கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சிறுகதையா...........? தொடர்கதையா.......? கதவைத் திறப்பதற்கு முன்னரே சத்தம் வெளியாலே பெரிசாய்க் கேட்டது. ஞானமண்ணையின்ரை பெருத்த குரல் கோபக் கனலாய் வெடித்துப் சிதறிக் கொண்டிருந்தது. சந்திராக்கா ரெலிபோன் அடிச்சுக் கூப்பிட்டதால் தான் நான் இங்கே உடனே வந்தனான். வாடா வா... அப்ப சொல்லச் சொல்ல எல்லாத்தையும் பிழையெண்டு பேசுவாய்... இப்ப வந்து கேள்.... எல்லாம் எங்கே வந்து நிக்குதெண்டு. அண்ணை முதலிலே இந்தச் சத்தம் போடுறதை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ.. அக்கம் பக்கத்தவன் கேட்டிட்டு பொலிசுக்கு அடிச்சுச் சொல்லப் போறான். ஜயோ.... இப்ப எத்தனை தரம் சொல்லிப் போட்டன்... இந்த மனுசன் ஏதோ குடி முளுகிப் போனது போலே ஆர்ப்பாட்டம் செய்து உந்தத் துள்ளல் துள்ளிக் கொண்டிருக்கிறது. யேய்... சும்மா கதையாத…
-
- 0 replies
- 1.9k views
-
-
இல்வாழ்வு தந்த இயலாமை கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, "அம்மா அம்மா பிடியுங்கோ" என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. "இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?" "அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?" "ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி..."…
-
- 8 replies
- 1.9k views
-
-
சோதனைச்சாவடி - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: ஸ்யாம் கோடை வெயில், பெட்ரோல் விலையைப் போன்று விறுவிறுவென ஏறிக்கொண்டிருந்தது. வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் சிதம்பரத்தின் நடு உச்சிக்கு மேல் கொதித்துக்கொண்டிருந்தான் சூரியன். இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்த வயதான ஒரு புளியமரம், சிதம்பரத்தின் வலதுபுறம் ஒற்றைக் கிளையுடன் நின்றிருந்தது. அதன் வெக்கை, அங்கே மேலும் மேலும் உஷ்ணத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. தலைமைக் காவலர் இருவர், சாலையில் வரும் கார்களை நிறுத்தி அதன் டிக்கிகளைத் திறந்து காட்ட, தலையைச் சாய்த்து சாய்த்து உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு எரிச்சலாக இருந்தது. சவுக்குத்தோப்புபோல …
-
- 1 reply
- 1.9k views
-
-
சூரியன் மறையாத தேசம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட நாட்டுக்கு வந்து கொஞ்சகாலம் தான் ஆகிறது . இதற்க்கு முன்பு ஜரோப்பாவில் ஒரு நாட்டில் ஒரு குக் கிராமத்தில் நீண்ட காலம் நாட்களை கடத்தி துரத்தி ஏனோ தானோ வாழ்ந்து கொண்டிருந்தேன்.இந்த லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் நச்சரிப்பு காரணமாக ஆங்கில கால்வாயை கடந்து வந்த காலம் . அங்கை இடது இங்கை வலது கார்கள் ஓட்டும் முறை மட்டுமல்ல செல்லும் பாதை வழி முறைகளிலும்...பாதையை கடப்பது கூட மிகவும் கடின முயற்ச்சி எடுத்து தான் கடக்க வேண்டும். றோட்டில் எழுதி இருக்கும் வலது பக்கம் பார்த்து கடக்கவும் என்ற வாசகத்தை பார்த்து கடக்க வேண்டிய காலம். அந்த காலம் எப்பவென்றால் பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர். …
-
- 7 replies
- 1.9k views
-
-
