Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை லக்ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு... வெறுப்பு... வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த திருமணத்தை ஒரு துர்சகுனமாகவோ அல்லது விபத்தாகவோதான் நினைத்திருக்கக் கூடும். ஆனாலும், அம்மா அவரை நேசித்தாள். …

    • 1 reply
    • 1.6k views
  2. அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம். அம்மா அழுது கொண்டேயிருந்தாள். யுகங்களுக்கும் ஆறாத துரங்களும் வலிகளும் அம்மாவின் நெஞ்சுக்குளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. மூத்தவன் பற்றி இளையவன் பற்றி நடுவிலான் பற்றி அம்மா ஆயிரம் கதைகளைத் தனது ஞாகபச்சேமிப்பிலிருந்து மீட்டுக் கண்ணீரால் வெளியேற்றிக் கொண்டிருந்தாள். ஒண்டெண்டாலும் மிஞ்சியிருந்தா நான் எப்பன் நிம்மதியா இருந்தருப்பனெல்லோம்மா….? உழைக்கிற வயதுப்பிள்ளையளை சாகக்குடுத்திட்டு நானிப்ப தனிச்சுப் போனன் தாயே….! என்ரை சின்னப்பிள்ளையும் நானும் கடைசியானெண்டாலும் வருவனெண்டுதான் காத்திருந்தமம்மா….! என்ர குஞ்சு அவனும் வரேல்ல….! நானென்ன செய்வன் இந்தப்பிள்ளைக்கும் நஞ்சைக்குடுத்து நானும் சாவமெண்டு கூட ஒருத…

  3. இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் இன்று பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்…

  4. ஹெச். எச். ஆண்டர்சன் (1837) பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசன் இருந்தான், அவர் அணிகலன்கள் மற்றும் புதிய ஆடைகளை உணர்ச்சியுடன் விரும்பி, தனது பணத்தை அதற்கே செலவழித்தார். அவர் தனது வீரர்களிடம் வெளியே சென்று, ஒரு புதிய உடையில் காட்டுவதற்காக மட்டுமே தியேட்டருக்கு அல்லது காட்டுக்குள் ஒரு நடைக்குச் சென்றார். நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் ஒரு சிறப்பு கேமிசோலை வைத்திருந்தார், மேலும் ராஜாக்களைப் பற்றி அவர்கள் சொல்வது போல்: "ராஜா கவுன்சிலில் இருக்கிறார்", எனவே அவர்கள் எப்போதும் அவரைப் பற்றி சொன்னார்கள்: "ராஜா டிரஸ்ஸிங் அறையில் இருக்கிறார்." ராஜா வாழ்ந்த நகரம் பெரியதாகவும், கலகலப்பாகவும் இருந்தது, அதனால் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு விருந்தினர்கள் வருகிறார்கள், ஒ…

    • 2 replies
    • 1k views
  5. எழுதியவர் உமா வரதராஜன் இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பத்தில் (பிரேமதாசா காலம்) நடந்த சம்பவங்களை மையமாக வைத்து வந்த கதை. இக்கதை வேற்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்ப்பட்டுள்ளது. மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன. ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நட…

  6. ஏப்ரல் 1994 இல் இந்தியா டுடேயில் வெளிவந்த ஈழத்து சிறந்த எழுத்தாளர் 'உமா வரதராஜன்' அவர்களால் எழுதப்பட்ட பலரால் வாசிக்கப்பட்டு வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதை. கதையின் பின்புலம் பிரேமதாசா காலத்தை போன்று தோற்றினும் இன்றைய காலத்தையும் வென்ற சிறு கதை ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அரசனின் வருகை உமா வரதராஜன் மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை …

  7. அரசனும் குதிரைவீரனும் அழியுங்காலத்தின் சனங்களும் ஜெகன் அபூர்வன் பாழடைந்த நூலகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருந்தான். புதர்களும் குப்பைகளுமாக சிதறிக்கிடக்கும்; அந்த இடத்தில் சற்றுக்கு முன்புதான் மௌனம் கலையாமல் மரத்தின்கிளைகள் சலசலக்க அந்தப் பட்ஷி பறந்திருந்தது. அவன் நூலகத்தைப் பார்த்தான் புராதன சுவர்களில் எண்ணற்ற வெடிப்புக்களிடையே பசுமை படர்ந்திருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டுவிடத்தவறும் ஓவியங்கள் சுவர்களில் மறைந்திருந்தன. ஏராளமான காலடிகளின் ஓசை படிக்கட்டுக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. யார் வருகிறார்கள்? அவன் திரும்பிப் பார்த்தான் எவருமேயில்லை. ஆனாலும் இடைவிடாத ஓசை கேட்டபடியிருந்தது. அவன் மேலேறிச் சென்றான். புத்தகங்கள் எங்கும் …

