Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா வதிவிட அதிகாரியிடம், 13 பக்க ஆவணம் கையளிப்பு! September 5, 2021 13 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை ஐ.நா வதிவிட அதிகாரி ஹனா சிங்கரிடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் கையளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள 48 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை கூறவுள்ளார். இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் 13 பக்கங்கள் கொண்ட ஆவணமொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட அதிகாரி ஹனா சிங்கரிடம் கையளித்துள்ளார…

  2. இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கும் அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன்ன. இலங்கை விவகாரங்கள் குறித்து, குறிப்பாக வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பாக, ஐ.நா.உட்பட சர்வதேச சமூகம் இலங்கை அரசை விமர்சித்து வருகின்ற நிலையிலேயே பாலித கோஹன்ன இந்தக் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார். கனடாவின் சி.பி.சி. வானொலிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர், இதுபற்றி மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கையில் தமிழர்களை அரசு நடத்து…

  3. இலங்கைக்கு... தொடர்ச்சியான, அழுத்தங்களை... பிரயோகிக்கத் தயார் – பிரித்தானியா இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்த ஆணையாளரின் அதிருப்தியை ஏற்றுக்கொள்வதாகவும் கூறின…

    • 2 replies
    • 498 views
  4. வவுனியா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி லண்டன் சென்ற தமிழ்வாணி ஞானகுமார் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதன்மூலம் இந்த உண்மைத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியதால் இலங்கை அரசாங்கம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தது. இந்நிலை தொடர்வதைத் தடுக்கும் நோக்கில் தமிழ்வாணி ஞானகுமாருக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய வீட்டார் அனைவரையும் பாதுகாப்புத் தரப்பினர் கைதுசெய்துள்ளதாக வன்னிக்குருவியிற்கு இணையத்தளத்திற்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக தமிழ்வாணி ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை உடனடியாக நிறுத்தியுள்ளார். தனக்க ஏற்பட்டுள்ள அதிகமான மன அழுத்தம் காரணமாக ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக தமிழ்வாணி தெரிவித்துள…

  5. ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாக லண்டனில் உள்ள ஒரு செல்வாக்குள்ள புலம்பெயர் தமிழ் குழுவொன்று தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை என உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அந்தக்குழு தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களை அழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி க…

  6. வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் இயல்புநிலை பாதிப்பு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெற்றுவருகின்றது. ஹர்த்தாலை முன்னிட்டு வடமாகாணமெங்கும் கடைகள் பூட்டப்பட்டு பாடசாலைகள், வங்கிகள் அரச தனியார் நிறுவனங்கள் அனைத்தின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வடக்கின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த பொது கடையடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20928

  7. இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை உலக அரங்கில் தக்கவைத்துக் கொள்வதற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள பெரிய, சிறிய நாடுகளையெல்லாம் தங்களுடைய (இந்தியா) கண்பார்வையில் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளையெல்லாம் தொடர்ந்து தங்களுடைய (இந்தியா) கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதற்…

  8. ஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது?: 'ஆனந்த விகடன்' கேள்வி [வியாழக்கிழமை, 08 ஒக்ரோபர் 2009, 03:25 பி.ப ஈழம்] [க.நித்தியா] ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விகடன் குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார ஏட்டில் நிஜ 'வில்'லன் யார்? எனும் தலைப்பில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரசின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இ…

  9. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார். இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த கல்வி அமைச்சர் குருகுலராசா, பதவி விலகல் கடிதத்தை நேரில் கையளித்தார். கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் தாமகவே முன்வந்து தமது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு கோரியிருந்தார். இதற்கமைய, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஏற்கனவே தமது பதவியை விட்டு விலகியிருந்தார். எனினும், கல்வி அமைச்சர் குருகுலரா…

    • 4 replies
    • 436 views
  10. வன்னி வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனது மற்றொரு பிரதிநிதியை ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவிற்கு அனுப்பி வைக்கிறது. முகாம்களில் உள்ள சிறுவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காணுமாறு அரசுக்கு அழுத்தங்களை வழங்குவதற்காகவே ஐ.நா. பிரதிநிதி அனுப்பி வைக்கப்பட உள்ளார். ஐ.நா.வின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் விவகாரங்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசாமியின் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் பற்றிக் கம்மேர்ட் விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். ராதிகா குமாரசாமி இந்தத் தகவலைத் தெரிவித்தார் என ஐ.நா. இணையத் தளம் கூறுகின்றது. ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய ராத…

