கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்கள…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
கறங்கு - சிறுகதை நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் இருந்து தேங்காய் நெற்றுக்கள் முற்றி, அடந்து கீழே தொப்பென ஒலி எழுப்பி வீழ்ந்தாலும், எவரும் சென்று பொறுக்குவதில்லை. சுடுகாட்டுப் பேய்களும் தென்னை நெற்றுக்கள் எனச் சுருண்டுக…
-
- 0 replies
- 1.7k views
-
-
வான்கா ஒன்பது வயதான வான்கா ழுகோவ் அல்யாகினின் செருப்புக் கடையில் வேலைசெய்கிறான், அந்த வேலைக்கு வந்து மூன்றுமாதமாகிவிட்டது.அது கிறிஸ்துமஸ் தினம்.முதலாளி,அவர் மனைவி,கடையின் மற்றவேலைக்காரர் கள் எல்லோரும் நள்ளிரவு வழிபாட்டிற்குப் போவதற்காகக் காத்திருந்தான். அவர்கள் போனபிறகு முதலாளியின் அலமாரியிலிருந்து மைபாட்டிலையும், துருப்பிடித்த முனையுடய பேனாவையும், கசங்கியிருந்த தாளையும் எடுத்துத் தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு எழுதஆரம்பித்தான்.தனது முதல்கடி தத்தை எழுதுவதற்கு முன்னால் கதவுகள்,ஜன்னல்கள் பரவியிருந்த ஷெல்பு கள் என்று சுற்றுமுற்றும் பயத்தோடு சில தடவைகள் பார்த்தான்.பெருமூச்சு விட்டான்.பெஞ்சில் அந்தத்தாள் இருக்க மண்டியிட்டு உட்கார்ந்தான். “அன்புள்ள தாத்தா,கான்ஸ்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இன்று (20.08.2016) லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழ்ந்தியினதும் சாந்தி நேசக்கரமினதும் நாவல்களும் விமர்சனத்துக்கு எடுக்க பட்டிருந்தது இதில் குறிப்பிடத்தக்க அம்சம் கனடாவிலிருந்து தமிழ்நதியும் ஜெர்மனியிலிருந்து சாந்தியும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள் தமிழக நாவல்கள், புலம் பெயர் எழுத்தாளர் நாவல்கள், பிற மொழி நாவல்கள் என்று அடிப்படையில் அமர்வுகள் நடைபெற்றன. சுசீந்திரன் ,நித்தியானந்தன் , யமுனா ராஜேந்திரன் மற்றும் சிலர் விமர்சர்களாகவும் இருந்தனர் https://www.youtube.com/watch?v=HrwwxgOLE http://sinnakuddy1.blogspot.co.uk/2016/08/blog-post_20.html
-
- 2 replies
- 1.7k views
-
-
மச்சான்! நீ வெளிநாடு போறதுக்காக நாட்டைவிட்டுப் போனாப்பிறகு... கொஞ்ச நாளில் உன்ர தொடர்பு எதுவுமே கிடைக்காமல் போயிட்டுது. பிறகு நானும் மலேசியா வந்திட்டன். அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு உனக்குத் தெரியாதுதானே..?!சொல்லுறன்" என்றவன் ஆவலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விமலிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெளிவாக விபரிக்கத் தொடங்கினான். அவன் சொல்லச் சொல்ல... நடந்த நிகழ்வுகள் அனைத்தும் விமலின் மனக்கண் முன்னால் காட்சிகளாக விரியத் தொடங்கின. 2007 செப்டெம்பர் 08 அவன் மலேசியாவிற்கு வந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. கட்டிலில் சாய்ந்திருந்தவனின் விரல்கள் அவனது செல்போனின் பட்டன்களை அழுத்திக்கொண்டிருந்தன. 'அஞ்சலி' என்ற அவனது செல்லத் தேவதையின் 20வத…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஏங்க.. “ஏங்க....” அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி கத்தாதேன்னு...” எரிந்து விழுந்தபடி வெட்டுப்பட்ட இடத்தில் ‘கலோன்’ தடவினேன். தீயாய் எரிந்தது. “சொல்லித் தொலை. எதுக்கு இப்படி ‘ஏங்க ஏங்க’ன்னு உயிரை எடுக்கறே?” “உங்க பொண்ணு என்னா சொல்றான்னு கேளுங்கன்னு கூப்பிட்டா இப்படி பைத்தியக்காரன் மாதிரி கத்தறீங்களே?” பதிலுக்கு இளவரசியும் சீறினாள். நேரடியாக சொல்ல மாட்டாள். கூடவே ஒரு ‘மாதிரி’யையும் இணைப்பாள். சொன்ன மாதிரியும் ஆச்சு. சொல்லாத மாதிரியும் ஆச்சு. அப்பாவும், அம்மாவும் மாறி மாறி கத்துவதைப் பார்த்து ஷாலு மிரண்டா…
