ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
இரட்டைக் கோபுரத்தை தகர்த்ததற்காக ஒசாமா கொல்லப்பட்டார் ஈழத் தமிழரை கொன்றதற்காத ராஜீவ் கொலை செய்யப்பட்டார் இதில் என்ன தவறென்கிறார் - சீமான் சனி, 21 மே, 2011 வேலூர்: அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை தகர்த்த ஒசாமாவை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கா கொன்றது சரியானால் ஈழத்திலே 12,500 தமிழர்களை படுகொலை செய்த ராஜீவை கொன்றதில் என்ன தவறென நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடத்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும் இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்த்ததாம் ஆடு. இன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறவைக்கு. இந்தப் பழமொழிதான் நன்கு பொருந்தும்.‘பேசித் தீருங்கள், பேசித் தீருங்கள்' என்று இன்னும் கீறல் விழுந்த ஒலித்தட்டுபோல் புலம்பிக் கொண்டிருக்கும் உலக நாடுகள் முதலில் சிறீலங்காவிடம் சென்று கேட்கட்டும், தமிழர்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று. தமிழர்களுக்கு சாவையும் அழிவையும்தான் தருவோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். உலகின் எந்த நாடும் தனது நாட்டு மக்கள் மீதே வான் வழியான தாக்குதலை நடத்தியது கிடையாது. ஏன் அருகிலுள்ள இந்தியா கூட இலங்கையில் தமிழர்கள் மீதும், பாகிஸ்தானுடனான போரின் போது மட்டுமே விமானத் …
-
- 2 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்புக்கு வந்த சோதனை? நிலாந்தன் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும் தற்பொழுது சமூகத்தின் ஏனைய மட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. அண்மைய ஆண்டுகளில் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கூட்டமைப்புக்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரித்து வந்தன. இப்பொழுது அந்த அதிருப்தியானது மெய்நிகர் யதார்த்த பரப்பையும் தாண்டி ஒரு பௌதீக யதார்த்தமாக பரவிவருகிறது. யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் சிலவற்றின் ஆசிரியர் தலையங்கங்களும் அதைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறா…
-
- 18 replies
- 1.4k views
-
-
கோகுலவதனன், வவுனியா 01/12/2009, 03:33 இரவு நேரங்களில் வீடுகளில் உணவு இருக்கக்கூடாது! படையினர் எச்சரிக்கை! உணவுகளை அளவோடு சமைக்குமாறும், இரவு நேரங்களில் வீடுகளில் உணவு மிச்சமாகக் இருக்கக்கூடாது எனவும் சிறீலங்காப் படையினர் எச்சரித்து வருகின்றனர். அண்மையில் மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் முழங்காவில் மற்றும் துணுக்காய்ப் பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களிடமே படையினர் இந்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அடிக்கடி மக்களில் வீடுகளுக்குச் சென்று படையினர் இக்கருத்தினைத் தெரிவித்து வருவதுடன், புதிதாக யாராவது நடமாடுகிறார்களா என விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர். pathivu
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6358eb576b8912c
-
- 0 replies
- 1.4k views
-
-
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அந்தக் கூட்டணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்குகின்றோம். எமது கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எமது கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும் என்றார். https://www.virakesari.lk/article/77221
-
- 6 replies
- 1.4k views
-
-
தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட எதிர் கட்சியினர் தமது களைப்பைத் தீர்த்துக் கொள்ள ஒரு உல்லாச விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டே தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டாடலாம் என ஒன்று கூடினர். அவர்கள் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர்களை இலங்கை இராணுவம் சூழ்ந்து கொண்டது. அமெரிக்கத் தலையீட்டால் முதலில் ரணில் விக்கிரமசிங்க விடுவிக்கப் பட்டார். குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் படைத்துறைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்ந்தும் அங்கு "இராணுவ முற்றுகைக்கு உட்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தார். நாட்டை "பயங்கரவாதிகளிடம்" இருந்து பாதுகாத்தவர் தன் பாதுகாப்பிற்காக கவலைப்படும் நிலை. சட்டரீதியாக தனக்கு பாதுகாப…
-
- 4 replies
- 1.4k views
-
-
