கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3076 topics in this forum
-
சோமசுந்தரம் தன் வீட்டீற்கு விருந்துண்ண வந்த தன் தோழன் நாகலிங்கத்துடன் உரையாடுகின்றார் சோ: வேற என்ன புதினம்?? நா: நீ கேள்விப்பட்டனியா, இங்கு வளர்ந்த ஒரு தமிழ் இளைஞ்யன் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறானாம். 15ந்து வயதிலேயே யேர்மனிக்கு வந்தவனாம். தாயகத்தில,; பின்பு வெளிநாட்டில் தான் பெற்ற அனுபவங்களை பற்றித்தன் யேர்மன் மொழியில் எழுதியிருக்கிறானாம். இது உன்மையிலே ஒரு பாராட்ட வேண்டீய விடயம் தானே, அல்லவா?? சோ: ஓம்மடா, இப்படீப்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். இந்த வெளிநாட்டீலே நம் தமிழ் இளைஞ்யர்கள் செய்யும் தவறுகளைப்பற்ரிதான் கூடுதலாக மற்றவர்களுக்கும் சொல்லி கதைக்கின்;றோம்;. நீ சொன்னமாதிரி நல்ல வளியில் செல்லும்; பிள்ளைகளை, நாம் எம்மால் ஏன்றவரை ழுன்னேற உதவவே…
-
- 1 reply
- 1.1k views
-
-
சர்வதேச ராணுவ ரகசியங்கள், உள் நாட்டு அரசியல் ரகசியங்கள் என்பவை 30 ஆண்டுகளின் பின் காலாவதியானவை என அறிவிக்கப்பட்டு அந்த ரகசியங்கள் வெளிவருவது போலத் தான் இந்தக் கதையும். ஏறக்குறைய 33-34 வருடங்களுக்கு முன்னான ரகசியம் இது. இன்று வரை பகிரப்படாத கதை. இனி இது ரகசியமில்லை. கதைக்குப் போவோம் வாருங்கள்..... காலம்: 1977ம் அல்லது 1978ம் ஆண்டு. இடம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே அழகான மட்டக்களப்பு நகரமும், என் பாடசாலையும், அங்கிருந்த விடுதியும், ஆனைப்பந்தி கோயிலும், ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியும். பாத்திரங்கள்: 33 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நானும், அந்த வெள்ளைச்சட்டை, வெள்ளைப்பாவாடைத் தேவதையும். எனது பால்யக் காலங்கங்களில் பல ஆண்டுகள் விடுதி வாழ்க்கை என்று…
-
- 24 replies
- 4.1k views
-
-
பொன்னுலகம் சிவா கிருஷ்ணமூர்த்தி அட்மிரல் பார்க்கினுள் வரும் போதே கழுத்துக் கசகசத்தது. எதிர் சைக்கிள் காரரின் கண்களைத் தொட்டு பரஸ்பரம் தலையசைத்துக்கொண்ட பின் சீட்டின் முன் வந்து சற்றே ஏறி பெடலை மிதித்த போது வியர்வை ஒரு சொட்டு சைக்கிள் பாரில் மோதியது. புன்னகைத்துக்கொண்டேன். சைக்கிள் பாதையில் கவனமாகத் திரும்பி மேட்டில் ஏறி மிதிக்கும் போது அனிச்சையாக வானத்தைப் பார்த்தேன். ஒரு மேகத்துணுக்கு கூட இல்லை. எங்கும் எங்கெங்கும் நீலம். இன்று நிச்சயம் 28 டிகிரியாகவாது இருக்கும். இங்கிலாந்தின் வேனிர் காலமென்பது பெரும்பாலான நாட்களில் வெறும் வானிலை அறிக்கைத்தாளில்தான். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அல்லது அதிகப் பட்சம் மூன்று வாரங்கள் 28-32 டிகிரி இருக்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
பக்கத்து வீட்டு இளைஞன் !! : மொழி பெயர்த்தவர்: சுரா நன்றி: www.lekhabooks.com/ சுராவின் முன்னுரை ‘பக்கத்து வீட்டு இளைஞன்’ (Pakkathu veettu ilaignan) - இளமை ததும்பும் இந்தக் கதையை மலையாளத்தில் படித்த நிமிடத்திலேயே அதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். கெ.கெ.சுதாகரன் (K.K.Sudhakaran) ஒரு நூலகர். இந்த நாவலைத் தவிர, வேறு சில நல்ல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். இந்தப் புதினத்தின் கதாநாயகி ரேகா நம்மை ஆச்சரியப்பட வைக்கும் கதாபாத்திரம். அதை முழுமையாகச் செதுக்கியிருக்கிறார் சுதாகரன். அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் நமக்கு உண்டாகும். இதன் இற…
