கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் 1 யானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் கலவையான யானைகளை உருவாக்கின. தடித்த வயிறும் நீண்ட தும்பிக்கையும், உரித்த பலாப்பழத்தின் சுளைகள் அசைவது போன்ற நீண்ட காதுகளும் விரிந்து உருண்டு குண்டு யானைகளை அவனின் கற்பனைக்கு ஏற்றால் போல் உருவாக்கினான். பாடசாலை பயிற்சிப் புத்தகத்திலும் உப்புக்குளம் பிள்ளையார் கோவில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்திலும், கோயில் கோபுர அடியிலுள்ள சிற்பத்திலும் யானைகளைப் பார்த்திருக்கிறான். தும்பிக்கைகளை வளைந்து சுருட்டி பூக்களை ஏந்தியவாறு இரண்டு பக்கமும் ஒன்றையொன்று பார்த்தவாறு இரண்டு யானைகள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நனி நாகரிகம் எளியவர்களிடமிருந்து மிக இயல்பாக போகிற போக்கில் நிதானமாகத் தெறித்து விழும் வார்த்தைகளில் இருக்கும் வலிமையை, தெளிவை, அதில் குறும்புடன் எட்டிப் பார்க்கும் அழகியலை உணர்ந்து ஒரு கணம் ஆடி அசந்து போயிருக்கிறீர்களா? தாம் சொல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்ற பிரக்ஞையோ அலட்டலோ அதிகப்பிரசங்கித்தனமோ இல்லாமல் ‘இவ்ளோதாங்க வாழ்க்கை…’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போகிறவர்களின் அருகில் போதி மரங்களே போன்சாய்களாக மாறிப் போகும் அதிசயத்தைக் காணப் பெற்றிருக்கிறீர்களா? …
-
- 8 replies
- 1.5k views
- 2 followers
-
-
சிறுகதை எப்படி எழுத வேண்டும், அதன் கட்டமைப்பு பற்றி ஒரு வழிகாட்டலை தந்தால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்
-
- 1 reply
- 578 views
-
-
புலன் அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா? எந்த நிகழ்வு? எந்த உலகம்? சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல. நம் தாய் பூமி அல்ல. நம் பூமி அல்ல. நாட் அவர் பேல் ப்ளூ டாட். இன்னொரு சோலார் சிஸ்டம். இன்னொரு பூமி-நிகர் உலகம். நம் பூமியில் இருந்து சில மில்லியன் ஒளி வருடங்கள் தொலைவில். ஆனால் பூமியின் டிட்டோ. அங்கே இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். H 1 மற்றும் H 2. கி.பி. 2300 இல் நம் பூமி மிகப்பெரிய அழிவை சந்தித்தது. ஆஸ்டிராய்டு இம்பாக்ட் ஒன்றில் மனித குலம் கிட்டத்தட்ட அழிய இருந்த போது எங்கிருந்தோ வந்த மகானுபாவர்களான இவர்கள் தான், அதாவது H 1 மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருந்த H 2 மனிதர்களை காப்பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
நந்தினி என்றொரு தேவதை ரிஷபன் ஞாயிறு காலை எட்டுமணிக்கு மீனாட்சி மெஸ்ஸில் எதுவும் கிடைக்காது என்று சின்னக் குழந்தைக் கூடத் தெரியும்.இருந்தாலும் சங்கர் மெஸ் வாசலில் வந்து நின்றான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தொங்குகிற வாசல் திரைச் சீலை பற்றாக்குறையாய் காற்றில் ஆடியது. "ஸா... ர்" வாய் 'ஸாரை' அழைத்தாலும் மனசு நந்தினிக்காக ஏங்கியது. "யா... ரு?" ஆண் குரல் கேட்டது. நடராஜன், நந்தினியின் அண்ணன்.மெஸ்ஸுக்குச் சொந்தக்காரன் .. "நான்தான்..." "நான்தான்னா யாரு... ஏய் நந்தினி.. போய்ப் பாருடி..." நடராஜனின் இரைச்சல் வாசலுக்குக் கேட்டது. "ஹாய்...!" கிசுகிசுப்பாய் கையாட்டினான். "என்ன...?" "இன்னிக்கு ஊருக்குப் போகலே. மீல்ஸ…
