Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அப்போ எனக்கு பதினாலு வயசு தான் இருக்கும். வயசுக்கு ஏத்த மிடுக்கும், பருவ வளர்ச்சியும் என்னையும் ஒரு சினிமா கதாநாயகியுடன் ஒப்பிடும் அளவு மனபக்குவத்தை எனக்குள் வளர்த்து இருந்தது. பூப்படைதலுக்கு பின்னான பெண்களின் உணர்வுகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது. என்ர முகவெட்டு கொஞ்சம் நடிகை கௌசல்யாவை ஒத்திருந்தமையால் நானும் அவவை போல முடி வெட்டை மாற்றி கொண்டேன். ரோட்டாலே போகும்போது பெடியங்கள் என்னை கௌசல்யா என்று கூப்பிடும்போது, அவங்களை பார்த்து முறைச்சாலும், மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம். வீட்டை வந்தவுடனே ஓடி சென்று கண்ணாடிக்கு முன்னாலே நிண்டு தலையை ஒரு கோணலாய் சாய்ச்சு, இடுப்பை வளைச்சு, கண்ணை சிமிட்டி, உதட்டை கடிச்சு எல்லாம் போஸ் குடுத்து பாப்பன். பெடியள் ரோட…

  2. முதல் மனைவி - சுஜாதா சுஜாதா கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா …

  3. முதன்முறை எப்போது.. ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது. அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலைக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு. மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்து போனதற்…

  4. எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர். அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தா…

  5. முதுமைப்பசி! காலையில் எழுந்ததும், மொட்டை மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் அலமேலுவின் முதல் வேலை. காய்கறி செடி, பூச்செடி என்று ஒவ்வொரு செடிக்கும் பார்த்து பார்த்து, பக்குவமாக தண்ணீர் ஊற்றுவாள். அவரைக் கொடி படர்ந்திருந்த பந்தலின் ஓரத்தில் கட்டி விடப்பட்டிருந்த கூண்டில், இரண்டு தேன் சிட்டுகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததை மகிழ்ச்சியுடன் பார்த்தாள். தன் குடும்பத்திற்காக உழைத்து, பிள்ளைகளுக்காக வளைந்து, தேவையற்ற பொருளாக தனிமைப்படுத்தப்பட்ட அலமேலுவுக்கு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும், தேன் சிட்டுகளை பார்த்து ரசிப்பது மட்டுமே ஆனந்தம். அலமேலுவுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள்.…

  6. போனவாரம் அப்பாவிடம் தொலைபேசி அழைப்பு . "வாற சனி ஒரு முதியோர் நிகழ்வு இருக்கு நேரம் இருந்தா வா தம்பி " சனி வெளிக்கிட்டு போனேன் ,மண்டபம் நிரம்பிய சனம் .முக்கால்வாசி முதியோர்கள் .மிகுதி அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் .ராதிகா சிற்சபேசன் பிரதம விருந்தினர் ,அதைவிட வேறு சில அரசியல் பிரமுகர்கள் . பேச்சு ,நடனம் ,பாட்டு ,வில்லுபாட்டு ,நாடகம் என்று நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது .முதலில் சிற்றுண்டியும் தேநீரும் தந்தார்கள் .பின்னர் இரவு உணவும் பரிமாறினார்கள் .மிக சிறப்பாக முதியோர்கள் இந்த நிகழ்த்தியதை பார்க்க மிக சந்தோசமாக இருந்தது . அங்கு பேசியவர்களின் உரையை கேட்க எனது அப்பாவை பற்றியும் பெருமையாக இருந்தது . முதியவர்கள் தங்கள் பொழுதை கழிக்க mall இல் பின்னேரம் கூடும் போது அதன் …

    • 5 replies
    • 1.6k views
  7. முத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன் இயக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலியடைக்கப்பட்ட முகாமிலேயே முத்தப்பாவை முதன்முதலாகக் காண நேர்ந்தது. அதற்கு சிலமணி நேரங்களின் முன்பாகக் கீழ்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. நான் காட்டின் ஒற்றையடிப் பாதையிலிருந்து வெளியேறி கிரவல் தெருவிற்கு வந்திருந்தேன். அப்பொழுது நள்ளிரவு தாண்டியிருந்தது. பகலென்றால் புழுதி பறக்க இரைச்சலில் அலறும் தெரு இரவில் முகக்குப்புற கவிழ்ந்ததைப் போல அடங்கிக் கிடந்ததைப் பரிதாபத்துடன் பார்த்தேன். கலங்கலான நிலவின் வெளிச்சம் அந்தரமான ஓர் உணர்வை ஏற்படுத்திற்று. இங்கிருந்து இடது புறத்திலிருக்கிற மாங்குளம் சந்திக்கு இரண்டு இரண்டரை மணி நேரத்தில் நடந்து…

  8. அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது. மிகுதி நாளை எதிர்பாருங்கள்.