ஆட்டம் - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: செந்தில் உள்ளங்கைகளைத் தேய்த்து கண்களுக்குக் காட்டி எழும்போதே தயாளனின் முகம் கண் முன் வந்தது. இதோ அதோ என நான் இழுத்தடித்துவிட்டாலும் இன்று எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டும் தயாளனிடம். பல் துலக்கிக்கொண்டே செடிகளைப் பார்த்தேன். இப்போது, இந்தப் புதுக்கிறுக்குப் பிடித்திருக்கிறது எனக்கு. ஏதோ ஒரு ஸ்பேம் கால் அது. எப்போதும் எடுப்பதில்லை என்றாலும், அன்று எடுத்ததன் விளைவு அந்த அழைப்புக்குரல் என்னைப் பேசவைத்து, என் கண் முன்னே மொட்டைமாடித் தோட்டத்தை விரியவைத்து, என் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் வரை ஓயவில்லை. ஒரு நல்ஞாயிறு காலையில் வேன் வந்து நின்றது வீட்டுவாசலில். தரையைச் சுத்தம் செய்துவிட்டு, பச்சை நிறத்தில்…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஓத்துழைக்க மறுக்கும் கணணியுடன் மல்லுக்கட்டியபடியே எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்கு ரெலிக்கொம்மை திட்டிக்கொண்டிருந்தேன் இணையத்தொடர்புக்கான வசதிகளில் அவர்கள் குளறுபடிகளுக்கு அவர்கள் இடம் கொடுத்திருந்தனர் அதுவும் வேலையை முடித்து வீடுதிரும்பும் நேரத்தில்! நேரம் அபாயக்கட்டத்தினை தாண்டியிருந்தாலும் அப்படியே விட்டு விட்டுப்போகமுடியாது. அலுவலகத்தில் இரவுப்பணியாளர்கள் போட்டுத்தாக்கி விடுவார்கள்! dOWNLOAD1 dOWNLOAD2
-
- 2 replies
- 1.9k views
-
-
“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி….” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… “சேர்” என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார்…
-
- 11 replies
- 1.9k views
-
-
அவனது மாசறாட்டி நிறுத்தப்படுவதற்கு முன்னரே ஓடிவந்து காத்து நின்ற வலே சாவிகளைப் பற்றிக்கொள்ள, மகசீன் ஒன்றின் அட்டைப் படத்தில் இருந்து விழுந்தவர்களாக அவனும் அவளும் அந்த ஆடம்பர உணவகத்துள் நுழைகிறார்கள். மேற்றடீ ஓடிவந்து அவனது பெயரைக்கூறி அதியுச்ச மரியாதையினை உடல்மொழியில் காட்டி வரவேற்று, அவளையும் குழைந்து, அவர்களது இருப்பிடம் அழைத்துச் செல்கின்றான். உணவகத்தில் அமர்ந்திருந்த அவனை ஒத்த தரத்தினர் உடல்மொழியில் அவன் தங்கள் தரத்தவன் என்பதை காட்டிக்கொள்கின்றனர். பலர் அவனின் தம்மை நோக்கிய பார்வையினைத் தமக்கான அங்கீகாரமாகக் கருதுவது வெளிப்படையாய்த் தெரிகிறது. அவனும் அவளும் அமர்ந்து கொள்கின்றனர். ஆர்மானி சூட்டின் பொத்தானைக் கழட்டியபின் ஒரு கையின் கவ்ளிங்ஸ்சை மறுகரத்தால் உறுட்டியபடி அவ…
-
- 24 replies
- 1.9k views
-
-
கற்படிகள் - சிறுகதை ஜி.கார்ல் மார்க்ஸ் - ஓவியங்கள்: ஸ்யாம் ராமமூர்த்தி அந்த வீட்டை நெருங்கி அதன் வெளிப்புற இரும்புக் கதவின் மீது கைவைத்து உள்ளே பார்த்தார். தாழ்வாரமும் கார் நிறுத்துமிடமும் ஆளரவமற்று இருந்தன. அது ஒரு தனித்த, அலுவலர்கள் குடியிருப்பாக இருந்தது. கதைவைப் பற்றியபடி சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றவர், பிறகு வலது கையை உள்ளே விட்டு கதவின் கொண்டியைச் சுழற்றினார். மெல்லிய உராய்வுடன் அது விலகியது. நடந்து உள்ளே போய், நிலைக்கதவை ஒட்டியிருந்த அழைப்புப் பொத்தானைத் தயக்கத்துடன் அழுத்தினார். அது அந்தச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் ட்ரிங்... எனும் பழைய தொலைபேசி ஒலியைப் போன்ற, நீண்ட நாராசமான சப்தத்தை உள்ளே எழுப்பியத…
