நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மொச்சை நெத்திலி மீன் குழம்பு நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். தேவையான பொருட்கள் : மொச்சைப்பயறு - 100 கிராம் நெத்திலி மீன் - 1/2 கிலோ எண்ணெய் - 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 1/4 கிலோ பூண்டு - 10 பல் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப புளி - எலுமிச்சம்பழ அளவு தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை…
-
- 1 reply
- 972 views
-
-
மொச்சை பொரியல் செய்வது எப்படி மொச்சையில் பொரியல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இப்போது மொச்சை பொரியல் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மொச்சை - 3 கைப்பிடி சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1 பூண்டு - 3 பற்கள் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு தாளிக்க : நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் சீரகம் பெருஞ்சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை செய்முறை : * வெங்காயம், கொத்தமல…
-
- 0 replies
- 675 views
-
-
தேவையான பொருட்கள் மொச்சைப்பயிறு – 1 கையளவு கருவாடு – சிறிதளவு கத்தரிக்காய் – 1/4 கிலோ வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 100 கிராம் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கறிவேப்பிலை – 2 கொத்து தனியாத்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணை – 1/2 குழிக்கரண்டி புளி – எலுமிச்சம் பழ அளவு கடுகு – சிறிதளவு செய்முறை * மொச்சைப் பயிறை வேக வைத்துக் கொள்ளவும். * கருவாட்டை மண் போக நன்கு அலசிக் கொள்ளவும். * கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். * ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். * ந…
-
- 1 reply
- 798 views
-
-
மொருமொரு வாழைப்பழம் மொருமொரு வாழைப்பழம் தேவையான பொருட்கள் :- வாழைப்பழம் 6 முட்டை 1 உலர்ந்த ரொட்டித் தூள் 1 கப் நெய் 1/2 கப் சர்க்கரைத் தூள் 1 மேஜைக் கரண்டி செய்முறை 1. வாழைப்பழத்தை நான்காக வெட்டிக் கொள்ளவும். 2. ரொட்டித் தூளில் சர்க்கரை தூளை கலந்து கொள்ளவும். 3. அடித்த முட்டையில் வாழைப்பழத்தை தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி வைக்கவும். 4. நெய் சூடானவுடன் அதில் வாழைப்பழத்தைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 5. சூடாக பரிமாறவும்.
-
- 28 replies
- 5.2k views
-
-
காலிபிளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காலிபிளவர் - 1 எண்ணெய் - பொரிக்க அரிசி மாவு - 2 ஸ்பூன் பஜ்ஜி மாவு - 200 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை : * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் சிறிது உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும். * காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 15 நிமிடம் வைக்கவும். * ஒரு பாத்திரத்தில் பஜ்ஜிமாவுடன் அரிசி மாவு, தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிபிளவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 3.9k views
-
-
நவராத்திரி வரப்போது, அதுக்கு நீங்க இலகுவா வீட்ட செய்து படைச்சு குடும்பத்தோட சாப்பிட கூடிய ஒரு இலகுவான கடலைப்பருப்பு வடை எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 4 replies
- 626 views
-
-
மொறுமொறுப்பான... இட்லி மாவு போண்டா மாலையில் மேகமூட்டத்துடன் இருக்கும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதுவும் வித்தியாசமாக செய்து சுவைக்க ஆசைப்பட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டு போண்டா செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, மிகவும் ஈஸியாக செய்யலாம். இங்கு அந்த இட்லி மாவு போண்டாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: இட்லி மாவு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது சீரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு …
-
- 10 replies
- 3k views
-
-
ரம்ஜான் அன்று நிறைய வேலைகள் இருக்கும். அப்போது பிரியாணி, குழம்பு என்று அனைத்தையும் செய்த பின்னர், சைடு டிஷ் செய்வதற்கு போதிய நேரம் இல்லாவிட்டால், அப்போது எளிமையான முறையில் ஒரு வித்தியாசமான சுவையுடைய சிக்கன் ரெசிபியை செய்யலாம். அதிலும் இத்தனை நாட்கள் நோன்பு மேற்கொண்டிருந்ததால், ரம்ஜான் அன்று பல சுவையான ரெசிபிக்களை செய்து சாப்பிடுவோம். அந்த நேரத்தில் எளிமையாகவும், வித்தியாசமானதாகவும் சிக்கன் ரெசிபியை செய்ய நினைத்தால், அதற்கு சிக்கன் லெக் ப்ரை சரியாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் லெக் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் - 8 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (அரைத்தது) மிளகு தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்ச…
