நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 15 replies
- 970 views
-
-
பொரித்து இடித்த சம்பல் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய்ப்பூ - 2 கப் செத்தல் மிளகாய் - 10/12 (உறைப்பை பொறுத்து) சின்ன வெங்காயம் - சிறிதளவு தாளிப்பதற்கு - வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மாசிக் கருவாட்டுத் தூள் - ஒரு மேசைக் கறண்டி செய்முறை 1. காம்பு உடைத்த செத்தல் மிளகாய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு, மாசிக் கருவாட்டுத் தூள் ஆகியவற்றை மட்டும் சேர்த்து உரலில் இடிக்கவும்(சைவாமாக இருப்போர் மாசிக் கருவாட்டைத் தவிர்க்கவும்). அம்மியில், அல்லது கிறைண்டரில் அரைக்கலாம். ஆனால…
-
- 4 replies
- 1.7k views
-
-
கணவாய் மீன் தொக்கு என்னென்ன தேவை? கணவாய் - 300 கிராம், வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 50 கிராம், நறுக்கிய பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - 1 கொத்து, இஞ்சி பூண்டு விழுது - 1½ டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், சோம்பு தூள் - தலா 2 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கணவாயை கழுவி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீரகத்தூள், சோம்பு தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சைவாசனை போனதும் மீனை சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பர…
-
- 7 replies
- 1.9k views
-
-
தர்பூசணி நீர்மோர் தேவையானப்பொருட்கள்: தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப் தயிர் - 1/2 கப் எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை புதினா - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும். கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும். கவனிக்க: வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தென்னிந்திய உணவுகளில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் உளுந்து வடை என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் தென்னிந்திய ஹோட்டல்கள் எங்கு சென்று இட்லி அல்லது பொங்கல் கேட்டாலும், அத்துடன் இந்த உளுந்து வடையையும் தான் வைத்து தருவார்கள். ஆனால் இத்தகைய வடையை காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாலையில் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே, வீட்டில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த உளுந்து வடையை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் மிளகு - 2 டீஸ்பூன் இஞ்சி - 1 இன்ச் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 3 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் உளுத்தம் பருப்பை 2 கப் தண்ணீ…
-
- 1 reply
- 974 views
-
-
-
- 0 replies
- 622 views
-
-
புடலங்பழ பிரட்டல் வீட்டில் இந்த முறைதான் புடலங்காய் கன்று நட்டனான். விதை எடுப்பதற்காக ஒரு புடலங்காயை முற்றவிட, அது இன்று பழமாகியிருந்து. விதையை எடுத்தபின் மிகுதியை எறிய மனமில்லை, என்ன செய்யலாமென்று யோசித்துவிட்டு, தாழித்து பிரட்டல் ஆக்கி இப்பதான் சாப்பிட்டேன், சுவை பரவாயில்லை. என் கேள்வி - நீங்கள் யாராவது புடலங்பழத்தில் கறி வைத்திருக்கின்றீர்களா, அப்படியாயின் செய்முறையை தரமுடியுமா? இன்னும் ஒன்று விட்டுள்ளேன், அடுத்த கிழமை பழுத்துவிடும். இதுமாதிரிதான் என் வீட்டுத்தோட்ட கன்று
-
- 11 replies
- 1.8k views
-
-
விறகிலும் ,எரிவாயுவிலும், மின்சாரத்திலும் தான் சமைக்க வேண்டும் என்று இல்லை. இப்படி குப்பையை கொழுத்தியும் சமைக்கலாம். 😂😂
-
- 32 replies
- 2.9k views
-
-
வாங்க இண்டைக்கு நாம தாமரை தண்டு வச்சு ஒரு பிரட்டல் கறி செய்வம், இது விரத சாப்பாட்டோடையும், மரக்கறி உணவுகளோடையும் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்கும் இந்த தாமரை தண்டு கிடைச்சா இப்பிடி ஒரு தரம் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க, செய்து பாத்திட்டு எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 569 views
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
நேற்று எனது அம்மா எனக்கு புதுசா ஒரு சமையல் சொல்லித் தந்தா. இன்று நான் அதை உங்களுக்கு சொல்லித் தரலாம் என்று நினைக்குறன். என்ன எல்லோரும் ரெடியா? சரி குறுக்க பேசாமல் கவனமாக கேட்டு செய்யுங்கோ :wink: எள்ளுச்சம்பல் செய்முறை தேவையான பொருட்கள் எள் - 2 சுண்டு உள்ளி - 4 முழு உள்ளி நற்சீரகத்தூள் - 2 கரண்டி மிளகுதூள் - 1 கரண்டி உப்பு - சுவைக்கேற்ப புளி- ஒரு பெரிய தேசிக்காய் அளவு செத்தல் மிளகாய் - காரம் குறைவாக என்றால் 50 காரம் கூட என்றால் 75 கருவேப்பிலை செய்முறை முதலில் எள்ளை பொன்னிறமாக வரும் வரையும் வறுக்க வேண்டும். அதன் பின் கருவேப்பிலை, மிளகாய், உள்ளையை தனித்தனியாக பொரிக்க வேண்டும். பொரித சட்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு பு…
-
- 44 replies
- 9.3k views
-
-
மரவள்ளியா என்று நினைப்பவர்களுக்கு; சவ்வரிசியே மரவள்ளி தானே.
