கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சரவணன் மனசுல சுகந்தி சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, 'என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் காதலில் விழுந்திருந்தாலும், எப்படியோ சின்னச் சின்னக் காரணங்களால் அது தோல்வியில் முடிந்திருந்தது. 'ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்பதுபோல பிரகாஷ் என்ற நண்பன் மட்டும், தன் கல்லூரிக் காதலில் வெற்றி பெற்று, திருப்பூரில் மருந்துக் கடை ஒன்றில் மனைவியோடு நிற்கிறான். நான் சரவணன். ஊத்துக்குளிவாசி. ஊத்துக்குளி என்றால், உங்களுக்கு வெண்ணெய்தான் ஞாபகம் வரும். சில திரைப்படப் பாடலாசிரியர்கள் 'ஊத்துக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
உணர மறுத்த உண்மைகள் காலிங் பெல் ஓசை ஒலிக்க, உஷா சென்று கதவைத் திறக்க, முகத்தைச் சுளிக்க வேண்டிய சூழ்நிலை. எதிரே மாமி. இவள் எதற்கு வந்து தொலைத்தாள் இந்த வேளையில்? "வாங்க'' என்று சொல்வதற்குள் படாத பாடு பட்டுத் தொலைத்து விட்டாள். விருப்பமே இல்லாமல் சொல்வதென்றால் எப்படி? அந்த மாமி எங்கே வரவேற்பை எல்லாம் எதிர்பார்க்கின்றது. வந்து சோபாவில் அமர்ந்து விட்டது பட்டென்று. முகத்தில் என்னவோ வருடக் கணக்கில் பழகிய பாவம். "இதோ வரேன்'' என்று சொல்லி விட்டு வெடுக்கென்று சமையற் கட்டுக்குள் சென்று வேண்டுமென்றே நின்று கொண்டிருந்தவள் மனம் நடந்ததை அசை போடத் தொடங்கியது. பத்து நாள் முன்னால் நடந்ததுதான். பழைய காலக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவர்கள் அப்படிதான் / கோமகன் ( பிரான்ஸ் ) 1985 ஆம் வருடம் அதிகாலை இருபாலை சோம்பலுடன் விழித்துக்கொண்டிருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இருந்த அந்த முகாமும் சோம்பலுடன் இயங்கிக் கொண்டிருக்க உறுமலுடன் நுழைந்து கிரீச் என்ற ஒலியுடன் நின்றது இளம்பிறையன் வந்த டட்சன் பிக்கப். பிராந்தியப் பொறுப்பாளரின் தீடீர் வருகையால் முகாம் பொறுப்பாளன் சிவா உட்பட எல்லோருமே பரபரப்பானார்கள். அவர்களின் பரபரப்பை இளம்பிறையன் உள்ளர ரசித்தாலும் அதை வெளிக்காட்டாது விறைப்பாக முகாமின் உள்ளே நுழைந்தான். இளம்பிறையன் அந்த முகாமின் ஹோலில் இருந்த மேசையில் இருந்து முகாமின் தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்தான். அவனுக்காக தயாரித்த தேநீரை நடுக்கத்துடன் கொண்டு வைத்தான் ஒரு போராளி…
-
- 4 replies
- 1.4k views
-
-
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.) ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத த…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி. தற்போது துன்பத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் மகிழ்ச்சியான நாட்களையும் அவன் பார்த்திருக்கிறான். அவனின் பதினைந்தாவது வயதில் வார்வில்லி நெடுஞ்சாலையில் எதோ ஒரு வண்டி செய்த விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்தன. அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான், சாலைகளிலும், வயல்வெளிகளிலும் ஊர்ந்து சென்றான், கைகளுக்கிடையில் ஊன்று கோல்களுடன் நடப்பான், அவ்வாறு நடந்து நடந்து அவனது தோள்கள் காது வரை வந்துவிட்டன. அவனது தலை இரண்டு மலைகளுக்கு இடையில் சிக்கிய பாறைபோல் தெரிந்தது. சாக்கடை ஓரத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக அவன் இருந்த போது பாதிரியார் ஒருவரால் ஆல் செயின்ட்ஸ…
