ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து விளக்கவுள்ளது. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது பொலிஸ் , காணி அதிகாரங்கள் வழங்க முடியாதென்றும் வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போது பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படமட்டாதென தெரிவித்திருந்தார். இதேபோல் அமைச்சரவையின் பேச்சாளரான கெஹெலிய றம்புக்வெல பொலிஸ் அதிகாரம் குறித்து பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை வீணடிப்ப…
-
- 1 reply
- 845 views
-
-
இலங்கை அரசியல் கைதிகள் எவரும் இல்லையென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அரசியல்கைதிகள் குறித்தோ அல்லது காணமற்போனவர்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தோ அரசாங்கத்தினால் எந்த வித தீர்மானங்களையும் எடுக்க முடியாது,அடுத்த பாராளுமன்றத்தில் புதிய அமைச்சரவையின் கீழ் இது தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும்,தற்போதைக்கு நாட்டின் சட்;டங்களின் அடிப்படையில் செயற்படுவோம்.எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதி அரசியற்கைதி முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சோவே அவரும் விடுதலைசெய்யப்பட்டு விட்டார், பல்வேறு காரணங்களிற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்புஅரசியற் கைதிகள் என தெரிவிக்கின்றது, இவர்களில் சிலர் பல்வேறு கு…
-
- 1 reply
- 354 views
-
-
பயங்கரவாதிகளை இனங்காண மரபணு சோதனைக்கு உத்தரவு! இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சஹரான் இறந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் நம்புகின்றனர். எனினும், கடல் வழியாக அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சஹரானின் அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது மகள் மற்றும் சகோதரியின் மரபணுவை பரிசோதிக்க, அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தோடு, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக், சினமன் கிரான்ட் நட…
-
- 0 replies
- 244 views
-
-
13 JUN, 2024 | 03:39 PM கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கிலக்கான 20 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக காற்று வீசி வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (13) குளவிக்கூடு கலைந்துள்ளது. இதனால் மாணவர்களை குளவிகள் தாக்கியுள்ளன. குளவிக் கொட்டுக்கிலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk
-
- 0 replies
- 193 views
-
-
மகிந்தவுக்காக கையெழுத்திடாமல் நழுவினார் பௌசி – மைத்திரியின் பிரதமர் வேட்பாளரா? AUG 14, 2015by கார்வண்ணன்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.எச்.எம்.பௌசி மட்டும் கையெழுத்திடவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கே அ…
-
- 3 replies
- 604 views
-
-
A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவி சாதனை (படம் இணைப்பு) க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில 3 ஏ பெற்று முதலிடம் இடத்தை சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதா பெற்றுள்ளார். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர் விபரங்கள் அறியக்கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவரான கமலக்கண்ணன் கமலவாசன் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்…
-
- 9 replies
- 1.4k views
-
-
நடைபெற்று முடிந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எந்த அளவிற்கு விசமப் பரப்புரைகள் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது எமது மக்கள் கொண்டுள்ள நீங்காத நம்பிக்கை அவர்கள் வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, துல்லியமாகத் தெரிகின்றது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளன. எவ்வித சலனமோ அன்றி அச்சமோ இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொண்டு எமது மக்கள் அவர்கள் வெற்றிவாகை சூடும்படியாக தங்கள் ஆதரவை அளித்துள்ளார்கள். எனவே எமது மக்கள் தமிழ்த் த…
-
- 2 replies
- 359 views
-
-
ஜனாதிபதி தேர்தல் வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி – மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட விடயங்…
-
- 0 replies
- 323 views
-
-
சிறுவயதிலே பாடசாலை இடைவிலகுபவர்கள் சமூக சீரழிவுக்குள் உள்வாங்கப்படுகிறார்கள் : ஜெயசேகரம் சிறுவயதிலே பாடசாலை இடைவிலகுபவர்கள் போதைவஸ்து, குடிபோதை, கோஸ்டி மோதல் போன்ற சமூக சீரழிவுக்குள் உள்வாங்கப்படுகிறார்கள் என வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலை இடைவிலகிய மற்றும் இடைவிலகும் தருவாயில் இருக்கும் மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைப்பதற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் எமது வடமாகாணமே ஆகக்கூடிய பாடசாலை இடைவிலகிய மாணவர்களை கொண்டுள்ளதால் எமது வணிகர் கழகம் கூடிய கரிசனை எடுத்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. போர் க…
