கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
டைகர் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்.................உலக புகழ் ஜம்மு பேபியின் மற்றுமொரு திரை காவியம் "மடல்கள்" கதாநாயர்களாக *அல்டிமேட் ஸ்டார் பிரசாந்தன் (புனைபெயர் :சிநேகன்) அவுஸ்ரெலியா *அறிமுக நாயகன் இளையதிலகம் சுரேஷ் கதாநாயகிகள் *அறிமுக நாயகி கவர்ச்சி கன்னி லக்சிகா (புனைபெயர் :தாமரை) இலங்கை *இளம்புயல் உமா இவர்களுடன் *மக்கள்திலகம் கந்தப்பு *சனதிரள் நடிகர் கலைஞன் *அழகுதாரகை நிலா வில்லன் நடிகர் தொடர்ந்து பல விருதுகளை பெற்று வரும் வலைஞன் அண்ணா........... இவர்களுடன் சூப்பர்ஸ்டார் ஜம்மு கதை,திரைகதை,வசனம் ,பாடல்கள்,இசை அமைத்து வெளியிடும் திரைகாவியம் "மடல்கள்" சுறுசுறுப்பாக நகரமே இயங்கி கொண்டிருகிறது …
-
- 31 replies
- 4.7k views
-
-
யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி அக்கா...! அவ்வப்போது தொலைந்து போகிறவன் இடையிடை இப்படித்தான் அழைப்பான். கிட்டத்தட்ட 3மாதங்கள் தொடர்பறுந்து போனவன் நேற்று மீண்டும் அழைத்திருந்தான். எங்கைசாமீ ஒளிச்சிருந்தனீங்கள்...? ஒரு எஸ்எம்எஸ் கூடப்போட நேரம் கிடைக்கேல்லயோ ? நாய்க்கென்ன வேலை அது ஓடிக்கொண்டுதானேயக்கா இருக்கும்.... அப்ப நாய் வாழ்க்கை இன்னும் முடியேல்லெயெண்றீங்களோ...? அதெங்கக்கா முடியுறது....? எவ்வளவோ துயரங்களையும் வலிகளையும் மனசுமுட்டச் சுமந்து கொண்டிருந்தாலும் தொடர்பில் வருகிற நேரங்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டவன் போல கதைக்க ஆரம்பித்துவிடுவான். வளமையான சுகநல விசாரிப்புகள்....குடும்பம் குழந்தைகளில் ஆர…
-
- 16 replies
- 2.7k views
-
-
வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு நடக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள். தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் …
-
- 3 replies
- 912 views
-
-
கோயில் பூசை முடிந்தவுடன் சந்நிதானத்தை ஒரு வலம் வந்து விட்டு நேரடியாக பிரசாதம் வழங்கும் இடத்திற்கு சென்று விட்டான் சுரேஷ்.இவன் அங்கு செல்லும் முன்னே பலர் முன் கூட்டியே வரிசையில் பிரசாதம் பெறுவதிற்காக நின்றதனால்,கடசியில் போய் நின்று கொண்டான்.ஒரு சில நிமிடங்களிள் பக்தர்கள் அதிகமாகவே சுரேசிற்கு பின்னாலும் வந்து சேர்ந்து விட்டார்கள். "அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார். ஆமை வேகத்தில் தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓமந்தையில் இருந்து ஒபாமா வரை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் கந்தர்.ஒமந்தையில…
-
- 13 replies
- 2.7k views
-
-
கலைமாமணி சிறுகதை: பாவண்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ஒரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான். `எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு...' என மனசுக்குள் முணுமுணுத்தபடியே அவன் பக்கமாகத் திரும்புவதற்குள், அவன் ஒரு குட்டிமுயலின் வேகத்தில் வேலிப்படலைத் தாண்டியிருந்தான். எதுவுமே புரியாமல் நோட்டை அப்படியே கவிழ்த்துவைத்துவிட்டு “இருடா ராமு, நானும் வரேன்டா...” என்றபடி அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினேன்…
-
