கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மொழி உணர்ச்சி இல்லாதவனுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்பட செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். நன்றி: கொளத்தூர் மணி - பெரியாரும் தனித் தமிழ்நாடும்
-
- 1 reply
- 1.7k views
-
-
மொஹிதீன் ஹோட்டல்: உமாஜி ”சும்மா சாப்பிடுங்க” பக்கத்து மேசையில் யாரோ யாருக்கோ சொன்னார்கள். நண்பன் சற்றே துணுக்குற்றதுபோல திரும்பிப் பார்த்தான். இரவு நேர பேரூந்துப் பயணிகளால் நிறைந்து, அவசர கதியில் இயங்கிக்கொண்டிருந்த சாப்பாட்டுக் கடை. பின் மெதுவாக, ”மொஹிதீன் ஹோட்டல் நானா ஞாபகம் வந்திட்டுது. போற எல்லா முஸ்லீம் ஹோட்டலிலும் நான் தேடுவேன். மொஹிதீன் ஹோட்டல் என்ற பெயர் இன்னும் கண்ணில் படவில்லை. மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டதும் நண்பன் சொல்லத் தொடங்கினான். வீட்டில் நானும் அப்பாவும்தான். தினமும் காலையில் அப்பா ஐம்பது ரூபாய் கொடுப்பார். காலையும் மதியமும் சாப்பாட்டுக்காக என்று பேச்சு. ஆனால் காலைச்சாப்பாட்டை…
-
- 0 replies
- 478 views
-
-
மோகனம் : அனோஜன் பாலகிருஷ்ணன் 1 “ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன். “எஸ்…” “நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச் செல்லும் தூய பிரித்தானிய உச்சரிப்பில் வார்த்தைகள் ஒலித்தன. பொலிஸ் என்றவுடன் என் உடல் என்னையும் மீறி சிறிதாக விழிப்புக் கொண்டது. “சொல்லுங்கள்,” “உங்கள் மகனது பெயர் செந்தூரன்தானே?” “ ஆமாம்” “உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. செந்தூரனும், அவரது நண்பர் கெல்வினும் ஸ்டாவூட் பூங்காவில் தாக்கப்பட்டுள்ளார்கள். சிறிய வன்முறைச்சம்பவம்…” “ஹோ…என் மகனுக்கு?” முடிந்தவரை பதட்டத்தை வெளிக்காட்டாமல் என்னை நிதானித்த…
-
- 9 replies
- 1.4k views
-
-
மோகினிப்பேய் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில் யுனிவர்சிட்டிப் படிப்பை முடித்து,கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து கொஞ்சநாட்களில், கல்லூரி நாட்களிலும் யுனிவர்சிட்டி நாட்களிலும் இருந்து சுதந்திரமோ,நேரமோ இனிவருவது அருமை என்று அவனுக்குத் தெரிந்தது. இனி அப்படியான சுதந்திரமும் தான் நினைத்ததைச் செய்ய நேரமும் கிடைப்பதென்றால் அவனடைய உழைப்பு வருமானம் போன்றவற்றையும் யோசிக்க வேண்டும் என்பது யதார்த்தத்தின் வெளிப்படை என உணர்ந்தான். பணத்தைப்பற்றிக் கவலைப்படாமல் கொஞ்சநாட்கள் தான் நினைத்தததைச் செய்யலாம் என்ற அவனுடைய அந்…
-
- 6 replies
- 3k views
-
-
இன்னுமொரு வரலாற்று தொடர் இப்பிடியான தொடர்களுக்கு இங்கு ஆதரவு கிடைப்பது மிக குறைவு எனினும் நான் படிப்பதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்துடன் இதனையும் இணைக்க தொடங்குகிறேன்....... எங்கே புதியதொடர் ஒன்றையும் காணலையே என அன்புடன் விசாரித்த ராஜவன்னியன் அண்ணாவுக்கும் மற்றும் பழையதொடர்களுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கிய புன்கையூரான் அண்ணா ஈஸன் அண்ணா தமிழ் சிறி அண்ணா ரதி அக்கா சுபேஷ் சுண்டல் துளசி.. ஆகியோருக்கு நன்றியுடனும்..................... ******************************************************************************************************* Becoming Che என்னும் நூலை எழுதிய கார்லோஸ் ‘கலிகா’ ஃபெரர் (Carlos ‘Calica’ Ferrer) முதல் முத…
-
- 34 replies
- 6.7k views
-
-