-
- 1 reply
- 1.3k views
-
-
நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்கையே (1) பாகம் 1 தூங்கி எழுஞ்சு கிளம்பி ரெடி ஆகவே மணி பன்னிரண்டு ஆச்சு. இன்று ஓய்வு நாள். அதனால் தாமதமாகவே எழுந்தேன். அக்கா காலைலயே இட்லி, பொங்கல்னு தலபுடலா ரெடி பண்ணி வச்சிருந்தா. என்ன எப்பவும் காய்ஞ்சு போன ப்ரெட் தானே இருக்கும். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அம்மா அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு நல்லாவே சமைப்பா. அதனால தைரியமா சாப்பிடலாம். நான் சாப்பிட சாப்பிட “இன்னும் எடுத்துக்கோடா” என்று மேலும் ரெண்டு இட்லியை எடுத்து வைத்தாள் தட்டில். “போதும். இப்பவே இவ்வளோ சாப்டா அப்புறம் லஞ்ச் என்ன சாப்பிடுறது? வாயித்துல கொஞ்சமாச்சும் இடம் காலி இருக்கணும்” நான் தடுத்தேன். “டேய் அடி வாங்குவ. காலைலேயே எழுஞ்சு எல்லாம் ரெடி பண்ணிருக்கேன். நீதான் சாப்…
-
- 5 replies
- 5.6k views
-
-
கடிபட்ட பொழுதுகளின் உத்திரவாதங்கள்,,, சுற்றிக் கொண்டிருக்கிற ஒற்றைக்கொசு கடிக்கும் என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நீண்ட நேரமாய் சுற்றிக்கொண்டிருக்கிறது, ”என்ன வேணும் உனக்கு,எனது ரத்தம்தானே உட்கார்ந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டு போ” என உடல் முழுவதையும் திரை விலக்கி காட்டிவிட முடியாது தான், ”எத்தனையோ விதங்களில் யார்யாரோலோ என்னனென்ன விதமாகவோ ரத்த மும் வியர்வையும் வேர்வையும் உழைப்பும் உறிஞ்சி எடுக்கப்படும் பொழுது நீ உட்கார்ந்து கொஞ்சம் உன் உணவுக்கான தேவையாய் எடுப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லைதான்.” கொசு சொல்கிறது,”குறைந்து விடப்போவதில்லை என்பது வாஸ்தவம்தான். அதற்காக ஒரேயடியாய் உறிஞ்சி கொண்டே இருக்க முடியாதுதா…
-
- 1 reply
- 1.2k views
-
-
மனதைத் தொட்ட பதிவு...! பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார். ""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?'' ""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?'' அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார். ""நான் <உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.'' பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்த ஆனந்த், …
-
- 2 replies
- 1.6k views
-
-
வனாந்திர ராஜா மிகைய்ல் பிரிஸ்வின் (ருஷ்யா) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ஒரு கோடைநாளில் நடந்தது இது! மழைக்கு முந்தைய வனாந்திரம் பற்றி இப்போது சொல்கிறேன்! ஒவ்வொரு சின்ன இலையும், பைன்மரத்தின் ஒவ்வொரு ஊசியும் முதல்மழையின் முதல்துளியை அனுபவிக்க ஆவேசப் பட்டன. ஒவ்வொரு சிற்றுயிரும்கூட மழை பற்றிய சுத்த சுயமான பிரக்ஞையில் உறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடி நான் போனேன். எல்லாமே, மனிதர்களைப் போலவே, என்னைத் திரும்பிப் பார்த்தன, ஏதோ நான்தான் கடவுள்போல!.... மழையை அனுப்பச் சொல்லி என்னிடம் அவை கெஞ்சுவதாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்! "வாங்க பெரியவரே...." நான் மழையிடம் பிரார்த்தனை செய்தேன். "நாங்க காத்துக் காத்து அலுத்துப் போனம்யா. எப்பிடிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