-
- 19 replies
- 7.9k views
-
-
நான் கதை எழுதின கதை “என்னதான் மனிச வாழ்க்கை சுத்திச் சுழண்டாலும் மனிசன் என்பவன் கனவுகளைச் சுமக்கும் கூடம்தானே” என்று சொன்ன சிக்மன் பிராய்ட்டின் கருத்து உண்மைதான் போலிருக்கிறது. ஏனக்கு சிக்மன் பிராய்டு என்றால் தனியொரு ஈடுபாடு. மனிதர்கள் கனவுகளைச் சுமந்தலையும் ஜடங்கள்தானே. அவர்கள் தங்களால் கூற முடியாததை தம் ஆழ் மனதில் புதைத்து விடுகின்றனர். அது இன்று என் மனதை குடைந்து குடைந்து உறங்கவும் விடாமல் உண்ணவும் விடாமல் பெரும் பூதமாக அச்சுறுத்திக் கொண்டிருந்தது. உண்மையில் என்னால் என்னதான் செய்ய முடிகிறது. “நீ யார்? நீ ஒரு மனிதன் தானே….? ” என்னை நானே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கேட்டுத் தோற்றுப் போகிறேன். “ உன்னால் என்னதான் உருப்படியாய் சொல்…
-
- 15 replies
- 2.2k views
-
-
எண்ணும்பொழுது - ஜெயமோகன் “தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது. அவள் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். கண்ணாடியிலேயே உதட்டைச் சுழித்து “என்ன பார்வை?”என்றாள் “சும்மா” ”பாத்துப்பாத்துதான் கெடக்கே” என்று அவள் உதட்டைச் சுழித்தாள் “பாக்கிறதிலே என்ன?”என்றான். “பாக்கிறதுக்காகத்தானே?” “பாக்கிறது மட்டுமா?” “பாக்கிறதுதான் முதல்லே… கண்ணாலேதான் மனசு… மத்ததெல்லாம…
-
- 1 reply
- 888 views
-
-
நடுவிலை நாலு நாளைக்காணோம் செந்தக் கதை சோகக்கதை. ஒரு பேப்பரிற்காக சாத்திரி.. :( :( 17 .08.13 ந்திகதி செவ்வாய்க்கிழைமை வழைமைபோல வேலை முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வருகிறேன் அன்று சரியான வெய்யிலும் அடித்தக் கொண்டிருந்தது. மனிசி வீட்டிற்கு பின்னால் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் வேண்டாத செடி புற்களை வெட்டித் துப்பரவாக்கி முடித்தவர் சாப்பிடும்போது லேசாய் தலை வலியோடு தலை சுற்றுவதாய் சென்னார். சரியான வெய்யில் வெய்யிலுககை நின்று வேலை செய்ததால் தலை சுத்தலாம் ஒரு குளிசையை போட்டுவிட்டு படு என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போய் விட்டேன்.இரவு பதினொரு மணி வீடு திரும்பியிருந்தேன் படுக்கையிலேயே இருந்தவர் தலைச்சுற்றல் நிற்கவில்லையென்கிறார். வைத்த…
-
- 37 replies
- 4.5k views
-
-
உமிக்கருக்கு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம் வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை எழுந்தது. வணங்காமுடிக்குப் புகை மூக்கில் ஏறி இருமல் வந்தது. புகையால் அவனது கண்களில் நீர் கசிந்தது. அவனுக்கு இந்த வேலை புதிது. வணங்காமுடியின் பட்டறை ஓனர் சானாகூணா, தாமரை டாலரின் கல் துவாரங்களை ராவுவதில் மும்முரமாக இருந்தார். பட்டறையின் வாசலைத் தாண்டி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கொக்கு பரமசிவமும், அடுத்ததாக பூனைக் கண்ணும் அமர்ந்திருந்தார்கள். தேவாரம் தாத்தா கட…
-
- 0 replies
- 1.7k views
-
-
