Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அப்படித்தான் முதன் முதல் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த இனிப்பு பற்றி தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இது இந்திய இனிப்பு என்பதால் தமிழ்நாட்டு உறவுகள் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழத்து உறவுகளுக்கு? இறுதியாக அறிந்து கொண்டது நானாக கூட இருக்கலாம். தற்போதைய பிரச்சனை அது அல்ல. பெயரே சரியாக தெரியாத இனிப்பை நான் செய்தது தான் பெரும் பிரச்சனை. இந்தியாவில் எந்த ஊரில் இருந்து வந்தது என அறிந்து கொள்ள முயன்ற போது கிடைத்த தகவலையும் செய்முறை எனும் சோதனைக்குள் செல்ல மென்னர் பார்க்கலாம். இந்த பதிவை எனது நெடுங்கால யாழ் நண்பர், சகோதரர் திரு.கந்தப்பு அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் கந்தப்பு…

  2. பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு-(செளசெள) தேவையானப்பொருட்கள்: பெங்களூர் கத்திரிக்காய் (செளசெள)- 1 பயத்தம் பருப்பு - 1/2 கப் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு தாளிக்க: எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: பயத்தம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் (மலர வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது). செள செளவின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய்…

  3. முட்டைப் பொரியல் - யாழ்ப்பாண முறை முட்டை - 2 அல்லது 3 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது காய்ந்த மிளகாய் - 1 நைசாக நறுக்கியது மிளகாய்த் தூள் - 1 டீஷ்பூன் உப்பு - தேவையான அளவு வெங்காயத்தினையும், மிளகாயையும் தாச்சியில் (வானலியில்) இட்டு எண்ணெய் (நல் எண்ணெய், சிறப்பானது) சேர்த்து பொன்னிறம் வரும் வரை பொரிக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊத்தி, மிளகாய்த்தூள், உப்பு இட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். பொரிந்து வந்த வெங்காயத்தினையும், மிளகாயையும் முட்டையியினுள் சேர்த்து கலக்கவும். பின்னர் தாச்சியில் (வானலியில்) கலவையினை தோசை மா போடுவது போல் பரத்திப் போடவும். பொரிந்து வரும் போது, தோசைக்கரண்டி கொண்டு, பக்கங்களில், சிறிது கிளப்பி, நடுவ…

  4. காராசேவு ********** தேவையான பொருட்கள்:- புழுங்கல் அரிசி - 800 கிராம் கடலை மாவு - 800 கிராம் மிளகு - 2 ஸ்பூன் பூண்டு பல் - 10 உப்பு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:- அரிசியை ஊறவைத்து உப்பு, பூண்டு, மிளகு சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இந்த மாவுடன் கடலை மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். காரா சேவு/Kaara Sevu காரா சேவு தேவையான பொருட்கள் : கடலை மாவு : 1/2 கிலோ ப…

    • 1 reply
    • 3.1k views
  5. மஞ்சள் இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. கொத்தமல்லி உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது. கறிவேப்பிலை உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்…

    • 19 replies
    • 3.1k views
  6. Started by Jamuna,

    தேவையானபொருட்கள் சிக்கன் - 1/2கிலோ வத்தல் தூள் - 4தேக்கரண்டி மல்லித்தூள் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி கரம் மசாலா - 1/4தேக்கரண்டி எலுமிச்சைசாறு - 5தேக்கரண்டி தயிர் - 2தேக்கரண்டி இஞ்சிபூண்டுவிழுது - 1தேக்கரண்டி ஆரஞ்சு கலர் 1/4 தேக்கரண்டி உப்பு - 1தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் கொத்தமல்லிதழை - 4 கொத்து செய்முறை சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..............ஒரு பாத்திரத்தில் வத்தல் தூள்,மல்லி தூள்,உப்பு,கரம்மசாலா,கலர்பவு

    • 6 replies
    • 3.1k views
  7. ஆடுகளத்தில் கொத்துரொட்டி பார்சல் பரிசாகத் தர முடியவில்லை... அது தான் எல்லாருக்கும் கிடைக்கிறது மாதிரி கொத்துரொட்டி செய்யும் முறையாவது தேடித் தரலாம் என்று நினைச்சன்...பார்த்தபோது ஒருக்கா try பண்ணலாமா என்று தோன்றியது... செய்து பார்த்தேன்... நன்றாக வந்தது... சாபிட்டுவிட்டேன் நாளைக்கு விடுமுறை எடுக்க வேணுமோ தெரியாது... (இதைப் பார்த்ததும் இளையபிள்ளையையும், தமிழ் சிறி அண்ணாவையும் ஞாபகம் வந்தது... )

