நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பற்றிஸ் கறி செய்யத் தேவையான பொருட்கள். 1. எலும்பில்லாத மட்டன் – ¼ கிலோ 2. வெங்காயம் – 1 3. மிளகாயத் தூள் – 1 ரீ ஸ்பூன் 4. தனியாத் தூள் – ½ ரீ ஸ்பூன் 5. சீரகத்தூள் – ½ ரீ ஸ்பூன் 6. மஞ்சள் தூள் – சிறிதளவு 7. மட்டன் மசாலா – 1 ரீ ஸ்பூன் 8. இஞ்சி உள்ளி பேஸ்ட் 2 ரீ ஸ்பூன் 9. உப்பு தேவையானளவு 10. கறிவேற்பிலை – சிறிதளவு 11. எலுமிச்சைச் சாறு – சில துளிகள் 12. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்யும் முறை இறைச்சியை அரைத்து எடுத்து அதனுடன் உப்பு, தனியாத் தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலாத் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி உள்ளி பேஸ்ட் பிரட்டி, 15 நிமிடம் ஊறவிடுங்கள். பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேற்பிலை போட்டு, இறைச்…
-
- 2 replies
- 4k views
-
-
புதினா சாதம் தேவையானவை வடித்த சாதம் - 1 கப் மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப்ப அரைக்க புதினா - 1 கட்டு கொத்தமல்லி இலை - கொஞ்சம் பச்சை மிளகாய் – 2 இஞ்ஞி - 1 சின்ன துண்டு லெமன் ஜூஸ் - ½ தே.க தாளிக்க எண்ணெய் - 1 தே.க கடுகு - ½ தே.க மிளகாய் வற்றல் - 1 பெருங்காய தூள் - ¼ தே.க கறிவேப்பிலை - கொஞ்சம் செய்முறை சாதத்தை நல்ல உதிரியாக வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அரைத்துள்ள மசாலவை போட்டு உப்பு சேர்த்து நல்ல பச்சை வாசனை போக வதக்கவும். வடித்துள்ள சாதத்தை அதில் கலந்து நல்ல கிளறவும். லெமன் ஜுஸ் விட்டு, கொஞ்சம் நெய்யும் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். நல…
-
- 3 replies
- 1.6k views
-
-
பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல் இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் இக் கறியும் சமைக்கப்படும். திவசம், அமாவாசை, பௌர்ணமி போன்ற பிதுருக்கு படைக்க வேண்டிய படையலில் நிச்சயமாக இக் கறியும் இடம் பெறுவது வழக்கம். பீன்ஸ் இனத்தைச் சேர்ந்த இது புரொட்டின் சத்தும் கூடியது. விரத நாட்களில் மட்டுமின்றி வீடுகளில் சாதாரண நாட்களிலும் இது சமையலில் இடம் பிடிக்கும். நீண்ட முற்றல் இல்லாத ஊர்ப் பயிற்றங்காயாக இருப்பது சுவையைக் கூட்டும். இக்காயுடன் வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு சேர்த்து குழம்பு செய்வதுண்டு. இத்துடன் தேங்காய்ப்பால் வெள்ளைக்கறியும் சமைக்கலாம். பொரியல், கூட்டு செய்வதும் வழக்கம். முற்றிய விதைகளைப் பொரித்தெடுத்து சிப்ஸ்சும் செய்து கொள்வார்கள். …
-
- 1 reply
- 3.6k views
-
-
தேவையானப் பொருட்கள் இறால் - அரை கிலோ சி. வெங்காயம் - ஐம்பது கிராம் பூண்டு - மூன்று பல் தக்காளி - மூன்று மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன் உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - மூன்று கொத்து தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன் சீரகம் - கால் டீ ஸ்பூன் செய்முறை * இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும். * வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும். * தேங்காய் & சீரகத்தை அரைக்கவும். * சோம்ப…
-
- 36 replies
- 12.7k views
-
-
தேவையான பொருட்கள் மொச்சைப்பயிறு – 1 கையளவு கருவாடு – சிறிதளவு கத்தரிக்காய் – 1/4 கிலோ வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 100 கிராம் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கறிவேப்பிலை – 2 கொத்து தனியாத்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணை – 1/2 குழிக்கரண்டி புளி – எலுமிச்சம் பழ அளவு கடுகு – சிறிதளவு செய்முறை * மொச்சைப் பயிறை வேக வைத்துக் கொள்ளவும். * கருவாட்டை மண் போக நன்கு அலசிக் கொள்ளவும். * கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். * ந…
-
- 1 reply
- 799 views
-
-
தேவையான பொருட்கள்: பாறை மீன் பெரியதாக நான்கு * மிளகாய்தூள் -இரண்டுகரண்டி * மஞ்சள்தூள் -ஒருகரண்டி * அரைக்கவும் * பச்சைமிளகாய் -50கிராம் * பூண்டு -10பல் * மிளகு -இரண்டு தேக்கரண்டி * மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி * உப்பு -தேவையான அளவு * வினிகர் நான்கு கரண்டி செய்முறை : * மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கிறி வைக்கவும் * அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும் * மீனில் அதைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும் * பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும் * அவெனை 280° சூடாகி அதில் மீனை வைக்கவும் * பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடு…
-
- 6 replies
- 934 views
-
-
இங்கு ஓரு சுவையான சிக்கன் கொத்து ரொட்டி எப்படி சுவையாக வீட்டில் செய்யலாம் என்று காட்டி இருக்கிறேன் .செய்து பாருனகல் கருத்துக்களை சொல்லுங்கள் ....தாமரை