- 0 replies
- 2.1k views
-
-
மார்ட்டினா -ப. தெய்வீகன் (1) கறுத்த எறும்புகள் மார்ட்டினாவின் கைகளில் ஏறுவதும் விழுவதுமாக சிநேகித்தபடியிருந்தன. மார்ட்டினா பூரித்திருந்தாள். கால்களை விரித்து தரையில் அமர்ந்தபடி, உள்ளங்கைககளில் கூட்டி அள்ளிய மண்ணை மெதுவாக வருடினாள். ஆதி நிலத்தின் அழியாத அழகை தினமும் பருகுவதில் அவளுக்குள் அப்படியொரு இன்பம். கதிர் வற்றிய வானத்திலிருந்து விழுந்த அந்தியின் வெளிச்சம், மரக்கிளைகளின் வழியாக தரையில் சிறு நிழல்களை வரைந்தது. குளிரோடு தலைகோதும் காற்றின் வாசனையை உணரும்போதெல்லாம் மார்ட்டினா வானத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தாள். தோழமையான அவளது புன்னகையில் இயற்கையின் மொழி அடர்ந்திருந்தது. அருவமான அவள் எழில் கலந்திருந்தது. முதியோர் இல்லத்தின் நான்காவது …
-
- 0 replies
- 730 views
-
-
சூப் கடை முதல் தாதா வரை ! | திண்டுக்கல் பாண்டி என்கவுண்டர் | திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து 'white collar' பாண்டியாக மாறினான். வீட்டுக்கே செல்லாமல் காரிலே சுற்றி தான் வாழ்க்கையை ஒட்டிகொன்டு இருந்தான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகளுடன் இணைந்து பல கொலைகளை செய்தான் . சென்னையில் பாண்டி உள்ளான் என தெரிந்துகொண்ட போலீஸின் குண்டுகளுக்கு இறையானான் பாண்டி .
-
- 0 replies
- 1.6k views
-
-
1. அவளைக் காணவில்லை என்று தெரிந்தபோது நான் பெரிதாக முதலில் எடுத்துக்கொள்ளவில்லை. வகுப்பு முடிந்தவுடன் வழமையாகச் சந்திக்கும் இடத்தில் அவள் இல்லாதபோது வேறெதனும் வேலையாகப் போயிருப்பாள் -தாமதமாக வரலாம்- என்று காத்துக்கொண்டிருக்கத் தொடங்கினேன். கோடை காலத்தில் இந்த வளாகத்தைச் சுற்றி ஓடும் நதியிற்கு அதிக வனப்பு வந்துவிடுகின்றது. படிக்கும் நாங்கள் பல்வேறு தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு திரிவதுபோல நதியும் கலகலப்பாகப் பலமொழிகளைப் பேசிக்கொண்டு நகர்வது போலப்பட்டது. இயற்கைச் சூழலை இரசிக்கத்தொடங்கியதில் நான் எதற்காய் இங்கு வந்து காத்துக்கொண்டிருக்கின்றேன் என்பதும் மறந்துபோய்விட்டது. ஒருக்காய் முறிகண்டிப்பக்கம் ப…
-
- 10 replies
- 2.9k views
-
-
ஆப்பிள் இ ப்போது பெய்கிற மழையை எதிர்பார்க்கவில்லை. வெயில் உச்சத்தைத் தொட்டுச் சரிந்த வேளையில் திறந்த வானின் மதகுகள் இன்னும் மூடாமல் பெய்கின்றன. ஊழிக்காலத்து உக்கிரம் இல்லை என்றாலும், நகரங்களில் பெய்கிற எந்தப் பெருமழையும் ஊழியை ஞாபகப்படுத்திவிடும். நகரத்தில் மழையை எதிர்பார்த்திருப்பவர் யார்? இருந்தாலும் பெய்து தொலைக்கிறது. உடை போட்டுக்கொண்டு தெருவில் நடமாட வாய்த்த ஜீவன்கள் அனைத்தும் நனைந்து, மழையின் துளிகளைச் சிறிதளவாவது உடையில் சேமித்துச் சென்றன. நனைந்ததால் கேசம் கற்றையாய் ஆகின. நாய்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்னா செய்தாரை...! மாலை சூரியன் தன் வனப்பில் வானம் முழுமையையும் ஆரஞ்சு வண்ணமயமாக்கியிருந்தான். ஆனால் வள்ளி அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. ஆற்றாமையில் அவள் மனம் குமைந்தது. “என்ன பிழைப்பிது, பொம்பளைங்கன்னா அவ்வளவு இளக்காரமாயிருக்குது இந்த ஆம்பளைங்களுக்கு. உடம்பே கூசுது... சை'' என்ற வள்ளி