-
- 2 replies
- 1.7k views
-
-
''வணக்கம் சார், வாங்க... வாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி. இதோ இப்ப முடிஞ்சிரும். அதுக்கு அப்புறமா ரூமைப் பார்க்கலாம். பத்து நிமிஷம் அப்படி ஃபேனுக்குக் கீழே காத்தாட உக்காருங்க. நல்ல வெயில்ல வந்திருக்கீங்க. வேர்த்து வேர்த்து ஊத்துதே' எனச் சொன்னவரின் முகத்தைப் பார்த்ததுமே தனக்கு இந்த இடம் உறுதியாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை, பாலகுருவின் மனதில் பிறந்தது. ஆனால், அவனுக்கு எப்படி அந்த எண்ணம் வந்தது எனத் தெரியவில்லை. ராஜாராமனுடைய குரல் அல்லது உடல்மொழி என ஏதோ ஒன்று அதை விதைத்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறு இடங்கள் மாறியதில் கசப்பான பல அனுபவங்கள் ஏற்பட்டுவிட்டன. அனைத்துமே எளிதில் மறக்க முடியாதவை. சில அற்பக் காரணங்களை முன்னிட்டு வீட்டுச் சொந்தக்காரர்களோடு உர…
-
- 0 replies
- 1.7k views
-
-
அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்.. கைகள் தறியில் லயித்திருந்தாலும், மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது! பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது! அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும், சொற்கள் இடம்மாறும்! கால்கள் தடுமாறும்!! பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று... கிட்டத்தட்ட 10 வருடங்கள்... 10 இன்பமயமான வருடங்கள்... அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...! இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை. அரசகுமாரி அவள்.. அரண்மனை தோட்ட…
-
- 4 replies
- 1.7k views
-
-
நகல் சிமாமண்டா என்கோஜி அடிச்சீ - தமிழில்: வடகரை ரவிச்சந்திரன்ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி என்கெம் அவளது கணவனின் காதலி பற்றி அறியும்போது, வரவேற்பறையின் தட்டுமாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெனின் முகமூடியின் துருத்திக்கொண்டு தெரிந்த கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘அவளுக்கு இளவயதுதான். இருபத்தி யொன்றுதான் இருக்கும்’ என்று தொலைபேசியில் இஜமமகா சொல்லிக் கொண்டிருந்தாள். “அவளது கேசம் குட்டையாகச் சுருண்டிருக்கும். கேசத்தைப் பதப்படுத்தும் தைலத்தைப் பயன்படுத்துவாள்போல. இளம்பெண்கள் இப்போது பதப்படுத்தும் தைலத்தையே அதிகம் விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். இதை உன்னிடம் சொல்லக்கூடாதுதான். நான் ஆண்களையும்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒரு நாட்டிலை ஒரு சின்ன கிராமம் இருந்திச்சாம். அந்த கிராமத்திலை ஒரு ஆச்சி இருந்தாவாம். அவாக்கு கருணை உள்ளமாம். ஆர் கஸ்டப்பட்டாலும் அவவாலை பாத்துக் கொண்டிருக்க ஏலாதாம். இப்படி இருக்கேக்கை பக்கத்து;க கிராமங்களிலை எல்லாம் சரியான வறுமை வந்திட்டாம். அதாலை அந்த ஊர் ஆக்கள் தாங்கள் வளத்த நாய்களை எல்லாம் கலைச்சு விட்டிட்டினாம். அந்த நாய்கள் எல்லாம் எங்கை போற எண்டு அந்தரிச்சுக் கொண்டு நிண்டுதுகளாம். இப்படி இருக்கேக்குள்ளை பக்கத்து ஊரிலை இருந்த அந்த ஆச்சி இப்படி அந்தரிச்சு அந்த ஊருக்கு வந்த நாய்களை எல்லாம் அரவணைச்சு தன்ரை தோட்டத்திலை வாழ விட்டாவாம். தானும் இந்த ஊருகளுக்கு போகேக்கை றோட்டிலை நாய்களைக் கண்டால் தூக்கிக் கொண்டு வந்து தன்ரை தோட்டத்திலை விடுவாவாம். அப்படி ஒரு…
