கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பாடி திரிந்த் பறவைகள் ....................... அது ஒரு பாடசாலை பருவம் ...பல்கலை புகு முக வகுப்பின் இறுதி வருடம் . வழக்கமாக இளயோர் ஒன்று கூடல் (கெட் டு கெதர் ))நடைத்வார்கள் .. அருகிலிருக்கும் சகோதர பாடசாலையிலும் இருந்து 5 பேரை எடுப்பார்கள் அதன் படி நானும் போய இருந்தேன் . அதில் பெண்கள் சாரியிலும் ஆண்கள் ஆங்கில கலாசார உடை ( கோட் சூட் )யிலும் இருப்பார்கள் என்பது சொல்லி தெரிவதில் லை . உங்கழுக்கும் விளங்கும் தானே . அதில் ஒரு நிகழ்ச்சியில் பொதி மாருகை (பார்சல் பச்சிங் ) போது அதில் எழுதி இருப்பதை செய்து காட்ட வேண்டும். என் நண்பிக்கு "ஆண் என்றால் பெனுடனும் பெண் என்றால் ஆணுடனும் கை கோர்த்து வலம் வரவும் .............எல்லோரும் ஆச்சரியமாய் பார…
-
- 3 replies
- 1.9k views
-
-
என்னையே நானறியேன் பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. ‚ '' எரிமருள் வேங்கை கடவுள் காக்கும் குறுகார் களனியின் உடலத்தங்கன் ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி'' என்னும் நற்றுணைச் செய்யுள் ஒன்றில் துன்பம் மீதுறப் பெற்ற பெண்ணொருத்தித் தன் முலை அறுத்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
பேருந்துக்காக காத்திருந்த அழகான சிங்கள பெண்களின் வாசனைதிரவியம் அவனுக்கு கஸ்தூரியின் ஞாபகத்தை தான் கொடுத்தது. ம்ம்ம். கஸ்தூரியின் வருகையை எப்பவுமே காட்டி கொடுப்பது அவளின் வாசனை தான். அவளுக்கென்றே ஒரு வாசனை. அதை எங்கே நுகர்ந்தாலும் அவளின் ஞாபகம் தனக்குள்ளே வருவதை அவனால் தவிர்க்க முடிவதில்லை. கஸ்தூரி என்றே பெயரே அவளின் வாசனைக்காக தான் வைத்தார்களோ அவளின் பெற்றோர்கள். அவனின் காற்சட்டைபையினுள் இருந்த பணவுறையை எடுத்து அவளின் புகைப்படத்தை ஒருமுறை பார்த்து கொண்டான். அன்று அவளின் பிறந்தநாளன்று, அவனிடம் அவளின் புகைப்பட தொகுப்பை கொடுத்து எந்த படம் வேணும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன போது.. அவளின் அழகான படங்கள் இருக்க, அவன் எடுத்து கொ…
-
- 12 replies
- 1.9k views
-
-
நேற்று பார்க் ஒன்றின் அருகில் இருக்கும் மர நிழழின் கீழ் அமைதியாக படுத்து கண்கள் மூடிய போது.....கல்யாண வயசின் கற்பனைகளினூடு என் எதிர்கால உறவை நினைத்தபோது.....இதோ....நீங்களே பாருங்கள்.....என்ன தோன்றியது என்மனதில் என்று..... அவள்....... கண்கள் ஆயிரம் கவிதை சொல்லும்...... ஆனந்த கூத்தாடி மின்னும்....... புருவம் வேலை வெல்லும்..... புன்னகை என்மனதை கொல்லும்.... ஆறடிக் கூந்தல் தழுவ........ ஆசையில் விரல்கள் துடிக்கும்..... அவளை கொள்ளை கொள்ள என் உயிரே இன்று தகிக்க தினமும் அவளின் நினைவில்.... விடியும் எந்தன் நாட்கள்.... என் விடலை பருவ உணர்வை.... தீண்டி விட்டு இரசிக்கும்.... விழியாலே கொள்ளும் என்.... கிளியே...... உன்னை எந்தன் விழிக்குள்ளே மெதுவாய் …
-
- 8 replies
- 1.9k views
-
-
