கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அடையாளம் - சிறுகதை சிறுகதை: சிவபாலன், ஓவியங்கள்: செந்தில் `Let me explain’ அந்தக் குறுஞ்செய்தி பாரதியின் செல்போனில் வந்து விழும்போது மணி ஆறு இருக்கலாம். அந்த அரங்கத்தில் அவ்வளவு ஒன்றும் பெரிதான கூட்டம் இல்லை. அதை அந்த இளம் எழுத்தாளன் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. ரசித்து ரசித்து தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தான். பாரதி எந்த சுவாரசியமும் அற்று அமர்ந்திருந்தான். அந்த அரங்கில் இருபதிலிருந்து முப்பது பேர் வரை இருக்கலாம்; யாருக்கும் அந்த நிகழ்வில் எந்த ஓர் ஈர்ப்பும் இருப்பதாய் தெரியவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில் வந்திருப்பதாய் பட்டது. பாரதி அரங்கிலிருந்து மெதுவாய் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே நடந்தான். அந்த அரங்கத்தின் வெளியே வந்து ஒரு …
-
- 0 replies
- 3.2k views
-
-
கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக “காக்கைச் சிறகினிலே” இதழ் குழுமத்தினரால் நடத்தப்பட்ட புலம்பெயர் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான ‘காக்கைச் சிறகினிலே’ இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடத்துவதென அறிவித்தது. அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது முலாவது நினைவையொட்டி ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016′ யை முன்னெடுத்தது. இப்போட்டியின் கடைசி நாளாக 31. 01. 2016 என அறிவிக்கப்பட்டு முடிவு கி.பி. அரவிந்தன் அவர்களின் முதலாவது நினைவு மாதமான மார்ச்சு 2016 இல் அறிவிக…
-
- 15 replies
- 3.2k views
-
-
பிரான்சிலிருந்து டென்மார்க் பயணம். அத்தானின் ஒரு வருட துவசம் என்பதால் பொருட்களையும் வாங்கி அவசரமாக புறப்படுகின்றோம். இரவு ஓட்டம் பலகாரச்சூடு சமையல் என ஆட்கள் தேவை என்பதால் யேர்மனி சென்று அங்கிருக்கம் அக்காவையும் எற்றிக்கொண்டு பயணம் தொடங்குகிறது..... நான் தான் வாகனத்தை ஓட்டுகின்றேன். ஒரு 20 கிலோமீற்றர் (அக்காவீட்டிலிருந்து) போயிருப்பேன்.. வாகனம் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.. நான் இறுதி வரிசையில் (வேகப்பாதை) ஓடிக்கொண்டிருக்கின்றேன். திடீரென எனது பாதை முடிவடைவதற்கான பதாதை ஒன்று கண்ணில் தெரிகிறது. பாதை முடிவடைகிறது என்று தெரிகின்றதே தவிர அது எத்தனை மீற்றரில்முடிவடைகிறது என்பதை வாசிக்கமுடியவில்லை. முன்னால் பார்க்கின…
-
- 30 replies
- 3.2k views
-
-
சண்டியர்கள் ஒரு பேப்பருக்காக அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது
-
- 14 replies
- 3.2k views
-
-
நிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர் நான்கைந்து முறை அழைத்ததாகச் சொன்னார். போக, ``இப்படி உன்னை அடிக்கடி நான் பார்த்துட்டே இருக்கேனேம்மா'' என்றார். ``ஒண்ணும் இல்லைப்பா, சும்மா ஒரு யோசனையில் இருந்துட்டேன்'' என்றபடி சாப்பிட அமர்ந்தேன். வழக்கம்போல அப்பா உப்புமாதான் செய்திருந்தார். `இன்னிக்கும் உப்புமாவாப்பா?' எனக் கொஞ்சம் சிணுங்கட்டாம் போடலாம்போல் இருந்தது. இருந்தும் `பி.எஸ்ஸி கடைசி வருடம் சென்றுகொண்டிருக்கும் பெண், சாப்…
