ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
பின்லேடனையும் அவரது இயக்கத்தையும் அழிப்பதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு உலக தலைவர்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படுகின்றார் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமா புகழாரம் சூட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 316 views
-
-
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. நாம் நிறையப் பிணங்களைப் பார்த்துவிட்டோம். தலை நசுங்கிய குழந்தைகள், மார்பகம் சிதைக்கப்பட்ட பெண்கள், குடல் பிதுங்கிய கர்ப்பிணிகள், உடல் சிதறிய போர் வீரர்கள்… நிறையப் பார்த்துவிட்டோம். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை. அறியாமை நிரம்பிய முகத்துடன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான். தனக்கு நேரப்போகும் கொடூரத்தை அவன் அறிந்திருக்கவில்லை. அடுத்த புகைப்படத்தில் துப்பாக்கிக் குண்டுகள் அவன் மார்பில் பதிந்திருக்கின்றன. உயிர் இல்லை. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைத் தன்மையே உலகை உலுக்கியிருக்கிறது. இவை அசைக்க முடியாத …
-
- 13 replies
- 1.4k views
-
-
ஆத்மசாந்தி பிரார்த்தனை... யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்காக தமிழ்நாடு, சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆசிரம பௌத்த குருமார்கள், இன்று வெள்ளிக்கிழமை (28) ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள், இன்று யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போதே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். (சபேஸ்வரன்) http://www.tamilmirror.lk/184960/ஆத-மச-ந-த-ப-ர-ர-த-தன-
-
- 2 replies
- 394 views
-
-
ஆனந்தசங்கரி அவசர சிகிச்சைப் பிரிவில்! தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வெள்ளவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான அவர், திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக தெரியவருகின்றது. பல தசாப்த காலமாக தமிழ் அரசியல் பரப்பில் நிலைபெற்றுள்ள ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டவர். விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அடிக்கடி தேசியத் த…
-
- 0 replies
- 516 views
-
-
வன்னியில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு, அடிப்படை மருத்துவ வசதிகளின்றி அல்லற்படும் தமிழ் மக்களுக்கு உதவ மருத்துவக்குழு ஒன்றினை வன்னிக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக நோர்வே தமிழ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 579 views
-
-
குடும்பத்துடன் தப்பிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் இறுதிவரை புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும்; உரிமை உலகிலுள்ள எவருக்கும் இல்லை - வீ. ஆனந்தசங்கரி “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழி இன்றையை சூழ்நிலையில் எனக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென நான் என்றும் எண்ணியவன் அல்ல. அவர்கள் கையாண்ட சில வழி முறைகளை ஒழிவு மறைவின்றி சுட்டிக்காட்டியும் கண்டித்தும் வந்துள்ளேன். அவ்வாறு நான் நடந்து கொண்டமைக்கு முக்கிய காரணம் நான் வன்முறையை எதிர்க்கும் காந்தியவாதியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தவன் என்பதாலேயாகும். நான் யாரையும் அடையாளம் காட்டி குற்றம் சாட்டு…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளனர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்குமிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் 9 மணியளவில் திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எஸ் தண்டாயுதபானி,கி.துரைராஜசிங்கம் மற்றும் ஆரியவதி கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டதுடன் முதலமைச்சரின் செயலாளர் அஸீஸ் அவர்களும் இதன் போது பங்கேற்றார். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைபெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டு…
-
- 0 replies
- 187 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சனையும் காங்கிரஸ் கட்சியின் திடீர் அக்கறையும் ஆளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, திடீரென்று ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் தமது நிலைப்பாட்டை விளக்கிச் சொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது. இந்த திடீர் முடிவின் பின்புலம் என்னவாக இருக்க முடியும்? அது வேறு ஒன்றுமல்ல, விரைவில் ஒரு தேர்தல் வரவிருப்பதும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக மங்கிக் கொண்டு செல்வதுமே இந்த திடீர் அக்கறைக்கான காரணம். சில தினங்களுக்கு முன்னர் பேசிய ஆளும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஈழத்தில் நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றும் குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் சர்வாதிகார விருப்பமும…
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழில் முஸ்லீம் மக்களை மீளவும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் – நியாஸ் யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் மீளவும் குடியமர்த்துவதற்கான ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார். கடந்த யுத்த அனர்த்தம் காரணமாக 1990 ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் 30 ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படவில்லை என்பதை கருத்திற்கு கொண்டு இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் முஸ்லீம் மக்கள் இடம்பெயர்ந்த 30 வருட நிறைவை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் இவ்வேண்டுகோளை கேட்டுள்ளார்.…
