கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கதிரி எழுதியவர் மானிடப்பிரியன் "இப்பத்தான் வந்தனாங்கள். விசாவல்லோ தந்திற்றாங்கள். "அப்பா! இப்பதான் மனதுக்கு சந்தோசமாக இருக்கு. இதை எப்பவோ எடுத்திருக்கலாம். நீங்கள் பார்த்த வேலையால இவ்வளவு காலம்போச்சு. "அதுக்கு நாங்களென்ன செய்யிறது? அந்தாள் வெறியில பிறந்த திகதியை மாத்தி எழுதிப்போட்டுது. "அந்தாள் எழுதினால் உங்களுக்கு எங்க போச்சு? அறிவு திருப்பிக்கிருப்பிப் பார்க்கிறதில்லையே? ஏ. எல். படிச்ச அறிவாளி! "இதை எத்தனை தடவைகள் ரெலிபோனில சொல்லிப் பேசிப்போட்டியள்." அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள். என்ன செய்யிறது? நான் உங்களைப்போல அறிவாளியில்லைத்தான். எல்லாத்திற்கும் அம்மா சொன்னமாதிரி காலநேரம் வரவேண்டும். பாட்டி இஞ்ச ரெலிபோன் பில் …
-
- 5 replies
- 1.7k views
-
-
என்னை உங்களுக்கு ஆரெண்டு தெரியாது. நான் ஒரு சின்னப்பிள்ளை. தமிழ்ச் சின்னப்பிள்ளை.. தமிழ்ச் சின்னப்பிள்ளையெண்டதை நான் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கு. ஏனெண்டால் தமிழ் எண்ட படியாலைதான் நான் சாகப் போறனாம். ஆனா எனக்கு அது ஏனெண்டு விளங்கேல்லை. பள்ளிக்குடத்தில எனக்கு கணக்குப் பாடத்தை விட, விஞ்ஞான பாடத்தை விட தமிழ்ப் பாடம் நிறைய விருப்பம். இதனாலை ஏன் சாகப்போறன் எண்டும் இதுக்காக என்னை எதுக்கு அவையள் சாக்கொல்ல வேணும் எண்டும் எனக்கு விளங்கேல்லை. எனக்கு சாகிறதெண்டால் சரியான பயம். செத்தால் பேயா வந்து அலைவனாம். எனக்கு பேயெண்டாலும் சரியான பயம். ஆனால் அம்மா சொல்லுறா பேய்கள் தானாம் உந்தப் படங்களில இருக்கிற மாதிரி மனிசரை கொல்லுமாம். அதோடை அம்மா இன்னொண்டையும் …
-
- 5 replies
- 5.8k views
-
-
கதலியும் மாங்கனியும் மஞ்சள் பூசி, உடல் மினுக்கி, மாந்துணரில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மாங்கனியாள் மனதில் மட்டிட முடியாத மமதை! செக்கச் சிவந்த மேனி குறித்த செருக்கு! ஏனையோர் எல்லாம் எளியோர் என்ற எக்காளம்! வாய்க்கால் வழி ஓடிவரும் நீர் பருகி மதாளித்து வளர்ந்து நிற்கும் கதலி வாழைக் கனியாள்களுள் ஒருத்தி, அந்தக் கர்வம் பிடித்தவளிடம் ஒருநாள் கதைகொடுத்தாள். ‘முக்கனிக் குடும்பத்தின் மூத்தவளான உனக்கு, இவ்வளவு மூர்க்கம் ஏனக்கா?’ ‘முறைப்படி மணமாகி, மகரந்தச் சேர்க்கையால் தன் வயிற்றில் கருவாக்கி உருவாக்கி என்னைப் பெற்றெடுத்தாள், என் அன்னை. முறையான கருக்கட்டல் இன்றிக் கள்ளத் தனமாக உன் தாயால் பெற்றெடுக்கப்பட்ட கன்னிக் கனிகளடி நீங்கள். முறைதவறிப் பிறந்த உனக்கு எப்படியடி நான்…
-
- 5 replies
- 1.1k views
-
-
ருசி - சிறுகதை ஷங்கர்பாபு, ஓவியங்கள்: ஸ்யாம் “செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... அது உண்மையா?” என்றாள் மாலினி. இப்படிக் கேட்கும்போது அவள் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. வெட்கமோ தயக்கமோ கொண்டிருந்தாலும் அதைத் தப்பாகக் கருத இடமில்லை. காரணம், அவளுக்கு 43 வயது ஆகியிருந்தது; கல்யாணமாகிக் குழந்தைகளும் இருந்தன. மேலும் தமிழ்ப்பண்பாடு, தமிழ்ப்பெண்கள்... குறிப்பாக, செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று தடுத்துவைத்துள்ளது என்று பொதுவாக நம்பப்படுவதாலும், அச்சம், மடம், பயிர்ப்பு வகையறாக்களுக்குள்தான் அவள் புழங்கியாக வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாலும், அவள் வெட்கப்பட்டிருந்தால் அது சரியான காரணமாகவே கருதப்பட்டிருக்கும்.எல்லாவற்றையும்விட, கணவ…
