கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் 1 யானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் கலவையான யானைகளை உருவாக்கின. தடித்த வயிறும் நீண்ட தும்பிக்கையும், உரித்த பலாப்பழத்தின் சுளைகள் அசைவது போன்ற நீண்ட காதுகளும் விரிந்து உருண்டு குண்டு யானைகளை அவனின் கற்பனைக்கு ஏற்றால் போல் உருவாக்கினான். பாடசாலை பயிற்சிப் புத்தகத்திலும் உப்புக்குளம் பிள்ளையார் கோவில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்திலும், கோயில் கோபுர அடியிலுள்ள சிற்பத்திலும் யானைகளைப் பார்த்திருக்கிறான். தும்பிக்கைகளை வளைந்து சுருட்டி பூக்களை ஏந்தியவாறு இரண்டு பக்கமும் ஒன்றையொன்று பார்த்தவாறு இரண்டு யானைகள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
"குஞ்சம்மா" ரிஷபன் சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரைப் பார்க்கத்தான் இன்று ஸ்ரீரங்க விஜயம். ரெயில்வே ஸ்டேஷனில் சிறு பெட்டியுடன் தனியே இறங்கியவளை அந்த அதிகாலை இருட்டில் யார் கவனிக்கப் போகிறார்கள்.. ரொம்ப நாளாச்சு. இப்படி விஸ்ராந்தியாய் வெளியே வந்து. எப்போது ஏசி கார். கூடவே தம்பூர் போடுகிற பெண். சுருதிப் பெட்டி.. சில சமயங்களில் கணவர் ராஜகோபாலன்.. எப்போதாவது மகள் மதுவந்தி.. இன்று யாரும் வேணாமென்று தனியே. 'நிஜமாத்தான் போறியா..' "ஆமா' 'ஒரு வாரத்துக்கா' 'ஆமாப்பா' கேள்வி மேல் கேள்வி கேட்ட கணவரைக் குழந்தை போலப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுமுறை நாளும் அதுவுமா பொழுதே போகாதாம் எதாவது படிக்கலாம் என்ற எண்ணத்தில அலுமாரியிலை இருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன். ஏதோ ஆளரவம் கேட்குதென்று மெல்லத் திரும்பினால் என்னகாணும் கொஞ்சமென்றாலும் பொறுப்பில்லாமல் வாசக்கதவை ஆவென்று திறந்துவிட்டிட்டிருக்கிறீர
-
- 2 replies
- 848 views
-
-
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் . . “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. . ஜட்ஜூக்கு சுருக்கென்றது. . பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். . ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், . “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் …
-
-
- 2 replies
- 1.2k views
-
-
யானைக் கதை http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/12/shoba-01-1-238x300.jpg மொழியியல் பேராசிரியர் கியோம் வேர்னோ ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு, கேரளாவுக்கே சென்று ஆசான் வைக்கம் முகமது பஷீரை நேரில் தரிசித்து, பிரஞ்சு மொழியில் ஒரு நீள்கட்டுரை எழுதி வெளியிட்டவர். அநேகமாக பஷீர் சந்தித்த கடைசி வெள்ளைக்காரன் இவராகத்தான் இருப்பார். அந்தப் பேராசிரியரும் நானும் ஒரே இரயில் பெட்டியில், அதுவும் அருகருகாக அமர்ந்து பயணம் செய்வோம் என நான் ஒருபோதும் நினைத்திருந்ததில்லை. அவரைக் கண்டவுடன் நான் எழுந்து நின்றேன். எழுபது வயதைக் கடந்துவிட்ட பேராசிரியர் இருக்கையில் அமரும்வரை மரியாதையின் நிமித்தமாக நி…
-
- 2 replies
- 1.3k views
-
-