-
- 0 replies
- 3.2k views
-
-
நாயகி - சிறுகதை ஜான் சுந்தர் - ஓவியங்கள்: ஸ்யாம் டிப்பியை ஸ்டீபன் அண்ணன் ஊட்டியிலிருந்து எடுத்து வந்திருந்தார். யாரோ ‘`நல்ல குட்டி, ஜெர்மன் ஷெப்பெர்டு க்ராஸ்’’ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ``சாதி நாயும் நாட்டு நாயும் சேர்ந்து போட்ட குட்டிடா’’ ஸ்டீபண்ணன் விளக்கினார். ``ஊட்டில பூன, நாயி, மாடு அல்லாத்துக்குமே முடி அதிகமாத்தான் இருக்கும் இல்ல டீபண்ணா’’ என்றான் இளங்கோ. அவனுக்கு `ஸ்’ வரவில்லை. வேறு சிலவும் வராது. `பைஜாமா ஜிப்பா’வை `பைமாமா மிப்பா’ என்பான் `இங்க’ என்பதற்கு `இஞ்ச’ என்பான். `ம்ம்... சொட்டரோடவே பொறந்துட்டா குளுராதில்ல’’ டிப்பியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். அது என் விரல்களை நக்கியது. அதன் மீசையரும்பு வ…
-
- 1 reply
- 3.2k views
-
-
நமலி போல் வாழேல் - சிறுகதை விநாயக முருகன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி வீட்டுக்கு வெளியே வரும்போது, தெருவில் பட்டாசுக்குப்பைகள் மிதந்துகொண்டி ருந்தன. மழையிலும் மக்கள் தீபாவளியை எப்படியோ கொண்டாடியி ருந்தார்கள். மீண்டும் ஒரு பெருமழை வரும் என்று தோன்றியது. கவலையுடன் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், ஏதோ சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த காரைத் திரும்பிப் பார்த்தேன். முதலில் பார்க்கும்போது, காருக்குக் கீழே துணிமூட்டை போலத்தான் தெரிந்தது. என்னைப் பார்த்து விருட்டென அது வெளியே வந்ததும்தான் நாய் என்று உணர்ந்தேன். பயத்தில் அனிச்சையாக எனது கால்கள் பின்னால் நகர, படிக்கட்டில் ஏறி நின்றுகொண்டேன். அவ்வளவு பெரிய உயரத்தை எப்படிக் குறுக்கி, அந்த காருக்கு அடியில் …
-
- 2 replies
- 3.2k views
-
-
நான் 2005 சமாதான காலத்தில ஊருக்குப் போயிருந்தேன்...பயணம் முடிஞ்சு திரும்பி கொழும்புக்கு வரும் போது எனக்கு ரெயினில் போக வேண்டும் என ஆசையாயிருக்குது ரெயினில் போவோம் என்று அம்மாட்ட சொன்னேன்...அம்மா சொன்னா ரெயினில் போனால் நிறைய நேரம் செல்லும்,தனக்கு காலும் எலாது வான் புக் பண்ணி கொழும்புக்கு போவோம் என சொன்னார்...நான் இல்லை என்று அடம் பிடிச்சு ரெயினில் புக் பண்ணியாச்சு. நான் பயணக்கட்டுரை எழுதலேல்ல...அம்மா சொன்ன மாதிரி ரெயின் சரியான நேரம் எடுத்தது அத்தோடு நின்று,நின்று மெதுவாய்ப் போச்சுது...அம்மாவும்,தம்பியும் என்னைப் பேசி,பேசி வந்தார்கள் நான் காதில போட்டுக் கொள்ளேல்ல வடிவாய் எஞ்ஜோய் பண்ணிக் கொண்டு வாறன் ...சொல்ல மறந்து போனேன் நாங்கள் பயணம் செய்த பெட்டி பூரா முஸ்லீம் ஆட்கள…
-
- 36 replies
- 3.2k views
-
-
ஆகாசத்தின் உத்தரவு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இமையம், ஓவியங்கள்: பாலு சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை. கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுவத்தியைச் செருகினான். குவாட்டர் பிராந்தி பாட்டில் இரண்டு, சிகரெட் ட…
-
- 1 reply
- 3.2k views
-
-
