கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
அட்வைஸ் நாத்தனார் சித்ரா தனது புருஷனிடம் காரணமில்லாமல் கோபித்துக்கொண்டு, அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வந்து மாதக்கணக்கில் தங்குவது, அண்ணி அம்பிகாவிற்கு எரிச்சலைத் தந்தது.நாத்தனாரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் அம்பிகா கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, வேலைக்காரி வேலம்மா வந்தாள். ‘‘அட, இவ்ளோதானா? நான் பார்த்துக்கறேன்!’’ என்றவள் சித்ராவிடம் என்ன சொன்னாளோ தெரியவில்லை... அடுத்த அரை மணி நேரத்தில் சித்ரா புகுந்த வீட்டுக்குப் புயலாகப் புறப்பட்டாள். அம்பிகாவிற்கு ஆச்சரியம். ‘‘வேலம்மா, சித்ராகிட்ட அப்படி என்ன சொன்னே?’’‘‘ ‘இப்படி புருஷனை விட்டு அடிக்கடி இங்கே வந்து மாசக்கணக்கா இருக்கிறியே, பொண்டாட்டி இல்லாத குறைக்கு, உன் புருஷன் அங்கே வேற யாரையாவது தேடிக்கிட்டா நீ என்ன பண…
-
- 4 replies
- 2k views
-
-
புக்கெட் - சிறுகதை அராத்து - ஓவியங்கள்: ரமணன் சின்னச் சின்னச் சண்டை பெரிதாகி, குளிரூட்டப்பட்ட உணவுவிடுதியில் மன்னிப்பு கேட்டு, அவள் தங்கி இருக்கும் விடுதியின் வாசலில் செய்வதறியாது காலில் விழுந்தான். நான்கைந்து பெண்கள் வேடிக்கை பார்த்தனர். காலை மெள்ள இழுத்துக்கொண்டு நடந்து உள்ளே சென்றுவிட்டாள். தொழப் பாதமில்லாது, சற்றுநேரம் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்தான். தெருமண்ணை நக்கிப்பார்த்தான். சிறுவயதில் விபூதி சாப்பிட்டது, இப்போது இந்த நகரத்தின் நூற்றாண்டுகால மண் ஒரு விநோதமான சுவையை உணரச்செய்தது. அழுகை வந்தது. அழுகையினூடே சிரிப்பும் வந்தது. மெதுவாக எழுந்தான். வெட்கம், மானம் எல்லாம் எங்கோ போயிருந்தன. தன்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை வெறுமையாகப் …
-
- 0 replies
- 3.7k views
-
-
புதிர் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன. தொலைக்காட்சிச் செய்திகள் வழி மனதில் விரிந்திருந்த கட்டமைப்புகள் காட்சி நிஜங்களுடன் மிக ஒத்துப்போனதில் அவன் பெரிய ஆச்சரியமெதனையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய தன்னூர் வந்தபோது…? பௌதீகத்தில் எந்த மாற்றமும் அற்றதாய் இன்னும் அது பழைமையின் பிடியில் இருந்துகொண்டிருந்தது. அவனுக்கு அதிசயம் வந்தது. இறுதி யுத்தத்தில் விழுந்த ஆழமான வடுக்கள் முற்றாகத் தீர்ந்ததாகவன்றி, யுத்தமே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லைப்போல, காலமே தன் தடம் பதிக்க அஞ்சி விலகிச் சென்றதான தோற்றங்கொண்டு இருந்தது. …
-
- 0 replies
- 994 views
-
-
மனவலி யாத்திரை.....! - சுதந்திரா - அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் என்னை அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிக…
-
- 12 replies
- 2.2k views
-
-
அலுவலக வேலையெல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் வீடு திரும்பிய தனா என விளிக்கப்படும்..தனசேகரனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். அவனால் நம்பவே முடியவில்லை..இன்முகங்கொண்டு வாசலிலே காத்திருப்பது வேறு யாருமல்ல..அவனுடைய அழகு மனைவி அருந்ததியேதான். "ஏன்பா இவ்வளவு நேரம்.." கேட்டுக்கொண்டே அவன் கையிலிருந்த சூட்கேசை வாங்கிக்கொண்டு..உரசி உரசி நடக்க தனாக்கு சோர்வெல்லாம் பஞ்சுபஞ்சாய் பறந்து போனது. வீட்டினுள் வந்து.. இராமயணம் படித்துக்கொண்டிருந்த தாயி;டம் குசலம் விசாரித்து..அவரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மாடிப்படி ஏறினான். அருந்ததி அவனுக்கு முன்னால் படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள்.இவ்வளவு அழகானவள்... அவன் மாமா மகள் என்பதால்தான் திருமண…
