ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143589 topics in this forum
-
பிரதான எதிர்க்கட்சியையே ஏமாற்றுவோரிடம் பிரபாகரன் நம்பிக்கை வைத்து பேசுவாரா? [09 - July - 2006] -கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க. ஐ.தே.கட்சி தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு அக்கட்சிக்கெதிரான துரோகத்தை தொடரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயலை கண்காணிக்கும் பிரபாகரன் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு வருவாரா எனக் கேள்வியெழுப்பும் ஐ.தே.கட்சியின் பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இது தொடர்பாக இந்தியாவும் தனது ஆட்சேபனையை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் கருத்து தெரிவிக்கையில்; அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தால் ஐ.தே.…
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள கனடாவில் அதனை ஆதரித்துப் பேசவும் எழுதவும் சுதந்திரம் இருக்கிறது - நக்கீரன் - ரொறன்ரோ கடந்த சனவரி 25 இல் சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் மாவீரர்கள் நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள நாடுகள் அதை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும் இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் உடபட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை இராணுவ பயங்கரவாதத்துக்குப் பலியான…
-
- 0 replies
- 1.4k views
-
-
அநுராதபுரத்தில் மர்ம நோய்: மூன்று தினங்களில் நால்வர் பலி... வியாழக்கிழமை, 17 பிப்ரவரி 2011 15:46 இலங்கையில் வாழும் சிங்கள மக்களால் புனித பூமி எனப் போற்றப்படும் அநுராதபுரத்தில் மர்ம நோயொன்று திடீரெனப் பரவ ஆரம்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த மர்ம நோய் காரணமாகக் கடந்த மூன்று தினங்களுக்குள் நால்வர் உயிரிழந்தனர் என வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நோய் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதுடன் இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் sankamam.com
-
- 1 reply
- 1.4k views
-
-
TMVPயைப் போல் தம்மை அடையாளப்படுத்தி விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவல் - புலனாய்வுத்துறை: http://www.globaltamilnews.net/tamil_news....=2125&cat=1 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களைப் போல், தம்மை அடையாளப்படுத்தி கொண்டு பெருமளவிலான விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவி இருப்பதை தாம் கண்டறிந்துள்ளதாக புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலி உறுப்பினர்கள், ரி.எம்.வி.பியின் உறுப்பினர்களாக அந்த கட்சிக்குள் இருப்பது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என பாதுகாப்பு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ரி.எம்.வி.பியின் தலைவர்கள் அடிக்கடி கொழும்புக்கு செல்வதால், அவர்களுடன் இந்த விடுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
Nov 1, 2010 / பகுதி: செய்தி / கொழும்பில் உருவாகின்றது ஈபிள் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பெருமைக்குரிய ஈபிள் கோபுரத்தை (Eiffel Tower) போன்ற கோபுரம் ஒன்றை கொழும்பில் அமைப்பதற்கு சிறீலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகளை கடத்தும் முகமாக 350 மீற்றர் உயரமான இந்த கோபுரம் அமுஸ்மன்ற் பூங்காவை அண்மித்த பகுதியில் உருவாக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் இதற்கான அறிக்கை சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே, இது தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பும் கோபுரம் என சிறீலங்கா அரசு தெரிவித்தாலும், எதிர்காலத்தில் புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என புலம…
-
- 4 replies
- 1.4k views
-
-
'புலிகளின் இயக்கத்தை எந்த நேரத்திலும் தடை செய்யலாம். இது வரை இலங்கை அரசு புலிகள் இயக்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதற்கு விசேட காரணங்கள் ஏதும் இல்லை, அழுத்தங்களும் இல்லை. என்றாலும் அரசு தராராளத்தோடு புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. புலிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் எந்த நேரத்திpலும் பலிகள் இயக்கத்தை தடை செய்யத் தயங்கமாட்டோம்." பர்துகாப்புத் துறைப் பேச்சாளனும் அமைச்சருமான கேஹெலிய இப்படி சூளுக்கின்றார். தேசியப் பாதுகப்பு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடுகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இப்படிக் கூறினார். 'தமிழர் புனர் வாழ்வுக் கழ…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம் (2ஆம் இணைப்பு) யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை. http://onlineuthayan.com/news/19324
-
- 8 replies
- 1.4k views
-
-
