ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
சிங்களவர்களின் வாகனங்களிலேயே கொழும்பில் வர்த்தகர்கள் கடத்தல். கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு மிகப் பெருந்தொகை பணம் அறவிடப்பட்டு வரும் சம்பவங்களின் சூத்திரதாரி பற்றி, இந்த ஆட் கடத்தல் தொடர்பாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் குழு ஒன்றின் உறுப்பினரான இவர் தொடர்பாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை கொட்டாஞ்சேனையில், புறக்கோட்டை மீன்கடை வர்த்தகரொருவரின் குடும்பத்தினரிடமிருந்து 25 இலட்சம் ரூபா பணத்தைக் கப்பமாக பெறவந்த நால்வரில் ஒருவரை, தகவலொன்றின் பேரில் பொலிஸார் துரத்திப் பிடித்து கைது செய்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இவரிடமிருந்து கொழும்ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது; - புலிகளுக்கு அதிர்ஷ்டம் சமாதானப் பேச்சுகளை நடத்துவதற்குரிய நகரமாக சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகர் தெரிந்தெடுக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆசியாவைச் சேர்ந்த நாடொன்றில் புலிகள் அமைப்புடனான சமாதானப் பேச்சுகளை நடத்தும் நிலைப்பாட்டையே ஸ்ரீலங்கா அரசு முதலில் கொண்டிருந்தது. இந்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டே சமாதான நடவடிக்கைகளுக்கான சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் சமாதானப் பேச்சுகளை பிரிட்டனிலோ ஜப்பானிலோ அல்லது நோர்வேயிலோ நடத்துவதற்குச் சம்மதித்திருந்தனர். ஆயினும், தற்போது ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு இணங்கியிருப்பது புலிகள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் "துணிச்சல் நிறைந்த பெண்களுக்கான' விருதை வென்றெடுத்தார் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் [27 - March - 2009] பிராந்தியத்தில் அசாதாரணமான முறையில் துணிவையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியதற்காக இலங்கைத் தமிழ் நீதிபதி ஒருவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடமிருந்து "துணிச்சலான பெண்களுக்கான' விருதை வென்றெடுத்திருக்கிறார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் (ஹிலாரி கிளின்டன்) துணிச்சலான பெண்களுக்கான விருதை தெற்காசிய பிராந்தியத்திலிருந்து நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் இதற்கான அங்கீகாரத்தை வழங்கிவயுள்ளார். உலகின் பலநாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரக…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ஏ9 சாலையோரம் உட்பட முருகண்டிப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 5000 வீடுகளில் வருகின்ற ஓகஸ்ட் மாதத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன. இதுவரைக்கும் ஸ்கந்தபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதாக அழைத்துச் சென்றுள்ள அரசு, அவர்களை ஒரு பாடசாலைக் கட்டடத்தில் தற்காலிகமாக இருத்தியுள்ளது. சர்வதேச நிதியிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்காக வாங்கப்பட்ட வீடுகளின் பகுதிகள் கனரக வாகனங்களில் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, இராணுவக் குடியேற்றத்துக்காக அவை வீடுகளாக்கப்பட்டு வருவதாக அரசு சாரா நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி பகுதியில் 12,000 வீடுகளைக் கட்டி அங்கு இராண…
-
- 1 reply
- 1.4k views
-
-
13ம் திருத்தச் சட்டத்தை விடவும் வலுவாலன ஓர் அதிகாரப் பகிர்வு முறைமை அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமைய வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் இலங்கை தமிழர் விவகாரத்தில் காண்பித்து வரும் கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் பொருத்தமற்றது என்பதனை மோடி புரிந்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மாதிரியில் இலங்கையில் அதிகாரப் பகிர்வில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் வட மாகாணச…
-
- 33 replies
- 1.4k views
-
-
கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் நல்லதொரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாக விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணித் தலைவர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19430
-
- 11 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/videoclips/video/310/Karunai-manu
-
- 3 replies
- 1.4k views
-
-
நான் மறத்தமிழன் ஆறுமுகன் தொண்டமான் மண்ணாங்கட்டித் தமிழன் - மனோ கணேசன் ஆவேசம் இலங்கையிலே இன்று ஒன்றிற்கு மேற்பட்ட ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ்வை அடுத்து விமல் வீரவன்ச இரண்டாவது ஜனாதிபதி. சம்பிக்க ரணவக்க மூன்றாவது ஜனாதிபதி. மஹிந்தவின் கருத்து என்று சொல்லி, ஜெனீவா சென்று கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை நிறைவேற்றுவோம் என வெளிநாட்டில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தது அரசாங்க தூதுக்குழு. இன்று உள்நாட்டில் பார்த்தால் கதையே வேறு. இங்கே இன்று இரண்டாவது, மூன்றாவது ஜனாதிபதிகள் கற்றுக்கொண்ட ஆணைக்குழுவையே தூக்கி எறிந்துவிட்டார்கள். கண்டியில் நடைபெற்ற எதிரணி போராட்ட கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். கண…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சின்னாபின்னமான தமிழ் குடும்பத்தின் கதை வீரகேசரி இணையம் 12/17/2008 9:57:21 AM - கிளிநோச்சி மாவட்டம் கல்லாறு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில், 28 வயதான நெல்லையா புஷ்பவள்ளின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவரது தந்தை குண்டு வீச்சில் இறந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான புஷ்பவள்ளியின் கருப்பையில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது. இவரின் தாய் ஒரு கையை இழந்தார். மேலும் இவரின் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இவரின் இரண்டாவது மகனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழுவயதான மதியழகன் தனது வயற்றுக்கு கீழுள்ள பகுதிகளில் உணர்ச்சியை இழந்துள்ளார்.