மோன் (சிறுகதை ) அகரமுதல்வன் கிளிநொச்சி பாண்டியனுக்கு முன்னால இருந்த பாலைமரத்தில தான் ஜெயத்தானை கட்டி வைச்சு இயக்கம் சுட்டதடா என்று சொல்லிய அம்மாவின் சுவாசம் பெருமூச்சாகத் தான் வெளியேறியது. அந்தப் பெருமூச்சில் இழப்பின் பெயரிடாத சொல்லொன்றுமிருந்தது. இயக்கம் ஏன் மாமாவைச் சுட்டது என்று நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலங்களில் இயக்கத்தின் சூடுகள் அவசரமாகவும்,தவறாகவும் சிலரைக் கொன்றிருக்கிறது என்று பெரிய ஆக்கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். தேங்காய் திருவிக்கொண்டிருந்த அம்மாவிடம் ஏன் சுட்டார்கள் என்று கேள்வியாய்க் கேட்டுவிட்டேன்.”அது நீளமான கதையடா ஆறுதலாய்ச் சொல்லுறன்” என்று சொல்லமறுத்துவிட்டாள். அம்மாவின் மூன்று தம்பிகளில் இப்ப உயிரோட இருக்…
-
- 4 replies
- 887 views
-
-
மான்டேஜ் மனசு 17: மௌன ராகம் - காதலின் பேசாமொழி! அலுவலகத்தில் வழக்கமான பணி நிமித்தங்களுக்கிடையே நண்பர் சராவுடன் பேசிக்கொண்டிருந்ததில் சினிமா பற்றிய பேச்சு வளர்ந்தது. டாபிக்கல் சுவாரஸ்யங்கள் இருந்தாலும் மிஷ்கின், செல்வராகவன், மணிரத்னம் பற்றிப் பேசாமல் சினிமா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. 'மௌன ராகம்' வெளியாகி 30 வருடங்கள் ஆனதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தனக்குப் பிடித்த டாபிக் பற்றிப் பேசும்போது நீங்கள் சராவை உற்று கவனிக்கும் தேவை இருக்காது. ரொம்ப சாதாரணமாக ஒரு வித அலாதி ஆர்வத்துடன், எக்ஸைட்மென்ட்டுடன் சரா பேசுவது பிடித்தமானதாக இருக்கும். சமயங்களில் அவர் சுட்டிக்காட்டும்…
-
- 0 replies
- 2.4k views
-
-
மௌனங்கள் கலைகின்றன. கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன். முகட்டு ஓடு பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான…
-
- 24 replies
- 5k views
-
-
மௌனத்தின் எல்லையிலே வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. பானைக்குள் கையை விட்டு துளாவினாள் சரசு. கையில் கிடைத்த சில்லறைகளை அந்த நிலா வெளிச்சத்தில் பிடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்தவள் ஒருவித திருப்தியுடன் தனது முந்தானையிலே முடிந்து தன் இடையிலே செருகினாள். நாளை நேரத்திற்கே போகவேண்டும் என்ற நினைவு உந்தவே கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழந் துணியை நிலத்திலே போட்டவள் சுருண்டு படுத்துவிட்டாள். ஆனால் அவளால் நித்திரை கொள்ள முடியாதவாறு நினைவு அலைகளிலே சிக்கித் தவித்துக…
-
- 2 replies
- 2.3k views
-
-
ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே அவனுடன் பழகுவதை அந்தப் பெண்ணின் குடும்பம் அவனுடைய குடும்பச் சூழலையும் பின்னனியையும் காரணம் காட்டி, அவனுடன் இருந்தால் தன் மிகுதியுள்ள வாழ்நாள் முழுமையும் அவள் துன்பப்பட வேண்டி இருக்கும் என்ற அடிப்படையில் தீர்க்கமாக எதிர்த்தது!... இந்த மாதிரியான குடும்பத்தின் மனநிலையால் இந்தக் காதலர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்!... இந்தப்பெண் அவனை அதிகப் படியாக நேசித்தாலும், அடிக்கடி அவனைப் பார்த்து கேட்பது, “நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்” என்பதுதான்!.... அத்தருணங்களில் அவனிடமிருந்து அவ்வளவாக நல்ல பதில் கிடைக்காததனால் இவளுக்கு வருத்தமே மிஞ்சியது!...அதனுடன் குடும்பத்தின் எதிர்ப்பும் சேர்ந்து கொள்ள அவனிடம் எப்போதுமே தன் கோப முகத்தைய…
-
- 0 replies
- 731 views
-
-
