கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கஜனின் மனதிலும் ஒரு வித பதட்டம் அதிகரித்தது. வழமைக்கு மாறாக இதயம் விரைந்து அடித்துக் கொண்டது. இதயத் துடிப்பின் சத்தத்தை காதுகள் கூட உணர முடிந்தது. கால்களில் ஒரு வித நடுக்கம் பற்றிக் கொண்டிருந்தன. நெற்றியால் வியர்த்து ஊர்த்திக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் மத்தியில் கண்களைக் கூர்மையாக்கி அவள் மிக நெருங்கி வரும் வரை காத்திருந்தான். வெள்ளை வெளீர் என்ற பள்ளி உடையில் உயர்தர மாணவிக்குரிய மிடுக்குடன் பாவனா தோழிகள் சகிதம் நடந்து வந்து கொண்டிருந்தாள். வழமையாக காணும் பாவனாவாக அன்றி அன்று அவளின் முகத்தில் அழகு ஒளிவீசிக் கொண்டிருந்தது. நேற்றிரவு முகத்தை பசைகள் தடவி வெளிர்க்க வைத்திருப்பாளோ என்ற எண்ணத்தை மனதில் பறக்க விட்டபடி.. எக்ஸ்கியூஸ் மி.. …
-
- 26 replies
- 3.5k views
-
-
ஈழத்தோடான என் அனுபவங்களில் போர்,போரின் கொடுமைகள்,பாதிப்புகளை தவிர்த்து சில விசித்திரமான மனிதர்களையும் கண்டேன். சற்று முன் என் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவருடன் தொலைபேசியில் கதைத்ததன் பலனாக சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அன்றும் (2006)ஒரு நாள் இப்படி தோன்றிய நினைவுகளின் பலனாக நான் கதையாக எழுதிய ஒரு நிகழ்வை இந்த பகுதியில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். கனடாவில் இருந்து பெரியம்மா குடும்பம் வந்திருந்தார்கள். பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அக்காவின் கணவர், மற்றும் அவர்களில் குழந்தைகள். அங்கு விடுமுறை காலம், இங்கு அப்படியா? விடுமுறை காலம் அல்லவே! புலம்பெயர் வாழ்க்கையின் சாபத்தில் இதுவும் ஒன்று எனலாம். வேறு நாட்டில் இருந்து உறவினர்கள் வந்தால் விடுமுறை…
-
- 19 replies
- 2.5k views
-
-
நாகராஜின் மகனுக்கும், செல்லையாவின் மகளுக்கும் திருமணப்பேச்சு. நாகராஜ் குடும்பம் அவுஸ்திரேலியாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். நாகராஜ் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் நிமலன். செல்லையா குடும்பத்தினர் 1995 ல் இடப்பெயர்விலிருந்து கொழும்பில் வசிக்கிறார்கள். செல்லையாவுக்கு 2 பெண்பிள்ளைகள். மூத்தவளுடைய திருமணப்பேச்சு தான் இப்போது நடைபெறுகிறது. அதற்காக நாகராஜ் கொழும்பு வந்திருக்கிறார். பேச்சுவார்த்தை நன்றாக தான் நடைபெற்றது, சீதனப்பேச்சை செல்லையர் ஆரம்பிக்கும் வரை. 'எங்களிடமிருந்து என்னதை எதிர்பார்க்கிறீர்கள்?' என்ற செல்லையரின் கேள்விக்கு, கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகராஜ் சொன்னார். 'மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் வீடு வாங்கிற எண்ணம் இருக்கு. அதற்கு கொஞ்ச தொகை உங்களிடமிருந…
-
- 24 replies
- 4.3k views