-
- 5 replies
- 4.4k views
-
-
புத்தரின் மௌனம்: நெற்கொழுதாசன் ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் பிற்சேர்க்கை புளோமினில் அடுக்குமாடியொன்றில் வசித்துவந்த பங்களாதேசை சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்டமுறை பிரான்ஸ் போலீசாரை அதிர்ச்சிக்குளாக்கி இருந்தது. அவள் தோளிலிருந்து இடைப் பகுதிவரை கூரிய ஆயுதமொன்றால் பிளந்து குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தாள். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யபபட்டதாகவும் அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. 0 பல்பொருள் அங்காடியில் அவனைக் கண்டபோது விலகிச்சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் அவன் என்னை அடையாளம் கண்டுவிட்டிருந்தான். மிக நெருக்கமாக வந்து “நீங்கள் றஞ்சித்தானே?” எனக் கேட்டான். நான் அவனை அடையாளம் கண்டுகொள்ளாதவன் …
-
- 5 replies
- 1k views
-
-
மீண்டும் ஒரு தொலைபேசி மணி அடித்து நல்ல நித்திரையை குழப்பியது .கதைத்து கேட்கிறது .ஏதோ பதட்டம் .தெரிகிறது.. அவர்களின் வார்த்தைகளின் ஏற்ற இறக்கத்தில். சந்தோச செய்தியோ துக்க செய்தியோ .என்னவோ என்று ஏக்கம் என்னுள்.இப்படித்தான் ஒரு முறை நடு இராத்திரி தாண்டி ஒரு விடியலில் இலங்கைக்குள் கடல் புகுந்து விட்டதாம்.அது ஏதோ புதிதாக சுனாமியாம் என்னவாமோ என்று ....செய்தி வந்தது .அது போல இப்பவும் வெள்ளம் மழை காற்று புயல் சனம் என்ற சொற்கள் அங்கு அடுக்கப்பட ..என்னையும் மீறி என்னை அமிழ்த்தி வைத்திருக்கும் போர்வையை விலக்கிக் http://sinnakuddy.blogspot.com/2008/12/blog-post.html
-
- 5 replies
- 1.4k views
-
-
சிதறல்கள் சொற்களால் கட்டிய புஸ்பக விமானம் ----- கவிதை அகிலத்தை வாழ்த்தும் ஆனந்தக் கண்ணீர் ----- மழை மனதுக்குள் பூப்பூக்கும் நந்தவனம் -----அன்பு காதலுக்கும் கனவுக்கும் பிறப்பிடம் -----விழி கண்ணுக்குப் புலப்படாத காந்தர்வ சக்தி -----கடவுள் நாதியற்றுப்போன நம்மில் ஒருவன் ----- அநாதை கதியற்றுப் போன காற்றுப் பைகள் ----- அகதி இறையுணர்வால் உடலுணர்வை வென்றவர்கள் ----- துறவி உயிரின் வருகைக்காய் உண்டான பூகம்பம் ----- பிரசவம் அணைக்க அணைக்க அத்துமீறும் காட்டுத்தீ -----ஆசை பாதிநாள் நோயாளி மீதிநாள் சுகவாசி ----- நிலவு உணர்வுகளின் கனவுத் தொழிற்சாலை ----- நினைவு அவனாக அவளாக இப்போ அதுவாக ----- பிணம் உறவுகளை உடைத்துவிடும…
-
- 5 replies
- 1.6k views
-
-
சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்) வ.ஐ.ச.ஜெயபாலன் (நாவல் எழுதும் முயற்சிக்கு முன்னோடியாக செக்குமாடு மற்றும் சேவல்கூவிய நாட்கள் குறுநாவல்களை எழுதினேன். கணயாழியில் வெளிவந்தது. என் நாவல் முயற்ச்சியில் உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் ) ஏனோ எனக்கு உருப்படியாக சிறுகதைகள் எழுத வரவில்லை. பேனா எடுத்ததுமே எனது நீண்ட வாழ்வில் கண்ட கேட்ட கருதிய எல்லாமே முந்தி அடித்துக்கொண்டு தாளில் குதித்து விடுகின்றன. அவை ஒவ்வொன்றுமே நல்ல சிறுகதையாக வளரக்கூடிய வாழ்வின் பதியங்கள்தான். எனினும் அவற்றை ஒரு சிறுகதையாக வளைத்துப் போடுவது எனக்கு இன்னமும் கைவரவில்லை. சொல்ல வந்த கதை நல்லபடி ஆரம்பித்து, சிறுகதையின் எல்லைகளைத் தாண்டிப் பெருகி எங்கெங்கோ சென்று, பின்னர் எழு…
-
- 5 replies
- 3.3k views
-
-