-
- 1 reply
- 420 views
-
-
கனேடியத் தமிழர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடும்படி அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை [ திங்கட்கிழமை, 11 மார்ச் 2013, 01:16 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த்தாகவும், கருவிகளை வாங்க முயற்சித்தாகவும் குற்றம்சாட்டி, கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடும் படி, அமெரிக்காவிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. இந்தத் தகவலை கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற கனேடியத் தமிழர் மீது தீவிரவாத குற்றச்சாட்டின் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்து, சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அசாதாரணமான இந்த வேண்டு…
-
- 0 replies
- 524 views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழர் தாயகத்தில் நிகழ்ந்தேறிய பேரவலத்தின் சாட்சியங்களை கொண்ட பதாகைகளை தாங்கியவாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவின் கான்பராவில், நீதிக்கான எழுச்சிப்பேரணியில் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள். தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழின அழிப்பினை எடுத்துக்காட்டியதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கேட்டும், தமிழ் மக்களுக்கு நீதியான நீடித்துநிலைக்கக்கூடிய சுதந்தரமான கௌரவமான அரசியலுரிமை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்வெழுச்சிப்பேரணி நடைபெற்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் சிட்னி மெல்பேர்ண் ஆகிய பெருநகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான க…
-
- 0 replies
- 318 views
-
-
எமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்! பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் மீதான பாராபட்சங்களுக்கும் குரல் எழுப்பும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளாகளாகிய எமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்! இலங்கையில் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் இடம்பெற்றுக் கொண்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களில் சட்ட சீர்திருங்கள் தொடர்பாக பேசிக் கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பெண்களின் நலன் கருதி பெண்களுக்கு பாரபட்சமாக இருக்கின்ற சட்டங்களிலும் சீர்திருத்தம் வேண்டும் என்ற பேச்சுக்களும் சம காலத்தில் முக்கியத்துவம் வகித்து வருகின்றது. இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பெண்கள் உரிமைகளுக்காக தலைமைத்துவம் எடுத்து செய…
-
- 0 replies
- 344 views
-
-
"போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்தி…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்தியாவுக்கும் பங்கு இருந்தது என ஐ.நா. தெரிவித்திருப்பதால், இந்தியாவின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா, கோலாலம்பூரைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ. கணேசலிங்கம் என்பவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். அம் மனுவில் கணேசலிங்கம் கூறியிருப்பதாவது: நான், சிங்கப்பூரில் பிறந்த இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவன். ஐ.நா. அமைத்த குழு தனது அறிக்கையில், “பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்´ என அழைக்கப்படும் குறிப்பிடப்படும் இலங்கைப் போரில், இலங்கை அரசுடன், இந்தியாவும் ஒத்துழைத்து செயல்பட்ட…
-
- 1 reply
- 546 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்து நாட்டின் இறைமைக்கு விழுந்த அடி என்கிறது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையின் கருத்து, நாட்டின் இறைமைக்கு விழுந்த அடியாகும். இதனை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அவருடைய கருத்தினால் சர்வதேச அமைப்புக்களின் கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கமானது, சர்வதேச ரீதியில் பிரசாரங்களை முன்னெடு ப்பதற்காக பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச முகவர் நிறுவன ங்களுக்குள் ஊடுருவி அவற்றின் மூலமாக அனுதாபத்தினைப் பெற்றுக்கொள் கின்றது. இவ்வாறானதொரு பிரசாரமாகவே…
-
- 4 replies
- 1.2k views
-
-
வட மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வட மாகாண சபை இதுவரை அமைக்கப்படாமையினாலேயே தேர்தல் நடத்த முடியாதுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது என தீர்மானித்துள்ள போதும் தம்மால் தேர்தல் வேலைகளை தொடங்க முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டார். "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த 2006ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட பின், கிழக்கு மாகாண சபை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தும்படி ஜனாதிபதி பணித்தார். இந்த நடைமுறையே வட மாகாணத்திலும் பின்னப்பற்றப்பட வேண்டும். ஆனால் எமக்கு இன்னும் கட்டளைகள் கிடை…
-
- 0 replies
- 439 views
-
-
