ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
இலங்கைக்கு பொருளாதார உதவி தொடரும் - ஜப்பான் இலங்கைக்கு பெருமளவில் நிதியுதவிகளை வழங்கிவரும் ஜப்பான் அரசு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றது என்று கொழும்பிற்கு மூன்று நாட்கள் அவசர விஜயம் ஒன்றினை முடித்துக்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி இன்று தெரிவித்திருக்கிறார். யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதென்ற இலங்கையின் உத்தியோகபூர்வ முடிவுகுறித்து தனது கவலையினையும், இதனால் நாட்டில் ஏற்படக்கூடிய அதிகரித்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற அச…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் முரளிதரன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு கிரிகெட் பயிற்சியளிக்க உள்ளார் தடுப்பு முகாமிலுள்ள போராளிகளுக்கு பிரபல நடிகை அனோஜா வீரசிங்க நடனப் பயிற்சியளித்து வருவதாகவும். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாகவும் சிறீலங்கா அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். 12 ஆயிரம் புலிப் போராளிகள் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தனர். இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர என தெரிவித் தார் அமைச்சர் டியூ குணசேகர. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீர மைப்ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கையின் கொலைக்களம்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது! - விசாரணைகளை வலியுறுத்தினார் பிரதமர் டேவிட் கமரூன்!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (14.06.11) ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் பிரதமர் டேவிட் கமரூனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இக்கேள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
கனேடியப் பாடசாலையில் புலிகொடிக்குத் தடை! [sunday, 2014-05-04 09:43:33] கனேடிய பாடசாலையொன்று புலிக்கொடியை தடை செய்துள்ளது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் உள்ள இந்த உயர்தரப் பாடசாலை, வளாகத்திற்குள் மாணவர் புலிக்கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் குமார் மார்க்கண்டு என்ற மாணவர் இரண்டு தடவைகள் பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது புலிக்கொடியை ஏந்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு கிடையாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்டு செல்ல மு…
-
- 21 replies
- 1.4k views
-
-
சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை ஒன்றுதிரண்ட தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் , இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் உபதலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோரை அப்பதவிகளிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டாமென வலியுறுத்தியுள்ளனர். சங்கக்காரவின் ஆதரவாளர்களால் பேஸ்புக் இணையத்தளம் மூலம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்கு 6512 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் 17 பேர் மாத்திரமே கலந்துகொண்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது. இன்று மாலை மூன்று மணியளவில் கொழும்பு -07 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள பிரஸ்தாப ஆர்ப்பாட்டமானது இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார மற்றும் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன ஆக…
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்:- 13 டிசம்பர் 2012 யாழ.பல்கலைக்கழக மாணவி ஒருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார். வலிகாமம் பகுதி விளையாட்டுத்துறை அதிகாரியொருவரது மகளான 21 வயதுடைய நடராசா கியானி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடை பகுதியினிலுள்ள அவரது வீட்டிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில் மரணித்தவர் படித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்னர் அவர்கள் வீடு திரும்பியிருந்த வேளை அம்மாணவி படித்துக்கொண்டிருந்த மேசையினில் சடலமாக கிடந்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான இவர் த…
-
- 8 replies
- 1.4k views
-
-
தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்றபோது;இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வு பூர்வமான அக்கறையை,அன்றே காட்டியிருக்கக் கூடாதா? இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள …
-
- 8 replies
- 1.4k views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பான ஆவணம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாட்டு தூதுவராலயங்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆவணத்தின் பிரதியொன்றை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமக்கு வழங்கியதாக அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த விசேட இரகசிய குறிப்பில் தூதுவர் இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தடை குறித்த அறிவிப்பில், 'விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒ…
-
-
- 16 replies
- 1.4k views
- 2 followers
-
-
இன்று சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக கூட்டுப்படை தலைமையக பொறுப்பில் இருந்து விடைபெற்றார். முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்புடன், பலவர்ண கொடி குடை ஆடம்பரங்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சரத் பொன்சேகாவின் இடத்துக்கு விமான படை தளபதி ரொசான் குணதிலக நியமிக்கப்பட்டுளார் http://www.eelanatham.net/news/important
-
- 8 replies
- 1.4k views
-
-
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாட அனைவரையும் ஒன்றினைந்து வலுச்சேர்ககுமாறும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இதனை அறிவித்துள்ளனர். அச் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது, “ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம்மக்களும் காலாதி காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றபோதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்த்தியின் விளிம்பில் நின்று இ…
-
- 10 replies
- 1.4k views
-
-
செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 தமிழர்கள் சுட்டுப்படுகொலை. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 அப்பாவி தமிழ் பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி கணபதிப்பிள்ளை நகர் என்ற மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்குச் சென்ற படையினர், அப்பகுதி வீடு ஒன்றுக்குள் சென்று அவ்வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். அப்போது, தமது குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்தவர்களை நோக்கி படையினர் சரசமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் குழந்தையும் மேலும் இருவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனையோர் இன்று காலை சடலங்களாக ம…
-
- 6 replies
- 1.4k views
-
-