-
- 11 replies
- 1.7k views
-
-
-
- 9 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 532 views
-
-
சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் மஞ்சூரியன். இன்று இந்த மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கிராம் சோள மாவு - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று இஞ்சி - அரை அங்குலம் பூண்டு - 10 பல் தக்காளி சாஸ் - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பச்சைமிளகாய் - 3 செய்முறை : வெங்காயம்,…
-
- 0 replies
- 858 views
-
-
வீட்டிலேயே டேஸ்டியான தயிர் வடை செய்வது எப்படி? வட இந்திய ஸ்டைல் ரெசிபி!! தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தயிர் வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான இந்திய ரெசிபி ஆகும். இந்த தெருவோர ஸ்டைல் உணவானது வெவ்வேறு இடங்களை பொருத்து வெவ்வேறு பேர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ரெசிபி ஆனது காரசாரமான மசாலா பொருட்களுடன் பருப்பு பேட்டர்களை கொண்டு செய்து அப்படியே இனிப்பு சுவை கொண்ட தயிரில் முக்கி எடுத்து கொத்தமல்லி சட்னி மற்றும் மாங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான். இந்த தயிர் வடை ரெசிபியை எல்லா நேரங்களிலும் பார்ட்டி மற்றும் பண்டிகைகளின் போதும் செய்து சுவைக்கலாம். சட்னியுடன் இந்த தயிர் வடையை சாப்பிடும் போது கண்டிப்பாக உங்கள் நாக்கு …
-
- 2 replies
- 2.3k views
-
-
-
சமையல்: முள்ளங்கி சப்பாத்தி நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்றுகின்றன. உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது முள்ளங்கி. அவ்வகையில் முள்ளங்கி சேர்த்துச் சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம். ஓமம் சேர்ப்பதால் வாசம் நிறைந்த சத்தான சப்பாத்தி ரெடி! தேவையான பொருட்கள்: முள்ளங்கி - 2 கோதுமை மாவு - 1 கப் சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் ஓமம் - 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன் தனியாத் தூள் - 1…
-
- 3 replies
- 1.1k views
-
-
கறிவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன் இதனை கலந்து நெய் விட்டு சாப்பிடலாம். மேலும் கறிவேப்பிலை துவையல் தயிர்சாதத்துடன் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - 1 கப் எண்ணெய் - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வர மிளகாய் - 5 பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி புளி - சிறிய துண்டு …
-
- 3 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: ரவை - அரை கிலோ அல்லது அதற்கு மேல் நெய் - அரை கிலோ பால்கோவா - 1000 கிராம் சர்க்கரை - 800 கிராம் அல்லது அளவுக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும். பிஸ்தா,கிஸ்மிஸ் - 200 கிராம் ஏல அரிசி பவுடர் - 4 கரண்டிகள் சிறிதளவு எலுமிச்சை சாறு. செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றவும். ரவையைச் சேர்த்து ஓரளவுக்குக் கிளறவும். பிறகு பால்கோவா சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று கலந்தபிறகு அதனை அடுப்பிலிருந்து எடுத்து வைக்கவும். பிறகு வேறு பத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து சர்க்கரைப் பாகு காய்ச்சவும். எலுமிச்சை சாறு வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம் எலுமிச்சை சேர்த்தால் சர்க்கரயில் உள்ள அழுக்குப் போய்…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பீட்சா குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பீட்சாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பீட்சா பேஸ் - ஒன்று பன்னீர் - ஒரு பாக்கெட் சீஸ் - 50 கிராம் வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - தேவையான அளவு காய்ந்த ம…
-
- 0 replies
- 485 views
-
-
செட்டிநாடு எலும்புக் குழம்பு இது மிகவும் சுவையாக இருக்கும். பாரம்பரியமானசெட்டிநாடு சமையல் இதை எளிதில் செய்து விடலாம்.. நீங்களும் செய்து பாருங்கள்.நான் சமைத்து ருசித்து பின்பு நீங்களும் செய்து ருசிப்பதற்காக செய்முறை இங்கே!நீங்களும் செய்து பாருங்கள்.நீங்களும் ருசிப்பிர்கள் தேவையான பெருட்கள் :- ஆட்டு எலும்பு – 1/2 கிலோ தூவரம் பருப்பு – 100 கிராம் உருளைக்கிழங்கு – 150 கிராம் கத்திரிக்காய் – 150 கிராம் முருங்கைக்காய் – 2 சின்ன வெங்காயம் – 100 கிராம் பெரிய வெங்காயம் – 100 கிராம் தக்காளி – கால் கிலோ பச்சைமிளகாய் – 10 வரமிளகாய் – 10 சீரகம் – 1 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் பட்டை – 4 பிரியாணி-இலை – 1 மஞ்சள் தூள் – 1 …
-
- 3 replies
- 1.4k views
-
-