-
- 0 replies
- 1.9k views
-
-
வெளியீடு – ஈழத்து இலக்கியச்சோலை,திருகோணமலை. தம்பலகாமம் பெற்றெடுத்த தவப்புதல்வன் க. வேலாயுதம் அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடான கவின் தமிழ் 2004 மலரினூடாகவே எனக்குக் கிடைத்தது. அந்த அற்புதமான கவிகளையும் ஆற்றல்படைத்த ஒரு இலக்கியவாதியையும் இன்றுவரை அறியாமல் இருந்த எனக்கு கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அண்ணனின் குறிப்புக்கள் அவரைப் பற்றியும், அவரது இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் அறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வரலாற்று ஆசிரியராகவும், கூத்துக்கலை விற்பன்னராகவும், நல்ல கவிவல்லோனாகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறிமுகமான தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் ~ரங்கநாயகியின் காதலன் என்ற குறுநாவல் என்னை ஒ…
-
- 6 replies
- 1.9k views
-
-
கொஞ்சம் அதிகம் இனிப்பு சிறுகதை :எஸ்.ராமகிருஷ்ணன்ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான். கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில் ஸ்டீபனைப் பார்த்தபோது, அருள்செல்வத்தைப் பற்றி அவன்தான் சொன்னான். பூந்தண்டலத்தில் மூன்றரை வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த நிலம். எப்படியாவது ஒரு பார்ட்டியைப் பிடித்து விற்றுக்கொடுத்தால், கமிஷன் மட்டும் இரண்டரை லட்சம் தருவதாக ஷெட்டி சொல்லியிருக்கிறான். அருள்செல்வத்தை எப்படியாவது பேசி மடக்கிவிட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ நபர்களை அழைத்துக்கொண்டு போய் இடத்தைக் காட்டி…
-
- 0 replies
- 1.9k views
-
-
இன்ஜினீயரம்மா!' ஒரு வைராக்கிய தாயின் வெற்றிக் கதை 'இந்தக் குடும்பத்தோட பாரத்தை முழுக்க நான் என் தலையில சுமக்கிறேன்’ - இது காலங்காலமாக நம்மூர் ஆண்கள் வாடிக்கையாக உச்சரிக்கும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 28 வருடங்களாக சித்தாளாக 'கல்லையும் மண்ணையும்’ தன் தலையில் சுமந்து, பிள்ளைகளை இன்ஜினீயராகவும், பார்மசிஸ்டாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் வைராக்கிய தாய் ஒருவர். சென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் 38 வயதான 'சித்தாள்’ ஜெயந்தி, தான் கடந்துவந்த முள்பாதையை தானே விவரித்தார். ''அஞ்சாவது படிக்கும்போதே படிப்பை ஏறக்கட்டிட்டு பாண்டு (சிமென்ட் சட்டி) தூக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு அப்பவே என் குடும்பம் கூ…
-
- 2 replies
- 1.9k views
-
-
