ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கின்றன எனவும் பிரச்சனையைத் தீர்க்கவல்ல எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு சிறந்ததொரு தீர்வை வழங்காததனாலேயே 30 வருட கால கொடிய யுத்தத்திற்குத் தள்ளப்பட்டோம். கண்டி விகாரமாதேவி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “நம்மில் தவறு எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து அவற்றை சரிசெய்து முன்நோக்கப் பயணிப்பதற்கான தருணம் வந்துள்ளது. இனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை…
-
- 0 replies
- 374 views
-
-
ஆட்சியைப் பாதுகாக்கவே இனவாதத்தை தூண்டுகிறது அரசு; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசு முயற்சித்து வருகிறது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசு இனவாதத்தைத் தூண்டி வருகின்றது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை இந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் சபை, சர்வதேச நாணய நிதியம் என பல்வேறு வழிகளிலும் அரசு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. …
-
- 0 replies
- 407 views
-
-
ஆட்சியைப் பிடிக்க மகிந்த விசமத்தனம் FacebookTwitterPinterestEmailGmailViber ஆட்சியைப் பிடிக்க மகிந்தவும் அவரது அணியினரும் புதிய அரசமைப்புத் தொடர்பிலும், வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விசமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கு வலுச்சேர்ப்பது போல் எமது தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார். இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 289 views
-
-
[size=4]'இலங்கை இராணுத்தில் தமிழ், இளைஞர் யுவதிகளை இணையுமாறு அழைப்பு விடுவது படைத் தளபதிகளின் வேலையில்லை. அவர்களின் பதவி நிலைகளுக்கு அப்பாற்பட்ட வேலையை அவர்கள் செய்து வருகின்றார்கள். இவ்வாறான அழைப்புக்கு தமிழ் சமுதாயம் எடுபட்டுவிடக்கூடாது' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்பாணத்தில் உள்ள தமிழ், இளைஞர் யுவதிகளை படையில் இணைந்துகொள்ளுமாறு யாழ் கட்டளைத்தளபதி அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து சுரேஸ் பிரேமசந்திரன் எம்.பி மேலும் கூறியதாவது, 'இராணுவத்திற்கு ஆளணித் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்றால் வர்த்தமானி அறிவித்தல் மூலமே ஆட்சேர்ப்பு…
-
- 1 reply
- 648 views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் மும்முரமான பணியில் சிறிலங்காவின் முப்படையினரும் குதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆட்சேர்ப்புக்கான வயது எல்லையை 17ஆக விடுதலைப் புலிகள் வரையறை செய்துள்ளனர். தமிழர் தாயகத்தில் நடைமுறை அரசு நடைமுறையில் உள்ள போதும் தமிழர் தாயகத்தில் ஆட்சேர்ப்புக்கான அகவை 17 ஆக வரையறை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் கூடிய விடுதலைப் புலிகளின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஐ.நா பாதுகாப்பு சபையின் அலன் ரொக் சமர்ப்பித்த அறிக்கையை ஆராயந்துள்ளனர். இன்றைய கூட்டத்தின் முடிவில் வயது குறைந்த இளையோர் ஆட்சேர்ப்புக்களை நிறுத்துவதற்கும் இயக்க கட்டமைப்பில் அகவை குறைந்தோரை வெளியேற்ற அனுமதிக்கவும் கடந்த நவம்பர் மாதம் அலன் ரொக்கிடம் வழங்கப்பட்ட உறுதியை நிலைநாட்டவும் இணக்கம் காணப்பட…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஆட்டக்காரி, மொட்டைக் கறுப்பனுக்கு நிர்ணய விலை! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 125 ரூபாயினை நிர்ணயிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இரண்டு நெல்வகைகளிலும் பெறப்படும் தீட்டுப்பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 115 ரூபாய் நிர்ணயிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம், அரிசி ஆலை உரிமையாளர்கள் இணைந்து கலந்துரையாடியதன் பின்னர் இந்தக் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க இண…
-
- 6 replies
- 1.5k views
-
-
அண்மைக்காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்திருந்தால், உங்களுக்கு நிச்சயமாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதார செயல்பாடுகளானது கவலைக்குரியதாகவே இருக்கிறது. குறிப்பாக, 2015ம் ஆண்டு முதல் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி என்பதற்கு பதில் வீழ்ச்சி எனும் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரமே பொருளாதார வளர்ச்சியானது 3.8%மாக வளர்ச்சி கண்டிருக்கிறது. (இங்கு குறிப்பிடப்படும் பொருளாதார வளர்ச்சி என்பது, கடந்த ஆண்டுடன் அல்லது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுமிடத்து பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளதா? அல்லது அதே அளவு வளர்ச்சியை கொண்டுள்ளதா? என்பதையே குறிப்பிடுகிறது) …
-
- 0 replies
- 629 views
-
-
ஆட்டம் காண்கிறதா அரசாங்கம்? அமைச்சர்களுக்குள் அதிகரித்து வரும் உள்முரண்பாடுகளும், அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் அதிகரித்துள்ளதும், தற்போதைய அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதையடுத்து, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றது. ஆனால், இப்போது நடப்பது நல்லாட்சியா என்று அரசாங்கத்துக்குள் இருக்கும் அமைச்சர்களே கேள்வியெழுப்பும் அளவுக்கு, உள்முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த கூட்டு அரசாங்கம், …
