ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை ஞானவைரவர் ஆலய காணிப் பறிப்பிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்த காணி தென்னிலங்கை வர்த்தகர் ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைகாக ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வழங்கப்பட்டு அவரினால் குறித்த காணியில் அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (06) கிளிநொச்சி நீதிமன்றம் குறித்த காணியில் மேந்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மேற்படி காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் சட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம், கனடா டொரண்டோ பெரும்பாகத்தில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஆக 29,435 தானாம்! தமிழர் புள்ளிவிபரம் பற்றிய உண்மை எனும் தலைப்பில் டொரண்டோ ஸ்டார் பத்திரிகையில் ஓர் பதிவு எழுதப்பட்டு உள்ளது. இங்கு கனடா புள்ளிவிபர திணைக்கள புள்ளிவிபரம் ஆதாரமாக காட்டப்பட்டு உள்ளது. டொரண்டோ ஸ்டார் பத்திரிகை 200,000 தமிழர்கள் டொரண்டோ பெரும்பாகத்தில் வாழ்கின்றார்கள் என்று வழமையாக கூறிவருவதை கிண்டல் செய்து இப்படி ஓர் பதிவு இடப்பட்டு உள்ளது. கனடா புள்ளிவிபர திணைக்களம் எப்படி சனத்தொகை கணக்கு எடுக்கின்றது, அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்று பார்த்தால் பலவிதமான பிரச்சனைகள் இருக்கின்றது. எனினும், கனேடிய புள்ளிவிபரத் திணைக்கள ஆதாரத்தின் அடிப்படையில் நம்மவரை நலினப்படுத்த எடுக்கும் முயற்சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
Nov 21, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிலை கொள்ளும் - காசி ஆனந்தன் இனிய தமிழீழ நெஞ்சங்களே கனடாவில் மொன்றியலில் தமிழீழ மாவீரர்களின் பெற்றோர்களை போற்றும் மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்குத் தெரியும் தமிழீழ விடுதலைக் களத்தின் தலை நிமிர்ந்த மாவீரர்கள் உலக விடுதலையாளர்களின் வரலாற்றிலேயே தன்னிகர் அற்றவர்கள் கழுத்தில் நஞ்சுகட்டிய ஒரே ஒரு விடுதலைப் படையாய் களத்தில் நின்று உலக வரலாறு படைத்தவர்கள் தமிழீழ நிலத்தில் விளைந்த புலிகள் அஞ்சுதலும் கெஞ்சுதலும் அறியாராய் நெஞ்சுரம் கொண்டு விஞ்சமர் கண்ட விடுதலையாளர்கள் ஈடினை அற்ற அந்த விடுதலையாளர்களை போற்றும் இவ் வேளையில் அவர்களை ஈன்று தமிழீழ ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
வால் பிடிக்கும் அடிமைக்கு அல்ல வாளெடுக்கும் வீரனுக்கே வரலாறு - சு.ஞாலவன் - ஆபிரிக்காவின் மேற்குக்கரையில் அமைந்திருப்பது தான் செனேகல். இலங்கைத்தீவின் 3 மடங்கு பரப்பளவைக் கொண்டிருந்தபோதிலும் வெறும் 10 மில்லியன் மக்களையே சனத்தொகையாகக் கொண்டது இத்தேசம். இங்குதான் யோறே hபா வாழ்கிறார். 88 வயதைத் தாண்டிய அவரிடம் 'வரலாறு" பதிந்துகொள்ளாத உண்மைகள் பல உள்ளன. வரலாறு பதிந்துகொள்ளவில்லையா? ஏன் இல்லை? என்று எவராவது கேட்கலாம். வெற்றியீட்டுபவர்களால் ஒருதலைப்பட்சமாக எழுதப்படுவதே ~வரலாறு| என்பது கசப்பான உலக யதார்த்தம். சரி இந்த யோறோபாவிடம் அப்படி என்ன வரலாற்று உண்மை பெரிதாக இருந்துவிடப்போகிறதென நீங்கள் அலட்சியமாகக் கேட்கக்கூடும். 1940 இல் அவருடைய ஊரான கியூஜிப…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் அதன் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமையையிட்டு போருக்கு எதிரான தேசிய முன்னணி (NAWF) தனது கவலையை வெளியிட்டுள்ளது. விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்ச் செல்வன் விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக சமாதானப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்ட முதன்மைப் பேச்சாளர் என்பதையும், மோதலுக்கு சமரசத் தீர்வு காணவேண்டும் என்பதில் நாட்டம் கொண்ட நபர் என்பதையும் நாம் மறக்க முடியாது. இதனடிப்படையில் ஒட்டு மொத்தத்தில் சமாதான முன்னெடுப்புகளுக்கு விழும் ஒரு அடியாகவே இச்சம்பவத்தை நாம் கருதுகிறோம். …
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - இளைஞர் என்றால் புலி ஈழத் தமிழ் பேசினால் புலி எனக்கு புலிகளுடன் தொடர்பில்லை என்று கூறுபவர்களும் புலிதான் என மத்திய அரசு கூறுகிறது. நான் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசி என்னை துரோகி என்று, பொறுப்பற்ற கொள்கையற்ற சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்களுக்காக எனது கொள்கைகளிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து சென்னையில் நேற்றுமுன்தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு ஏமலும் தெரிவித்ததாவது : மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வடக்கு கிழக்கில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் பெருக்கெடுத்து யாழ்ப்பாணம் உடபட வடக்கில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசியதுடன் குளிரான காலநிலை நிலவியதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் நேற்றுக்காலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது. இதனால், முல்லைத்தீவின் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாடிகள், வலைகள் மற்றும் படகுகள் என்பன கடல் அலையினால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முல்லைத்தீவு கள்ளப்பாடு, தீர்த்தக்கரை வரையான கட…
