கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
காதலுக்கு ஒரு கும்பிடு சகுந்தலாவிடமிருந்து கடிதம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. படித்த படிப்பு வீணாகக் கூடாது; இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து, அப்பா, தன் படிப்புக்கு செலவு செய்த தொகையையேனும் கொடுத்து உதவ வேண்டும் என நினைத்து, சென்னையில் வேலை தேடிக் கொண்டாள், சகுந்தலா. அவளைப் பொறுத்த வரை, வரதட்சணைப் பிரச்னை இருக்கப் போவதில்லை. ஏனெனில், சிறு வயது முதலே, அவளை, அவள் அத்தை மகனுக்கு மணமுடித்து வைப்பது பற்றிய பேச்சு, இரு தரப்புக் குடும்பங்களிலும் உள்ளது. சொந்தத் தம்பியின் மகள் என்பதால், தம்பி தன் வசதிப்படி, எது செய்தாலும், அதை அன்புடன் ஏற்க, தயாராக …
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... தமயந்தி, ஓவியங்கள்: ம.செ., ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர் அடி தள்ளி நின்னு, 'என் இனிய பொன் நிலாவே...’ பாட்டை வாசிச்சிருக்கணும். ஆனா, இவை ஏதும் இல்லாமத் திண்ணையில உக்காந்து, கடலையை நங்குநங்குனு அடிச்சு உடைக்கிற மாதிரி சொன்னா... 'நான் நாதனைக் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன்!' பச்சக் கடலை வாசம் எப்பவும் அலாதியானது. லேசா மண்வாசனையும் எப்பவோ பெய்த மழையோட வாசனையும் நிறைஞ்சுகிடக்கும் அதுல. அதெல்லாம் சும்மா தின்னக் கூடாது. வெல்லக்கட்டியைக் கடிச்சுக் கடிச்சுத் தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் சூப்பர் ரெசிப்பி! மனைவி பிறந்த வீட்டுக்குப் போயிருந்தாள். அவள் இல்லாமல் சோத்துக்குத் திண்டாடுவேன் என்பது அவள் எண்ணம். எனக் கென்ன, சமைக்கத் த…
-
- 0 replies
- 1.1k views
-
-
FROM MY UNFINISHED SHORT NOVEL "LOVE BEFORE THE WAR" போருக்கு முந்திய காதல் என்கிற குறுநாவல் எழுதி வருகிறேன். அதில் இருந்து ஒரு சிறு பகுதி. நான் அம்மா வளர்த்த பிள்ளை. அம்மா பிள்ளையாக வளர்ந்ததில் சின்ன வயசில் இருந்தே எனக்கு பெண்கள்தான் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் அமரிக்கன் மிசனறிகளின் செல்வாக்கில் வளர்ந்தவள் என்பதால் பெண்கள்மீதான என்னுடைய அளப்பரிய நேசத்தை புரிந்துகொண்டாள். ஆனால் ‘கொடியில் காயப்போட்ட சேலையைக் கண்டால்கூட ராசன் அதுக்கப்பால் நகரமாட்டான்’ என நண்பர்கள் எப்போதும் என்னைக் கிண்டலடித்தார்கள். சேலைகள் மீதான என் மோகம் காமத்தை முழுமையாக உணராத சின்ன வயசுகளில் இருந்தே ஆரம்பித்தது என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.. அப்போதெல்லாம். அம…
-
- 1 reply
- 1.1k views
-
-
மிருகம் - க.கலாமோகன் July 15, 2020 எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில்தான் சென்றதுண்டு. ஆனால் நான் அங்கு சென்றதும் பயப்பட்டு விடுவேன். காரணம் அவள் வளர்க்கும் நாய்தான். அது மிகவும் பெரியது. மிகவும் நீளமான பற்கள். அது ஓர் பயங்கர மிருகத்தைப் போல. முதலாவது சந்திப்பில், நான் நடுங்கியதை அவள் கண்டுவிட்டாள். “பயப்பிடவேண்டாம் ரவி. ரூக்கி நல்லவன். முத்தமிடு ரவியை…” “எலெனா, எனக்கு அதனது முத்தங்கள் தேவை இல்லை.” அந்த முதல் தடவையில் அவளைக் களைப்பில்லாமல் ரூக்கி முத்தமிட்டதைக் கண…
-
- 1 reply
- 1.1k views
-
-