உயர்ந்து பரந்து விரிந்து காட்சியளித்த அந்த பிரமாண்டமான கட்டிடத்தை எனது கார் நெருங்கியது. நெருங்க நெருங்க என் மனமும் நொறுங்க ஆரம்பித்தது.வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு 200 மீற்றர் தூரத்தில் காட்சியளித்த அந்த வெள்ளைக்கட்டிடத்தின் நுழை வாயிலை அண்மித்தேன்...உள்ளே கடமையில் இருந்தவர்கள் கதவினைத்திறப்பதற்காக பொத்தானை அழுத்தியதும் அந்தக்கண்ணாடி கதவு மெதுவாக திறந்து கொண்டது.மெதுவாக எனது கால்களை உள்ளே வைத்து பதட்டத்துடன் உள்ளே சென்றேன்.கடமையில் உள்ளவர்கள் விபரத்தை கேட்டார்கள்.கூறினேன். அவர்கள் கையில் வைத்திருந்த பத்திரத்தில் பெயரைத்தேடி குறிப்பிட்டபின் எனது கடவுச்சீட்டை வாங்கினர். அதன் பின் என்னிடம் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு சிறிய அலுமாரி…
-
- 38 replies
- 3.2k views
-
-
செல்லக் கிறுக்கி - சிறுகதை வரவணை செந்தில் - ஓவியங்கள்: ஸ்யாம் காய்கறி மூட்டைகளுடன் முன்னால் சென்றுகொண்டிருந்த `சின்ன யானை’யின் இன்ஜின் ஆயிலை மாற்றிப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும்போல. அதன் டிரைவர் கியர் மாற்றும்போதெல்லாம், எதிரியிடமிருந்து தப்பிக்கவென கணவாய் மீன்கள் பீய்ச்சும் கறுப்பு மையைப்போல சைலன்சரிலிருந்து குப்பென்று கரும்புகைப் பந்து வெளியாகி, ஒரு கணம் நின்று, பின் காற்றில் கலந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும், `இதுதான் கடைசியாகப் போகும் வாடகை வீடு’ என்று மனம்நிறைய நினைத்துக்கொள்ளும் நம்பிக்கை இப்போதும் இருந்தது. `விரைவில் சொந்த வீடு வாய்க்கவிருக்கிறது’ என்ற குரலை, `உங்களை ஏற்றுக்கொள்ளும் பட்டினத்தில் அவர்கள் உங்கள் முன் வைப்பதைப…
-
- 0 replies
- 3.2k views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவு. அவள் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அவன் வரும்வரை அது எத்தனையாண்டுகள் ஆனாலும் அவள் காத்திருப்பாள். அவன் விடுதலையாகி வெளிவரும் நேரம் ஒரு இலட்சியத்திருமணம் நிகழும் என்றுதான் பலர் சொன்னார்கள். இரண்டு இலக்கிய கர்த்தாக்களின் இணைவு இரண்டு மண்ணை நேசிக்கிற இதயங்களின் இணைவு ஒரு வரலாற்றை எழுதுமென்று அந்தக்காதலுக்குப் பலர் கெளரவ தூதர்களாக இருந்தது பெரிய கதை. அந்தக்காதலன் புலியில்லை. புலிகளை நேசித்தவன். புலிகள் அமைப்பின் ஒரு பிரிவுக்கான முகவராக பணியாற்றியவன். 10ஆண்டுகள் முன் கைதாகி சிறையில் அடைபட்டவன். அந்தக்காதலி ஒரு பெண்புலி. 17வயதில் களம் சென்று பயிற்சியெடுத்துக் களங்களில் காவலிருந்து ஒரு காவியம் படைத்த சமரில் காயமுற்று ஊனமடைந்தவள். காவலரணில…
-
- 12 replies
- 3.1k views
-
-
1995 இதே காலப் பகுதி... மாதகல் பக்கமா ஒரே கன்போட் அடி... குரும்பசிட்டி.. சண்டிலிப்பாய்.. அளவெட்டிப் பக்கமா.. ஒரே செல்லடியும்.. துப்பாக்கிச் சண்டையும்... ஆமி முன்னேறி வந்திட்டானாம்.. சனங்கள் எல்லாம் உடுத்த உடுப்போட கத்திக் கொண்டு ஓடுதுகள்... ! ஓடிறதுகள் ஓட.. இன்னும் கொஞ்ச சனம்.. காலாற.. கோயில் வழியவும்.. சேர்ச் வழியவும் அடைக்கலம் தேடுதுகள்... என்ன கொடுமை இது.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா..??! கடைக்குப் போய் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்த நான்.. மக்கள் வீதி ஓரங்களில் களைப்பு மிகுதியில் மரங்களுக்கு கீழ நின்று ஓய்வெடுக்கிறதை கண்டிட்டு எனக்குள்ள அங்கலாய்த்தும் கொண்டன். பலாலில இருந்து.. அச்சுவேலிக்கால வெளிக்கிட்டு முன்னேற முயன்ற ரத்வத்த அங்கிள் அங்க அடி அகோரம…