அச்சுவேலி சிவப்பிரகாசத்தாருடைய வீட்டு வேலியைப் பார்த்தே அவருடைய தொழில் எதுவாயிருக்குமென்று எவரும் எளிதாகச் சொல்லிவிடுவர். சொல்லப்போனால், அச்சுவேலியில் மட்டுமல்ல யாழ்ப்பாண மாவட்டம் பரவலாக எங்குமே ஓவசியர்மாருடைய வீட்டு வேலி ஒரே மாதிரித்தான். ஓவசியரென்றால் றோட்டு ஓவசியர். றோட்டுப் போடுவதற்கென்று அரசாங்கம் கொடுத்த தார் பீப்பாய்களையெல்லாம் அவற்றிலிருந்து தாரை வழித்து றோட்டில் மெழுகிய கையோடு தமக்கு வேலை செய்யும் தொழிலாளர்களைக்கொண்டே நறுவீசாக வெட்டிவித்துத் தட்டைத் தகரமாக அடுக்கி அரசாங்க லொறியிலேயே தம் வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள் இந்த ஓவசியர்மார். அவற்றின் இரண்டு பக்கமும் அங்கும் இங்கும் தடிப்பாய்ப் படர்ந்து கிடக்கும் காய்ந்துபோன தார் பிசுக்கு கண்ணை உறுத்தின…
-
- 2 replies
- 1.5k views
-
-
துபாய் ரிட்டர்ன் அதிகாலை வந்த குறுஞ்சேதி. “மச்சி இன்று துபாயிலிருந்து சென்னை வருகிறேன். மாலை 8 மணிக்கு வந்துருவேன்...” படித்தபின் அதற்கேற்றவாறு எல்லா வேலைகளையும் முன்னதாக முடித்துவிட்டு மதிய அலைச்சலுக்குப்பின் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை 6 மணிக்கு எழுந்து பார்க்கையில் 7 மிஸ்டு கால்கள். பெரும்பாலும் அறிமுகமில்லாத எண்களின் கால்களை எடுப்பதில்லை. சரமாரியான மார்க்கெட்டிங் கால்கள் தொந்தரவின் உச்சம். தெரிந்த எண்களுக்கு மட்டும் பதிலளித்து பேசிவிட்டு குமரகம் டீக்கடையில் தஞ்சம். நான்கு ரோடும் வெட்டிக்கொள்ளும் கார்னர் அது. ஹாரன் சத்தங்கள் நொடிக்கொரு முறை காதைப் பிளக்கும். இருந்தாலும் பீட்டர் அண்ணனின் ஸ்ட்ராங்கான இஞ்சி டீக்காக எதையும் பொறுத்துக் …
-
- 2 replies
- 949 views
-
-
வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்... Posted by: on Jan 16, 2011 வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்... ''அப்புக்குட்டி... எட அப்புக்குட்டி...'' என்று குரல் கொடுத்தவாறே வந்து சேர்ந்தார் முகத்தார். ''எடி செல்லமணி, முகத்தார் குடும்ப சமேதரராய் வாறதைப் பார்த்தால்... மாட்டுப் பொங்கல் கொண்டாட வாற மாதிரி இருக்கு. நம்மட வீட்டில மாடு இல்லையெண்டு மனுசனுக்குத் தெரியாது போல கிடக்குது... இண்டைக்கு என்ன வில்லங்கத்தோட வாறரரே தெரியாது... நான் ஒளிச்சிருக்கிறன். வெளிய போயிட்டன் எண்டு சமாளி...'' என்றவாறே அப்புக்குட்டி உள்ளே சென்றார். ''இஞ்ச நில்லுங்கோ... நீங்கள் ஒளிக்கிறதும்...…
-
- 2 replies
- 2.2k views
-
-
நட்சத்திரங்களின் வாக்குமூலம் by பிரசன்ன கிருஷ்ணன் இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது இம்முறை மன வேலியை கடந்து சென்று விட வேண்டும் என்றெண்ணி முனைப்புடன் கூடலில் ஈடுபடலானான். மேலுள்ளாடையையும் அவிழ்த்து அவள் மார்பகங்களைத் தற்போது, அரிதாக நடைபெறும் ஒரு நிகழ்வை கண்டதைப் போல் வெறித்துக் கொண்டிருந்தான். …
-
- 2 replies
- 1.3k views
-
-
