கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
1995.. பல தமிழ் குடும்பங்களுக்கு ஒரு சபிக்கப்பட்ட வருடம்.... எங்கள் குடும்பமும் அதில் ஒன்று.. அன்றாடம் வேலிச்சண்டைகளையும்.. பங்குக்கிணற்றுச் சண்டைகளையுமே கண்டு வளர்ந்த பல வீர வீராங்கனைகளின் முற்றத்தில் குண்டு மழை... எனக்கு 14 வயது இருக்கும் என் நினைக்கிறேன்... எனது ஊர் சண்டிலிப்பாயில் ஒரு சனிக்கிழமை நாள் அதிகாலை 5 30 மணி..தூரத்தில் உலங்கு வானூர்தி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது...இடைய
-
- 10 replies
- 2.5k views
-
-
ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான். அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான். உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று? அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான். குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.? அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும் குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்? அந்த மனிதர்மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா. குருடன்:ஐயா…
-
- 6 replies
- 2.5k views
-
-
தாய்லாந்துக் காதல் சிறுகதை: மாத்தளை சோமுஓவியங்கள்: ஸ்யாம் மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மறுபடியும் அவன் தூக்கத்தை மீட்க முனைந்தான். காலையில் விடிவதற்கு முன்னர் அல்லது விடியும்போது எழுவது அவனுக்குப் பிடிக்காது. ஊரில் இருந்தபோதுகூட காலை 8 மணிக்குத்தான் எழுவான். அவனை எழுப்ப எவரும் இல்லை. அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு அவனைத் தாலாட்டுவார்கள். 'பிள்ளையே இல்லை’ என சோதிடர்களும், 'பிள்ளை பிறக்க வாய்ப்பு இல்லை’ என வைத்தியர்களும் முடிவுரை எழுத, அந்த முடிவுரைக்கே முடிவுரை எழுதியதுபோல் அவன் பிறந்தான். அவனுக்குப் பிறகு எவரும் பிறக்கவில்லை. அவன் ப…
-
- 0 replies
- 2.5k views
-
-
காட்டில் புலி ஒன்று கழுதையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தது: “நீ சொல்றது பொய். புல் எப்பவுமே பச்சை நிறம்தான்.” “இல்லவே இல்லை புல்லின் நிறம் நீலம” என்றது கழுதை. விவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில்.. தீவிரமாகி, “சரி.. நாம அரண்மணைக்குப் போய் சிங்கராஜாட்ட கேட்கலாம்” என்று முடிவானது. கழுதையும் புலியும் அரண்மணைக்குள் சென்று சிங்கராஜா முன் நின்றனர். புலி பேசத்துவங்குமுன், கழுதை “ராஜா.. புல்லின் நிறம் நீலம்தானே.. இந்தப் புலி பச்சைனு சொல்லுது” என்றது. உடனே ராஜா.. “ஆமாம்.. புல்லின் நிறம் நீலம்தான். தவறாகச் சொன்ன இந்தப் புலிக்குத் தண்டனை.. ஓராண்டு காவல்” என்றது. கழுதை மகிழ்ச்சியாக வெளியேற, காவலர்கள் புலியை கைது செய்தனர். புலி பரிதாபமாக சிங்கராஜாவைப் பார்த்துக் கேட்டது. “யோவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
சிவப்பு மச்சம் - சிறுகதை “என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே... உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே... வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக்கொண்டிருந்தாள். வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள். ``சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார். ராக்கி, படிகளில் உரத்து சத்தமிட்டபடியேதான் இறங்கிப் போனாள். விவசாயம் பொய்த்துப்போய் கடன் தொல்லையால் தற்கொலை செய்து…
