கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
வாய்க்கால் - வண்ணதாசன் ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது தண்ணீர் கலங்காமல் தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதிகமாக இன்றைக்கு வெயிலும் இல்லை. சுத்தமாக ஆனி முடிந்து ஆடி மாதம் பிறந்துவிட்டது. போன மாதம் பூராவும் மழையும் இல்லை; சாரலும் இல்லை. காற்று மட்டும் அடிக்கவா செய்தது? இன்றைக்கு என்னவோ மூடாக்குப் போட்டதுபோல இருக்கிறது. காற்றும் இருக்கிறது. எதிர்த்த அரச மரத்தடியில், இடுப்பில் சுற்றினவாக்கில் பெட்டிக் கடைக்காரி ராஜாமணி காயப்போட்டு நிற்கிற மஞ்சள் பூப்போட்ட சேலை லேசான படபடப்புடன் சுவர் மாதிரி. எப்போதும் ஒரு கிழட்டுச் சடைநாயைக் கூட்டிக்கொண்டு வருவாள். முதலில் அதைக் குளிப்பாட்டிவிட்டபிறகுதான் அவளுக்கு மற்றது எல்லாம். மற்றது என்பதில், உச்சிப்படை வெயிலாகிவிட்டால்கூட …
-
- 1 reply
- 887 views
-
-
புலி பதுங்குவது... எழுத்தாளர் முன்கோபி தன் வீட்டின் பக்கவாட்டு அறையிலிருந்து வாசலை மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தார். அரை மணி முன்பு பார்த்த அந்த இரு குண்டர்களும் சிகரெட்டைக் கையில் வைத்துக்கொண்டு இன்னமும் அங்கேயேதான் நின்று கொண்டிருந்தனர். வயிற்றைக் கலக்கியது எழுத்தாளருக்கு. காட்சி புரியாதவர்களுக்காக சின்ன அறிமுகம். எழுத்தாளர் முன்கோபி தமிழ் கூறும் நல்லுலகம் புகழும் ஒரு வீரமான எழுத்தாளர். அறச்சீற்றம் கொண்டவர். சமூகக் கொடுமைகளைச் சாடுவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஆனால், அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்று படிப்பவர்களுக்கும் புரியாது, அவருக்கும் தெரியாது. சென்ற வாரம் பக்கத்துத் தெருவில் இருந்த ஒரு கந்து வட்டிக்காரனைப் பற்றிக் காரசாரமாக எழுதியிருந்தார். அ…
-
- 0 replies
- 886 views
-
-
கவுரவக் கவசம் – றொமிலா ஜெயன் கட்டிலில் சோம்பல் முறித்தபடி புரண்டு கொண்டிருந்த, தேவகியின் காதுக்குள் “அம்மா…. அவளைக் காணயில்லை” என பதட்டத்துடன் ஓடி வந்து கிசு கிசுக்கிறாள் மகள் தனுஷா. திடுக்கிட்டுப்போகிறது தேவகியின் மனம் திகைப்புடன் மகளின் முகத்தைப்பார்க்கிறாள். “வடிவா வளவு முழுக்க தேடிப்பாத்தனீயே பிள்ளை” “கிணத்தடி, கக்கூசடி எல்லா இடத்தையும் தேடிப்பாத்திட்டன். கனதரம் கூப்பிட்டும் பாத்திட்டன், அவவின்ர ரூமுக்குள்ள போயும் பாத்தனான், போட்டுக் கொண்டு வந்த சல்வாரும், அவா கொண்டு வந்த சின்ன பாக்கையும் கூட காணயில்லை.” “என்ன பிள்ளை சொல்லுறாய்” என்றவாறு தனது பெருத்த தேகத்தை புரட்டி, கட்டில் சட்டத்தை பிடித்தவாறு எழும்பிக் குந்தினாள் தேவகி. சுவா் மணிக்கூட்டின் மு…
-
- 0 replies
- 885 views
-
-
[size=4]நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். [/size] [size=4]ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை![/size] [size=4]கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.[/size] [size=4]இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.[/size] [size=4]''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று …
-
- 5 replies
- 885 views
-
-
எண்ணும்பொழுது - ஜெயமோகன் “தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது. அவள் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். கண்ணாடியிலேயே உதட்டைச் சுழித்து “என்ன பார்வை?”என்றாள் “சும்மா” ”பாத்துப்பாத்துதான் கெடக்கே” என்று அவள் உதட்டைச் சுழித்தாள் “பாக்கிறதிலே என்ன?”என்றான். “பாக்கிறதுக்காகத்தானே?” “பாக்கிறது மட்டுமா?” “பாக்கிறதுதான் முதல்லே… கண்ணாலேதான் மனசு… மத்ததெல்லாம…
