ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
இலங்கைத் தமிழ் தலைவர்கள் தனி ஈழத்தை கோரவில்லை என இந்திய மாக்சிச கம்யூனிஸட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்றே தமிழ்;த் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட இலங்கையின் சகல அரசியல் தலைவர்களும் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஈழம் பற்றி பேசவில்லை எனவும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் என ரங்கராஜன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்…
-
- 10 replies
- 1.2k views
-
-
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவினதும், மனித உரிமை கண்காணிப்பகத்தினதும் உயரிய விருதினை பெற்றுள்ள சுனிலா அபேயசேகர அம்மையார், சிறிலங்காவின் மனித உரிமைகள் பாதுகாப்பாளராகவும், 'INFORM' எனும் அமைப்பின் பிரதான இயக்குனராகவும் செயற்பட்டு வருபவர். அத்துடன், சிங்கள இனத்தவர்களாளும், தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நபர். போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் 300,000 மக்களை இவ் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்தப்படுவதையும், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமைகளை மீறும் வன்முறைகள் பற்றியும், தமது நேரடி அனுபவங்கள் மூலம் உலகெங்கும் எடுத்துரைக்கிறது இவருடைய 'INFORM'அமைப்பு. 'Real News' இன் சார்பாக ஷார்மினி பீரிஸ் அம்மையாரின் தொகுத…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர்களின் வடக்கு - கிழக்குத் தாயகப் பிரதேசங்களை அந்நிய நாடாக சிறிலங்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவே நடக்கும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பால் வேறுபாடின்றி இனப்படுகொலைகள், மூடிய எல்லைகளுக்கப்பால் பொருளாதாரத் தடை, பெரும் படை நகர்வை மேற்கொண்டு சிறு துரும்பை ஆக்கிரமித்தவுடன் ஆனந்தப் பெருங்களிப்பு முதலியன இப்படித்தான் கருத வைக்கின்றன. புலிகளின் ஆட்லறி நிலைகளைத் தகர்க்கவே படை நடவடிக்கை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு கண்துடைப்புக் காரணங்கள். அத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் வரையறுக்கப்படாத புதிய சரத்துக்களை தாமாகவே பின்னிணைப்பாக அரசு சேர்த்துக் கொண்டிருக்கிறது. இப்புதிய சரத்துக்களில் ஆட்லறி நிலைகளை அகற்றுதல், பொங்கு தமிழ் ஏற்பாட்டாளர்களை புகைப்படம் மூலம் இனங்கண்டு கொலை…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களுக்காக ஒரு இலட்சத்துக்கு அதிகமான கர்நாடக தமிழர்கள் கலந்து கொண்ட பெங்களூர் பேரணி பெங்களூர்: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், தமிழர்களைக் காக்கக் கோரியும் கர்நாடக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெங்களூரில் லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் திரண்டு மாபெரும் பேரணியை நடத்தினர். இதுவரை கர்நாடகத்தில் தமிழர்கள் இந்த அளவுக்கு திரண்டு பேரணி நடத்தியது இல்லை. பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பேரணிக்காக தமிழ் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அல்சூரில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ். பள்ளி மைதானத்தில் திரண்டனர். தமிழ்ச்சங்க செயலாளர் கோ.தாமோதரன் பேரணிக்கு தலைமை தாங்கினார். பேரணியை டாக்டர் மோகன் …
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும் இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை பணிப்பெண் சவுதியில் தற்கொலை இலங்கைப் பணிப் பெண்ணொருவர் ரியாத்திலிருந்து மதினாவுக்கு வேகமாக சென்று கொண்டிருந்த வாகனமொன்றிலிருந்து வெளியிலே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தச் சேர்ந்த 33 வயதுடைய சந்தியா பிரேமினி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் இவர் எந்த தினத்தில் தற்கொலை செய்து கொண்டார் என உறுதிப்படுத்தப்படவில்லை. குறித்த சம்பவம் மதினா குவாஸிம் நெடுஞ்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று குறித்த வாகனத்தின் வலது பக்க இறுதி ஆசனத்தில் அமர்ந்து கொண்ட பெண் வாகனம் வேகமாக சென்று கொண்டிருக்கையில் பின் கதவினை திறந்து வெளியே பாய்நதுள்ளார். இலங்கையில் இருந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
விசாரணை, விடுதலையை வலியுறுத்தி வெலிக்கடைக் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம். - பண்டார வன்னியன் Saturday, 10 March 2007 15:45 கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உள்ள 42 தமிழ்க்கைதிகள் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளை துரிதமாக நடத்தி தம்மை விடுதலைசெய்ய வேண்டும் எனவும் தம்மீதான விசாரணைகள் தாம் கைதுசெய்யப்பட்ட மாவட்டத்திலேயே நடத்தப்படவேண்டும். என்ற இரு கோரிக்கைகள் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் தம்மீதான விசாரணைகள் நடத்தப்படும்போது சாட்சிகள் கொழும்புக்கு வருவதில் பெரும் இடர்பாடுகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருப்பதை உண்ணாவிரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