-
- 0 replies
- 2.5k views
-
-
சலனம்! - சிறுகதை கமலி பன்னீர்செல்வம், ஓவியம்: பிரேம் டாவின்ஸி மணி ஐந்தைத் தொட மூன்று நிமிடம் இருந்தது. கம்ப்யூட்டர் திரையைச் சுருக்கிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள் மேரி. மீண்டும் தன் இருக்கைக்கு வரவும், மணி ஐந்தாகவும் சரியாக இருந்தது. ``மணி அஞ்சாய்டுச்சுனா டான்னு கிளம்பிடுங்க” என்று சற்றே நக்கல் கலந்த தொனியில் மேனேஜர் கோவிந்தராஜ் சொல்ல, மேரி பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். கோப்புகளில் இல்லாத பிழைகளை அவர் பொறுப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். கோவிந்தராஜுக்கு வயது 63. பிள்ளைகள் இருவரும் மேற்படிப்புக்காக வெளியூரில் தங்கி இருக்க, மனைவி வேறு ஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். மனைவி வீடு திரு…
-
- 2 replies
- 2.5k views
-
-
கசங்கிய கடிதம் ஆடம்பரமான ஒரு சிறிய அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று மாலை போட்டபடி இருக்க, அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது. படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில் தேடுபவர் போலவும் தலைகுனிந்தபடி மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார். உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து, எமக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில்…
-
- 5 replies
- 2.5k views
-
-
ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ! ஓ! வழமைபோல இரண்டு நாள் வந்தான் பாவி, பிறகு இந்தத் திக்குத் திசையிலேயே ஆளைக் காணமென்று ஆளாளுக்கும் திட்டுகிறது கேட்குது. எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்? ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன். உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வ…
-
- 12 replies
- 2.5k views
-
-
முதலாளி முருகேசன் தன் மகன் கார்த்தியுடன் குடோனுக்கு ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார். மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவன் தன் ஆறு வயது மகனை அழைத்து வந்திருந்ததைப் பார்த்ததும் முருகேசன் டென்ஷன் ஆகிவிட்டார். ‘‘எதுக்குய்யா வேலை செய்யிற இடத்துக்கெல்லாம் பையனை கூட்டிட்டு வர்றே..?’’ என்று அந்தத் தொழிலாளியை அதட்டிவிட்டு அலுவலகம் திரும்பினார். அங்கே... மேனேஜர் அழைத்து வந்திருந்த அவருடைய ஆறு வயது மகன் அமர்ந்திருந்தான். புன்னகைத்தபடி அவனிடம் கொஞ்சிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார். கார்த்திக்கு கோபம். உயர் பதவியில் இருப்பவனுக்கு ஒரு சட்டம்... அடிமட்டத் தொழிலாளிக்கு ஒரு சட்டமா? இதை தந்தையிடம் நேரடியாகவே கேட்டான். ‘‘அது அப்படியில்லப்பா... ஒவ்வொருத்தனுக்கும் அவனுடைய அப்பா தெரிஞ்சோ, தெரியா…
-
- 0 replies
- 2.4k views
-
-
