கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
ஆறுமுகநாவலர் அருளிய குட்டிக் கதை சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள். இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி…
-
- 5 replies
- 1.6k views
-
-
‘பங்க்’ குமார்: கல்லூரி மாணவர்..ரவுடி ஆன கதை ! | பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறிய மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, பாலியல் வல்லுறவு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டன இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டன ?
-
- 0 replies
- 1.6k views
-
-
அன்று ஒரு நாள் நான் எனது விட்டு அருகில் நடந்து போயுட்டு இருந்தேன்.என் பின்னால் ஒரு அழைப்பு கிர்த்தீ என்று நானும் யாரு என்று திரும்பி பார்த்தேன் என் பின்னால் ஒரு அழகனா வாலிபன் அவன் வேற யாரும் இல்லை என் பள்ளி நண்பன்..என்ன புதுசாய் பார்வை இருக்கே நான் ஜோசித்து கொண்டே அவன் முகத்தை பார்த்தேன்.. நானும் என்ன என்பது போல் அவன் முகத்தை பார்த்தேன்.என்ன மாதவா என்ன வேணும் ஏன் என்னை அழைத்தாய்.கிர்த்தீ நான் ஒன்று சொல்லுவன் நீ கோப பட கூடாது..இல்லை சொல்லு... நான் உன்னை காதலிக்கிறேன்..உன்னிடம் வெகு நாளாய் சொல்லணும் என்று வருவேன் ஆனால் என்னால் பேச முடியல.என்னை மண்ணிச்சுடு.. என்னால் துங்க முடியல சாப்பிட முடியல..அதான் இன்னைக்கு சொல்லிவிட்டேன்...மாதவ நீ சொல்லுறாய்.. நான்…
-
- 1 reply
- 1.6k views
-
-
மரச் சிற்பம் ஷோபாசக்தி பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு இப்போது வாழ்வதற்கு அபாயகரமான நிலமாகிவிட்டது. குற்றக் குழுக்களதும் கலகக்காரர்களதும் கரிய பாதங்களுக்குக் கீழே இந்தத் த…
-
-
- 9 replies
- 1.6k views
-
-
இது இன்னொரு வாழ்க்கை! பகல் நேர பேருந்து பயணம், இம்சையாய் இருந்தது, கலியமூர்த்திக்கு! மனதின் கொதிப்பை விட, புறவெளியின் கொதிப்பு வெறுப்பாய், எரிச்சலூட்டுவதாய் இருந்தது. பஸ் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. பஸ்சில் ஏறிய இளம் பெண் ஒருத்தி, தான் முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் கலியமூர்த்தி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, நடத்துனரிடம் சொல்ல, அவர், பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியைப் பிரித்து, இவர் அருகில் உட்கார வைத்து, அந்தப் பெண்ணை மறுபுறமாய் அமர வைத்தார். பக்கத்தில் வந்து அமர்ந்த அந்த நபர், கொஞ்சம், பருமனாக இருந்தார். கூடவே, அவருடைய பத்து வயது மகனை, மடி மீது உட்கார வைத்ததும், கலியமூர்த்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
மனதின் அடியில் கிடந்த ஒரு பெரிய பாராங்கல்லை உருட்டிவிட்டதை போலவும் இருக்கிறது. அதே இடத்தில் ஒரு முள் செடியை என் விருப்பபடியே யாரோ நட்டுவிட்டு போனது போலவும் இருக்கிறது. வெகுநாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு போய்விட்டு திரும்பியது. சிறுவயதில் அம்மணமாய் நின்ற என்னை பார்த்து ஒரு பூச்சாண்டியை போல சுழித்து சுழித்து பயம்காட்டிய தாமிரபரணி தன் இரு கைகளையும் நீட்டி தாரளமாய் என்னை அழைக்கிறது. ஆயிரமாயிரம் சிறகுகள் இருந்தும் எங்கும் பறந்து செல்லாமல் இன்னும் அதே இடத்தில் இருக்கிறது அந்த சின்ன ஆலமரம். நாக்கை துருத்தி பயம் காட்டி விரட்டிய ஆச்சிமுத்தா கோவில் பூவரசம் மரம் தன் மஞ்சள் பூக்களை என் தலையில் கொட்டி சிரிக்கிறது. அவ்வப்போது என் கை செலவுக்கு காசு கொடுத்த அந்த சுடலைமாட சாமி…