  8. அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார் இளங்கோ-டிசே 'எழுதியதால் கடத்தப்பட்டு காணாமற்போனவர்களின் மனைவிகள், பிள்ளைகள் சார்பாக உங்களை இங்கு வரவேற்கின்றோம்' என ஒரு பெண்மணி, காலி இலக்கிய விழாவுக்கு வந்தவர்களுக்கு துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தார். வசந்த அப்போதுதான் புகையிரத நிலையத்தில் இறங்கி பிரபல்யம் வாய்ந்த காலி கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டி நடந்து வந்துகொண்டிருந்தான். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அது வசந்த அவனது காதலியைச் சந்திக்கும் நாளாக இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நயோமிக்கு கடல் மீது அளவற்ற விருப்பு இருந்தது. நீர்கொழும்பு, அறுகம்பே, ஹிக்கடுவ, பாசிக்குடா என கடற்கரைகளைத் தேடி அடிக்கடி வசந்தவும், நயோமியும் போய்க்கொண்டிர…

    • 1 reply
    • 1.1k views
  9. அந்த ஐந்தாம் வகுப்பு வரையும் மட்டுமே உள்ள அந்த கிறிஸ்தவ பாடசாலையின் பிரார்த்தனை மண்டபம் விளையாட்டு திடல் போல் காட்சியளித்து கொண்டிருக்கிறது.பொடி பெட்டையள் கீயோ மாயோ என்ற இரைச்சல் சத்தத்துடன் ஓடி ஆடி ஏதோ விளையாடி கொண்டு இருக்கின்றனர்.அந்த பெரிய நீண்ட பிரார்த்தனை மண்டபம் தான் வகுப்பறைகளாகவும் பிரார்த்தனை செய்யவும் விளையாடவும் உள்ள இடமாகவும் நேரத்துக்கு ஏற்றவாறும் தேவைக்கு ஏற்றவாறும் உருமாறிக்கொள்ளும்.ஆனால் அவன் மட்டும் தனித்தே இருக்கிறான்.விளையாடும் http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post.html

    • 7 replies
    • 2.4k views
  10. 5. அரசி "......பசிக்குப் பிச்கை கேட்க யா¡¢டமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்...." - மெளனி நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவா¢லும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறும் சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க…

  11. வாசித்ததில் பகிர விரும்பியது அரசியல் புத்தர்: த.அகிலன் (ஆனந்த விகடனுக்காக) புத்தர் ஒரு சுவாரஸ்யமான ஆள்தான். அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு, நைஸா பின் கதவு வழியா எஸ்கேப்பாகும்போது புத்தர் நினைச்சிருப்பார், 'இண்டையோட இந்த அரசியல் சனியனைத் துறக்கிறேன்' என்பதாய். ஆனால், விதி யாரைவிட்டது? புத்தர் அரசியலைவிட்டுப் பேரரசியலை உருவாக்கிவிட்டார். ஆனாலும் புத்தர் அறியார், அழகும் சாந்தமும் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக் கல்லாகச் சுருங்கிவிட்டதை. இன்றைக்குப் புத்தர் சிலை என்பது இலங்கையில் எல்லைக் கல். விகாரை என்பது காவல் கொட்டில். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கையாலாகாதவராக புத்தர் சிரித்துக்கொண்டு இருந்தாலும், நான் அவரைப் பெரிதும் வி…

    • 5 replies
    • 1.5k views
  12. சென்ற ஞாயிற்றுக்கிழமை நண்பர் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருந்தேன். Clichy sous Bois கடந்து (இந்த இடம் எல்லோக்கும் தெரிந்ததே) ஒரு 3 கிலோமீற்றர் தான் போயிருப்பேன். காடுகளும் சோலைகளுமாக அதிசயமாக இருந்தது. பிரதான நகரிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் இவ்வளவு தூய்மையாகவும் இயற்கையை பாதுகாத்தும் பராமரித்தும் வைத்திருக்கிறார்களே என. அதிசயத்தபடி கொஞ்சம் காரை நிறுத்தி காற்று வாங்குவோமா என முயன்றபோது இப்படியொரு கார் எரிந்தநிலை தெரிந்தது. அரசு நல்லது தான் மக்கள் தான்.......????

