நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
செய்முறை தேவை...................... வித்தியாசமான் " சான்விச் " செய்யும் முறை யாராவது பதிந்து விடுவீர்களா? டுனா ( tuna ) பச்சை வெங்காயம் ( வெங்காய் தாள் என்று ஊரில் சொல்வோம்) உப்பு மிளகு தூள் மயோனிஸ் ...( செய்தாயிற்று ) deli meat ( இறைச்சி பேப்பர் போல் இருக்கும்) chicken beef pork ,,(,,ஏதாவது ) சாலட் (letuce ..)மயோனிஸ். தக்காளி ...சேர்த்து செய்தாயிற்று. அவித்த முட்டை பிடிக்காது ............ வேறு எதாவது செய்முறை தரவும்.
-
- 4 replies
- 6.8k views
-
-
தேவையான பொருட்கள் கழுவி ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிய வெண்டிக்காய் - 10 அல்லது 12 காய்கள் உரித்து, கழுவி, வெட்டிய சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடிகருவேப்பிலை கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் - 4 அல்லது 5 உடைத்து, சிறிதாக வெட்டிய உள்ளி - 10 பல் வெந்தயம் - ஒரு கைப்பிடி பெருஞ்சீரகம் - தாளிப்பதற்கு சிறிதளவு கடுகு - தாளிப்பதற்கு சிறிதளவு தேங்காய் - பாதி ( முதல் பால் , இரண்டாம் பால் ஆகியவற்றை பிழிந்து எடுத்து வைக்கவும் ) புளி - ஒரு பாக்கு அளவு ( மூன்றாம் தேங்காய்ப்பாலில் கரைத்து வைத்துக்கொள்ளவும்) கருவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் - காரத்திற்கு ஏற்ற அளவு செய்முறை 01) ஒரு தாச்சியை…
-
- 24 replies
- 7.4k views
-
-
தேவையான பொருட்கள் காலி பிளவர் 1 கப், காலி பிளவர் தண்டு 1 கப், பால் 3 கப், நெய் 3 தேக்கரண்டி, மைதா 2 தேக்கரண்டி, எண்ணை 1 தேக்கரண்டி, உப்பு தேக்கரண்டி, வெங்காயம் 1, மிளகு தேக்கரண்டி, பூண்டு 6 பல். செய்முறை காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும். தீ மெதுவாக எரியவேண்டும். பின் …
-
- 0 replies
- 939 views
-
-
பொங்கல் + பாசிபருப்பு சாம்பார் பச்சரிசி - 400 கிராம் பாசிபருப்பு- 100 கிராம் மிளகு - 1 ஸ்பூன் சீரகம்- 1 ஸ்பூன் முந்திரிபருப்பு- 10 நெய் அல்லது டால்டா - 25 கிராம் உப்பு - தேவையான அளவு செய் முறை அடுப்பில் சாதம் வடிப்பது போல ஒரு பானையில் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. கொதிவந்தவுடன் அதில் அரிசையும் பருப்பையும் நன்றாக கலந்து போடவும்.. சாதம் பாதி வெந்திருக்கையில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்து போடவும் சீரகத்தினை சுத்தம் செய்து அப்படியே போடவும் நன்கு வெந்தவுடன் உப்பு போட்டு நன்றாக கிளறவும்... சாதம் நன்றாக குழைந்து பக்குவதிற்கு வந்தவுடன் சிறிது நெய்யில் அல்லது டால்டாவில் முந்திரியை வருத்து போடவும்... மீண்டும் அடிப்பிடிக…
-
- 15 replies
- 43.1k views
-
-
