Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அது ஒரு மிளாகாலம் நம்ம பெரிய மாமா, அம்மாவுக்கு அண்ணன், ராணுவ அதிகாரியாயிருந்தவர். மாமியின் அநியாயமான அகால மரணத்துக்குப் பின்னால் மாமா எல்லையை விட்டுவிட்டு சென்னைக்குக் குடிவந்து என்ஸிஸி அதிகாரியாய்ப் பதவி வகித்தார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் ஏரியாவில் மேஜர் ரஹீம் என்றால் ரொம்பப் பிரபலம். மேஜர் ரஹீம் மட்டுமல்லாமல், அவருடைய டீன் ஏஜ் மகள்கள் ரெண்டு பேரும் கூடப் பிரபலம். மேஜர் ரஹீம் லெஃப்ட்டினன்ட் கர்னல் ரஹீமாய் உயர்ந்துவிட்டிருந்த காலத்தில், ஒரு கோடை விடுமுறையில், பாளையங்கோட்டை அசோக் டாக்கீஸ் பஸ் ஸ்டாப்பில் மூணாம் நம்பர் பஸ் ஏறி, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலேறி, சென்னை எழும்பூரில் வந்து இறங்கியபோது தன்னுடைய லாம்பரெட்டா ஸ்கூட்டரோடு மாமா என்னை வரவேற்க வந்திரு…

    • 1 reply
    • 1k views
  2. இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வ…

    • 1 reply
    • 1.6k views
  3. ஒரு நிமிடக் கதை: பேப்பர் வழக்கு கணேசன் புது வீடு மாறி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அக்கம் பக்கம் யாரும் இன்னும் நண்பர்கள் ஆகவில்லை. புன்சிரிப்புக்களோடு மட்டும் அறிமுகங்கள் முடிந்துவிட்டன. கனேசனுக்கு எப்போதும் நியூஸ்பேப்பர் ராசி மிக அதிகமாகவே உண்டு. அனைவருக்கும் காலை பேப்பர் வந்துவிடும். இவருக்கு மட்டும் லேட்டாக வரும். சரி, பக்கத்து வீட்டில் போடும் ஆளுக்கு மாற்றிப்பார்கலாம் என்றால் அவர்கள் வீட்டிலிருந்தே விசிறி அடித்த பேப்பர் சுருள் வாசல் தண்ணீரில் நனைந்து, எடுக்கும்போதே எண்ணெய்யில் விழுந்த பூரி போல் சொட்டச்சொட்ட கைகளுக்கு வந்து ஒரே விரிப்பில் பிசுபிசுத்து துண்டுகளாகப் போய்விடும். சரி இ…

    • 1 reply
    • 866 views
  4. ஆற்றாமை கு-ப-ராஜகோபாலன் ‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். ‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா. ‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’ அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான். ‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள். சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் …

  5. உன்னை வாழ்த்தி பாடுகிறேன். -சண்முகம் சிவலிங்கம் எனக்கு மனம் கொதித்தது. நாங்கள் பியர் குடித்து மகிழ்ந்த வாடி வீடு இப்போது இந்தியன் வசம் ஆகிவிட்டதே என்று. எதிரே கடல். ஓங்கி எழும் அலைகள் தெரிகின்றன. அலைகளின் இரைச்சல் நிரந்தரமாக எங்கும் நிறைந்திருக்கிறது. கடல் காற்று வீசிச் சூழன்று இதோ இந்த அரசமரத்தில் மோதித் துடிக்கிறது. அரசமரத்தை ஒட்டியிருக்கிற ‘போச்’ இல் நிற்கிற ஜீப் யாருடையது? அதுதான் அந்த மேஐரின் ஜீப்பா? மேஐர் இப்போது எங்கே இருப்பான்? ‘போச்’ ஐ தொட்டிருக்கும் போட்டிக்கோவை மையமாகக் கொண்டு இரண்டு பக்கமும் ஓடும் அந்த கொரிடோர்’களில் நாம் எத்தனை முறை ஸ்ற்றூலையும் கதிரைகளையும் இழுத்துப் போட்டு கடலையும் காற்றையும் இடையில் உள்ள வெள்ளை மணல் வெளியையும் அனு…

  6. மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, வயற்காட்டுக்குப் போகும் வழியில், ஒரு குடிலில் முனிவர் ஒருவர் ஒரு சிறிய பெருமாள் விக்கிரகத்தை வைத்து, அதைத் துளசி இலைகளால் பூஜைகள் செய்வதை பார்த்துக்கொண்டே போவான். அப்போதெல்லாம் முனிவரின் மீது ஒரு பக்தி கலந்த மரியாதை ஏற்படும். ஒருநாள் மாணிக்கம் கீரைகளைப் பறிக்கும் போது, அதன் அருகே சில துளசிச் செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் ஞாபகம்தான் வந்தது. உடனே ‘நாமும் அந்த …