    • 9 replies
    • 1.7k views
  9. முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும். ''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உ…

  10. முன்னர் அவன் நாமம் கேட்டாள் May 31, 2020 காலம் செல்வம் பெயர் என்ன..? பெயர் தானே எண்டிட்டு எங்கட பெயரைச் சும்மா சொல்லிப்போட்டு போகேலாது. அகதியாய் வெளிநாட்டிக்கு வந்த பிறகு, வெளிநாட்டு அதிகாரிகள் எங்கடை பெயரை சொல்லத் தெரியாமல் நக்கலும் கலந்து பிழையாய்ச் சொல்ல, எங்கட தாழ்வுச் சிக்கல் அங்கேயே தொடங்கிடும். இத்தனைக்கும் அவங்கடை பெயரைப் பார்த்தால் ஸ்ரோன், பிறவுன். பிளாக், வூட் என்ற மாதிரி மனிசருக்கு ஏத்த பெயரா இருக்காது. கல், கறுப்பு, மரம் எண்டு தமிழில கூப்பிட்டா எப்பிடியிருக்கும்? பெயராலையும் சண்டை வரும் எண்டு நான் அறிஞ்சது லோறன்சின்ர இரண்டு தம்பிமாரும் “பனியன் “கிறிஸ்தோப்பனை அடிச்ச நேரத்திலைதான். இந்தப் பிரச்சனை கோவில் சபை வரைக்கும் போச்சுது. த…

  11. முன்னொரு பொங்கல் நாளில் யோ.கர்ணன் இன்றைய பொங்கலைப் போலவே மூன்று வருடங்களின் முன்னரும் ஒரு பொங்கல் நாள் வந்தது. அன்று நாங்கள் யாரும் பொங்கி, சூரியனிற்குப் படைக்கவில்லை. அன்று விடிந்ததன் பின், அது ஒரு பொங்கல் நாளென்றே நினைக்க முடியவில்லை. அது பற்றிய சிந்தனையெதுவுமிருந்திருக்கவில்லை. ஏனெனில், அன்றுதான் நான் அகதியானேன். ஒரு அகதிக்குரிய முழுமையான அர்த்தங்களையுணர்ந்து அகதியானேன். மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின் முதல் அடியை அன்றுதான் எடுத்து வைத்தேன். இதுவரையான யுத்த இயல்புகளிற்கு மாறாகவே இறுதியுத்தமிருந்ததினால், யுத்தத்தின் வழமையான அறிகுறிகளெதுவுமின்றியே மன்னாரில் ஆரம்பித்த யுத்தம் ஒவ்வொரு ஊருக்குள்ளும் சத்தமின்றி மெதுமெதுவாக நுழைந்து கொண்…

  12. முப்பது லட்சம்! புழக்கடை வாசலில், தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர், அன்புச் செல்வனும், வினோதினியும். அந்த பெரிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள், வினோதினி. அந்த கிராமத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன், அன்புச் செல்வன். 'இது நடக்குமா, இந்த வீட்டின் மருமகளாய் வர இயலுமா...' என்று எண்ணியவள், ''அன்பு... உங்கப்பா என்னை ஏத்துப்பாரா...'' என்று சிறு பயத்துடன் கேட்டாள். ''இதையே எத்தனை முறை கேட்ப...'' என்றவன், ''நீ இங்கேயே இரு... நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து உன்னை அழைச்சுட்டு போறேன்,'' என்றான். அவன் கூறுவது சரியென்று படவே, ''சரி சரி... அங்கிளோட சம்மதத்தோடயே என்னை அழைச்சுட்டுப் போ,'' என்றாள், சிரித்தபடி! அவள்…