எனக்கு அப்போது ஏழு வயதிருக்கும். என்னவென்று சொல்லத்தெரியாத ஓர் கனமான, பீதி நிறைந்த அமைதிக்குள் மூழ்கிக்கிடந்தந்தது எனது தேசம். மேலே நீறு மூடிக்கிடந்தாலும் முழு வீச்சுடன் வெடித்தெரியத் தயாராகிக் கொண்ட்ருந்த விடுதலை வேட்கைத்தீயின் வெப்பம் அவ்வப்போது ஆங்காங்கே தலை காட்டி, உயிரின் ஆழம் வரை சிலிர்க்கச் செய்து விட்டு மறைந்தாலும், அதை இன்னதென்று கிரகித்துக் கொள்ளும் பரிபக்குவமோ அறிவாற்றலோ முதிர்ச்சி அடையாத வயது. ஆகவே தென்றலாகத்தன் வீசிக் கொண்டிருந்தது எனது பட்டாம் பூச்சிப் பருவம். அன்று பாடசாலை விடுமுறை நாள். வறுத்த அரிசிமாவுடன் தேங்காய்ப்பூவும் சேர்ந்து வேகும் வசனை, புதிதாய்ப்புலர்ந்த காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு உரம் கூட்டிக்கொண்டிருந்தது. அம்மா சுடவைத்துத் த…
-
- 16 replies
- 2.4k views
-
-
தேவதையின் கதை - சிறுகதை சிறுகதை: குமாரநந்தன், ஓவியங்கள்: ஸ்யாம் மாதம்மாள் ரக ரகமான அரிசிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, சந்தைகளுக்குப் போவாள். ஒவ்வொரு சந்தையிலும் பிரதான இடத்தில் அவள் கடை இருக்கும். மூட்டைகளை இறக்கி அடுக்கும்போதே வியாபாரம் ஆரம்பித்துவிடும். வேலைப்பாடு மிக்க வெள்ளிக்காப்பு அணிந்த கைகளால் படியில் அரிசியை அளக்க ஆரம்பித்தால், இரவு சந்தை கலையும் வரை ஓய்வே இருக்காது. காசுக்குக் கொண்டு வந்து தருகிறவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதிய நேரம் வண்டிக்கார முத்துவிடம் “சித்தநேரம் கடைய பாத்துக்குங்க, சாப்பிட்டு வந்துடறேன்” என, அதிகாலையில் ருக்மணி அம்மாள் ஆக்கித் தந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அதே களையுடன் வந்து கடையி…
-
- 0 replies
- 2.4k views
-
-
பெரிய அலையும் சிற்றலையும் பக்கத்தில் பக்கத்தில் பயணித்திருக்க, சிற்றலை அழுதுவடிந்தது கண்டு பேரலை கேட்டது. எதற்காக அழுகிறாய் என்று. சிற்றலை சொன்னது. பாருங்கள் நீங்கள் தாம் எத்தனை பெரியவர். உங்களை போன்றோர் என்மீது சாயும்போது என்போன்ற சிறியவர்கள் அழிந்து போகிறோம். எமக்கான வேதனை உமக்கெங்கே புரிய போகிறது என்றது. பேரலை சிரித்துக் கொண்டே சொன்னது. உன்னை நீ அறிந்து கொண்டாயாயின் இத்தகு பிரச்சினை எழவே வாய்ப்பில்லை. சிற்றலை கேட்டது “நான் அலையில்லையா பின் நான் என்ன ?? என்ன அறியவேண்டும் என்கிறீர்கள்” பேரலை சொன்னது ” அலை என்பது தற்காலிக வடிவம் தான். நீயும் நானும் நீரின் எழுச்சி. சீற்றம் அடங்கிடில் நீயும் நானும் ஒன்று தான். தண்ணீர். அப்புறம் எங்கே உயர்வு தாழ்வு வரும் ??…
-
- 10 replies
- 2.4k views
-
-
மூன்றாம் வகுப்பாக இருக்கலாம் தென்னை மட்டையில் பட் செய்து நெதர்லாந்தில் இருந்து வந்த உருளைக்கிழங்கு விதை பெட்டியில் ஒரு பகுதியை வெட்டி விக்கெட் ஆக்கி, வீட்டிற்கு முன் இருந்த ஒழுங்கையில் டென்னிஸ் பந்துடன் தொடங்கியது கிரிக்கெட் பைத்தியம் . பாடசாலை முடிய பின்னேரம் ,சனி ஞாயிறு காலை மாலை என விளையாட்டுத்தான் .எனது அண்ணர் ,தம்பி, அடுத்த விட்டுக்கார பகி ,சுதா என்று ஐந்து பேரும் தான் டீம் .மாறி மாறி பந்து எறிவதும் பாட்டிங் செய்வதும் என்று அலுக்காமல் விளையாடுவோம் .தம்பிக்கும் பக்கத்துக்கு விட்டு பகிக்கும் அவ்வளவு ஆர்வம் இல்லை இருந்தாலும் நாங்கள் கொடுக்கும் அலுப்பால் அவர்களும் வருவார்கள் .பக்கத்துக்கு வீட்டு சுதா மட்டும் இடக்கை ஆட்டக்காரன். விடுமுறை என்றால் காலை எட்டுமணிக்கே கதவை…
-
- 21 replies
- 2.4k views
-
-
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் குறுங்கதைகள். http://www.kaasi.info/pages/kathai.htm
-
- 3 replies
- 2.4k views
-
-