எனக்கான முத்தம் - சிறுகதை ப்ரியா தம்பி, ஓவியங்கள்: ஸ்யாம் ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ''இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது'' என்ற இடத்தில், இப்போது எட்டாம் வகுப்பு B செக்ஷன் செயல்படுவதாக கரும்பலகை சொன்னது. அரை சுவரும் அதற்கு மேல் ஓட்டுக் கூரையுமாகக் கட்டடம் அப்படியே இருந்தது. ''இதுல நீ எங்க உட்காந்திருந்த... ஃபர்ஸ்ட் பெஞ்சா?'' ''அப்பல்லாம் பெஞ்ச் இல்லை, தரையிலதான் உட்காருவோம்.'' ''அப்ப உன் ஃப்ரெண்ட் யாரு?'' எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. என் ஞாபகத்திறனின் போதாமையை அவள் அறிவாள். மேற்கொண்டு வற்புறுத்தவில்லை. ''கால் வலிக்குது... போ…
-
- 1 reply
- 3.2k views
-
-
அண்மையில் படித்த நல்லதொரு கதை ************************************* காதல் காதல் காதல்..(1) ரிஷபன் சில சினிமாப் பாடல்கள் கேட்டவுடன் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டுவிடும். மனசுக்குள் டேப் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி சில மனிதர்களும். அதிலும் குறிப்பாய் அழகான பெண்கள். இங்கே அழகு என்று சொல்வது மனசைக் கவர்கிற ஏதோ ஒன்று. புற வடிவம் மட்டுமல்ல. அப்படித்தான் வித்யா என்னைக் கவர்ந்தாள். 'ரெண்டாவது மாடிக்குப் போ. கடைசி காபின். உன் புரபோசல் அவகிட்டேதான் இருக்கு. நேத்தே நாம வென்டார்க்கு பதில் போட்டிருக்கணும்' என் பாஸ் அனுப்பியபோது அரைமனதாய்த்தான் விவாதித்து விட்டு கிளம்பினேன். 'ஸார்.. ஃபைனான்ஸ் கேட்ட எல்லா டிடெய்லும் இருக்கு. அவங்க ரைஸ் ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஒளி வளர் விளக்கு - சிறுகதை காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம் அனு பேசினாள். கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எப்படியோ என் நம்பரைப் பிடித்திருக்கிறாள். நம்பவே முடியவில்லை. நாங்கள் இளங்கலை முடித்து 21 ஆண்டு ஆகிறது. இடையில் இரண்டு முறைதான் பேசினோம். நான்தான் அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பரைத் தொலைத்துவிட்டேன். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்கள் போன் நம்பரும் மாறிக் கொண்டிருந்தது. என்னுடைய மொபைல் நம்பரையும் நான் ஆறு முறை மாற்றிவிட்டேன். கடைசியாக மாற்றியது ஏர்செல் பிரச்னையில். நான் வாட்ஸ் அப் குரூப்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜுகள். குட்மார்னிங், குட்நைட், ஹீலர்கள், போலி இ…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஸ்பெயின் - 01 இளங்கோ-டிசே ஐரோப்பாவில் மூன்று நாடுகளுக்குக் கட்டாயம் போகவேண்டும் என்ற ஒரு கனவு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. பிரான்ஸும், இத்தாலியும், ஸ்பெயினும் என்னை எப்போதும், அவற்றின் கலை இலக்கியங்களினூடு ஈர்த்துக்கொண்டிருக்கின்ற நாடுகள். கூடுதலாக போர்த்துக்கல்லையும் சேர்க்கலாம். சென்ற வருடம் இத்தாலியையும், அதற்கு முதல்வருடம் பிரான்ஸையும் பார்த்திருந்தேன். இந்த வருடம் ஸ்பெயினுக்கானது. La Sagarida Familla (Spain) ஸ்பெயினை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு கட்டடக்கலையாக La Sagarida Familla இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் 1880களில் கட்டத் தொடங்கிய இந்தத் தேவாலயமானது இன்னமும் நிறைவு செய்யப்படாது இப்போதும் கட்டப்பட்டு…
-