-
- 28 replies
- 4.7k views
-
-
கதை சொல்லவா? (05)/ எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்" சிறுகதை தொகுப்பில் இருந்து / ராணியக்கா என்ற சிறுகதை / திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
-
- 0 replies
- 810 views
-
-
நள்ளிரவு!… அ.ந.கந்தசாமி. சிறப்புச் சிறுகதைகள் (14) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – அ.ந.கந்தசாமி எழுதிய ‘நள்ளிரவு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். ‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல…
-
- 1 reply
- 1.4k views
-
-
சத்திய போதிமரம்!… ( சிறுகதை ) கே.கணேஷ். November 05, 2018 in: கதைகள் சிறப்புச் சிறுகதைகள் (17) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கே.கணேஷ் எழுதிய ‘சத்திய போதிமரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு கச்சேரி’ என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பதிரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர். என…
-
- 2 replies
- 1.3k views
-
-
"தனிமை" தனிமை என்பது எதோ தனிய காலம் கழிப்பது அல்ல, சிலவேளை எம்மை சுற்றி பலர் இருப்பார்கள், என்றாலும் சில காரணங்கள் எம்மை அவர்களில் இருந்து மனதளவில் தனிமை படுத்துவதும் உண்டு. வெளியில் பேசி கதைத்தாலும் உள்ளுக்குள் தனிமை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள் இருக்கும். அதற்கு புறம்பானவர்கள் உன்னை முழுதாக சூழ்ந்து இருக்கும் பொழுது நீ தனிமையாகி விடுவாய்!. அப்படித்தான் என் பாடசாலை வாழ்வும் அமைந்தது. நான் யாழ் மத்திய கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, அதற்கு முன்னால் அமைந்து இருந்த யாழ் நூலகத்திற்கு போவது வழமை. இது தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அன்று திகழ்ந்தத…
-
- 0 replies
- 839 views
-
-
ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே அவனுடன் பழகுவதை அந்தப் பெண்ணின் குடும்பம் அவனுடைய குடும்பச் சூழலையும் பின்னனியையும் காரணம் காட்டி, அவனுடன் இருந்தால் தன் மிகுதியுள்ள வாழ்நாள் முழுமையும் அவள் துன்பப்பட வேண்டி இருக்கும் என்ற அடிப்படையில் தீர்க்கமாக எதிர்த்தது!... இந்த மாதிரியான குடும்பத்தின் மனநிலையால் இந்தக் காதலர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்!... இந்தப்பெண் அவனை அதிகப் படியாக நேசித்தாலும், அடிக்கடி அவனைப் பார்த்து கேட்பது, “நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்” என்பதுதான்!.... அத்தருணங்களில் அவனிடமிருந்து அவ்வளவாக நல்ல பதில் கிடைக்காததனால் இவளுக்கு வருத்தமே மிஞ்சியது!...அதனுடன் குடும்பத்தின் எதிர்ப்பும் சேர்ந்து கொள்ள அவனிடம் எப்போதுமே தன் கோப முகத்தைய…
-
- 0 replies
- 735 views
-
-
தவளையும் இளவரசனும் - ஜெயமோகன் இரவில் பேரழகியான இளவரசியாக இருந்தவள் விடிந்ததும் தவளையாக மாறிய கதையை நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு படக்கதைப் புத்தகத்தில் வாசித்தேன். கடைசிப்பக்கத்தில் அந்தப் பச்சைத்தவளையைக் கண்டதும் எனக்கு வாந்தி வந்து உடல் உலுக்கியது. ஏனென்றால் நான் அந்தத் தவளையை மணந்த இளவரசனாக என்னை கற்பனை செய்துகொண்டிருந்தேன். மியான்மாரின் மேய்க் ஆர்க்கிபெலகோவுக்கு மேலும் எண்பது கிலோமீட்டர் தொலைவில் தனியார் சுற்றுலா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கௌங்கையின் என்னும் இந்தச் சிறிய தீவின் ஆடம்பரக் குடிலின் அறைக்கு வெளியே புலரிவெளிச்சம் கடல் அலைகளின் மேல் அற்புதமாக ததும்பிக்கொண்டிருக்க, சுவர்கள் ஒளியலைகளாக அசைய, திரைச்சீலைகள் மலரிதழ்கள்போல வண்ணம் பொலிந்து…
