ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
[size=2] [size=4]"நாடாளுமன்றத்தில் அரசுக்கு உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வைத்து, முடிந்தால் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாது ஒழித்துக்காட்டுங்கள்'' என்று அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சவால் விடுத்தது பொது எதிரணி. 13ஆவது திருத்தத்தை அரசமைப்பில் இருந்து நீக்க, அமைச்சர் விமல் வீரவன்ஸ உயர் நீதிமன்றத்தை நாடப் போகிறார் என்று செய்திகள் வெளியானதை அடுத்தே பொது எதிரணி இந்தச் சவாலை நேற்று விடுத்துள்ளது. "13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது உள்நாட்டு விவகாரமல்ல. அது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் தொடர்புடைய விவகாரமாகும். இது பெரும் அரசியல் பிரச்சினை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் தமக்குள் பேசித்தீர்க்க வேண்டியதொரு விடயமே தவிர, …
-
- 0 replies
- 657 views
-
-
இலங்கையில் போர் நிறைவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இராணுவ முகாம்கள் விலக்கிக்கொள்ளப்பட்ட இடங்களில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாது இராணுவம் இழுத்தடிப்புச் செய்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாந்துறை, மாவடிவேம்பு, ஈரளக்குளம் ஆகிய இடங்களிலேயே இந்நிலைதோன்றியுள்ளது. இந்த இடங்களிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டாலும் அங்கே மிதிவெடி எச்சரிக்கை அறிவிப்புக்கள் காணப்படுவதால் அக்காணிகளுக்கு போகமுடியாத நிலை உருவாகியுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் காணிகளில் காணப்படும் மிதிவெடிகளை அகற்றி தம்மை விரைவாக மீளக் குடியமர்த்தவேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணியில் இ…
-
- 0 replies
- 236 views
-
-
’முஸ்லிம்கள் மீதான பாரபட்சத்தைக் கண்டிக்கிறேன்’ முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத பாரபட்சத்தைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன், கொரொனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக கூறி, இஸ்லாமிய பெண்னொருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்காக வேதனையடைவதாகவும் தெரிவித்தார். இதுத் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மனோ, “கொரொனாவினால் மரணிக்காத, கொழும்பு முகத்துவாரத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய இலங்கை தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக ஒரு இலங்கையனாக வேதனையடைகிறேன். …
-
- 1 reply
- 916 views
-
-
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு Dec 29, 2025 - 03:03 PM மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது. இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. டித்வா புயல் நாடாளவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் மலையகத்தில் 127 பேர் பலியாகி 16 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதியில் 1,641 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 593 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நி…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியிருப்பதை ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதி…
-
- 0 replies
- 845 views
-
-
அர்ப்பணிப்பு இல்லாமல் ஒருபோதும் தமிழர் உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொத்துவில் சொந்தக் காணியில் அமைக்கப்படும் செங்காமம் ஆலயத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப் பிரதேசத்தின் றொட்டைக் கிராமத்திற்கு புதன்கிழமை(13) மாலை சென்றிருந்தார். இதன்போதே, இவ்வாறு தெரிவித்தார். இதன் போது விநாயகமூர்த்தி முரளிதரன் அங்குள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்ததுடன் அங்கு பல வருட காலமாக அக்கிராமத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் ஒன்றான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில்…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்." "இந்தி"ய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் "இந்தி"ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்த…
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=2][size=4](சுமித்தி)[/size] [size=4]நெல்லியடி பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் இராணுவத்தின் 19ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த லக்மால் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய ஒன்பது வீரர்களும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=4]http://tamil.dailymi...53172--10-.html[/size]
-
- 1 reply
- 386 views
-
-
பிள்ளையானுக்கு பிணை மறுப்பு முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21.7.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக இன்று முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். …
-
- 1 reply
- 325 views
-
-
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகம் மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக மூடப்பட்டது ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் அவசர நிலமை காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும் தூதரகத்தினை slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணையம் மூலம் அல்லது 800 119 119 என்ற தொலைபேசி இயக்கத்தின் மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும் என அறிவித்துள்ளது.இந்நிலையில் ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையிலேயே அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஐக்கிய-அரபு-…
-
- 0 replies
- 495 views
-
-
ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை 19 Jan, 2026 | 11:59 AM (இராஜதுரை ஹஷான்) 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிதி …
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலினால் சிலசமயம் இடையிடையே மின்சார விநியோகத்தினை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வான் தாக்குதலினால் சில மின்னுற்பத்தி உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளமையால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதனால், நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பை அண்டிய பிரதேசத்தில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடை மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=4]நாடாளுமன்ற உணவகத்தில் சமைக்கப்படும் கறிகளில் ஆசனிக் அமிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமைக்கப்பட்ட கறிகளில் மட்டுமின்றி காய்கறிகளிலும் ஆசனிக் அமிலம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உறுப்பினர்களுக்கான உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளில் கொஹில கிழங்கு கறி சிவப்பாக இருந்தமையால் அதில் ஆசனிக் அமிலம் கலந்திருக்கலாம் என செய்திகள் வெளியானதையடுத்து அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக சபாநாயகர் குழுவொன்றை நியமித்தார். அந்த குழுவே நாடாளுமன்ற உணவகத்திற்கு கொண்டுவரப்படும் மரக்கறிகளில் ஆசனிக் அமிலம் இருப்பதாகவும் கூடுதலான பசளைகள் பயன்படுத்தப்பட்ட மரக்கறிகளே பயன்படுத்தப்படுவதாகவும் கண்டறிந்துள்ளது. இந்த குழுவின்…
-
- 0 replies
- 423 views
-
-
சாக்கடைகளே உங்கள் அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யாதீர்கள்..! துயிலும் இல்லத்திற்குள் சுவரொட்டிகள், கிழித்தெறிந்து மக்கள் ஆவேசம்.. முல்லைத்தீவு- தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் ஒட்டப்பட்ட தேர்தல் சுவரொட்டிகளை கிழித்தெறிந்த மக்கள், சாக்கடை அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யவேண்டாம் என கூறியிருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சரவணபவன் ஆகியோரின் சுவரொட்டிகள் துயிலும் இல்லத்திற்குள் உள்ள இளைப்பாறு மண்டபத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றது. குறித்த விடயத்தை அறிந்த மக்கள் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என கூறியபோதும் அகற்றாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அவற்றை கிழித்தெறிந்துள்ளதுடன்,…
-
- 0 replies
- 516 views
-
-
30 Jan, 2026 | 04:46 PM யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பலாலி விமான நிலையம் ஊடாக அவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது. யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்! | Virakesari.lk
-
-
- 8 replies
- 581 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதியான சர்ச்சைக்குரிய போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தென்னாபிரிக்காவுக்கான இலங்கையின் உதவித் தூதுவராக ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு காரணம் பாலித கேகன்னவிற்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையேயான தொடரும் முறுகலே என தெரிவிக்கப்படுகிறது. தற்போது லெபனானுக்கு அமைதி காப்புபடை ஆலோசகராக சென்றுள்ள போர்க்குற்றவாளி சவேந்திரசில்வா , தென்னாபிரிக்காவுக்குச் செல்லாத நிலையில் மீண்டும் நியூயோர்க் திரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தென்னாபிரிக்க துணைத்துதர் பொறுப்பினை ஏற்க மறுத்து தனது முன்னைய பதவியினையே தருமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவிடம் விண்ணப்பித்துள்ளார் என அறியப்…
-
- 2 replies
- 421 views
-
-
இந்திய மீனவர்கள் இலங்கையில் மீன்பிடிக்கும் உரிமையை ஒருபோதும் வழங்க மாட்டோம் – பிரதமர் inShare பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச சட்டமூலத்தின் பிரகாரம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக ஒன்றரை மில்லியன் ரூபா முதல் 15 மில்லியன் ரூபா அபராதம் விதிப்பதற்கான இயலுமை கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார…
-
- 1 reply
- 215 views
-
-
கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம் 10 Feb, 2026 | 04:56 PM (எம்.மனோசித்ரா) கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையி…
-
- 2 replies
- 204 views
- 2 followers
-
-
சர்வதேசத்தை ஏமாற்றும் திட்டமே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு [13 நவம்பர் 2008, வியாழக்கிழமை 7:25 மு.ப இலங்கை] அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல் என்ற பெயரில் சர்வதேசத்துக்கு - குறிப்பாகத் தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு - கொழும்பு அரசு ‘பூச்சாண்டி’ காட்டி வருவதை புட்டுப் புட்டு விமர்சித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 0 replies
- 444 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சில தினங்களில் தென்கொரியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது. பொது எதிரணி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள சூழலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தென்கொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி இழந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாய்லாந்து, உகண்டா, மற…
-
- 0 replies
- 198 views
-
-
இலங்கைப் பிரச்சனை சம்பந்தமாக ஊடகவியாபாரி சோவின் கேள்வி பதில் பகுதி கேள்வி பதில் :- இரா. சாந்தகுமார், சென்னை49 கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்? ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவி…
-
- 14 replies
- 2.1k views
-
-
இழந்த இறையாண்மையை மீட்டு முன்னெடுக்கப்படும் சமரில், விதைக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூரும் வாரமிது. சென்ற வருட மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் கூறிய செய்தியொன்றை தற்போது மீட்டிப் பார்ப்பது, வருங்கால கள யதார்த்த மாற்றம் குறித்த எதிர்வு கூறலை தெளிவுபடுத்தும். ""சிங்களம் எப்போதும் எம்மைத் தவறாகவே புரிந்து கொள்கிறது. புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும், நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் ஜெயசிக்குறுச் சமரில் கற்றறிந்திருக்கலாம்'' என அவர் குறிப்பிடுகின்றார். வன்னி மேற்கினை முழுமையாக கைப்பற்றி யிருப்பதாக அரசு பரப்புரை செய்கிறது. பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி என்பன கைப்பற்றப்பட்டு,…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்.பல்கலை மோதல். தமிழ் மாணவர் மூவரை கோப்பாய் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு:- யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134198/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 314 views
-
-
சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு! Published By: Digital Desk 1 16 Mar, 2026 | 10:00 AM சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவு யாருக்கு? வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு Post Views: 55 June 20, 2020 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் காணப்பட்டவை எனக்கூறப்படும் சில அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில், மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார். பொத…
-
- 3 replies
- 662 views
-