உயிர்த்துளியின் ஓரத்தில் கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட, புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது. கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன. மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு. எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய், எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம். அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன. பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும் என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன. அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறு…
-
- 5 replies
- 1.9k views
-
-
அன்புள்ள அப்பாவிற்கு, தேவா எழுதிக்கொள்வது... செல்வ சிரஞ்சீவி ராஜ ராஜஸ்ஸ்ரீ அருமை மகன் சுப்பையாவிற்கு என்றுதான் தாத்தா உங்களுக்கு எழுதும் கடிதங்களைத் தொடங்கி இருப்பார்கள். நீங்கள் தாத்தாவிற்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மரியாதைக்குரிய மகாகனம் பொருந்திய ராஜராஜஸ்ஸ்ரீ தகப்பனார் அவர்களுக்கு சுப்பையா எழுதிக் கொள்வது யாதெனில் என்று தொடங்குவீர்கள். என் வார்த்தைகள் அன்புள்ள அப்பா என்ற எட்டு எழுத்துகளுக்குள்ளும் நாம் தலைமுறைக் காதலை, அன்பை நேசத்தை தாங்கி வருவதாக நான் உங்களிடம் பல முறை கூறி இருக்கிறேன்...இப்போதும் அப்படித்தான்... நிற்க....!!!! நலமா அப்பா? நாங்கள் நலமாயிருக்க முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் இல்லாமல் எப்படி அப்பா நாங்கள் நலமாயிருக்க முடியும்? எ…
-
- 0 replies
- 1.9k views
-
-
நாம் வாழும் உலகுக்கு அடியில் வெகு ஆழத்தில் உள்ள இன்னொரு உலகம், குரூரத்தால், வலியால், சிறுமையால் எழுதப்பட்டது இது, மானுடம் என்ற மகத்தான சொல்லின் நிழல், ஒரு கோணத்தில் நமது நமது அனைத்து செயல்பாடுகளையும் மௌனமாக அடிக்கோடிடும் கருமை. சரளமும் நுட்பமும் கொண்ட மொழியில் நேரடியாகச் சொல்லப்படும் இந்நாவல் , நம் வாழ்வு குறித்தும் நம் பண்பாடு குறித்தும் மிக அந்தரங்கமாக நாம் எழுப்பிக்கொள்ளச் சாத்தியமான எல்லா வினாக்களையும் நைச்சியமாகத் தூண்டக்கூடியது. இதை படிக்கும் நாம் தான் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? என நிச்சயம் உணரவைக்கும். தப்பித் தவறி இந்த இழி நிலை நமக்கு வந்திருந்தால்? நம் உறவினருக்கோ, நண்பருக்கோ ஏற்பட்டிருந்தால்? ஐயகோ!!!! ஏழாம் உலகம்- ஜெயமோகன் த…
-
- 2 replies
- 1.9k views
-
-
[size=4]அவன் ஒரு அகதி.அவன் தற்போது வசிக்கும் நாட்டில் அவனுக்கு [/size] [size=4]எந்த உறவினரும் இல்லை.அவன் சமாதான காலத்தில் இந்த நாட்டுக்கு [/size] [size=4]பலத்த சிரமப்பட்டு வந்திருந்தான். அவனின் சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் [/size] [size=4]உள்ள கிராமம்.அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.அவன் ஜெயசுக்குறு [/size] [size=4]எதிர்ச் சமரில் வீரச்சாவு அடைந்தான்.தந்தை சிறுவயதில் இறந்துவிட தாய்தான் [/size] [size=4]இவனையும் அண்ணனனையும் சிரமப்பட்டு வளர்த்தாள். [/size] [size=4]தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு வன்னிக்கு இடப்பெயர்ந்து [/size] [size=4]மல்லாவியில் உள்ள உயிலங்குளத்தில் சிறு கொட்டில் போட்டு [/size] [size=4]வசித்தார்கள்.அவனது அண்ணனின் வித்துடல் ஆலங்குள துயுலுமில்லத்தில்[/size…