    • 0 replies
    • 263 views
  11. இராணுவத்தை அவமானப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் – தயா ரட்நாயக்க 11 அக்டோபர் 2013 இராணுவத்தை அவமானப்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சில நபர்களும் சில அமைப்புக்களும் உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் இராணுவத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பி;ட்டுள்ளார். இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்க வேண்டுமாயின் படையினர் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். சமயோசிதத்துடனும், புத்தி சாதூரியத்துடனும் படையினர் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறுகிய நோக்கத்துடன் இவ்வாறான சக்திகளுக்கு எதிராக செயற்பட்டால் இராணுவத்தையும், தனிப்பட்ட ரீதியிலும் பாதிப்…

  12. 100 நாட்களை எட்டியும் தீர்வின்றித் தொடரும் போராட்டங்கள் - சண்முகம் தவசீலன் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 117ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது. 138 குடும்பங்கள், தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு, சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய மக்கள், இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. எனினும்…

    • 1 reply
    • 238 views
  13. எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர் எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் நமக்கு துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்விடுகின்றேன். ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நா…

  14. சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு? ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவலொன்று பரவி வருவதால் குழப்பமடைந்துள்ள ஜனாதிபதி இராணுவ சேவையில் பணியாற்றிவரும் அதிகாரியான சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா என ஆராய்ந்து பார்த்து உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிற்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது இராணுவத்தில் பணியாற்றிவரும் பிரதான அதிகாரியொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என ஜனாதிபதிக்கு நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக்காட்டியதை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இராணு…

  15. வெளிநாட்டு மென்பானங்களை பயன்படுத்துவதை உடன் நிறுத்தவும்;வட மாகாண சபை அமைச்சர் வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ கூட்டங்களிலோ வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார். விவசாயமும் கமநலசேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் சுற்றாடல் அமைச்சின் பொறுப்புகளை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது ; எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ வெளிநாட்டு மென்பானங்களைப் பயன்படுத்த வேண்டாம். எ…

  16. ''தெனாலி' திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது' என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 'இலங்கைப் பிரச்சினையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது. ஜெயகாந்தன், பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞர்களான எமக்கு கிடையாது' என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கமல் ஹாஸன் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/pirasitta-…

  17. சிறப்­பு­ரி­மை­யைக் கார­ண­மா­கக் குறிப்­பிட்டு விசா­ரணை அறிக்­கையை வழங்­காது விடு­வது தவறு முத­ல­மைச்­சர் அமைச்­சுக்கு ஆணைக்­குழு அறி­வு­றுத்­தல் வல்­வெட்­டித்­துறை நகர சபை தொடர்­பில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணைக் குழு­வின் முழு­மை­யான அறிக் கையை, சிறப்­பு­ரி­மை­யைக் கார­ண­மா­கத் தெரி­வித்து வழங்­கா­மல் விடு­வது தவறு. இந்த விசா­ர­ணை­யில் மூன்­றாம் தரப்­பி­ன­ரும் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தால், அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிந்து அறி­விக்­கு­மா­றும், விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வ­தில் பொது­மக்­கள் நலன் இருக்­கு­மாக இருந்­தால், ஆணைக்­குழு அறிக்­கையை வழங்­கப் பணிக்­கும் என்­றும், ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­ன…

  18. மோசமான வானிலை: ஆறு பேர் உயிரிழப்பு, இன்றும் இடியுடன் கூடிய மழை ! நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களில் நாட்டில் ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்றினால் கிட்டத்தட்ட 700 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெர…

  19. . வீரகேசரி இணையம் - "ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது" என தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் வீ .ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதி பொது நிலைப்பாடு ஒன்றை வலியுறுத்தும் முகமாக தமிழர் விடுதலை கூட்டணி சில தீர்மானங்களை வெளியிட்டுள்ளது. கூட்டணியின் தலைவர் வீ ஆனந்த சங்கரியின் கையொப்பத்துடன் கூடிய மேற்படித் தீர்மான அறிக்கையிலேயே அவர் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது. எனவே இனப்பிரச்சினையின் நிரந்தர தீர்வுக்கு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வே பொருத்தமானதாகும். இதன் அ…