…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு தொகுதி [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:46 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ள அந்நாட்டு பாதுகாப்பு படைத்தொகுதி ஒன்று ஏற்கனவே சிறிலங்காவுக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் இன்னும் ஒரு தொகுதி வரவுள்ளதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இந்திய தலைவர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, அவருக்கு அளிக்கப்படும் வழமையான பாதுகாப்பை விட, சிறிது அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கொழும்பு வரவுள்ள பிரதமர் மன்மோகனுக்கு அளிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது கொழும்பு வந…
-
- 10 replies
- 1.4k views
-
-
"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.'' இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப். "இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமை களையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்ற…
-
- 14 replies
- 1.4k views
-
-
மகிந்த அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து ரணில் - மங்கள ஆலோசனை. மகிந்த அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவான சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீரவும் இன்று வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். ரணிலின் அலுவலகத்தில் சுமார் 1 மணிநேரம் நடந்த இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பில் திஸ்ஸ அத்தநாயக்க, கருணாநாயக்க, ருக்மன் சேனநாயக்க மற்றும் ஜோசப் மைக்கல் பெரெரா ஆகியோரும் மங்கள சமரவீர தரப்பில் சிறீபதி சூரியராச்சி மற்றும் ரிரான் அலெஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் தனது க…
-
- 2 replies
- 1.4k views
-
-
-விஜயன்- 'கொழும்பட்ட கிரி அப்பிட்ட கெக் கரி" (கொழும்பில் உள்ளவர்களுக்குப் பால் கொடுத்து ஓய்ந்துபோன வெற்று முலைகள் - வெறும் கெக்கரிக்காய் போன்ற - தான் எங்களுக்குக் கிடைக்கிறது. இது சிங்களக் கிராமங்களில் கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் பற்றிக் கூறப்படுகின்ற பிரதானமான ஒரு பழமொழி. சிங்கள ஆட்சியாளர் குழாம் ஆங்கிலம் கற்று, வெள்ளைக்காரருடன் சேர்ந்து நலன்களை அனுபவித்துக் கொண்டு சாதாரண சிங்கள மக்களை நசுக்க முற்பட்டதன் உள்ளடக்கமே அது. கிராமத்துச் சிங்கள மக்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும், அரசியல் அரங்கிலும் ஓரம்கட்டப்பட்டு வாழுகின்றனர். இன்றைய நிலையிற்கூட ஆங்கிலம் கற்ற சிங்கள வரை கிராமத்தவர் 'கடுவ" (வாள்) என்றே குறிப்பிடுவதைக் காணலாம். பல்கலைக்கழகங்களிற்கூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2007 நிகழ்வின் ஆரம்ப நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா வென்று ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும், அனைத்துலக ரீதியில் செயற்பட்டுவந்த விடுதலைப் புலிகளின் நிதிதிரட்டல் கட்டமைப்புக்கள் எந்தவித பாதிப்புக்களுமின்றிச் செயற்பட்டு வருகிறன என அமெரிக்கா இன்னமும் சந்தேகிக்கிக்கிறது. எவ்வாறிருப்பினும், விடுதலைப் புலிகளமைப்பின் ஆயுதக் கொள்வனவுக் கட்டமைப்புக்குப் பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் வெளிநாட்டு வலையமைப்பு பாரிய பின்னடைவினைச் சந்தித்திருந்தது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிடுகிறது. "சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அதனது அனைத்துலக நிதிதிரட்டல் வலையமைப்பு பாதிப்புக்கள் எதுவும…
-
- 2 replies
- 1.4k views
-
-
இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் 25 மார்ச் 2014 Bookmark and Shareஐநாவின் இறுதி வரைபு வெளியானது:- இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வெளியானது! (வரைபு இணைப்பு)March 25, 2014 08:13 amBookmark and Share ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள இறுதியான தீர்மான வரைபு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவாக சுதந்திரமான விச…
-
- 18 replies
- 1.4k views
-
-
யாழ்.ஆஸ்பத்திரிக்கு இதய இயக்கிகள் உட்பட ரூ.60 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு அன்பளிப்பு யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 60 இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர இருதய இயக்கி மற்றும் உபகரணங்கள் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான சுகாதார அமைப்பு அவற்றை வழங்கியுள்ளது. இதன்மூலம் இருதய நோயாளிகள் பயனடைவர் என்று போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் பூ.லக்ஷ்மன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்தச் சத்திர சிகிச்…