-
- 16 replies
- 1.9k views
-
-
குள்ளன் பினு - சிறுகதை சாம்ராஜ் - ஓவியங்கள்: ரமணன் 11 மணிக்கு அப்பன் உட்காரும் இடத்தில் வழக்கம்போல் பீடியையும் தீப்பெட்டியையும் வைத்த பினு, சோற்றை வடிக்க உள்ளே போனான். பினுவை நீங்கள் கோட்டயம் வீதியில் பார்த்திருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் அவனுடைய உடைகள் உங்களை ஈர்த்திருக்கும். கண்களை உறுத்தும் நிறத்தில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு காதில் ஹெட்போனுடன் சைக்கிளிலோ, ஆக்டிவாவிலோ செல்வதை; மீன் மார்க்கெட்டிலோ, கோழிச்சந்தை இறக்கத்திலோ திருனக்காரா அம்பலத்துக்கு அருகிலோ, மேமன் மாப்பிள்ளை சதுக்கத்திலோ பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி அவனை உங்களுக்கு மறக்காதிருப்பதற்கான காரணம் அவனது உயரம். வண்டியை நிறுத்தி, காலை ஊன்றுவதற்குத் த…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தக்கதை ஒரு போராளியால் 17.05.2011 அன்று எழுதப்பட்டது. 2009 முள்ளிவாய்க்கால் வரை வாழ்ந்து உயிர் போகிற கடைசித்துளியிலிருந்து உயிர் மீண்ட தோழன் இவன். ஆவன் செய்த அதிர்ஸ்டமோ என்னவோ இப்போ புலத்தில் உயிரோடிருக்கிறான். தனது சுய வாழ்வு அனுபவத்தை அப்படியே எழுத்தாக்கியிருந்தான். அதனைச் செப்பனிட்டு முழுமையாக்கி இங்கே தருகிறேன். இவனுக்கு இப்போது நான் சூட்டியிருக்கிற பெயர் வசந்தன். காலம் ஒருநாள் இவனை அடையாளம் சொல்லும் நிலமை வரும்போது சொந்தப் பெயரைச் சொல்கிறேன். இரும்பென நினைத்தவர்களுக்குள் இளையோடிய காதலும் களவாழ்வும் கடைசியில் இவன் நேசித்த காதலி காற்றோடு காற்றாய் முள்ளிவாய்க்காலில் கரைந்ததும் இவனை இன்றுவரை உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறது. நேசக்கரம் மூலம் அறிமுகமான …
-
- 14 replies
- 1.9k views
-
-
Proud To Be Tamil அப்போது(சேட்டிலைட் டிவி எல்லாம் வருவதற்கு முன்னாடின்னு வச்சுக்கோங்களேன்!!!!) எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுகள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்... என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவ…
-
- 2 replies
- 1.9k views
-
-
வசந்த கால கோலங்கள் ............. அந்த அமைதியான் கிராமத்தின் மைய பகுதியில் அமைந்து இருந்தது அந்த கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் ,எந்நேரமும் கல கலப்பாக இருக்கும் . ,காலை பொழுதினிலே ,பாடசாலை தொடங்கும் சமையத்தில் சிறு இறை வழிபாடுடன் ஆரம்பித்து அன்றைய காலை செய்தியுடன் ,அறிவித்தால் ஏதும் இருப்பின் அவற்றுடனும் .அதிபர் விடைபெறுவார் .உயர்வகுப்பில் தாவாரவியல் வகுப்புக்கு சில மாதங்களாக ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் வந்து போனார்கள். இந்நிலையில் அதிபரின் அன்றைய செய்தி ,தாவரவியல் படிக்கும் மாணவருக்கு எதிர்பார்ப்புடன் கூடிய இனிப்பாக இருந்தது. அவர் ஒரு பெண்மணி என்றும் ,அயலிலுள்ள நகரத்தில் இருந்து வருபவர் என்றும் அறிவிக்க பட்டது . மறு வாரம் திங்கள் கிழமை ,அவர் வந்தார் அ…