-
- 0 replies
- 230 views
-
-
டக்ளஸ் மீது தாக்குதல் நடத்தவந்த குண்டுதாரி இனம் காணப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு. சிறீலங்கா துணை இராணுவக்குழு ஒன்றின் தலைவரான ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தச் சென்ற மனித குண்டுதாரி இனம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மனித குண்டுதாரி வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த 01-01-1983ம் ஆண்டு பிறந்த 24 அகவையுடைய மேகமன்னன் சுஜேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர் Pathivu
-
- 1 reply
- 1.8k views
-
-
லலித்குமார், குகனை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை: அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஜே.வி.பி. கிளர்ச்சிக் குழு அங்கத்தவர்களான லலித் குமார் வீரராஜ், குகன் ஆகியோரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது. டிசெம்பர் 9 ஆம் திகதிமுதல் மேற்படி இருவரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ்மா அதிபர் இலங்ககோணின் அறிக்கையொன்றை சுட்டிகாட்டிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இச்சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ள போதிலும் ஒருவரும் விசாரணைகளை சாதகமான வழியில் கொண்டுசெல்வதற்குரிய தகவலகளை வழங்கவில்லை எனக் கூறினார். 'பொலிஸ் அறிக்கையின்படி, அவர்கள் கடத்தப்பட்டார்களா இல்லையா என்பதை கண்டறிவதற்க…
-
- 0 replies
- 492 views
-
-
இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் எதிர்கட்சித் தலைவருக்கான கோரிக்கையும் முன்வைக்கப்படாமை காரணமாக இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவதாக தெரிவித்தார். இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவார். சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.…
-
- 53 replies
- 4.6k views
-
-
ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நாடுகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அமைதிகாக்கும் செயற்பாடுகள் தொடர்பாக இத்தகைய பதவியொன்றுக்கு இலங்கையர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். மேற்படி குழுவில் ஆசிய- பசுபிக் நாடுகளை மேஜர்ஜெனரல் சவேந்திர சில்வா பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். http://www.saritham.com/?p=48845
-
- 34 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிப்பவர்கள் யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவை தரிசிக்காமல் உள்நுழைய முடியாது. அந்த வளைவைக் கண்டதும் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவர்களை ஆக்கிரமிப்பதை உணர்ந்தவர்கள் ஏராளம். இந்த வளைவின் அருகில் நடமாடும் கடை ஒன்றையும் அண்மை நாட்களில் நிச்சயம் பார்க்க முடியும். ஆட்டோ ஒன்று கடையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் பல வகையான பழங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த நடமாடும் கடையின் உரிமையாளர் சுண்டுக்குளியைச் சேர்ந்த அ. அமலன் என்பவர். பொலிஸ்காரர், நகர, பிரதேச, சபையினரின் விரட்டல்கள் தன்னை இந்த நடமாடும் கடையை அமைக்கத் தூண்டியதாகக் கூறிய அவர் எம்மிடம் பகிர்ந்து கொண்டவை வருமாறு: தெருவோரங்களில் வியாபாரம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். எனது வியாபாரம் போக…
-
- 1 reply
- 747 views
-
-
(எம்.மனோசித்ரா) முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும்…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
சுண்டிக்குளம் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் மீன்பிடிப்படகு ஒன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 694 views
-
-
புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 24 ஆந் திகதி இடம்பெறுமென தேர்தல்த் திணைக்களம் அறிவித்தது. இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தொடர்புடைய அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று காலை தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் 24 ஆந் திகதி தேர்தலை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல்த் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். அந்தப் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 8 ஆந் திகதி நடைபெறுமென முன்னர் அறிவிக்கப்பட்டபோதிலும், பின்னர் ஒத்திவைக…
-
- 0 replies
- 617 views
-
-
வடக்கு மாகாணத்துக்கான சிறுவர் வைத்தியசாலையை இணுவில் மக்லியயாட் வைத் தியசாலை வளாகத்தின் ஒரு பகுதியில் அமைப்ப தெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை ஏலவே தெரிந்ததே. சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான காணி தெரிவு செய்யப்பட்டு, அதற்கான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு மதில் சுவர்கள் அமைக்கப்பட்ட நிலையில், குறித்த காணியின் உரிமம் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளது. இதனால் சிறுவர் வைத்தியசாலையை நிர்மாணிக்கின்ற பூர்வாங்க நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. வட பகுதி மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறுவர் வைத்தியசாலையை கைநழுவவிடுவ தென்பது எமது இனத்துக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய பாதகமாகும். அதேநேரம் இணுவில் மக்லியயாட் வைத்தியசாலை வளாகத்தில் வடபகுதிக்கான சிறுவர்…