-
- 16 replies
- 1.7k views
-
-
அப்படித்தான் 'அது' எனக்குக் கிடைத்தது! - புஷ்பா தங்கதுரை புஷ்பா தங்கதுரை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அப்படித்தான் 'அது' எனக்குக் கிடைத்தது! - கோவிண்ட்! என்றார் மேனேஜர். - யெஸ் சார்! என்றேன். …
-
- 1 reply
- 1.7k views
-
-
முதல் மனைவி - சுஜாதா சுஜாதா கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒரு நிமிடக் கதை- மனசு விவாகரத்து கிடைத்து விட்டது. நிர்மலா நீதிபதியை நன்றியோடு பார்த்தாள். நரேனின் முகம் வாடிப்போயிருந்தது. குமரன் மகளிடம் வந்தார். “இனி என்னம்மா பண்ணப் போறே?” என்று கேட்டார். “அப்பா!... என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. ஆண்டவன் இருக்கான்!” ஏனோ தெரியவில்லை. முதல் பார்வையிலே அவளுக்கு நரேனை பிடிக்காமல் போய்விட்டது. வீட்டில் சொல்லிப் பார்த்தாள். எடுபடவில்லை. அப்பா பிடிவாதமாக இருந்தார். கல்யாணத்தை முடித்தார். ஒட்டுதல் இல்லாமலே ஆரம்பித்த வாழ்க்கை. வெறுப்பைத்தான் தந்தது. அவள் மனசை தொடும் விதமாக நரேன் இல்லை. அதற்கு அவன் முயற்சி செய்யவும் இல்லை. வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பியவள் நிர்மலா. அது முடியாமல் போகவே விவாகரத்துக்கு அடிப…
-
- 1 reply
- 1.7k views
-
-
அம்மா நான் கோதை அல்ல அந்திவான் நாணச் சிவப்பேறப் புள்ளினங்கள் பாட்டிசைத்தன. கரைமோதும் அலைக்கரம் தன்னிருப்பைக் காட்டுவதற்காக இரைச்சலிட்டபடி நுரைத்துக் கொண்டிருந்தது. பந்தலில் படர்ந்த கொடியில் முல்லைகள் விரிவிற்காக விண்ணப்பம் எழுதின. தென்னங்கீற்றோடு மாருதம் சலசலத்துப் பேசி சமயத்தில் சண்டையும் போட்டது. ஒழுங்கையில் மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டுக்குக் கலைத்தபடி மணியம் நடந்தார். முற்றத்து விலாட் மாமரத்தில் ஓடித்தாவித் திட்டி விளையாடும் அணில்களை ரசித்துப் புன்னகைத்தாள் அந்தப் பதினாறு வயது நிரம்பிய பருவமகள். சின்னச் சின்ன மஞ்சள் பூக்கள் தூவிய கறுப்புநிற அரைப்பாவாடையும், மஞ்சள் மேலாடையும், சற்றே தளர்த்திப் பின்னலிட்ட இரட்டைச்சடையும் கோதையின் வனப்பை உச்சத்திற்கு ஏற்றின. …
-
- 2 replies
- 1.7k views
-
-
ஊருக்குப் போனேன்- பாகம் 3. வாளியில் முகர்ந்திருந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும் , இருளில் நின்ற பசுவில் எல்லை கெட்ட நேரத்தில் கறந்து காய்ச்சிய பால் கைக்கெட்டியது. அம்மாவின் கையால் சமைத்ததினால் அறுசுவைபெற்ற உணவை உண்டதும் ஆறுதல் உண்டாகியது. தூய இருளில் நட்சத்திரங்கள் கவிந்த வானம் முன்னைய நாட்களை முன் நிறுத்தி மாய வித்தை காட்டியது. மணிக்கணக்கில் சலிப்பின்றிப் பார்த்தவாறே நட்சத்திரங்களை விசாரம் செய்யும் இளமைக்காலப் பொழுதுகள் ஐரோப்பிய வெளிச்சம் நிறைந்த நகர இரவுகளில் காணக்கிடைப்பதில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செய்த பயணமல்ல இது, ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு நடத்திய பாய்ச்சல் என உள்மனம் கூறியது. ஒரு லாம்பின் உருண்ட கண்ணாடிச் சு…
-
- 4 replies
- 1.7k views
-
-