- 4 replies
- 1.1k views
-
-
எங்கோ… யாரோ… யாருக்காகவோ….!? … முருகபூபதி. “ சேர்… வவுனியா வந்திட்டுது.” சாரதி அருகில் அரைத்தூக்கத்திலிருந்த மூர்த்தியை தட்டி எழுப்பினான். அதிகாலை கொழும்பிலிருந்து புறப்படும்போது, ‘எப்படியும் காலை ஒன்பது மணிக்குள் வவுனியாவை வந்தடைந்துவிடலாம்’ என்று சொன்ன சாரதி சொன்னபடி நிரூபித்தும்விட்டான். அந்த வாகனத்தையும் சாரதியையும் வெள்ளவத்தையில் அறிமுகப்படுத்திய நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டார் மூர்த்தி. போர் முடிந்து இரண்டுவருடங்களின் பின்னர் இலங்கை வந்திருந்த மூர்த்திக்கு இலங்கையில் பார்ப்பதற்கு சொந்தபந்தங்கள் என்று குறிப்பிடும்படியாக எவரும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நாட்டில் புகலிடம்பெற்று, கடைகள் நடத்தலாம். சங்கங்களில் இணைந்திருக்கலாம். கோயில…
-
- 1 reply
- 1.1k views
-
-
தீமையை தடுக்காததும் பாவமே! கருத்துகள் மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 22,2015, 5:45 AM IST பதிவு செய்த நாள்: திங்கள் , டிசம்பர் 21,2015, 6:06 PM IST மகாபாரத போரில் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தின் காரணமாக, அவர் உயிர் பிரியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்த வண்ணம் சென்றனர். அப்போது அங்கு வந்த வியாசரிடம், 'நான் என்ன பாவம் செய்தேன்?. என் உயிர் போகவில்லையே' என்று மனம் வருந்தினார். அதற்கு வியாசர், 'ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் செய்வது மட்டுமே தீமை இல்லை. பிறர் செய்யும் தீமை…
-
- 0 replies
- 2.1k views
-
-
எல்லாம் நன்மைக்கே! லண்டன் மாநகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் கட்டியர் (verger) ஒருவர் இருந்தார். ஆலயத்தில் மணி அடிப்பது, திருமணம், இறுதி யாத்திரை போன்ற சடங்குகளுக்கும், மற்ற பல வேலைகளையும் தேவாலயத்தில் செய்வதே அவர் வேலை. பரம்பரை பரம்பரையாக அந்த தொழிலை அவரது முன்னோர்கள் செய்து வந்தனர். இப்போது நம்ம ஆளு செய்து வருகிறார். அவருக்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் சர்ச்சில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக குறை ஏதுமின்றி செய்து வந்தார். ஒரு நாள் அந்த தேவாலயத்தின் அருட்தந்தை (father) மாற்றப்பட்டு புதியதாக ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். முதலில் லண்டன் மக்கள் அன…
-
- 2 replies
- 2.2k views
-
-
நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்…
-
- 2 replies
- 763 views
-
-
குறிஞ்சி மலர்கள் பாடசாலை என்பது ஒரு பிள்ளையை சமுதாயத்திற்கு எப்படி நற் பிறஜையாக கொடுக்க வேண்டும் என்பது இப்போதுள்ள மக்கள் யாவரும் அறிந்ததே அப்படிபட்ட பாடசாலையில் ஆசிரியராக பணி புரிபவர்தான் நான் சந்திரன் மாஸ்டர் இது வரையில் பல பாடசாலைகள் மாறிவிட்டேன் எதிலும் நிரந்தரமில்லை அது என் தொழிலுக்கு கிடைக்கும் உயர்வு என்பதைவிட எனக்கு கிடைக்கும் அரச பரிசுதான் அது அதிபர் ஊடாக முறைப்பாடு வலயத்திற்கு சென்று வலயம் என்னை இடம்மாற்றி விடுகிறது என்பதையும் விட தூக்கியெறிந்து விடுகிறது .சக ஆசிரியர்கள் அதிபருக்கு விஸ்வாசமான ஆசிரியர்களுடன் முரண்படும் போது அதாவது அவர்கள் பாடவேளைக்கு போகவில்லை என்றால் அதை நான் கேட்கும் போது பிரச்சினையாகிவிடும் எனக்கு நேர்மையாக வேலை செய்யவேண்டும் எடுக்கும்…