. சொதி வைப்பது எப்படி? இது தாயகத்தில் தினமும் நமது உணவுடன் இடம் பிடிக்கும் முக்கிய பொருள். ஆனால், தற்போது பலருக்கு சொதி வைக்கத் தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. காரணம்: சொதிக்கு இடியப்பம் தான் தோதான கூட்டாளி. பலர் இடியப்பம் பிழியிற பஞ்சியிலை, இடியப்பத்தை செய்யாமல் விட்டு சொதி வைக்கும் முறையையே மறந்து விட்டார்கள். சொதி மிகவும் குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய சமையல் மாத்திரமல்லாது ........., சொதி வைக்கும் போதே...... உங்களுக்கு விருப்பமான பொருட்களை போடலாம். தேவையான முக்கிய பொருட்கள். பசுப் பால் மூன்று கப் (அல்லது தேங்காய்ப் பால் ) பச்சை மிளகாய் 6 வெங்காயம் 3 (சிறிய வெங்காயம் எனில் 8) செத்தல் மிளகாய் 4 உள்ளி 3 பல்…
-
- 55 replies
- 28.2k views
-
-
இதன் செய்முறையை இதற்கு முன் யாரும் இணைத்தார்களோ தெரியவில்லை...என்டாலும் எனது முறையில் ஆன மரக்கறி கட்லட் இதோ... செய்ய தேவையான பொருட்கள்; கரட் 2 வெங்காயம் 3 உருளைக்கிழ்ங்கு 2 கருவேப்பிலை தேவையான அளவு மிளகுத்தூள் தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் கடலைப் பருப்பு 1/4 கீரைக்கட்டு 1 உப்பு தேவைக்கேற்ப பச்சை மிளகாய் 3 சோளமாவு கைப்பிடி அளவு மிளகாய்த்தூள் விரும்பினால் இனி செய்முறையைப் பார்ப்போம்; கடலைப் பருப்பையும்,மரக்கறியினையும் சிறுதளவு அளவான தண்ணீர் விட்டு அவிக்கவும்.[அதிகளவு தண்ணீரை விட்டு விட்டு தேவையில்லாமல் மிகுதி தண்ணீரை ஊற்றக் கூடாது சத்துப் போய் விடும்] மரக்கறியினை தோலை நீக்கி விட்டு சிறிதாக வெட்டிப் போட்டு அவித்தால் இலகு... மரக்கற…
-
- 10 replies
- 5.5k views
-
-
யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :(
-
- 10 replies
- 5.2k views
-
-
ஒவ்வொருவரும், கணவாய் பொரியல் ஒவ்வொரு விதமாக செய்வார்கள் என்று நினைக்கிறன். இது நான் கண்டு பிடிச்சு செய்த முறை. உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)கிறேன் செய்து பார்த்து சொல்லுங்கோ... கணவாய்ப் பொரியல் தேவையான பொருட்கள்: கணவாய் சுத்தம் செய்யதப் பட்டது- 1பக்கெட் (அல்லது 10 கணவாய்) கீரை-15- 20 இலை இஞ்சி- அரைத்தது 2 மேசைகரண்டி உள்ளி- அரைத்தது 2 மேசைகரண்டி சிவப்பு வெங்காயம்-1 கருவேப்பிலை- 15 தக்காளிப் பழம்- 1 பழப்புளி- 1 மேசைகரண்டி ஒலிவ் எண்ணெய்- 2 மேசைகரண்டி கொத்தமல்லி இலை- தேவையான அளவு சின்னச் சீரகம்- தேவையான அளவு கடுகு- தேவையான அளவு மிளகாய்த் தூள்- தேவையான அளவு மஞ்சள் தூள்- தேவையான அளவு கரும்மசாலா தூள்- தேவைய…
-
- 10 replies
- 4.5k views
-
-
உருளைக்கிழங்கு ரோல்ஸ் தேவையான பொருட்கள் உருளைகிழங்கு கறிக்கு உருளைகிழங்கு - 250 கிராம் சிறிய வெங்காயம்- 10 / Shallot வெங்காயம் - 1(இது கிட்டத்தட்ட சிறிய வெங்காய சுவையை தரும்) பச்சை மிளகாய் - 1 உப்பு- சுவைக்கு கறித்தூள் - உங்கள் உறைப்பு அளவுக்கு ஏற்ப மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு ரோல்ஸ் உருட்ட ஸ்பிறிங் ரோல்ஸ் சீற் பக்கட் (frozen உணவு பகுதியில் இருக்கும்) முட்டை - 4 காய்ந்த பாண் நொருக்கல்?? - 250 க்ராம் பொரிக்க எண்ணேய் செய்முறை 1. உருளைகிழங்கை உப்பு போட்டு நன்கு அவித்து எடுத்து, தோல் உரித்து வைக்கவும் 2. ஸ்பிரிங்க் ரோல் சீட்ஸ் ஐ அதன் உறையின் பின்புறத்தில் சொல்லி உள்ளது போல் free…