-
- 4 replies
- 1.3k views
-
-
சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தியாவின் சுற்றுச்சூழல் அக்கறையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இலங்கையில் அத்திட்டம் பற்றிய கவலைக்கான காரணங்கள் பல. எனினும், ஒரு தமிழ் இடதுசாரிப் பத்திரிகையில் மட்டுமே அது பற்றிய சமூக அக்கறை மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டது. சில ஆங்கில ஏடுகளிலும் சூழலியல் பற்றிய அக்கறையுள்ள சிலர் ஒரு சில கட்டுரைகளை எழுதியிருந்தனர். கடற்படையினரின் தலைமைப்பீடத்தில் இலங்கையின் இறைமைக்கு இக் கால்வாய் ஒரு மிரட்டலாக அமையும் என்ற கவலையைத் தெரிவித்திருந்தாலும், அது பற்றிப் போதிய அழுத்தம் இல்லாததாலோ என்னவோ, இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் காத்திரமான எதிர்ப்பு எதையுமே தெரிவிக்கவில்லை. கண்துடைப்பாக இங்கே, இலங்கை…
-
- 1 reply
- 1.3k views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்!!! - பாண்டியன் - Saturday, 15 April 2006 13:35 வவுனியா மாவட்டம், மூன்று முறிப்புப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சென்ற வாகனத் தொடரணி கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இன்று நண்பகல் 12.25 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில்... http://www.sankathi.com/index.php?option=c...=2580&Itemid=26
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழ் ஈழமும், மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - I மாவீரன் நெப்போலியனிடம், பிரஞ்சுப்படையில் இருக்கும் வீரர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் என்னைச் சேர்க்காமல் 50,000 பேர் என்பானாம். உங்களையும் சேர்த்தால் 50,001 அப்படித்தானே என்றால் இல்லை, 1,50,000. அந்த இலக்கம் 1ஐ முதலில் சேர்க்க வேண்டும் என்பானாம். பிரெஞ்சுக்காரர்களைக் கேட்டால் இந்த வார்த்தைக்கு அவன் மிகவும் பொருத்தமானவன் என்பார்கள்! ஏனெனில் அவனை மாவீரன் என்று உலகுக்குப் பறை சாற்றிய துலோன் யுத்தம் (டிசம்பர், 1793), ஒரு தளபதியாக அவன் நடத்திய கன்னிப்போர்! யுத்தத்தை நடத்திய தளபதி போர்க்களத்தில் காயமடையவே, பதிலுக்கு தளபதியாக நியமிக்கப் பட்ட நெப்போலியன், யுத்தகளத்தில் தோற்று ஓடிய சொற்ப வீரர்களை ஒரு குன்றின் மீது ஒன்று …
-
- 5 replies
- 1.3k views
-
-
மிதிவெடி வெடிப்பு ; ஒருவர் பலி, ஒருவர் காயம் மாங்குளம் பகுதியில் மிதி வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடையவர் ஆவார். அத்துடன் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதி வெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிந்தே போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/39645
-
- 2 replies
- 1.3k views
-
-
"சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: "உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் …
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல் விசாரணைகளை கண்காணித்த சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவில் பிளவு Wednesday, 30 April 2008 இலங்கையில் இடம்பெற்ற கடும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜனாதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்தியாவின் முன்னாள் நீதியரசர் என் கே பகவதி, இலங்கை ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பிய கடிதமே இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த குழு முழுமையாக முறிந்துள்ளதையும் அது காட்டுவதாக ஐ ஏ என் எஸ் செய்திசேவை தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 31 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறிய சர…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 17-02-2008 16:05 மணி தமிழீழம் [தாயகன்] கொழும்பில் மூன்று தமிழர்கள் கடத்தல் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மூன்று தமிழர்கள் இனம் தெரியத நபர்களால் கைது செய்யப்பட்டிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. தெஹிவளையில் இருவரும், கிறான்பாஸ் பகுதியில் மற்றொருவருமாக நேற்றிரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கு சிறீலங்கா காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.3k views
-
-