வீரகேசரி நாளேடு - திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம குருக்களான சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மாவுக்கு மரணதண்டனை விதித்து திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக பணியாற்றிய காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மனைவியான அம்பிகா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபாத சுந்தரம்பிள்ளை குகேஸ்வரியை நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு கொலை செய்து அவரின் சடலத்தினை ஆலய பிரதேசத்தில் தான் வசித்து வந்த விடுதி வளவுக்குள் புதைத்ததாக சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மா மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் திருமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…
-
- 9 replies
- 1.9k views
-
-
நாடாளுமன்ற உரையை தமிழ்ப் பத்திரிகைகள் தவறாக பிரசுரித்துள்ளன IBC
-
- 0 replies
- 255 views
-
-
அச்சமில்லாமல் எதையும் ஒப்பேற்ற முடியாதவர்கள் முகத்திற்கு அஞ்சி வேசையாடுவதற்கு சமம். போராட்டம் என்றால் என்னவென்பதை முழுமையாக அறியாதவர்களின் இந்தக்கூச்சல், போலித்தனமானதாகவே எனக்குப்படுகின்றது வலியில்லாத பிறப்பு ஏதும் பூமிப் பந்தில் உண்டா? எதையும் இழக்காமல் அத்தனையையும் அடையும் ஆசை. நடைமுறையில் எத்துணை சாத்தியம், ஒன்றை இழந்தால்தான் மற்றென்று உயிர் வாழும் என்ற மிகவும் சாதாரண வாழ்வு நிலையை புரிந்து கொள்ளவாமுடியவில்லை?. இந்த மன வலியில்லாத உண்மையை சாதாரண இந்த மனிதனாலே ஏற்கமுடியவில்லை என்பது எத்தனை அபத்தமானதோ அத்தனை அபத்தமானது இத்தனையும் தேவை என்பது, இலங்கையின் சுதந்திரம் எந்த இழப்புக்களும் இல்லாமல் கிடைத்த மாதிரி தமிழனின் சுதந்திரம் அப்படிக் கிடைக்குமா? நமது க…
-
- 0 replies
- 621 views
-
-
விருப்பு வாக்கு முறையிலான தேர்தலினாலேயே நாட்டில் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன தேர்தல் முறைமாற்றம் அவசியம் என்கிறார் ஜனாதிபதி மைத்திரி (ப.பன்னீர்செல்வம்) விருப்பு வாக்கு முறையினாலேயே நாட்டில் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. எனவே, உடனடியாக தேர்தல் முறைமை மாற்றமொன்று நாட்டுக்கு அவசியமாகும் என்று வலியுறுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க கேள்வி கோரல்களில் இன்னமும் மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன என்றும் குற்றம் சாட்டினார். ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றும் ப…
-
- 1 reply
- 272 views
-
-
பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் சுனந்த தேசப்பிரிய: ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு உதவுவதற்காக வந்த நாடுகளில் மியன்மார் அல்லது பர்மா என அழைக்கப்படும் நாடும் ஒன்று. அரச ஊடகங்களில் இந்த நாட்டின் உதவி தொடர்பில் மிகவும் உற்சாகமான கதைகள் வெளியிடப்பட்டன. இலங்கை உண்மையில் ஜனநாயகத்தை மதிக்கும் நாடு எனில் பர்மாவிடம் இருந்து பெறும் உதவி தொடர்பில் இலங்கை வெட்கப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய GTNற்கு அனுப்பி வைத்துள்ள தனது சிங்கள மொழியிலான விசேட கட்டுரையில் தெரிவித்துள்ளார். காரணம் நாம் கௌரவமாக மதிக்கும் சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் என்பன குறைந்தளவில் கூட இல்லாத நாடு என்ற பெயரை பர்மா பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 943 views
-
-
முல்லை மண் தந்த இலக்கிய ஆளுமை கலாநிதி முல்லைமணி காலமானார் பண்டார வன்னியன் நாடகத்தை எழுதியவரும் வன்னி மண்ணின் சரித்திரத்தை தன் எழுத்துக்களில் வடித்தவருமான கலாநிதி முல்லைமணி நேற்று காலமானார். முல்லைமணி என்ற புனைபெயரில் பல்வேறு படைப்புக்களை எழுதிய கலாநிதி வே. சுப்பிரமணியம் எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு என பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாக பதித்தவர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்தவர் முல்லைமணி. இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றவர். இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்த…
-
- 0 replies
- 673 views
-
-
சீன மொழி அறிவிப்புப் பலகை நீக்கம் கல்கிசை ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சீன மொழியிலான அறிவிப்பு பலகையை, ரயில்வே திணைக்களம் அகற்றியுள்ளது. எதிர்காலத்தில், எந்தவொரு ரயில்வே நிலையத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அதற்கு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் அனுமதி வேண்டும் என்று, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் திலந்த பெர்ணான்டோ தெரிவித்தார். அத்துடன், இது தொடர்பாக, அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கல்கிசை ரயில் நிலையத்தில், சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகை, கடந்த 2015ஆம் ஆண்டு, பொதுமுகாமையாளரின் ஒப்புதலி…
-
- 0 replies
- 378 views
-
-
மாகாணங்களின் அபிவிருத்தியைப் புறந்தள்ளிவிட்டு எவ்வாறு தேசிய அபிவிருத்தி குறித்து கனவு காண முடியும் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டத்தில் முதலமைச்சரின் நிதியொதுக்கீடு தொடர்பான விவாததத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆற்றிய உரை…… கௌரவ தவிசாளர் அவர்களே இம்முறை வரவு செலவுத்திட்டத்திலே எங்களின் மாகாண சபைக்கு 53 வீதமான நிதி குறைக்கப்பட்டுள்ளமையானது அதிகாரப்பகிர்வு குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் சாதகமான நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ள நல்லாட்சியின் வாக்குறுதிகள் குறித்து மீண்டும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டுகளை பார்ப்போமேயானால் கட…
-
- 0 replies
- 229 views
-