-
-
சட்டவிரோதக்குடியேற்றவாசியி
-
- 3 replies
- 1.2k views
-
-
அழுக்கு!! ஆக்கம் - களவாஞ்சிகுடி யோகன்..!! அலுவலக மாதந்தம் கூட்டத்தில் இருந்த போது தான் அந்த அழைப்பு.கைத் தொலைபேசியைத் தூக்கி இலக்கங்களை பார்த்தான் "பிறைவேற்" என்று விழுந்திருந்தது.பட்டனை அழுத்தி "கலோ" என்ற பொழுது மறுமுனையில் தெய்வேந்திரன் அங்கிள். "எப்படியிருக்கிறீர்கள் தம்பி?" கேட்டார்.சுகத்தைக் கூறி என்ன விஷயம் அங்கிள்?" என்று விசாரித்தான் செல்வன். "இந்த சனி ஞாயிற்கு ஏதாவது அலுவல்கள் இருக்கிறதோ?" "ஏன் அங்கிள்?" "ஒருக்கா வீட்டுக்கு வாங்கோ கதைக்க வேணும்." தொலைபேசியைத் துண்டித்துவிட்டு கூட்டத்திலே கவனம் செலுத்தத் தொடங்கினான்.கூட்டம் முடிந்த பின்னர் தெய்வேந்திரன் அங்கிள் ஞாபதிற்கு வந்தார்.அவரோடு செல்வனுக்கு பன்னிரன்டு வர…
-
- 29 replies
- 5.6k views
-
-
பாடசாலை மணி அடித்தவுடன் சிவகொளுந்து தன்னுடைய பறியை (புத்தகபையை) தோளிள் மாட்டி கொண்டு,பிள்ளைகள் எழுந்து வரிசையாக போக வேண்டும் சரியோ மற்ற வகுப்பு பெடியன்கள் போல கத்தி கொண்டு போறதில்லை யாராவதும் அந்த மாதிரி கத்தினியளோ பிறகு நான் வாத்தியாக இருக்க மாட்டன் பொலிஸ்காரன் மாதிரி தான் இருப்பன் என்று கூறி மாணவர்களை வீடு செல்வதிற்கு வழி அனுப்பி வைத்தார்.இதனால் இவரை டிஸிபிளீன் சிவகொழுந்தர் என்று தான் பாடசாலையில் உள்ளோர்கள் அழைப்பார்கள். மாணவர்கள் எல்லோரும் சென்றவுன்ட தானும் வெளியே வந்து சிறிது நேரம் வகுப்பாறை வாசலில் நின்று தான் வீடு செல்வார். சிவகொளுந்தருக்கு இரு ஆண்பிள்ளைகள் உண்டு,மனைவி கமலா பேரழகி என்று இல்லை ஆனாலும் யாழலகி (அதாவது சாதாரண யாழ்பாணத்து பொம்பிளையின் அழகு).கொ…
-
- 19 replies
- 3k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(உறக்கத்தை தொலைத்த காதல்)..ஜம்மு பேபியின் "மெளனித்த சந்திப்பு"..(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)..கவுஸ்புல
-
- 53 replies
- 6.2k views
- 1 follower
-
-
புதிய மனுசி - ஆதிலட்சுமி சிவகுமார் - நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த உழைப்பின் அறுவடைதான் இந்தக் தகரங்கள் என நினைத்துப் பெருமைப் படுபவளாய்.. அவள் முகம்.. 'இந்தப் பிஞ்சுகள் ரெண்டும்.. மழையிலையும்.. குளிரிலையும் விறைக்கக் குடாது.." குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தாள். பாயைவிட்டு விலகிப்போய் ஓரமாய் தூங்கிக்கொண்டிருந்தார்கள்... மூத்தவள் ஐஸ்வர்யா அச்சில் வார்த்த மாதிரி தகப்பனையே போன்று அகலிகா கொஞ்சம் கறுப்பு. ஆனால் இவளைப்போல கம்பி கம்பியாய் நீளமான தலைமுடி. "மூத்தபிள்ளை சரியாய்த் தேப்பனையே மாதிரி... நல்ல நேரம் பொம்பிளைப் பிள…
-
- 1 reply
- 828 views
-
-