    • 1 reply
    • 927 views
  7. ஒரு பிச்சைக்காரன் ரயில் நிலையத்தின் முன்நின்று கொண்டிருந்தான். அவனை வழக்கமாக அங்கே பார்க்கிற ஒருவர் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார். இவன் வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான் பிச்சையாகப் பெற்றிருப்பான். நாம் 100 ரூபாய் கொடுப்போம். இவன் ஏதாவது தொழில் செய்து பிச்சை எடுப்பதில் இருந்து விடுபட உதவியாய் இருக்கும் என்று நினைத்து அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தார். கொடுத்துவிட்டு கேட்டார். ""ஒரு சின்ன சந்தேகம். இந்த 100 ரூபாயை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?'' கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் அந்தப் பிச்சைக்காரன் சொன்னானாம். ""என் பிச்சைப் பாத்திரம் பழசாய்ப் போச்சு. புதிய பிச்சைப் பாத்திரம் வாங்குவேன்'' என்று. இதுதான் அவனுடைய பதில். …

  8. [size=3]ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுதுவது எப்படி என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம்.[/size] எஸ்தர் - வண்ண நிலவன் [size=3] [size=5]முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இட…

  9. நஞ்சு - ஜெயமோகன் நேரில் சந்தித்தால் அக்கணமே கையில் கிடைத்த பொருளால் அடித்து அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருக்கும் ஒரு பெண். அவளை ஓடும் பஸ்ஸில் இருந்து எதிரே செல்லும் பஸ்ஸில் பார்த்தேன். ஊட்டி சென்றுகொண்டிருந்தேன். இறங்கிய பஸ் ஒன்று வளைந்து ஒதுங்கி என் பஸ்ஸுக்கு இடம் கொடுத்தது. அந்த பஸ் என்னை கடந்துசென்றபோது ஒரு கணம் மிக அருகே அவள் வந்து அப்பால் சென்றாள். என் மனம் படபடத்தது. செத்தவன்போல கைதளர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டேன். பஸ் மேலேறிச் சென்றது. என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ எண்ணங்களுடன் இருந்தேன். பின்னர் எண்ணியபோது அந்த எண்ணங்களெல்லாமே விசித்திரமாக இருந்தன. நான் எழுந்து சன்னல்வழியாக வெளியேறி அந்த பஸ்ஸை துரத்திக்கொண்டு பறந்து, ஆம் பறந்து, அதை…

    • 1 reply
    • 756 views
  10. மொழி உணர்ச்சி இல்லாதவனுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்பட செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். நன்றி: கொளத்தூர் மணி - பெரியாரும் தனித் தமிழ்நாடும்

  11. Started by கிருபன்,

    கெளரி -இளங்கோ 'ஒரு துரோகிக்கு பாடங் கற்பிக்கும்போது நாங்கள் ஓராயிரம் துரோகிகள் வளர்வதைத் தடுக்கின்றோம்' என்ற குரல் எல்லாவற்றையும் கலைத்துப் போனது. அதுவரை, சாணி மெழுகிய குசினிக்குள் அம்மா கம்பிக்குழாயால் அடுப்பை ஊதிக்கொண்டிருகக, இவன் கள்ளிச்செடிகளுக்குள் நுழைந்து கோழிகளைத் துரத்திக்கொண்டிருந்தான். அடர்த்தியாய் வளர்ந்திருந்த எக்ஸோராவில் சிறு குருவிகள் வந்து அமர்ந்திருக்க, முற்றத்து மல்லிகைப் பந்தலில் மல்லிகை வாசமும் வந்துகொண்டிருந்தது. திடீரென்று சிவப்பும் வெள்ளையுமான Half Saree அணிந்த பெண், 'ஒரு துரோகிக்கு பாடங்கற்பித்தல்....' என்கின்ற வாக்கியத்தை நடுக்கத்துடன் சொன்ன கணத்தில்தான் அதுவரை இவன் கண்டுகொண்டிருந்த அழகிய ஊர்க்கனவு சட்டென மறைந்து போனது. அன்று பாடசாலை …