மனத்தில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சி படமாக ஓடியது. வள்ளி அந்த ஊரின் மிகப் பெரிய பனியன் கம்பெனியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து வருகிறாள். அன்று மாலையும் வழக்கம்போல் வேலை முடித்து ஸ்டாஃப்ஸ் அனைவரும் சென்றதும் மூன்றாவது மாடியைக் கூட்டும் பணியில் இருந்தாள் வள்ளி. அப்போது மேனேஜர் மூர்த்தி அதே ப்ளோரில் உள்ள அவன் அற…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஒரே ஒரு பாடல் ட்ராஃபிக் நெரிசல் பிதுங்கலிலிருந்து வெளிவந்து இடப்புறம் மரங்கள் சூழ்ந்த குறுக்குத் தெருவில் திரும்பி ரோஸ் அவென்யூவில் மனோகர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான் நந்து. வீட்டின் மாடியிலிருந்து மென்மையாய் ‘அனுராகினீ... இதா என் கரளில் விரிஞ்ஞ பூக்கள்...’ என்று ஸ்பீக்கரில் வழிந்த குரல் படிகளில் இறங்கி வந்து அவன் கையைப் பிடித்து இழுத்தது. அதனுடன் சேர்ந்து பாடும் மனோகரின் குரலும். சரிதான். மனோகர் இசை மயக்கத்தில் திளைத்திருக்கிறார் போலும் என்று கேட்டைத் திறந்து ஒரு மலர்ந்த புன்னகையுடன் படியேறினான் நந்து. மாடியை அடைந்து அவரின் வீட்டுக்குள் நுழைந்ததும் சற்றே ஆச்சரியமடைந்தான். நவீன் விஜயனும் அங்கு இருந்தார். அவரை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை அவன். “ந…
-
- 0 replies
- 790 views
-
-
கலைஞன் பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி ) அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப்புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்றுஅருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து கணைப்படுக்கை ( Hammock – கன்வேஸ் தூளி) ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடுவெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்குவெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல்முழுவதும் அவன் தூளி காலியாக இருந்தது. மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் நிலையத்தின் Gold-regen மரங்களோடு தொடரும்வடக்குப்…
-
- 0 replies
- 726 views
-
-
காதல் போயின் மோதல் இதோ நிஜ விந்தியா என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்.இதுவரை எத்தனையோ விந்தியாக்களைச் சந்திக்க நேர்ந்து விட்டது. ஆனால், இவள்தான் என்னுடைய விந்தியா. இன்னமும் அதே அதீத அழகு. கட்டியணைத்து அந்த ஸ்பாஞ்ஜ் கன்னங்களில் முத்தமிடத் துடித்தது மனம். பள்ளியில் துவங்கிய விந்தியா மீதான காதல் கல்லூரியைக் கடக்கிறபோது முடிந்து விட்டது. “ரவி, இது இன்ஃபாச்சுவேஷன். நிஜமான காதல் வாழ்க்கையில் நீ ஸ்திரமா உக்காந்திருக்கும்போது வரும். ஸ்கூல்ல படிக்கும்போது வர பாரதிராஜா காதலெல்லாம் ஜஸ்ட் சினிமாட்டிக். ஆத்தங்கரையைத் தாண்டறதுக்குள்ளே ஆறிப் போயிடும்...” காதல் உடைவதற்கு எவ்வளவு எளிமையான ஒரு காரணம். என் கண் முன்னே இன்னொரு ஆளுடன் சுற்றி - தாங்கிக் கொள்ள முடியவில்லை. …
-
- 0 replies
- 903 views
-
-
சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகள…
-
- 0 replies
- 1.4k views
-
-