எப்போதும் வரும் ஒரு கனவு. கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று… கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி அப்படியே அரக்கு நிறம் கலந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, விரிந்து, விரிந்து அதன் இதழ்கள் அண்ட பெருவெளியை மறைத்து எழுந்து நிற்கும்போது, அதனுள் இருந்து வெளி வரும் ஒரு கசப்பின் மணம், என்னை கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு முட்ட முட்ட முட்ட வைத்து… அது தாங்காமல், அலறி எழும் நான், அந்த கனவு தந்த பயத்தில் இருந்து மீளாமல் கண்ணீர் வடிய நெடு நேரம் படுக்கையில் அமர்ந்திருப்பேன். “கெனா”ல இப்படி கெதக்’குனு பயப்படாதட்டி, யட்சி பிடிசுக்குவா”. ஒவ்வொரு முறை அலறி எழும்போது அம்மாச்சியின் இந்த வார்த்தைகள் மனசுக்குள் வந்து மேலும் பயத்தை அதிகரிக்கவே …
-
- 0 replies
- 1.2k views
-
-
சுரேஸும், ரசிகாவும்ஒரு வாரமாக பேசவில்லை. சுரேஸ் அவளுடன் பேசுவதற்கு ஒருமுறை முயன்றும் அவள் முகம் கொடுக்காமல் போனதால், தனக்கே உரிய மிடுக்கில் அவனும் அதன் பின் அவளுடன் பேச முயலவில்லை. எப்போதும் மலரும் மகரந்தமும் போல் உல்லாவிய இவர்களின் புது நடத்தை இருவரின் நன்பர்களின் முகத்திலும் பல கேள்விகளை எழுப்பியது. சுரேஸின் நன்பர்கள் என்ன நடந்தது என்று குடைந்து கொண்டு இருந்தார்கள். சுரேஸோ "ஒண்டும் இல்லையடா சும்மா இருக்க பாப்பம்" என்று சினந்துகொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றான். ரசிக்காவும், சுரேஸும் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள். ரசிகா கொழும்பில் புறநகர் பகுதியில் …
-
- 6 replies
- 2.5k views
-
-
யப்பானில் சில நாட்கள் (1) - நடேசன் - - நடேசன் - பயணங்கள் 06 ஜூன் 2025 * Photo by David Edelstein on Unsplash இரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும் நாங்கள் தங்க வேண்டிய ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன். இத்தனை உயரமான மாடிக்கட்டிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர் தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி இருக்கும் நாடு யப்பான். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள். படைப்பில் நம்பிக்கையற்ற, பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்! இலகுவான வழி? எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நி…
-
- 1 reply
- 510 views
-
-
யாக்கை சிறுகதை: பாஸ்கர் சக்தி ஓவியங்கள்: ஸ்யாம் குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. 'ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்... ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான்’ என்றால்கூட சிரித்தபடியே, 'ஆமாமா... நானும் பாத்தேன். யாரைப் போட வந்திருக்கான்னு தெரியலியே’ என்பான். அந்த அளவுக்கு கேனத்தனமான ஹ்யூமர்சென்ஸ். அன்றும் உற்சாகமாகத்தான் இருந்தான். ஒரு வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியர். சக உதவி ஆசிரியர்களில் பலருக்கு இருக்கும் டென்ஷனை, இவன் முகத்தில் பார்க்கவே முடியாது. அன்று இன்னும் ரொம்ப உற்சாகமாக இருந்தான். காரணம், காலையில் ஆபீஸ…
-
- 1 reply
- 2.2k views
-
-
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் 1 யானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் கலவையான யானைகளை உருவாக்கின. தடித்த வயிறும் நீண்ட தும்பிக்கையும், உரித்த பலாப்பழத்தின் சுளைகள் அசைவது போன்ற நீண்ட காதுகளும் விரிந்து உருண்டு குண்டு யானைகளை அவனின் கற்பனைக்கு ஏற்றால் போல் உருவாக்கினான். பாடசாலை பயிற்சிப் புத்தகத்திலும் உப்புக்குளம் பிள்ளையார் கோவில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்திலும், கோயில் கோபுர அடியிலுள்ள சிற்பத்திலும் யானைகளைப் பார்த்திருக்கிறான். தும்பிக்கைகளை வளைந்து சுருட்டி பூக்களை ஏந்தியவாறு இரண்டு பக்கமும் ஒன்றையொன்று பார்த்தவாறு இரண்டு யானைகள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