சமரச முயற்சிகள் தோல்வி, சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு ஓரிருமாதகால அவகாசத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு விமானப்படை தளபதியும் கோரிய போதிலும் அத்தோடு மக்கள் பிரதிநிதிகள் பலரும் சமரச முயற்சிகளிலில் ஈடுபட்ட போதிலும் அதை எவற்றையும் ஏற்றுக்கொள்ளாத கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை முகாமின் இரண்டாவது பிரதான வாயில் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். தமது காணிகளை தம்மிடம் மீள வழங்குமாற…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு! [sunday, 2012-12-30 10:20:57] 'நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் � முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா? � என்ற தலைப்பில் நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசினார். அவர், "முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின் உலகெங்கும் தன்னெழுச்சியாக தமிழர்கள் நூற்றுக் கணக்கான அறவழிப் போர் முனைகளை திறந்துள்ளனர். இந்தப் புதிய போர் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உலக அளவில் புதிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக மேற்கத்திய…
-
- 11 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசு மீதும் ஆவேசப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், திருமாவளவனின் உடல்நிலை கருதி அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவனின் நலம் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். அவர்கள் அவர் மீது அவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் ஈழத்தில் இருந்து தலைவர்கள் வருவார்கள். அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்துவார்கள். திருமாவளவன் அவர்களது அந்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
படையினர் மீதான தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் ஹொரணையில் சூளுரை. [saturday October 14 2006 08:32:40 AM GMT] [virakesari.lk] இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் விடுதலைப்புலிகள் படையினர்மீது கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்க படையினர் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் இல்லையேல் தரை மற்றும் வான் வழிகளில் தாக்குதல்களை நடத்துவோம் என்று பிரதமர் ரட்ண சிறிவிக்கிரமநாயக்க தெரிவித்தார் . பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து தாய் நாட்டை காப்பாற்ற வேண்டிய காலம் கனிந்து விட்டது என்பதனால் தேசத்தை பாதுகாப்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
தாக்குதல்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: புலிகளுக்கு சிறிலங்கா பதில். கொழும்பு உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: கிழக்கில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா உச்ச நீதிமன்றத்துக்கு மகிந்த ராஜபக்ச தெரியப்படுத்தி அதன் கருத்தை கேட்டறிய உள்ளார். எதிர்வரும் வாரம் சிறிலங்கா நாடாளுமன்றில் கிழக்குத் தேர்தல்கள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும். புதிய வேட்புமனுக்கள் விரைவில் கோரப்படும். தேர்தலை நடத்துவது தேர்தல…
-
- 0 replies
- 1.4k views
-
-
கனடாவில் ஸ்கார்பரோ தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழருமான ராதிகா சிற்சபேசனுக்கும் கனடாவிற்கான இலங்கை அதிகாரி கரு பரணவிதாரனவிற்கும் இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபசேன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தரப்பினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய கனேடிய நாடாளுமன்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை அமைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். இந்தக் கருத்தே இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
மிகஅவசரமான எதிர்ப்புமனு http://www.gopetition.com/online/8663.html More informaion about humanrights repport and Photos http://nesohr.org/human-rights-reports/ http://www.tchr.net http://tamilink.org.uk/tl/ http://www.tamilcanadian.com/eelam/hrights/ http://www.tamilnation.org/humanrights.htm
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெறவுள்ள விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோக…
-
- 5 replies
- 1.4k views
-
-
"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்கவேண்டும். இது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம். இதுதான் எமக்கு இறுதியாக எஞ்சியுள்ள ஒரே வழி. எமது சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு. இறந்த பின்னர் எமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கின்றோம்.'' - இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்தனர் என்று அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சோக பூமியில் துரோக அரசியல்: சீன அடிமை Vs அமெரிக்க பொம்மை! போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்’ என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா… ஃபொன்சேகாவின் ராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாகமுடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ஃபொன்சேகாவைத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒருகாலத்தில் தமிழீழத்தில் சிவ தலங்களில் தேவாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும். திருவிழாக் காலங்களில் இசை நிகழ்ச்சி & பரத நாட்டியம் & காவடி ஆட்டம் & கும்மி & கரகம் நடக்கும். மங்கல இசைக் கருவி நாகசுரம் இசைக்கும் & தவில் முழங்கும். அம்மன் கோயில்களில் உடுக்கை இசை எழும். பண்டைத் தமிழிசைக் கரு வியான பறை ஒலிக்கும். நாட்டுக் கூத்து விடிய விடிய நடக்கும். தேர்த் திருவிழாவில் அழகிய சிற்பத்தேர் தெரு உலா வரும். இன்று... சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு தமிழர்களின் இந்த சிவத் தலங்களும் தப்பவில்லை. இலங்கைத் தீவில் கி.