    • 1 reply
    • 718 views
  13. முயல் சுருக்கு கண்கள் - சிறுகதை அகரமுதல்வன் - ஓவியங்கள்: செந்தில் மிகப்பரந்த மாலையில் நடந்துவரும் கிழவருக்கு, மெலிந்த அந்தியின் ஒளி மேற்கில் இருந்து கூசியது. ஒரு சாயலில் கண்களை மூடித் திறந்தார். கோடுபோல நடந்துபோகும் தனது நிழலை ஊடறுத்துப் பறக்கும் மணிப்புறாவைப் பார்க்க அவருக்குத் தோன்றவில்லை. மணிப்புறாவின் அலகில் கிழவர் தொங்கி நின்றதைப்போல அந்தரத்தின் அழகு நிழல் காட்டியது. பாலையின் குரலாகத் தொய்வற்று முன்னேறும் அவரின் பின்னே, நடந்துபோகும் அமலனின் வலதுபக்கத் தோளில் தொங்கிக் கொண்டிருக்கிறது உடும்பு. மூச்சிரைக்க நடக்கும் அவன் காலடிக்கு இடையில் காடு பெருகுகிறது. கிழவர், காலைக் கழுவி, குதிக்காலைத் திருப்பிப் பார்த்து வீட்டுக்குள் சென்றார். உடும்பை வ…

  14. முரண்- கோமகன் 2010 “ஹொப்பித்தால் ட்ருசோ”வின் பிரதான வாயிலில் இருந்து உள்ளே செல்லும் நீண்ட சாலையில் காலைப்பனி மூடியிருந்தது. அதன் இருமருங்கிலும் நின்றிருந்த பைன் மரங்கள் இலைகளைத்துறந்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருந்தன. அதன் கிளைகளில் இருந்த மொக்குகளில் பனி உறைந்து காலை வெளிச்சத்தில் பளபளத்தது. இருபக்கமும் பனிச்சொரியல் மூடியிருக்க நடுவே வீதி சுத்தமாக்கப்பட்டு கருஞ்சாரையாய் நீண்டு சென்றது. ஆங்காங்கே பனியில் சறுக்காமல் இருக்க உப்புத்தூவப்பட்டிருந்தது. “இந்த மரங்களே இப்படித்தான் வசந்தகாலத்தில் இலைகளால் நிறைந்து அத்தனை பறவைகளையும் தமக்குள் வைத்துக்கொண்டு ஒரேயடியாக சந்தோஷத்தைக் கொண…

    • 14 replies
    • 2.7k views
  15. என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னுடன் கதைத்த விடயம் ஒன்றை இணைக்கிறேன் இதனது தொடர்ச்சியினை எழுதுவது கள உறவுகளின் பொறுப்பு.. அவர்:-தம்பி உவங்கள் சரி வரமாட்டாங்கள் தமிழ்ச்செல்வம்,பால்ராஜ் எண்டு பெரிய தலை எல்லாம் போகுது.. உவங்களால ஏலாது போல கிடக்கு... ஒன்றில் அடிக்கிறதென்டா அடிக்கவேணும் அல்லது சும்மா இருக்க வேணும்.. நான்:- சரி அண்ணா போன மாவீரர் தினத்திட்கு வந்தனீங்களோ அவர்:- இல்லைத்தம்பி மனிசிக்கு வேலை.. மகளை கூட்டிக்கொண்டுவர பள்ளிக்கூடம் போக வேண்டி இருந்ததெடாஅப்பு நான்:-வாற பொங்கு தமிழ் 12 ஆம் திகதி நடக்க இருக்கு..இங்கு இருந்து மகிழூந்து என்றால் 30 நிமிடம் தானே அதுக்கு வருவீங்களோ அண்ணா... அவர்:- அதுதான் அப்பு நானும் யோசிக்கிறேன் எத்தின நாளைக்குத்தான் இப்ப…

  16. [size=1][/size] [size=4]கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.[/size] [size=4]'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்டிருந்த, ஒரு விதமான மாடியிலிருந்து, தற்காலிக படிகளைத் தூக்கிவைத்து, அதன் வழியே ஒரு விதமான,தனக்கேயுரித்தான லாவகத்துடன் கீழே இறங்கியவர், படிகளை எடுத்துச் மறைவான சுவரொன்றில், சாத்தியதும், மேலேயொரு, மாடி இருப்பதற்கான, எந்த வித அடையாளமும், அங்கு காணப் படவில்லை![/size] [size=4]மள மளவென்று, காலைக்கடன்களை முடித்தவர், மீன்கடைக்குப் போன பெடியன், வந்திட்டானா என்று கடைக்கண்ணால் பார்த்து உறுதிப் படுத்திய பின்பு, முன்னாலிருந்த கடைக்குப் போய், ஒரு மல்லிகைப் பூமாலையை, வாங்கிக் கொண்டு வந்து, ஒரேயடியாகப், புத்தர், பிள்ளையார், முருகன்,லட்சுமி, அரபிக்கில் எழுதப…