"உச்சிதனை முகர்ந்தால்" என்கிற மயிலிறகால் மனதை வருடுகிற பெயரில் திரைப்படம். ஆனால் திரையரங்கைவிட்டு வெளியே வருகின்ற போது துக்கமும் வேதனையும் நெஞ்சை அடைக்கிறது. மனம் வெதும்பி இயலாமையை எண்ணி கண்களில் கண்ணீர் வழியத்தான் ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். கண்கூடாக பார்த்தேன். என்னைப் போன்ற பெண் பிள்ளையைப் பெற்றவர்களை இந்த திரைப்படம் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்காவது தூக்கத்தை கெடுத்துவிடும். கதை என்கிற பெயரில் கற்பனைகளை மட்டுமே கட்டவிழ்த்துவிட்டு 'காசு' பார்க்க துடிக்கிறவர்கள் மத்தியில்... மனிதநேய வரலாற்றிலேயே மறக்க முடியாத, மறைக்க முடியாத கொடுமைக்குள்ளான ஈழத்துச் சொந்தங்களின் துயர வரலாற்றில் ஒரு துளியை, அதுவும் உண்மையில் நடந்ததை எடுத்துக்கொண்டுள்ளார். அதையே குடும்பப்பாங்கோ…
-
- 3 replies
- 1.9k views
-
-
முகம் - போகன் சங்கர் நான் அவளை உணர்வதற்குள் மிக நெருங்கியிருந்தேன். சப்பாத்துப் பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு, மெதுவாய் ஓடும் தாமிரபரணியில் கால்களை அளைந்து கொண்டு நேராகப் பார்க்கையில், ஓரங்கள் கசிந்து தெரிந்தவள் பக்கப் பார்வையில் மிகப் பிரகாசமாகத் துலங்கினாள். தெருவில் அவ்வப்போது யாராவது எச்சரிப்பது உண்டுதான். “சார் ராத்திரியில அந்தியில சூச்சிச்சிப் போணும். அந்தப் பாலத்துலே ஒரு சூலி வாதை உண்டாக்கும்.’’ “சூலி வாதைன்னா?” “நிறைகர்ப்பத்துல செத்துப்போன பொண்ணு.” “செத்தா போனா? கொன்னு தாழ்த்தியது” என்பார் ஒருவர். “யார் கொன்னது?” “யாரு கொல்வா?அவளோட தந்தையோ உடம்பிறந்தானோ பர்த்தாவோ காமுகனோ அரசனோ...” “எப்போ ந…
-
- 1 reply
- 1.9k views
-
-
பாதுகை! — டொமினிக் ஜீவா. சிறப்புச் சிறுகதைகள் (24) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – டொமினிக் ஜீவா எழுதிய ‘பாதுகை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்தபோது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடதுகால் பாதத்தைத் தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித்தான், முத்து முகம்மது. வைரித்த கெட்டியான உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்பு வாதை கொண்ட நோயாளி யைப் போல, அவனைச் சுட்டிக்காட்டின. சே! சே! காலிலே ஒரு செருப்புக் கிடந்தால்? திரும்பித் தார் ரோட்டைப் பார்த்தான். புகைத்த பின்பு குறையாக வீதி…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம் எழுத்தாளர் ஜெயமோகனை தெரியாதவர்கள் நவீன இலக்கிய உலகில் இருக்க முடியாது. கணிசமான இலக்கிய வாசகர்கள் காலையில் எழுந்தவுடன் அவரது வலைதளம் சென்று படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஜெயமோகன் தனது முதல் நாவலான ‘ரப்பர்’ தொடங்கி விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம், கொற்றவை ஆகிய நாவல்களால் பரவலான வாசகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அவரது ‘அறம்’, ‘வெண்கடல்’ சிறுகதை தொகுதிகளும் இலக்கிய உலகில் நன்றாகப் பேசப்பட்டன. தற்போது, ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் மகாபாரதம் குறித்த தொடர் நாவல்களை எழுதி வருகிறார். ஜெயமோகன் இலக்கிய உலகில் மட்டுமல்ல; திரைப்பட உலகிலும் பரிச்சயமானவர். இயக்குநர் லோகிததாஸின் ‘கஸ்தூரிமான்’ தொடங்கி…
-
- 0 replies
- 1.9k views
-
-