வெள்ளை நிற பள்ளிச் சீருடை சயந்தன் December 30, 2018 மிருதுவான கன்னத்தில் பிஞ்சு விரல்களைப் பொதித்தபடி நிச்சலனத் தூக்கத்திலிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொல்வதே காலத்திற்குச் செய்கின்ற நீதியாயிருக்குமென்று இளமாறனுக்குத் திடீரென்று தோன்றிற்று என்றெழுதிய கதைசொல்லி இக்கதைக்குப் பயன்படுமென்று கருதிய ஆவணங்களையும், கடிதங்களையும், கத்தரித்த செய்தித் துணுக்குகளையும் தொடர்ந்து வாசிக்கலானான். 1999.05.16 ஹொட்டஹேன பொலிஸ் நிலைய ஆய்வாளர் ஆரியரட்ணவினால் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் வைத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரதி. (வலது மூலையில் பச்சை நிறப் பேனாவால் “நல்ல பொலிஸ்காரன்” என்று எழுதப்பட்டிருந்தது.) …பெயர் அரங்…
-
- 0 replies
- 1.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் கடன் ``அக்கா, உன் புதுப் புடைவையைப் பத்து நிமிஷம் கடன் கொடுக்கா... புரொஃபைல் போட்டோ எடுத்துட்டு திருப்பிக் கொடுத்துடுறேன்'' என்றாள் தங்கை. - நந்தகுமார் மனசு 'என்னமோ.. தெரியல... ரிசார்ட்ல தங்கினா தேவலாம்ன்னு மனசு அடிச்சிக்குது' என்றார், ஆளுங்கட்சி எம்எல்ஏ. - வி.வெற்றிச்செல்வி தீர்ப்பு நண்பர்களின் சண்டையைச் சுமுகமாக்க ஐடியா கொடுத்தார் அப்பா, “பிரகாஷ் ஃபேஸ்புக் ஐ.டிக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுடா சுந்தர்!” - விகடபாரதி புரிதல் கையில் பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்ததும் ``அப்பா, குடிச்சுட்டு வந்திருக்கார்'' என்றது குழந்தை. - வேம்பார் மு.க.இப்ராஹிம் பேய…
-
- 0 replies
- 1.7k views
-
-
இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு.....! (குறிப்பு :- இவ்வாக்கம் சுயசரிதமில்லை. விடுதலைக்காக வாழ்ந்த ஒருவரின் நிலமையைப் புரிந்து கொள்ளாமல் கிடைக்கவிருந்த உதவியைத் தடுத்தாட்கொண்ட ஒரு குழுவின் போக்கினைப் பதியவும் , தனித்தே இயங்குகிற நேசக்கரம் அமைப்பினை எவரோ இயக்குவதாக பொய்யுரைக்கும் பொய்யர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கவுமே எழுதியுள்ளேன். ஸ்கைப்பிலும் தொலைபேசியிலும் சிலருக்குள் நடைபெறுகிற உரையாடல் பக்கசார்பற்ற உதவிகளையும் கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பொய்யான நம்பிக்கைகளையும் விதைத்துவிடுகிறது. ஆயிரம் வார்த்தைகள் பேசி பெரிய தலைகளின் விமர்சனத்தை வாங்குவதிலும் பார்க்க பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களின் வாழ்வுக்கு உதவிபுரிகிற மனிதநேயர்களும் உண்மையைப் புரிந்…
-
- 16 replies
- 1.7k views
-
-
பால்ய பொழுதொன்றில் - குலசிங்கம் வசீகரன் பருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன…
-
- 4 replies
- 1.7k views
-
-
மனித வாழ்வில் அழியாத சில நிகழ்வுகள் பொன் எழுதுக்களால் பொறிக்கப்படும். அந்த வகையில் சோபிதாவின் வாழ்கையில் ஏற்பட்ட திருப்பம் மிகவும் முக்கியமான் ஒன்று. .........சோபிதா அழகான சிறுமி . காலம் செய்த கோலம் ஐந்து வயதில் தந்தையை இழந்தவள் . மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன் ஐந்தாவதாக் வளர்ந்த கடைக்குட்டி .தாயின் சிறந்த செல்லம். தாய் இளமையில் மிகவும் கஷ்டபட்டு இவர்களை வளர்த்தாள். இருந்தும் அந்த இன்பம் நீடிக்க வில்லை. சில வருடங்களில் தாய் குணமாக்க முடியாத நோயில் இறந்து விட்டாள் . கால மாற்றத்தில் எல்லா பெண் சகோதரிகளும் திருமணம் முடித்து தம் கணவருடன் சென்று விடவே இவள் பனிரெண்டு வயதில் ...விடுதிக்கு அனுப்ப பட்டாள் . சில காலம் தாபரிப்பு பணம் கட்டினார்கள் பின்பு அவர்களுக்கும் கஷ…
-
- 14 replies
- 1.7k views
-
-