  17. சிட்னி முருகன் கோயில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேர்,தீர்த்தம், பூங்காவனம் என இனிதே நடந்தேறி முடிவடைந்தது .ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடை பெறும் இத்திருவிழா இம்முறையும் மிகவும்நன்றாகவே நடை பெற்றது. .நானும் இடைகிடையே சென்று முருகனின் அருள் என்பக்கமும் கிடைக்க ஆவனசெய்தேன்.பேன்ஸ் கார் வாங்குவதற்கு என்பெருமான் முருகனின் கடைகண் பார்வை என் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வருட திருவிழாவில் கூடிய கவனம் செலுத்தினேன். திருவிழா தொடங்க முதல், தாயையும் மகளையும் தற்செயலாக சந்திக்க வேண்டி ஏற்பட்டது.மகள் என்னொடு சினேக பூர்வமாக பழகுவாள்.எங்கே கண்டாலும் அங்கிள் எப்படியிருக்கிறீங்கள் என்று சுகம் விசாரித்துவிட்டுத்தான் செல்வாள் இங்கு பிறந்து வாழ்ந்து வருபவள்.தாயார் ஒரு சின்ன சி…

    • 33 replies
    • 3.8k views
  18. முருகா நீ ஏன் இப்படிக்... இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரங்கன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு …

    • 6 replies
    • 1.8k views
  19. அவுஸ்ரேலியாவுக்கு முதல்முதல் வந்தவுடன் மனிசி முருகன் கோவிலுக்கு போகவேணும் வாங்கோ என அழைத்தாள்.மறு பேச்சு இல்லாமல் வெளிக்கிட்டு போனேன்.புதுசா என்னைத்தை செய்தாலும் ஆண்டவனிடம் அனுமதி பெறுவது எங்கன்ட மனசில் பதிந்த ஒன்று.. காரில் போகும் பொழுது மனிசி சிட்னி முருகனின் சரித்திரம் சொல்லிகொண்டு வந்தாள் .நல்லூர் கந்தனுக்கு ஒரு கதை இருக்கு,செல்வசந்நிதிமுருகனுக்கு ஒரு கதை இருக்கு அதுபோல் நம்மட சிட்னி முருகனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.ஒரு முருகதொண்டன் அவரை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து தனது வீட்டில் வைத்திருந்து ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பாடசாலை மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு எம்பெருமான் முருகனுக்கு பிராமணர்களின் ஆசியுடன் பூஜை செய்து வந்தவராம். அந்த காலகட்டத்தில் அவுஸ்ர…

  20.  முருகா.... நீ ஏன் இப்படிக் கோவணத்துடன்...... இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன…

  21. முறிவு - சிறுகதை எம்.கோபாலகிருஷ்ணன் - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி “நான்தான் ஆஸ்பத்திரியில இருக்கும் போதே சொன்னேன்ல... `வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றதுக்கு முன்னாடியே பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிடலாம்’னு. இப்ப வந்து என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? அதான் தங்கச்சிமார்க மூணுபேர் இருக்காங்கல. ஆள் மாத்தி ஆள் வந்து அவங்களே பார்த்துக்கட்டும். என்கிட்ட வந்து எதையும் கேக்காதீங்க. வேளாவேளைக்கு ஆக்கிவெக்கிறேன். வேற என்ன வேணாலும் சொல்லுங்க. செய்றேன். இதுமட்டும் என்கிட்ட கேக்காதீங்க. அவ்ளோதான்” - விஜயாவின் குரல் தணிவாக ஒலித்தது. உண்ணம்மாள் தலையைத் திருப்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இளங்கோ அடங்கிய குரலில் பேசுவதும், விஜயா பதில் சொல்வது…