-
- 1 reply
- 885 views
-
-
நிழல்கள் - ஆதவன் பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது; பிரிய வேண்டிய இடம் வந்து விட்டது. அவளுடைய ஹாஸ்டல் கேட் உயரமான இரும்புக் கிராதிகளாலான கேட். அந்தக் கேட்டருகே நிற்கும்போது அவர்கள் இருவருமே எவ்வளவு சிறியவர்களாகவும் முக்கியத்துவம் இல்லாதவர் களாகவும் தோற்றமளித்தார்கள்! ஹாஸ்டல் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பொருத்தப் பட்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சம், கேட்டின் நிழலை வெளிப்புறச் சாலை மேல் நீளமாகப் படரவிட்டிருந்தது. எதிரெதிராக நின்றிருந்த அவர்கள் இருவருடைய நிழல்களும், அந்தக் கேட்டின் நிழலின் மேலேயே, ஒன்றின் மீது ஒன்றாகச் சாலையின் மீது படிந்திருந்தன. ''நம் நிழல்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன'' என்றான் அவன். அவள் அவன் பார்வையின் திசையைக் கவனித்தா…
-
- 0 replies
- 884 views
-
-
உங்களுக்கும் அந்த நாயைத் தெரிந்திருக்கும். உங்கள் தெருக்களிலும் அது உலவி இருக்கும். மிகக்கரிய நிறத்தில் உடல் இளைத்து என்பு தெரிய அலையும். அதன் கண்கள் மட்டும் வேட்டையாடும் ஓநாயினுடைய தீர்க்கமான பார்வையைப் பெற்றிருக்கும். எனக்குத் தெரிந்து அந்த நாயின் முழுநேர வேலை உலாத்துதல்தான். கடந்த 2 நாளில் என்னையும் என் தோழர்களையும் போல் அதுவும் உலவுவதை நான் கண்டு கொண்டேன். ஒருவேளை அந்த நாய் எங்களை பின் தொடர்ந்திருக்கவும் கூடும். பழைய தமிழ் சினிமாவில் வரும் இச்சாதாரிநாகம் போல, எனக்குப் புரியவில்லை. அந்த ஓநாயின் பார்வை கொண்ட கருநாயின் 5 பெரும் தென்படுதல்களை நான் உங்களுக்கு சொல்லப்போறன். தென்படுதல் ஒன்று: நகைக்கடைகாரருக்கு பிறகு. “வணக்கம் சேர். நாங்கள் யாழின் கரங்கள் அமைப்பின் மாணவர்…
-
- 0 replies
- 883 views
-
-
பனங்காடு – கருணாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் இருக்கிறது இயக்கச்சி. முறைப்படி சொல்ல வேண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் 169 கல் தொலைவில் இருக்கிறது ஊர். கிலோ மீற்றரில் சொல்வதென்றால், 270ஆவது கல்லில் இருக்கிறது அது. இப்போது இரண்டு கற்களும் அங்கே உண்டு. எந்தக் கல்லை வைத்தும் அடையாளம் கண்டுவிடமுடியும். யாழ்ப்பாண ராஜ்ஜியத்திலிருந்து கண்டி ராஜ்ஜியத்துக்குப் போகும் வழியே இந்த நெடுஞ்சாலை என்று சொல்வார் மாமா. ஐரோப்பியர்கள் முதலில் இலங்கையில் நெடுஞ்சாலைகளை அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள் என்பது அவருடைய வாதம். கண்டி ராஜ்ஜியத்திலிருந்து கொழும்பு கோட்டை ராஜ்ஜியத்துக்கும் கோட்டை ராஜ்ஜியத்திலிருந்து கா…
-
- 1 reply
- 882 views
-
-
கமலத்திற்கு இரண்டு பிள்ளைகள்.இருவருமே சிறுவயதில் படுசுட்டிகளாய் இருந்தார்கள்.இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்.விபத்தொன்றில் கணவனை இழந்த கமலம் தோட்டம் செய்தும் உடுப்பு தைத்துக்கொடுத்தும் பிள்ளைகளை வளர்த்தாள். பிள்ளைகள் சிறுவயதில் கள்ளன் போலிஸ் விளையாடுவார்கள். இருவருமே கள்ளனுக்கு போக மறுப்பார்கள்.கமலம்தான் மாறி மாறி விளையாடச்சொல்லுவாள்.விளையாட்டு படிப்புடன் தங்களுக்குள் அடிபட்டும் கொள்வார்கள் .சிறிது நேரத்தில் கோபம் தீர்ந்து சகோதர பாசம் பொங்க நிற்பார்கள். ஒரு அதிகாலைப்பொழுதில் அண்ணன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்திற்கு போனான்.கமலமும் தம்பியும் உடைந்து போனார்கள். தம்பி கமலத்தை ஓரளவு ஆற்றுப்படுத்தினான்.பின் ஒரு நாள் தம்பியும் இயக்கத்திற்கு போனான்.கமலம்…