மலை சாயும்போது! மாலை நேரம் - ஏரிக்கரை சாலை வழியாக, நானும், சந்திரனும், நிதானமாக நடந்து கொண்டிருந்தோம். வீட்டு மனை ஒன்றை பதிவு செய்வது சம்பந்தமாக, சென்னை வந்திருந்தேன்; வந்த வேலை, நண்பர் சந்திரன் உதவியுடன் முடிந்தது. மறுநாள் காலையில் தான் ஊருக்கு, பஸ். அதனால், சந்திரன் வீட்டில் இரவு தங்குவது என்று முடிவாகி, பையை அவர்கள் வீட்டில் வைத்து, டிபன் சாப்பிட்டு, வெளியில் காலாற நடந்து கொண்டிருந்தோம். பல விஷயங்கள் பேசிக்கொண்டு நடந்த போது, சட்டென, கந்தசாமி நினைவு வர, ''கந்தசாமிய பாக்கிறதுண்டா... இந்த பக்கத்தில்தானே அவர் இருந்தார்,'' என்று சந்திரனிடம் கேட்டேன். '…
-
- 0 replies
- 1.1k views
-
-
உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய் மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி... | பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் முதல் பாகம் அத்தியாயம் 1... (முதல் பாகம்) அத்தியாயம் – 1 விண்மீன்கள் கூரிய குளிரொளியுடன் இன்னும் சுடர்ந்து கொண்டிருந்தன. எனினும் கீழ்த்திசையில் வானம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மரங்கள் இருளிலிருந்து சிறிது சிறிதாகப் புலப்படலாயின. திடீரென அவற்றின் முடிகள் மீது பலத்த குளிர் காற்று வீசியடித்தது. உடனேயே காடு உயிர்த்தெழுந்து முழுக்குரலுடன் கணீரென அரவமிட்டது. தணிந்த சீழ்க்கை ஒலியால் ஒன்றையொன்று கூவி அழைத்தன. நூறாண்டுப் பைன் மரங்கள், பனி அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலி நான்!" பொறுப்புகள் இப்போதுதான் அதிகமாகின்றன! அப்பா இருக்கிறார் அவரெல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் எனத் தெம்பாக ஊர் சுற்றிய காலம் இனி இல்லை! அவருக்கு ஒரு சோதனை எனும் போதுதான் என் பணி இன்னமும் தீவிரமாகிறது! என்ன நிகழ்ந்தாலும் என் பிள்ளைகளுக்கு ஒன்றும் நிகழாது என வலம் வந்த அம்மாவால் இனி சும்மா இருக்க முடியாது! இப்போது இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது என்னுள் வேட்கை! தாய்க்குத் தலைமகனாக, தந்தைக்குச் செல்ல மகளாக இனி நானே தலையெடுக்க வேண்டும்! என் பிள்ளைகளுக்கும் சொல்லித் தரவேண்டும்! அப்பா இப்பவும் எம்மிடையேதான் இருக்கிறார், இப்போதும் எமக்கு அவரே காப்பு என்பதைப் புரியவைக்க வேண்டும்! ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்! துவண்டுவிழக் கூடாது நான் இப்போது! …
-
- 1 reply
- 1.1k views
-
-
கோழைச் சோழன் ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப் பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கிவனை யான் பெறவே ஆர் வி சுப்பிரமணியன் கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது. 17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்…
-
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