-
- 6 replies
- 1.1k views
-
-
சிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி சிலோன் பரோட்டா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே சிக்கன் வைத்து சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - அரைக்கிலோ பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் - 2 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பிரிஞ்சி இலை - 2 சிலோன் கறிபவுடர் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி தேங்காய் பால் - 2 கப் எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு நெய் - தேவையான அளவு சிலோன் கறி …
-
- 4 replies
- 1.2k views
-
-
கேரட் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கேக் வெட்டுவதாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு உங்கள் கையாலேயே கேக் செய்து கொடுத்து அசத்துங்கள். உங்களுக்கு கேக் எப்படி செய்வதென்று தெரியவில்லையா? கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தமிழ் போல்ட் ஸ்கை கேரட் கேக்கை எப்படி செய்வதென்று தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள். கேரட் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் தேவையான பொருட்கள்: மைதா - 3/4 கப் கோதுமை மாவு - 1/4 கப் துருவிய கேரட் - 1/2 கப் தயிர் - 3/4 கப் ஆலிவ் ஆயில் - 1/4 கப் பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பொடி - 1/2 கப் வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன…
-
- 4 replies
- 967 views
-
-
காளான் ரோஸ்ட் காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இந்த காளானை பலருக்கு மசாலா செய்து மட்டும் தான் சாப்பிடத் தெரியும். ஆனால் காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் காளான் ரோஸ்ட் மிகவும் சுவையான சைடு டிஷ் மட்டுமின்றி, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். இங்கு அந்த காளான் ரோஸ்ட் ரெசிபியை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். காளான் ரோஸ்ட் தேவையான பொருட்கள்: சுத்தம் செய்யப்பட்ட காளான் - 3/4 கப் (நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பெரிய வெங்காயம் - 1 (பொடிய…
-
- 4 replies
- 1.1k views
-
-
கோதுமை அல்வா: தீபாவளி ரெசிபி உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள். இந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும். சரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1/4 கப் சர்க்கரை - 1/2 கப் தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப் நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை பாதாம் - 4 (நறுக்கியது) செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதி…
-
- 6 replies
- 4.4k views
-
-
கிட்னி கூட்டு தேவையான பொருட்கள் ஆட்டு கிட்னி - கால் கிலோ வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி தனியாதூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி சீரக தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - முக்கால் முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு) பச்ச மிளகாய் - ஒன்று கொத்து மல்லி தழை - சிறிது எண்ணை - நான்கு தேக்கரண்டி பட்டை - ஒரு சிறிய துண்டு செய்முறை 1. ஆட்டு கிட்னியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். 2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. ஓர…
-
- 2 replies
- 773 views
-
-
-
- 0 replies
- 621 views
-
-
பாகற்காய் தக்காளிப் புளிக்கறி உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை. தேவையான பொருட்கள்: பாகற்காய் - 250 கிராம் தக்காளிப்பழம் - 250 கிராம் வெங்காயம் - 5 பூண்டு - 10 வெந்தயம் - 2 மிளகாய் வத்தல் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 25 கிராம் நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன் நீர் - தேவைக்கேற்ப …
