கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஒவ்வொரு வருடமும் வெய்யில் அடிக்க தொடங்க தோட்டம் ,பேஸ்மன்ட்,கராஜ் இந்த மூன்றிலும் எப்படியும் ஒருக்கா கை வைத்தே தீர வேண்டும்.குளிர்காலத்தில் வேண்டாதவற்றை அள்ளி கட்டி கராஜுக்குள் தள்ளிவிட்டு பின்னர் வெயில் வர அதை ஒருக்கா போய் கிளறி சுத்தம் செய்வதே ஒவ்வொரு வருடமும் பெரிய வேலையாகி விட்டது.கடந்த ஞாயிறு நல்ல வெய்யில் அடிக்க மனுசியிட்ட நல்ல பெயர் எடுக்க அதிகாலையே எழும்பி கராஜில் கை வைத்துவிட்டேன். புல்லு வெட்டுறதை,சம்மர் டயர்களை,பார்பிக்கியு மெசினை வெளியில் எடுத்து சினோ வழிககிற மெசினை உள்ளுக்க தள்ளிகொண்டு நிற்கும் பொது மேல் தட்டில் (பரண்) கட்டி வைத்து வருடக்கணக்காக கிடக்கும்பெட்டிகளை பார்க்கின்றேன் .எல்லா பெட்டிகளிலும் உள்ளுக்குள் என்ன இருக்கு என்று பெயர் எழுதி தள்ளிவைத்திருக்…
-
- 40 replies
- 5k views
-
-
"அண்ணே எங்க போகவேணும்" பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு "தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ" "அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்" "என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்". . யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்…
-
- 25 replies
- 3k views
-
-
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது. அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள். அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம…
-
- 6 replies
- 1.3k views
-
-
நாணயம் ”நாளைக்கு பீசு கொண்டாரலைன்னா டியூசனுக்கு வர வேண்டாம்னு சார் சொல்லிட்டார்” ஏழு வயது தங்கராசு அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி வருத்தத்தோடு காலண்டரைப் பார்த்தாள். இன்று தேதி 25. ஒன்றாம் தேதி வராமல் அவள் ஒன்றும் செய்ய முடியாது. அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில் அட்வான்சாக இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகி விட்டது. மூன்றாவது வீட்டு எசமான் வேலைக்கு சேரும் போதே அட்வான்ஸ் எல்லாம் கேட்கக் கூடாதென்று கறாராகச் சொல்லி இருந்தார். அவள் கணவன் குடிகாரன். ஜேப்படித் திருடனும் கூட. இப்போது ஜெயிலில் இருக்கிறான். வெளியே வர ஆறு மாதமாகும். ஆனால் வந்தும் அவளுக்குப் பெரிய உபகாரமாகப் போகிறதில்லை. அவனுக்கும் சேர்த்து அவள் தான் செலவு செய்ய …
-
- 3 replies
- 1.2k views
-
-
நுனி எம்.டி.முத்துக்குமாரசாமி “பிரதமர் உரையாட விரும்புகிறார். தயாராகுங்கள். ஆடைகள் அணிந்திருத்தல் அவசியம்” கலியின் அடுக்குப் படுக்கையின் மேல் இருந்த தொடர்புஒலிபெருக்கியில் கன்ணனின் குரல் தொடர்ந்து ஒலித்தது. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு முழித்த கலி தன் படுக்கையில் இருந்து மிதந்து இறங்கினாள். ஆஹ், ஒரு வழியாய் பூமியோடு தொடர்பு கிடைத்துவிட்டது! “ரோஜர். வருகிறேன். கல்கி எங்கே?” “வெளியே நடந்து கொண்டிருக்கிறாள். செய்தி அனுப்பிவிட்டேன். நீ வரும்போது வந்துவிடுவாள். வரும்போது வாயில் 7இல் அவள் திரும்பி வர உதவி தேவையா என்று பார்த்துவிட்டு வா” “சரி” கலிக்கு புவி ஈர்ப்பு விசை இல்லாமல் நிர்வாணமாய் தன் மார்புகள் குலுங்குவது பழக்கமாகியிருந்தது. ஆடையணிந்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிட்னியில இருக்கிற குமர்கள்,குமரங்கள்,கிழடன்கள்,கிழடிகள்,நடுவயதானர் ஒருவித அருட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் .