-
- 30 replies
- 3.1k views
-
-
கம்பராமாயணம் படித்த கதை அல்லது புலம்பெயர் Fusion கதை சமர்ப்பணம்: 'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின் கதியினை நகுவன, அவர் நடை; கமலப் பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ் மதியினை நகுவன, வனிதையர் வதனம்.' எனக் கம்பன் கண்ட பெண்டிர்க்கு...! முன்னீடு சென்ற மாதம் 'மழைக்குள் காடு' நிகழ்வில் கவிதைகள் பற்றிய ஓர் உரையாடல் நடைபெற்றிருந்தது. எனக்குப் பிரியமான செல்வம் புதிதாய்க் கவிதை எழுத வருகின்றவர்கள் கட்டாயம் கம்ப இராமாயணத்தை வாசிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். கம்பராமாயணத்தில் இருக்கும் சனாதனக் கருத்துக்களை மறுத்துக்கொண்டே அதேசமயம் கம்பனில் ஊற்றாய்ப் பெருகும் அழகுத் தமிழுக்காய்த…
-
- 3 replies
- 3.1k views
-
-
அமைதிக்கு பெயர் தான் சாந்தா ............ அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான இரு குடும்பங்கள் . .செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள் .ஆணும் பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் . .குடும்பமும் குழந்தைகளுமாக iவாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று உயர் பதவிஉம் பெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா வங்கியில் பணியில் சேர்ந்தாள். தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான் .. காலம் உருண்டு ஓடியது .சந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான் .ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண் கேட்டு தியாகர் செல்லமனியிடம் …
-
- 21 replies
- 3.1k views
-
-
அன்று பாடசலை விடுமுறை நானும் நண்பர்களும் "கள்ளன் பொலிஸ் " விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோம்.எனது அம்மாவும் நண்பர்களின் அம்மாக்களும் திடிரேனே ஒடிவந்தனர்"தம்பிமார் ஒடி போய் கூப்பன் கடையில் அரிசியும்,பருப்பும்,சீனியும் வாங்கி கொண்டு ஒடிவாங்கோ நாங்கள் பின்னுக்கு வாறோம்"என்றனர்.நாங்களும் ஒடிப்போய் கடையில் நின்றோம்.அங்கே ஒரே சனக்கூட்டம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.வானொலி எல்லாம் பெரிதாக அந்த ஊரில் இல்லைஒரு சில வீட்டிலும் கடைகளிலும்தான் வானொலி இருந்தது.அதுவும்" வால்வ் ரேடியோ"அதற்க்கு பக்கத்தில் பெரிய பற்றரி ஒன்றும் வைத்திருப்பார்கள்.வானோலி வைத்திருந்தவர்கள்தான் அந்த சனக்கூட்டத்தில் அன்றைய கதாநாயகர்கள்,"நான் இப்ப ரேடியோ கேட்டுப்போட்டுத்தான் வாரன் .நாடு பூராவும் ஊரடங்குசட்ட…
-
- 24 replies
- 3.1k views
-
-