www.tamil.2.ag என் இனியவளே, நான் உன்னை ஒவ்வொரு பொழுதும் சிந்தித்த்துக்கொண்டே இருக்கிறேன். என் கண்களில் காணும் காட்ட்சிகள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. என் மனக்கண்களிலும். எம்மை மறப்பதற்கு யார் காரணம்? நானா? யார்? தெரிவித்துவிடு சரி செய்து முடியும் என்ற நம்பிக்கை என்னை தொந்தரவு செய்கிறது. பாவத்தை என்மேல் சுமத்துவியா? ஏங்குகிறது மனம். பாவத்தின் தண்டனையை அனுபவிக்க எனக்கொரு சந்தர்பம் தா. உன்னை மட்டும் நேசிக்காதோ என்காதே. என்னில் நான் இல்லை உன்னை கண்ட முதல். இப்பவும் நாமாகவே வாழ்கிறேன் நான். நீ எவவாறு என்று அறிய துடிகிறேன். என்ன செய்கிறாய், என்ன நினனகிறாய் என்பதை ஒவ்வொரு நிமிடமும் அன்று போல் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது. உன்னை குழந்தையாய் பாதுகாத்தேன் என்ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: யானை மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார். “வைத்தியரே... மன்னர்..” உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார். “துடிப்பு குறைகிறது.. தாங்காது.” திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள். “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.” திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக்குள் …
-
- 0 replies
- 1.1k views
-
-
மண்டை மாக்கான் சுகுணா பிறந்தது 1998-ல் மார்ச் மாதத்தில் விடிகாலையில் என்று அவளே என்னிடம் சொன்னபோது கணக்கில் தகராறு நிரம்பிய நான் விரல்களில் ஒவ்வொன்றாய்த் தொட்டு மனக்கணக்கு போட்டேன். இப்போது 2017ல் இருக்கிறோம் அல்லவா! எப்படியோ கல்யாணம் கட்டிக் கொள்ளும் வயதில் சுகுணா இருக்கிறாள். இங்கே சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திலோ அல்லது கோபி காவல் நிலையத்திலோ சுகுணாவும் முருகேசனும் மாலையும் கழுத்துமாக தஞ்சமடையும் வயதுதான். முருகேசன் என் பள்ளித் தோழன். கொளப்பளூர் நடுநிலைப்பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை என் பக்கத்திலேயே வகுப்பறையில் அமர்ந்து படித்தவன். மண்டை மாக்கான் என்றொரு பட்டப் பெயரும் பள்ளியில் அவனுக்கு இருந்ததாக ஞாபகம். மண்டை மாக்கான் என்ற பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது பாடசாலை நண்பன் ஒருவன் நீண்ட நாட்கள் மத்திய கிழக்கில் வேலை செய்தான். இரு பிள்ளைகள், பெண் மணமுடித்து தாயுடன் கொழும்பில்- மகன் மணமுடித்து லண்டனில். பாடசாலை நண்பன் பலவருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் விபத்தொன்றில் அகப்பட்டு நரம்புத் தொகுதி பாதிக்கப் பட்டு தனியே பருத்தித்துறையில் இருக்கிறான். இரண்டு விடயங்களை ஒன்றாக சிந்திக்க முடியாது அவனால். உதாரணமாக மந்திகைக்கு சைக்கிளில் போனேன் என்று அவனால் ஒரேயடியாக சொல்ல முடியாது. மந்திகைக்கு போனதையும் சைக்கிளில் போனதையும் தனித்தனியே தான் அவனால் சொல்ல முடியும். இரண்டையும் சேர்க்க வெளிக்கிட்டால் ஒரேயடியாக குழம்பி விடுவான். அத்துடன் அவனால் எழுத முடியாது, ஆனால் வாசிப்பான்; கதைப்பான். சொல்ல வந்த விடயம் என்னவென்றா…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் சம்மர் ``சம்மரில் உங்கள் குழந்தைகளுக்கு டிராயிங்.. ஹேண்ட் ரைட்டிங்...அபாகஸ் எனக் கற்றுத் தருகிறோம், வாருங்கள்..'' என்ற விளம்பரத்தில் நடித்து முடித்த ஹீரோ, மனைவி குழந்தைகளுடன் புறப்பட்டார், சுற்றுலாவுக்கு! - சி.சாமிநாதன் கண்டிஷன் `மணமகன் தேவை' விளம்பரத்தில் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கக் கூடாது என்ற கண்டிஷனையும் சேர்த்தாள். - ரேகா ராகவன் உதவி ``உதவிக்கு நர்ஸ் இருக்காங்க. பயப்படாதீங்க ...'' என பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, வேலைக்குக் கிளம்பினான் மகன்! பெ.