நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
நாட்டுக்கோழி ரசம் :செய்முறைகளுடன்..! தேவையானவை: நாட்டுக்கோழி - ஒரு கிலோ, தக்காளி - 300 கிராம், சின்ன வெங்காயம் - கால் கிலோ, மல்லித்தூள் - 4 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 10 பல், சின்ன வெங்காயம் - 5, எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நாட்டுக்கோழியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து... நறுக்கிய சின்ன வெங்காயம், த…
-
- 3 replies
- 1.7k views
-
-
முருங்கைக் கீரை – 1 கப் சின்ன வெங்காயம் – 6,7 இளம் சிவப்பான பச்சை மிளகாய் – 4 (பச்சை நிறத்துடைய மிளகாயைத் தவிர்த்து இளம் சிவப்பு மிளகாய் சேர்துக் கொண்டதும் முருங்கை இலையை எடுத்துச் சாப்பிடும் போது மிளகாயை இலகுவாக எடுத்து அகற்றலாம்.) 2தேங்காய்ப் பால் – 2 கப் தண்ணீர் – ¼ கப் உப்பு தேவையான அளவு மஞ்சள் பொடி விரும்பினால் தேசிச்சாறு – 1 தேக்கரண்டி தாளிக்க விரும்பினால் கடுகு – ¼ ரீ ஸ்பூன் உழுத்தம் பருப்பு – ½ ரீ ஸ்பூன் இலையைக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நீளமாக வெட்டி வையுங்கள். பச்சை மிளகாய்களை வாயைக் கீறிவிடுங்கள். பாத்திரத்தில் இவற்றைப் போட்டு உப்பிட்டு தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடங்கள் இலை அவியும் வரை அவிய விடுங்கள். அவிந்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி…
-
- 4 replies
- 1.7k views
-
-
குஞ்சு மீன் சொதி. சொதி என்றால்... எல்லோருக்கும் பிடித்தது. இதனை... எந்த உணவுடனும், கலந்து சாப்பிடலாம் என்பது, இதன் சிறப்பு. அதிலும் குஞ்சு மீனில் வைக்கும் சொதியின், ருசியே... வாயில் நீரூற வைக்கும். சரி.... குஞ்சு மீன் சொதியை, எப்படி வைப்பது என்று பார்ப்போமா. தேவையானவை: 500 கிராம் சிறிய மீன்.(Anchovi என்ற மீன், தமிழ்க் கடைகளில் வாங்கலாம்) (இதில் முள்ளை சுலபமாக அகற்றலாம்.) 2 வெங்காயம். 7 பச்சை மிளகாய். 1 கப் தேங்காய்ப்பால் அல்லது 2 கப் பசுப்பால். 3 கப் தண்ணீர். 1 தேக்கரண்டி மஞ்சள். 4 நெட்டு கருவேப்பிலை. உப்பு தேவையான அளவு. தாளிக்க: கடுகு, சீரகம், வெந்தயம், மூன்று செத்தல் மிளகாய், எண்ணை. செய்முறை: வெங்காயத்தை தோலுரித்து... கழுவி, நீளப் பாட்டாக, மெல்லி…
-
- 11 replies
- 1.7k views
-
-
தேவையானவை மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம் கருவாடு - 100 கிராம் கறித்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி பால் - 1/2 டம்ளர் எலுமிச்சம் பழம் - பாதி தாளிக்க: சின்ன வெங்காயம் - 30 கிராம் செத்தல் மிளகாய் - 3 கறிவேப்பிலை - 2 கொத்து கடுகு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி செய்முறை வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கருவாட்டை 10 நிமிடங்கள் சூடான தண்ணீரில் போட்டு ஊற வைத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுத் துண…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெங்காய போண்டா செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - 1 ஸ்பூன் மைதா மாவு - 4 ஸ்பூன் அரிசி மாவு - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை : * வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
தேவையான பொருட்கள்: ரவை - அரை கிலோ அல்லது அதற்கு மேல் நெய் - அரை கிலோ பால்கோவா - 1000 கிராம் சர்க்கரை - 800 கிராம் அல்லது அளவுக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும். பிஸ்தா,கிஸ்மிஸ் - 200 கிராம் ஏல அரிசி பவுடர் - 4 கரண்டிகள் சிறிதளவு எலுமிச்சை சாறு. செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றவும். ரவையைச் சேர்த்து ஓரளவுக்குக் கிளறவும். பிறகு பால்கோவா சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று கலந்தபிறகு அதனை அடுப்பிலிருந்து எடுத்து வைக்கவும். பிறகு வேறு பத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து சர்க்கரைப் பாகு காய்ச்சவும். எலுமிச்சை சாறு வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம் எலுமிச்சை சேர்த்தால் சர்க்கரயில் உள்ள அழுக்குப் போய்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிக்கன் மஞ்சூரியன் தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 500 