வணக்கம் அன்பின் கதாசிரியர்களிற்கான அன்பான வேண்டுகோள். உங்கள் ஆக்கங்களை உங்கள் உரிமையுடன் வானலை வழியாக இசையும் கதையுமாக ஒலிபரப்ப எண்ணியுள்ளேன் . அதற்கு தங்கள் ஓத்துழைப்பு மிகமகி அவசியம். இதுவரை எழுதிய கதைகளை உங்கள் பெயர்களுடன் எனக்கு ஈமெயில் செய்யலாம். கதைக்கு உகந்த பாடல்களையும் உங்கள் விருப்பிற்கேற்ப தெரிவுசெய்து அனுப்பலாம். நிகழ்ச்சி மாதத்தில் இரு தடவைகள் எண்ணியுள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட நேரம் 30 நிமிடங்கள் மாத்திரமே என்பதையும் அறியத்தருகின்றேன். எனது ஈமெயில் nparaneetharan@gmail.com இப்படிக்கு நட்புடன் உங்கள் பதிலை ஆக்கங்களுடன் விரைவில் எதிர்பார்த்து பரணீதரன்
-
- 10 replies
- 1.7k views
-
-
மேப்படியான் புழங்கும் சாலை - சிறுகதை சிறுகதை: ஏக்நாத் - ஓவியங்கள்: ஸ்யாம் கம்பிக்கூண்டு இருக்கும் லாரி, தெருவுக்குள் இருந்து ஆடி ஆடி வந்து ஆழ்வார்க்குறிச்சி செல்லும் சாலையில் வளைந்து நின்றது. லாரியின் பின்னால் வந்த வன அதிகாரியின் ஜீப், இப்போது ஓரமாக ஏறி முன்பக்கம் வந்து நின்றது. ஜீப்பில் இருந்த பெண் அதிகாரி இறங்கி, லாரியைச் சுற்றிப் பார்த்தார். டிரைவரிடம், ``எல்லாம் சரியா இருக்குல்லா?’’ என்று கேட்டார். அவன் தலையை ஆட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில், முன்னால் நின்ற தொரட்டுவிடம் கையைக் காட்டிவிட்டு ஜீப்பில் ஏறிக்கொண்டார். ஊர்க்காரர்கள், எக்கி எக்கி லாரிக்குள் இருக்கும் கூண்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அது தெரிய…
-
- 0 replies
- 1.7k views
-
-
உமிக்கருக்கு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம் வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை எழுந்தது. வணங்காமுடிக்குப் புகை மூக்கில் ஏறி இருமல் வந்தது. புகையால் அவனது கண்களில் நீர் கசிந்தது. அவனுக்கு இந்த வேலை புதிது. வணங்காமுடியின் பட்டறை ஓனர் சானாகூணா, தாமரை டாலரின் கல் துவாரங்களை ராவுவதில் மும்முரமாக இருந்தார். பட்டறையின் வாசலைத் தாண்டி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கொக்கு பரமசிவமும், அடுத்ததாக பூனைக் கண்ணும் அமர்ந்திருந்தார்கள். தேவாரம் தாத்தா கட…
-
- 0 replies
- 1.7k views
-
-
அன்றைய காலைப்பொழுது அவளுக்கு அதிகாலை நான்கு மணிக்கே விடிந்து விட்டது இடியப்பம் அவிக்க நேரம் ஆகிவிட்டதே என அடுப்படியை வெளியாக்கி கொண்டிருக்கும் போது அதில் இருந்த விறகு கட்டைக்குள் பாம்பைக்கண்டவள் கொஞ்சம் அதிர்ந்து போனாள் . என்ன பாம்பு என பார்ப்போம் என விளக்கு எடுத்து வருவதற்குள் அந்த பாம்பு மாயமாய் மறைந்து விட்டது . அவள் மனதிற்குள் எப்பதான் நான் ஒரு வீடு ஒன்றைக்கட்டி நிரந்தரமாக குடி இருக்கிறதெண்டு தெரியலையே முருகா என மனதிற்குள் புறு புறுத்துக்கொண்டு பாம்பை தேடினாள் அவள் . அவளின் அந்த ஓலைக்குடிசைக்குள்….. வெளியில் வந்து தேடிப்பார்த்த போது அது போன தடம் தெரியவே மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும் அப்படியே நிமிர்ந்து பார்த்தாள் அந்த கோவில் கோபுரத்தை ஆண்டவா இன்றைய நாள் எல்லோருக…
-
- 9 replies
- 1.7k views
-
-
காமிய தேசத்தில் ஒரு நாள் - ஆதவன் தீட்சண்யா ஓவியம் : ரமணன் அதிகாலை 2.31 மணி. அதிகாரபூர்வமாக கண் விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டித் தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாக நகரும் நோவாகித் தன்னைப் பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான். நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32 மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால், சாலைகளில் ம…
-
- 2 replies
- 1.7k views
-