இன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே வேலை முடிந்த சந்தோசம் வழமை போலவே வெள்ளிக்கிழமை என்றபடியாலும் இரட்டிப்பு சந்தோசத்துடன் டாக்கர் ரவி இன்று இரவு எந்த நாட்டு சாப்பாடு சாப்பிடலாம்;; என்று யோசிக்கும் போது தான் புதிதாக திறந்த அப்கானிஸ்தான் ரெஸ்ரோறன்ருக்கு போகலாம் என்று எண்ணியவாறே வீடு சேர்ந்தார். ரவி வழமை போல் பாதணிகள் வைக்குமிடத்தில் நின்று என்ன கதவு திறக்கும் போதே சுடச்சுட ஆவிபறக்க தேநீருடன் வந்து வரவேற்கும் மனைவி மலரைக் காணவில்லையே என்று சுற்றி சுற்றி பார்த்தார்மெதுவாக பாதணிகளைக் கழட்டி விட்டு படுக்கை அறைக்குப் போய் மலருக்கு பக்கத்தில் இருந்த போது தான் மலர் அழுது கொண்டு படுத்திருப்பது கண்டு சிலையாகிப் போனார்.மெதுவாக எ;னன நடந்தது என்று கேட்பதற்கிடையில் ரவியே அழுதுவிடுவார் போல்…
-
- 17 replies
- 3.1k views
-
-
காதலில் காதல்.! அம்மா வீட்டிற்கு வந்திருந்தா எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல, ஒரு கடிதம் போட்டிட்டு வந்திருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறா. இன்னும் நாலைஞ்சு நாளைக்கு ஒரே புராணமாய் போப்போது. வர வர நின்மதியில்லாமல் போச்சு என்ர அறைக்கதவை பூட்டி திறப்பைக்கொண்டு போகவேணும். இல்லை என்றால் மனிசி அறையை ஒரு கை பாத்திடும். போனமுறை வந்து செய்த வேலை காணும். படங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒழிச்சுப்போட்டா. வந்த கோவத்திற்கு வேறை யாரும் என்றால் நடக்கிறதே வேறை அம்மா என்டதால விட்டிட்டு இருந்தனான். அவாக்கு இதே வேலையாப்போச்சு எத்தனை வருசமாச்சு சொன்னாக்கேக்கமாட்டன் என்கிறா. அவாவும் பாவம் தானே. என்ர காதல் புனிதம் அவவுக் எப்படிப்புரியும். பாவம் வந்தவ சந்தோசமாய்…
-
- 15 replies
- 3.1k views
-
-
-
அப்பதான் டியூசன் முடித்து வெளியிலை வந்து கொண்டு இருந்தோம்... மாலை ஐந்து மணி ஆறு மணியில் இருந்து ஊரடங்கு நண்பர்கள் எல்லாரும் போகும் வழமையான பாதை... புறப்படும் போது எங்களை தாண்டி ஒரு ஜீப் வேகமாக போகிறது... மச்சான் ஆமியடா விலகி நில்லுங்கட எனும் நண்பனின் குரலுக்கு செவிசாய்த்து எல்லாரும் ஒதுங்கி நிக்கிறோம்.... அந்த மொட்டை ஜீப்பில் போவது எங்களுக்கு கொஞ்சம் பரீட்ச்சியமான முகம்... கப்ரன் ஆறுமுகம்... இந்திய இராணுவத்தின் நுணாவில் படை முகாமின் பொறுப்பதிகாரி... எங்களை திரும்பி பார்த்தது தெரிந்தது அதுக்குள் ஜீப் எங்களை தாண்டி போய் விட்டது... ஜீப்பின் பின்னால் நாங்கள் எங்களை தாண்டி கொஞ்ச தூரம்தான் ஜீப் போய் இருக்கும்... பெரியதாய் ஒரு வெடியோசை வீதியோரம் இருந்த மருத…
-
- 16 replies
- 2.2k views
-
-