வியாழன் 28-02-2008 14:16 மணி தமிழீழம் [மயூரன்] அரச அதிபர், மத்திய வங்கியின் தலைவர் ஆகியயோரின் கையெழுத்துக்களுடன் புதிய நாணயத்தாள் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிசாட் காப்ரல் ஆகியயோரின் கையெழுத்துக்களுடன் சிறீலங்காவின் நாயணத்தாள்கள் புழக்கத்தில் விடப்படவுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் இவர்களின் கையெழுத்துக்களுடன் 2000 ரூபா, 50 ரூபா, 20 ரூபா, 10 ரூபா நாணயத்தாள் நாட்டில் புழக்கத்தில் விடப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்திய உயர்மட்டக் குழுவினர் மகிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளதாக மஹிந்தவின் செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. இச்சந்திப்பின்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்த் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். . இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார செயலர்; . இலங்கை தமிழர்களுக்காக உடனடியான அரசியல் தீர்வு ஒன்றை வழங்க முன்வருமாறு, இந்தியா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. என்றும் இலங்கை அரசாங்கத்தினால், தமிழ் மக்களுடன் விரைவில் ஒரு தீர்வுக்கு வரமுடியும் எனவும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளதுட…
-
- 2 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து. நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2 கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல்…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழில், 15 வயதான சிறுமியை திருமணம் செய்து வைக்காததால், வன்முறை கும்பலால் வீடொன்று தீக்கிரை! யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது. குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை உட்பட பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. குறித்த வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞன் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகவும் , அதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில் , …
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது…
-
- 1 reply
- 1.2k views
-
-
January 11, 2019 யாழ்.அளவெட்டியை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள புலமை பரிசில் இந்தியாவுக்கு செல்கின்றார் என யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , அளவெட்டியை சேர்ந்த 27 வயதுடைய மனோகரன் கோகுலன் எனும் இளம் விவசாயி மத்திய அரசின் புலமைபரிசினை பெற்று விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற இந்தியா செல்கின்றார். வர்த்தக ரீதியில் மரக்கறி பயிர்செய்கை , பழ பயிர்செய்கை என்பவற்றை மேற்கொண்டு வடமாகாணத்தில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
உலக மனித உரிமை நிலையத்தின் அறிக்கை http://hrw.org/backgrounder/asia/srilanka0...anka0906web.pdf
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர் மனங்கள் வேதனையில் - சிங்கள தேசம் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் தமிழர் தாயக பிரதேசமெங்கிலும் இன்று காலை படை முகாம்கள் சோதனைச்சாவடிகள் மற்றும் முக்கியமாக நகர்ப்பகுதிகள் எங்கிலுமாக படையினர் பட்டாசுகள் கொழுத்தி ஆர்ப்பரித்தனர். நாடாளுமன்றத்தில் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் உரையை பல இடங்களிலும் படையினர் நேரடி ஒலிபரப்பச் செய்ததனையும் அவதானிக்கமுடிந்தது. அதுமாத்திரமன்றி, வீடுகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களிலும் சிறிலங்காவின் தேசியக்கொடியை பறக்கவிடுமாறு படையினர் கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தனர். இதேவேளை நாளை (மே-20) தேசிய விடுமுறை தினமாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. தமிழர் மனங்கள் வேதனையில் தோய்ந்து கிடக்க சிங்கள தேசம் இன்று மகிழ்ச்சி கொண்டாடி வருகின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வாக்குறுதி அளித்தவாறு ஆயுதக்குழுக்களை மஹிந்தா நிராயுதபாணிகள் ஆக்கவில்லை அதனாலேயே புலிகளும் அரசும் மோதத் தொடங்கினவாம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தேர் தலுக்கு முன்னர் பலகோடி ரூபாக்கள் அர சினால் புலிகளுக்கு கொடுக்கப்பட் டன. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அரசு புலிகளுக்குக் கூறியது போன்று கருணா குழுவினரையும் ஏனைய ஆயு தம் தாங்கிய குழுக்களையும் நிராயுத பாணிகளாக்கவில்லை. இதனால் ஆத் திரம் கொண்ட புலிகளுக்கும் அரசுக் கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. புலிகளுக்கு அரசு நிதி வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவேண்டும். இனிமேலும் காலம் தாழ்த்துவது கூடாது. இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி…
-
- 1 reply
- 1.2k views
-
-
(விசு கருணாநிதி, லோரன்ஸ் செல்வநாயகம்) தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற …
-
- 5 replies