-
- 15 replies
- 10.1k views
-
-
- 1 / 2 கி. கோதுமை மா. - 250 கிராம் நெய். - 250 கிராம் ஐஸின் சுகர். - 5 கிராம் பேக்கின் பவுடர். - 2 மே. கரண்டி வனிலா எசன்ஸ். - 100 கிராம் கசுக்கொட்டை அல்லது கச்சான் (நொறுக்கியது). செய்முறை: ஒரு அளவான பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலந்து குழைக்கவும். ஒரு பெரிய தட்டில் (ரே) அதை பிஸ்கட் பருமனில் தட்டிப் பரவிவிட்டு பின் பிஸ்கட்டுக்குரிய அச்சுகளால் (சதுரம் , வட்டம், நட்சத்திரம், முக்கோணம் போன்றவை) அழுத்தி வெட்டி பின் அவற்றை சூடு தாங்கும் தட்டில் அடுக்கி ஓவனில் 180 c° டிகிரியில் சுமார் 15 , 20 நிமிடங்கள் பேக் பண்ணி எடுத்து ஆறியதும் பரிமாறவும்.
-
- 10 replies
- 4.7k views
-
-
பூந்தி லட்டு கடலை மாவு - 1 1/2 கப் சீனி - ஒரு கப் பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 10 ஏலக்காய் - 6 கிஸ்மிஸ் - 10 மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை தண்ணீர் - 1/2 கப் எண்ணெய் - அரை லிட்டர் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சீனியைக் கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். கடலை மாவில் மஞ்சள் வண்ணப் பொடி, பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாதாரண கண் கரண்டியை வாணலியில் ந…
-
- 2 replies
- 4.1k views
-
-
முந்தானை முடிக்கும் வெந்தயக்குழம்பு என் பசுமைதேசத்துக் கறுப்புத் தேவதைக்குச் சமர்ப்பணம். (யாழ்கள உறுப்பினர் கறுப்பிக்கு) பெயர் அறிந்து கறிகள் சமைக்கப்பழகவில்லை. எல்லாம் ஆதியின் கைங்கரியம்.... பசியின் கொடுமை தாங்க முடியாத என் வீட்டு எசமானியின் முறுவல்கள் மட்டுமே ஆதியின் நளபாகத்தின் ஆசிரியர். தான்தோன்றியாக ஆதியின் அக்கிரமத்தில் உருவாக்கப்படும் கறிகளுக்குப் பெயர் சூட்டுவிழாவை யாழ்க்கள வம்பர்களிடம் விட்டுவிடுகிறேன். சுவைஞர்களின் சிந்தனைகளில் உதிக்கும் அற்புதப் பெயர்களை ஆதியின் அடங்காப்பாகம் அட்டில் கலையில் சேர்த்துவிடுவோம்.சரி முந்தானை முடிக்கும் வெந்தயக் குழம்பு. எப்போதுமே உணவுத்தயாரிப்புக்கு குறைவாகவோ, அதிகமாகவோ அடுப்பின் சூட்டு நிலை இருக்கக்கூ…
-
- 13 replies
- 5.8k views
-
-
புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர் சத்துணவு... தேவையானவை: அரிசி ஐ.ஆர் 20 அல்லது பொன்னுமணி=2 டம்ளர் பருப்பு துவரை அல்லது மைசூர் டால்= 1/2 டம்ளர் மஞ்சள் தூள்=1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்=2 டீஸ்பூன் மிளகாய் தூள் = 2 டீஸ்பூன் புளி சிறிதளவு... உப்பு=3 டீஸ்பூன் காய்கறிகள் ஏதாவது 3 வகைகள்... தாளிக்க: கருவேப்பில்லை சிறிதளவு கொத்துமல்லை இலை சிறிதளவு.. பெரிய வெங்கயம் 2 கடுகு 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் அரிசியையும் பருப்பையும் நன்றாக கலந்து அதை தனியாக வைத்து கொள்ளவும் ... மூன்றுவகை காய்கறிகளையும்சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் பிறகு .. புளியை நன்றாக 3 லிட்டர் அளவுள்ள தண்ணீரில் கரைத்து புளிகரைசல் தயார் …