-
- 0 replies
- 644 views
-
-
ஆட்டம் காண்கிறதா ராஜபக்ஸக்களின் அரசாங்கம்? April 10, 2021 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துக்கும் அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில், கடந்த 8 ஆம் திகதியன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்…
-
- 1 reply
- 525 views
-
-
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்திய கடற்படையின் கண் முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும், ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும், ஏமாற்றவும் சிங்கள அரசு நயவஞ்சகமாக கடந்த 2 ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசு தற்போது கைகோர்த்து உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கை இந்திய கூட்டு முயற்சித் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்திய கடற்படையினர் ஏற்கனவே தகவல் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் மூலம் பல வழிகளிலும் உதவி வருகிற நிலையில், இருநா…
-
- 0 replies
- 787 views
-
-
வீரகேசரி இணையம் - புறக்கோட்டை ஆட்டுப்பட்டித் தெருவில் இன்று மாலை 11 கிலோ எடை கொண்ட கிளேமோர் ஒன்றை ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் மீட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்தது
-
- 0 replies
- 902 views
-
-
Published By: VISHNU 08 FEB, 2024 | 09:53 AM ஆட்டுபட்டிதெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு இனந்தெரியாத ஒருவரால் விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் மயக்கமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (7) ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் ஜிந்துபிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நபரும், அதற்கான தகவல்களை வழங்கிய நபருக்குமே இவ்வாறு பாலில் விஷம் கலந்து வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவ…
-
- 1 reply
- 228 views
- 1 follower
-
-
இந்தியாஇலங்கை கூட்டு ரோந்து: கருணாநிதி சென்னை: இலங்கை கடற்படை, கடலில் ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபடும்போது இந்திய ராணுவத்தையும் உடன் ஈடுபடுத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து இன்று திமுக சார்பில் சென்னையில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு அமைச்சர்கள் குழு சென்று அங்குள்ள தூதரிடம் மனு கொடுத்தது. அப்போது அமைச்சர்கள் குழுவிடம் இலங்கை தூதர் பேசுகையில், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுலகம் எங்களிடம் விசாரித்தது, தகவல் …
-
- 8 replies
- 3.4k views
-
-
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக இலங்கை இராணுவம் தற்போது சோற்றிலும் கைவைத்துள்ளது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மிக வேதனையுடன் தெரிவித்தார் வடக்கிலுள்ள படைமுகாம்களது அதிகாரிகளால் தற்போது புதிதாக பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலொன்றின் பிரகாரம் அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உயர்கல்வி நிறுவனங்களினில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு படை முகாம்களிலிருந்து உணவு பரிமாறப்படுமென்பதே அதுவாகும் . ஆனால் அதற்காக அதுவொன்றும் இலவசமாக வழங்கப்படுமென்று எவரும் நம்பி விடக்கூடாது. அனைத்திற்கும் இறுதியில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து செயற்படும் 512 படைப்பிரிவு தலைமையத்திலிருந்து பற்றுச்சீட்டுக்கள் அ…
-
- 2 replies
- 2k views
-
-
அதனால் அரசாங்கத்தின் தவறான உத்தரவுகளை படையினர் பின்பற்றக் கூடாது எனக் கோருகிறது UNP அரசாங்கத்தின் தவறான உத்தரவுளை படையினர் பின்பற்றக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் தவறான உத்தரவுகளை பின்பற்றுவதனால் படைவீரர்கள் என்ற ரீதியில் நாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் நன்மதிப்பு வீழ்;ச்சியடைக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தரணி குணரட்ன வன்னிநாயக்க மீதான தாக்குதல்களை ஒர் வழமையாக சம்பவமாக அரசாங்கம் கருதக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கிரமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புப் படையினரே இந்தத் தாக்குதலை மேற…
-
- 2 replies
- 3.4k views
-
-
ஆட்டோ சாரதியின் தற்கொலையும் நோர்வேயும் [11 - October - 2006] [Font Size - A - A - A] கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வாரப்பத்திரிகையொன்றின் முன்பக்கத்தில் படத்துடன் வெளியான செய்தியொன்றை வாசித்தபோது சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைக்கு எதிராகத் தென்னிலங்கையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தீக்குளித்துத் தற்கொலை செய்கின்ற அளவுக்கு `தீவிரவாதிகளாக' மாறிவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருந்தது. இலங்கையின் தேசிய நலன்களுக்கு நோர்வே துரோகமிழைப்பதாக ஆத்திரமடைந்த ரேமண்ட் பெரெய்ரா என்ற 45 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கடந்த வியாழக்கிழமை கொழும்பு வார்ட் பிளேஸில் நோர்வே தூதரகத்துக்கு முன்பாக தனக்குத்தானே தீமூட்டித் தற்கொலை செய்ய ம…