என்ன இப்பதான் 8 மணியா..?! உங்களுக்காக 1 மணித்தியாலமா காத்திருக்கிறன். ஆடிப்பாடி வாறீங்கள். கெதியா வாறதுக்கு என்ன.. என்று ஜெகனோடு சினந்து கொண்டாள் ஜனனி. இஞ்ச பாருங்கோ ஜனனி.. உங்களைக் காக்க வைக்கனும் என்றது என்ர விருப்பமில்ல. நீங்க எனக்காக தனிய காத்திருப்பீங்கள் என்று நினைச்சிட்டுத்தான் கெதியாப் புறப்பட்டு வந்தன். வாற வழியில நான் வந்த பஸ் பழுதாகி நின்றிட்டுது. பிறகு அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து அதில வாறன். அதுதான் நேரம் எடுத்திட்டுது. மன்னிச்சுக்கோங்கோ தாயே... என்று பணிந்தான் அவள் கோபத்தின் முன். சரி சரி.. வாங்க ரீ குடிப்பம். களைப்பா இருக்கிறீங்க.. முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்று கோபந்தணிந்து பணிவோடு கேட்டாள் ஜனனி. ஜனனி தாதியாக வைத்தியசாலை ஒன்றில் …
-
- 34 replies
- 4.6k views
-
-
சண்டியர்கள் ஒரு பேப்பருக்காக அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது
-
- 14 replies
- 3.2k views
-
-
"விளக்குகளை அணைச்சுப் போட்டு படு மகன்" என்ற வார்த்தைகள் மட்டும் சங்கரின் காதில் எதிரொலித்தபடி இருந்தது. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்ட அந்தச் சம்பவம் மட்டுமே அவனின் நினைவுகளில் தற்போது ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. சங்கர் பிறந்தது மட்டக்களப்பில் ஒரு சின்னக் கரையோரக் கிராமத்தில். அக்கிராம மக்களின் பிரதான தொழிலே மீன் பிடிதான். தாய் பார்வதியும் தகப்பன் ஜோசப்பும் பல காலம் குழந்தைகளின்றி இறுதியில் சங்கரைப் பெற்றெடுத்தனர். மீன்பிடித்தொழிலில் செய்வோர் பலரிடம் வறுமை என்பதும் ஒட்டிப்பிறந்த ஒன்றுதானே. பார்வதி யோசப் குடும்பமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. தினமும் கட்டுமரத்தோடு மட்டு வாவியில் இறங்கி கரை சேரும் போது கொண்டு வரும் கடலுணவோடுதான் அவர…
-
- 9 replies
- 2k views
-
-
இங்கேயும் ஒரு அவலம்!! ஆக்கம் - களுவாஞ்சிக்குடி யோகன்!! கடிதம் வந்திருந்தது.நாட்டிலிருந்து தங்கை அனுப்பியது.பிரித்து சாதரணமாகத் தான் படிக்க ஆரம்பித்தாள்.வாசித்து முடிந்ததும் அழுதே விட்டாள் யாமினி.கண்களிலிருந்து நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியிருந்தது. நிறைந்த கண்ணீரோடு மீண்டுமொருமுறை அதை வாசிக்கத் தொடங்கினாள்.அக்கா,நாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை.அது தீர்ந்து மறுபடியும் சமாதானம் உருவாகுமென்ற நம்பிக்கையும் எம்மிடமிருந்து விட்டுப் போயிற்று.அப்படியான நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடக்கின்றன. செல் விழுந்து அப்பாவிற்கு ஒரு கால் ஊனமானது உனக்குத் தெரியும்,அன்று இராணுவத்தினர் திடீரென ஊருகுள் புகுந்து விட்டார்கள்.அயலில் யாரும் இல்லை.பக்க…
-
- 15 replies
- 3.2k views
-
-
சாதனை சாதனை சாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு…
-
- 17 replies
- 2.7k views
-
-