-
- 3 replies
- 1.3k views
-
-
இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன் by நெற்கொழுதாசன் “என்ர மனுசி ஐயர் ஆக்கள். நான் வெள்ளாளன். நாங்கள் உதெல்லாம் சாப்பிடுறதில்லை.”இயல்பாக சொல்லியபடி, நான் வெட்டிக்கொடுத்திருந்த மாட்டிறைச்சியை கிறிலில் சூடாகிக்கொண்டிருந்தான். அவன் கூறியதைக் கேட்டதும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குள் ஒரு சிறிய அதிர்வு எழுந்து அடங்கியது. என்ன இழவடா இது!, எங்கபோனாலும் முன்னால சனி போகுதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். நான், தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவனில் ஒருவிதமான அசாதாரண உடல்மொழி வெளிப்பட்டு அடங்கியது. உலகைமுடக்க…
-
- 3 replies
- 650 views
-
-
அப்பதான் டியூசன் முடித்து வெளியிலை வந்து கொண்டு இருந்தோம்... மாலை ஐந்து மணி ஆறு மணியில் இருந்து ஊரடங்கு நண்பர்கள் எல்லாரும் போகும் வழமையான பாதை... புறப்படும் போது எங்களை தாண்டி ஒரு ஜீப் வேகமாக போகிறது... மச்சான் ஆமியடா விலகி நில்லுங்கட எனும் நண்பனின் குரலுக்கு செவிசாய்த்து எல்லாரும் ஒதுங்கி நிக்கிறோம்.... அந்த மொட்டை ஜீப்பில் போவது எங்களுக்கு கொஞ்சம் பரீட்ச்சியமான முகம்... கப்ரன் ஆறுமுகம்... இந்திய இராணுவத்தின் நுணாவில் படை முகாமின் பொறுப்பதிகாரி... எங்களை திரும்பி பார்த்தது தெரிந்தது அதுக்குள் ஜீப் எங்களை தாண்டி போய் விட்டது... ஜீப்பின் பின்னால் நாங்கள் எங்களை தாண்டி கொஞ்ச தூரம்தான் ஜீப் போய் இருக்கும்... பெரியதாய் ஒரு வெடியோசை வீதியோரம் இருந்த மருத…
-
- 16 replies
- 2.2k views
-
-
அழகான மாடி கட்டிடம் அதை சூழ மாமரங்கள்,தென்னை மரங்கள் என்று ஒரே சோலை வனம் தான்.ரோஜா மலர்,அலரி மலர்கள் செவ்வரத்தம் மலர்கள் பல வித வண்ணங்களிள் பூத்து குலுங்கும் இதற்கு சொந்தகாரர் ஒரு வெள்ளைகார சாமியார் அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஜயரும் வசித்து வந்தார்கள். சுரேஷின் தந்தை அந்த ஊரில் வேலை மாற்றலாகி வந்தவுடன் அந்த மாடி வீட்டிற்கு அருகாமையில் வீடு வாடகைக்கு எடுத்து கொண்டார்.சுரேஷ் சிறு பையன் அப்பொழுது.வீட்டிற்கு குடிபெயர்ந்த அடுத்த நாள் மாடிவீட்டில் ஒரே மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டவனுக்கு அங்கு செல்ல வேண்டும் போல தோன்றவே பெற்றோருடன் அனுமதி பெற்று கூட்டத்துடன் கூட்டமா சென்றான்.வெளியே மதிய உணவிற்காக ஏழைகள் காத்து கொண்டிருந்தார்கள் உள்ளே உயர் குடி மக்கள் உணவருந்தி கொண்டிருந்தா…
-
- 14 replies
- 2.8k views
-
-
வாக்குறுதி : அகரன் ஓவியம்: செயற்கை நுண்ணறிவு 1 கனடா, யூகொன். மாயோன், மயூரன் என்னும் பெயரில் தனது இரண்டு வயதில் கனடாவில் உள்ள மொன்றியல் என்ற நகரத்தில் தன் கால்களை ஊன்றியவன். இப்போது தனது முப்பத்தி ஏழாவது வயதில் கனடாவின் மேற்கு பாகத்தில் அலாஸ்காவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் யூகொன் (yukon) என்ற மாநிலத்தில் அமெரிக்க-கனடிய விஞ்ஞானிகள் குழுவில் ஒருவனாக போராடுகிறான். தனக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வங்கிக்கு வருகிறது ? என்பது அவனுக்கு தெரியாது. அதைப்பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. ஆனால் உலகின் பல நாட்டு அதிபர்களை விட அவனுடைய மாத கொடுப்பனவை கனடிய அரசு உயரமாக கொடுப்பதில் கவனமாக இருக்கிறது. மாயோன் பூமிக்காக போராடுகிறான் என்பதுதான் அதற்குக்காரணம். ‘யூகொன்’ ஆண்டின் அதி…