மு.1000இல் ஐம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன என்பது வரலாறு. திருக்கோணமலை கோணேசுவரமும் - மன்னார் திருக்கேதீசுவரமும் - கீரிமலை நகுலேசுவரமும் - ச…
-
- 7 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண பெண்கள் தைரியமானவர்கள் என்பது உலகறிந்த உண்மை என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் மூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பால்நிலை சமத்துவ கருத்தரங்கில் உரையாற்றிய அவர்,நவீன உலகில் பெண்களின் நிலை மிகவும் உயர்ந்திருக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் அவர்களின் முன்னேற்றங்களை ஆணாதிக்க சமுதாயம் இன்னும் அவர்களது வளர்ச்சியை சரியான முறையில் அங்கீகரிக்க தயாரில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எந்த சமுதாயத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வடமாகாணத்தில் 30வருடங்களாக எந்த வன்முறைகளும் நடைபெறவில்லை. பெண்கள் அனைத்திலும் சுயமாக செயற்பட்டார்கள் என்று பெருமையாகக் கூறும் சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது? இதற்கு காரணம் என்ன? ஊடகங்களும்…
-
- 14 replies
- 1.4k views
-
-
தமிழ் ஈழத்தின் களம் இன்னும் அழிந்துவிடவில்லை என்று வைகோ பேசினார்.திருவெறும்பூர் அருகேயுள்ள நாவல்பட்டில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,ஈழ தமிழர்கள் படும் இன்னல்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து போராடியவர்கள் நாங்கள்.நடித்து வென்றவர்கள் வேறு சிலர்.இதனால் தமிழ் ஈழத்தின் களம் என்பது இன்னும் அழிந்துவிடவில்லை. மீண்டும் பிரபாகரன் நம் முன் தோன்றுவார். களத்தை வழி நடத்தி செல்வார். அந்த நேரத்தில் முன்பு இருந்ததை விட லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீபம் இன்னும் அழிந்து விடவில்லை.அந்த தீபத்தை ஏந்திக்கொண்டு உலகம் எங்கும் உள்ள பல லட்சம் தமிழர்கள் மீண்டும் ஒரு களத்தை காண தயாராக இருக்கிறார்கள். களங்க…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கை யுத்தத்தின் போதான தனது பாத்திரத்தை மீளாய்வு செய்ய ஆரம்பித்தது ஐ.நா. இலங்கை யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் தான் வகித்த பாத்திரம் குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் தருஸ்மன் அறிக்கை என அழைக்கப்படும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசுக்கிணங்க இம்மீளாய்வு இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நம்பகமான வட்டாரங்கள் மூலம் தனக்கு இத்தகவல் தெரியவந்ததாக ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம், தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைறேறப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கிணங்க, அடுத்த வருடம…
-
- 6 replies
- 1.4k views
-
-
உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பைலட் திட்டத்திற்கு அமைவாக க…
-
- 8 replies
- 1.4k views
-
-
செங்கலடியில் முன்னால் போராளி தூக்கிட்டு தற்கொலை செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரால் செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பிரேதபரிசோதனை செய்யப்படாமையினால் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19810
-
- 16 replies
- 1.4k views
-
-
19.01.09 GTV இன் தாயக செய்திகள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 1.4k views
-
-
யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்": ரொய்ட்டர்ஸ் [புதன்கிழமை, 11 சனவரி 2006, 16:33 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்கினால் யாழ்ப்பாணம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கூறுகிறது. ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்தின் ஊடகவியாலாளர் பீற்றர் ஆப்ஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை: இலங்கையின் இரு தசாப்த கால யுத்தம் மீண்டும் கொழுந்து விட்டெரிந்தால் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இராணுவ விநியோகப் பாதைகள் மீது கொரில்லாத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தின் மையமான பகுதிய…
-
- 0 replies
- 1.4k views
-