'கந்தசாமி எம்.எல்.ஏ., பதவியிலிருந்து விலகல். கட்சியிலிருந்தும் விலகினார்' என்று டி.வி-யில் பிளாஷ் நியூஸ் ஓடியது. தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என கந்தசாமியின் வீடே நிரம்பி வழிந்தது. கந்தசாமி வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் மொய்த்தனர். "ஏன் சார் திடீரென்று இந்த ராஜினாமா?" "நான் கடந்த மூன்று வருடமா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கேன். ஆனால், என்னை நம்பிவாக்களித்த மக்களுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியல. மக்களுக்கு பயன்படாத இந்த பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று முடிவு செய்து ராஜினாமா செய்து விட்டேன்." "கட்சியிலிருந்தும் விலகியிருக்கீங்களே?" "நான் என் முடிவை என் கட்சி தலைமையிடம் சொன்னபோது என் தலைமை அதை ரசிக்கவில்லை. மாறாக, நான…
-
- 2 replies
- 1.3k views
-
-
அந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன். தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார். வரப்போகும் பொழுதுகள் மனக்கண்ணிலே வந்து நின்று பயமுறுத்த, எதுவுமே சிந்திக்கத் திராணியற்றவராய் மூளையே விறைத்து மரத்தாற்போன்ற உணர்வுடன் முன்னால் நீண்டு விரிந்துசெல்லும் வீதியைப் பார்த்தார். வாகனங்கள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. வீதியின் அருகால் பரபரப்பாகச் செல்லும் மக்கள் கூட்டம் கைகளில் பொருட்கள் நிறைந்த 'பிளாஸ்ரிக்' பைகள…
-
- 2 replies
- 1.5k views
-
-
சுவை – ப. தெய்வீகன் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரிலிருந்து நானூற்றைம்பது கிலோ மீற்றர் தொலைவில் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கூனபரா நகரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள திறந்தவெளிச் சிறையின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள வோகன் குடியிருப்பு தொகுதியிலுள்ள 37 ஆவது இலக்க சிறிய அறையில் செய்யாத குற்றத்துக்காக நான் அடைக்கப்பட்டிருந்தேன். அது எனது முதலாவது இரவு. தூக்கம் வரவில்லை. பத்து மணியளவில் கண்ணயர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன். கொஞ்ச நேரத்திலேயே திடுக்கிட்டு எழும்பிப் பார்க்கும் போது அவ்வளவு நேரமும் ஏன் தூங்கினேன் என்பதையும்விட எப்படி என்னால் தூங்க முடிந்தது என்பதுதான் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. வெளியில் மெதுவான தூறலுடன் கூடி…
-
- 2 replies
- 810 views
-
-
ஆண் மழை எஸ். ராமகிருஷ்ணன் வெளியே மழை பெய்யத் துவங்கியிருந்தது. இன்று விடுமுறை நாள். சுனந்தாவும் வீட்டி லிருந்தாள். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் கருத்தமேகங்களைப் பார்த்த படியே அவசரமாக வீட்டின் வெளியே சென்று மழையை அளப்பதற்கான மழைமானியை வைத்தேன். சிறிய தோட்டமது. சுனந்தா நிறைய பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறாள். வானிலிருந்து மழைத் துளிகள் வேகமாக இறங்கத் துவங்கின. அப்பாவிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒன்றே ஒன்று, மழை பெய் யும்போது அதை அளவிட வேண்டும் என்பது தான். எனக்கு இந்தப் பழக்கம் திருமணத்தின் பிறகுதான் துவங்கியது. எதற்காக இப்படி மழையை அளவிடுகிறேன் என்று புரியவில்லை. ஆனால் அதில் இனம் புரியாத ஈடுபாடு குவிந்து விட்டது. அப்பா தான் வேலை பார்த்த ஊர்களில் பெய்த …
-
- 2 replies
- 2.5k views
-
-
காதல் பற்றிய உங்களது தனிப்பட்ட கருத்தக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி. பிரியன்.