-
- 2 replies
- 993 views
-
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் 2024 கேள்விகளும் பதில்களும் Vhg ஆகஸ்ட் 23, 2024 1. தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன்? தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கு. தமிழ் மக்களுக்கே தங்கள் பலம் எது என்பதை உணர்த்துவதற்கு. தமிழ் மக்கள் ஒரு கொள்கைக்காக வாக்களிக்கும் மக்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்கு. தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதனை நிரூபிப்பதற்கு. தமிழ்மக்களிற்கு என்ன தேவை என்பதைத் தொடர்ச்சியாகச் சொல்வதற்கு. சிறீலங்கா அரசை அம்பலப்படுத்துவதற்கு. 2. தமிழ் மக்களை ஏன் ஒன்று திரட்ட வேண்டும்? தமிழ்மக்கள் கட்சிகளாய். கொள்கைகளாய். சாதியாய். சமயமாய், வடக்காய். கிழக்காய். தியாகியாய், துரோகியாய், கட்சிக்குள்ளேயே அணிக…
-
- 0 replies
- 274 views
-
-
வலுவிழந்து போகுமா அமெரிக்கத் தீர்மானம்? கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. அதேசமயம் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை இன்று வியாழக்கிழமை மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் நிறுவும் ஐ.நா. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ளது. இப்பிரேரணையின் நகல்வரைபு ஏற்கனவே உறுப்…
-
- 0 replies
- 307 views
-
-
கிளிநொச்சி பொதுமருத்துவமனை நோயாளர் காவு வாகனம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வவுனியாவில் நிறுத்தி வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 613 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரங்காற்றுகை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கின் பகுதியொன்று எந்தவித சலனமும் இன்றி ஆழ் அமைதியில் இருப்பது மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' தேவையெனும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை, கிட்டத்தட்ட 'உள்ளக விசாரணை' எனும் நிலைக்குள் அமெரிக்காவினாலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்தினாலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தரப்பின் சமூக- அரசியல் கூறுகள் தீர்க்கமான முடிவுகளோடு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. அது, நீதியான விசாரணைகளைக் கோருவதற்கான அடிப்ப…
-
- 0 replies
- 188 views
-
-
முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், யார் அடுத்த ஜனாதிபதி என்ற கேள்வி தொடர்ந்தும் நிலவிவரும் அதேவேளை,மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவாவும் இலங்கை மக்களிடம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக கடந்த 75 வருடங்களாக ஒரே பாசறையில் உருவான தலைவர்களே இந்த நாட்டில் ஆட்சியதிகாரத்தை அலங்கரித்து வந்த அதேவேளை,நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக உருவெடுப்பதற்கும் இன-மத முறுகல் மற்றும் ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது அச்சம் கொண்டு பகைமையை வளர்த்ததற்கும் இந்த 75 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசுகளும் தலைவர்களுமே காரணம…
-
-
- 6 replies
- 862 views
- 2 followers
-
-
சிறீலங்கா போர்நிறுத்த ஒப்பந்த விலகல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை [sunday January 06 2008 01:52:26 PM GMT] [யாழினி] சிறீலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகியதால், நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்த விலகல்பற்றி தாம் கவனத்தில் எடுத்திருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் அவர்கள் ’அசோசியஸ்ட் பிரஸ்சுக்கு’ தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கை மூலம் சிறீலங்கா இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும், பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சனைக்கான தீர்வை காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்துக் கட்சிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கெதிரான பிரேரணையை அமெரிக்கா இன்று மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்! இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனையை இன்று செவ்வாய்க்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக தெரியவந்ததாக திவயின தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனிடையே சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 37 அரசசார்ப்பற்ற நிறுவனங்கள், இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கும் நோக்கில், ஜெனிவாவுக்கு சென்றுள்ளனர். இதனைத் தவி…
-
- 0 replies
- 811 views
-