சீதை எஸ். ஷங்கரநாராயணன் அவன் பெயர் மாரிமுத்து. அவனுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இல்லை. மாரிமுத்து ஓர் உழவன். ஆற்றுப் பாசனம் பொய்த்த உழவன். எட்டு ஏக்கர் பூமி. இருக்கிற வயல்வெளியில் அவன் பங்கு அதிகம் தான். பூமி வறண்டதால் வானம் வறண்டதா, வானம் வறண்டதால் பூமி வறண்டதா தெரியாது. மழை வரும் வரும் என்று ரேஷன் கடை பாமாயிலுக்குப் போல காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. அது வந்தாமாதிரி வந்து ஒரேநாளில் தீர்ந்துவிட்டதாகச் சொல்லிவிடுகிறார்கள். சிறு தூறல். அத்தோடு வானம் கலைந்து விடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, என்கிறாப் போல. இனியும் வானத்தை எவ்வளவு நம்புவது. வாய்க்காலை நம்பி இனி பிரயோசனம் இல்லை. நம்ம பேரைச் சொல்லி மாநிலமும் மாநிலமும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான். அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பே…
-
- 2 replies
- 661 views
-
-
சிறுகதை / நன்றி காணிநிலம் காலாண்டிதழ் அர்த்தநாரிஸ்வரி எஸ். சங்கரநாராயணன் இடது மார்பில் லேசாய் ஒரு கல் தன்மை இருந்தது போல் தோன்றியது பார்வதிக்கு. உடம்பில் நரம்புகள் முறுக்கி முடிச்சிட்டுக் கொண்டு சில இடங்களில் இரத்தம் சீராகப் பாயாமல் சதை இறுகிப் போவது உண்டு. அவளுக்குத் தொடையில் அப்படி ஒர் சதைக்கட்டி இருக்கிறது. மருத்துவரிடம் காட்டியபோது, கொழுப்பு அப்படிச் சேர்ந்து கொள்கிறது, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், என்றுவிட்டதில் அவளும் அதை அலட்சியப் படுத்தி விட்டாள். குளிக்கும்போது சோப்பு தேய்க்கையில் இப்போது இதை கவனித்தாள். இடது மார்பின் சதைத் திரளில் அவள் கைக்கு சற்று அந்தக் கல், நெகிழ்ந்து கொடுக்காத களிமண்ணாய் நிரடியது. எழுந்த ஜோரில் குதிரையின்…
-
- 0 replies
- 695 views
-
-
ஒரு காட்டில் வாத்து குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது. பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப் பாகவும் இருந்தன. ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. உடன் பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைக் கண்டாலே பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் அதன் தாய் வாத்தே கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது. அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது. நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமா…
-
- 2 replies
- 1.2k views
-
-
காட்டில் புலி ஒன்று கழுதையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தது: “நீ சொல்றது பொய். புல் எப்பவுமே பச்சை நிறம்தான்.” “இல்லவே இல்லை புல்லின் நிறம் நீலம” என்றது கழுதை. விவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில்.. தீவிரமாகி, “சரி.. நாம அரண்மணைக்குப் போய் சிங்கராஜாட்ட கேட்கலாம்” என்று முடிவானது. கழுதையும் புலியும் அரண்மணைக்குள் சென்று சிங்கராஜா முன் நின்றனர். புலி பேசத்துவங்குமுன், கழுதை “ராஜா.. புல்லின் நிறம் நீலம்தானே.. இந்தப் புலி பச்சைனு சொல்லுது” என்றது. உடனே ராஜா.. “ஆமாம்.. புல்லின் நிறம் நீலம்தான். தவறாகச் சொன்ன இந்தப் புலிக்குத் தண்டனை.. ஓராண்டு காவல்” என்றது. கழுதை மகிழ்ச்சியாக வெளியேற, காவலர்கள் புலியை கைது செய்தனர். புலி பரிதாபமாக சிங்கராஜாவைப் பார்த்துக் கேட்டது. “யோவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