-
- 1 reply
- 506 views
- 1 follower
-
-
எழுதியவர் உமா வரதராஜன் இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்ட ஒப்பனை கூடிய கல்யாணப் பெண்ணாக நடுவே கோயில். சூழ நின்ற விருட்சங்களுடன் நிலாக்காலத்தில் இனி என்றைக்குமே பேசாது என்பது போல நின்றது அது, கோயிலை வளைத்துக் கடை வீதி, கரிமண் கிளறிக் கிளறி நடைபோடும் ஜனங்கள். ஒவ்வொரு கடையிலும் தேனடையை மொய்க்கும் ஈக்களாகிக் குழுமி நிற்கும் ஜனங்கள். எறும்புகளாகி முட்டியும், மோதியும் விலகிப் போகும் ஜனங்கள். ஜனங்கள். ஜனங்கள். எதிர்வெயிலை வாங்கி தம் முகம் நோக்கித் துப்பியெறிகின்றன அலுமினியப் பாத்திரங்கள். மெல்லிய கைகளைப் பற்றி வளையல் அணிவிப்பதில் காலத்தைக் கரைக்கிறார்கள் காப்புக்கடைப் பையன்கள். இந்த உச்சக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர் கச்சான் கொட்டை விற்பவர்களும், கடலை வண்டிக்க…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
அது! "நீ வந்திட்டியா.. நான் சொன்னதை வாங்கி வந்திருக்கியா" என்று அதட்டலாக கேட்டான் மறுமுனையில் பேசிய ஆசாமி. "ம்.. ம்.." என்றேன். "இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும்டா" அவனது குரல் கொஞ்சம் கெஞ்சலாக மாறியது. "சரிடா.. அந்த ஆண்டவனுக்கே தெரியாம பாத்துக்கிறேன்" அப்படியே போனை கட் பண்ணினேன். ரகசிய விசயங்களை போனில் நிறைய கதைக்கக்கூடாது. எனக்கு போனில் வந்த ரகசிய உத்தரவின்படி பொருளை சின்னாவின் கடையில் ஒப்படைக்க வேண்டும். பொருளின் ஒரு பகுதி சின்னாவுக்கு, மற்றது எனக்கு உத்தரவு போட்டவனுக்கு. மந்திரிக்கப்பட்டவன் போல பொருளை நியூஸ் பேப்பரில் சுற்றினேன். ஏதோவொரு டீ-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு சைக்கிளை மிதித்தேன். அம்மா "கொழும்பிலேயிருந்து வந்ததும் வாராததுமா எங்கடா போறே. அ…
-
- 1 reply
- 805 views
-
-
நல்ல காலம் பிறக்குது 1:50 PM Posted by Siva Sri No Comment நல்ல காலம் பிறக்குது இந்தக் கிழமை கட்டாயம் பாரிசுக்கு போகவேண்டும் காரணம் என் சிறுவயது நண்பன் சிவாவின் அழைப்பு.கட்டாயம் நீ வரவேணும் டிக்கெட் போட்டு தரலாம் ஏனெண்டால் இண்டைக்கு நான் இந்தளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதுக்கு காரணம் நீ தாண்டா என்று தொடர்ந்து வற்புறுத்தியதால் மறுக்க முடியாமல் போவதாக முடிவெடுத்து விட்டேன்.எனது நகரத்தில் இருந்து பாரிசுக்கு அதி வேக ரயிலே ஆறு மணித்தியாலம் ஓடும் அதனால் விமானத்தில் போனால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் இரண்டு நிகழ்வும் அடுத்தடுத்த நாளில் வருவதால் போகலாம் என்று முடிவெடுத்து முதலாளியிடம் மென்முறயில் இரண்டு நாள் லீவு கேட்டதும் முகத்தை சுளித்து முடியாது என்றான்.