காரணம் என்ன தெரியுமோ இளைய தளபதி விஜய் எங்கன்ட சிட்னியில நிற்கிறார் எனபதுதான். தலைவா படப்படிப்பு சிட்னியில் நடைபெறுகிது. கமராவுக்கு முன்னாள் நின்று இளை தளபதி இலையான் கலைப்பது போல் கையை,காலை ஆட்டினால் கோடியாக பணம் அவரது வங்கியில் போய்சேரும். எங்களுக்கு என்ன வரும் ?????? "தம்பி என்னை ஒருக்கா கூட்டிகொண்டு போறியேடா”, "எங்கன ஆச்சி கோவிலுக்கோ? பஜனைக்கோ? அல்லது எவனாவது புது சாமிமார்,சாத்திரிமார் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறானோ " "இல்லையடா தம்பி எங்கன்ட தளபதி விஜய் தலைவா பட சூட்டின் சிட்னியில் எடுக்கிறாங்கள் அதுக்கு வந்திருக்கிறார்" நான் எம்.ஜி.ஆர்…
-
- 27 replies
- 3.3k views
-
-
*******என்னுடைய இந்தச் சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/ இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. ***** விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை …
-
- 0 replies
- 982 views
-
-
சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.. ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் அப்பா. "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். "சரி" இந்த மாதிரி Client-அ மோப…
-
- 3 replies
- 1.1k views
-
-
இன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார். அவருக்கு எழுபது வயதாகின்றது. ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர். இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" . எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச்…
-
- 7 replies
- 1k views
-
-
பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான். அந்த நாட்களில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்பதில் அவனுடைய உறுதி தெரியும். வெளியே விளையாடப்போனால் இருட்டிய பின்னர்தான் வீடு திரும்புவான். நான் சொல்வேன் ’இன்று முழுக்க விளையாடியது போதும். இனி படிக்கலாம்.’ ’இப்பவேயா?’ என்பான். ‘இல்லை அடுத்த கிறிஸ்மஸ் வரும்போது’ என்பேன் நான…
-
- 0 replies
- 1.2k views
-
-
கெட்ட குடி! இன்று காலையில் எழுந்ததிலிருந்து எத்தனை தடவைதான் பாக்கியம் சாமியறைக்குட் சென்று தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை வணங்கிவிட்டாள். இதற்குமுன் எத்தனையோ தடவைகள் நடந்துபோன சம்பவங்கள் எல்லாம் அவள் மனதில் அலையலையாக வந்து திரும்பிக்கொனண்டிருந்தன.படலையருகில் நின்று நோட்டமிட்டுக்கொண்டிருந்த பாக்கியம் சலித்துப் போனவளாய் மீண்டும் சாமியறைக்குட் செல்கின்றாள். "அப்பனே பிள்ளையாரே! இந்தத் தடவையெண்டாலும் எந்தத் தடங்கலுமில்லாமல் இந்த வரன் அமைஞ்சி என் மகள் கீதாவோட வாக்ழ்கைக்கு ஒரு வழி பிறக்க நீதானப்பா துணை செய்ய வேணும்" என்றிவ்வாறாக பிரார்த்தித்துக்கொண்டாள் பாக்கியம். மீண்டும் படலையண்டைச் செல்கின்றாள். வீதியில் சென்று தன் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்வையைச்செலுத்துகின்றாள்.ஏம…