செல்லமடி நீ எனக்கு யாரைத் தன் வாழ் நாளில் இனிச் சந்திக்கக் கூடாது என்று எண்ணி இருந்தாளோ யாருக்காகத் தன் ஊரையும் உறவுகளையும் தூக்கி எறிந்து விட்டு தனிமையை நாடி வந்தாளோ யாருடைய வாழ்க்கையில் சந்தோச சாரல் வீச வேண்டும் என்பதற்காக தன் மனதையே கல்லாக்கிக் கொண்டு ஒரு பிரமச்சாரி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாளோ இன்று அவனையே சந்திக்க வேண்டியதாயிற்று. ஏறத்தள ஒரு வருடம் அவள் போராடியதெல்லாம் அவனைப் பார்த்த அந்தக் கணத்திலேயே வீணாகிப் போயிற்று. சுதன் அவளை இந்நிலையில் எதிர் பார்க்கவில்லைத்தான்… அவள் தன்னை மறந்து வாழ்ந்தாலும் எங்கோ ஓர் மூலையில் நல்லபடியாய் வாழ்கிறாள் என்றுதான் என்ணியிருந்தான். அவள் தனக்குத் துரோகம் செய்திருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெ…
-
- 7 replies
- 1.9k views
-
-
தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுதில் தமிழய்யா அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். கைக்கிளை, பெருந்திணை, பசலை என்று எங்களுக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை அடிக்கடி அவர் உச்சரித்துக் கொண்டிருக்க, என் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் வாய் “ஆ”வென்று பிளந்து கிடந்தது. இரண்டு “ஈ”க்கள் அவன் வாய்க்குள் அடிக்கடி புகுந்து ஓட்டப் பந்தயம் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களை திறந்துகொண்டே தூங்க செந்திலிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். அடிக்கடி தலைவன், தலைவி என்றும் அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் கலைஞர் தான், தலைவி என்றால் அது புரட்சித்தலைவி மட்டுமே. அவர் சொன்ன தலைவன், தலைவி சங்க இலக்கியத்தில் வரு…
-
- 3 replies
- 1.9k views
-
-
2 ஆண்டுகளில் 9 கொலைகள்! விஷ ஊசி வழக்கு! தொடரும்
-
- 1 reply
- 1.9k views
-
-
ஒரு குடிகாரனும் மகளும்-நோர்வேஜியச் சிறுகதை- தமிழில்: ரூபன் சிவராஜா மகளுக்கு ஐந்து வயது. அவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டாள் அவள். ஒரு நாளையேனும் விட்டுவைக்காது தலைகால் புரியாமல் குடித்துக்கொண்டிருந்த அவனைச் சகித்துக்கொள்ள அவளால் முடிந்திருக்கவில்லை. சிவத்துப்பிதுங்கிய அவனது கண்களை பார்த்திருப்பது மனவுளைச்சலைக் கொடுத்தது. விவாகரத்து சுலபமாகக் கிடைத்துவிட்டது. அற்வக்கேற்றிடம் சென்றுவந்த அதேநாள், தனி அறையொன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறினான். பெற்றோரின் மணமுறிவுச் சம்பவம் பற்றிய விளக்கம் மகளைப் பெரிதாகச் சென்றடைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் சில நாட்கள் தகப்பனைப் பற்றி அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தாள். நாட்கள் போகப்போக அவன் பற்றிய…
-
- 1 reply
- 1.9k views
-
-
மூச்சிருக்கும் காலம் வரை“ அப்பா அப்பா” என்று அடிக்கடி என் அன்புச் செல்வங்களின் அழைப்பொலி என் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் புலன்களினூடே மெல்ல இழையோடி இதயத்தைப் பிசைந்து கொண்டிருந்தது. ஏன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி விழி மலர்த்தி ஒளி செலுத்த விருப்பம் இருந்தும் கண்முன் இனம் தெரியாத என்னவென்று கிரகிக்க முடியாத பல வர்ண ஒளிவட்டங்கள் விழுந்து மறைந்து கொண்டிருந்தன. ஏன்னைச் சுற்றி என் அன்புறவுகளின் அங்கலாய்ப்புகளை என்னால் உணரமுடிந்தும் என் இயக்கங்கள் செயல் இழந்ததால் செயல்பட முடியாமல் கைகளும் கால்களும் கட்டிப் போட்டதுபோல் கனத்துக் கிடந்தன. மெல்லத் தலையை அசைக்கின்றேன். “அம்மா இங்கை பாருங்கோ அப்பா அசைகிறேர். பால் கொஞ்சம் கொடுப்பமா?” என்று என் ஆசை மகள் ஆவலாய்க் கேட்பது கூட எ…