[size=4]நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். [/size] [size=4]ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை![/size] [size=4]கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.[/size] [size=4]இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.[/size] [size=4]''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று …
-
- 5 replies
- 882 views
-
-
மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன். அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள். ""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.'' என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் வித்யா. ""அம்மாவும், அப்பாவுமாக இருந்தவரைக்கும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு தராமல் இரண்டு பேருமாக இருந்துட்டாங்க. இனி, அப்பாவின் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு அண்ணி. இனி, அவ…
-
- 5 replies
- 8.3k views
- 1 follower
-
-
அந்தக் கிழவனைக் காணவில்லை நாங்கள் இருக்கும் குடியிருப்பிற்கு சற்றுத் தொலைவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அது தன்னுடைய ரகசியங்களைப் பொத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒரு மாலை நேரச் சூரியனும் ஆறும். ஒரு கிறோந்தல் பட்சியும் ஆறும். ஆறும் கிழவனுமாக பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறா
-
- 5 replies
- 1.9k views
-
-
பல்ப் எரிஞ்சுதோ மணி அடிச்சிச்சோ கரப்பான் பூச்சி லொள்ளுப்பண்ணிச்சோ அந்தக்குண்டுப் பெடியன் பக்கோடா சாப்பிட்டானோ நான் யாரையும் மிஸ் பண்ணினனோ நிலாவைப் பார்க்க நிலாவில நிலாவும் சிபியும் வந்து "ஒரு களவாணிப்பயல நானும் காதல் செஞ்சேனே" என்னு ஆடிச்சினமோ... அடச்சா மொழி படம் பார்க்காத ஆக்கள் எனக்கு தலையில சுகமில்லை என்று முடிவு பண்ணியிருப்பினம் இப்ப. அட பெரிய விசயம் ஒன்றுமில்லை... நான் நேற்றுத்தான் மொழி படம் பார்த்தனான். படத்தைப் பற்றி நான் ஒன்றும் சொல்லேல்ல நீங்களே போய்ப் பார்த்துக்கொள்ளுங்கோ அதை ஆனால் அதைப் பார்த்ததால என்னுறவுகள் சிலருடைய ஞாபகம் தாலாட்டிக் கொண்டேயிருக்கு. கோபி அம்மான்ர தங்கச்சியின் மகன். எனக்கும் அவனுக்கும் சில வயதுகள்தான் வித்தியாசம். அவன…
-
- 5 replies
- 1.7k views
-
-
வாசித்ததில் பகிர விரும்பியது அரசியல் புத்தர்: த.அகிலன் (ஆனந்த விகடனுக்காக) புத்தர் ஒரு சுவாரஸ்யமான ஆள்தான். அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு, நைஸா பின் கதவு வழியா எஸ்கேப்பாகும்போது புத்தர் நினைச்சிருப்பார், 'இண்டையோட இந்த அரசியல் சனியனைத் துறக்கிறேன்' என்பதாய். ஆனால், விதி யாரைவிட்டது? புத்தர் அரசியலைவிட்டுப் பேரரசியலை உருவாக்கிவிட்டார். ஆனாலும் புத்தர் அறியார், அழகும் சாந்தமும் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக் கல்லாகச் சுருங்கிவிட்டதை. இன்றைக்குப் புத்தர் சிலை என்பது இலங்கையில் எல்லைக் கல். விகாரை என்பது காவல் கொட்டில். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கையாலாகாதவராக புத்தர் சிரித்துக்கொண்டு இருந்தாலும், நான் அவரைப் பெரிதும் வி…
-
- 5 replies
- 1.5k views
-
-