-
- 28 replies
- 5.9k views
-
-
முக்தி பவனம்... சிறுகதை: போகன் சங்கர், ஓவியங்கள்: செந்தில் முக்தி பவனம்... அகோபிலத்தில் வைத்துதான் இந்தப் பெயரை நான் முதன்முறையாகக் கேள்விப்பட்டேன்.அகோபிலத்துக்கு மழைக்காலத்தில் போவது அவ்வளவு உசிதமானது அல்ல. ஆனால், நான் என் வாழ்க்கையில் எது உசிதமானது... எது உசிதமற்றது என்று எல்லாம், நின்று யோசிக்கிற மனநிலையில் இல்லை. எனக்கு எல்லாவற்றிலும் இருந்து எங்கேயாவது தப்பித்துப்போக வேண்டும்போல இருந்தது. கொஞ்ச நாட்கள் கேரளத்தில் சுற்றினேன். நாராயணகுருவின் ஆசிரமம் இருக்கும் வர்க்கலையில் ஒரு மாதம் இருந்தேன். மனம் கொஞ்சம் அமைதியானதுபோல இருந்தது. அங்கே உள்ள கடற்கரையில் நடுவெயிலில் தோல் பொரிய நிற்பேன். மாலை நேரங்களில் கடலில் குளிப்பேன். அந்த உப்பு நீர் பட்டு …
-
- 0 replies
- 733 views
-
-
இன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார். அவருக்கு எழுபது வயதாகின்றது. ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர். இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" . எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச்…
-
- 7 replies
- 1k views
-
-
தமிழ்க் கூலி.. தம்பி என்ன நடத்து போறீயள் வாங்கோ நான் கொண்டு போய் உங்கட முகாமிலை விடுகிறன்... வளியில் போன ஒருவர் தானாக முன்வந்து தனது உந்துறுளியில் கொண்டு செண்று விட முன் வருகிறார்... அந்த போராளிக்கும் அவர் அடிக்கடி காணும் பழகிய முகம் தான்... அனேகமான தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களின் நடக்கும் வழக்கமான நிகள்வு தான் இது... இல்லை அண்ணை பறவாய் இல்லை பக்கம் தானே நான் நடந்து போகின்றேன்... சாச்சா எனக்கு ஒரு கஸ்ரமும் இல்லை நீங்கள் ஏறுங்கோ தம்பி.. நான் போற வளிதான்... வேற வளி இல்லாமல் அந்த போராளியும் உந்துறுளியில் ஏறிக்கொள்கிறார்... தம்பி நீங்கள் எங்களுக்காக எவ்வளவு கஸ்ரப்படுகிறீயள் உங்களுக்காக இது கூட செய்ய இல்லை எண்டால் தமிழனாக இருக்…
-
- 5 replies
- 1.5k views
-
-
வட்டியும் முதலும் - ராஜுமுருகன். ராஜுமுருகனின், "வட்டியும் முதலும்" என்னும்... கட்டுரை சிலமாதங்களுக்கு முன்பு ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது எழுத்துக்கள் ஒவ்வொரு கிழமையும்... வித்தியான சமூகப் பிரச்சினைகளை, முக்கிய கருவாக எடுத்துக் கொண்டு எழுதுவதில் மிகவும் சிறந்த எழுத்தாளர். பல லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப் பட்ட அவரது எழுத்துக்களை... நீங்களும் வாசித்துப் பாருங்களேன். -------------- நம்பிக்கைக்கும் நம்பிக்கை இன்மைக்கும் நடுவில் கிழிகின்றன நாட்கள்! புதிய கீர்த்தனா ஒருத்தி, நம்பிக்கையின் இசையால் என் இரவுகளை நிறைக்கிறாள் இப்போது. இவள் என் வாழ்க்கைக்குள் வருவாள் என நான் நம்பியதே இல்லை. 10 வருடங்கள் பழகிய பிறகு எங்கோ தூர தேசம் போய்விட்டவள் இப்போது திரும்பக் …
-
- 9 replies
- 4.8k views
-
-