தமிழகத்தின் சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-10 07:11:38| யாழ்ப்பாணம்] இலங்கை மீது பொருளாதாரத் தடையை இந்திய மத்திய அரசு விதிக்கவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் இந்திய மத்திய அரசு செயற்பட வேண்டும் என்ற தேவை எதுவும் கிடையாது. அப்படியானால் தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஈழத்தமிழ் மக்களுக்கு எத்தகைய நன்மையைத் தரும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபை மேற்கொண்டதன் மூலம் இந்திய மத்திய அரசுக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை விடயத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை இலங்கை பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''சிங்கள இன வெறியர்களின் கொலை வெறித்தனமும், பிடிவாதப்போக்கும், சர்வதேச சமூகத்திற்கு கட்டுப்படாத நடவடிக்கைகளும் மிகுந்த அச்சத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசின் அதிகார வர்க்கம் இதனை கண்டும் காணாமல் மெத்தனமாக இருப்பதும், வேடிக்கை பார்ப்பதும் சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது. ஈழத்தமிழர்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க சிங்கள அரசுக்கு துணை நிற்போம் என்று…
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பினை அழித்தொழிக்கும் வகையிலான சிறிலங்காவின் இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியமை அம்பலமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.. சிறிலங்காவில் சமாதானம் தொடர்பில் இந்தியா மீதான நோர்வேயின் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு எந்தளவு உண்மைத்தன்மையுடன் ,இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது என்பது தெரியாது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கை -2020 தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2020 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையையும் சொந்த மண்ணையும் மீட்டெடுத்து, எமது மக்கள் தன்மானத்தோடு கௌரவமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளுக்காக மடிந்த மானமறவர்களை, எமது அகமனதில் தரிசித்து வணக்கம் செலுத்தும் தேசிய நாள். தமிழீழ மக்களின் சுதந்திரப்போராட்டத்தை, இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுந…
-
- 0 replies
- 1.4k views
-
-
பலாலி வான்படைத்தளத்தை பொதுமக்களின் விமான நிலையமாக தரமுயர்த்துதல் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கான துறைமுகமாக தரமுயர்த்துதல் போன்ற திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நேற்று முன்தினம் (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமார் ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் போது பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. கூட்டுப் படை ஒத்திகை, முப்படையினரின் கூட்டு மாநாடுகளை வருடம்தோறும் நடத்துதல், சிறீலங்கா படையினரை தரமுயர்த்துதல் உட்பட பல பாதுகாப்பு உடன்பாடுகள் எட்டப…
-
- 4 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் பலனடையும் விதத்தில் செயற்படுபவராக ஆர்பர் மாறிவிட்டார் *அரச சமாதான செயலகம் கூறுகிறது பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும் விதத்தில் செயற்படும் ஒருவராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ் தானிகர் லூயிஸ் ஆர்பர் மாறிவிட்டதாக அரச சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான லூயிஸ் ஆர்பரின் வருகை தொடர்பாக அரச சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையில் ஐ.நா.கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் பரிந்துரைத்துள்ளதாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தன. தமிழ்நெற் இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பெருமளவிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கி இடம் பெயர்ந்து [பிரித்தானிய நேரம் : April 22nd, 2009 at 21:06] இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மாறாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நகர்கின்றதாக அறியப்படகின்றது. வலைஞர்மடத்தில் தங்கியிருந்த மக்கள் இப்பொழுது முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பிரிவின் பேச்சாளர் இளம்பருதி தெரிவிக்கையில் இன்னும் 200,000 மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதாகக் கூறியுள்ளார். அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அவசரக்கூட்டம் ஒன்றை தனது மந்திரிகளுடனும் அதிகாரிகளுடனும் கூட்டி இலங…
-
- 0 replies
- 1.4k views
-
-
சித்திரவதைகள் தொடர்பாக சிறிலங்கா நம்பகமான விசாரணைகள் எதையும் நடத்தவில்லை என்றும் இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்த மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை இதுதொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது. சிறிலங்கா படைகளுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜொலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_con…
-
- 3 replies
- 1.4k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