-
- 10 replies
- 1.4k views
-
-
சிறிலங்காப் படையினரின் புதிய போர் முனையாகும் வவுனியா. வவுனியா மாவட்டத்தின் மாமடுப் பகுதிக்கு சிறிலங்காப் படையினரால் பெருமளவில் படைக்கலங்கள் நகர்த்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாகவே சிறிலங்காப் படையினர், வவுனியாவில் போர்முனை ஒன்றை திறக்க உள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஏ-9 வீதிக்கு கிழக்காக உள்ள சிங்களக் குடியேற்றப் பகுதியான மாமடுப் பகுதியில் கடந்த சில நாட்களாக படையினர் படைக்கலங்களை நகர்த்திக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கி
-
- 1 reply
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் பலன் தந்ததா? - ஓர் அலசல் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு காட்சி இலங்கையில் போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு மேற்குலக நாடுகளில் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து இலங்கை இனப்பிரச்சினை குறித்து அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் மாநில சட்டப்பேரவையில் 1979ல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டவரும், தற்போது அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிப்பவருமான தில்லையம்பலம் ஸ்ரீதரன் கருத்துவெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவான கருத்தை மேற்குலக அரசாங்கங்கள் தெரிவித்திருக்கவில்லை என்று …
-
- 8 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு பலம் சேர்க்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் தொடர்ந்தும் நட்பினை பேணவே விருப்பம் கொள்வதாக இலங்கையின் மூத்த அமைச்சர் ரிஸாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். அண்மைக்கால வரலாற்றில் ஒரே இலக்கை கொண்டு இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு உதவ நட்பு நாடுகள் இருக்கின்றன என நேற்றைய தொழுகையின் பின்னதாக செய்தியாளர் சந்திப் பொன்றில் அமைச்சர் தெரிவித்தார். இலங்கையைச் சுற்றி சபீட்சத்தை ஏற்படுத்த சிறப்பு பிராத்தனைகள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வெற்றி கொண்ட வீரர்களை அ…
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
நாடு கடத்தப்பட்டால் ஆபத்து:இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் மீள புகலிடம் [Wednesday, 2011-03-23 06:24:53] அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு மீள புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் குறித்த நபர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. விமானம் அல்லது படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஒரே விதமான சட்டங்களே அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
படுதோல்வி கண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாAUG 19, 2015 | 3:29by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் படுதோல்வி கண்டுள்ளது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி. 2010ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவிபியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி, 7 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகளையே பெற்று தோல்வியுடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா படுதோல்வியடைந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். இம்முறை கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக கட்சிக்கு 5,238 வாக்குகளே கிடைத…
-
- 5 replies
- 1.4k views
-
-
உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவினரை வரவேற்க பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது. நேற்று லண்டனைச் சென்றடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு அங்குள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டுமே வரவேற்பு அளித்தனர். பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட வரவேற்பில் பங்கேற்கவில்லை. சிறிலங்கா தூதரக ஏற்பாட்டில் இரு சிறுவர்கள் மகிந்த ராஜபக்ஷவையும் சிராந்தி ராஜபக்சவையும் மாலை அணிவித்தும் பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த பயணம் இடம்பெற்றதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. எனினும் அது பொய்ப் பிரச்சாரம் என தற்போது …
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.! ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்க…
-
- 6 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான வேட்பாளரான மிலிந்த மொறகொடவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச ஒக்ரோபர் 03 அன்று கொம்பனித் தெருவிற்கு வருகை தந்தமை தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் தான் முறைப்பாடு செய்துள்ளதாக ‘ராவய’ பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான லசந்த றுகுனேஜ் [Lasantha Ruhunage], பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேசியாவிடம் தெரிவித்துள்ளார். “மிலிந்த மொறகொட வெற்றியீட்டுவதற்கேற்ப மக்கள் தமது வாக்குகளை வழங்கவேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக் கொண்ட…
-
- 0 replies
- 1.4k views
-