-
- 4 replies
- 1.8k views
-
-
பொரித்த உணவை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ரொட்டித் துண்டை போட்டு வைத்தால் உணவுப்பண்டங்கள் உலர்ந்து போகாமல் இருக்கும். பூசணி, பரங்கி கொட்டைகளை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி இனிப்புகள் தயாரிக்கும்போது பயன் படுத்தலாம் அவற்றை வறுத்தும் உட்கொள்ளலாம். சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் எடுக்க வரும். மீன்கள் வாடை வராமல் இருக்க கழுவிய மீனை வெதுவெதுப்பான பாலால் சுத்தம் செய்யவும். பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு கெடாமல் இருக்க வேண்டுமா? ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்ட…
-
- 3 replies
- 3k views
-
-
தேவையான பொருட்கள்: * மீன் - 300 கிராம் ( சீலா, இரால், வாவல், வாளை, பிள்ளைச் சிரா, விரால் போன்றவையாக இருந்தால் நல்லது.) * உருளைக்கிழங்கு - 150 கிராம் * பெரிய வெங்காயம் - 100 கிராம் * தேங்காய் - பாதி * மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி * பட்டை, கிராம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி * முட்டை - 1 * பூண்டு - 7 பல் * ரஸ்க் தூள்- தேவையான அளவு * உப்பு - தேவையான அளவு * இஞ்சி - தேவையான அளவு * மல்லித்தழை - தேவையான அளவு * புதினாத்தழை - தேவையான அளவு * நல்லெண்…
-
- 6 replies
- 3.8k views
-
-
தேவையான பொருட்கள்: * கடலை மாவு - 500 கிராம் * நல்லெண்ணெய் - 200 மி.லி * பல்லாரி வெங்காயம் - 600 கிராம் * சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி * மிளகாய் - 25 கிராம் * உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக வெட்டவும். 2.கடலை மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றுடன் வெட்டி வைத்திருக்கும் பல்லாரி வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும். 3.வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து பிசைந்து வைத்த மாவை உதிர்த்துப் போடவும். 4.நன்றாக சிவந்த பின்பு எடுக்கவும். http://www.muthukamalam.com/muthukamalam_sa…
-
- 1 reply
- 2.2k views
-
-
. யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 100 கிராம் கழுவின இறால் - 100 கிராம் கழுவின பாதி நண்டு - 8 மீன்தலை - 1 புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி பயிற்றங்காய் - 10 புளி - ஒரு சின்ன உருண்டை பாலாக்கொட்டை - 100 கிராம் சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவ…
-
- 29 replies
- 13k views
-
-