-
- 3 replies
- 1.9k views
-
-
தலைமுறை நிழல்கள் இளைய அப்துல்லா ஓவியங்கள் : ஸ்யாம் லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப் பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. 'மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்கக் கூடாதோ’ என்று நினைத்துக்கொண்டார். லண்டனின் தட்பவெப்பம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. காற்று அதிகமாக அடித்தால் தொண்டைக் கரகரப் பும்; மழை பெய்தால் தும்மலும்; குளிர் வந்தால் இழுப்பும்; வெயில் வந்தால் தலைவலியும் வந்துவிடு கிறது. மார்கழி மாதம்தான் ராமநாதன் லண்டனுக்கு வந்து இறங்கினார். வந்த கையோடு அவருக்கு வந்த முதல் பிரச்னை... இரண்டு கைகளிலும் தோல் உரிய ஆரம்பித்தது. பின்னர், உடம்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
அன்றுதான் அவளுக்காக காத்திருந்தேன் என்னவோ தெரியாது.எனது காரியாலத்தில் வேலை செய்யும் உயரதிகாரியான மோகன் அண்ணா வந்து புதிதாக ஒரு பெண் வேலைக்கு வருவதாகவும் இன்று அவளை நீங்கள் நம் ஊழியர்கள் வேலை செய்யும் இடங்களுக்கெல்லாம் ராஜன் நீங்கள் ஏத்தி செல்ல வேண்டும் என்று சொன்னார் நானும் சரியென தலையாட்டி அவள் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தேன். எங்கள் நிறுவனமோ காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது ஆனால் சுயமாக எந்த முடிவுகளூம் எடுக்கமுடியாது ஆனால் அரசாங்கத்திற்கு ஒரு வெளி நாட்டு நிறுவனம் கைக்கூலியாக செயற்பட்டு வந்தது அதில் நான் ஒரு சாரதியாக பணி புரிந்து கொண்டிருந்தேன் மட்டுநகரில். நானும் வாகனத்தில் அவள் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தேன் . காரியாலயத்தில் பெண் ஒன்று உள் நுழைவதை கண்டேன்…
-
- 15 replies
- 1.9k views
-
-
வசனம் யோ.கர்ணன் நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ரெலிபொன் அடிச்சுது. நித்திரை குழம்பின எரிச்சலோட, கண்ணை திறவாமலே தலைமாட்டில தடவி ரெலிபோனை எடுத்திட்டன். இப்பிடித்தான், அகாலங்களில ஊரிலயிருந்து அம்மா ரெலிபோன் எடுத்து, தம்பி சாப்பிட்டியோடா, தலைக்கு எண்ணை வைச்சு முழுகினனியோடா என்று கேட்டு கழுத்தறுப்பா. இப்பிடியேதோ கழுத்தறுப்புக்கேஸ் என்று நினைச்சுக் கொண்டுதான் காதுக்குள்ள வைச்சனனான். இது வேற கேஸ். நான் படுக்கையிலயிருந்து துள்ளியெழும்பினன். ரெலிபோன் கதைச்சது ரதி. அவள் என்ர மச்சாள். கதைச்சதை விட கூட நேரம் ஒப்பாரி வைச்சு அழுதாள். அழுகைக்கிடையில சொன்ன விசயம், அவளின்ர புருசனை இரவு ஒன்பது மணி போல ஆரோ கடத்திக் கொண்டு போயிற்றினமாம். எனக்கு தலைசுத்தத் தொடங்கீற்றுது. இப்ப கொஞ்ச…
-
- 10 replies
- 1.9k views
-
-