பாண்டியன் பார்வை ``தப்பு செஞ்சா மேலே இருந்து ஒருத்தன் பார்ப்பான்!" என்றதும், "கேமிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 கார்த்திக் டிசம்பர் 22, 2024 மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா தமிழாக்கம் : கார்த்திக் திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல். ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம் உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார். பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகு…
-
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
வலைபதிவர் தமிழ்நதி சென்னை தமிழில் கதை எழுதி இருக்கார். அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வே…
-
- 2 replies
- 1.1k views
-
-
தாராளம் ‘‘என்ன செல்லம்மா... வீட்டுல இருந்து எண்ெணயை எடுத்துப் போறியா?’’ - தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணி கையில் ஒரு பாட்டில் நிறைய எண்ணெயை எடுத்துச் செல்வதைக் கண்ட சுந்தரம், சந்தேகத்தோடு கேட்டான்.அந்நேரம் அங்கே வந்த அவன் மனைவி விமலா, ‘‘அட... நான்தாங்க அதை அவளுக்குக் குடுத்தேன். அவ ஒண்ணும் தூக்கிட்டுப் போகலை!’’ என்றாள்.வேலைக்காரி நகர்ந்தாள். ‘எப்படி நம் மனைவி இவ்வளவு தாராளப் பிரபு ஆனாள்’ என்று மலைத்த சுந்தரம், மனைவியிடம் கேட்டான்... ‘‘நீ சாதாரணமா எதையும் யாருக்கும் தூக்கிக் கொடுத்துட மாட்டியே... இன்னைக்கு என்ன ஆச்சு?’’‘‘டி.வியில சொன்னாங்க... திரும்பத் திரும்ப எண்ணெயைக் காய்ச்சி சமையலுக்குப் பயன் படுத்தினா புற்றுநோய் வருமாம். அதனாலதான் நான் யூஸ் பண்ணுன பழைய எண்ணெயை…
-
- 1 reply
- 1.1k views
-
-
வலி நேற்று இரவு முதலே கொஞ்சம் படபடப்புதான். சரியான தூக்கம் கூட இல்லை. காலையில் எழுந்ததில் இருந்து இருப்புக்கொள்ளவில்லை. டிபன் சாப்பிடும் போது குமட்டிக்கொண்டு வந்தது. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் சாப்பிட்டேன். ஆட்டோவில்தான் கிளம்பினோம். அம்மா நிமிஷத்திற்கொரு முறை ஆட்டோக்காரரிடம் மெதுவாகப் போகும்படி கேட்டுக்கொண்டார். வேகத்தடை வரும் இடங்களில் எல்லாம் நான் என் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டேன். ஆம். 15 நாட்களுக்கு முன்தான் அதை உறுதிப்படுத்தினார்கள். அன்று அம்மா எல்லாருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்தாள். இந்த சந்தோஷத்திற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அவர் வற்புறுத்தவில்லை எனினும் ‘என் ஆபீஸ் டிரைவருக்குக் குழந்தை பிறந்திருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கயிறு! இயற்கை எழில் மிகுந்த அந்த கிராமத்தில், மரத்தின் நிழலில் உட்கார்ந்து, தேனீர் அருந்திக் கொண்டிருந்தான், ரகு. உடலை தழுவிச் செல்லும் தென்றல், பறவைகளின் இசை தாலாட்டில் சொக்கிப் போனான். 