தேவையான பொருட்கள மாங்காய் வற்றல் - 8 துண்டுகள், சுண்டைக்காய் வத்தல் - 12, , சி. வெங்காயம் - 10, , பூண்டுபல் - 10, , மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி, , கொத்தமல்லிதூள் - 3 தேக்கரண்டி , தேங்காய்துருவல் - 1/4 கப், கடுகு - 1 தேக்கரண்டி, , உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி, , வெந்தயம் - 1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி, வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு, , கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. , செய்முறை மாங்காய் வற்றல் 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும். , தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். , ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும் கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறி…
-
- 1 reply
- 3k views
-
-
அசைவ உணவுப்பிரியர்கள் பலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் அது மீன் பொரியல் என சொல்லலாமா? என்ன தான் சுவையாக கறி வைத்தாலும், அதோடு சாப்பிட மீன் பொரியல் இல்லை என்றால் கொஞ்சம் கஸ்டம் தான். அதுவும் படகிலேயே போய் மீனை பிடித்து பொரித்தால்?! யம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இத்தனை அருமை பெருமைகளை தனக்குள் அடக்கிய மீன் பொரியலை செய்வதொன்றும் பெரிய வேலை கிடையாது. மிகவும் எளிதான செய்முறை தான். தேவையானவை: உங்களுக்கு பிடித்த மீன் 5 துண்டுகள் (சின்ன மீன் என்றால் 5 மீன்கள்) மிளகாய் தூள் 1 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மல்லி தூள் 1/2 தே.க கரைத்த புளி 1 தே.க உப்பு தேவைக்கேற்ப பொரிக்க எந்த எண்ணெய் பயனடுத்துவீர்களே, அது கொஞ்சம் செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை வி…
-
- 25 replies
- 4.5k views
-
-
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா சமையல் பகுதிக்கும் வந்தாச்சு இங்கதான் சமையல் வல்லுனர்கள்/சமையல் கலைஞர்கள் இருக்கிறீங்களே . எனக்கும் கொஞ்சம் சுவையா சமைக்க உதவி செய்யுங்கோ. என்ர நிறுவனத்தில எங்கட குழுவில 5 பேர் இருக்கிறம். ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒராள் சமைக்கவேணும். வாற வியாழன் திரும்ப என்ர முறை. ஏற்கனவே இரண்டு தரம் ஏதோ தட்டுத் தடுமாறி எனக்கு தெரிஞ்சத வைச்சு சமைச்சுக் குடுத்திட்டன். இரண்டு தரமும் கோழியை வைச்சு விளையாடியாச்சு. இனி வேற ஏதாவது புதுசா செய்ய வேணும் . சுலபமா - கனநேரம் செலவளிக்காமல் (30 - 50 நிமிடங்களுக்குள்) செய்யக் கூடிய ஒரு உணவுக்கு செய்முறை சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்
-
- 40 replies
- 11.4k views
-
-
Roasted Lamb & Garlic Mayonnaise Sandwich &feature=dir
-
- 3 replies
- 890 views
-
-