சம்பந்தன் - ரெப் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் யுத்தக்குற்ற விவகாரக் கையாளுகைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஸ்டீபன் ஜே. ரெப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சமகால அரசியல் விவகாரம், அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் காலம் கடத்தல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள அவசர அவசிய பிரச்சினைகள், மீள்குடியேற்றம், வாழ்வாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு பேசப்பட்டதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் இறுதிக்கட்ட யுத்த நிலைமை குறித்தும் இங்கு பேசப்பட்டதாக தெரியவருகின்றது. ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ். குடாநாட்டுக்கான ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், 6 இலட்சம் மக்கள் யாழ். குடாநாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஒலப்ஸ் டொற்ரியர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப் பேச்சுக்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், ஏ-9 பாதையை மூடியிருப்பதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை" என்றும் அவர் கூறினார். ஐரோப்பாவிலிருந…
-
- 0 replies
- 1.4k views
-
-
முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது என்று இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
மே மாத்தில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நவ்சாட் மஜீட்டை ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் தெரிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று மாலை கூடும் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். கிழக்கு மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டாளராகவும், மாகாணத் தலைவராகவும், அரசியல் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்குப் பிரதிநிதியாகவும் நவ்சாட் தற்போது கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_டன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று மாலை கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டிருக்கின்றார். இதனடிப்படையில் 1,729 பேர் தனிமைப்பட…
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே, பொங்குத் தமிழ் நிகழ்வு என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைகழகத்தில், நாட்டைத் பிளவுபடுத்தும் இதுபோன்ற தீவிரவாத செயற்பாடுகளை நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதியளித்தது எனவும் அந்த அணி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டப் பின்னர், அவர்களது கொள்கையான தனி தமிழீழக் கோரிக்கையைப் பாதுகாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்வே பொங்குத் தமிழ் நிகழ்வு என கூறிய அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, இந்நிகழ்வு யாழ் பல்கலைகழகத்தின் உப பீடாதிபதியின் தலைமையில், நடைபெற்றதாகவும் கூறினார். பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நி…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காப் படையினரின் கெடுபிடிக்கும் இழுத்தடிப்புக்கும் மத்தியில் வாகரைக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 29 ழேஎநஅடிநச 2006 12:04 மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தொடர்ந்து சிறிலங்காப் படையினர். அனுமதி மறுத்ததனால் அங்கு வாழும் மக்கள் பட்டினிச் சாவிலும் மருத்துவப் பிரச்சனைகளாலும் நாளாந்தம் பேரவலத்தைச் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், தமிழீழ நிர்வாக சேவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன அரச அதிபரிடமும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு, ஐ.நா குழு (ரு N) ஆகியவற்றுக்கு மக்களின் நிலையை தொடர்ந்து எடு…
-
- 7 replies
- 1.4k views
-
-
நாட்டின் பெயர் தனி சிங்கள பெயராகவும் சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் - சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் (இராஜதுரை ஹஷான்) உத்தேச புதிய அரசிலமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக காணப்பட வேண்டும் என்று சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது. ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க விசேட பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் முன்வைத்த…
-
- 11 replies
- 1.4k views
-
-
08/06/2009, 11:52 [செய்தியாளர் தாயகன்] இந்தியாவின் இராணுவ உதவி – அம்பலப்படுத்தும் கோத்தபாய சிறீலங்கா அரசின் படை நடவடிக்கை பற்றி இந்தியாவிற்கு நாளாந்தம் தெரிவித்து வந்திருப்பதாக, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அம்பலப் படுத்தியுள்ளார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தமக்கு இருக்கும் உறவுநிலை காரணமாக, போர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, படை நடவடிக்கை பற்றி இந்தியாவிற்கு விளக்கப்பட்டு வந்ததாக அவர் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருக்கு படை நடவடிக்கை பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமது தரப்பில் அதிபரது செயலர் லலித் வீர…
-
- 2 replies
- 1.4k views
-
-
200 றாத்தல் பாணை நிவாரணமாகக் கொடுப்பதற்கு ஐந்து லெட்சம் செலவு செய்த பிரதி அமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌ;ளத்தினால் மூழ்கியுள்ள வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை ஆகிய கிராமங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் அவர்கள் இன்று உலங்கு வானூர்தி மூலமாக பாண் வழங்கினார். இவர் வழங்கிய பாண் 200 றாத்தலுக்கும் ரூபா ஒன்பதாயிரம் மட்டுமே செலவாகும் ஆனால் இவற்றை வினியோகம் செய்வதற்கான செலவு ரூபா ஐந்து லெட்சம் ஏனெனில் இந்த பாண் உலங்கு வானூர்தி மூலமாகவேதான் வழங்கப்பட்டது. இதே பாணை எந்திர படகு மூலமாக கொண்டு சென்று மக்களுக்கு வழங்கினால் ஆக இரண்டாயிரம் ரூபா மாத்திரமே செலவாகி இருக்கும். எனவே இவ்வாறு வீணாக செலவாகும்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சோனியா குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கவில்லை: விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலைப்புலிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, சோனியாகாந்திக்கோ, அல்லது அவருடைய குழந்தைகளுக்கோ எங்களால் எந்த ஆபத்தும் வராது. எங்களுக்கு கெட்டப்பெயரை உருவாக்க வேண்டும் என்று இப்படி செய்தியை பரப்பி வருகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதுடன் இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பும் வகையில் இவ்வாறு தகவல்கள் வெள…
-
- 1 reply
- 1.4k views
-
-
சில தினங்களில் தொப்பிகல பகுதியை கைப்பற்றுவோம் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தொப்பிகல பிரதேசத்தை அரசாங்கம் இன்னும் சில தினங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். தற்போதைக்கு தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றிவிட்டன என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் நாங்கள் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். தொப்பிகல பகுதியில் உள்ள ஏழுக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - மூன்று படையினர் பலி [ த.இன்பன் ] - [ யூலை 31, 2007 - 02:33 PM - GMT ] யாழ். வரணிப் பகுதியில் இன்று பிற்பகல் சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 4.35 மணிக்கு நடைபெற்றுள்ளது. படையினரால் தண்ணீர் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கிணறு ஒன்றிற்கு அருகிலேயே பொருத்தப்பட்டு படையினர் தண்ணீர் எடுக்க வந்தவேளை வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...0&Itemid=67 இதைத்தான் சொல்லுறது தண்ணியிலை கண்டம் எண்டு..
-
- 2 replies
- 1.4k views
-