தேர்தலை தடுக்க புலிகள் முயற்சிப்பதாக நோர்வேக்கு சிறிலங்கா கடிதம் [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 17:30 ஈழம்] [செ.விசுவநாதன்] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள தேர்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவருக்கு சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் றஜீவ விஜயசிங்க கடிதம் அனுப்பியுள்ளார். நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு றஜீவ விஜயசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கில் தேர்தலை நடத்தினால் அங்கு இரத்த ஆறு ஓடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாளிதழ்களில் வெளியாகியிருப்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். தமிழ் மக்களைப் பா…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிங்களப் பேரினவாதத்துக்குத் துணைபோகும் ஸ்ரீராம் நிறுவனத்தின் அகிலா ஸ்ரீனிவாசனுக்கு திறந்த மடல் – மனிதநேயன் மதிப்பிற்குரிய ஸ்ரீராம் லைஃப் நிறுவனத்தின் தலைவர் திருமதி.அகிலா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம்.இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகிகளில் தாங்களும் ஒருவர். கடந்த 23 ஆண்டுகளாக நிதி மூலதனத்துடன் தாங்கள் கொண்டுள்ள உறவும், அதனால் தாங்கள் சார்ந்த ஸ்ரீராம் குழுமத்தில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது. தற்சமயம், தென் ஆப்பிரிக்காவின் சன்லாம் நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் தலைவராக சிறப்புடன் இயங்கி வருகிறீர்கள். நிதி நிர்வாகியாக மட்டும் முடங்கிப்போய் விடாமல், சென்ற 7 ஆண்டுகளாக சமூகப் பணியில…
-
- 0 replies
- 1.4k views
-
-
மகிந்த ராஜபக்ஸ - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு. சுவிஸிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சிறீலங்கா அரசு, மனித உரிமை மீறல்களைக் குறைப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அதிபர் மகிந்த ராஜபக்ஸவினால் இந்த சந்திப்பில் எடுத்து விளக்கப்பட்டதாக, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஐ-நா சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளபட்டுவரும் மனித உரிமை மீறல்கள் முதலில் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிய வருகின்றது. சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல…
-
- 4 replies
- 1.4k views
-
-
இறுதி வேளையில் சம்பந்தனை அழைத்துப் பேசிய டோவால் – பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு 39 Views முத்தரப்புப் பாதுகாப்புப் பற்றிய பேச்சுக்களுக்காக கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் நேற்று நாட்டை விட்டுப் புறப்படவிருந்த சமயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து மூடிய அறைக்குள் சுமார் முப்பது நிமிட நேரம் பேச்சு நடத்தினார். அஜித் டோவலின் கொழும்பு நிகழ்ச்சி நிரலில் முன்னர் அறிவிக்கப்படாத இந்தச் சந்திப்பு சத்தம் சந்தடியின்றி நேற்று நடைபெற்றிருக்கின்றது. அஜித் டோவல் கொழும்பை விட்டு நேற்று புறப்படுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்துக்கு…
-
- 7 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியதன் மூலம் அதிரடித்தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்குள்ளது என்பதை அவர்கள் பறைசாற்றியுள்ளனர் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத்தலைமை தளபதி ஜெனரல் வி.மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் இராணுவ விமான தளம் மீது முதன்முதலில் விமானத்தாக்குதலை நடத்தியுள்ள விடுதலைப்புலிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். புலிகள் போன்ற இயக்கங்கள் விமானப்படை வைத்திருப்பது என்பது ஆபத்தான முன்னேற்றமாகும். இந்தியாவுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். போராளிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்கு உள்ளது எ…
-
- 2 replies
- 1.4k views
-
-
‘ஐ.நா. கடித விவகாரம்’ விளக்கம்கேட்டு 9 பேருக்கும் தமிழ் அரசுக் கட்சி கடிதம்! கதிர் ‘ஐ.நா. கடித விவகாரம்’ விளக்கம்கேட்டு 9 பேருக்கும் தமிழ் அரசுக் கட்சி கடிதம்! ஜெனிவாவுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எழுதிய கடிதத்துக்கு மாற்றுக் கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பேரிடமும், தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ் அரசுக் கட்சி ஜெனிவாவுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விடயத்தில் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக் கட்சியின் …
-
- 24 replies
- 1.4k views
-
-
இலங்கையில் உள்ள சிங்களவர்களுக்கு ஓர் அழைப்பிதழ்
-
- 0 replies
- 1.4k views
-
-
பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் * காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை முன்வைத்து ஒரு ஒப்பீடு உலக வரலாற்றில் தேசிய மக்களி னங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்ட, மேற் கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமா கவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங் காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலதந்தி ரமாக இருந்தது. என…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆபாசப்படங்களில் நடித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டடப்பட்டுள்ள பெண்கள் அடங்கலாக 27 பேரது புகைப்படங்களை இலங்கை சிங்கள பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன. 80 பெண்கள் அடங்கலாக இப்படியான ஆபாச நடிகர்கள் 83 பேரது புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக பொலிஸார் நீதிமன்ற அனுமதியை கடந்த வாரம் பெற்றிருந்தனர். அவர்களைக் கைது செய்ய உதவுமாறு கோரி இந்தப் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவர்கள் குறித்து இன்னமும் பொதுமக்களிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என்று பொலிஸ் தரப்புப் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார். இவர்கள் கைது செய்யப்படுமிடத்து, இத்தகைய ஆபாசப்படங்களை தயாரித்தவர்களை இலக்கு வைக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தக…
-
- 0 replies
- 1.4k views
-