  13. அரம்பை - ஷோபாசக்தி நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. இம்முறை இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் ஒப்புதலோடு நிறைவேறுவதற்கு எல்லா வாய்ப்புகளுமுள்ளன. ஆனால், இல…

    • 1 reply
    • 1k views
  14. அரளிக்கொட்டை நீட் தேர்வு ரிசல்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும். கமலாவின் நெஞ்சு "பட பட' வென்று அடித்துக் கொண்டிருந்தது. மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு வேண்டிக் கொண்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்தக் கிராமத்தில் நாம் தான் முதல் டாக்டர் என்ற கற்பனை அவளை வானத்தில் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் ஆகி இதே கிராமத்தில் இலவச வைத்தியம் பண்ணினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள். ஊரில் வைத்திய வசதி இல்லாததால்தான் தன் அப்பா திடீர் நெஞ்சு வலியில் செத்துப் போனதையும், அது போல் இங்குள்ள யாரும் செத்துப் போகாமல் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தாள். …

  15. அருட்பெருஞ் சோதி அந்த மனித வாழிடம் அமைக்கப்பட்ட கோளிற்கு ஜோதி என்று பெயர் வைத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இரண்டு சூரியன்களில் ஒன்று மறைந்து மற்றொன்று வடமேற்கே உதித்துக் கொண்டிருக்கிறது. மொத்தம் ஆறு நிலவுகள். எதுவுமே முழு நிலாவாகத் தெரியாது. நிரந்தர பிறைகள். இரு சூரியன்களும் மாறி மாறி களைப்பின்றி வழங்கும் ஒளி வெள்ளம். இருள் வராதது என்பதால் ஜோதி என்று ஒரு காலத்தில் மனிதன் அறிந்த முதல் புவியை ஒத்த இந்த கோளுக்கு பெயர் வைத்தார்கள். பூமிகா நடுங்கிய இதயத்தோடு ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளது அண்ணன் துபிவிய போர் வீரர்களின் பிடியில் சிக்கி திமிறிக் கொண்டிருந்தான். இதை அவளால் ஏற்க முடியாது. தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். ஆதவன் வலியைப் பொறுத்துக் கொண்டு பல்…

  16. தேவகியையும் கணவரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளோடு மற்றையவர்களையும் சுமந்தபடி சிட்னியிலிருந்து சிங்கப்பூர் விமானசேவை சிங்கப்பூரை நோக்கி கிழம்புகின்றது சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு சுற்றி பார்த்து விட்டு பரிசு பொருட்கள் சிலவற்றை அங்கு வாங்கிக் கொண்டு சிறீலங்கா செல்வதுதான் அவர்களது திட்டம். தேவகி மட்டுமல்ல அவளது கணவரும் 23 ஆண்டுகளிற்கு பிறகு முதல் முதலாக ஊருக்கு போகிறார்கள். இந்த 23 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது ஊரில் தேவகியின் தாயை தவிர அவளின் சொந்தமென்று யாரும் இல்லை அவளது கணவனின் குடும்பம் மொத்தமாகவே அவுஸ்ரேலியாவில் குடியேறி விட்டிருந்தனர். தேவகியின் தாய் பல தரம் அவுஸ்ரேலியா வந்து போனாலும் தன்ரை உயிர் மனிசன் கட்டின வீட்டிலை என…

  17. Started by அபிராம்,

    இனிய உறவுகளே !. இன்று அருணா அண்ணாவின் நினைவு நாள். அவரை நினைத்து நான் எழுதிய தொடரின் சில பாகங்களை இங்கே இணைக்கிறேன். பாகம் பத்து புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் . இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள். கடுமையான சண்டை. நெருப்பு சுவர்களாக புலிகள். சுடுகாடாக புதுக்குடியிருப்பு. புதுக்குடியிருப்பு.... அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்த…

  18. அருமையான.கதை.ஒன்று

  19. இரவு வேளையில்.. எனக்கு பரப்புரைக் கூட்டங்கள் இல்லாத வேளையில், நான் வீட்டில் இருந்து கவிதையோ கட்டுரையோ எழுதிக் கொண்டிருப்பேன்.. அந்த வேளைகளில் அவள் என் காலடியில்தான் அனேகமாக இருப்பாள்! உடனே நீங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, நான் ஏதோ என் பழைய காதலியைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நினைத்தால்… ஏமாறப் போவது நிச்சயம் நீங்கள்தான்! அவள் ஓர் சிறுமி..! தூரத்து.. உறவு முறையில் அவள் எனக்கு மகள்தான்..! அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..! நிறம் கறுப்புத்தான்.. ஆனால்.. அவளிடம் எனக்கு எப்போதுமே பிடித்தது அவளது அந்த கருவிழிகளும் கூரிய நாசியும் நீண்ட கூந்தலும்தான்.. “சித்தப்பா”.. என்றுதான் எப்போதும் என்னை கூப்பிடுவாள்!.. வகுப்பில் கொஞ்சம் மக்கு!.. அதனால், தா…