கிராம் (எலும்பு நீக்கியது) மேல் மாவுக்கு மைதா மாவு - 125 கிராம். கார்ன்ப்ளவர் - 50 கிராம் பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி முட்டை - 1 எண்ணம் உப்பு - தேவையான அளவு பிற தேவைகள் நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி வெங்காயம் - 50 கிராம் மிளகாய் - 75 கிராம் இஞ்சி - 50 கிராம் பூண்டு - 50 கிராம் குடை மிளகாய் - 25 கிராம் சோயா சாஸ் - 1 தேக்கரண்டி வினிகர் - 1/2 தேக்கரண்டி அஜினோமோட்டா - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. மைதா, பேக்கிங் பவுடர், மிளகுத் தூள், கார்ன்ப்ளவர், முட்டை ஆகியவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி…
-
- 1 reply
- 1.7k views
-
-
தேவையானபொருட்கள் 400 கிராம் றவ்வை 350 கிராம் சீனி 250 கிராம் மாஜரீன் 400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது) 250 கிராம் முந்திரிகை வற்றல் 1/2 ரின் அன்னாசி 1/2 ரின் ரின்பால் 5 முட்டை 50 கிராம் இஞ்சி 1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்) 1 மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர் 1 மேசைக்கரண்டி வனிலா 50 கிராம் கஜூ செய்முறை முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும். அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும். வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும். பின்னர் ஊறவைத்த சேர்வை…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
வாழைப்பழ முட்டை தோசை. காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் காலை உணவு செய்ய நினைத்தால், வாழைப்பழ முட்டை தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இதனை உட்கொள்வதும் நல்லது. சரி, இப்போது வாழைப்பழ முட்டை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: நன்கு கனிந்த வாழைப்பழம் - 1 முட்டை - 2 சீனி/உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து ம…
-
- 11 replies
- 1.7k views
-
-
இந்த சீரக மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 10 பல் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 2 டீஸ்பூன் புளி - சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுது - அரை கப் உ.பருப்பு, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன் கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது செய்முறை : * மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும். * புளியை நன்றாக கரைத்து கொள்ளவும…
-
- 0 replies
- 1.7k views
-
-
பிடலை வாழவைத்த முருங்கை; அதன் பயனை உணர்வார்களா எம் மக்கள்? சாதாரணமாக ஒவ்வொருவர் வீட்டுக் கோடிகளிலும், வெறும் காணிகளிலும் முருங்கை மரத்தை நாட்டி வைத்திருப்போம். அதன் மூலம் ஆகக் கூடிய பயன்களாக நாம் முருங்கைக்காய் கறியையும், இலை வறையையும் தான் செய்து நாங்கள் சாப்பிட்டிருப்போம். ஆசியாவிலிருந்து உலகெங்கும் பயணிக்கும் முருங்கையை இலவசமாக பெறும் நம் மக்கள் அதன் பெறுமதியை உணராமை தான் வேதனையளிக்கிறது. இதனை எல்லாம் தாண்டி முருங்கை மரத்தின் சகல பகுதிகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மருத்துவ பொக்கிஷத்தை எங்கள் கோடிகளில் வைத்துக் கொண்டு அதன் முழுமையான பயன்களை நாம் அறியாது இருப்பது தான் வேதனையானது. எத்தனையோ ந…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆட்டு மூளை ஆம்லெட் ! தேவையான பொருட்கள்: ஆட்டு மூளை – ஒன்று கறி மசாலா தூள் – ஒரு ஸ்பூன் முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று இஞ்சி, பூண்டு விழுது – ஒரு ஸ்பூன் உப்பு – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று. …
-
- 2 replies
- 1.7k views
-
-
கள உறவு சிவரதனின் அம்மாவின் யாழ் சமையல் குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வந்துள்ள குறிப்பு. உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்கும், வாழ்த்துக்கள், சிவரதன்.... https://www.sundaytimes.lk/211226/plus/their-recipe-to-success-466461.html
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