  22. முறை அப்பாவின் கம்பெனி என்றாலும், அதில் பதவியேற்க தனக்கு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டமும் எம்.பி.ஏவும் தேவை என்பதை உணர்ந்திருந்தான் சரவணன். முறையாக அந்தப் படிப்புகளை முடித்துவிட்டு அவன் பதவி ஏற்றபோது அப்பா மோகனசுந்தரம் பூரித்துப் போனார். ‘‘சரவணா, நம் சொந்தங்கள் எல்லாரும் உன் கல்யாண விஷயமா தொந்தரவு செய்யறாங்க! நல்ல பொண்ணா பார்த்துடலாமா?’’ கேட்டார் மகனிடம். ‘‘செய்யலாம்பா! ஆனா அதுக்கு முன்னாடி முறைப்படி சில விஷயங்களை முடிக்க வேண்டியிருக்கு. நான் படிக்கும்போதே கூடப் படிச்ச வந்தனா என்கிற பொண்ணைக் காதலிச்சி, ரகசியமா பதிவுத் திருமணமும் செய்துக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே எங்களுக்குள்ள எதுவும் ஒத்துப்போகாம விலகிட்டோம்! அவள் மும்பைல வேலை கிடைச்சு போயிட்டா. இப்ப…

  23. எனக்கு நினைவிருக்கிறது அந்த முற்றத்தில் நிற்கும் மரம். பள்ளிக் கூட நாட்களிலும் சரி விடுமுறை நாட்களிலும் சரி நாங்கள் அதிகமாக விளையாடி மகிழ்வது அதன் நிழலில்தான். அப்பொழுதெல்லாம் எனக்கு அந்த மரத்தின் மேல் ஒரு கோபம் இருந்தது. அம்மாவிற்கு கோபம் வரும் பொழுதெல்லாம் என்னை அடிப்பதற்கு கையில் எதாவது குச்சி கிடைக்காதா என்று தேடும்பொழுது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைப்பது அந்த முற்றத்து வேம்பு மரக் குச்சிதான். குச்சி கையில் கிடைத்து விட்டால் அவ்வளவுதான் முட்டிக்கு கீழ் வீங்கிவிடும். இதற்காகவே நான் என்ன செய்தேன் தெரியுமா? கைக்கெட்டும் கிளைகளை எல்லாம் அம்மாவிற்கு தெரியாம வெட்டி விட்டேன். அதற்கும் குச்சி சிதற சிதற வாங்கி இருக்கிறேன். என்னதான் இருந்தாலும் அந்த மரம் எங்களுக்கு …

  24. முற்றத்து ஒற்றைப் பனை 'செங்கை ஆழியான்' -------------------------------------------------------------------------------- முற்றுத்து ஒற்றைப் பனை நகைச்சுவை நவீனம் 'செங்கை ஆழியான்' ஒரு 'சிரித்திரன்' பிரசுரம் ------------------------------------------------------------- முதலாம் பதிப்பு, யூன், 1972 முற்றத்து ஒற்றைப் பனை. © செங்கை ஆழியான், (க. குணராசா, B. A. Hons, C. A. S.) அச்சுப்பதிவு: ஸ்ரீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம். ஓவியம்: 'கணேஷ்' ஆசிரியரின் ஏனைய நு}ல்கள் 1) ஆச்சி பயணம் போகிறாள் 2-00 2) நந்திக்கடல் 2-00 3) சுருட்டுக்கைத்தொழில் 1-00 4) அலைகடல்தான் ஓயாதோ? 1-25 5) சித்திரா பௌர்ணமி -/80 6) ஒரு பட்டதாரிய…

  25. சோளகம் பெயர்ந்துவிட்டது. சித்திரைமாதக் கழிவில் ஏற்படும் இடி மின்னற் புயுலுடன் சோளம் வீசத் தொடங்கிவிட்டது. மூன்று நாட்கள் இடைவிட்டு விட்டு மழை பொழிந்து தீர்த்தது. "ஒரு வரியமும் இல்லாதமாதிரி, இந்தமுறை சித்திரைக் குழப்பம் ஓமோம் சரியான மழை.....!" என்று வாங்கு மூலையில் இருந்த படி பொன்னு ஆச்சி முணுமுணுத்தாள். பொன்னு ஆச்சி முணு முணுத்தது, தலைவாசல் திண்ணையில் குந்தி இருந்து குளிருக்கு அடக்கமாகச் சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த கொக்கர்' மாரி முத்தரின் காதுகள் விழவே செய்தது. 'என்ன முணுமுணுக்கிறாய்' என்பதுபோல மனைவியை நிமிர்ந்து பார்த்தார். உர்'ரென்ற இரைச்சலோடு வீசிய காற்றினால், முற்றத்துப் பனையிலிருந்து பிடிகழன்ற கங்குமட்டை ஒன்று 'தொப்'பென்று தலைவாசல் கூரையில் விழ…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.