காணாமற்போனவர்கள்- பொ.கருணாகரமூர்த்தி நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஒராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “ ஐயோ ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். யாரோ நாதாரியள் எங்கட பிள்ளை பார்த்தனன்தான் செம்மியனைப் போட்டவன் என்று கொடுத்த அநியாயத்தகவலால்………. அவனை உங்கட தாசந்தான் பிடிச்சு வைச்சிருக்கிறாராம். அந்த அப்பாவிக்குழந்தையை எங்களிட்ட மீட்டுத்தந்திடுங்கோ ஐயா…………” என்றபடி அவரின் கால்களில் விழுந்தனர். செம்மியன் பார்த்தனனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அவனது ஐந்து இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டதால அவன்மீது கோபத்தில இருந்தவன்தான், ஆனாலும் அருளல் மறைத்தல் போன்ற சாங்கியங்களில் இறங…
-
- 0 replies
- 596 views
-
-
மணவாழ்வின் மதியம் – காலத்துகள் “நைட் பூரா இருக்கணுமா” “..” “பதினொண்ணு, பண்ணண்டுக்கு கிளம்ப முடியாதா” “..” அழைப்பைத் துண்டித்தாள். சுவர்க் கடிகாரத்தின் சதுரம் மங்கலாகத் தெரிந்தது, அலைபேசியில் பார்த்தாள், ஏழு நாற்பது. அறை விளக்கை போடாமல் ஜன்னல் அருகே சென்று இருளினூடே வெளியே நோக்கினாள். மழை நின்றுவிட்டிருக்க, தெருவிளக்கின் ஒளி எதிர்வீட்டின் கண்ணாடி ஜன்னலில் சிந்தி சாலையில் தேங்கியிருக்கும் நீர்க் குட்டையில் விழுந்திருந்தது. கணுக்காலுக்கு மேல் புடவையை இடது கையால் தூக்கிப் பிடித்தபடி அவ்வொளியை தாண்டிச் சென்ற பெண்ணின் வலது கையில் குடை. மழையால்தான் இவன் வர தாமதமாகிறது என்று எண்ணியிருந்தாள். ஏழேகாலுக்கு மேல் அவனுக்குத் தாமதாமாவதில்லை, அதிகபட்சம்…
-
- 0 replies
- 1.4k views
-
-
அம்பலம் - நெற்கொழுதாசன் Yulanie நீங்கள் புலிகளுக்காக வந்திருந்தால் திரும்பிச் சென்றுவிடுங்கள் என அனுராதபுரச் சிறையருகே வைத்து சிங்களம் மட்டும் பேசுகின்ற இளைஞர்களால் தமிழை மட்டும் பேசுகிறவர்களுக்கு கூறிய நாளில் இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன். கதையை எழுதி முடித்த நாளில் பிரபாகரனோடு இயக்கத்தை தொடங்கி அதன் உபதலைவராகவும் இருந்த ராகவன், பிரபாகரனின் போராட்டம் அர்த்தமற்றது என்று ஒரு தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார். 0 0 0 கிணற்றை சுற்றி இருந்த வட்ட கல் கட்டினை முன்வைத்தே பிரச்சனை ஆரம்பமாகியிருந்தது. பொதுக் கிணறுகளுக்கே இப்படியான வட்டக்கல் கட்டினை காட்டுவதாக சொல்லிக்கொண்ருந்தார் பொன்னுசாமி. வத்தாக் கிணறு என்று பெயர்பெற்ற அந்தக் கிணற்றை தனது …
-
- 1 reply
- 1.4k views
-
-