-
- 2 replies
- 869 views
-
-
காரில்தான் வழமையாக நான் வேலைக்கு போய் வருவது வழக்கம்… கடந்த ஒன்றரை வருடமாக ஒரு பிரபலமான தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். வழமையாக அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்கு கிளம்பிவிடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் காரில் போய்க்கொண்டிருந்தேன்… அது ஒரு அமெரிக்கத் தெரு என்பதனால் சந்திச் சமிக்ஞை விளக்குகள் தானாக ஒளிர்ந்து மூடும்... பராமரிப்பாளர்களோ காவலர்களோ யாரும் இருப்பதில்லை. அதிகாலையில் பனிப்பொழிவு கொஞ்சம் இருந்தமையால் நான் வழமைக்கு மாறாக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தேன். வழமையாக நான் போய்வரும் பாதை என்பதால் எனக்கு மேடு - பள்ளம் எங்கிருக்கும் என்பதெல்லாம் அத்துப்படி... இருப்பினும் பனிக்கால எச்சரிக்கையாக கொஞ்சம் மெதுவாகவே நான் கார…
-
- 6 replies
- 10.6k views
-
-
கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும் . நான் கனடாவுக்கு வந்த புதுசு. அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம். அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள் வந்து தரைதட்டியவர். அந்தத் தராதரம் மிக்க தகுதியின் அடிப்படையில் – அவரது பரிபாஷையில் – அவர் ஒரு பழைய காய். கனடா பற்றிய கற்கைநெறியில் அவரோடு தங்கி வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை எனக்கு ஒருவகையில் குருகுல வாசந்தான்! கண்ணைக் கட்டிக் கனடாவுக்குள் விடப்பட்டது போன்ற எனது பரிதாபகரமான அந்த நாட்களில் அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும் – ஏன் குயுக்திகளும்கூட – எனது காதுக்குள் வேதமாய் ஓதப்பட்டன. ஒரு கொஞ்ச நேரம் பேசக் கிடைத்தால் போதும், ‘ஐசே’ என்ற முகமனுடன் உபநியாசம் ஆரம்பமாகும். கனடிய அரசு, கனடிய மக்கள், கல…
-
- 5 replies
- 1k views
-
-
சமூகக்குற்றம்! எழுதியவர்: கடல்புத்திரன் ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. 'டாக்ஸி'யில் இருக்கிற ஓட்டி 'ஒவனு'க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம். 'டாக்ஸி' விரைவு வீதியில் விரைந்து கொண்டிருந்தது.'பிளக்பெரி' வந்த பிறகு பயணியின் தொண தொண அலட்டல்கள் எல்லாம் இல்லை. எங்கட பிரச்சனையே தீறவில்லை. இவர்களூக்கு எங்கட அரசியலும் தெரியாது.அதை அறிவதிலும் அக்கறை காட்டுவதில்லை . இவன் தனக்கென கீறின வட்டத்தை விட்டு வெளிய போவதில்லை. இந்த நிலையில் இவன்ட வியாபாரமும் பிரச்சனையும், எமக்கு மட்…
-
- 0 replies
- 731 views
-
-
-
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
சாரி டார்லிங் கொஞ்சம் லேட்டாயிட்டு..... அவன் கெஞ்சிக் கொண்டே நின்றான். டிலோ.. பார்க்கின் பெஞ்சில்.. கோபத்தின் உச்சியில் இருந்து கொண்டிருந்தாள். என்ன.. வழமையா டார்லிங் என்றாள் கூலாகி குலாவுவாளே.. இன்றைக்கு என்ன காறாரா இருக்கிறாள்... என்று நினைத்த நிலோசன்.. அவளை நெருங்கி.. என்ர செல்லமெல்லே.. பப்புச்சுக்குட்டியில்ல.... என் கூட என்னம்மா கோவம்.. என்று வானத்தை அங்கலாய்த்திருந்தவளின் முகத்தை தொட்டு.. தன்னை நோக்கி திருப்ப முயல.. கோபத்தில் அவன் கையை தட்டிவிட்டாள் டிலோ. என்ன பண்ணுறது.. இன்றைக்கென்று கடுப்பேத்திறாளே.. ம்ம்.. கொஞ்சம் மெளனமா இருப்பம். அடங்கிடுவாள். வீட்டில அம்மா அப்பா முன்னாடி நான் தான் ராஜா.. இவ முன்னாடி இப்படி ஜீரோவா இருக்க வேண்டி இருக்கே.. என்று தன்…