எனவே அடுத்து வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அசோகன் மாமாவை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்று நீண்ட நேரமாக கீ போர்ட்டுக்கு முன்னால் இருந்து சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்,இப்படி அறிமுகப்படுத்துவது தான் மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்,"ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பம் ஆதர்சனமாக , முன்னோடியாக , வழிகாட்டியாக இருக்கும் அப்படி எங்களின் குடும்பத்துக்கு இருந்தவர்கள் தான் "நடராஜா" மாமா குடும்பம்,மாமா என்றால் எனக்கு மாமா அல்ல,எனது அப்பாவிற்கு மாமா,சரியாகச் சொன்னால் எனது அப்பம்மாவின் கூடப் பிறந்த தம்பி தான் நடராஜா,எங்களுடைய குடும்பம் நடராஜா மாமா குடும்பத்தை முன்னோடியாக , ரோல் மாடல் ஆக எடுத்து முன்னேறியவர்கள் என்பதில் எந்த விதமான மிகைப் படுத்தல்களும் இல்லை,நடராஜா மாமாவின் மூத்த மகன் தான் இந்தக் கதையின் …
-
- 12 replies
- 4.8k views
-
-
-
தாய்வாசம் - சிறுகதை யுவகிருஷ்ணா, ஓவியங்கள்: ம.செ., மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா... வன்மமாம், வன்மம்!'' - அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி. டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் 'எப்போதும் பெட் ரெஸ…
-
- 0 replies
- 2.7k views
-
-
மான்டேஜ் மனசு 17: மௌன ராகம் - காதலின் பேசாமொழி! அலுவலகத்தில் வழக்கமான பணி நிமித்தங்களுக்கிடையே நண்பர் சராவுடன் பேசிக்கொண்டிருந்ததில் சினிமா பற்றிய பேச்சு வளர்ந்தது. டாபிக்கல் சுவாரஸ்யங்கள் இருந்தாலும் மிஷ்கின், செல்வராகவன், மணிரத்னம் பற்றிப் பேசாமல் சினிமா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. 'மௌன ராகம்' வெளியாகி 30 வருடங்கள் ஆனதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தனக்குப் பிடித்த டாபிக் பற்றிப் பேசும்போது நீங்கள் சராவை உற்று கவனிக்கும் தேவை இருக்காது. ரொம்ப சாதாரணமாக ஒரு வித அலாதி ஆர்வத்துடன், எக்ஸைட்மென்ட்டுடன் சரா பேசுவது பிடித்தமானதாக இருக்கும். சமயங்களில் அவர் சுட்டிக்காட்டும்…
-
- 0 replies
- 2.4k views
-
-
மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு. இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் , மனிதநேயம்மிக்க மனிதன். 2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இ…
-
- 10 replies
- 1.2k views
-
-
அண்மையில் நண்பி ஒருவர் மானுஸ்ய புத்திரனின் சினேகிதிகளின் கணவர்களுடனான சினேகிதங்கள் என்றொரு கவிதையொன்றினை அனுப்பிவைத்து இப்படியான சம்பவங்கள் உங்களிற்கும் ஏற்பட்டிருக்கா என்று கேட்டிருந்தார்..எனக்குத்தான் சினேகிதிகள் அதிகமாயிருக்கே அவர்களிற்கு திருமணமான பின்னர் அவர்களினுடனானதும் அவர்களின் கணவர்களினுடனானதுமான என்னுடைய உறவில் நான் நெளிந்த.வழிந்த சம்பவங்கள் பல... எங்கள் சிறுவயது அல்லது பாடசாலை சினேகிதிகள் வயது வந்து திருமணமாகிப் போன பின்னர்..அவர்களுடன் எங்கள் உறவு முற்றாக அறுந்து போய்விடுகின்றது..அல்லது பெரும்பாலும் குறைந்து போய்விடுகின்றது.ஆனாலும் திருமணமான பின்னர் தொடர்பில் இருக்கின்ற சினேகிதிகளுடனான எங்கள் உறவு என்பது உண்மையிலேயே ஒரு கம்பியில் நடக்கிற வித்தை மாத…
-
- 43 replies
- 6.1k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் அறிவுரை “ரொம்ப கிட்ட உட்கார்ந்து டி.வி பார்க்காதேன்னு எத்தனை தடவை சொல்றது!” என மகனை அதட்டினார் செல்ஃபோனில் படம் பார்த்துக்கொண்டிருந்த அப்பா. - கோ.பகவான் அப்பாவி ``ஃபுல் பாட்டில் குடிக்கவேண்டிய கட்டாயம் என்ன வந்துச்சு?” என மனைவி கேட்க, ``பாட்டில் மூடி தொலைஞ்சுபோச்சு” என அப்பாவியாய் சொன்னான் அரவிந்த். - ஹேமலதா சம்பளம் பள்ளிக் கட்டணம் கட்டாததால் மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தார், மூன்று மாதங்களாகச் சம்பளம் கிடைக்காத அந்த ஆசிரியை. - தொண்டி முத்தூஸ். விமர்சனம் படம் பார்க்காமலேயே அடித்து உரித்து விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தார் பிரபல ஃபேஸ்புக் போராளி! -கே.மணிகண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