குசலாம்பாள் என்னும் செயின் புளொக் யதார்த்தன் Yulanie ஆயிரத்தித்தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி, “நடுவில்” என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி, கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து அவருடைய விசாரணை அறிக்கையை புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த லெப்டினன் கேணல் வெய்யோன் (பிறப்பு – 1965 வீரச்சாவு – 2001) மேலிடத்திற்குச் சமர்பித்திருந்தான். அறிக்கைப்பிரதி ஒன்றை, அதனுடைய கச்சிதத்தையும் விடையச்சுருக்கத்தையும் மீறி உரையாடல் வடிவத்திலோ கதை வடிவத்திலோ எப்போதும் நிறையப்பக்கங்களைச் செலவழித்து வெய்யோன் எழுதிக்குவிப்பதை அம்மான் …
-
- 1 reply
- 1.5k views
-
-
புத்தகம் ………………….. உங்கட மகனை நான் அனுப்புகிறேன். அவற்ர புத்தகத்தையும், 50000 ரூபா காசை அட்வான்சாகவும் தாங்கோ. ஓம் தம்பி சொன்ன மாதிரி செய்யிறன். எம்மவரின் புலம்பெயர்வு காலத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று. ஏஜென்ஸிமாருக்கும் எமக்குமான உரையாடல்களில் இச் சொற்கள் சர்வசாதாரணமாகவே வரும் அது என்ன புத்தகம். பாடப்புத்தகம், பாஸ்போட் ( கடவுச் சீட்டு -Passport ), மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகம். ஆகியவை எம்மால் புத்தகமென கூறப்படும் புத்தகங்களாகும். எம்மவருக்கும் புத்தகம் எனப்படும் பாஸ்போட்டுக்கும் இரத்தமும் சதையுமான உறவு ஒன்று உள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக நாம் வெகு சுதந்திரமாக இந்தியாவுக்குப் போய் வந்த ஒரு காலம் இருந்தது. 1974 ஆம் ஆண்டு எனது…
-
- 3 replies
- 1.5k views
-
-
வெள்ளை நிற பள்ளிச் சீருடை சயந்தன் December 30, 2018 மிருதுவான கன்னத்தில் பிஞ்சு விரல்களைப் பொதித்தபடி நிச்சலனத் தூக்கத்திலிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொல்வதே காலத்திற்குச் செய்கின்ற நீதியாயிருக்குமென்று இளமாறனுக்குத் திடீரென்று தோன்றிற்று என்றெழுதிய கதைசொல்லி இக்கதைக்குப் பயன்படுமென்று கருதிய ஆவணங்களையும், கடிதங்களையும், கத்தரித்த செய்தித் துணுக்குகளையும் தொடர்ந்து வாசிக்கலானான். 1999.05.16 ஹொட்டஹேன பொலிஸ் நிலைய ஆய்வாளர் ஆரியரட்ணவினால் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் வைத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரதி. (வலது மூலையில் பச்சை நிறப் பேனாவால் “நல்ல பொலிஸ்காரன்” என்று எழுதப்பட்டிருந்தது.) …பெயர் அரங்…
-
- 0 replies
- 1.7k views
-
-
பாதுகை! — டொமினிக் ஜீவா. சிறப்புச் சிறுகதைகள் (24) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – டொமினிக் ஜீவா எழுதிய ‘பாதுகை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்தபோது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடதுகால் பாதத்தைத் தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித்தான், முத்து முகம்மது. வைரித்த கெட்டியான உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்பு வாதை கொண்ட நோயாளி யைப் போல, அவனைச் சுட்டிக்காட்டின. சே! சே! காலிலே ஒரு செருப்புக் கிடந்தால்? திரும்பித் தார் ரோட்டைப் பார்த்தான். புகைத்த பின்பு குறையாக வீதி…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒரு குடிகாரனும் மகளும்-நோர்வேஜியச் சிறுகதை- தமிழில்: ரூபன் சிவராஜா மகளுக்கு ஐந்து வயது. அவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டாள் அவள். ஒரு நாளையேனும் விட்டுவைக்காது தலைகால் புரியாமல் குடித்துக்கொண்டிருந்த