஒரு போத்தல் வீசப்பட்டது. அதனையே நானும் திருப்பி எறிந்தேன். அதில், என்ன இருந்தது என்பதை நான் அறிந்திருக்க வில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்த பொலிஸார் மீதும் கதிரையால் தாக்குதல் நடாத்…
-
- 4 replies
- 1.5k views
-
-
'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள் ரன்ஜன் அருண் பிரசாத்கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரினாலேயே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவத…
-
- 14 replies
- 1.5k views
- 2 followers
-
-
பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் விடயங்களை அமைச்சர் சிதம்பரம் தமக்கேற்பக் கையாள வசதியாக புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை 2010-01-17 07:15:10 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. x புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. இந்திய மத்திய உள்துற…
-
- 9 replies
- 1.5k views
-
-
வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க …
-
- 11 replies
- 1.5k views
-
-
கிழக்கு தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களை ஆளும் தரப்புக்கு இழுக்க தீவிர முயற்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தம்பக்கம் இழுத்தெடுக்கும் தீவிர முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அறியவருகிறது. இதனை அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்திய அதேவேளை, அமைச்சர்கள் சிலரும் ஏற்றுக்கொண்டனர். கிழக்கில் அரசாங்கம் தனது முழுக்கட்டுப்பாட்டினை நிலைநாட்டி, அங்கிருந்து புலிகளை விரட்டிவிட்டதாக கூறும் நிலையிலேயே கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்தெடுத்து அமைச்சுப் பதவி வழங்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. கிழக்கிலிருந்து புலிகள் அகற்றப்பட்டுள்ளதால் அரசாங்கத்துடன் இணையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற …
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை தொடர்பில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை குறித்து, ரஷ்ய விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் கலந்துரையாடுவார் என ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் சபையின் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் ரஷ்ய விஜயங்களின் போது கலந்துரையாட வேண்டியவை குறித்து செயலாளர் நாயகத்திற்கு அறிக்கை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டு, அவற்றுள் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் ரஷ்யாவுடன் கலந்துரையாடுவார் என கூறப்பட்டது. அந்த அறிக்கையில் நிபுணர் குழு அறிக்கை பற்றியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. My link
-
- 1 reply
- 1.5k views
-
-
குச்சியானாலும் பல்லுக்குத்த உதவும் இவர் உலகத்தலைவர் http://www.tamilsforobama.com/obama.html
-
- 0 replies
- 1.5k views
-
-
அமைதி முயற்சிகளுக்கு இணங்கினாலே இராணுவம் அடங்கியிருக்கும் என்கின்றார். மேலும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தோதுவான சூழ்நிலை தற்போது தொடர்கின்றது. ஆனால், வி.புலிகைள் உடனடியாக அமைதிப் பேச்சு மேசைக்குத் திரும்புவார்களாயின், அத்தகைய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை அரசு சீர்குலைக்காது" இப்படி கூறியிருக்கன்றார் வி.புலிகளுக்க எதிரான அரசுப்படைகளின் நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் வழி நடத்துபவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதியின் சகோதரருமான கோட்டபயா. இப்போதாவது அமைதிப் பேச்சுக்கு வருகிறீர்களா? .இல்லையா? இல்லையேல் இராணுவம் உங்கள் மீது பாயும்!" என்ற தொணியில் புலிகளுக்கு இறுதிச் சவாலும் எச்சரிக்கையும் விடும் தொனியில கருத்துக் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் 2 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Dec 2019 10:41 இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மாற்று நிதி உதவி கிட்டாத இதர ஆசிய நாடுகள்கூட சீனாவின் பிரம்மாண்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ உள்கட்டமைப்புத் திட்டத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் அவர் இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழிடம் கூறியுள்ளார். இலங்கை பல்லா…
-
- 5 replies
- 1.5k views
-
-
மனோ கணேசன் கலாநிதி ஜெகான் பெரேரா
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் கப்பலில் தீ பிடித்தது வீரகேசரி நாளேடு கொழும்புத் துறைமுகத்திலுள்ள கப்பல் ஒன்று நேற்று பிற்பகல் திடீரென தீப்பிடித்ததில் 13 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவுக்குச் சொந்தமான இந்தக் கப்பலில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக துறைமுக தீயணைக்கும் படையினர் தெரிவித்தனர். நேற்று மாலை 2.30 மணியளவில் இத் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான 13 பேரும் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்துக்கான காரணத்தை அறிவதற்கு விசேட பொலிஸ்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் ம…
-
- 1 reply
- 1.5k views
-