-
- 33 replies
- 2.9k views
-
-
அந்த கிராம முன்னேற்ற சங்க முன்றலில் வசந்தி நிதானமாக நின்றிருந்தாள். தலைவர் சிவஞானசுந்தரம், அவர் ஒரு ஓய்வு பெற்ற அதிபர். செயலாளர் சுப்பிரமணியம், மாதர் சங்கத் தலைவி பிறேமா உட்பட பன்னிரண்டு பேர் ஊர்ப் பிரமுகர்கள் என்ற போர்வையில் வசந்தியைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். வசந்திக்கு எதிர்ப்புறமாக முறைப்பாட்டுக்காரனான இராகுலன் உட்கார்ந்திருக்கின்றான். கிட்டத்தட்ட எல்லோரும் கதைத்தாகிவிட்டது. வசந்தியின் பதிலைத் தான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் அங்கு குழுமியிருக்கின்றவர்களின் கடமை முடிந்துவிடும். இந்த வாசிகசாலை, விசாரணை, முறைப்பாடு அவளுக்குப் புதிதல்ல. இந்த முறையுடன் மூன்று தடவைகள் இந்த நாடகம் அரங்கேறிவிட்டது. ஊருக்கும் உலகுக்காகவும் அவள் வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்…
-
- 3 replies
- 780 views
-
-
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது... கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நி…
-
- 82 replies
- 308.7k views
-
-
கெளுத்தி மீனும் கெப்பர்த் தவளையும் காலை நேரச் சந்தடியில் மூழ்கியிருந்தது, புல்லுக் குளம்! சுற்று வட்டாரத்துப் பூச்சிபுழுக்களும் புல்பூண்டுகளும் புதுநாளின் வரவையொட்டிச் சில்லிட்டுச் சிலிர்த்திருந்தன. பறவைகளும் விலங்குகளும் பசிக்குணவு தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. கரையோரமாக நீரில் மிதந்தபடி, தினவெடுத்த தோள்களுடன் தண்டால் எடுப்பதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்த தவளையை, கெளுத்தி மீனொன்று எதேச்சையாகக் கண்டது. “பெரியவர் தேகாப்பியாசம் செய்கிறார் போலும்.” பேச்சுக் கொடுத்தது, கெளுத்தி. “நானென்ன மாமரத்திலிருந்து மாங்காயா பிடுங்குகிறேன்? பார்த்தாலே தெரியவில்லை?” செருக்குடன் உரத்த குரலில் உறுமியது, தவளை. “தெரியுது தெரியுது …….. பெரியவரின் புஜபல …
-
- 4 replies
- 943 views
-
-
’ஸ்மாட் போன்’ ( சிறுகதை)– கே.எஸ்.சுதாகர் வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன். I – Phone ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன். “அப்பா…. காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்! கார் இடையிலை நிண்டா… காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைஸ்சிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது. மனைவி…
-
- 0 replies
- 736 views
-
-