-
- 7 replies
- 881 views
-
-
உயர்ந்த உள்ளம் கல்யாணம் செய்து கொடுத்திருந்த மகள் வாணியை, ஆடிக்கு அழைத்து வந்திருந்தாள், ஜெயா. மகளை, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததில், ஜெயாவுக்கு பெரிய நிம்மதி. சம்பந்தி, திருச்சியில் இருக்க, இளைய மகன், பெங்களூரில், சாப்ட்வேர் இன்ஜினியராகவும், பெரியவன், சென்னையில், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்ய, நல்ல வசதியான குடும்பம். அந்த வீட்டில், தன் மகள் வாணியை, இரண்டாவது மருமகளாக, மணமுடித்துக் கொடுத்திருந்தாள் ஜெயா. ''வாணி... உன் மாமியார் நல்ல குணம்; 'ஆடிக்கு அழைக்கணும்; திருச்சிக்கு வந்து சீர் வைக்கிறேன்'னு சொன்னதுக்கு, 'தேவையில்லை சம்பந்தி... எதுக்கு அலையுறீங்க. நீங்க, பெங்களூரு போய், வாணிய கூட்டிட்டு வாங்க; அந்த சம்…
-
- 0 replies
- 880 views
-
-
Thu, 10 Sept. at 16:41 நெஞ்சில் பதிந்த நிலவு – சித்தி கருணானந்தராஜா டியர் கண்ணன், உங்கள் மெயில் கிடைத்தது. நான் தடுமாறிப்போய் நிற்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் எப்போது வருவீர்கள்? வீட்டில் ஏதோ கசமுசாவென்று அம்மாவும் அப்பாவும் பேசுகிறார்கள். எனக்குக் கலியாணம் பேசுகிறார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் இதுபற்றி யாரும் இதுவரை பேசவில்லை. கடைசியாகத்தான் என்னிடம் வருவார்கள் என்று நினைக்கிறேன். அதற்கிடையில் நான் என்ன ஏது என்று சரியாகத் தெரியாமல் குறுக்கே விழுந்து எதையாவது கேட்டால் வெட…
-
- 2 replies
- 877 views
-
-
-
வடக்கு வீதி அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும். மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக …
-
- 3 replies
- 876 views
-
-
மக்களை ஈர்த்த மகராசர் தி. ஜானகிராமன் விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து 'ட்ரான்ஸிட் ' கூடத்திற்குப் போனார். இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ' ஏன் இத்தனை கூட்டம் ? கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் 'பத்தாயிரம் தலைகள். ஆமாம் பத்தாயிரம் பேருக்குக் குறையாது. மேலும் மேலும் கார்கள் வந்து கொண்டிருந்தன. சின்னக்கார்கள், பெரிய கார்கள், உள்நாட்டு கார்கள். வெளிநாட்டு கார்கள் கதவுகள் திறந்தன. மனிதர்களைக் கொட்…
-
- 0 replies
- 875 views
-
-
நன்னயம் செய்துவிடேல்! "வரப் போறாளாமா? வரட்டும்... வரட்டும்... நாக்கைப் புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்காம உட மாட்டேன் நான். இப்பதான் ஒடம்பொறப்பு தெரிஞ்சுதாமா? அம்மா செத்துப் போயி இந்தச் சித்திரை வந்தா பதினாலு மாசம் ஆகுது. மொத வருசம் திதி குடுக்கும்போது பாத்ததுதான்... அப்பறம் ஒரு கடிதாசி கூடப் போடலியே? இப்ப கூட வரப்போறோம்னு எதுக்காகப் போட்டிருக்கா தெரியுமா? தேவியம்மா வரப் போறங்கள்ல... நாங்க எங்கியாவது வேற ஊருக்குப் போயிட்டா என்ன செய்யறது? அவ வர்றது வேஸ்டாப் பூடுமில்ல... அதுக்காகத்தான். எல்லாம் ஒரே காரியவாதிதான். ஆமாம்... இப்ப அவளுக்கு எல்லாக் காரியமும் முடிஞ்சு போச்சு... பசங்க எல்…
-
- 0 replies
- 875 views
-