யானை வீட்டுக்காரி - சிறுகதை எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: செந்தில் சாவித்திரி, அலுவலகத்தில் இருந்து வெளியேறி மெயின்ரோட்டுக்கு வந்தபோது இருட்டிவிட்டது. அவளது அலுவலகத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு அரைமணி நேரம் நடந்து, இரண்டு பெரிய சந்துகளைக் கடந்து கடைவீதிக்கு வர வேண்டும். நடைபாதை ஓரத்தில் விற்கும் காய்கறிகளையும் துணிகளையும் வேடிக்கை பார்த்தபடி வேலை முடிந்துவரும் ஜனங்களுடன் ஜனங்களாக வரிசையாக நடந்து, சந்நதித் தெருவுக்குள் நுழைய வேண்டும். இரவில் சந்நதித் தெரு நெரிசலாக இருக்கும். இரவு ஏழு மணிக்குப் பிறகு அவளது வீட்டுக்குப் போக பேருந்து வசதி குறைவு. இரண்டு ஷேர்ஆட்டோக்கள் மாறிப்போக வேண்டும். ஷேர்ஆட்டோவில் போவதற்குப் பதிலாக நடந்தே வீட்டுக்குச் …
-
- 0 replies
- 2.7k views
-
-
யானைக் கதை http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/12/shoba-01-1-238x300.jpg மொழியியல் பேராசிரியர் கியோம் வேர்னோ ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு, கேரளாவுக்கே சென்று ஆசான் வைக்கம் முகமது பஷீரை நேரில் தரிசித்து, பிரஞ்சு மொழியில் ஒரு நீள்கட்டுரை எழுதி வெளியிட்டவர். அநேகமாக பஷீர் சந்தித்த கடைசி வெள்ளைக்காரன் இவராகத்தான் இருப்பார். அந்தப் பேராசிரியரும் நானும் ஒரே இரயில் பெட்டியில், அதுவும் அருகருகாக அமர்ந்து பயணம் செய்வோம் என நான் ஒருபோதும் நினைத்திருந்ததில்லை. அவரைக் கண்டவுடன் நான் எழுந்து நின்றேன். எழுபது வயதைக் கடந்துவிட்ட பேராசிரியர் இருக்கையில் அமரும்வரை மரியாதையின் நிமித்தமாக நி…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் யானைக் கணக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கண்டி தலதா மாளிகையில் தலையாரி யானையாக பல வருடங்கள் இருந்த ராஜா எனும் கொம்பன் யானை எழுபது வயதில் மூப்புக் காரணமாக மரணமடைந்தது. இந்த இரு செய்திகளும் சில யானைக் கதைகளையும் சிறி லங்காவில் சம்பிரதாயம் என்ற பெயரில் இந்த அரிய விலங்குகளுக்கு இழைக்கப் படும் அநீதிகளையும் பற்றி என் நினைவுகளைக் கிளறி விட்டது. யானை, அனேகமான பல காட்டு விலங்குகள் போல, முழுவதுமாக அடர் காட்டில் வாழப் பிறந்த ஒரு விலங்கு. தனியனாகத் திரியும் யானைகள் அரிது-அப்படித் தனியனாக அலையும் யானை அனேகமாக மூர்க்கமான ஆட்கொல்லியாகவே இருக்கும் (செங்கை ஆழியானின் "யானை" நாவல் ஒரு தனியன் யானையைப் பற்றியது). கூட்டமாக இந்த ராட்சத விலங்குகள் வாழ, சில நூற…
-
- 31 replies
- 6.2k views
-
-
மலர்ந்தும் மலராத காலை பொழுது. வேகமாக நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். கையின் உயர்த்தி கடிகாரதினைப் பார்த்தார். பரவாயில்லை, நேற்று இதே இடத்தில் வந்த நேரத்திலும் பார்க்க இரு நிமிடம் முன்னதாக வந்தது விட்டோமே என்று நினைத்துக் கொண்டார், காலை நடைப் பயிற்ச்சியில் இருந்த அந்த மனிதர். அவரை, மிக விரைவாக ஆபத்து நெருங்கிக் கொண்டிருகின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. ஆனால் தான் தற்போது மறைந்து இருக்கும் லண்டன் மாநகரில், தனக்கு ஆபத்து வர வாய்ப்பு இல்லை என நம்பிக் கொண்டிருந்தார் அவர். அவர் தனது நாட்டின் அமைச்சராக இருந்த போது, ஒரு பில்லியன் டொலர் பணத்தினை ஆட்டையைப் போட்டு விட்டு ஓடி வந்து விட்டார் என அவரது நாட்டின் அரசு குற்றம் சுமத்தி இருந்தது. அவரோ அதை மறுத்து இருந்தார். பிர…