ஒரு கொலை ராகம்...!!! மண்டல பொறியில் கல்லூரியில் என்னுடைய பேட்ச் மாணவர்களில் நல்ல "மண்டை" யார் என்றால் எல்லோரும் கை காட்டுவது மணிவண்ணனாகத்தான் இருக்கும்...அவன் என்னுடைய அறை நன்பன் என்பதில் எனக்கு இன்றைக்கும் பெருமைதான்.. மண்டை என்றவுடன் மூலையில் உட்கார்ந்து பெரிய பெரிய புத்தகங்களை எப்போதும் மனப்பாடம் செய்துகொண்டிருக்கும் ஒரு "பழம்" உங்கள் சிந்தனையில் வந்து உட்கார்ந்தால்...சாரி...நீங்கள் தவறு செய்கிறீர்கள்... எங்களோடு சேர்ந்து ஹாட் அடிப்பான்...கிங்ஸ் அடிப்பான்...வாந்தி எடுப்பான்...சைட் அடிப்பான்..லெட்டர் கொடுப்பான்..ஆனால் பாழாப்போன தேர்வுகள் வந்தால் அன்றைக்கு இரவு மட்டும் சல்லீசாக கிடைக்கும் வில்ஸ் ஸ்மால் ரெண்டு பாக்கெட் - பத்து சிகரெட் மூன்று ரூபாய் - வாங…
-
- 1 reply
- 897 views
-
-
வடலி பதிப்பகமும் இலங்கையின் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து சர்வதேச ரீதியில் இளம்படைப்பாளிகளிற்கான சிறுகதை போட்டியொன்றை நடத்துகின்றது. இது குறித்த அறிவித்தல் இன்று வடலி இணையத்தளத்திலும் தினக்குரல் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. ஈழத்தின் வாழ்வையும், மனிதர்களையும், அவர்களது பாடுகளையும் எந்த அரசியல் மற்றும் இலாப நோக்கங்களுமற்று வடலி பதிப்பகம் நூலாக்கி வருகின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிற்கும் எதிரான குரல்களிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் பதிப்பகம். சர்வதேச ரீதியிலான போட்டியாக இது இருந்தாலும், இலங்கையிலேயே அதிக கவனம் கொள்கிறது. இலங்கையிலள்ள தமிழ்பேசும் சிறுபான்மையினங்கள் அடிப்படையில் ஒரேவிதமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற போதும், மதம் மற்றும் வாழ்விட மாற்றங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு ஊரிலை ஒரு றவுடி இருந்தானாம். அவனும் ஊரிலை இருக்கிற கொஞ்ச றவுடிகளுமாச் சேர்ந்து ஒரு அப்பாவியைக் கொண்டு போட்டாங்களாம். இவ்வளவு நாளும் தாங்களும் தங்கடை வேலையுமா இருந்த ஊர்ச்சனம் இனியும் பொறுத்தால் றவுடி ஒருநாள் தங்களையும் கொண்டு போடுவான் எண்டு நினைச்சிட்டு கொலை செய்தங்களைப் பிடிச்சு ஜெயிலிலை போடுங்கோ எண்டு மெல்ல மெல்லச் சத்தம் போடத் தொடங்கீட்டுதாம். இதென்னடா இவ்வளவு நாளும் நானும் ஒரு பிரச்சினை இல்லாமல் களவு பாலியல் வல்லுறவு கொலை எண்டு செய்து கொண்டு தானே இருந்தனான். சனம் சத்தம் போடாமல் தானே இருந்தது. இந்த முறையும் ரெண்டு மூண்டு நாள் கத்திப் போட்டு சனம் இடங்கிப் போடும் எண்டு நினைச்சு றவுடி சத்தம் போடாமல் இருந்திட்டான். சனம் ரெண்டு மூண்டு நாNhளடை விடேல்லை.தொடர்ந…
-
- 3 replies
- 976 views
-
-
நினைப்பும்...... நடப்பும்..!!! கொற்றவை நினைப்பு.......... என்னடா உனக்குள்ள சிரிக்கிறாய்? “இங்க பாரன் கூத்தை….மெலிந்த நீண்ட கூந்தல் உள்ள அழகான குடும்ப பாங்கான பெண்தேவை…..” “ம்…..அதுக்கென்ன?சாதாரணம் தானே….” “ஏன்டா….மண்டேக்க சரக்குதேவையில்லயோ…?” “இதுகள வெளியில கூட்டிக்கொண்டு நாலு இடத்துக்கு பேறதில்லையே…?” “ஓ…..உங்கட மனிசி எண்டு எல்லாருக்கும் உடம்ப காட்டி அறிமுகப்படுத்ததான் விருப்பம்…ம்….” “டேய்….டேய்…பைத்தியம் மாதிரி கதைக்காத… “.என்ர மனிசி….இவா இந்த ஒப்பீசில…இன்ன வேலையில இருக்கிறா இன்னது படிச்சிருக்கிறா.. எண்டு சொல்லுக்களன்டா…பெருமையா இருக்கும்…” “பாக்கிறவன் வடிவான மனிசியா எண்டுதான் பாப்பான்...” “அடேய்…..நீங்கள் கறுப்பா குண…
-
- 3 replies
- 769 views
-