சரி பின்னக் காதலிப்பம்... அவளுக்குப் பயமாகவிருந்தது. எப்படி இந்த இரவைக் கழிப்பது? எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. உடல் கூசத் தன் சேலையால் போர்த்துக் கொண்டாள். அவனை ஒரு தரம் நினைத்துப் பார்த்தாள். முரடனாயிருப்பானோ? மனம் கிடந்து தவித்தது. "சே! சே! இதென்ன கலியாணம்? முன்பின் தெரியாதவனோடு ஒரு முதலிரவு. நான் எப்படி வளர்ந்தேன்? எப்படி வளர்க்கப்பட்டேன்? எப்படி ஒரு ஆணின் நிழல் கூட என்னில் படாமல் பார்ர்த்துக் கொண்டேன்? திடீரென்று இதென்ன. . .?" பெரியவர்கள் எல்லாம் பார்த்துப் பேசி எல்லாம் முடித்து விட்டார்கள். தாய் தந்தை பெரியவர்களின் சொல்லைத் தட்டக் கூடாதென்பதற்காகத்தானே நான் இந்தக் கலியாணத்திற்குச் சம்மதித்தேன். இப்போத…
-
- 22 replies
- 3.1k views
-
-
பரமேஸ்வரி படுக்கையில் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இது தன் வீடு இல்லை என்பதுமட்டும் தெரிகிறது. கண்களைச் சுழலவிட்டு அவ்விடத்தை அடையாளம் காண முற்பட்டாலும் எதுவும் நினைவில் வர மறுக்கிறது. பிள்ளைகள் எங்கே ஒருவரையும் காணவே இல்லை. தாகம் எடுப்பதுபோல் இருக்கிறது. யாரையாவது கூப்பிட வேண்டும் என எண்ணி கூப்பிட எத்தணிக்கிறாள். வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வரவில்லை. என்ன இது தொண்டை அடிக்குதே. யாருமில்லையா என எண்ணியவளுக்கு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி எழ முயல்கிறாள். அதுவும் முடியவில்லை.பதட்டம் மேலும் அதிகரிக்க இரு கைகளையும் கண்டபடி அசைத்ததில், மேசையில் இருந்த எதோ ஒன்று கீழே விழுந்து சத்தம் எழுப்பியதில் பக்கத்து அறையில் இருந்த தா…
-
- 30 replies
- 3.1k views
-
-
மாவீரர் தின பதிவு - தலைவர்க்கு துணையாக வேண்டும், தமிழீழம் மலர்ந்தாக வேண்டும் [கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்] வழமையான வேலை, படிப்பு ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மாவீரர் நாளான இன்றைய பொழுதிற்கான வேலைகளில் மூழ்கியபடியே இருக்கும் போது நடந்தவை பல மனதிலே தோன்றி , கண் வழியே இறங்கிகொண்டிருக்கின்றது. தனியே இருந்து அழவும், போராடவும் நாம் ஒன்றும் யாருமற்றவர்கள் இல்லையே. எங்களுக்கு தோள் தர உறவுகள் நீங்கள் இருக்கின்றீர்களே. இன்றைய நாள் "கார்த்திகை 27" உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஏதோ ஒரு வகையில் நிறுத்தி வைக்கும் என்றே சொல்லலாம். என்னைக்கேட்டால் மாற்றுக்கருத்துக்காரர்களை கூட என்பேன்.எத்தனை ஆயிரம் உயிர்கள் எமக்காய் விதைத்தாயிற்று. தமிழன் ஒரு போதும…
-
- 8 replies
- 3.1k views
-
-
துரோகங்கள் - சிறுகதை அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம் இதற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோது அவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத் தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரிய காரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான். “சார்... சார்...” என்று அழைத்தான். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப் பார்த்து, “சின்ன அம்மாவைக் கூப்பிட்டீங்களா?” என்று தெலுங்கு மொழியில் கேட்டான். “இல்லை. பெரிய ஐயாவைப் பார்க்கணும்” என்றான். “பெரிய ஐயாவையா? சரி, சேர்ல உக்காருங்க. நான் சொல்லிட்டு வரேன்.” நீலகண்டன் வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். சி…
-
- 0 replies
- 3.1k views
-
-