சரவணனிற்கு தவறுதலாய் தான் மண்டை உடைந்தது, இருந்தும் தான் தள்ளியதால் தான் உடைந்தது என்ற கவலை கலந்த பதட்டம் கலாவிற்குள். 999 ற்கு அடிக்கச் சென்றாள். "இஞ்ச கலா அதொன்டும் பெரிய காயம் இல்லை பேசாமல் விடும், இப்ப அவங்களுக்கு கடிச்சால் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பானுகள். அவனது பேச்சைக் கேட்கையில் தலைக்கேறின வெறி முற்றாய் முறிஞ்சிருக்க வேணும் என்ற எண்ணம் கலாவிற்குள் எழுந்தது. சரவணனின் பேச்சையும் மீறி 999 ற்கு அடித்து அம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வீட்டுச்சாவி மற்றும் ஏனைய முக்கிய பொருட்களை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வர போவதற்கு தயாரானாள். சரவணனின் தலையில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த வெள்ளைத்துணியினால் கட்டி தன்னால் முடிந்த முதலு…
-
- 5 replies
- 2.7k views
-
-
சுதர்சினி (சிறுகதை) – தமிழினி -மறைந்த தமிழினி அவர்கள் 2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை) மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம் விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ள…
-
- 5 replies
- 2.7k views
-
-
பிரம்மலோகத்தில் ஜுவராசிகள் நடிகர்கள் மணியம். எஸ். யேசுரட்ணம் பார்வதி. திருமதி ஆன் அன்ரனி பிரமதேவன். அப்புக்குட்டி ராஜகோபால் நாய் .பி.லோகதாஸ் வெளவால். ஆந்தையாக. திருமதி நவரட்ணராணி சிவலிங்கம் http://www.tamilnews24.com/twr/audio/Naada...iramalogam.smil http://eu-avalam.com/
-
- 5 replies
- 2.2k views
-
-
வாசகர்களுக்கு வணக்கங்கள் கதையும் சம்பவங்களும் முழுமையான கற்பனையே. நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் உண்மை சம்பவவங்கள் அல்ல. எங்கேயோ எதையோ முடிச்சு போட்டு வேறு விளக்கம் தேடவோ தவறான கற்பித முயற்சியோ வேண்டாம். ஏனெனில் இது கதை மட்டுமே. மெருகூட்டல் எனப்படும் சீர்படுத்துதல் முறை வரவேற்கப்படுகிறது . கதையின் போக்கு மற்றும் ஆலோசனைகள் எழுதினால் மிக்க மகிழ்ச்சி எவர் மனதெனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் . நீக்கி விடுகிறேன் . ஆனால் எந்த கருத்தையும் எவர் மீதேனும் திணிக்க இது கருத்துக்களம் அல்ல . கதைக்களம் உரைநடை மற்றும் கதையின் கோணம் முற்றிலும் மாறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது . ஏனெனில் இது தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்துமுறைகள் ( …
-
- 5 replies
- 1.8k views
-
-
http://tinyurl.com/7ra25wl ரஞ்சகுமார் -ஒரு முக்கிய எழுத்தாளர். அதிகம் எழுதியதில்லை. மேலேயுள்ளதுதான் நான் அறிந்த ஒரே தொகுப்பு. கதைகளைக் copy/paste செய்ய முடியவில்லை காரணம்: கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். ----------------------------- முழுக்க வாசிக்க நேரம் இல்லாவிடின் வாசிக்கவும் "கோசலை"
-
- 5 replies
- 1.9k views
-
-
நீக்கல்கள் – சாந்தன் அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் அதுவுங்கூட அரும்பொட்டு நேரம்… வீட்டிலிருந்தே ‘ஸ்பெஸிம’னை எடுத்துக் கொண்டு போக முடியாது. கொஞ்சம் முந்திப் பிந்தினால், இவ்வளவு பாடும் வீணாகி…
-
- 5 replies
- 3.6k views
-
-
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட் - ரிஷபன் கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள். டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் மூன்று பேர் அமர்கிற சீட்டில் கணவன், மனைவியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். "ஏம்ப்பா.. நீ இப்படி வந்தா.. பொம்பளைங்க நாங்க அங்கே ஒக்காருவோமுல்ல" கணவனுக்கு ஏழு மணி நேரப் பயணத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து அமரத் துளியும் மனசாகவில்லை. "வேற எடம் பாரு" என்றான் முறைப்பாக. "பஸ்ஸுல எடம் இருந்திச்சுன்னா.. நான் ஏன் ஒங்களைப் பிரிக்கப் போறேன்.. தயவு பண்னுப்பா..…