-
- 1 reply
- 1.6k views
-
-
போனவாரம் அப்பாவிடம் தொலைபேசி அழைப்பு . "வாற சனி ஒரு முதியோர் நிகழ்வு இருக்கு நேரம் இருந்தா வா தம்பி " சனி வெளிக்கிட்டு போனேன் ,மண்டபம் நிரம்பிய சனம் .முக்கால்வாசி முதியோர்கள் .மிகுதி அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் .ராதிகா சிற்சபேசன் பிரதம விருந்தினர் ,அதைவிட வேறு சில அரசியல் பிரமுகர்கள் . பேச்சு ,நடனம் ,பாட்டு ,வில்லுபாட்டு ,நாடகம் என்று நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது .முதலில் சிற்றுண்டியும் தேநீரும் தந்தார்கள் .பின்னர் இரவு உணவும் பரிமாறினார்கள் .மிக சிறப்பாக முதியோர்கள் இந்த நிகழ்த்தியதை பார்க்க மிக சந்தோசமாக இருந்தது . அங்கு பேசியவர்களின் உரையை கேட்க எனது அப்பாவை பற்றியும் பெருமையாக இருந்தது . முதியவர்கள் தங்கள் பொழுதை கழிக்க mall இல் பின்னேரம் கூடும் போது அதன் …
-
- 5 replies
- 1.6k views
-
-
தெளிவான தேர்வு மொபைல் போன் சிணுங்கியது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காகக் காத்திருந்த தோழி கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ்அப்பில் வினய், ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி, ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான். அடுத்த விநாடி சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். ஆர்வமாக மொபைலை கிரிஜாவிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு படுக்கை மேல் எறிந்தாள். ‘‘அந்தப் பசங்களுக்கு என்ன சொல்லப் போற சிந்து?’’ என்றாள் கிரிஜா.‘‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’’ - தலை துவட்டி கூந்தலைச் சீவினாள் சிந்து.‘‘என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்... அந்த முரளி சுமார்தான்!’’ ‘‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா ச…
-
- 2 replies
- 1.6k views
-
-
சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்” தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான் பதறினான். ”நான் போறேன்” சண்முகம் விடவில்லை. “நீ நில்லு.. யாவாரத்தைக் கவனி. நான் போயிட்டு என்னான்னு பார்த்திட்டு வரேன்.” கல்லாவைத் திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது பார்வை தன்னிச்சையாய் பெற்றோர் படத்தின் மீது பதிந்தது. ‘கூட வரீங்களா’ சரக்கு எடுக்கப் போகும்போது.. வங்கியில் பணம் கட்டப் போனால்.. எந்த முக்கிய வேலை என்றாலும் ‘அம்மா.. அப்பா’ படம். மனசுக்குள் வேண்டுதல். ‘கூட வாங்க’. தடங்கல் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கை. மணிவேல் தணிந்த குரலில் சொன்னான். “உடன…
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்று காலை இனிமையாகவே விடிந்தது. நேற்றிருந்த சுகயீனங்கள் இன்றிருக்கவில்லை. சனிக்கிழமை எனவே இந்தக் கிழமை முழுவதும் பின்போடப்பட்ட வேலைகள் நிறையவே இருந்தன. உடுப்புத்தோய்த்தல், கணணி திருத்தவேலைகள் இரண்டு, சப்பாத்துக்கடை, நண்பரின் வீட்டுக்குப் போதல் என்றிருந்தன அவை. முதலில் கணணி திருத்தவேலைக்குப் போனேன். குளிர் -4 என்றிருந்தது. வாகனத்தை நிறுத்தி வீட்டின் முன் கேட் கதவில் கையை வைக்கிறேன். வொவ் வொவ் என்று குரைத்தபடியே நாக்கை தொங்கப்போட்டபடியே பாய்ந்து வந்து கொண்டிருந்தது ஒரு அல்ஷேசன் நாய். என் இதயம் வாய்க்குள் பாய்ந்து வந்த மாதிரி இருந்தது எனக்கு. கேட்டில் இருந்த கையை எடுத்து பின்னால் வைத்துக் கொண்டேன்.. ஒரு தற்பாதுகாப்புக்காக. இரு தரம் குலைத்த பின் கேட்டிற்கு முன்னா…