மன்னவா மாலை கொடு வேலை முடிந்து களைப்புடன் வீடு வந்து சேர்ந்த காயத்திரியை ஓடிவந்து கட்டிக்கொண்ட பிரியா “அம்மா நாங்க வெளியில போவமா?” என்று கேட்டகவும் தன் ஒரே மகள் பிரியாவை வாஞ்சையுடன் அணைத்தபடி “நான் குளித்து உடுப்பு மாத்திப் போட்டு வாறன் இருவருமாகக் கடைக்குப் போகலாம்” என்ற காயத்திரியின் பதிலில் திருப்திப் பட்டவளாக குதூகலமாக அறைக்குள் ஓடிய மகளை பெருமூச்சுடன் பார்த்தபடி ஒருநிமிடம் நின்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில வினாடிக்குள் அவள் மனதிலும் சில சலனங்கள். “என் பிரியாவை விட்டு நான் தூரமாகிவிடுவேனோ?” “சீ அப்படியெல்லாம் நடக்காது” இந்த ஜந்து வருடமாக பிரியாதான் என் வாழ்வில் ஒரேயொரு பற்றுக்கோடாக இருக்கிறாள். சிந்தனையுடன் குளியலறைக்குள் நுழைந்தவள் ஒரு பாட்டை முணும…
-
- 7 replies
- 2.4k views
-
-
எங்கே குட்டியண்ணா வன்னி மண்ணில் எந்தக் கவலைகளும் இன்றி எதிர்காலம் பற்றிஎந்தவொரு சிந்தனைகளுமற்று துள்ளித்திரிந்த சிறுமிதான் சியாமளா ... சியாமளாவிற்கு இன்று வயது ஒன்பது இன்று அவளது குடும்பத்தில் யுத்தம் தாயாரை பலியெடுத்துவிட தந்தையோ வேறு திருமணம்செய்து கொண்டு பிள்ளைகளை கைவிட்டு சென்றது மட்டுமல்ல அவளது மூத்தசகோதரனோ மண்ணிற்காக போராடிய குற்றத்திற்காக இன்று தடுப்பு முகாமில் வாடுகின்றான். இவளது அடுத்த அண்ணன்தான் குட்டியண்ணா. சியாமளாவிற்கு குடும்பத்தில் மிகவும் பிடித்தஒரு உறவு இரண்டாவது குட்டியண்ணாதான்.அப்பா அம்மா இல்லாத குறையை குட்டியண்ணாவே போக்கினான். குட்டியண்ணா பாடசாலைக்கு சென்றாலென்ன கோவிலுக்கு சென்றாலென்ன. விழையாடச்சென்றாலென்ன குட்டியண்ணாவின் கைகளைப்பிடித்…
-
- 8 replies
- 2.4k views
-
-
வால்வாயணம் - சிறுகதை தென்றல் சிவக்குமார் - ஓவியம்: ரமணன் “உங்க அபார்ட்மென்ட்ல சிசிடிவி இல்லையா?” “இருக்குப்பா... அது எதுக்கு இப்ப?” - திகிலுடன் நான். “சிம்பிள்டி... டேப்ஸ் எடுத்துப் பார்த்துட்டு அதை ப்ரூஃபா வெச்சு லோக்கல் போலீஸ், இல்லன்னா மகளிர் காவல் நிலையம், அதுவும் வேணாம்னா ஹ்யூமன் ரைட்ஸ் வரைக்கும்கூட காக்ரோச் பண்ண முடியும்...” ‘அப்ரோச்’ என்று அவள் சொன்னதுதான் குழப்பத்தின் ஏதோ ஒரு சுழற்சியில் எனக்கு ‘காக்ரோச்’ என்று கேட்டது என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சுதாரிப்பதற்குள், “நம்ம கீதாவோட தம்பி லாயர்தான்... நா வேணா பேசிப் பார்க்கவா...” என்று அடுத்த சுற்றைத் தொடங்கினாள். வேறு வழியே இல்லாமல் “செகண்ட் கால்ல வினோத் வராருப்பா... அப…
-
- 0 replies
- 2.4k views
-
-
கண்ணாடிப் பந்து - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம் “லைஃப்... நம்ம எல்லோருக்கும் மூணு பந்துகளைத் தந்திருக்கு. அதுல ரெண்டு... ரப்பர் பந்துகள். ஒண்ணு... கண்ணாடிப் பந்து. You know what all?” நான் உற்சாகமாகவும் கம்பீரமாகவும் மாதாந்தர பிராஞ்ச் மீட்டிங் நடத்தும் போதெல்லாம், பணியாளர்கள் ரொம்ப ஆர்வமாகப் பங்குபெறுவார்கள் அல்லது பங்குபெறச் செய்துவிடுவேன். நான் புத்தகங்களில் படித்த, அவதானித்த, என் பாஸிடமிருந்து கற்றுக்கொண்ட... என எல்லாவற்றையும் கலந்துகட்டி அவர்களுக்குச் சொல்லி, மோட்டிவேட் செய்வதில் கைதேர்ந்தவன் எனும் பெயர் பெற்றிருந்தேன். `அந்த மூன்று பந்துகள் என்னென்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்தினேன்... எனக்கு எ திரே அமர்ந்து என்னைப் பார்த்துக்…
-
- 0 replies
- 2.4k views
-
-