-
"ஓடம்" "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன் காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள் பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!" "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத் தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!" "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல் திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற நீர…
-
- 0 replies
- 875 views
-
-
காய்ச்சல்காரன் வாய் கைய்த்தது. உடல் கொஞ்சம் குளிர்ந்தது மாதிரி இருந்தது. வெளியில் நல்ல வெயில். வெளியில் கூவிய குயில்கூட கொஞ்சம் உசார் இல்லாமல் கூவியமாதிரி இருந்தது. அம்மாவிடம் கேட்டு ஒரு பிளேன் ரீ குடித்தாயிற்று. முற்றத்தில், நேற்று வந்திறங்கிய விறகுக் குற்றிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காட்டு மரங்கள், ஒருவித வாசனையுடன். சில குற்றிகளில் பச்சை இலைகள் ஒன்றிரண்டு இன்னும் காயாமல் இருந்தன. பத்து மணிக்குக் கிட்ட விறகு கொத்த ஆள் வரலாம். குவியலாக இருந்த விறகுக் குற்றிகளை உருட்டி விட்டேன். ஓணான் ஒன்று அவசரமில்லாமல் ஓடியது. "குரங்கு!, கால்ல விறகுக்குத்தி விழப்போகுது" அப்பா கத்திக் கேட்டது. அப்பா கோபமாக இருந்தால் 'குரங்கு, கழுதை' என வி…
-
- 1 reply
- 874 views
-
-
மத்தியபிரதேசத்தில் பீல் (Bheel) எனும் பழங்குடியினர் உண்டு. அவர்களை ஆய்வு செய்ய சென்ற பேராசிரியர் பகவான் தாஸ் படேல், பீல் பழங்குடியினரிடம் ஒருவகை மகாபாரதம் இருப்பதைக் கண்டார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் திரவுபதியின் கதை மிக வித்தியாசமானது என்பதுடன் பழங்குடி மரபுகளையும் உள்ளடக்கியது. பீல் மகாபாரதம் (Bheel Mahabharat) எனும் பெயரில் சாகித்ய அகாடமி நூலாக இது வெளிவந்தாலும் இதன் பெயர் பாரத் என்பதாகும். பீல் மொழியில் இதன் பொருள் யுத்தம் என்பதாகும். இதில் திரவுபதி பொன்னிற முடியை உடையவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். அஸ்தினாபுரத்தில் அவள் உறங்குகையில் அவள் தோழியர் அவள் தலையைச் சீவுகின்றனர். அப்போது ஒரு பொன்னிற முடி பறந்து சென்று காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, பாதாள உலகம் செல்க…
-
- 0 replies
- 872 views
-
-
"குடும்பத் தலைவி" என்னுடன் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான், இன்று என் அண்ணாவை திருமணம் செய்யப் போகிறவர். அவளின் பெயர் 'தமிழ்', அவள் படிப்பிலும் அழகிலும் சாதாரணமே. ஆனால் நல்ல பண்பாடும் மற்றும் கலைகளிலும் ஈடுபாடு உள்ளவள். நான் அதற்கு எதிர்மாறு. படிப்பிலும் மற்றும் அழகிலும் முன்னுக்கு நிற்பவன். அதனால் கொஞ்சம் இறுமாப்பும் உண்டு. படிக்கும் காலத்தில் நான் அவளை கணக்கிலேயே எடுப்பதில்லை. சிலவேளை கொஞ்சம் அவள் கவலை அடையக் கூடியதாக, பலரின் முன்னிலையில் பகிடி கூட செய்துள்ளேன், அவள் அது எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்து, பொருட் படுத்தாமலே விட்டு விடுவாள். நான் இறுதி பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தி அடைந்து, உதவி விரிவுரையாளராக அதே பல்க…
-
- 0 replies
- 871 views
-
-