  12. ஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு பொம்மி கேட்டைப் பிடித்துக்கொண்டு நின்றாள். உடையில் மிகக் குறைவாக மூன்று நான்கு சிறிய மற்றும் சற்றே பெரிய கிழிசல்கள் மிக நேர்த்தியாகப் 'பின்' போட்டு மூடப்பட்டிருந்தது . எண்ணெய் சீப்பைக் காணாத முடி, சிக்குப்பிடித்து உருட்டையாக மேலே தூக்கி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தக் கோலத்தில் கூட அழகான உருண்டைக் கண்கள் பளிச்சிட்டு ஏதோ ஒரு வசீகரத்தைச் சொன்னது. "பாப்பா....யாரு ரத்தினத்தோடு பொண்ணா? வா, கிட்ட வந்து குந்து....தாத்தா புல் புடிங்கித்தாரேன்...ஓரமா எடுத்துப் போடு...வா...." முண்டாசு கட்டிய தோட்டக்காரக் கிழவன் வேலைக்கு ஆள் தேடினான். …

    • 1 reply
    • 1k views
  13. செவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை ஏக்நாத் - ஓவியங்கள்: ரமணன் மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’ என்று நினைத்துக்கொண்டார். தூரத்…

    • 1 reply
    • 2.8k views
  14. 'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்..... அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், ’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்? உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!! மிருதுளன் மீண்டும் அபையோர் வணக்கம் சொல்லி, காதல் எனும் தலைப்பில் பேச வந்திருப்பதாகத் தொடர்ந்தான். காதல், கேட்கும் போதே உணர்வுகளைக் கட்டிப் போடக் கூடிய சொல். பசிக்கும் …

  15. யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல அமைப்புகளும் நாடுகளும் இணைந்து தமிழ் இனத்தை அழிப்பதில் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக…

  16. துணையானாள் எஸ். கருணானந்தராஜா தமிழ்நாடு காவியன் இலக்கியப் பரிசுத்திட்டத்தில் தெரிவான சிறுகதை இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது. கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள். ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது. முத…

  17. Started by nunavilan,

    பெருமாள் உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது, அந்த வீட்டில் ஒருகாலத்தில் குடியிருந்த பெருமாளதும் அவரது குடும்பத்தினதும் ஞாபகம் துரைசிங்கத்தினது மனத்தில் சாரலடித்தது. மிகவும் அண்டி வராமல் விலகியிருந்த சக மனிதர்கள் இவ்வாறான எதிர்பாராத் தருணங்களில்தான் மனத்தில் உயிர்கொண்டெழுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த ஊருக்கு குடும்பமாய் வந்து மலேசியா பென்சன்காரர் பொன்னம்பலத்தின் வெறுவீட்டில் அவர் புதிதாகக் குடியேறியபோது, அயல் சிறுவர்களிடத்திலெல்லாம் பெரும் குதூகலிப்பு ஏற்பட்டுப்போனது. அது பெரும்பாலும் நீண்டநாட்கள் நீடிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது…

    • 1 reply
    • 736 views
  18. பாங்காங்கிலி ருந்து டெல்லி நோக்கி அந்த ஏர் இந்தியா விமானம் பறந்துகொண்டிருந்தது. அதன் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த அவனது கண்கள் கலங்கியிருந்தன. அவன் பாங்காங்கின் மிகப்பெரும் போதைப் பொருள் வியாபாரி. ஆனால் அவன் தாய்லாந்து நாட்டுக்காரன் அல்ல. இந்தியாவின் ஒரு பிரபலமான அரசியல் புள்ளியின் வாரிசு. சில மணி நேரங்களுக்கு முன்பு தொலைபேசியில் வந்த தகவல் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ``அவனுடைய தந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. பிழைப்பது கடினம்"என்ற செய்தி அவனை உலுக்கியது. தந்தை மீது அவனுக்கு அதீத பாசமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், அவன் தனது போதை மருந்து வியாபாரத்தில் இதுவரை சம்பாதித்த பணம் முழுக்க அவனுடைய தந்தையின் பொறுப்பில்தான்…

  19. பத்துலட்சம் காலடிகள் - ஜெயமோகன் ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.” “ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி எடுத்த தூய்மையான நாட்டுச்சாராயத்தை அருந்தி ஆ…

    • 1 reply
    • 1.9k views
  20. நள்ளிரவு!… அ.ந.கந்தசாமி. சிறப்புச் சிறுகதைகள் (14) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – அ.ந.கந்தசாமி எழுதிய ‘நள்ளிரவு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். ‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல…