-
- 2 replies
- 1.6k views
-
-
My Love story வசந்தகாலப்பறவை. அந்திமாலை சிவக்கும் நேரம். காரிருள் மெல்லத்தன்போர்வையை சூரின்பால் போர்க்கின்றான்.. பனித்துளிகள் அங்கும் இங்குமாக பரவி விழுகின்றன. இதமான உடல்ச்சூடு இன்னும் உடம்பைவிட்டு அகலவில்லை. மனமோ, அங்குமிங்குமாக இடம்விட்டு இடம் தாவுகின்றது. ஆதலால்தான் மனம் ஒரு குரங்கு என்று முன்னோர்கள் கூறியுள்ளனரோ என்று எனக்கு எண்ணத்தோன்றியது. அத்தனையும் தாண்டி கண்கள் கடிகாரத்தை பார்க்கின்றன. ஆமாம்.. இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் புகையிரதம் வந்து சேர்வதற்கு. திடீரென.. அலைபாயும் மனததோ, ஓர்நிலைப்படுகிறது. ஆமாம்.... அது ஒரு சிலையா,? இல்லை ஓர் சி;த்திரமா? திடிரென வசந்தகாலத்தில் மட்டும் தோன்றும் பறவையாக கண்முன்னே தோன்றுகிறாள்... என்னவென்றுதான் சொல…
-
- 1 reply
- 1.6k views
-
-
சூப் கடை முதல் தாதா வரை ! | திண்டுக்கல் பாண்டி என்கவுண்டர் | திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து 'white collar' பாண்டியாக மாறினான். வீட்டுக்கே செல்லாமல் காரிலே சுற்றி தான் வாழ்க்கையை ஒட்டிகொன்டு இருந்தான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகளுடன் இணைந்து பல கொலைகளை செய்தான் . சென்னையில் பாண்டி உள்ளான் என தெரிந்துகொண்ட போலீஸின் குண்டுகளுக்கு இறையானான் பாண்டி .
-
- 0 replies
- 1.6k views
-
-
சுரேஸ் அவனது சினேகிதருடன் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவான்.சுரேஸும் அவனது சினேகிதர்களும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவனது பக்கத்து வீடு,முன்வீடு ,பின் வீடுகளில் இருந்த அவனது வயதை ஒத்த பெடியள்தான் அவனது கூட்டாளிமார்.ஐந்தாம் வகுப்பு மட்டும் அயலில் உள்ள பெட்டை பெடி எல்லாம் ஒன்றாக தான் அந்த புளிய மரத்தடியில் விளையாடினதுகள்.பிறகு பெட்டைகள் வாரதில்லை பெடியள் மட்டும் அந்த மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவாங்கள். புலத்தில இப்ப எங்கன்ட பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்ற பிராண்டட் கிரிக்கட் மட்டையோ அல்லது பந்து போன்றவை அந்த காலத்தில் சுரேஸுக்கோ அல்லது அவனது சினேகிதருக்கோ கிடைக்கவில்லை.விளையாட வேணும் என்ற ஆசை ஆனால் அதற்குறிய பொருட்கள்…
-
- 18 replies
- 1.6k views
-
-
[size=4] [/size] [size=4]புதுவருடம் பிறக்கப் போகிறது. புதுசாக ஏதாவது செய்யவேண்டுமே என்று டாக்டர் யூனோயோசித்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் டாக்டர். 1924 ஜனவரியில் ஒரு இரண்டுமாத வயதே ஆன நாய்க்குட்டியை வாங்கினார். அகிடா எனப்படும் வகை நாய்க்குட்டி அது. அகிடா வகை நாய்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவை. தன் செல்லப் பிராணிக்கு ஹசிகோ என்று பெயரிட்டார் யூனோ.