மீன் புட்டு தேவையானவை: சுறா மீன் - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வெங்காயம் - 2 மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி சீரகத் தூள் - அரை தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு இணுக்கு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை: 1.சுறா, சூறை, கோலா போன்ற புட்டு செய்யும் மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 2.மீனை ஆற வைத்து முள் இன்றி எடுத்துவிட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். 3.இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு (வேக வைக்கும் போது உப்பு சேர்த்துள்ளதால் குறைவாக சேர்க்கவும…
-
- 4 replies
- 3.1k views
-
-
இன்டைக்கு எனக்கு வீட்டை பொழுது போகேல்ல. என்ன செய்வம் என்டு யோசிச்சன். அம்மாவும் தனக்கு ஏலாமல் இருக்கு நீ சமை என்டுட்டா சரி புதுசா ஏதாவது செய்வம் என்டு போட்டு களத்துல இறங்கிட்டன். இதோ எனது வீரதீர செயலை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். தேவையானப் பொருட்கள்:- வறுத்த உழுத்தம் மா - 1 சுண்டு வறுத்த சிவப்பு அரிசிமா - 1/4 சுண்டு சீனி அல்லது சக்கரை - 50 கிராம் ( சீனி விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை) உப்பு - 1 சிட்டிகை தேங்காய்ப்பால் - 4 கப் செய்முறை:- ஒரு பாத்திரத்தில் பால் விட்டு அதில் அரிசிமா, உழுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும். பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் ஒட்ட விடாது கிளறிக் கொண்டே இருக்கவும். …
-
- 17 replies
- 11.5k views
-
-
வேப்பம் பூ வடகம் இதுவரை செய்து பார்க்கவில்லை, இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு கன்று வளர்த்துவிட்டேன். பூ பூக்க தொடங்கிவிட்டது, செய்முறை தேடி பார்த்தபோது கிடைத்த து, உங்களுக்கு பாவற்றகாய், ..இப்படி ஏதாவதில் செய்யும் முறை இருந்தால் தரவும் யாழ்ப்பாண மக்களின் உணவு வகைகளில் வேம்புக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவாக இலையுதிர் காலத்தில் வேம்பின் இலைகள் முற்றாக உதிர்ந்துவிடும். இலை தளிர் காலத்தில் சிறிய சிறிய புதிய வேப்பம் இலைகளோடு கொஞ்சம்.. கொஞ்சமாக வேம்பம் பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது வேப்ப மரங்களைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். வேப்பங் காற்று உடலுக்கும் மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மருத்துவ ரீதியாக சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது என தற்கா…
-
- 11 replies
- 5.5k views
-
-
சுவையான மீன் சூப் செய்வது எப்படி எளிய முறையில் மீன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வஞ்சிர மீன் - 4 துண்டுகள் பெரிய வெங்காயம் - 2 மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - சுவைக்கு இஞ்சி - சிறிது துண்டு எண்ணெய் - 1 ஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிதளவு எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் செய்முறை: * பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும். * இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். * வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிகொள்ளவும். * வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, மிளகாய்தூள், உப்பு, எண்ணெய், 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ…
-
- 0 replies
- 670 views
-
-
அதிசய உணவுகள் - 8: கற்பனையை மிஞ்சிய அமேசான் உயிரிகள்! ‘சாப்பிடுவது மனித இயல்பு; ஜீரணிப்பது தெய்வீக இயல்பு!’ - மார்க் டிவைன் ‘அமைதியில் அவை மிக அழகாக இருக்கின்றன. விவேகம் உள்ள அமைதி அது. நாம் மண்ணான பிறகும் அவை நிற்கும். நாம் அவற்றைக் காப்போம்!’ - கேலியன் மேக்டன்னல்மார் அமேசான் காட்டில் நான் தங்கி யிருந்தபோது கேலியன் சொன்னது நூறு விழுக்காடுகள் உண்மை என்பது புரிந்துபோனது. அமேசானின் இருண்ட காடுகளில் வாழ்கிற பல உயிரினங்கள் நம்முடைய கற்பனையையும் மிஞ்சி இருக்கின்றன. இங்கே ‘கருப்பு கைமென்’ (Black caiman) என்கிற முதலை, 16 முதல்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஊறுகாய் என்றால், அது மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் தான். ஆனால் சிலருக்கு பூண்டு வாசனை மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள், பூண்டை வைத்து கூட ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மேலும் ஊறுகாயை சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உள்ளி (பூண்டு) - 1 கப் (தோலுரித்தது) எலுமிச்சை சாறு - 1/2 கப் சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) மல்லி - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ…
-
- 9 replies
- 5.4k views
-
-