செல்லிடபேசி கிணுகிணுக்க பதறி அடிச்சு எழுந்த வசன் நேரத்தைப் பார்த்தான். மணி நள்ளிரவு 12.30. வேலைக் களைப்பால் விழுந்து படுத்தவன் நித்திரைக் கலக்கத்தில், "எவண்டா இந்த நேரத்தில.." செல்லிட பேசியைக் காதில் வைத்தபடி மனதில் எண்ணத்தை ஓட விட்டான். "உங்கட அவாவுக்கு குழந்தை பிறந்திருக்கு. உடன வைத்தியசாலைக்கு வரட்டாம்" என்று சொன்னதோடு மறுமுனை இணைப்பைத் துண்டித்துக் கொள்கிறது. வேலை முடிச்சிட்டு இவ்வளவு நேரம் அங்க தானே நின்றிட்டு வந்தன். இப்ப பிறக்காது 48 மணி நேரம் ஆகும் எண்டாங்கள். அதுக்குள்ள... என்று மனசுக்குள் நினைத்துவிட்டு.. தனது குழந்தையின் முகத்தை காணுற சந்தோசம் மனசில பொங்க.. மனுசி தனிய என்ன பாடுபடுகுதோ என்று எண்ணியபடி பதறியடித்துக் கொண்டு வைத்தியசாலை நோக்கி மகிழுந்தில்…
-
- 24 replies
- 3.3k views
-
-
ஊசியிலை மரங்களுடன் கூடிய ஐரோப்பிய மண்ணில் உள்ள இங்கிலாந்தில் பாகிஸ்தானிய இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவள் றுக்சானா (Ruksana) என்ற அந்தச் சிறுமி. எல்லா இங்கிலாந்துச் சிறுவர் சிறுமியர் போல அவளும் சுதந்திரச் சிட்டாக பள்ளிக் காலத்துக்குள் நுழைகிறாள். அவள் பள்ளியில் துடிப்புடன் செயற்பட்டு சிறந்த மாணவியாக ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய முக்கிய மூன்று பாடங்களிலும் set 1 (உயர்நிலைக்குரிய) மாணவியாகவே இருந்து வந்துள்ளாள். 15 வயதை அடைந்து பருவமும் அடைகிறாள். 15 வயதில் ஒரு சிறுமிக்குள் என்னென்ன அழகிய கனவுகள் ஓடுமோ அத்தனையும் இவளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்.. பாகிஸ்தானிய பூர்வீகப் பெற்றோர் இவளை சுற்றுலாவுக்கு என்று பாகிஸ்தான் அழைத்துச் ச…
-
- 32 replies
- 5.5k views
-
-
பூமாதேவி சிரிக்கிறாள் பூமாதேவி சிரிக்கிறாளா அப்பிடியெண்டால் என்னவெண்டு யோசிக்கிறவைக்கு இப்ப உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவுகளைத்தான் பூமாதேவி சிரிக்கிறாள் எண்டு எழுதினனான்.சீனாவிலை பூகம்பம் பல்லாயிரம்பேர் மரணம். பர்மாவிலை சூறாவளி இரண்டுலச்சம்பேர் மரணம். அமெரிக்கா கலிபோர்ணியாவிலை காட்டுத்தீ பலநூறுபேர் கருகிக்போச்சினம் எண்டு இந்தமாதம் முழுக்க எல்லா செய்திகளிலையும் பாத்து பாத்து பாதிவாழ்க்கை வெறுத்துப்போச்சுது. அப்ப இன்னமும் பாதி இருக்கிதுதானே எண்டு கேக்கக்கூடாது. அது எங்கடை இனத்தின்ரை இழப்பை பாத்து அந்தப் பாதியும் ஏற்கனவே வெறுத்துப் போச்சுது. அதுதான் மொத்தமாய் வெறுத்துப்போச்சுதே பிறகேன் எங்களை வெறுப்பேத்திறாயெண்டு கேக்கிறவைக்கு......அதுதான் என்ரை நோக்கமே யான்பெற்ற இன்…
-
- 26 replies
- 5k views
-
-
அன்புள்ள கறுப்பி நாயே இந்தவார ஒரு பேப்பரிற்காக தொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ??.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு கு…
-
- 26 replies
- 5.8k views
-
-
மாயாவி ஒரு பேப்பரிற்காக சாத்திரி மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை …
-
- 15 replies
- 2.5k views
-
-
மணமகள் கிடைத்தாள் சந்தாலி ராஜ்யத்து மன்னருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தையே பிறக்கவில்லை. தனக்குப்பின் ஆட்சிப் பீடத்தில் அமர ஒரு மகன் வேண்டும் என்று மன்னர் மிகவும் ஆசைப்பட்டார். அந்த ஆசை நேடுங்காலமாக நிறைவேறாததைக் கண்டு, பட்டத்து ராணி மன்னரை மற்றொரு விவாகம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்த, மன்னரும் இன்னொரு பெண்ணை மணந்தார். அவளுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அதனால், மேலும் இரண்டு பெண்களையும் மணந்து கொண்டார். அதன் பின்னரும், குழந்தைகள் பிறக்கவில்லை. மன்னருக்கு வாரிசு தோன்றாமல் இருப்பதைக் கண்டு குடிமக்களும் வருத்தமடைந்தனர். ஒருநாள், அந்த ராஜ்யத்திற்கு ஒரு யோகி விஜயம் செய்தார். யோகியின் சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட முதன் மந்திரி அவரை அரண்மனைக்கு வரவழைத்த…
-
- 7 replies
- 1.9k views
-
-
கந்தர் என்ன கடைக்கோ என்று சுரேஷ் கேட்டது தான் தாமதம் கந்தர் கடுப்பாகி இல்லை படம் பார்க்க வந்தனான் என்றார்.கந்தர் கோபபட்டதிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே அவர் அருகில் வந்து உன்னட்ட எத்தனை தரம் சொல்லுறது கந்தர் என்று கூப்பிடாதே என்னுடைய பெயர் "ஸ்கந்தா" எங்களுடைய தமிழ் சனம் எவ்வளவோ நிற்குது இங்கே,அவையளுக்கு என்னுடைய பெயர் கந்தர் என்று தெரிந்தால் என்னுடைய "இமேஜ்" என்னாகும் மச்சான் என்றவர் கடையில் வாங்கிய பொருட்களை காருகுள் கொண்டு போய் வைத்துவிட்டு சுரேஷிடம் இருந்து விடைபெற்றார். காரில் வீடு செல்லும் போது கந்தருக்கு மனசு ஏதோ போல் இருந்தது சுரேஷுடன் அப்படி பேசி இருக்க கூடாது என்று மனதில் எண்ணியவர் வீட்டை போய் அவனுடன் தொலைபேசியில் கதைக்கவேண்டும் என்று க…
-
- 24 replies
- 3.8k views
-
-
கடந்த ஞாயிறு சிட்னியில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. வீட்டை விட்டு போக முடியாத நிலை. போக முடியாத நிலை என்பதை விட, வெளியே செல்ல மனம் இல்லை என்பதே உண்மை. காரணம் ஈழத்தில் சென்றவாரம் காலமாகியிருந்த என்னுடைய மாமா தான். இருப்பினும் தமிழனாக பிறந்துவிட்டு, பொங்குதமிழுக்கு போகாமல் இருப்பது, சொந்த அடையாளத்தை இழப்பது போன்றதல்லவா. காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை பொங்குதமிழில் பங்கெடுக்க சென்றிருந்தேன். அந்த நான்கு மணி நேரங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அதிலும் எனக்கு, மாமாவின் மறைவும் மனதில் இருக்க போக, மிகவும் வேதனையான மணித்துளிகளாக அமைந்துவிட்டது. சென்றவாரத்திலிருந்து வீட்டில் மிகவும் சோகமான சூழல். துக்கம் விசாரிக்க வருபவர்களும், தூர தேசங்களிலிருந்து வரும் தொ…
-
- 18 replies
- 3.2k views
-