-
- 0 replies
- 764 views
-
-
மொறுமொறுப்பான... ரவை வடை. மாலை வேளை வந்தாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். அதிலும் குழந்தைகளுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், மாலையில் அம்மா வீட்டில் ஸ்நாக்ஸ் கொடுப்பார்கள் என்று ஆவலோடு இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா! அப்படியெனில் அதற்கு ரவை வடை சரியானதாக இருக்கும். அந்த ரவை வடையை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் செய்து குழந்தைகளை அசத்துங்கள். தேவையான பொருட்கள்: ரவை - 1/2 கிலோ வெங்கயாம் - 3-4 (பொடியாக நறுக்கியது) தயிர் - 1/2 கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) பேக்கிங் …
-
- 3 replies
- 1.5k views
-
-
-
வெள்ளிக் கிழமைகளில் மரக்கறி சாப்பாட்டுடன் ஊற்றி குழைத்து உண்ண சொர்க்கம் தெரியும் 😀
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: புளித்த மோர்: 2 ஆழாக்கு கடலைப் பருப்பு: 1 தேக்கரண்டி துவரம்பருப்பு: 1 தேக்கரண்டி தேங்காய்: அரை மூடி காய்ந்த மிளகாய்: 5 பெருங்காயம்: சிறு துண்டு கடுகு: அரை தேக்கரண்டி உளுந்துப் பருப்பு: 1 தேக்கரண்டி தனியா: 2 தேக்கரண்டி வெந்தயம்: அரை தேக்கரண்டி அரிசி மாவு: ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி: கொஞ்சம் உப்பு: தேவையான அளவு செய்முறை: மோரை எடுத்து அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்க்கவும். அதில் அரிசி மாவு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலக்கவும். வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய், உளுந்துப் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பரு…
-
- 2 replies
- 3.1k views
-
-
யாருக்காவது கறிவேப்பிலை சட்னி செய்ய தெரியுமா? கறிவேப்பிலை சாப்பிட்டால் தலை முடி கறுப்பாக்கவும் அடர்த்தியாகவும் வளருமாம் .......இங்கு பலருக்கு இந்த பிரச்சனையுண்டு
-
- 10 replies
- 3.5k views
-
-
யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :(
-
- 10 replies
- 5.2k views
-
-
இப்போ யாழ்ப்பாணத்தில பனங்காய் கிடைக்கிற நேரம், நாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தில விழுந்த பனங்காய்களை வச்சு யாழ்ப்பாணத்துக்கு பெயர் போன பனங்காய் பணியாரம் செய்வம் வாங்க. சீனி போட்டும், போடாமலும் ரெண்டு விதமா செய்வம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 745 views
-
-
சுவையருவியின் முதல் வணக்கம் யாழில் இன்னுமொரு புதிய அங்கம் இன்றுடன் ஆரம்பமாகின்றது. ஈழத்தமிழர்களின் சமையல் பாரம்பரியம் என்பது ஒரு விசேடமான, அதே சமயத்தில் நம் கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓர் விடயம். எமது பாட்டன் பூட்டன் காலத்து உணவுவகைகளை புலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எடுத்து செல்லும் பணிக்காகவே "சுவையருவி" உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் ஆலோசனைகளையும், யோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இது ஓர் கன்னி முயற்சி. குறை நிறைகளை சுட்டிக்காட்டி சுவையருவியின் முன்னேற்றத்தில் பங்கெடுங்கள். தற்சமயம் சில செய்முறைகளையே கொண்டிருக்கும் சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் இணையுங்கள். தளத்தை உருவாக்கியது யார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே…
-
- 31 replies
- 6k views
-
-
கள உறவு சிவரதனின் அம்மாவின் யாழ் சமையல் குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வந்துள்ள குறிப்பு. உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்கும், வாழ்த்துக்கள், சிவரதன்.... https://www.sundaytimes.lk/211226/plus/their-recipe-to-success-466461.html
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
யாழ். கூழ்.... ஜேர்மன் முறையில் தயாரிக்கும் முறை.
-
- 10 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 414 views
-
-
யாழ்ப்பாணம் எண்டதுமே யாபகத்துக்கு வாற ஒரு உணவு யாழ்பாணத்து ஆட்டிறைச்சி கறி. அவ்வளவு சுவையான ஒரு கறி. வாங்க இண்டைக்கு யாழ்ப்பாணத்தில ஒரு ஆட்டிறச்சி பங்கு வாங்கி, யாழ்ப்பாணத்து பாரம்பரிய முறையில தோட்டத்தில வச்சு கறி சமைச்சு சாப்பிடுவம். நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க
-
- 2 replies
- 693 views
-
-
வாங்க இந்த தீபாவளிக்கு செய்ய கூடிய ஒரு இலகுவான, சுவையான இனிப்பு பலகாரம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம்.
-
- 0 replies
- 535 views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-