'எவ்வளவு நாட்கள் ஆயிற்று இதையெல்லாம் அனுபவித்து...' என்று எண்ணியவனுக்கு, 'இனி, மறுபடியும் இப்படி ஒருநாள் தன் வாழ்வில் அமையப் போவதில்லை...' என்பதை நினைக்கும் போது, பயமாக இருந்தது. தேனீர் கடையில் உட்கார்ந்திருந்த இருவர், அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து எழுந்து, நடந்தான், ரகு. அவர்களும் அவனை பின் தொடர்ந்தனர். அதைப் பற்றி கவலைப்படாமல், எதிரே இருந்த பெட்டிக் கடையில், பீடி வாங்கி பற்ற வைத்தபடி, கடைக்காரரிடம் பத்மினிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: சமையல்காரர் திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கனகசபை. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “கனகா! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.” “ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் கனகா. நாட்கள் ஓடின. மகன் சிவராமன் பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான். “ஏம்பா எந்த காலேஜ்ல இன்ஜினீயரிங் அப்ளிகேஷன் வாங்கியிருக்க?” என்று கேட்டார் கனகசபை. “மன்னிச்சிருங்கப்பா. நான் இன்ஜினீயரிங் படிக்க விரும்பலை.” …
-
- 1 reply
- 1.1k views
-
-
சின்னப்பன்றி: அகரன் அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும். பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை ய…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
புரொபசர் சகல சந்தேக நிவாரணி! புரொபசர் சகல சந்தேக நிவாரணி! பாக்கியம் ராமசாமி ப க்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் - ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி நடையா கால்மணி நடந்து, சரியா 11 மணிக்கு காலேஜை அடைந்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
சோமசுந்தரம் தன் வீட்டீற்கு விருந்துண்ண வந்த தன் தோழன் நாகலிங்கத்துடன் உரையாடுகின்றார் சோ: வேற என்ன புதினம்?? நா: நீ கேள்விப்பட்டனியா, இங்கு வளர்ந்த ஒரு தமிழ் இளைஞ்யன் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறானாம். 15ந்து வயதிலேயே யேர்மனிக்கு வந்தவனாம். தாயகத்தில,; பின்பு வெளிநாட்டில் தான் பெற்ற அனுபவங்களை பற்றித்தன் யேர்மன் மொழியில் எழுதியிருக்கிறானாம். இது உன்மையிலே ஒரு பாராட்ட வேண்டீய விடயம் தானே, அல்லவா?? சோ: ஓம்மடா, இப்படீப்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். இந்த வெளிநாட்டீலே நம் தமிழ் இளைஞ்யர்கள் செய்யும் தவறுகளைப்பற்ரிதான் கூடுதலாக மற்றவர்களுக்கும் சொல்லி கதைக்கின்;றோம்;. நீ சொன்னமாதிரி நல்ல வளியில் செல்லும்; பிள்ளைகளை, நாம் எம்மால் ஏன்றவரை ழுன்னேற உதவவே…
-
- 1 reply
- 1.1k views
-
-
புட்டுக்குழல் “மடத்தர டிக்கெட் எறங்கிக்கொள்ளு” “ணங்க் ணங்க் ணங்க்” என்ற மணிச் சத்தத்தோடு ஜலதோசம் பிடித்த கனத்த குரல்.கடைசி இருக்கையில் நெடுஞ்சாண் கிடையாய் நல்ல உறக்கத்தில் இருந்தான் முத்தையா. கடைசி இருக்கைக்கும் அதற்கு முந்தைய இருக்கைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் பிளாஸ்டிக்,அலுமினிய பாத்திரங்கள் அடங்கிய சாக்குப்பை.சாக்கினுள் புட்டுக்குடம்,புட்டுக்குழல் தவிர மற்ற அனைத்தும் சிறிய சிறிய பாத்திரங்கள்-எதெடுத்தாலும் இருபது ரூபாய். விளக்கொளி கொடுத்த கண்ணெரிச்சலோடு ஆங்காங்கே தலைகள் உருண்டன.மூன்றுமுறை சத்தம் கொடுத்த நடத்துனர் விறுவிறுவென கடைசி இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “ஈ பாண்டி மாருக்கு கண்ணடைச்சா பின்ன தொறக்குல்ல,”முனங்கிக்கொண்டே சென்று வாய் பிள…
-
- 1 reply
- 1.1k views
-