அவனைச் சகித்துக்கொள்ள அவளால் முடிந்திருக்கவில்லை. சிவத்துப்பிதுங்கிய அவனது கண்களை பார்த்திருப்பது மனவுளைச்சலைக் கொடுத்தது. விவாகரத்து சுலபமாகக் கிடைத்துவிட்டது. அற்வக்கேற்றிடம் சென்றுவந்த அதேநாள், தனி அறையொன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறினான். பெற்றோரின் மணமுறிவுச் சம்பவம் பற்றிய விளக்கம் மகளைப் பெரிதாகச் சென்றடைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் சில நாட்கள் தகப்பனைப் பற்றி அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தாள். நாட்கள் போகப்போக அவன் பற்றிய…
-
- 1 reply
- 1.9k views
-
-
தீவிரவாதி -இளங்கோ இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன்-லிபரேஷன் தாக்குதல்இடைநிறுத்தப்பட்டதற்கும், இந்திய அமைதிப்படையோடுஇயக்கம் சண்டையைத் தொடங்குவதற்குமான இடையிலானமாதங்கள் சொற்பமே இருந்தபோதும், அந்தக் குறுகிய அமைதியைஎங்கள் ஊர் ஏதோ ஒருவகையில் வரவேற்கத்தான் செய்தது. ஊர்வைரவர் கோயில் திருவிழா விமர்சிகையாகக்கொண்டாடப்பட்டது. புளியமரத்தடியில் கிளித்தட்டும், பிள்ளையார் பேணியும் வயது வித்தியாசமின்றி குதூகலமாகவிளையாடப்பட்டது. இப்படி இன்னும் பலவற்றில், ஊர் தன்உயிர்ப்பை மீளவும் கண்டுகொள்ளத்துடித்தது. ஒருகாலத்தில் ஆடுகள் காவுகொடுக்கப்பட்டு வேள்விகள் நடந்தவைரவர் கோயிலில், இயக்கங்கள் பல்கிப்பெருகிக் காலத்தில்மார்க்ஸைப் படித்த ஏதோ ஒரு இயக்கம் வேள்விகளுக்கு இனி…
-
- 4 replies
- 2k views
-
-
புட்டுக்குழல் “மடத்தர டிக்கெட் எறங்கிக்கொள்ளு” “ணங்க் ணங்க் ணங்க்” என்ற மணிச் சத்தத்தோடு ஜலதோசம் பிடித்த கனத்த குரல்.கடைசி இருக்கையில் நெடுஞ்சாண் கிடையாய் நல்ல உறக்கத்தில் இருந்தான் முத்தையா. கடைசி இருக்கைக்கும் அதற்கு முந்தைய இருக்கைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் பிளாஸ்டிக்,அலுமினிய பாத்திரங்கள் அடங்கிய சாக்குப்பை.சாக்கினுள் புட்டுக்குடம்,புட்டுக்குழல் தவிர மற்ற அனைத்தும் சிறிய சிறிய பாத்திரங்கள்-எதெடுத்தாலும் இருபது ரூபாய். விளக்கொளி கொடுத்த கண்ணெரிச்சலோடு ஆங்காங்கே தலைகள் உருண்டன.மூன்றுமுறை சத்தம் கொடுத்த நடத்துனர் விறுவிறுவென கடைசி இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “ஈ பாண்டி மாருக்கு கண்ணடைச்சா பின்ன தொறக்குல்ல,”முனங்கிக்கொண்டே சென்று வாய் பிள…
-
- 1 reply
- 1.1k views
-
-
காமத் தாழி - சி. சரவணகார்த்திகேயன் சாகஸ ராத்திரி!அந்தப் பெயரே ஜிலீர் என்றிருந்தது சில்வியாவுக்கு. ADVENTURE NIGHT என்று காப்பர் ப்ளேட் கோத்திக் எழுத்துருவில் அச்சிடப் பெற்ற அந்த நுழைவுச் சீட்டை எடுத்தாள். முகமூடி, மதுக்கோப்பை, வாண வேடிக்கைக்கிடையே Happy New Year’s Eve – 2018. ₹ 1,00,000 என்றிருந்த பொன்ஜிகினாப் புடைப்பை விரல்களால் ஆதூரமாய்த் தடவினாள். பார்த்திபன் முதலில் அதைச் சொன்ன போது விளையாடுகிறான் என்றே நினைத்தாள்.“ச்சீய்… போடா பொறுக்கி!”அவன் எப்போதும் அப்படித்தான். ஆபாசமாய்ப் பேசிச்சிரிக்க வைப்பதில் அசகாயசூரன். சில்வியா திருமணமாகி இவ்வூருக்கு வந்து இரண்டரையாண்டுகள் ஆகின்றன. மொழி தெரியாத மிலேச்சர்கள் சூழ வாழும் அந்த அந்நியப் பிரதேசத்தில் ஒவ்வொரு பகலும…
-
- 1 reply
- 2k views
-