வணக்கம் கள உறவுகளே ! இந்தக்கதையினூடாக ஒரு வேறுபட்ட முகத்தை காட்ட முயற்சிக்கின்றேன் . இது சரியா அல்லது பிழையா என்பதை என்னைத் தூக்கி வளர்க்கும் வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும் . இந்தக் கதையில் ஆக்க பூர்வமான உங்கள் விமர்சனத்தை வாசகர்களாகிய உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் . ******************************************************************************************************************************************* வேள்விக் கிடாய் ஒரு பேப்பருக்காக கோமகன் விடிய 2மணிக்கு வேலையால வந்தவுடன உடுப்பை மாத்தாமல் குசினிக்குள்ளை பாஞ்சன். குஞ்சன் கோழிக்கறியும் கீரையும் மஞ்சள் சோறும் போட்டு வைச்சிருந்தான் . நான் இருந்த பசியில பரதேசி …
-
- 29 replies
- 3.1k views
-
-
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்துப் பேசத்தொடங்கியது: "மன்னா! பேய்களும் உறங்கும் இந்த நள்ளிரவில் இந்த சுதந்திர தமிழீழத்தின் சுடுகாட்டில் இவ்வளவு சிரமப்படும் நீ இதனால் அடையப்போவதுதான் என்ன? அதோ,புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் நகரத்தின் சௌந்தர்யங்களை அனுபவிக்காமல் ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கொள்ளுகிறாய்? கடின முயற்சி உடையவர்கள், சில சமயம் நல்லதே நினைத்து செய்யும் செயல்களும் அவர்களறியாமல் எதிர்மறையான பலனை கொடுத்து முயற்சியில் பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும். இந்த சுதந்திர தேசத்தின் நீண்ட நெடிய…
-
- 4 replies
- 3.1k views
-
-
கெட்ட குமாரன் - சிறுகதை எஸ்.கே.பி.கருணா, ஓவியங்கள்: ஷ்யாம் எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள 26 வழிகளும் எங்களைப் போன்ற மாணவர்கள் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு திருட்டு வழியும் கண்டுபிடிக்கப் படும்போதெல்லாம், இன்னொரு ரகசிய வழி திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் நகரின் மையத்தில் பிரமாண்டமாக நிலைகொண்டிருக்கும் எனது பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்குமான அந்தரங்க சிநேகிதம் அது. தினமும் காலை மிகச் சரியாக 8.50-க்குப் பள்ளியின் பிரதான நுழைவாயில் இழுத்து மூடப்படும்போது, பள்ளிக்கு வெளியில் கு…
-
- 1 reply
- 3.1k views
-
-
காதலில் காதல்.! அம்மா வீட்டிற்கு வந்திருந்தா எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல, ஒரு கடிதம் போட்டிட்டு வந்திருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறா. இன்னும் நாலைஞ்சு நாளைக்கு ஒரே புராணமாய் போப்போது. வர வர நின்மதியில்லாமல் போச்சு என்ர அறைக்கதவை பூட்டி திறப்பைக்கொண்டு போகவேணும். இல்லை என்றால் மனிசி அறையை ஒரு கை பாத்திடும். போனமுறை வந்து செய்த வேலை காணும். படங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒழிச்சுப்போட்டா. வந்த கோவத்திற்கு வேறை யாரும் என்றால் நடக்கிறதே வேறை அம்மா என்டதால விட்டிட்டு இருந்தனான். அவாக்கு இதே வேலையாப்போச்சு எத்தனை வருசமாச்சு சொன்னாக்கேக்கமாட்டன் என்கிறா. அவாவும் பாவம் தானே. என்ர காதல் புனிதம் அவவுக் எப்படிப்புரியும். பாவம் வந்தவ சந்தோசமாய்…
-
- 15 replies
- 3.1k views
-
-