பிள்ள என்னால கால் மூட்டு வலியும்.. முதுகு வலியும் தாங்க முடியல்ல... உந்த லண்டன் குளிரிக்க.. வீட்டுக்கையே அடங்கிக் கிடக்கேலாது பிள்ள. அதுதான் வருத்தம் கூடுது போல. ஒரு ரிக்கெட்டப் போட்டு ஊருக்கு அனுப்பி விடன்... உனக்குப் புண்ணியமாப் போகும்.. பொறுங்கம்மா.. இப்ப தானே இங்க ஜிபி (GP) சொல்லி ஆஸ்பத்திரியில கொண்டு போய் காட்டி இருக்கிறீங்கள். அவங்களும்.. செக்கப்புக்கு டேட் தந்திருகிறாங்கள் தானே.. கொஞ்சம்.. பொறுங்கோவன்.. அதுக்குள்ள அவசரப்பட்டு ஊருக்குப் போய் அங்க தனிய நின்று என்ன செய்யப் போறியள்... பிள்ள அவங்கள் 3 மாசம் கழிச்சு தான் அப்பொயிண்ட்மெண்ட் டேட் தந்திருக்கிறார்கள். முந்தியும் உதைத் தானே செய்தவங்கள். குளுசையும் தந்து.. பிசியோ (physio) விட்டையும் போகச் சொன்னாங்கள்…
-
- 8 replies
- 1.9k views
-
-
கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான், ,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொ…
-
- 14 replies
- 1.9k views
-
-
நீங்கேனம்மா இயக்கமானீங்க ? அம்மோய்....எப்பம்மா உடுப்பு வாங்குவீங்க ? மூத்தவன் நச்சரித்துக் கொண்டிருந்தான். அம்மாட்டைக் காசில்லத்தம்பி....! கொஞ்சம் பொறய்யா அம்மாக்கு வேலைகிடைச்சதும் வாங்கித்தாறன்....! நீங்க பொய் சொல்றீங்க....சிணுங்கினான்;. இப்படித்தான் தீபாவழிக்கும் சொல்லிச் சமாளித்தாள். தீபாவழி போகட்டும் புதுவருசத்துக்கு என்ற வாக்குறுதியும் பொய்யாகி இன்று சின்னவனும் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கத்தியழுதாலும் காயம் ஆறாத வலியாகப் பிள்ளையின் கெஞ்சல் அவளைக் கொன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நேரச்சோற்றுக்கும் அந்தரிக்கிற அவலத்தை எப்படித்தான் புரிவிப்பதோ என்ற பெரிய துயர் அவளுக்கு. எல்லாம் உங்களாலையும் அம்மாவாலையும் தான்....! நீங்க மட்டுமேன் இயக…
-
- 9 replies
- 1.9k views
-
-
ஒரு மரண வீட்டிற்கான அறிகுறி எதுவும் அங்கே இருக்கவில்லை. ஊரே திரண்டு வந்திருந்தாலும்கூட அழுகையோ ஒப்பாரியோ வேறு ஆரவாரச் சத்தமோ இல்லாமல் ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதி உறைந்து போய் இருந்தது. இடையிடையே விசும்பி விசும்பி அழுகின்ற அம்மாவின் மெல்லிய அழுகையொலியைத் தவிர வேறு சத்தமே இல்லை. வீட்டின் பெரிய விறாந்தையில் உயரமான ஒரு வாங்கின் மேல் அக்கா கிடத்தப்பட்டிருந்தாள். கால்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்தபடி கைகளிரண்டையும் நீட்டிக்கொண்டு தலை இடதுபுறமாகச் சரிந்து போயிருக்க அக்கா கிடந்தாள். முழங்கால்களிலிருந்தும் முழங்கைகளிலிருந்தும் இரத்தம் வழிந்து காய்ந்து போயிருந்தது. உடல் முழுவதும் துப்பாக்கிச் சன்னங்களால் தசை கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கூந்தல் இரத…
-
- 6 replies
- 1.9k views
-
-
பாடைக்கம்புகள் இரண்டையும் எடுத்து வளம் பார்த்து கல்லின் மேல் வைத்துவிட்டு, தலைமாடு கால்மாடு என இரண்டு இரண்டு கம்புகளாக அளவு எடுத்து வெட்டி சணல்கயிறால் கட்டத்தொடங்குகிறேன். திடீரென பறைமேளச்சத்தம் உச்சத்தொனியில் ஒலிக்க, முகத்தைத் திருப்புகிறேன். கொஞ்சம் மங்கலாக தெளிவில்லாமல் உருவங்கள் தெரிகிறது. வாசலில் கட்டிய வாழைக்குட்டி மட்டும் இலையை அசைத்துக் கொண்டு நிற்பது தெளிவாக தெரிய, பாடைக்கு கட்ட நான்கு வாழைக் குட்டி வெட்டனும் என நினைத்தபடி கத்தியை எடுக்க கையை நீட்டுகிறேன். உடல் அசைவினால் கழுத்தில் இருந்து நீர்க் கோடு மெல்லிய வெப்பத்துடன் உருண்டு ஓடியது. உடலெங்கும் ஒருவித கசகசப்பாய் இருக்கவே கையால் கழுத்தை துடைத்துக் கொண்டே கண்களைத் திறந்தேன். பக்கத்து கட்டிலில் நண்பன் மூச்சின…