-
- 0 replies
- 783 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் விஜயத்தின் உண்மை நோக்கமென்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளார். மணித்தியால அளவில் இந்த விஜயம் ஏன் அமைய வேண்டும். ஆட்பதி…
-
- 1 reply
- 402 views
-
-
'புளுக்குணாவையில் ஆட்லறி வைத்து அடித்தும் சிங்களவர்கள் செல்லவில்லை; இதனைவிடவும் என்னசெய்வது? ' இன அழிப்பு, நிலப் பறிப்பு இவற்றை தடுப்பதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்கிறது. புளுக்குணாவையில் ஆட்லறியை வைத்து தலைவர் அடித்தார் தானே? சிங்களவர்கள் விட்டுவிட்டுப் போனார்களா? இதனை விடவும் என்ன செய்வது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் பிரதேச கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ…
-
- 0 replies
- 937 views
-
-
ஆணழகருக்கான போட்டி : வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்பு 2015ஆம் ஆண்டுக்கான ஆணழகருக்கான போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆனந்த கல்லூரி குலரத்ன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 68ஆவது தடவையாக நடைபெறவுள்ள ஆணழகர் போட்டிகளுக்கு இம்முறை மொத்தம் 140 வீரர்கள் பங்குபற்றகின்றார்கள். வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மிஸ்டர் ஸ்ரீலங்கா என்ற பெயரில் நடத்தப்படும் ஆணழகருக்கான போட்டிகள் குறித்து உத்தியோ கப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை பொடிபில்டிங் சம்மேளனத்தின்தலைவர் கித்சிறி…
-
- 0 replies
- 925 views
-
-
Tweets https://twitter.com/francesharris0n/status/383620794250584067 Frances Harrison @francesharris0n27 Sep Reports alleging inherent sexism behind Tamil National Alliance's sidelining of woman who came 2nd in votes in #srilanka provincial election Collapse 8:54 AM - 27 Sep 13 · Details Tweet text Reply to @francesharris0n Dismiss Image will appear as a link Bhahi @sbhahi27 Sep @francesharris0n with only 4 ministers allowed in a coalition gvt, choices are limitted. However, I do agree, sexism and caste exist. Reply Retweet Favorite …
-
- 18 replies
- 1.5k views
-
-
ஆணித்தரமான, ஆனால் உறுதியான செய்தி அது - தாயகத்திலிருந்து ராசேந்திரன் முள்ளிவாய்க்கால் கரை மௌனமாகிய நாளில் இருந்து எல்லோருமே மௌனமாகி விட்டார்களோ என்று ஏங்கும் அளவுக்கு இங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இடங்களிலும் அடர்ந்த மௌனமே நிலவியது. அச்சம் தரும் மௌனம் இது. எங்களின் விடுதலைப்போர் மூச்சு இழந்து போய்விட்டதோ என்று நானும் என்னைப் போன்ற பலரும் நித்தமும் எமக்குள்ளேயே மௌனமாக கதறுவோம். வாழ்நாளில் இனி எமது இனம் எழுந்துவிட்டது என்ற செய்தியை கேட்காமலேயே மரித்துப்போய் விடுவோமோ என்று இரவுகளில் கண்ணீர் சிந்தி இருக்கிறேன். ஆனால் எல்லா இரவுகளும் ஒருநாள் விடிந்தே தீரும் என்ற நம்பிக்கை இப்போது மெதுவாக முளைவிடத்தொடங்கியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி ஜெனீவாவில் நடைபெற…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஆணின் சடலம் மீட்பு : கொலையா? தற்கொலையா? மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்று மாலை எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார், தாழ்வுமடு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அந்தோனி தாஸ் குரூஸ் என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் உள்ள காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு…
-
- 1 reply
- 576 views
-
-
ஆணை வழங்குங்கள், சிறுபான்மையாக இருந்தபோது செய்ததை விட செய்வோம்- ரணில் பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக இருந்து கொண்டு முன்னெடுத்த சீர்திருத்தங்களை பல மடங்காக்க ஆணை வழங்குங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஐந்து வருடங்களில் நடத்திய வெளிப்படையான ஆட்சியின் மூலம் செயற்படுத்தப்பட்ட சீர்திருத்த செயன்முறையை முன்கொண்டு செல்ல, ஜனாதிபதி தேர்தலிலும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு வழங்கினால் அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் சீர்த்திருத்தம் மேற்கொண்டு இலங்கையை ஆசியாவில் உயரிய இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். சிவில் சம…
-
- 2 replies
- 382 views
-
-
ஆணையாளர்களின் நியமனத்தில் மைத்திரிபால சிறிசேன தலையீடு ஆணையாளர்களின் நியமனத்தில் மைத்திரிபால சிறிசேன தலையீடு அரசமைப்புச் சபையின் முன்மொழிவை மாற்றுமாறு பணிப்பு அரசமைப்புச் சபையால், காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிப்பதற்கு 7 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில் அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார் என்று உதயன் நம்பகரமாக அறிந்தான். …
-
- 1 reply
- 155 views
-