ஒரு நிமிடக் கதை: அவமானம் “குமரேசா! ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கே. சமையல் பண்ற பொண்ணு இப்ப வந்துடுவா. உனக்கும் சேர்த்து சமைக்கச் சொல்றேன். சாப்பிட் டுட்டுத்தான் போகணும்!” தன் மகள் சவும்யா இருக்கும் ஊரிலிருந்து வந்த நண்பனிடம் சொன்னார் சாந்தப்பன். “அதுக்கெல்லாம் நேரமில்லப்பா. அவசர வேலையா வந்தேன். கூடவே உன் பொண்ணு சவும்யா இந்த வேட்டி சட்டைத் துணியை உங்கிட்டே கொடுக்கச் சொன்னா. அதைக் கொடுத் துட்டுப் போகத்தான் வந்தேன்…” என்றபடி தன் கையிலிருந்த பையை சாந்தப்பனிடம் கொடுத்தார் குமரேசன். “ஏம்பா.. என் மக கொடுத்த துணியைக் கொடுக்க மட்டுந்தான் என்னைப் பார்க்க வந்தியா? ஒரு…
-
- 0 replies
- 1.9k views
-
-
சாமிலி கைகளைப் பிடித்து தடவிய படியே அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி கேட்டாள். ..நீ என்னை உறுதியா காதலிக்கிறா தானே.. கைவிடமாட்டா தானே..?? அதற்கு அவன் "மங் உயா ஆதரேய" என்று அவளைத் தழுவிக் கொண்டே சொன்னான். அவனின் அணைப்பின் இறுக்கத்தில் அவன் அன்பின் உறுதியை தெளிவாக உணர்ந்து கொண்ட சாமிலி.. " சி யு ரூமாரோ" என்று சொல்லி அவனின் இறுக்கத்தை தளர்த்தி வெளிவந்தவள்.. கன்னங்களில் முத்தமிட்டு விட்டு விடை பெற்றாள். அவனும் அவளை பல்கலைக்கழக வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு மீண்டும் பல்கலைகழக மரநிழலின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டகைக்குள் புத்தகங்களுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். வசன்.. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ் பிரபல்ய கல்லூரியில் உயர்தரம்…
-
- 24 replies
- 3k views
-
-
“உங்கொம்மாதான் எங்கிட்ட இந்த ஒருவருசமாவே கேட்டுட்டே இருக்குது மஞ்சு, இந்த மாதிரி எம்புள்ளைய நீ கட்டிக்கிறியா செல்வம்? அப்படின்னு! நானும் யோசனை பண்ணிப் பார்த்துட்டு நேரா உங்கிட்டயே ஒரு வார்த்தை கேட்டுப்போடலாம்னுதான் கேக்குறேன். என்னெக் கட்டிக்கிறியா மஞ்சு?” செல்வம் விஜயமங்கலத்தில் மேக்கூர்க்காரன். சொந்தமாக தறிக்குடோன் வைத்திருக்கிறான். குடோனில் ஒரு டஜன் தறிகள் இரவு பகலென்று ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பா காலமாகி எழு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. குடோனை ஒட்டி இருந்த வீட்டில் இவனும் இவன் அம்மாவும் மட்டும்தான். குடோனில் தார் போட நான்கு வருடங்களாகவே வந்து கொண்டிருக்கும் அம்சவேணியின் ஒரே மகள்தான் மஞ்சு. அம்சவேணியும் மேக்கூர்தான். இரண்டு வருடங்களுக்கும் முன்பாக செல்வத்தின…
-
- 0 replies
- 807 views
-
-
காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை! - சிறுகதை மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம் பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்! 'நிறைக்குலத்தான்’ - இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து நாக்கைக் கடித்து ஒலி எழுப்பிச் சொல்லிப் பாருங்களேன். பெரிய ஓர் ஆலமரம், அந்தப் பெயர் முழுவதும் தன் நிழல் பரப்பி இருப்பதுபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த ஆலமரம் விழுதுகள் இல்லாத ஆலமரமாக, இலைகள் இல்லாத ஆலமரமாக, துளி பச்சைகூட இல்லாத ஆலமரமாக, பங்குனி வெயிலில் எப்போது வேண்டுமானாலும் பற்றி எரிகிற மொட்டை ஆலமரமாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்தாலே உங்கள் கண்கள் தீப்பிடித்து எரிந்து கசங்குகின்றனதானே! அப்படி ஒரு மொட்டை ஆலமரம்…
-
- 0 replies
- 2.5k views
-