  20. எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்தார். அவரை ஜனாதிபதி ராஜபக்சேதான் சமாதானப்படுத்தி, தைரியப்படுத்தினார் என்று இலங்கை பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இலங்கைப் பாதுகாப்புத்தரப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகையில், எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு தோல்வியையும் சந்தித்தவன் இல்லை என்று பொன்சேகா கூறியுள்ளார். பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஈழப் போர் முடிந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே கிளிநொச்சிக்குப் சென்ற போது உடன் வர அவர் பயப்பட்டார், அஞ்சினார், தைரியம் இல்லாமல் வர மறுத்தார். போர் முடிந்ததும், ராஜபக்சே கிளிநொச்சி போக விரும்பினார். அ…

  21. மிகமோசமடைந்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் - பிரிட்டன் தெரிவிப்பு (நா.தனுஜா) இவ்வாண்டின் முதல் ஆறுமாதகாலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்படல் உள்ளடங்கலாக சிறுபான்மையினரை ஓரங்கட்டும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/34081/Britain.jpg இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜுன்மாதம் வரையான முதல் அரையாண்டில் மனித உரிமைகள் நிலைவரம் மிகுந்த கரிசனைக்குரிய மட்டத்திலிருக்கும் நாடுகளை உள்ளடக்கியதாக பிரிட்டனின…

    • 2 replies
    • 472 views
  22. வட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவன் நானே. புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த தளபதி நானே. எனது தலைமையிலான ராணுவப் படையணியே களத்தில் இறங்கிச் செயற்பட்டு நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்கிறார் பொன்சேகா. இலங்கை அதிபர் தேர்தலில் பொன்சேகாவை களத்தில் இறக்கி ராஜபக்சேவை விரட்ட எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன. ஆனால் இத் தேர்தலி்ல இருவருக்குமே வாக்களிக்கும் மன நிலையி்ல், வாழ வழியில்லாமல் பரிதவிக்கும் தமிழர்கள் இல்லை. இந்த நிலையில் தமிழர்களின் வாக்குகளைக் கவர எவ்வளவு இறங்கிப் போக முடியுமோ அவ்வளவுக்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் சிங்களர்களான ராஜபக்சேவும், பொன்சேகாவும். ராஜபக்சேவுடன் …

  23. எனது அயலவர் ஒர் இலங்கைத் தமிழர் - ஆங்கிலத்தில் ஒரு விவரணப் படம். எமது இனம் இலங்கைத் தீவில் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த ஒரு ஆங்கிலேயர் அது பற்றிய பின்னணியை ஆராய முற்படுவதை எடுத்துக்காட்டும் ஒரு விவரணம். இது பற்றிய உங்கள் எல்லோரதும் ஆரோக்கியமான கருத்துக்கள் இந்த விவரணத்தைத் தயாரித்தவர்களுக்கு பெரிதும் பயன்படும். தயவுசெய்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இது ஆங்கிலேயர்கள் மத்தியில் காண்பிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனத்திலெடுங்கள். நன்றியுடன் பரதன் http://www.youtube.com/watch?v=jFvUWiWPMO4&layer_token=eeed3f777741deec http://www.youtube.com/watch?v=hDUySKPWCDQ&layer_token=13c8276c85bbfcc

  24. தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமையே மிகவும் சிறந்த தீர்வுத் திட்டம் என சிறு கைத்தொழில் அமைச்சரும், ஈ.பி.டி.பி கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய இன்பிரச்சினைக்கு தீர்வு காணும் மிகச் சிறந்த அரசியல் பொறிமுறைமையாக மாகாணசபை முறைமையை கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத அரசியலை நடாத்தியிருந்ததாகவும், அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் நோக்கத்திற்கா…

  25. ஏழு பயிர்களின் விதைகளை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே அடுத்த வருடம் முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஏழு பயிர்களின் விதைகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சிவப்பு வெங்காயம், உழுந்து , சோளம் மற்றும் கடலை போன்றவற்றின் விதைகளை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டளவில் மிளகாய் இறக்குமதியை நிறுத்தவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.