[/size] [size=4]கோல்டன் பிரவுன் நிறம் கொண்ட ஹசிகோ தன்னுடைய எஜமானருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. யூனோவும், ஹசிகோவும் அடுத்த சில மாதங்களில் நெருக்கமான நண்பர்களாக உருவெடுத்தார்கள். தினமும் காலை டாக்டர் யூனோ, பல்கலைக்கழகத்துக்கு செல்ல வீட்டிலிருந்து அருகிலிருக்கும் ஷிபுயா ரயில் நிலையத்துக்கு நடந்துச் ச…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலையுதிர் காலம்! பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். ""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா. ""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்'' ""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...'' அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான். ""அடுத்த வாரம் அனுப்பணும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பண்ண டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது உணர முற்படும்போது, அந்த இருட்டுக்குள் பற்பல அமிழ்ந்திருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் ஒரு நிச்சயமற்ற சூன்யமான தன்மை என்னைச் சுற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. எங்கோ இழுத்துச் செல்லப்படுகிறேன். போனால் போய்க்கொண்டே இருக்கலாம். எதுவுமே தென்படாத நிலையில் அர்த்தமற்று அலைவதில் என்ன பயன்?! நின்று நிதானித்து என்னைச் சுற்றி வரிக்க முற்படும் அந்தச் சூன்யத்தை அவதானிக்கலாமா என்று எண்ணுகையில்.... வெகு தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய மின்மினிப்பூச்சியின் ஒளிவட்டம்போல் தோன்றிய வெளிச்சம் என்னை நோக்கி நகர்ந்து, பெரிதாக விரிந்துகொண்டே நெருங்கி வ…
-
- 10 replies
- 1.6k views
-
-
அப்பா மன்னாரில் இருந்த தன் வேலையிடத்தில் இருந்து ஒரு வார கால லீவோட யாழ்ப்பாணத்தில் இருந்த.. எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வரும் போது.. வழமை போலவே.. இந்த முறை.. கருவாடு.. பாலைப்பழம்.. இதரை வாழைப்பழம்.. அப்பிள்.. ஜாம்.. பிஸ்கட்.. என்று எல்லாம் வாங்கி வந்திருந்தாரு. அதோட ஒரு சுமாரான அளவு காட்போட் பெட்டி.. அங்கும் இங்கும்.. சில தூவரங்களோட..! அப்பா.. இதென்ன கோழிக்குஞ்சா.. சத்தமே வரேல்ல...??! நான்.. பெட்டியின் தோற்றத்தை பார்த்திட்டு.. கேட்டன்.. திறந்து பார்... அப்பா கட்டளையிட.. ஆவலோடு.. பெட்டியை திறக்க முயன்றன். ஆனால் முடியல்ல..... விடு நானே திறந்து விடுறன். பெட்டியை திறக்க முடியாமல் நான் திணறுவதை பார்த்திட்டு அப்பாவே வந்த களைப்பு தீர முதல்.. திறந்துவிட்ட…
-
- 15 replies
- 1.6k views
-
-
ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெறிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கறுமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே.…
-
-
- 11 replies
- 1.6k views
-
-
சப்பாத்து – குமார் மூர்த்தி – என் துரதிர்ஷ்டத்தை மறுபடியும் நிரூபிக்கும் சம்பவமாகிவிட்டிருந்தது அது. பலமுறை யோசித்திருந்தேன். மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது என்றும் நம்பினேன். எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது. மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்தச் சப்பாத்தை வாங்குவதற்கு நான் பலவழிகளில் கரிசனம் எடுத்திருந்தேன். உண்மையில் இது ஒரு சிறிய விடயம் என்று மற்றவர்கள் ஒதுக்கிவிட்டாலும் எனக்கு இது ஒரு பெரிய விடயமாகவே எப்போதும் இருந்து கொண்டிருக்கும். சப்பாத்தோ, செருப்போ மனதுக்குப் பிடித்த மாதிரி பொருந்தி வருவது எனக்கு மிகவும் அபூர்வம். அப்படிப் பொருந்தி வந்தாலும் என்னை அது சீக்கிரமே கழட்டிவிட்டுவிடும். இருந்தும் நீண்ட நாட்களாகவே எனக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