நான் தேடுகிறேன். தொலைந்தது கிடைத்தபின்னும் தொடர்ந்தும் தேடுகிறேன் பொருளை அல்லஅதன் அடையாளத்தை.. எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு நடுராத்திரியில் வீடு திரும்புகையில் என்னைக் கேளாமலே என் சைக்கிள் எங்கள் ஒழுங்கையில் திரும்பும். அந்த வீதியின் மேடு பள்ளங்களை என் சைக்கிளின் சக்கரங்கள் இருட்டிலும் விலத்தும். ஆனால் இன்…
-
- 12 replies
- 2.4k views
-
-
அக்கினிச் சிறகுகள் அன்று காலையிலேயே விழிப்பு ஏற்பட்ட மதுசாவிற்கு தலை பாரமாய்க் கனத்தது. நெற்றிப் பொட்டு விண்விண் என்று வலித்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் சற்றுக் கண்ணயரவும் அனுவின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது. குழந்தையை அள்ளி அணைத்து பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் கிடத்தியவள் கோப்பி ஒன்று சூடாகக் குடித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தாள். “கோப்பி குடிக்காட்டி என்ன செத்தா போயிருவன்” மனம் வெறுமையில் துடித்தது. குழந்தை அனுவைத் திரும்பிப் பார்த்த கண்கள் குளமாகியது. எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற மோகன் தினமும் வேலைக்குப் போய்விட்டு விடிந்ததும் வந்து கட்டிலில் விழுந…
-
- 9 replies
- 2.4k views
-
-
இலவம் பஞ்சு .......... நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன் ,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன் எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள் எல்லாராலும் விரும்பபட்டவள் .படிப்பிலும் கெட்டிக்காரி . ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவ…
-
- 14 replies
- 2.4k views
-
-
அந்த ஐந்தாம் வகுப்பு வரையும் மட்டுமே உள்ள அந்த கிறிஸ்தவ பாடசாலையின் பிரார்த்தனை மண்டபம் விளையாட்டு திடல் போல் காட்சியளித்து கொண்டிருக்கிறது.பொடி பெட்டையள் கீயோ மாயோ என்ற இரைச்சல் சத்தத்துடன் ஓடி ஆடி ஏதோ விளையாடி கொண்டு இருக்கின்றனர்.அந்த பெரிய நீண்ட பிரார்த்தனை மண்டபம் தான் வகுப்பறைகளாகவும் பிரார்த்தனை செய்யவும் விளையாடவும் உள்ள இடமாகவும் நேரத்துக்கு ஏற்றவாறும் தேவைக்கு ஏற்றவாறும் உருமாறிக்கொள்ளும்.ஆனால் அவன் மட்டும் தனித்தே இருக்கிறான்.விளையாடும் http://sinnakuddy.blogspot.com/2007/11/blog-post.html
-
- 7 replies
- 2.4k views
-
-
பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும்…
-
- 25 replies
- 2.4k views
-
-
உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள் by ம.நவீன் விமான நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கிய…
-
- 4 replies
- 2.4k views
-
-
எனக்கு ஏன் இந்த வாழக்கை என தன்னோட கடந்த கால பசுமையான நிகழ்வுகளை இலக்கியா ஜோசிக்க தொடங்கினாள் எனக்கு கிடைத்த மாதிரி குடும்பம் யாருக்கும் கிடைக்குமா?.. எல்லாருக்கும் குடும்பம் கிடைக்கும்… ஆனால் அழகிய சந்தோசமான குடும்பம் கிடக்குமா?.. பாசத்தை காட்ட அம்மா வாணி.. வாணிக்கு ஏற்ற பெயர் போல அவளும் அழகிலும் சரி அறிவிலும் சரி அம்மா கெட்டிகாரிதான்..இல்லை என்றால் எங்கள் குடும்பம் இவ்வளவு கஸ்ரத்திலையும் சந்தோசமாய் இருக்க முடியுமா.. கண்டிப்பையும் பாசத்தையும் ஒரு இடத்தில் பாக்கலாம் அதுதான் என் அப்பா தவம்.. ஆமாம் எனது அம்மம்மா தவம் செய்து எடுத்த பிள்ளைதான் என் அப்பா.. பாசத்திலும் சரி கண்டிபிலும் சரி அப்பாவை குறை சொல்ல முடியாது.. . அப்பா எங்களை கண்டிப்பார்.. பாவம் அம்…
-
- 8 replies
- 2.4k views
-