-
- 25 replies
- 17k views
-
-
யாமினி அம்மா - சிறுகதை போகன் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம் அந்த இடத்துக்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் வந்து சேர்ந்தார்கள் என்பதும் சரியாகத் தெரியவில்லை. எதனிடம் இருந்தோ தப்பித்து வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் எதற்குப் போய்ச் சேர்ந்தேன், எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்பதற்கும் அதே காரணம்தான். எதனிடம் இருந்தோ தப்பித்துக்கொள்ள... ''இந்த ஊர்ல தங்க, ஒரு இடம் கிடைக்குமா?'' என்றதற்கு ஒரு கணம், அங்கிருந்த ஒரே டீக்கடையில் நெடுநேரம் மௌனம் நிலவியது. கடைசியாக ''ஏன் இங்கே தங்கணும்?'' என்றார் ஒருவர் சற்றே விரோதமாக. நான் தயங்கி, ''நான் ஒரு எழுத்துக்காரன்'' என்றேன். யாரும் பேசாது இருந்தார்கள். நெய்யாறு புழையின் ஈர…
-
- 1 reply
- 2.5k views
-
-
வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம். அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான். “டேய்! சின்னத்தம…
-
- 2 replies
- 1.4k views
-
-
சில நாட்களுக்கு முன் லா சப்பலில் வீதியில் சென்று கொண்டிருந்தேன். போகும் பாதையில் ஒரு கூட்டமாக இருந்தது. நடுவில் இரு பெண்கள் (பிரெஞ்சுக்காரர்கள்) வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். காதுக்கு எட்டியவரையில் அவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்பதும் நீண்டநாளாக அவர்களுக்குள் பிரச்சினை இருப்பதும் தெரிந்தது. அனைவரும் ஒரே அலுவலகததில் வேலை செய்பவர்கள் என்பதும் அலுவலகத்தை விட்டு வீதியில் நின்று பிரச்சினைப்படுகிறார்கள். மீதிப்பேர் சமாதானப்படுத்துகிறார்கள் என்பதும் தெரிந்தது. அவர்களைக்கடந்து போய் சில செக்கன்களில் பெரும் அவலக்குரல் கொண்டு ஒரு பெண் கத்துவது கேட்டது. தானாடாவிட்டாலும் சதையாடும் அல்லவா?. திரும்பி வந்தேன். ஒரு பெண் மேலாடை கி…
-
- 10 replies
- 2.6k views
-
-
யாரும் இழுக்காமல் தானாக... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...வண்ணதாசன் சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து, முகத்தோடு ஒத்திக்கொண்டாள். பட்டாசலில் கிடக்கிற அப்பா போட்டோவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அப்பாவுக்கு ஜெமினி கணேசன் மாதிரி ஜாடை. ஜாடை என்றால் மூக்கு, முழி எல்லாம் இல்லை. சுருட்டை சுருட்டையாகத் தலைமுடி அப்படி. மீசையை வைத்திருப்பதும் வட்டக் கழுத்து ஜிப்பா போடுவதும் அப்படி. அம்மாவின் தோளைப் பிடித்துக்கொண்டு அப்பா நிலாவைப் பார்க்கிறது மாதிரியான பக்கவாட்டுப் புகைப்படம் ஒன்று உண்டு. ரொம்ப அழகா…
-
- 0 replies
- 2.5k views
-
-
யாரையும் எதிர்பாக்காதிங்க...யாரையும் எதிர்பார்க்க வைக்காதிங்க
-
- 0 replies
- 391 views
-
-
யாரொடு நோவோம்? சுதாராஜ் “வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார். சிறுகதை: அகதியும், சில நாய்களும்! - சுதாராஜ் -இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் தேவை. அதற்காகத்தான் அடுப்பை மூட்டச் சொன்னாள். நான் எவ்வளவு முயன்றும் அடுப்பு மூளாது புகைந்து கொண்டிருந்தது. அம்மா என் காதை பிடித்துத் திருகி இழுத்தாள். “இஞ்சாலை விட்டிட்டுப் போ!.. ஏழு வயசாகுது இன்னும் அடுப்படி வேலை செய்யத் தெரியாது!” எனத் திட்டினாள். பிறகு தானே அடுப்பை மூட்டப் போனாள். ஷெல் அடிச்ச…
-
- 0 replies
- 1.2k views
-