-
- 1 reply
- 619 views
-
-
[size=3][/size] [size=5]றஞ்சியின் கதையைச் சொல்ல வேணும். அதன்மூலம் அவருடைய நிலைமையை, அவர் சந்திக்கின்ற பாடுகளையெல்லாம் நாலு பேருக்கு அறியப்படுத்தலாம். அப்படிச் செய்யும்போது இதையெல்லாம் அறிகின்றவர்களிடமிருந்து பிறக்கின்ற கருணையினால், அன்பினால், இரக்கத்தினால் அவருக்கு ஆதரவும் உதவியும் கிட்டக்கூடும் என்று நீண்ட நாட்களாக யோசித்திருந்தேன். ஆனால், அந்தக் கதையை எழுதும்போது அது சிலவேளை றஞ்சிக்குச் சங்கடங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் தயக்கத்தோடு அதைத் தவிர்த்தேன். ஒரு காலத்தில் யாரிலும் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்த்திருக்காமல் வாழ்ந்த நிலை மாறி, இப்ப பிறரை எதிர்பார்த்து, பிறரில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டு, அதுவும் இப்படி பலருக்கும் தெரியக்கூடிய பகிரங…
-
- 4 replies
- 1.2k views
-
-
-------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------
-
- 0 replies
- 1.3k views
-
-
மான்டேஜ் மனசு 8 - விண்ணைத் தாண்டி வருபவர்கள்! ரொம்ப நாட்களுக்குப் பிறகு கௌதமை சந்தித்தேன். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல சினிமா பற்றி பேச்சு திரும்பியது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான். டைம் மெஷின், டைம் டிராவல் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பெருமைப்படும் 'இன்று நேற்று நாளை' படத்தையும் பேச்சுவாக்கில் தொட்டுச் சென்றான். ''ஃபேன்டஸி படமா இருந்தாலும் அளவா, கச்சிதமா, எந்த எல்லையும் மீறாம இருந்தது ரொம்ப நல்ல அனுபவம்'' என்றான். என் மனசு 'இன் டைம்' படத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. 2011-ல்…
-
- 0 replies
- 1.9k views
-
-
உங்களுக்குக் கேட்டதா? கார்த்திக் பாலசுப்பிரமணியன் என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவில்லை போலும். பார்வையால் மேலிருந்து கீழாக என்னை அளந்தவாறே, “என்ன?” என்றார். மீண்டும் ஒரு முறை அவரிடம் அழுத்திக் கேட்டேன். “அதாங்க டி.வி, ஜன்னல் இல்லாத ஒரு ரூம் வேணும். மூணு நாளைக்கு. இருக்குதா? ” என்றேன். வழுக்கைத் தலை. ஒடிசலான தேகம். நெற்றியை நிறைத்த பட்டை. அவரைப் பார்த்தால் அந்த லாட்ஜில் வேலை செய்பவர் போன்றுதான் தெரிந்தது. “கொஞ்சம் இருங்க.. பாத்துதான் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த ஒரு நீளமான நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார். அந்த நோட்டைப் பார்த்ததை விட என்னை நோட்டம் விட்டதுதான் அதிகம். ” ஐயா.. நீங்க பயப்படுற மாதிரி…
-
- 4 replies
- 1.1k views
-
-
உக்காந்து யோசிப்பாய்ங்களோ! பிரபல டைரக்டர் சந்திரனை மிகுந்த சிரமத்துக்குப் பின் சந்தித்துப் பேசினான் ரகு. ‘‘சார், நான் கற்பனை பண்ணி வெச்சிருந்த மாதிரியே அச்சு அசலா நிறைய ஸீன்கள் இப்ப வர்ற படங்கள்ல வருது’’ என்ற வன், தன் ரசனையும் ஐடியாக்களும் சமீபத்திய ரிலீஸ் சினிமாக்களில் இடம்பெற்ற சூப்பர் ஸீன்கள், கிராஃபிக்ஸ் உத்திகள், க்ளைமாக்ஸ் திருப்பம் எனப் பல விஷயங்களில் பொருந்தியிருப்பதை உதாரணங்களோடு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டான். பின்பு, ‘‘சார், என்னை உங்க அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டீங்கன்னா ரொம்ப ‘யூஸ்’புல்லா இருப்பேன்...’’ என்றான். ‘‘ஸாரி பிரதர், எனக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