பள்ளத்தாக்கு - அகரமுதல்வன் தூர்கிற பாழ்கிணற்றைப் போல இரவுத் தூசியால் பூமி கறுத்தது. சுருண்டு கிடக்கப்பழகிவிட்ட பாம்புக்குட்டியின் தோலில் நிலவு மின்னியது. தலைகீழாய்த் தொங்குவதற்காய் உயர்ந்த கிளைகளைத் தேடிப்பறக்கின்றன கோணம் பிசகிய வவ்வால்கள். முற்றத்தில் பனையின் நிழல் சரிகிறது. தெய்வீகம் போலிருக்கிறது பனை அசைவதை நிழலாய்ப் பார்க்க. இந்தப் பொழுதுகளில் கண்ணுக்குப்புலப்படாத அற்புதங்கள் பலமாகத் திரிந்தாலும் சுவடுகளை விடுவதில்லை. முழுமைக்கு ஆசைப்படாத மேகம் நிலவின் முன்னே கலைந்து அரிதாய் மிஞ்சுகிறது. வானத்திலிருந்து நிலத்திற்கு கோடிழுக்கும் நட்சத்திரங்கள் எங்கே புதைகின்றன. அமைதி! யாவும் முழுமையடையும் அமைதி. அவள் கருப்பட்டியோடு தேத்தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். சூடு என்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர். ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார். ‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்டாங்களே! அதனா…
-
- 1 reply
- 1.6k views
-
-
செருக்கைத் துறந்த சுகர் நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே. பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது. இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆ…
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
அப்சரஸ் வந்திருந்தாள் தனது புத்தம் புதிய வீட்டின் சமையல் அறைக்குள் அந்த தவளையைப் பார்த்ததும் ராஜுவுக்கு அறுவறுப்பாக இருந்தது. வந்த அந்த தவளை அவனை சற்று அலட்சியமாக பார்த்து விட்டு தனது வழியில் தத்தி தத்தி செல்ல ஆரம்பித்தது. அந்த தவளை பாத்திரங்களின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்ததை உணர்ந்த ராஜு வேகமாக அந்த தவளையை தவளையை மிதித்து பலமாக நசுக்கத் தொடங்கினான். சில வினாடிகளுக்கு பின் தவளை இறந்திருக்கும் என்று திருப்தி அடைந்து காலை நகர்த்தியதும்தான் தவளையின் உடலில் இருந்து புகை வருவதை உணர்ந்தான். அவன் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் புகை சமையல் அறை முழுவதும் பரவியது. புகைக்கு அவனுக்கு மூச்சு முட்டியது.. அப்போதுதான்…
-
- 0 replies
- 1.6k views
-
-
உயிர்ப்பு கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது. ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு…
-
- 1 reply
- 1.6k views
-
-
சீனாவில் அந்த ஏழு நாட்கள் லியோ நிரோச தர்ஷன் இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்கள் குழு கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்தது. இதனை கொழும்பில் உள்ள சீன தூதரகம் ஒழுங்குபடுத்தியிருந்தது. முற்றிலும் மாறுபட்ட சூழல், உணவு மற்றும் மனிதர்கள் என பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இந்த விஜயம் அமைந்திருந்தது. குறிப்பாக உணவு விடயத்தில் கிடைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகவே அங்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணப்பட்டது. எவ்வாறாயினும் சீன அரசின் நோக்கம் அந்த நாட்டின் பல்துறைசார் வளர்ச்சியை எமக்கு காண்பிப்பதாகும். அதனடிப்படையில் மெய்சிலிர்க்க கூடிய பல கட்டுமானங்கள் எம்மை ஆச்சரியப்படுத்தியது மாத்திரமல்லாது தனது த…
-
- 2 replies
- 1.6k views
-