படிச்ச பொண்ணு! ஜன்னல் ஓரம் உட்கார்ந்து, தெருவை வெறித்து பார்த்தபடி இருந்தாள், நிர்மலா. பிரச்னையை பற்றி யோசித்ததில், மனம் வெறுமையானது தான் மிச்சம். ''ஏய் நிர்மலா... ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு போகலயா... நேரமாச்சு; அப்புறம், உன் மாமியார் கத்தப் போறாங்க...'' என்று அம்மா கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது. 'மாமியார் கத்தப் போறாங்களாம்... அவ கத்தாம இருந்தாத்தான் அதிசயம்...' என்று நினைத்துக் கொண்டாள். பெண்ணை பெத்தவங்க சம்பந்தியின் சத்தத்துக்கு பயப்பட்டுதான் ஆகணும் என்பது விதி. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத குடும்பமாக இருந்தாலும் எல்லாருக்கும் இது பொருந்தும். ஒரு கணம், அவளது மனதில், மாமியாரின் …
-
- 0 replies
- 834 views
-
-
நான் தேடுகிறேன். தொலைந்தது கிடைத்தபின்னும் தொடர்ந்தும் தேடுகிறேன் பொருளை அல்லஅதன் அடையாளத்தை.. எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு நடுராத்திரியில் வீடு திரும்புகையில் என்னைக் கேளாமலே என் சைக்கிள் எங்கள் ஒழுங்கையில் திரும்பும். அந்த வீதியின் மேடு பள்ளங்களை என் சைக்கிளின் சக்கரங்கள் இருட்டிலும் விலத்தும். ஆனால் இன்…
-
- 12 replies
- 2.4k views
-
-
-
நடந்தது நடந்துவிட்டது! ‘‘ச ரி... நடந்தது நடந்து போச்சு! இனிமே நடக்கறது நல்ல தாவே நடக்கும். நம்பிக்கை யோடு இரு. ஒண்ணு சொல்றேன், நல்லாக் கேட்டுக்கோ. எது ஒண்ணும் நிரந்தரமில்லே. வர்றப்ப யார் கூட வந்தே? நினைச்சுப் பார். நம்ம கூடவே யாரும் இருக்கப் போறதில்லே, கடைசி வரைக்கும்! அவங்க அவங்க காரியம் முடிஞ்சதும் புறப்பட்டுப் போயிட்டே இருக் கிறதுதான் உலக நியதி! கீதையிலே சொன்னாப்ல, ‘இருக்கிறது இல்லாமல் போவது கிடையாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
நந்தினி என்றொரு தேவதை ரிஷபன் ஞாயிறு காலை எட்டுமணிக்கு மீனாட்சி மெஸ்ஸில் எதுவும் கிடைக்காது என்று சின்னக் குழந்தைக் கூடத் தெரியும்.இருந்தாலும் சங்கர் மெஸ் வாசலில் வந்து நின்றான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தொங்குகிற வாசல் திரைச் சீலை பற்றாக்குறையாய் காற்றில் ஆடியது. "ஸா... ர்" வாய் 'ஸாரை' அழைத்தாலும் மனசு நந்தினிக்காக ஏங்கியது. "யா... ரு?" ஆண் குரல் கேட்டது. நடராஜன், நந்தினியின் அண்ணன்.மெஸ்ஸுக்குச் சொந்தக்காரன் .. "நான்தான்..." "நான்தான்னா யாரு... ஏய் நந்தினி.. போய்ப் பாருடி..." நடராஜனின் இரைச்சல் வாசலுக்குக் கேட்டது. "ஹாய்...!" கிசுகிசுப்பாய் கையாட்டினான். "என்ன...?" "இன்னிக்கு ஊருக்குப் போகலே. மீல்ஸ…
-
- 1 reply
- 1.3k views
-
-
"என் அன்பு மகளே" "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’யாமே," தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை. வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்…
-
- 0 replies
- 499 views
-