"தாத்தாவும் பேரனும்" குழந்தைகள், சிறுவர்கள் எப்படியாவது தமது பாட்டனை கூப்பிட்டாலும், உதாரணமாக தாத்தா, அப்பப்பா, அம்மப்பா ஏதுவாகியினும், அவர்கள் என்றும் தம் பாட்டனை விரும்புகிறார்கள் என்பது நாம் கண்ட உண்மை. அது மட்டும் அல்ல, பாட்டன், பாட்டி அவர்களுக்கு ஒரு மகிழ்வான சிறப்பு உறவும் ஆகும். அவர்களுடன் எந்தநேரமும் விளையாட, அவர்களை அணைத்து கதைகள் சொல்ல, துயில வைக்க ... இப்படி அனைத்துக்கும் ஒருவராக இருப்பதுடன் பாட்டன் பாட்டி தான் குடும்பத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் மற்றும் தாய் மொழியில் அவர்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். ஏன் என்றால் இந்த அவசர கால உலகில் தாய் தந்தை மற்றும் இளைய உறவினர்கள் எல்லோரும் வீடு, வேலை, கடை , உடற்பயிற்சி கூடம் ... இப்படி ஒ…
-
- 1 reply
- 874 views
-
-
முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர், எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது…. வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார். அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை. அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை. அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார். அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது. ஆனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை. பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது. …
-
- 0 replies
- 822 views
-
-
உறவுகளிற்கு வணக்கம் இது என்னுடைய இன்னும் ஓர் சிறியமுயற்சி. ஈழத்தமிழ் கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பற்றிய விபரங்களை கணணிமுலம் ஆவணப்பதிவாக்குவதே என்னுடைய நோக்கமாகும்.என்னுடைய இந்த நோக்கத்திற்கும் வழைமை போல உறவுகள் அனைவரினதும் ஆதரவும் இருக்கும் என நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். ஏற்கனவே பிரான்சில் வாழும் திரு வண்ணை தெய்வம் அவர்கள் காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக்கலைஞர்கள் என்றொரு ஆவணத்தொகுப்பினை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவரது அனுமதியுடன் அவரது புத்தகத்தில் இருந்தும் நண்பர்கள் உதவியுடனும் மற்றும் எனக்கு தெரிந்ததையும் உங்கள் ஆதரவுடன் ஆவணமாக்குகின்றேன். நன்றி சாத்திரி. முதலாவதாக நாடகக்கலைஞர் திரு முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் முகத்தார…
-
- 9 replies
- 2.7k views
-
-
காய் மார்க்ஸ்... கவ் ஆர் யூ.. ஐ அம் பைன் டானியல்.. எப்படிப் போய்க்கிட்டு இருக்கு ஆராய்ச்சி. நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.. அணுக் கருச்சேர்க்கை தொழில்நுட்பம்.. நடைமுறை சாத்தியம் ஆகிட்டா.. ஆபத்தான அணுக் கருப்பிளவு தொழில்நுட்பத்தை உலகம் கைவிடலாம் இல்லையா. என்னுடைய ஆராய்ச்சி அதுக்கு கொஞ்சம் என்றாலும் உதவினா.. நிச்சயம் மகிழ்வன்..! அதுக்காததான் கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்கன். இதென்ன கையில.. சிலேட்டுக் கணணியோட..??! லைவ் அப்டேட் பார்த்திக்கிட்டு இருக்கேன் மார்க்ஸ்..! எங்க இருந்து வருகுது டானியல்.. கூடங்குளத்தில் இருந்து...! என்ன சொல்லுறீங்க அதைப் பற்றி... தமிழ்நாட்டை மிகப் பெரிய ஆபத்தில தள்ளிக்கிட்டிராங்க என்று நினைக்கிறன். ஏன் அ…
-
- 3 replies
- 949 views
-