-
- 2 replies
- 1.4k views
-
-
‘சத்ரு’ – பவா செல்லதுரை அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள். அவன் பிடிவாதமாய் கண் திறக்காமல் கிடந்தான். ரங்கநாயகி கிழவி தனி பொம்பளையாகப் பதட்டமின்றி, அவன் தலைமாட்டில் குந்தி இருந்தாள். அவள் நிதானத்தில் அனுபவம் குழைந்திருந்தது. மௌனம் எல்லோருக்கும் பொதுவாய் பரவி இருந்தது. அந்தச் சின்னக் குடிசை,தன் உள்புறம் இதற்குமேல் ஒரு ஆளையும் அனுமதிக்காத பிடிவாதத்தில் இருந்தது. வீட்டின் வெளி, புதுசாய் பார்க்கிற எவரையும் பயமுறுத்தும். நீண்டு, அகன்று பரவியிருந்த பாறைகளின் நடுவில் ஒதுங்கியிருந்த மண்திட்டில், கட்டியிருந்த கூரையின் வெளியில் நின்று பார்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
சித்திரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்திரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எல்லாம் விதம்விதமாகச் சிதைக்க முடியும் எனக் குரூரத்தோடு யோசித்து, பரிசோதனை எலியாக என்னைப் பயன்படுத்தினார்கள். இரவு 10 மணிக்கு ஒரு அதிகாரி என்னை அழைத்தார். ஈரக்குலை நடுங்க உயிரைக் கையில் பிடித்தபடி நின்றேன். 'அந்தக் கொலை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் என்னிடம் சொல்’ என்று மிரட்டினார். இதேபோல் எத்தனையோ தடவை அதிகாரிகள் என்னை விசாரித்து இருக்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த தகவல்களைக் கண்ணீரோடு அவர்களிடம் சொல்வேன். புதுமுக இயக்குநரிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர் போல் அலட்டிக்கொள்ளாமல் கேட்பார்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடமாகாணத்தின் யாழ் மக்களின் வாழ்வை முன்னிலை படுத்தும் ஒரு விடயம் கல்வி . என்ன கஸ்ட படடாலும் குழந்தை களுக்கு கல்வி மிகவும் முக்கியம் என என்னும் சமுதாயமாக வாழ்ந்தார்கள் .பள்ளிச் சீருடை முதல் கொப்பி பென் பென்சில் என தேவையான அத்தனையும் கடன் பெற்றாவது வாங்கி கொடுத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் ஐந்துக்கு மேற்படட பிள்ளைகள் இருப்பார்கள். குடும்ப வறுமையிலும் கல்வியை கைவிடுவதில்லை. பாலர் வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை கிராமத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட் பாடசாலைகளிருக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல சமூகத்தில்,ஆசிரியர்களை கல்விமான்களை மதித்தர்கள். நகருக்கு சற்று தொலைவில் பெண் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பெண் ஆசிர்யர்களை கொண்ட அந்த பெண்க…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 974 views
-
-
அப்பாவா இப்படி? கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைத்தொகுப்பு: குடும்பம் என்னோட பெயர் ப்ரியா. வயது பதினெட்டு. பெங்களூர் மவுண்ட்கார்மல் காலேஜ்ல படிக்கிறேன். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரேகுழந்தை. தினமும் காலையில் என்னோட அப்பாதான் என்னை அவரோட கார்ல காலேஜுக்கு கூட்டிகிட்டுப் போவார். என்னை செல்லமா ‘டுப்பி’ன்னு கூப்பிடுவார். நானும் அப்பாவும் பிரண்ட்ஸ் மாதிரிதான் பழகுவோம். எனக்கு அப்பான்னா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அம்மா என்னிடம் ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. ப்ரதோஷம், சங்கஷ்ட சதுர்த்தி, அமாவாசை, ஆடின்னு அடிக்கடி கோவிலுக்குப் போவாங்க. பூஜை, புனஸ்காரம் என்று நேம நிஷ்டைகள் அதிகம். கோபம் வந்தா ஹிஸ்டீரியா வந்தமாதிரி கத்துவாங்க. …
-
- 2 replies
- 959 views
-
-
மீனாச்சிபாட்டி(சிறுகதை) பாட்டிக்கு ராத்திரிபூராம் தூக்கம் வரல பொறண்டு பொறண்டுபடுக்குது குளிருவேற வீட்டுல எட்டாவது மகனோடபொண்டாட்டியும் ரெண்டுபேரப்புள்ளைகளும் நாளைக்கி ஆர் ஆரெல்லாம் வருவாக அப்பத்தான்னுகேட்டு தேஜா வருவாளா கோபிவருவானான்னு கேட்டுகளைச்சுப்போயி இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சுதுக மருமக அவ பேத்திதான் அம்மாயி உங்கமகன் அதான் என் வீடுக்காரரு நாளைக்கி வரலயாம் நு சொல்லிட்டு படுக்கப்போனா. ஏம்மா மாவெல்லாம் ஆட்டிவைச்சிட்டயா சட்ணிக்கி சாமானெல்லாம் வாங்கிவைச்சிட்டயான்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு மீனாட்சிபாட்டி அதுக்கு உன் பிள்ளக பேரம்பேத்தி அம்புட்டுப்பேரும் வாராகன்னவன்ன ஒன்னபுடிக்கமுடியல வீ…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