    • 1 reply
    • 1.4k views
  21. தவளையும் இளவரசனும் - ஜெயமோகன் இரவில் பேரழகியான இளவரசியாக இருந்தவள் விடிந்ததும் தவளையாக மாறிய கதையை நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு படக்கதைப் புத்தகத்தில் வாசித்தேன். கடைசிப்பக்கத்தில் அந்தப் பச்சைத்தவளையைக் கண்டதும் எனக்கு வாந்தி வந்து உடல் உலுக்கியது. ஏனென்றால் நான் அந்தத் தவளையை மணந்த இளவரசனாக என்னை கற்பனை செய்துகொண்டிருந்தேன். மியான்மாரின் மேய்க் ஆர்க்கிபெலகோவுக்கு மேலும் எண்பது கிலோமீட்டர் தொலைவில் தனியார் சுற்றுலா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கௌங்கையின் என்னும் இந்தச் சிறிய தீவின் ஆடம்பரக் குடிலின் அறைக்கு வெளியே புலரிவெளிச்சம் கடல் அலைகளின் மேல் அற்புதமாக ததும்பிக்கொண்டிருக்க, சுவர்கள் ஒளியலைகளாக அசைய, திரைச்சீலைகள் மலரிதழ்கள்போல வண்ணம் பொலிந்து…

    • 1 reply
    • 627 views
  22. உக்காந்து யோசிப்பாய்ங்களோ! பிரபல டைரக்டர் சந்திரனை மிகுந்த சிரமத்துக்குப் பின் சந்தித்துப் பேசினான் ரகு. ‘‘சார், நான் கற்பனை பண்ணி வெச்சிருந்த மாதிரியே அச்சு அசலா நிறைய ஸீன்கள் இப்ப வர்ற படங்கள்ல வருது’’ என்ற வன், தன் ரசனையும் ஐடியாக்களும் சமீபத்திய ரிலீஸ் சினிமாக்களில் இடம்பெற்ற சூப்பர் ஸீன்கள், கிராஃபிக்ஸ் உத்திகள், க்ளைமாக்ஸ் திருப்பம் எனப் பல விஷயங்களில் பொருந்தியிருப்பதை உதாரணங்களோடு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டான். பின்பு, ‘‘சார், என்னை உங்க அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டீங்கன்னா ரொம்ப ‘யூஸ்’புல்லா இருப்பேன்...’’ என்றான். ‘‘ஸாரி பிரதர், எனக்கு …

    • 1 reply
    • 1.1k views
  23. சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். '' 1955- ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக ராஜ்ஜியங்கள் பிரிக்கப்படாத காலம். என் அம்மா சரஸ்வதிக்கு 18-வயதில் திருமணமாகி 19-வயதில் நான் பிறந்ததாகச் சொல்வார்கள். சொந்த ஊர், ஆர்யநாடுக்கு அருகிலுள்ள குன்றின் மேல் இருக்கும் நெடுங்காடு. எனக்கு ஏழுவயசு இருக்கும்போது அம்மா, தன் ஊருக்கு அழைத்துப் போனார்கள். அழகிய வயல்வெளி, அடர்ந்த மரங்கள், தென்னை, வாழை, மா, பலா தோப்புகள் கொண்ட நிலம், நூறு அடியில் அழகிய சிறு குட்டை என சாலை வசதிகள் இல்லாத கிராமம். வீடுகள் கூட நூறு அடிக்க…

    • 1 reply
    • 1.4k views
  24. பட்டணம் தான் போகலாமடி..! சென்னையில் அடுக்கு மாடிகளாகும் மனைகள்... சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும் துடிப்பான இளைஞன். ஒருநாள் தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப் போகிறேன். 5 லட்சம் பணம் தாருங்களப்பா..” என்று தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை! அதற்குள் என்ன அவசரம்?” என்றார். "இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம். பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது" என்றான். யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி, உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடீரென்று 5…

  25. மதூரி கதிர்வேல்பிள்ளை - அனோஜன் பாலகிருஷ்ணன் [1] “ஓயா பஹின தான மெதன” என்றார் ஓட்டுனர். டாக்ஸி குலுங்கி நின்றபோது மதூரி தூக்கத்திலிருந்து விழித்தாள். இடப்பக்கக் கழுத்து வலித்தது. பயணம் முழுவதும் அவளை அறியாமல் துயில்கொண்டிருந்தாள். உதட்டைக் கர்சீப்பால் அழுத்தித் துடைத்து, சரிந்திருந்த ஆடைகளைச் சீர்செய்தாள். இரண்டு சூட்கேஸை சில்லுகள் தரையில் உருள இழுத்துக்கொண்டு லிப்டுக்குள் நுழையும்போது அருகேயிருந்த கடலின் இரைச்சல் அள்ளிவந்து காதில் அறைந்தது. சின்ன வயதிலிருந்து கேட்ட அந்த இரைச்சல் அவளை வருடித் தழுவி, கடலைப் பார்க்கவேண்டும் என்ற உவகைக்குள் தள்ளியது. அந்த நான்கு மாடிக் குடியிருப்பில் அவளுக்குச் சொந்தமான தனி பிளாட் மூன்றாவது அடுக்கில் இருந்தது. அப்பா, அவளின்…

    • 1 reply
    • 711 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.