  8. சமையலில், திறமைசாலிகள் பெண்கள் தான் என்று தானே எண்ணுகிறீர்கள்; அது உண்மையல்ல... ஆண்கள் தான் தான் "சூப்பர் குக்!' சமீபத்தில் , பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சர்வேயில் கூறியிருப்பதாவது: சமையல் அறைக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் தான் என்று, ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது, பல நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேக் கள் உறுதி செய்துள்ளன. எந்த ஒரு உணவையும் சுவையாக சமைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்; பெண்கள் அல்ல. அதற்காக, பெண்களை, ஆண்கள் மட்டம் தட்டுவதில்லை.சமையல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும், தனக்கு சமமான அந்தஸ்த்தை மனைவிக்கு தருகிறனர் கணவர்கள். அதனால் தான் , ஷாப்பிங் போகும் போதும்,பொறுமையாக மனைவியின் பின்னால் காத்திருக்கின…

    • 11 replies
    • 3.1k views
  9. Started by உடையார்,

    தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோ கோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி) சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டி சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டி தனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவு தேங்காய் எண்ணெய் 1/2 போத்தல் உப்பு அளவாக செய்முறை: மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகாய்த்தூள் உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க. கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவ…

  10. தேவையான பொருட்கள்! கோழிச்சதை-500கிராம் தக்காளி -1 வெங்காயம்-2 குடமிளகாய்-2 முட்டை -3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் -5ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவையான அளவு போடவும் நட…

  11. சுடச்சுட சுட்டது இது ஒருவகை சுவை ஆச்சியின் கைப்பக்குவம் கையிலே தெரிகிறது எச்சில் ஊறி செல்கிறது

  12. Started by nunavilan,

    அன்னாசி அல்வா அன்னாசிப்பழம் 1 பால் 200 மி.லி சர்க்கரை ஒன்றரை கப் திராட்சை 8 ஏலப்பொடி சிறிது நெய் 200 மி.லி கேசரிப்பவுடர் கால் தேக்கரண்டி உப்பு ஒரு சிட்டிகை அன்னாசியைத் தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு இட்லி பானையில் வைத்து சிறிது நேரம் ஆவியில் வேகவைக்கவும். பழம் வெந்தபின், அவற்றை சிறிது நேரம் ஆறவைத்து, பின் சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு 100 மி.லி. தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாக காய்த்துக் கொள்ளவும். பாகு கெட்டியாய் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அன்னாசி விழுதினைப் போட்டு, ஏ…

    • 3 replies
    • 3.1k views
  13. Started by Athavan CH,

    எனது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறா ஒவ்வாமைப் பிரச்சனையால் இப்போது சமயலறை எனது பொறுப்பில், அசைவம் சமைப்பது எனக்கு பிரச்ச்னையில்லை , ஆனால் சைவம் மிகப் பெரிய தலைவலி, எனது மனைவிக்கு இடையிடையே கட்டாயம் சைவம் தேவை, எனது மனைவி சொல்லித் தரும் முறைகளில் சைவம் சமைத்துக் கொடுத்து எனக்கு அலுத்து விட்டது, நான் சில தேடல்களை செய்தேன் , அண்மையில் தமிழ்க்கடைக்குச் சென்ற போது எனது தேடலில் சிக்கியது பன்னீர். இணையத்தில் துலாவி பிறகு எனது முறைகளையும் கலந்து செய்த பன்னீர் கறி தற்சமயம் எங்கள் வீட்டில் செம கலக்கல் , நான் பார்த்த சில பன்னீர் செய்முறைகளை உங்களுடன் பகிர்கின்றேன், உங்கலிடமும் டிப்ஸ் இருந்தால் தாருங்கள் (பன்னீர் என்பது பாலில் செய்யப்படும் ஒரு வகை கடினமான சீஸ் என நினைக்கிறேன…

  14. Started by Jamuna,

    தேவையான பொருள்கள்: மில்க்மெய்ட் - 3/4 டின் பால் - 1/2 லிட்டர் பால் க்ரீம் - 1 1/2 கப் வெனிலா எசன்ஸ் செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். க்ரீமை லேசாக மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளவும். க்ரீமுடன் மில்க்மெயிட், பால் மற்றும் சில சொட்டுகள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான அலுமினியம் டப்பா அல்லது வேறு உறைய வைக்கும் கண்டெய்னரில் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். கலவை டப்பாவில் முக்கால் அளவு மட்டும் இருக்குமாறு கண்டெயினர் பெரிதாக இருக்கட்டும். பாதி உறைந்ததை எடுத்து மீண்டும் மிக்ஸியில் மிக மிக மென்மையாக ஆகும்வரை அடித்துக் கலக்கவும். மீண்டும் அதே கண்டெயினரில் ஊற்றி ப்ரீசரில் நன்கு உறைய வைத்து (4 மணி நேர…