♥ ♥குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, கன்னத்தில் வழிவதற் காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி, ''இந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?' என்றேன். ♥''உங்களோட ஒரு பழைய புத்தகத்துல இருந்துச்சு' என்ற நந்தினி, படுக்கை அறையில் இருந்து குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்க... வேகமாக உள்ளே சென்றாள். ♥நான் பால்கனிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். டெல்லியின் ஜனவரி இரவுக் குளிருக்கும் மனதில் பரவியிருந்த மெல்லிய சோகத்துக்கும் சிகரெட் புகை இ…
-
- 2 replies
- 812 views
-
-
ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர் விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார். அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும் பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம். ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் த…
-
- 2 replies
- 688 views
-
-
பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான். திப்பு சுல்தான் பதவிக்கு வந்தது முதல் இறக்கும் வரை அவரின் முகத்துக்கு முன்னால் சில எதிரிகளும் முதுகுக்குப் பின்னால் பல துரோகிகளும் அவரைத் தாக்கத் தயார்நிலையில் காத்திருந்தனர். திப்பு சுல்தான் தன் மன, உடல், அறிவு வலிமையால் அவர்களைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கியபடியே இருந்தார். உலகில் எந்தப் பேரரசருக்கும் இல்லாத நெருக்கடிகள் திப்புசுல்தானுக்கு இருந்தன. அவற்றைத் தகர்த்தபடியே அவர் தன்னை மைசூரில் நில…
-
- 2 replies
- 2.1k views
-
-
தெளிவான தேர்வு மொபைல் போன் சிணுங்கியது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காகக் காத்திருந்த தோழி கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ்அப்பில் வினய், ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி, ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான். அடுத்த விநாடி சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். ஆர்வமாக மொபைலை கிரிஜாவிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு படுக்கை மேல் எறிந்தாள். ‘‘அந்தப் பசங்களுக்கு என்ன சொல்லப் போற சிந்து?’’ என்றாள் கிரிஜா.‘‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’’ - தலை துவட்டி கூந்தலைச் சீவினாள் சிந்து.‘‘என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்... அந்த முரளி சுமார்தான்!’’ ‘‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா ச…
-
- 2 replies
- 1.6k views
-
-
கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி தமிழ்நதி -கனடா மூத்த மகனுடைய கையால் கொள்ளி வாங்குவதற்காக அருணாசலத்தார் நடுக்கூடத்தில் காத்துக் கிடந்தார். மகன் கந்தசாமி செய்தி கேட்ட அன்றிரவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். வெள்ளைவேட்டி சால்வை, அருணாசலத்தாருடைய கறுப்பு நிறத்தை அடர் கறுப்பாக்கிக் காண்பித்தது. தலைமாட்டில் குத்துவிளக்கின் சுடர் காற்றின் திசைக்கேற்ப சாய்ந்து மாய்ந்து அழுதுகொண்டிருந்தது. நகரத்திற்குப் போகும்போது மட்டும் செருப்பு அணிந்துகொள்ளும் வழக்கமுள்ள அவருடைய கால்களில் வெள்ளைக் காலுறைகள் மாட்டப்பட்டு, இரண்டு பெருவிரல்களும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. ஆள் திடகாத்திரன்தான். இருந்துமென்ன… நெஞ்சுவலி சாய்த்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் விடிகால…
-
- 2 replies
- 717 views
-