-
- 7 replies
- 1.9k views
-
-
அப்பாவைப் பார்க்கணும்! அருண் வயசு 27. சிவந்த நிறம். எடுப்பான மூக்கு. அழகான உருண்டை முகம். இன்றைய இளைய தலைமுறை இளைஞன். ஒரே ஒரு சின்ன விசயம் இடறல். இன்றைய இளைஞர்கள் விருப்பம் போல் கொஞ்சமாய் முடி உள்ள தாடி வைத்துக் கொள்ளப் பிடிக்காது. ஒரு நாள் விட்டு மறுநாள் முகச் சவரம் செய்து கொள்வான். மீசையும் அளவாய் அழகாய் இருக்கும். இவனைக் கடக்கும் எந்தப் பெண்ணும் ஓரக் கண்ணாலோ, அடிக்கண்ணாலோ பார்க்காமல் போகமாட்டார்கள். அந்த அளவிற்கு இவனுக்கு உடல்மொழி, முக வசீகரம், கண்கள் கவர்ச்சி. அம்மாவுடன் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மணி 10. 10 நேரம் வசதியாக அமைந்தது. அம்மா …
-
- 2 replies
- 1.9k views
-
-
தம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா. .அவனை அவசர படுத்தினார். இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங்கள் எங்கிருந்து தான் வாறங்களோ தெரியாது வந்து கொண்டிருக்கிறாங்கள்.அவருடையதை தொடங்க முன்னரே அவரே இப்பவே வேலை செய்து கடினமாக கஸ்டபடுவர் போல வார்த்தைகளை கொட்டி கொண்டிருப்பதை கேட்ட அவன் , கொஞ்சம் பொறண்ணை இந்த கியூவை கிளியர் பண்ணி போட்டு தாறன் அது உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. அவர் நடுத்தர வயதை கடந்தவர் . இதே வேலையை இங்கு கன காலமாக செய்யிறார் அதிலை ஒரு பிடிப்பில்லாமால் அவருக்கு மட்டுமல்ல அந்த மூலையில் கடந்த வார தமிழ் பேப்பரோடு மல்லாடி கொண்டிருக்கும் இவரின் நண்பர் சண்முகமும் அப்படித்தான் .அவர்கள் இரண்டு பேரும் என்ன …
-
- 11 replies
- 1.9k views
-
-
புத்துணர்ச்சி பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி அவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின. ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு …
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் க…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
வெளிச்சம் ஜாக்கிரதை திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு. நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை ஏதும் தோன்றவில்லை. அதன் பிறகு ஓர் இரவு கடிகாரத்தைப் பார்த்தேன்... மணி இரண்டு. அடுத்த இரவு எழுந்தேன்... மணி இரண்டு. அடுத்த இரவு, அடுத்த இரவு... என வாரக்கணக்கில், மாதக்கணக்கில் போய்க்கொண்டிருந்தது. எது காரணமாக இருக்கும்? சீக்கிரம் சாப்பிட்டுப் படுத்தேன். அப்போதும், இரண்டு மணி. தாமதமாகச் சாப்பிட்டுத் தூங்கப் போனேன். அப்போதும் இரண்டு மணிக்கு விழிப்பு வந்தது. என் படுக்கையை திசை மாற்றிப் போட்டேன். இரண்டு தலையணைகள் வைத்துப் பார்த்தேன். தலையணையே இல்லாது படுத்துப் பார…
-
- 0 replies
- 1.9k views
-