அதிசய உணவுகள்- 10: 300 கிலோ டியூனா மீன் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஒவ்வொன்றும் 300 கிலோ எடை கொண்ட டியூனா மீன்களுடன் சாந்தகுமாரி இயந்திரங்களின் துணையுடன் அறுக்கப்படும் டியூனா காய்ந்த வயிறு சந்தோஷத்துடன் மிக அரிதாக துணை நிற்கிறது - ஹெலன் கில்லர் மிகப் பிரம்மாண்டமான சுகிஜி அங்காடியின் 2 லட்சத்து 30 ஆயிரம் ஸ்கொயர் மீட்டர் அளவுக் கொண்ட ‘உள்’ மார்கெட்டுக்குள் நுழைந்தோம். டியுனா மீன்கள் ஏலம் விடப்படும் பகுதிக்கு எங்களை வழிகாட்டி வழிநடத்திச் சென்றார். தரை ஈரமாக இருந்ததால் புடவையின் கொசுவத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிம்பிளான... மோர் குழம்பு மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: மோர் - 1 கப் தேங்காய் - 1/2 கப் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு…
-
- 10 replies
- 1.7k views
-
-
முட்டைகோசுப் பொரியல் தேவையான பொருட்கள்: முட்டைகோசு - 1 தேங்காய் - 1 தக்காளி - 50 கிராம் வெங்காயம் - 25 கிராம் பூண்டு - 10 கிராம் மிளகு - அரைத்தேக்கரண்டி சீரகம் - அரைத்தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி - ஒரு கட்டு மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி புளி - 5 கிராம் சர்க்கரை - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி எண்ணெய் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: தேங்காயை உடைத்துத் துருவி பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியைப் பால் பிழிந்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை வேரை நீக்கி, அத்துடன் எடுத்து வைத்த தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உரித்த பூண்டு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள…
-
- 1 reply
- 1.7k views
-
-
ரியூனா கறி தேவையான பொருட்கள் ரியூனா மீன் பேணி - 1( Tuna in Brine or Tuna in Sunflower Oil) 2 தக்காளிப் பழம் 1 வெங்காயம் - நடுத்தர அளவு 2- 3 பச்சை மிளகாய் சிறிதளவு பெருஞ்சீரகமும் கடுகும் சிறிதளவு எண்ணை சிறிதளவு மிளகாய்த் தூள் . கருவேப்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு தேசிக்காய்ப் புளி அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணையைவிட்டு சூடாக்கி பின்னர் வெட்டிவைத்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு தாளிக்கவும், ஓரளவு வதங்கியதும் கடுகு பெருங்சீரகம், கருவேப்பிலை எல்லாத்தையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் பொரிந்து பொன் நிறமாய் வந்ததும் வெட்டிவைத்த தக்காளிப் பழத்தையும் போட்டு ரியூனாவையும் போட்டு சிறிது மிளகாய்த் தூள் உறைப்புக்குத் தகுந்த மாதிரிப் போ…
-
- 0 replies
- 1.7k views
-
-
குழம்பு வகைகள் மணத்தக்காளி வற்றல் குழம்பு தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
இங்கு ஓரு சுவையான சிக்கன் கொத்து ரொட்டி எப்படி சுவையாக வீட்டில் செய்யலாம் என்று காட்டி இருக்கிறேன் .செய்து பாருனகல் கருத்துக்களை சொல்லுங்கள் ....தாமரை
-
- 11 replies
- 1.7k views
-
-
வெண்டைக்காய் ஃப்ரை வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் கொடுத்தால், அவர்களின் மூளை நன்கு செயல்படும். அத்தகைய வெண்டைக்காளை சற்று வித்தியாசமாக ராஜஸ்தான் ஸ்டைலில் ஃப்ரை செய்து கொடுத்தால், உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு அந்த ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 20 உள்ளே வைப்பதற்கு... கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மாங்காய் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மஞ்…
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
பொரித்து இடித்த சம்பல் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய்ப்பூ - 2 கப் செத்தல் மிளகாய் - 10/12 (உறைப்பை பொறுத்து) சின்ன வெங்காயம் - சிறிதளவு தாளிப்பதற்கு - வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மாசிக் கருவாட்டுத் தூள் - ஒரு மேசைக் கறண்டி செய்முறை 1. காம்பு உடைத்த செத்தல் மிளகாய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு, மாசிக் கருவாட்டுத் தூள் ஆகியவற்றை மட்டும் சேர்த்து உரலில் இடிக்கவும்(சைவாமாக இருப்போர் மாசிக் கருவாட்டைத் தவிர்க்கவும்). அம்மியில், அல்லது கிறைண்டரில் அரைக்கலாம். ஆனால…
-
- 4 replies
- 1.7k views
-