- 1.2k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கடந்த 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/65088
-
- 4 replies
- 1.2k views
-
-
”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்” தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக பொது வேட்பாளரை நிறுத்துவது மிக சிறந்தது. அப்படியான தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றால், தானே அதற்கு பொருத்தமானவர் எனவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற பெரிய ஆசை தனக்கு இருக்கவில்லை எனவும் ஜனாதிபதி…
-
- 12 replies
- 1.2k views
-
-
முன்னாள் ராணுவத் தளபதிகள் இருவருக்கு சிறிலங்காவின் அனைத்து ராணுவ முகாம்களுக்கும் நுழையும் அனுமதி மறுப்பு..... முன்னாள் சிறிலங்கா ராணுவத் தளபதியும், 2000 இல் புலிகளின் யாழ் நோக்கிய பாய்ச்சலின்போது ராணுவத்தின் எதிர்த்தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவருமான ஜானக பெரேரா மற்றும் சிறிலங்காவின் விசேட படைகளின் முன்னாள் தளபதியான ஜயவி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறிலங்காவின் அனைத்து ராணுவ முகாம்களுக்கும் செல்வதற்கான தடை விதிக்கப் பட்டிருக்கு. இலங்கை தேசியப் பாதுகாப்பமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட சுற்று நிருபம் ஒன்றில் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய அரசுத்தலைமையும், ராணுவத் தலைமையும் போரை நடத்தி வரும் விதம் , போரில் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை என்று மிகைப்படு…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளுக்கு எதிராக பதில் தாக்குதல் மக்கள் மீது பொருளாதார தாக்குதல்! வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகள் மீது பதில் தாக்குதல் மேற்கொள்கின்ற அரசாங்கம் மக்கள் மீது பொருளாதார தாக்குதல்களை மேற்கொள்கின்றது. எனவே, வாழ்க்கைச் செலவு உயர்வதை குறைக்க போராட்டம் நடத்தவேண்டியுள்ளது. இதற்கு மக்கள் ஜே.வி.பி.யுடன் இணையவேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. குறுகிய காலப்பகுதியில் அதிக தடவைகள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த பெருமை ராஜபக்ஷ அரசாங்கத்தையே சாரும். அரசாங்கம் தனது பொருளாதார சுமையை மாற்று வழிகளில் நிவர்த்திக்கவேண்டும். மாறாக எரிபொருட்களில் தங்கியிருக்கக் கூடாது. அரசாங்கம் அமைச்சர்களின் எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
'என் பிணத்தைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப் படுத்துங்கள்.' - ஈழத் தமிழர்களுக்காக ஜனவரி 29-ம் தேதி தீக்குளித்து மாண்டு போன முத்துக்குமாரின் மரண சாசனம் இது. அந்த மரண சாசனத்தில் வைத்திருந்த 14 அம்ச கோரிக்கைக்கு வெளியே வைத்திருந்த மற்றொரு கோரிக்கை இது! முத்துக்குமாரின் உடலைச் சுமந்த வேன் மார்ச்சுவரியில் இருந்து கொளத்தூருக்கு வந்து சேர்ந்ததும், சில நிமிடங்கள் வரைதான் அது உறவு களுக்கு சொந்தமாக இருந்தது. அதன்பிறகு ஈழ ஆதர வாளர்கள், மாணவர்கள் கட்டுப்பாட்டுக்குள் போனது உடல். ............... தொடர்ந்து வாசிக்க........ http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவு அளிக்க வேண்டும்:- 17 பெப்ரவரி 2011 41 UK பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை:- விசேட தமிழாக்கம் GTN இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவு அளிக்க வேண்டும்:- இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவளிப்பதாகத் தெரிவிக்க வேண்டும்:- இலங்கையின் 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றுக்கு பிரிட்டன் ஆதரவளி;ப்பதாகத் தெரிவிக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருனிடம் கோரி மூன்று முக்கியமான கட்சிகளைச் சேர்ந்த 41 பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தை வீழ்த்துவதற்குகு ஐ.தே.க.வினரும் புலிகளும் இணைந்து சர்வதேச மட்டத்தில் சதி வீரகேசரி நாளேடு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட்டாகச் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் சதித்திட்டங்களை தீட்டிவருகின்றன. பணத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்குவாங்கி, அரசைக் கவிழ்ப்பதற்கு விடுதலைப் புலிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கிழக்கை மீட்டுள்ள அரசாங்கம், நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் பெரும் முயற்சியில…
-
- 1 reply
- 1.2k views
-
-
சனி 03-11-2007 15:17 மணி தமிழீழம் [செந்தமிழ்] படையினரது வாகனம் மோதியதில் ஐநா தொண்டர் பரிதாப மரணம் கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையில் தொண்டராக பணியுரிந்த ஒருவர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் சிறீலங்கா படையினரது வாகனம் மோதியதில் உயிழிழந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு தேஸ்ரன் வீதியில் (Thurstan Road )உந்துருளியில் பயணித்த றோமன் மேசிகி (Roman Mirceski) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார.; http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-