-
- 4 replies
- 1.9k views
-
-
பொன்னுலகம் சிவா கிருஷ்ணமூர்த்தி அட்மிரல் பார்க்கினுள் வரும் போதே கழுத்துக் கசகசத்தது. எதிர் சைக்கிள் காரரின் கண்களைத் தொட்டு பரஸ்பரம் தலையசைத்துக்கொண்ட பின் சீட்டின் முன் வந்து சற்றே ஏறி பெடலை மிதித்த போது வியர்வை ஒரு சொட்டு சைக்கிள் பாரில் மோதியது. புன்னகைத்துக்கொண்டேன். சைக்கிள் பாதையில் கவனமாகத் திரும்பி மேட்டில் ஏறி மிதிக்கும் போது அனிச்சையாக வானத்தைப் பார்த்தேன். ஒரு மேகத்துணுக்கு கூட இல்லை. எங்கும் எங்கெங்கும் நீலம். இன்று நிச்சயம் 28 டிகிரியாகவாது இருக்கும். இங்கிலாந்தின் வேனிர் காலமென்பது பெரும்பாலான நாட்களில் வெறும் வானிலை அறிக்கைத்தாளில்தான். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அல்லது அதிகப் பட்சம் மூன்று வாரங்கள் 28-32 டிகிரி இருக்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
அப்பிள்: க. கலாமோகன் ஓவியங்கள்: செல்வம் நான் ஒரு பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பலவகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு வாரத்தில் கடை மூடப்படுமெனவும் தீர்க்க தரிசனம் செய்தனர். எனது மனதோ தளரவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வாடிக்கையாளர்கள் பெருக்கெடுத்தனர். உண்மையிலேயே வாடிக்கையாளிகள் என்பதே சரி.. எனது மனதைத் தளரவைத்தவர்களும் மெல்லமெல்ல வாடிக்கையாளர்களாகினார்கள். ஏன் எனக்குள் இந்தத் திட்டம் ஏற்பட்டது என்பது இன்னும் விளங்கமுடியாமல் உள்ளது. நான் பிரபல அப்பிள் பிரியன் அல்லன். பழங்களின் வடிவங்களில் எனது மனதை ந…
-
- 0 replies
- 1.9k views
-
-
பத்துலட்சம் காலடிகள் - ஜெயமோகன் ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.” “ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி எடுத்த தூய்மையான நாட்டுச்சாராயத்தை அருந்தி ஆ…
-
- 1 reply
- 1.9k views
-
-
மணமகள் கிடைத்தாள் சந்தாலி ராஜ்யத்து மன்னருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தையே பிறக்கவில்லை. தனக்குப்பின் ஆட்சிப் பீடத்தில் அமர ஒரு மகன் வேண்டும் என்று மன்னர் மிகவும் ஆசைப்பட்டார். அந்த ஆசை நேடுங்காலமாக நிறைவேறாததைக் கண்டு, பட்டத்து ராணி மன்னரை மற்றொரு விவாகம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்த, மன்னரும் இன்னொரு பெண்ணை மணந்தார். அவளுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அதனால், மேலும் இரண்டு பெண்களையும் மணந்து கொண்டார். அதன் பின்னரும், குழந்தைகள் பிறக்கவில்லை. மன்னருக்கு வாரிசு தோன்றாமல் இருப்பதைக் கண்டு குடிமக்களும் வருத்தமடைந்தனர். ஒருநாள், அந்த ராஜ்யத்திற்கு ஒரு யோகி விஜயம் செய்தார். யோகியின் சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்ட முதன் மந்திரி அவரை அரண்மனைக்கு வரவழைத்த…
-
- 7 replies
- 1.9k views
-