  20. சிவாவும்,கண்ணணும் பள்ளி தோழர்கள் சிறுவயதில் இருந்து ஒன்றாக படித்தார்கள் பெற்றோரும் குடும்ப நண்பர்கள் இதனால் அவர்களின் நட்பிலும் பிணைப்பி அதிகமாக இருந்தது விளையாட்டு,டியூசன் போன்றவற்றிற்கு போகும் போது ஒன்றாக செல்வார்கள். க.போ.த உயர்தரம் இருவரும் கணிதபிரிவில் படிப்பதிற்காக முடிவு செய்தனர் வழமையான அந்த வயதில் இளைஞர்களிற்கு ஏற்படும் காதல்,கள்ள தம் ,பனைமரத்து உற்சாக பானம் போன்ற பழக்கங்கள் ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து பழகி கொண்டார்கள்,ஆனால் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தினார்கள்,க.போ.த பரிட்சைகள் முடிந்தவுடன் ஏதோ பயங்கர சாதனை ஒன்றை முடித்த நினைப்பில் அதிகமாக ஊரை சுற்றினாம் கண்ணண்.சிவா தனது படிப்பு முடிந்தவுடன் ஆங்கில வகுப்புகளும்,கோயில்களிற்கு செல்வதும் விரதங்கள் பிடிப்பதா…

  21. சிறுகதை / நன்றி காணிநிலம் காலாண்டிதழ் அர்த்தநாரிஸ்வரி எஸ். சங்கரநாராயணன் இடது மார்பில் லேசாய் ஒரு கல் தன்மை இருந்தது போல் தோன்றியது பார்வதிக்கு. உடம்பில் நரம்புகள் முறுக்கி முடிச்சிட்டுக் கொண்டு சில இடங்களில் இரத்தம் சீராகப் பாயாமல் சதை இறுகிப் போவது உண்டு. அவளுக்குத் தொடையில் அப்படி ஒர் சதைக்கட்டி இருக்கிறது. மருத்துவரிடம் காட்டியபோது, கொழுப்பு அப்படிச் சேர்ந்து கொள்கிறது, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், என்றுவிட்டதில் அவளும் அதை அலட்சியப் படுத்தி விட்டாள். குளிக்கும்போது சோப்பு தேய்க்கையில் இப்போது இதை கவனித்தாள். இடது மார்பின் சதைத் திரளில் அவள் கைக்கு சற்று அந்தக் கல், நெகிழ்ந்து கொடுக்காத களிமண்ணாய் நிரடியது. எழுந்த ஜோரில் குதிரையின்…

    • 0 replies
    • 696 views
  22. அர்த்தம் அற்ற பிழை அனோஜன் பாலகிருஷ்ணன் கயல்விழியை திருமணம் செய்து ஓராண்டுக்குள் அம்மாவாகிவிட்டாள். நண்பர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள். சந்தைக்கு செல்லும் போது உறவினர்கள் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தார்கள். அம்மாதான் பெண்பார்த்து செய்துவைத்தாள்.கயலை முதன்முதலில் கோயிலில் காட்டினார்கள். இவளா என் மனைவி? எத்தனையோ பெண்களை வேலைபார்க்கும் இடதிலும்,யுனிவேர்சிட்டிளும்,ஃபேஸ்புக்கிலும் பழகி சில்மிஷம் புரிந்திருந்தாலும் இவள்தான் உன் மனைவியாகப் போகின்றவள் என்று சொல்லி அவளைக் காட்டும்போது நிச்சயம் ஒரு ஆண் தடுமாறுவான். அது எனக்கும் நடத்து, அடிவயிற்றில் ஒருவினோத உணர்வு, நெஞ்சில் எதோ சுரப்பது போன்று ஒரு உணர்வு. முதன்முதலில் நானம் ஒரு ஆணின்கண்களி…

  23. தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள் தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொரு ள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம். ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது. 'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்த…

  24. Started by அபராஜிதன்,

    அறநீர் - சிறுகதை அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான். “தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.