-
அந்தக் கம்பீரம் மிக்க ஆண் சிங்கம் இப்படி மலை உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காதல் கணவனின் திடீர் இழப்பு பெண் சிங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது சில மாதங்களாகவே ஆண் சிங்கம் ஏதோ குழப்பத்தில் இருப்பதை பெண் சிங்கம் கவனிக்கத்தான் செய்தது. முன்பு போல் கனிவு இல்லை, சுகமான அணைப்பு இல்லை. எல்லாம் இயந்திரத் தனமாக இருந்தது. திடீர் திடீரென்று கடும் யோசனையில் சிங்கம் ஆழ்ந்திருக்கும். திடீர் திடீரென்று நாட் கணக்கில் காணாமலும் போய் விடும். முன்பு எல்லாம் இப்படி இல்லை. அங்கே வாழ்;ந்த சிங்கக் கூட்டத்திற்கே இந்த இரண்டு சிங்கங்களும்தான் காதலிற்கு முன்னுதாரணங்கள். மற்றைய சிங்கங்களிடம் இல்லாத ஒரு பிரத்தியேக வாசனை ஒன்றும் அந…
-
- 20 replies
- 5.6k views
-
-
மரணதண்டனை தீர்ப்பு ? சொல்லமறந்த கதைகள் – 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன. ஆனால் இந்தப்படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், அவசரகால சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டபோதிலும் பத்திரிகைகளில் பத…
-
- 2 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை: சுற்றுலா “மேகலா..! அருணுக்கு லீவு விட்டாச்சு.. அப்பாவுக்கு போன் பண்ணி நாம கிராமத்துக்கு வர்றோம்னு சொல் லிடவா..?” சம்பத் கேட்டார். “ஹையா..! வசந்த் அண்ணாவோட நல்லா விளையாடலாம்..” - என்று அருண் உற்சாகமாய் சொல்ல, மேகலா மட்டும் “யோசிப்போங்க..” என்று பட்டும் படாமல் பேசினாள். “இதுல யோசிக்க என்ன இருக்கு” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினார் சம்பத். கிராமத்தில் சம்பத்தின் வயதான அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள். அண்ணன், விவசாயத் தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் லீவுக்கு அருணை கூட்டிக்கொண்டு அங்…
-
- 1 reply
- 991 views
-
-
அவை ஊளையிடுகின்றன - கலைச்செல்வி ஓவியங்கள் : ரமணன் சுவரின் மறுபக்கம் அவை உறுமத் தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால், அந்த ஒலியே அவளை மருளவைத்தது. கைகள் இரண்டையும் மடித்து, உடலைக் குறுக்கிச் சுவரோரமாகப் பம்மிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்றுவிடலாம். ஆனால், அது வெகுசில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறிவிடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பதுபோலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்கும்போது, ஏதும் தட்டுப்படுவதில்லை. ஆனால், அதுகூட வெகுசில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படித்தானோ... சுவரோடு காதை நெருக்கிவைத்துக்கொண்டாள். இல்லை... அவை நடமாடுகின்றன. அவளைக் கண்காணிப்பதற்குத் தோதான இடத்தைத…
-
- 1 reply
- 2.3k views
-
-
"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர…
-
- 2 replies
- 987 views
-
-
"விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆனால் இன்னும் விடியல் கிடைக…
-
- 0 replies
- 400 views
-
-
ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்.. ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்…
-
- 31 replies
- 7.3k views
-