குட்டான் டானியல் ஜீவா விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள். நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிவிட்டன. வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேலோங்கும். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது . என்னுடைய வீட்டுக்காரர் இருவீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். ஸ்காபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன். அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம் பார்த்து வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில் தன…
-
- 1 reply
- 871 views
-
-
அமெரிக்காவிலிருந்து வந்த மகன் ஐ.எஸ்.சிங்கர் I.S.Singar) ஆங்கிலம் வழியாக தழிழில்: சு. மகேந்திரன் ஐ.எஸ்.சிங்கர், ஜிடிஸ் மொழியில் எழுதும் அமெரிக்க எழுத்தாளர். “ஒரு எழுத்தாளர் தனது சொந்த மொழியில் எழுத வேண்டும் அல்லது எழுதவே தேவையில்லை” என்று சொன்னவர். போலந்தில் யூத அடிப்படைவாதக் குடும்பமொன்றில் 1904 ஆம் ஆண்டு பிறந்தார் சிங்கர். இளமையில் யூத மதப் பாடசாலையொன்றில் கல்வி கற்றார். ஆனால், பின்னர் கடவுளின் சக்தியைவிட, ஐதிகங்களும், ஏன்? என மறு கேள்விகள் கேட்க முடியாத வாதங்களுமே மதங்களை ஆள்கின்றன எனக் கண்டு கொண்டவர். மதச் சார்பற்ற எழுத்தாளரானார். 1926 இல் முதலாவது கதைத்தொகுதியும், விமர்சனக் கட்டுரைகளும் வெளியாகின. 1935 இல் அமெரிக்காவுக்குச் சென்றார். 1945 இல் ஆங்கிலத்தில் …
-
- 0 replies
- 871 views
-
-
அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள். அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே …
-
- 4 replies
- 871 views
-
-
சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்கள் எழுதிய அவரது கண்ணீர்த்துளிகள். வாசித்து முடிந்தும் இன்னும் தந்தையின் கண்ணீரை வெல்ல முடியாது தோற்றுப்போகிறேன். சில முடிவுகள், சிலநிமிடக்கோபம் சிலரது வாழ்வை எவ்வளவு துயரங்களால் நிரப்பியிருக்கிறது என்ற உண்மையை தனது வாழ்வை அப்படியே ஒளிவு மறைவின்றி பலருக்கான பாடமாக எழுதி துணிச்சலோடு வெளியிட்டுள்ளார். இனி சஞ்சயனின் எழுத்துக்களை வாசியுங்கள். அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி மாசி மாதம் 2014 ல் மலைகள் இணையத்தளத்தில் வெளிவந்த எனது பதிவினை இங்கு இணைத்திருக்கிறேன். ------------------------------------------------------------------------------------------- அன்பான எனது பூக்குட்டிக்கு! நாளை உனக்கு பிறந்தநாள். வாழ்க்கையின் அற்புதமான பதின்மக…
-
- 2 replies
- 870 views
-
-
அம்மாவின் கைமணம்! கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தானப்பா இருக்கு.. இன்னமும் ஒங்க சித்தப்பா, அத்தைகளுக்கு பத்திரிகை கொடுக்கலையே..'' ""என்னப்பா செய்றது. நேரம் சரியா இருக்கே.. என்னோட ஆபீஸ் ஆட்களுக்கு இன்று கொடுத்து முடிக்கல. தபால்ல அனுப்புவோம்னு சொன்னா கேக்க மாட்டீங்கிறிங்க.. நேர்லதான் போய் கொடுக்கணும்னு சொல்றீங்க.. அதுலயும் நானும் ஒங்க கூட வரணும்ங்கிறீங்க'' ""இல்லப்பா. என்னோட ஒடம்பொறப்புக்களுக்கும் மூணாவது மனுஷாளுக்கு அனுப்புற மாதிரி தபால்ல அனுப்புறது சரி இல்லப்பா. நாம எல்லாரும் நேர்ல போய்த் தர்றதுதான் மரியாத..'' ""அப்ப கொஞ்சம் பொறுங்க.. என்னோட வேல…
-
- 0 replies
- 870 views
-
-
கடவுளின் உரை.. சந்திரா இரவீந்திரன் மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் உயர்ந்து விரிந்தன. ஒருவரையொருவர் சிநேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். உற்சாகமும் பெருமிதமும் நிரம்பித் ததும்பும் நிமிடங்கள் அவர்களி…
-
- 4 replies
- 870 views
-