கடந்த ஒரு பேப்பரி இந்தப் பதிவினை ஒரு நிஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன். இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத கார…
-
- 20 replies
- 2.6k views
-
-
Unconditional Love 7/26/2019 06:22:00 PM ‘கொன்னுட்டேன்’ - அவளுக்கு வழங்கப்பட்ட காபியில் ஒரு மிடறு உறிஞ்சியபடி சொன்னாள். எனக்கு முன்பாக இருந்த தேநீரை இன்னமும் உறிஞ்சத் தொடங்காமல் வைத்திருந்தேன். அந்தச் சொல்லை, மிக இயல்பாக- கண்ணாடிக் குடுவை ஒன்றைக் கை தவறி சிதறடிக்கும் போது இருக்கும் பதற்றம் கூட அவள் வார்த்தைகளில் இல்லை. வடபழனி சிக்னலில் இருக்கும் இந்த தேநீர் கடையில் அரை மணி நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு வருடத்திற்கு முன்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துணிப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவளைக் கடைசியாகப் பார்த்தது. அப்பொழுதும் கூட அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. சிரித்து, சில கணங்கள் நல விசாரிப்புக்குப் பிறகு அதே ப…
-
- 0 replies
- 564 views
- 1 follower
-
-
இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல! இணையத்தினூடே, இப் புதிய தொடரைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இந் நேர வணக்கம்; உலகில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட வெள்ளையின மக்களால் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து எனப் பல தேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீக குடிகள் பலர் வெள்ளையர்களின் அத்துமீறல்களினால் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சில பகுதிகளில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் அழிக்கப்பட்டன. ஆனாலும் பிற்காலத்தில் ஜனநாயகப் பண்பாட்டிற்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட வெள்ளையின மக்கள் திருடப்பட்ட சந்ததியின் வரலாறுகள் வருசக் கணக்கில் அழிவுறாது இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆவணப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சக மனிதர்களையும…
-
- 2 replies
- 1.8k views
-
-
அம்மாளாச்சி.. என்ர மகளுக்கு கெதியா விசா கிடைக்கச் செய்..! அவளுக்கு இப்ப கலியாணப் பலனாம்.. நல்ல மாப்பிள்ளை கிடைக்கச் செய் தாயே. அப்படி செய்திட்டி எண்டா.. உனக்கு வடை மாலையும் சாத்தி, அடுத்த முறை அவள் டென்மார்க்கில இருந்து காசனுப்பினா தங்கத்தில ஒரு பொட்டும் செய்து தாறன். என்ர அம்மாளாச்சியெல்லே..! ஒரு முறை விழுந்து கும்பிடுற தெய்வத்தை.. வாசலுக்கு வாசல் விழுந்து கும்பிட்டுக் கொண்டு.. மீனாட்சியம்மா.. தன்ர குடும்பக் கடவுளான அம்மாளாச்சியிடம் வைச்ச வேண்டுதலை கோவிலில் இருந்து வீதி வரைக்கும் உச்சரிச்சுக் கொண்டே.. வீட்டை நோக்கி நடக்கலானா..! வீட்ட போனவா.. கேற்றடியில கிடந்த லெற்றரை எடுத்து.. விலாசத்தைப் பார்த்தா. மகள் டென்மார்க்கில இருந்து எழுதி இருந்ததால.. பெரிய எதிர்ப்பார்ப…
-
- 12 replies
- 2.1k views
-
-
சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். '' 1955- ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக ராஜ்ஜியங்கள் பிரிக்கப்படாத காலம். என் அம்மா சரஸ்வதிக்கு 18-வயதில் திருமணமாகி 19-வயதில் நான் பிறந்ததாகச் சொல்வார்கள். சொந்த ஊர், ஆர்யநாடுக்கு அருகிலுள்ள குன்றின் மேல் இருக்கும் நெடுங்காடு. எனக்கு ஏழுவயசு இருக்கும்போது அம்மா, தன் ஊருக்கு அழைத்துப் போனார்கள். அழகிய வயல்வெளி, அடர்ந்த மரங்கள், தென்னை, வாழை, மா, பலா தோப்புகள் கொண்ட நிலம், நூறு அடியில் அழகிய சிறு குட்டை என சாலை வசதிகள் இல்லாத கிராமம். வீடுகள் கூட நூறு அடிக்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒட்டகத்தாரும் ஓசிப்பேப்பரும் நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க கிணிங்ங்ங்................................ அழைப்புமணி. சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான். நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார். இரண்டு மூன்று நாளாக் காலமையளிலை கவனித்தன் உங்கட வீட்டு வாசலிலை பேப்பர்போடுறவன் நிண்டதை அதுதான் நீங்கள் படிச்சு முடிச்சிருந்தால் நானும் ஒருக்கால் இன்றையப் பத்திரிகையை படிப்பமென்று வந்தனான். அதுசரி மணி பதினொன்றாகுது இன்னமும் வீட்டு உடுப்போட நிக்கிறியள், இன்றைக்கு லீவோ? என்று அடுக்கிக்கொண்டுபோனார். நான் கூடுதலாக இரவிலைதான் வேலை செய்கிறனான் எ…
-
- 0 replies
- 931 views
-
-
அந்த மாலைப்பொழுதில்........... மாலைநேரம். பொழுது போகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே யாழ்களம், திண்ணைபக்கம் வந்தும் பார்த்தேன். அங்கேயும் இருக்க பிடிக்காமல், வெளியே சென்று கொஞ்சம் ஓடிவிட்டு வரலாமோ என்று யோசித்துவிட்டு, அதற்கான கால்சட்டை, டிசோ்ட்,சப்பாத்து எல்லாம் டிப்டப்பாக போட்டு ஓடத்தொடங்கினேன். குறிப்பிட்ட தூரம் ஓடிவிட்டு திரும்ப வீட்டை நோக்கி ஒடிக்கொண்டிருந்தபோதுதான் கவனிச்சன் சோடி சோடியாய் வெள்ளைகள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததை. பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது. என் ஒட்டத்தின் வேகமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. முத்தம் அதுதரும் சொர்க்கம். எனக்கும் ஒண்ணு மாட்டுப்படட்டும் இதையே மிஞ்சுடுறேனா இல்லையா என் பார்ப்போம் என மனசுக்குள் வைராக்…
-
- 20 replies
- 2.9k views
-
-
கலசம் – கருணாகரன் அன்று காலை தபால் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரைப் பார்த்தேன். உள்ளே அதிகாரியோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் இருந்த கதிரையின் காலோடு அவர் எப்போதும் கொண்டு திரியும் தூக்குப் பை சாத்திவைக்கப்பட்டிருந்தது. அவருடைய அடையாளங்களில் இந்தப்பையும் ஒன்று. மிக முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய்வந்த நாட்களிலும் அவர் இந்தப்பையைக் கைவிடவில்லை. அவருடைய தொண்டு ஆர்வம் காரணமாக வாய்த்த அந்தப் பயணங்கள் எத்தனை முக்கியமானவையாக இருந்தன? தன்னுடைய பயணங்களின் வழியாக, அங்கே நிகழும் சந்;திப்புகளின் வழியாக தன் காலடியில் தேங்கியிருக்கும் கண்ணீரைத் துடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார். பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பிய பிறகு ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இல் அறம் வீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்கி அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் ப…
-
- 4 replies
- 2.5k views
-