-
- 5 replies
- 4.9k views
-
-
மீன் குழம்பு என்றாலே மிகவும் சுவையாக இருக்கும், அதிலும் கிராமத்து மீன் குழம்பு என்றால் தனிச்சுவை கொண்டதாக இருக்கும். தேவையான பொருட்கள்: மீன் - ½ கிலோ நல்லெண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1 டிஸ்பூன் சிறிய வெங்காயம் - 5 வெந்தயம் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை: மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்கா…
-
- 1 reply
- 837 views
-
-
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப) சோளமாவு: 1 தே. கரண்டி முட்டை : 1 பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப) இஞ்சி : ஒரு சிறு துண்டு டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி சோயா சாஸ் : 2 தே. கரண்டி சில்லி சாஸ்: 1 தே.கரண்டி மஞ்சள் தூள் : சிறிதளவு உப்பு தேவையான அளவு எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி செய்முறை *கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும். *ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி …
-
- 2 replies
- 937 views
-
-
மைக்ரோவேவ் சக்கரை பொங்கல் தேவையான பொருட்கள்: அரிசி 2 கப் உடைத்த பாதி பயறு 1 கப் தேங்காய் பால் 1 கப் சக்கரை - உங்களுக்கு எவளவு வேணுமோ போடலாம் நீர் - 4 கப் நெய் - 3 டேபில் கரண்டி (நிறைய போட்ட பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிட வாய்ப்பு உண்டு) ஏலக்காய் - 4 (தூளாக்கி போடுங்கோ, இல்லாடி கடிபடும், நல்லா இருக்கது) 1. பயறை சிறிது வறுத்து கொள்ளவும். சாப்பிட்டு பார்த்தால் மொறு மொறுப்பாக இருக்க வேண்டும். 2. அரிசி,நீர்,பால் இவற்றை கலந்து மைக்கோவேவில் வைத்து மீடியத்தில் 10 நிமிடம் வரை வேக வைக்கவும். 3. சிறிதளவு நீரில் சக்கரையை நன்றாக கரைக்கவும். 4. சக்கரையையும் மிகுதி உள்ள பொருட்களையும் ஒன்றாக போட்டு கலக்கி 2 நிமிடத்துக்கு வைக்கவும். 5. கை…
-
- 8 replies
- 3.3k views
-
-
தேவையானவை க்ரீம் செய்ய: பால் - அரை லிட்டர் கஸ்டர்ட் பவுடர் - 3 மேசைக்கரண்டி (வெனிலா ஃப்ளேவர்) மைதா - 2 தேக்கரண்டி ஃப்ரஷ் க்ரீம் - 2 தேக்கரண்டி சீனி - 50 கிராம் வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி வெண்ணெய் - 2 தேக்கரண்டி கடல்பாசி செய்ய: கடல்பாசி - சிறிய கைப்பிடி அளவு (5 கிராம்) சீனி - 4 மேசைக்கரண்டி ஃபுட் கலர் - சில துளிகள் வெனிலா எசன்ஸ் - ஒரு துளி கிவி பழம் - ஒன்று செய்முறை க்ரீம் செய்ய கொடுத்துள்ளவற்றில் வெண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து க்ரீம் பதத்திற்கு காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் கொதிக்கும் தண்ணீரில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
முடக்கத்தான் இலை ரசம் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு 25 கிராம் முடக்கத்தான் இலை - கிள்ளியது 2 கைப்பிடி புளி அல்லது தேசிக்காய் - தேசிக்காய் - 1 (அல்லது) புளி கோலி உருண்டை அளவு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - 1 டீஸ்பூன் தக்காளி- நாட்டு தக்காளி - 1 (பெங்களூர் தக்காளியாகின் 2) மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் செய்முறை: துவரம் பருப்பு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். முடக்கத்தான் இலை எடுத்துத் தண்ணீர்விட்டு வேக வைக்கவும். பிறகு கடைந்து கொள்ளவும். அல்லது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளி எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், தக்காளி இவைகளைப் போட்டுத் தண்ணீர் விட…
-
- 6 replies
- 5.5k views
-
-
ஜேர்மன் சாப்பாடு. இது ஜேர்மனிய மக்களின் முக்கிய உணவு. பார்த்து ரசியுங்கள்.
-
- 10 replies
- 2.2k views
-