    • 3 replies
    • 3.1k views
  15. Started by starvijay,

    தேவையான பொருட்கள்: புளித்த மோர்: 2 ஆழாக்கு கடலைப் பருப்பு: 1 தேக்கரண்டி துவரம்பருப்பு: 1 தேக்கரண்டி தேங்காய்: அரை மூடி காய்ந்த மிளகாய்: 5 பெருங்காயம்: சிறு துண்டு கடுகு: அரை தேக்கரண்டி உளுந்துப் பருப்பு: 1 தேக்கரண்டி தனியா: 2 தேக்கரண்டி வெந்தயம்: அரை தேக்கரண்டி அரிசி மாவு: ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி: கொஞ்சம் உப்பு: தேவையான அளவு செய்முறை: மோரை எடுத்து அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்க்கவும். அதில் அரிசி மாவு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலக்கவும். வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய், உளுந்துப் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பரு…

    • 2 replies
    • 3.1k views
  16. Started by நவீனன்,

    மீன் புட்டு தேவையானவை: சுறா மீன் - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வெங்காயம் - 2 மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி சீரகத் தூள் - அரை தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு இணுக்கு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை: 1.சுறா, சூறை, கோலா போன்ற‌ புட்டு செய்யும் மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக‌ வைக்கவும். 2.மீனை ஆற‌ வைத்து முள் இன்றி எடுத்துவிட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். 3.இதனுடன் பொடியாக‌ நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான‌ அளவு உப்பு (வேக‌ வைக்கும் போது உப்பு சேர்த்துள்ளதால் குறைவாக‌ சேர்க்கவும…

  17. Coconut Sorbet ரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர் கற்றுத்தந்த தேங்காய் சோர்பற் நினைவுக்கு வந்தது. தேவையான பொருட்கள்: சீனி 1 கப் தேங்காய் பால் 3/4 கப் தண்ணி 1 கப் துருவி காயவைத்த தேங்காய் பூ 1/2 கப் தேசிக்காய் புளி 1 தே.க மின்ற் இலை செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் சீனியையும், நீரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். சீனி நன்றாக க…

    • 9 replies
    • 3.1k views
  18. நெத்தலி மீன் குழம்பு… தேவையான பொருட்கள் நெத்தலி மீன் – 1/4 கிலோ தக்காளி – 2 வெங்காயம் – 2 புளி – தேவைக்கேற்ப மிளகாய்த் தூள் – 4 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – கால் கப் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : நெத்தலி மீனின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கி விட்டு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை வெட்டி வைக்கவும். புளியைக் கரைத்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கரையுங்கள். அடுப்பில் குழம்பு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். இதில் வெட்டிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள். வதங்கியதும் புளிக் கரைசலை…

  19. உருளைக் கிழங்கு போளி தேவையான பொருட்கள் உருளைக் கிழங்கு - 500 கிராம், தேங்காய் - 2 மூடி, சீனி - 2 கப், கோதுமை மா - 500 கிராம், உப்பு - 1/2 கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 கரண்டி, நல்லெண்ணெய் - 1/2 கப், நெய் - 100 கிராம் செய்முறை கோதுமை மாவில், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கவும். 2 மணிநேரம் இந்த மாவை ஊறவிடவேண்டும். உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கையும் தேங்காய் துருவலையும் மிருதுவாக அரைத்துக் கொண்டு இத்துடன் சீனியையும் சேர்த்து கனமான ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக கிளறுங்கள். இதில் 2 கரண்டி நெய்யையும் சேர்க்க வேண்டும். ஏலக்காய…

    • 8 replies
    • 3.1k views
  20. தேவையான பொருட்கள மாங்காய் வற்றல் - 8 துண்டுகள், சுண்டைக்காய் வத்தல் - 12, , சி. வெங்காயம் - 10, , பூண்டுபல் - 10, , மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி, , கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி , தேங்காய்துருவல் - 1/4 கப், கடுகு - 1 தேக்கரண்டி, , உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி, , வெந்தயம் - 1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி, வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு, , கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. , செய்முறை மாங்காய் வற்றல் 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும். , தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். , ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும் கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறி…

  21. வாழைக்காய் வழக்கமாக பொரியல் பால்கறி குழம்பு என்று பலவகையாக சமைப்பார்கள்.அனேகமானவர்கள் வாழைக்காயிலேயே மிகவும் சத்தான தோலை எறிந்துவிடுவார்கள்.ஊர் என்றால் மாட்டுக்கும் கெடாய் ஆட்டுக்கும் போடுவார்கள்.இங்கு ஆடு மாடு இல்லாததால் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள்.சரி அருமையான இந்த சம்பலை எப்படி செய்வதென்று பார்ப்போம். ஒரு தடவை சமைப்பதற்கு அல்லது பெரிப்பதற்கு 3 அல்லது 4 வாழைக்காய் பாவிப்பார்கள். வாழைக்காயை எடுத்து பட்டும் படாமல் மேலால் சுரண்டி வழைமையாக தோல் வெட்டி எடுப்பது போல் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு சட்டியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு 20 நிமிடமளவு(மசித்து பார்க்க தெரியும் அவிந்தது காணுமா என்று)அவித்த பின்னர் தண்ணீர் இருந்தால் ஊற்றிவிட்டு சூட்டுடனேயே…

    • 14 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.