. ஆட்டுக்கால் சூப். தேவையான பொருட்கள்; ஆட்டின் பின் கால்கள் இரண்டு. மூன்று பெரிய வெங்காயம். 6 செத்தல் மிளகாய். பதினைந்து உள்ளி. 50 கிராம் மல்லி. இஞ்சி . மிளகு. பெருஞ்சீரகம். தக்காளிப் பழம் ஒன்று. எலும்பிச்சம் பழம் ஒன்று. சிறிது மஞ்சள் தூள். உப்பு. செய் முறை; ஆட்டின் கால்களில் உள்ள இறைச்சியை நீக்கி விட்டு, அதன் கால்களை சிறு துண்டுகளாக பெரிய கத்தியால் வெட்டவும். அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு ஒன்றரை லீற்றர் தண்ணீரும் , உப்பும் போட்டு நன்கு அவிய விடவும். வெங்காயத்தை நீளமாக சிறு துண்டுகளாக வெட்டவும். செத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும். மல்லி, பெருஞ்சீரகம், மிளகு போன்றவற்றை கிறைண்டரி…
-
- 31 replies
- 8.8k views
-
-
Sacla- தக்காளி & மிளகாய் கோழிக் குழம்பு தேவையான பொருட்கள் கோழிக் கால்- 4 சிவப்பு வெங்காயம்- 1 கரட்- 2 பீன்ஸ்- 5 எண்ணெய்- தேவைக்கு ஏற்ப கருவேப்பிலை- தேவைக்கு ஏற்ப ரம்பை இலை/ கொத்தமல்லி இலை- தேவைக்கு ஏற்ப இஞ்சி- சிறிதளவு உள்ளி- சிறிதளவு உப்பு- சிறிதளவு தேசிக்காய்- 1/2 மிளகாய்த் தூள்- தேவைக்கு ஏற்ப தயிர் (low fat)- 200g Sacla' Stir Through sauces2-3 கரண்டி செய்முறை(தயார் படுத்த எடுக்கும் நேரம்- 10 நிமிடங்கள்) 1) கோழிக் காலின் தோலை நீக்கி இரண்டாக வேண்டும்.(பெரிய துண்டுகள்) 2) உள்ளி, இஞ்சி இரண்டையும் நன்றாக அரைத்து எடுக்கவேண்டும். 3) கோழித் துண்டுகளுடன் உள்ளி இஞ்சிச் கலவையையும் சேர்த்து, தயிர், உப்பு மிளகாய…
-
- 3 replies
- 2.3k views
-
-
மரக்கறி சூப் (Vegetable soup) தேவையானவை கரட்-500 கிராம் போஞ்சி-500 கிராம் உருளைக்கிழங்கு-500 கிராம் தக்காளி-500 கிராம் பீட்ரூட்-500 கிராம் கோவா-200 கிராம் வெங்காயம்-100 கிராம் பச்சைமிளகாய்-100 கிராம் பூண்டு-10 பல்லு இஞ்சி-1 சிறிய துண்டு மிளகு-சிறிதளவு சீரகம்-சிறிதளவு செய்முறை காய்கறிகளை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி எண்ணையில் வதக்கி காய்கறிகளுடன் சேர்க்கவும். பின் அதனை இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து பிறகு ஒரு லீற்றர் தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் கலந்து மீண்டும் கொதிக்க வைக்கவும். பின்னர் இறக்கி பரிமாறவும். இது எல்லோருக்கும் நல்லது. (குறிப்பாக நோ…
-
- 22 replies
- 10.7k views
-
-
பொரி அரிசி மா பொரி அரிசி மா எண்டா பொதுவா எல்லாருக்கும் என்ன எண்டு தெரியும் என நினைக்கிறன். ஊரிலை இருக்கேக்கை பொரி அரிசி மா பொதுவா 4 மணி தேத்தண்ணியோட சாப்பிடுற சிற்றுண்டி. சில நேரம் வீட்டிலை பெரும்பாலான ஆக்கள் விரதம் பிடிக்கினம், எண்டால் விரதம் பிடிக்காத ஆக்களுக்கு காலை உணவாகவும் இதை சாப்பிடுவினம். சின்னனிலை எனக்கு பொரி அரிசி மா சாப்பிட நல்ல விருப்பம். புலம் பெயர்ந்தாப்பிறகு பொரி அரிசி மா சாப்பிடுறக்கு வாய்ப்பு மிக குறைவு அல்லது இல்லாமல் போட்டிது எண்டே சொல்லலாம். எல்லா வகையான மாக்களையும் அரைச்சு விக்கிற தமிழ் வியாபார நிறுவனங்கள் ஏன் இன்னும் பொரி அரிசி மா பக்காம் போகேல்லை எண்டு தெரியேல்லை. புலம் பெயர்ந்த கன பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் எண்டு நி…
-
- 22 replies
- 6.4k views
-