மண்டைதீவில் இராணுவத் தாக்குதல் தளத்தை "ஈருடகப் படையணிகள்" அழித்தன: இ.இளந்திரையன் [ஞாயிற்றுக்கிழமை, 13 ஓகஸ்ட் 2006, 19:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். மண்டைதீவில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல் தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் "ஈருடகப் படையணிகள்" (கடலில் சென்று தாக்கித் திரும்பும் அணி) தாக்கியழித்தன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைக்கான ஏவுதளமாக மண்டைதீவு தயார்படுத்தப்பட்டது. இதையடுத்து விடுதலைப் புலிகளின் "ஈருடகப் படையணிகள்" அதனை சென்று தாக்கி-கைப்பற்றி-அழித்து தளத்துக்கு திரும்பியுள்ளன. …
-
- 1 reply
- 1.3k views
-
-
கிளிநொச்சிக் கனவில் தடுமாறும் அரசு - இதயச்சந்திரன். கிளிநொச்சி கனவில் தடுமாறும் அரசு - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 16:56 மணி தமிழீழம் [] வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்டு தடைசெய்யப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டு விட்டன.83இலும் 98 இலும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87இல், 2002 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கேட்பதற்கு உரிமை இருக்கிறது - பிரித்தானியா நிதிமன்றம் தீர்ப்பு Terrorist members can claim asylum in Britain Members of a banned terrorist organisation can claim asylum in Britain, the Supreme Court has ruled. By Duncan Gardham, Security Correspondent Published: 3:50PM GMT 17 Mar 2010 The court ruled that being a member of the Tamil Tigers, which has been designated as a terrorist organisation by the government, should not prevent an individual claiming asylum. Their ruling was made in the case of “R” who joined the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 1992, at the age of 10. …
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.3k views
-
-
கருணா குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! 7 பேர் படுகாயம். மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிக்குட்பட் செங்கலடி கறுத்தபால இராணுவ முகாமிற்கு அருகில் கருணா குழுவினர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் வெள்ளை சிற்றுந்துக் கடத்தலில் கொல்லப்பட்ட புளொட் நிதியின் சகோதரர்கள் மட்டக்களப்பில் வெள்ளைச் சிற்றுந்துக் கடத்தலில் கொல்லப்பட்ட புளொட் நிதியின் சகோதரர்கள் ஈடுபட்டு வருவதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட புளொட் மோகனுடன் இணைந்து செயற்பட்ட புளொட் நிதியின் இரு சசோதரர்கள் ஆட்கடத்தல், கப்பம் அறிவிடுதல் மற்றும் படுகொலைகளுடன் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரத்தில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம் ஒன்றில் சிறீலங்காப் படையினரின் பாதுகாப்பில் தங்கியிருக்கும் இவர்கள் வெள்ளைச் சிற்றுந்தில் ஆட்களைக் கடத்திப் படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 2001ம் ஆண்டு சிறீலங்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பை என்றுமில்லாதவாறு அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
அன்பான யாழ் கள உறவுகளே,நீங்கள் கையொப்பமிட தகுதியானவர் என்றால் இங்கு சென்று கையொப்பமிடலாம். www.petitiononline.com./Crisis01/petition..html
-
- 8 replies
- 1.3k views
-
-
சிறி லங்காவில தான் தமிழருக்கு சுதந்திரம் இல்லை எண்டு பார்த்தால் கனடாவிலையுமா? சிறீ லங்காவில பத்திரிகைச் சுதந்திரம் கூட இல்ல. ஊடகவியலாளர்கள் சிங்கள காடையர்களால் கடத்தப்படுகின்றார்கள், துன்புறுத்தப் படுகின்றார்கள், கொலை செய்யப்படுகின்றார்கள். இந்தக்கேவலத்தில சிங்களக் கும்பல் ஊடகங்களுக்கு இப்பிடி ஒரு அறிக்கை விட்டு இருக்கிது. கொடுமை கனடாவில தமிழனுக்கு உரிமை இல்லையா? கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் இல்லையா? தமிழரை பயங்கரவாதிகள் எண்டு அறிக்கைகள் விட்டு, பூச்சாண்டி காட்டி பயங்கரவாதம் செய்யுற சிங்கள காடையர் கும்பல் எப்போது திருந்தப்போகின்றது? இஞ்ச இருக்கிற தமிழர் ஒன்று கூட, சிங்கள காடையர்களுக்கு ஒண்டுக்கு போகிது போல இருக்கிது..
-
- 9 replies
- 1.3k views
-
-
யூன் 01, 2010 அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே! உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம். இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கி…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை பி.கே. பாலசந்திரன் கொழும்பு, மே 11: இலங்கையில் தமிழர்களை இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபட்ச தொடங்கியிருக்கிறார் என்றும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக செய்யப்படும் திருத்தங்கள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இலங்கையில் இப்போது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த அரசியல் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வடக்கிலும் க…
-
- 3 replies
- 1.3k views
-