-
- 5 replies
- 7.3k views
-
-
(1) குப்பியைக் கடித்துவிடக் கூடாது என முன்னரே திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ சாகீரின் கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. சர்வ நிச்சயமாய் தன்னைக் குறிவைத்துக் கொத்தியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. ´´செத்து விட வேண்டும்´´. இடுப்பிலிருக்கும் குப்பியை எப்படிக் கடிப்பது ? வீடு கொடுத்தவர்களின் கதி என்னாயிற்றோ தெரியவில்லை. அவர்களையும் அள்ளியிருப்பார்கள். என்னைப் போலவே கைகளைப் பின்னால் முறித்து தலையைத் தேய்த்து… ´´எங்கு பிசகியதெனத் தெரியவில்லை. ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ? அருள் இடத்தைவிட்டு அகன்றிருப்பான் என்றே தோ…
-
- 5 replies
- 1.5k views
-
-
போனவாரம் அப்பாவிடம் தொலைபேசி அழைப்பு . "வாற சனி ஒரு முதியோர் நிகழ்வு இருக்கு நேரம் இருந்தா வா தம்பி " சனி வெளிக்கிட்டு போனேன் ,மண்டபம் நிரம்பிய சனம் .முக்கால்வாசி முதியோர்கள் .மிகுதி அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் .ராதிகா சிற்சபேசன் பிரதம விருந்தினர் ,அதைவிட வேறு சில அரசியல் பிரமுகர்கள் . பேச்சு ,நடனம் ,பாட்டு ,வில்லுபாட்டு ,நாடகம் என்று நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது .முதலில் சிற்றுண்டியும் தேநீரும் தந்தார்கள் .பின்னர் இரவு உணவும் பரிமாறினார்கள் .மிக சிறப்பாக முதியோர்கள் இந்த நிகழ்த்தியதை பார்க்க மிக சந்தோசமாக இருந்தது . அங்கு பேசியவர்களின் உரையை கேட்க எனது அப்பாவை பற்றியும் பெருமையாக இருந்தது . முதியவர்கள் தங்கள் பொழுதை கழிக்க mall இல் பின்னேரம் கூடும் போது அதன் …
-
- 5 replies
- 1.6k views
-
-
மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera) ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும் இடையில் மையமாக, விகாசமாகத் தொப்புள் தெரியுமாறு உடுத்தி இருந்ததைக் கவனித்தவாறே நடந்தான். அவனைப் பொறுத்த வரை, பெண்கள் மீதான கவர்ச்சியின் மையல் தொடை, மார்பு, பின்புறங்களிலிருந்து ஏகமாக விலகி, இந்த வட்ட வடிவ மையப் புள்ளியில் தேங்கி விட்டதைப் போல, அந்த காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, வசீகரிக்கப்பட்டு, சலனத்திற்கு உள்ளாகி இருந்தான். தொப்புளின் மீதான இந்த திடீர் மையல், பெண்மையின் கவர்ச்சி சார்ந்து புதி…
-
-
- 5 replies
- 972 views
-
-
இன்று நீங்கள் கேட்கப்போவது அளவெட்டியில் பிறந்த நான் மீண்டும் அளவெட்டிக்கு வந்த கதை. ஊடகங்களிலை உள்ள பிடிப்பிலை, நான் கேட்ட கேள்விகளாலை (சினிமா பற்றி மடியிலையிருந்துகொண்டு அம்மா, அப்பாட்டை நாடி தடவிக்கேட்ட கேள்விகள் இன்னொரு செட் இருக்குது அதை பின்னுக்கு இன்னொரு பந்தியிலை வடிவாச் சொல்லியிருக்கிறன்.) நிலைகுலைந்து போனவை எல்லாரும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்திச்சினம். பெடியன் ஊடகங்களிலையெல்லோ மூளையை விடுறான். பெடியன்ரை படிப்பெல்லோ கெட்டுக் குட்டிச்சுவராகப்போகுது. இங்கையிருந்தா பெடி குறுக்கை எங்கையாகிலும் போயிடும். யாழ்ப்பாணத்திலை கொண்டுபோய் விட்டாத்தான் சரியென்று முடிவெடுத்திச்சினம். யாழ்ப்பாணம் என்றால் படிப்பு, படிப்பென்றால் யாழ்ப்பாணம் என்றிருந்த பொற்காலமது. இலங்கையின் பல …
-
- 5 replies
- 610 views
-
-
இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் ம…
-
- 5 replies
- 907 views
-